மற்றவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு
அவர்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யும் குணம்
கொண்டவர்கள் பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று
போற்றப்படும், ஆண்டாள் பிறந்த நட்சத்திரம் பூரம். மோ, ட, டி, டு போன்ற
எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் பூர
நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே.
சூரியனுக்கு உரிய சிம்ம ராசியில், இடம்
பெற்றுள்ள பூரம் சுக்கிரனின் நட்சத்திரமாகும். எனவே இந்த நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் கம்பீரமாகவும், சுகபோகத்தை விரும்புபவர்களாகவும்
இருப்பார்கள். கலைத்திறனும் மிகுந்து இருக்கும்.
முழு சுதந்திரத்தை விரும்பும் இவர்கள், ஏதாவது ஒரு துறையில் நிபுணராகவோ, புகழ் பெற்றோ விளங்குவார்கள்.
இவர்கள், பல்வேறு பிரச்சினைகளால்
பாதிக்கப்படுவதால், அடுத்தவர் பிரச்சினையை எளிதாக புரிந்து
கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.
மற்றவர்களிடம் இதமாகவும், இனிமையாகவும் பேசும் தன்மை கொண்டவர்களாகவும், பயணம் செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
சட்ட விரோதமான செயல்களிலோ, மனசாட்சிக்கு
விரோதமான செயல்களிலோ ஈடுபட விரும்ப மாட்டார்கள். மேலும் சட்ட விரோத
நடவடிக்கைகளை எதிக்கும் குணமும் இவர்களுக்கு உண்டு.
மற்றவர்கள் தயவில் ஆதாயம் தேட விரும்பாத
இவர்களிடம், அறிவும், தகுதியும் அதிகமாகவே இருக்கும். எனினும், வாய்ப்பு
கிடைக்கவில்லை என்பதற்காக, குறுக்கு வழியை கையாள விரும்ப மாட்டார்கள்.
பூர நட்சத்திரத்தில் பிறந்த
பெண்கள், பலருக்கு அன்பான கணவன் கிடைப்பார்கள்.
இவர்கள், அடக்கமாவும், அனைவரையும் அனுசரித்து போகும் தன்மை உள்ளவர்களாகவும்
இருப்பார்கள். தான தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு இருக்கும்.
ஆனாலும், தன்னைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்ற கற்பனையும் இருக்கும்.
பூரம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்கு, மற்றவர்களிடம் இருந்து தாமாகவே உதவி கிடைக்கும்.
இவர்களும் மற்றவர்களை தேடி சென்று உதவி செய்வார்கள். ஆனாலும், கிடைத்த
சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
அதனால், வாழத்தெரியாத பூரம் என்ற பழமொழியும் உண்டு.
பூரம் நட்சத்திரத்தில் நின்ற கிரகம் வயிற்று வலி, அறுவை சிகிச்சை, தாமத திருமணம், சொத்து பிரச்சினை ஆகியவற்றை சொல்லும்.
பூர நட்சத்திரம் கட்டிலின் இரு
கால்கள், சங்கு மற்றும் மெத்தை போன்ற வடிவத்தில் இருப்பதால், இந்த
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மேற்கண்ட வடிவங்களை தங்கள் தொழில் மற்றும்
வணிகத்திற்கு லோகோவாக பயன்படுத்தலாம்.
பூரம் நட்சத்திரத்திற்கான அதிதேவதை ஸ்ரீ
ஆண்டாள், பார்வதி என்றும் சில நூல்கள் குறிப்பிடுகின்றன. பரிகார தெய்வம்
துர்கை. மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள ஸ்ரீ ராம தேவர் ஜீவ
சமாதியையும் வணங்கலாம்.
மகாலட்சுமிக்கு உகந்த தாமரை மலரே பூர
நட்சத்திரத்திற்கு உகந்த மலராகும். எனவே பூர நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள், தங்கள் பூஜை மற்றும் வழிபாடுகளில் தாமரை மலர்களை
பயன்படுத்தலாம்.
இந்த நட்சத்திரத்தின் விருட்சம் பலா மரம்.
எனவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பலா மரக்கன்றுகளை நட்டு நீடூற்றி
வளர்க்கலாம். கோவில் மற்றும் பிற இடங்களில் உள்ள பலா மரங்களுக்கும் நீர்
ஊற்றலாம்.
பூர நட்சத்திரத்திற்கான மிருகம் பெண் எலி. பறவை பெண் கழுகு. எனவே இவற்றுக்கு தொந்தரவோ, இடையூறோ செய்யக்கூடாது.
புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை
செல்லும் வழியில் உள்ள திருவரங்குளம் ஹரி தீர்த்தேஸ்வரர் உடனுறை பெரியநாயகி
ஆலயமே, பூர நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும்.
எனவே, பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று இந்த ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.
பூரம் நட்சத்திரக்காரர்கள், தங்
No comments:
Post a Comment