Tuesday, 15 October 2019

கும்ப ராசி


அமானுஷ்ய சக்தி நிறைந்த கும்பம்

நியாயவான்தர்மவான் என்று அழைக்கப்படும் சனி பகவானின் மூல திரிகோண ராசியாக அமைந்திருப்பது கும்ப ராசியாகும்.
அவிட்ட நட்சத்திரத்தின் மூன்று மற்றும் நான்காம் பாதங்கள், சதய நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள், பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்களை கொண்டது கும்ப ராசி.
கோயில்கலசம்கோபுரம் போன்றவற்றை குறிக்கும் தெய்வீக ராசியாகவும் இது கருதப்படுகிறது. பள்ளம்பாத்திரம்மைதானம்தண்ணீர் தேங்கும் இடங்கள்ஜீவ சமாதிகள்மண்டபங்கள் உள்ளிட்டவையும் கும்ப ராசியின் அடையாளங்கள் ஆகும்.
இது நிலைத்த தன்மையை குறிக்கும் ஸ்திர ராசியாகவும்பிரபஞ்ச சக்தியை எளிதாக கிரகிக்கும் காற்று ராசியாகவும் உள்ளது.
தெற்காசியா முழுவதையும் கட்டியாண்ட மாமன்னன் ராஜராஜன், கும்ப ராசியில் உள்ள சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பது சிறப்பம்சமாகும்.
பெரும்பாலான கும்ப ராசிக்காரர்கள்ஹோட்டல்மெஸ்மாவு அரைக்கும் கிரைண்டர் போன்றவை  செயல்படும் இடங்களின் அருகில் இருப்பார்கள். அல்லது இவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாராவது உணவு சம்பந்தப்பட்ட தொழில்களில் தொடர்புடையவர்களாக இருப்பார்கள்.
கும்ப ராசிக்காரர்களில் பெரும்பாலானவர்கள்உணவு பிரியர்களாக இருப்பார்கள். எந்த இடத்தில்எந்த ஹோட்டலில்எந்த நேரத்தில் எந்த உணவு கிடைக்கும் என்பதை மிகவும் தெளிவாக அறிந்தவர்கள்.
ஏதாவது ஒரு இடத்தின் அடையாளத்தைஉணவு பண்டங்கள் விற்கும் கடைகளை குறிப்பிட்டு சொன்னால் இவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். அதுமட்டும் அல்லருசியான உணவு கிடைக்கும் இடத்தை சிரமம் பாராமல் அலைந்து திரிந்து கண்டுபிடிப்பதற்கும் தயங்க மாட்டார்கள்.
இது காற்று ராசி என்பதால்பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்கும் அமானுஷ்ய சக்திகளைஇவர்கள் எளிதில் தன் வயப்படுத்தும் ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
ஜோதிடம் கேட்பதுகற்பதுகுறி கேட்பதுகுறி சொல்வது போன்றவற்றில் இவர்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும்.
சாதாரண உடல் உபாதைஅல்லது பிரச்சினை என்றால் கூடயாராவது நமக்கு மந்திரம் செய்திருப்பார்களோ என்று நினைப்பார்கள்.
இவர்களிடம் எந்த வித ரகசியமும் தங்காது. ஆனாலும்ஒரு சில ரகசியங்களை என்ன பாடு பட்டாலும்இவர்களிடம் இருந்து அறிவது கடினம்.
ஏதாவது ஒரு காரியத்தைதிட்டத்தை தொடங்குவதற்கு முன்னதாகவேஇதில் இவ்வளவு கிடைக்கும்அதில் அவ்வளவு கிடைக்கும் என்று முன்கூட்டியே கணக்கு போட ஆரம்பித்து விடுவார்கள்.
கும்ப ராசிக்காரர்களுக்கு மூச்சு திணறல்குறட்டைஏப்பம் போன்ற வாயு சம்பந்தப்பட்ட பிரச்சினை அதிகமாக இருக்கும். அதனால்தகுந்த நேரத்தில் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
