நீதி – நேர்மையை நிலை நாட்டும் துலாம்
கருணைக்கும், நீதி நேர்மைக்கும் அதிபதியான சனி பகவான் உச்சம் அடையும் ராசி துலாம் ராசி.
சித்திரை நட்சத்திரத்தின் மூன்று மற்றும்
நான்காம் பாதங்கள், சுவாதி நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள், விசாகம்
நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்கள் துலாம் ராசியை
சேர்ந்தவர்கள் ஆவர்.
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரனாக
இருந்தாலும், இது நீதிமானான சனி பகவான் உச்சம் அடையும் ராசி
என்பதால், இவர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்போதும் நீதியை கடைபிடிக்க
வேண்டும்.
நீதியை வெறும் வாய் பேச்சோடு நிறுத்திக்
கொண்டு, நடைமுறையில் பின்பற்றவில்லை என்றால், அதற்கான விளைவுகள் கடுமையாக
இருக்கும். இதுவே, துலாம் ராசிக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை
ரகசியம் ஆகும்.
இவர்களுக்கு, கலை மற்றும் காவியத்தில்
மிகுந்த ஈடுபாடு இருக்கும். விதவிதமான ஆடைகள். அணிகலன்கள், அலங்காரம்
மற்றும் சுவையான உணவுகள் மீது அதிக நாட்டம் இருக்கும்.
இது காற்று ராசி என்பதால், பிரபஞ்சத்தில்
இருந்து கிடைக்க வேண்டிய அமானுஷ்ய சக்திகள் எல்லாம், இவர்களுக்கு எளிதாகவே
கிடைக்கும். எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளை, முன்கூட்டியே
அறியக்கூடிய சக்தி இவர்களுக்கு இருக்கும்.
வாயு தொல்லை அதிகமாக இருக்கும். காற்றோட்டம் இல்லாத வீட்டில் இவர்களால் வசிக்க முடியாது.
ஆண்களாக இருந்தால் பெண்களும், பெண்களாக
இருந்தால் ஆண்களும் இவர்களிடம் தாமாக விரும்பி வந்து பேசுவார்கள். இதுபோன்ற
நேரத்தில் கண்டிப்பாக சனி பகவானை மனதில் நினைவு படுத்திக் கொள்ள வேண்டியது
அவசியம்.
துலாம், அதாவது தராசு வணிகத்தை
குறிப்பதால், இவர்களின் வீடு பெரும்பாலும் கடை வீதி மற்றும் ஆற்றுப்
படுகைகளை ஒட்டியே அமைந்திருக்கும்.
இது முருக கடவுள் அவதரித்த ராசி
என்பதால், அவரின் கையில் உள்ள வேலை போன்ற கூர்மையான அறிவும், ஆழ்ந்து அகன்ற
சிந்தனையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
துலாம் ராசியில் பிறந்தவர்கள், மிகப்பெரிய அறிவாளிகளாகவும், நியாயம் மற்றும் நீதியை போதிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
அதுமட்டும் அல்ல, இரண்டு எதிர் எதிர்
தரப்பினரிடமும் கூட, ஒரே நேரத்தில் எந்த சிக்கலும் இல்லாமல், பழக
கூடியவர்களாகவும் இருப்பார்கள். அதனால்தான் எங்கும் இருக்கும் துலாம் ராசி
என்று சொல்லப்படுகிறது.
இரண்டு எதிர் தரப்பினருக்கும் இடையே ஒரே
நேரத்தில் நட்பாக இருந்து ஆலோசனை சொல்லும் அளவுக்கு புத்திசாலியாக
இருக்கும் இவர்கள், பல நேரங்களில், தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் சிலவற்றை
கடைபிடிக்காமல் போய்விடுவதும் உண்டு. அதனால், சிக்கலை எதிர்கொள்வதும்
உண்டு.
அனைத்து கிரகங்களுக்கும் ஒளி கொடுக்கும்
சூரியன், துலாம் ராசியில் நீச்சம் அடைவதால், இவர்கள் நிர்வாக பொறுப்பில்
பெரிய அளவில் பிரகாசிக்க முடியாமல் போய்விடும்.
பொதுவாக குடும்ப நிர்வாகம் மற்றும் தொழில் நிர்வாகத்தை , துலாம் ராசிக்காரர்கள், தங்கள் வாழ்க்கை துணையிடம் ஒப்படைப்பது நல்லது.
