காந்தம் போல் கவர்ந்திழுக்கும் கன்னி
உத்திரம் நட்சத்திரத்தின் இரண்டு மூன்று
மற்றும் நான்காம் பாதங்களும், அஸ்த நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும், சித்திரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களிலும் பிறந்தவர்கள் கன்னி ராசிக்காரர்கள்.
ராசி மண்டலத்தில் ஆறாவது ராசியாக
விளங்குவது கன்னி ராசி. திடப்
பொருளாகவும் இல்லாமல், திரவப்
பொருளாகவும் இல்லாமல், இரண்டும் கலந்த
பாதரசமாக விளங்கும் புதனின் தன்மையை
முழுமையாக கொண்டவர்கள் கன்னி
ராசிக்காரர்கள்.
அனைவரிடமும் அனுசரித்து செல்லும்
தன்மையும், இறுக்கமான சூழ்நிலையையும் கலகலப்பாக மாற்றக்
கூடிய தன்மை மிகுந்தவர்கள். தேவை இல்லாமல் மற்றவர்களை பகைத்துக் கொள்வதை
எப்போதுமே விரும்புவதில்லை.
இயற்கையிலேயே புத்திசாலி தனமும், அறிவாற்றலும்
மிகுந்திருக்கும். அதனால் அனைவரையும் எளிதில் கவர்ந்து இழுத்து விடுவார்கள்.
அமைதியான போக்கும், சிரித்த
முகமும் இவர்களின் அடையாளம். பெண் தன்மை
நிறைந்த இவர்கள், கனிவாக
பேசுவதில் சமர்த்தர்கள். இவர்களின் இயல்பான
குணமும் இதுவாகவே இருக்கும்.
அதிகாரத்தால் சாதிக்க முடியாததை, அன்பாலும், கனிவான பேச்சாலும், இணக்கமான
அணுகுமுறையாலும் சாதித்து காட்டும் வல்லமை கன்னி ராசி காரர்களிடம் நிறைந்து இருக்கும்.
உள்ளுக்குள் பயந்த சுபாவம் கொண்டவர்கள்
என்றாலும், அதை வெளியில்
தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்.
தேவையானபோது பராக்கிரமத்தை காட்ட
தயங்கவும் மாட்டார்கள்.
கணங்களின் நாயகர், விநாயகர்
பிறந்திருப்பதால், அதன் தாக்கம் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
வில்லாளன் அர்ஜுனன் பிறந்த ராசியும் இது என்றே சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும்
அறிஞர்கள் பலர் கன்னி ராசியில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள்.
அறிவையும், அறிஞர்களையும் தேடும்
வேட்கையும், அவர்களை போற்றி மதிக்கும் குணமும் இவர்களிடம் காணப்படும்.
காதல் விஷயத்திலும், வியாபார
நுணுக்கத்திலும் கன்னி ராசிக்காரர்களை போன்ற சாதுர்யம் நிறைந்தவர்கள் யாரும்
இருக்க முடியாது.
பெரும்பாலான கன்னி ராசிக்காரர்களுக்கு
நாய் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம்
இருக்கும். கால்நடைகள் மற்றும் செல்ல
பிராணிகள் மீதும் அதிக அன்பு
செலுத்துபவர்களாக இருப்பார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் வசிக்கும்
வீட்டுக்கு அருகே, பால் பண்ணை, ரேஷன் கடை, பால்பூத், நூலகங்கள், தானிய கிடங்குகள் இருப்பதை காணலாம்.
கன்னி ராசியை சேர்ந்த சிலருக்கு
புத்திரப் பேறு தாமதமாகிறது. சிலருக்கு
இரண்டு ஆண் அல்லது இரண்டு பெண்
குழந்தைகள் இருக்கும். ஒரு ஆண் ஒரு பெண்
குழந்தை என்பது அனைவருக்கும்
அமைவதில்லை.
கன்னி ராசி காரர்கள் யாருக்கும் இடையூறு
கொடுப்பதில்லை. மற்றவர்கள்
இடையூறு கொடுத்தாலும், முடிந்தவரை
பொறுத்து கொள்வார்கள். பொறுத்துக்கொள்ள
முடியாத கோபம் வந்து விட்டால், இவர்கள்
கொடுக்கும் பதிலடியை யாராலும் தாங்க
முடியாது.
இவர்களுக்கு குளிர்ச்சி மற்றும் உஷ்ண
சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிப்பு ஏற்படும். ஈ.என்.டி பிரச்சினைகளும் அவ்வப்போது
தலை தூக்கும்.
தடைகள் அகல – அதிர்ஷ்டம்
பெருக
மழை பெய்யும்போது மொட்டை மாடி அல்லது
வீட்டின் மேற் கூரையில் ஒரு
பாத்திரத்தை வைத்து, மழை நீரை அதில்
பிடித்து வைக்க அதிர்ஷ்டம் பெருகும்
என்று லால் கிதாப் கூறுகிறது.
மேலும்,
வீட்டில் பூஜை அறையை அடிக்கடி மாற்ற
கூடாது. புத்தாடை அணியும்
பொது அதில் கொஞ்சம் கங்கை நீரை தெளித்த
பின்னர் அணிய வேண்டும். அப்படி
செய்தால் ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்கு
பஞ்சம் இருக்காது.
புதன் கிழமை அன்று ஒரு மண் மூடியில்
அகல் விளக்கு வைத்து, அதை ஓடும் நீர் அல்லது கடலில் விட வேண்டும்.
புதன் கிழமை ஆண்டு யாரையும் சபிக்க
கூடாது, யாருக்கும் உறுதிமொழி அளிக்கவும் கூடாது.
கன்னி ராசியின் அதிபதியான புதனுக்கு, மிகவும் பகையான
கிரகம் செவ்வாய். எனவே செவ்வாயின் நிறமான சிவப்பு நிற ரிப்பனை எடுத்து, செவ்வாய்
கிழமைகளில் துண்டு துண்டாக வெட்டி போடுவது,
தடங்கல் மற்றும் இடையூறுகளில் இருந்து மீண்டு வர வழி வகுக்கும்.
கன்னி ராசிக்கு பாக்கியாதிபதியாக
விளங்கும் சுக்கிரனுக்கு உரிய வெள்ளை
அல்லது பிங்க் நிறத்தில் கைக்குட்டை
வைத்துக் கொள்வது நலம் பயக்கும்.
இவை அனைத்தும் கன்னி ராசிக்கான பொதுவான பலன்களே.
அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொறுத்து பலன்கள் மாறுபடும்
No comments:
Post a Comment