பிரபஞ்ச சக்தியை எளிதில் கிரகிக்கும் சக்தி இவர்களுக்கு அதிகம் இருப்பதால்ஆன்மீக ஞானமும் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.
எதிர்காலத்தை ஏதாவது ஒரு வகையில் முன்கூட்டியே அறியும் சக்தியும், உள்ளுணர்வும்  இவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும்.
மிகச்சிறந்த விஞ்ஞானிகள்சிந்தனையாளர்கள் பலர் கும்ப ராசியில் பிறந்துள்ளதற்கு இதுவே காரணமாகும்.
இவர்கள், தன்னை பற்றி மட்டுமலாமல்இந்த உலகத்தை பற்றியும் அதிகம் சிந்திப்பார்கள்.  சிந்தனையும் அதிகமாக இருக்கும். பல நேரங்களில்தனித்து இயங்குவதையும் அதிகம் விரும்புவார்கள்.
இந்த ராசிக்காரர்கள் பலர், பூர்வீகத்தில் இருந்து சாதிப்பதை விடஇடம் பெயர்ந்து சாதிப்பதே அதிகம்.
என்னதான் பண நெருக்கடி வந்தாலும்தேவையான நேரத்திற்குதேவையான பணம் ஏதாவது ஒரு வழியில் வந்து சேர்ந்து விடும்.
இவர்கள் எந்த அளவுக்கு முயற்சிக்கிறார்களோஅந்த அளவுக்கு தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும்.
தாய் தந்தையின் முழுமையான அரவணைப்பை பெரிதாக எதிர்பார்க்க முடியாது. சிலருக்குசகோதர சகோதரிகள் அரவணைப்பு அதிகம் உண்டு.
பிள்ளைகள் விஷயத்தில் பெரிய திருப்தியை எதிர்பார்க்க இயலாது. அவர்கள் மீது முழுமையான பாசத்தையும் செலுத்துவது சிரமம்.
பிற்காலத்தில் சிலருக்கு குடும்ப பற்று குறைந்து ஆன்மீக பாதையை நாடுவதையும் உணரலாம்.
பெரிய அளவுக்கு கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால்அதை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்க நேரும்.
மனைவியின் அந்தஸ்து சற்று உயர்ந்ததாகவே இருக்கும். மனைவியின் ஆதிக்கமே குடும்பத்தில் மேலோங்கி இருக்கும்.
மொத்தத்தில் உறவுகள் மீதும்நட்புகளின் மீதும் அதிக நேசம் வைத்துஅதற்கான கடமைகளை நிறைவேற்றலாம். ஆனால்அதன் பிடியில் சிக்கிக் கொண்டு உழலாமல் இருப்பதே கும்ப ராசிக்காரர்களுக்கு நல்லது.
தடைகள் அகல அதிர்ஷ்டம் பெருக
கும்ப ராசிக்காரர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக் கொள்ள, மஞ்சள் நிற துணியை கைக்குட்டையாக பயன்படுத்தலாம்.
தடைகள், இடையூறுகளில் இருந்து விடுபட, சுக்கிரனுக்கு உரிய வெள்ளை அல்லது பிங்க் நிற ரிப்பனை, வெள்ளி கிழமைகளில் கத்தரி கோலால் துண்டு துண்டாக வெட்டி போடலாம்.
கையிலோ அல்லது கழுத்திலோ முடிந்தவரை எப்போதும் ஏதாவது கொஞ்சம் தங்கம் அணிவது அதிர்ஷ்டம் தரும் என்று லால் கிதாப் கூறுகிறது.
மேலும், குங்குமப்பூவை அரைத்து குழைத்து, நெற்றியில் திலகமிட செல்வ வளம் பெருகும்.
சதுர வடிவிலான வெள்ளி டாலரை நூல் அல்லது செயினில் கோர்த்து கழுத்தில் அணிந்தால், தொழில் மற்றும் பணிகளில் உயர்ந்த நிலை அமையும்.
ஏழைகள் மற்றும் கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்தல் நல்லது.
இவை அனைத்தும் கும்ப ராசிக்கான பொதுவான பலன்களே. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

No comments:

Post a Comment