மருத்துவ கிரகமான சூரியன் இந்த ராசியில் நீசம் அடைவதால், சில நேரங்களில், இவர்களின் நோய்க்கு ஏற்ற மருந்துகள் கிடைப்பது அரிது.
எப்போது மருந்து, மாத்திரைகள்
வாங்கினாலும், காலாவதி தேதியை கவனிப்பதுடன், மருத்துவரால்
பரிந்துரைக்கப்பட்ட மருந்துதானா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது
அவசியம்.
உயரமான இடங்களுக்கு, குறிப்பாக மலை
பகுதிகளுக்கு செல்லும்போது எல்லாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதேபோல், தலை மற்றும் கால் பெரு விரல்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும்.
இவர்களிடம் எந்த ரகசியமும் தங்காது. பலர் அனைத்தையும் வெளிப்படையாக பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வதும் உண்டு.
துலாம் ராசிகாரர்கள், எதையும் எளிதாக பெற முடியாது. அனைத்தையும் போராடித்தான் பெற முடியும்.
கடன், வழக்கு, நோய் என அனைத்தையும் சந்திக்க
வேண்டும். ஆனாலும், அவை அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு இறுதியில்
நல்ல பலன்களை அடைய முடியும்.
மேலும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம், தன வருவாய், வீட்டு வாடகை, மூதாதையர் சொத்துக்கள் போன்றவை கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு.
இவர்களுக்கு, வாழ்க்கை துணை அமைந்த
பின்னரே, வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய அனைத்து வசதி வாய்ப்புகளும்
கிடைக்கும். குடும்ப பொறுப்பில், வாழ்க்கை துணையின் நிர்வாகமே சிறந்தது.
சகோதர வழியில் பெரிய ஆதரவை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் மூலம் கடனும் சிக்கலுமே இருக்கும்.
தாயாரின் வாழ்க்கை பெரிய அளவில் திருப்தியாக
இருக்காது. அதேபோல், துலாம் ராசிக்காரர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு
திருமணத்தை நடத்த, படாத பாடு பட வேண்டி இருக்கும்.
தந்தை வழியில் பெரிய அளவில் சொத்துக்களை எதிர்பார்க்க முடியாது. அப்படியே சொத்துக்கள் கிடைத்தாலும், அதை சுகமாக அனுபவிக்க முடியாது.
உணவு, உடை போன்ற எந்த விஷயத்திற்கும் பெரிய
அளவில் கஷ்டம் இருக்காது. வேலை வாய்ப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது.
வேலையும், தொழிலும் எப்படியும் கை கொடுக்கும்.
பொதுவாக துலாம் ராசிக்காரர்கள், எவ்வளவு
கஷ்டத்திலும் நீதி நேர்மையை தவறாமல் கடைபிடிக்கிறார்களோ, அந்த அளவுக்கு
அவர்கள் வாழ்க்கையில் நல்ல பலன்களை அறுவடை செய்யலாம்.
பொதுவா துலாம் ராசிகாரங்க எந்த அளவுக்கு,
தங்களோட சொந்த வாழ்க்கையில நீதி, நேர்மை தவறாம இருக்காங்களோ அந்த அளவுக்கு
அவங்க வெற்றிய சந்திப்பாங்க.
தடைகள் அகல – அதிர்ஷ்டம் பெருக
துலாம் ராசி காரர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக் கொள்ள நீல நிற துணியை கைக்குட்டையாக பயன்படுத்தலாம்.
தடைகள் மற்றும் இடையூறுகளில் இருந்து விடுபட,
சூரியனுக்கு உரிய சிவப்பு நிற ரிப்பனை ஞாயிற்று கிழமைகளில், கத்தரி கோலால்
துண்டு துண்டாக வெட்டி போடாலாம்.
கோயில் மற்றும் தானங்களுக்கு வெண்ணெய், தயிர், உருளைக்கிழங்கு போன்றவற்றை வழங்கலாம் என்று லால் கிதாப் கூறுகிறது.
மேலும், வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில்
கோமியம் தெளிக்கலாம். மாமியார் வீட்டில் இருந்து வெள்ளி பாத்திரம் அல்லது
வெள்ளி நாணயம் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. தானமாக எதையும்
பெறக்கூடாது.
இவை அனைத்தும் துலாம் ராசிக்கான பொதுவான பலன்களே. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொறுத்து பலன்கள் மாறுபடும்.
No comments:
Post a Comment