மற்றவர்கள் தம்மீது ஆதிக்கம் செலுத்துவதை
விரும்பாமல், சுதந்திர மனப்போக்குடன் நடந்து கொள்ளும் குணம் கொண்டவர்கள்
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
தோஷம் இல்லாத நட்சத்திரங்களில் ஒன்றாக
கூறப்படுவது பூச நட்சத்திரம் ஆகும். ஹி, ஹே, ஹோ, ட போன்ற
எழுத்துக்களை, பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும், பூச
நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்கள் ஆவர்.
சில நேரங்களில், இவர்களின்
நடவடிக்கையும், மனவோட்டமும் மாறுபட்டதாகவே இருக்கும்.
அதனால், சர்சைக்குரியவர்களாக சித்தரிக்கப்படுவதும் உண்டு.
ஒருவரை பிடித்துவிட்டால், எந்த
எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களுக்கு ஓடோடி சென்று உதவி செய்வது இவர்களின்
குணம். சடங்கு சம்பிரதாயங்கள், கடவுள் பக்தி ஆகியவை இவர்களிடம் அதிகமாக
இருக்கும்.
பூச நட்சத்திரத்தில் பிறந்த
பெண்கள், பெரியவர்களிடம் மற்றவர்களிடமும் அன்பாகவும், மரியாதையாகவும்
நடந்து கொள்வார்கள். அதே போன்று மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று எதிர்
பார்ப்பார்கள்.
எந்த வேலையை எடுத்தாலும், அதை முறையாக திட்டமிட்டபடி செய்து முடிக்கும் ஆற்றல் நிறைந்திருக்கும்.
பூச நட்சத்திர காரர்களுக்கு, சிறு கவலை
ஏற்பட்டால் கூட, அதை ஆழமாக சிந்தித்து அதிகப்படுத்தி கொள்வார்கள். உடல்
வலிகளை தாங்கி கொள்ளும் அளவுக்கு இவர்கள் மன வலியை தாங்கிக்கொள்ள
மாட்டார்கள்.
பூச நட்சத்திரத்தில் நின்ற கிரகம், இரண்டு திருமணங்கள், நெஞ்சு வலி, சாமியாடிகள், வாகன விபத்து போன்றவற்றை சொல்லும்.
பூச நட்சத்திரத்தின் வடிவம், தாமரை, புடலம்
பூ, அம்பு மற்றும் பசுவின் பால் மடி போன்ற வடிவங்கள் கொண்டுள்ளதால், வணிகம்
செய்வோர் இவற்றை லோகோவாக பயன்படுத்தலாம்.
பூச நட்சத்திரத்தின் அதிதேவதை
பிருகஸ்பதி. பரிகார தெய்வம் அம்மன். திருவாரூரில் உள்ள கமல முனி ஜீவ
சமாதியையும் வழிபடலாம். இந்த நட்சத்திரத்திற்கு உகந்த மலர் பன்னீர் பூ.
தேவ கண நட்சத்திரமான பூசத்தின் விருட்சம் அரச மரம். எனவே அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவதும், வணங்குவதும் நல்ல பலனை தரும்.
இதன் மிருகம் ஆண் ஆடு. பறவை நீர் காக்கை. எனவே இவற்றிற்கு இடையூறு செய்யாமல் இருப்பது நல்லது.
பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம்
செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விளங்குளம், அட்சயபுரீஸ்வரர்
உடனுறை அபிவிருத்தி நாயகி அம்மன் ஆலயம், பூச நட்சத்திற்கு உரிய
தளமாகும். பூச நட்சத்திரம் அன்று இந்த ஆலயத்திற்கு சென்று வழிபடுவது
நல்லது.
பூச நட்சத்திர காரர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, சந்தன .தானம் செய்வது நல்லது.
No comments:
Post a Comment