சுய லாபத்திற்காக எதையும் செய்ய விரும்பாத குணம் கொண்டவர்கள் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
அழகும் அறிவுக்கூர்மையும் நிறைந்தவர்கள்
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
இவர்களை அறிவாளிகள், கெட்டிக்காரர்கள் என்று எப்படி வேண்டுமானாலும்
சொல்லலாம்.
பே, ப, ர, ரி ஆகிய எழுத்துக்கள் பெயரின் முதல் எழுத்துக்களாக வருபவர்களும் சித்திரை நட்சத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
சித்திரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு
பாதங்கள் கன்னி ராசியிலும், எஞ்சிய இரண்டு பாதங்கள் துலாம் ராசியிலும்
இடம்பெற்றுள்ளன. இதனால், புதனுக்கு உரிய சாதுர்யம், சுக்கிரனுக்குரிய
கலைத்திறன், செவ்வாய்க்கே உரிய தைரியம், விடா முயற்சி ஆகிய மூன்று
குணங்களும் இவர்களிடம் நிறைந்திருக்கும்.
சித்திரை நட்சத்திர காரர்கள் தனது சுய
லாபத்திற்காக எதையும் செய்ய மாட்டார்கள். அதேபோல், ஒரு முடிவை எடுத்து
விட்டால், அதை எப்படியாவது செயல்படுத்தாமல் விடமாட்டார்கள்.
இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகம்.
அதனால், இவர்கள் அவ்வப்போது எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
ஆரம்பத்தில் இவர்கள் சொல்லும் கருத்துக்களை, மற்றவர்கள் ஏற்கவில்லை
என்றாலும், இறுதியில், அதை ஏற்க வேண்டிய நிர்பந்தம் வரும்.
தெய்வீக சக்தி நிறைந்த சித்திரை நட்சத்திரக்காரர்களின் கனவில் தோன்றும் சம்பவங்கள், நிஜ வாழ்விலும் பிரதிபலிப்பது உண்டு.
அனைவரையும் சமமாக பாவிக்கும் தன்மை கொண்ட
சித்திரை நட்சத்திர காரர்கள், ஏழைகளுக்காக, பணக்காரர்களையும்
பகைத்துக்கொள்ள தயங்க மாட்டார்கள். அதே போல், எந்த வித எதிர்ப்புகளையும்
எதிர்கொள்ளும் ஆற்றலும் இவர்களுக்கு அதிகமாக உண்டு.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அழகான
தோற்றம் கொண்டவர்கள். சுதந்திரமான மனப்போக்கு கொண்டவர்கள். அதனால்
சிக்கல்களையும் சந்திக்க நேரும்.
சில நேரங்களில் பேராசை மற்றும் சோம்பேறி தனத்தால், பாவ காரியங்களை கூட செய்ய நேரும். இந்த குணத்தை தவிர்ப்பது நல்லது.
சித்திரை நட்சத்திரத்தில் நின்ற கிரகம் சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வது போன்றவற்றை குறிக்கும்.
சித்திரை நட்சத்திரத்தின் அதிதேவதை ஸ்ரீ
சக்கரத்தாழ்வார். விஸ்வ கர்மா என்றும் சொல்லப்படுகிறது. கரூரில் உள்ள
கருவூரார் ஜீவ சமாதி, மயிலாடுதுறை குதம்பை சித்தர் ஜீவ சமாதி ஆகியவற்றையும்
வழிபடலாம். உகந்த மலர் மந்தாரை.
சித்திரை நட்சத்திரம் முத்து மற்றும் இரத்தின
கற்கள் போன்ற வடிவம் கொண்டதால், இந்த நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள், மேற்கண்ட வடிவங்களை, தங்கள் தொழில் வணிகத்திற்கான லோகோவாக
பயன்படுத்திக் கொள்ளலாம்.
ராட்சத கணம் கொண்ட சித்திரை நட்சத்திரத்தின்
விருட்சம் வில்வ மரம். எனவே இந்த நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள், கோவில்களிலும் மற்ற இடங்களிலும் உள்ள வில்வ மரத்திற்கு
தண்ணீர் ஊற்றுவது நல்லது.
சித்திரை நட்சத்திரத்திற்கான மிருகம் ஆண் புலி. பறவை மரங்கொத்தி. எனவே இவற்றுக்கு இடையூறு கொடுக்க கூடாது.
மதுரை அருகில் உள்ள குருவித்துறை சித்திராத வல்லப பெருமாள், உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி ஆலயமே இந்த நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று இந்த ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.
சித்திரை நட்சத்திர கார்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள வஸ்திர தானம் செய்வது சிறப்பு.
No comments:
Post a Comment