இரக்க சிந்தனையும், எல்லோருக்கும் உதவி செய்யும் குணமும் கொண்டவர்கள் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
காக்கும் கடவுள் பெருமாள் அவதரித்த நட்சத்திரம் என்ற சிறப்பை பெற்றது திருவோண நட்சத்திரம்.
எப்போதும் சுத்தமாக இருப்பதும், ஆடை அலங்காரத்தை விரும்புவதும் இந்த நட்சத்திர காரர்களின் தனித்தன்மை ஆகும்.
கி, கு, கே, கோ போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் திருவோண நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
சந்திரனின் நட்சத்திரமான திருவோணம், சனியின்
வீடான மகரத்தில் அமைந்துள்ளதால், கற்பனை திறனும், எடுத்துக்கொண்ட
விஷயத்தில் உறுதியாக நிற்பதும் இவர்களது தனித்தன்மையாக இருக்கும்.
திருவோண நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள், இனிமையாக பேசுவார்கள். எதை செய்தாலும் அதை ஒழுங்காக செய்து
முடிப்பார்கள். வாழ்க்கையில் ஒரு சில கொள்கைகளை உறுதியாக கடைபிடிப்பார்கள்.
இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து
கொள்வார்கள். சுத்தமாக இல்லாதவர்களை இவர்களுக்கு பிடிக்காது. மற்றவர்கள்
கஷ்டப்பட்டால் இவர்கள் மனம் பொறுக்காமல் ஓடிப்போய் உதவி செய்வார்கள்.
சுவையான உணவை விரும்புவார்கள், மற்றவர்களுக்கும் சுவையான விருந்து படைப்பார்கள்.
கடவுளுக்கு பயந்து நடப்பார்கள். குற்றம்
செய்தவர்களை கையும் களவுமாக பிடித்தால் கூட, அவர்களை தண்டிப்பதை
விட, அவர்கள் ஏன் இந்த நிலைக்கு ஆளானார்கள் என்றே யோசிப்பார்கள்.
மற்றவர்களை எளிதாக கவரும்
தன்மையும், புன்சிரிப்பும் மிகுந்தவர்கள். பெரிய அளவுக்கு ஏற்றத்தாழ்வு
இல்லாமல், சராசரியான பொருளாதார நிலை தொடர்ந்து இருக்கும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், தான
தர்ம காரியங்களில், ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்கள். உள்ளூர
தந்திரம் மிகுந்தவர்கள். ஆனாலும் ஏழை எளியவர்கள் விஷயத்தில் இறக்கம்
மிக்கவர்கள். பகட்டையும், ஆடம்பரத்தையும் விரும்புவார்கள். சூழ்நிலைக்கு
ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்வார்கள். ஆனால், கணவனிடம் மட்டும் இந்த குணத்தை
காட்டாமல் பிடிவாதமாக இருப்பாள். கொஞ்சம் வம்பு செய்யும் குணம் இருக்கும்.
திருவோணம் நட்சத்திரத்தில் நின்ற
கிரகம் சுகபோகத்தை சொல்லும். வாசல் அல்லது படிக்கட்டில் நின்று
பேசுவது, இடது கையை உபயோகிப்பாது போன்றவற்றை குறிக்கும்.
திருவோணம்
நட்சத்திரம், காது, அம்பு, பாதச்சுவடுகள் போன்ற வடிவங்களில்
இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இவற்றை தங்கள் தொழில்
வணிகத்திற்கான லோகோவாக பயன்படுத்தலாம்.
திருவோணம் நட்சத்திரத்தின் அதிதேவதை
விஷ்ணு, ஹயக்ரீவர். பரிகார தெய்வம் அம்மன். திருப்பதியில் உள்ள கொங்கன
சித்தர், சிதம்பரம் திருமூலர் ஜீவ சமாதிகளையும் வழிபடலாம். உகந்த மலர்
சிவப்பு ரோஜா.
மனுஷ கணம் கொண்ட இந்த நட்சத்திரத்தின் விருட்சம் எருக்கு. எருக்கன் செடிகளுக்கு திருவோணம் நட்சத்திர காரர்கள் தண்ணீர் ஊற்றலாம்.
திருவோணம் நட்சத்திரத்தின் மிருகம் பெண் குரங்கு. பறவை நாரை அல்லது மாடப்புறா. இவற்றுக்கு இடையூறு செய்யக்கூடாது.
காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல்
பிரசன்ன வெங்கடேசபெருமாள், அலர்மேலு மங்கை தாயார் ஆலயமே, திருவோணம்
நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும். திருவோணம் நட்சத்திர காரர்கள், தங்கள்
ஜென்ம நட்சத்திர தினத்தன்று இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வது நல்லது.
திருவோணம் நட்சத்திரகாரர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, வஸ்திர தானம் செய்வது நல்லது.
No comments:
Post a Comment