வெள்ளை மனமும் சாத்வீக குணமும் நிறைந்தவர்கள் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
சுகபோகங்களுக்கேல்லாம் அதிபதியான இந்திரன்
பிறந்த நட்சத்திரம் என்ற சிறப்புக்கு உரியது கேட்டை நட்சத்திரம். கேட்டை
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி வாழ்வார்கள் என்ற பழமொழியும்
உண்டு.
நோ, யா, இ, யு போன்ற எழுத்துகளை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும், கேட்டை நட்சத்திரத்தின் ஆதிக்கம் மிக்கவர்களே ஆவர்.
கேட்டையும், கிணற்றடியும் ரகசியத்தை சொல்லும்
என்பார்கள். அந்த அளவுக்கு ரகசியத்தை பாதுகாக்க தெயாதவர்கள் கேட்டை
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
ஊருக்கெல்லாம் சொல்ல வேண்டிய விஷயத்தை இவர்களிடம் சொன்னால் போதும். அந்த அளவுக்கு ரகசியம் இவர்களிடம் தங்காது.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
வெள்ளை மனமும், சாத்வீக குணமும் நிறைந்திருக்கும். ஆனால், இவர்களின் மனதை
யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
விடாப்பிடியான குணமும் நிறைந்திருக்கும்
இவர்கள் வெளிப்பார்வைக்கு மிகவும் கரடு முரடாக தெரிந்தாலும், உண்மையில்
அதற்கு நேர்மாறானவர்கள்.
மற்றவர்களின் கருத்துக்களை இவர்கள்
ஏற்றுக்கொள்வது கடினம். பல நேரங்களில் முன் பின் யோசிக்காமல் முடிவெடுத்து
விட்டு அதனால் பிரச்சனைகளை சந்திக்கும் நிலைக்கும் ஆளாவார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த
பெண்கள், அழகான, கவர்ச்சியான தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள். தீவிரமான
உணர்ச்சி, ஆழ்ந்த அன்பு,, கூர்ந்த அறிவு நிறைந்தவர்கள். மற்றவர்களின்
எண்ணத்தை எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை உண்டு. தன்னை பற்றி மற்றவர்கள்
என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அறிய விரும்புவார்கள். மற்றவர்களை
அதிகாரம் செய்ய விரும்ப மாட்டார்கள். நிகழ்ச்சிகள், விருந்துகள் ஏற்பாடு
செய்வதில் இவர்களுக்கு தனித்திறமை உண்டு.
கேட்டை நட்சத்திரத்தில் நின்ற கிரகம்
தூக்கு, தற்கொலை, ரகசியம், சுயமாக முடிவெடுக்கும் தன்மை, நிலத்தில்
முடங்கிய பணம் ஆகியவற்றை சொல்லும்.
கேட்டை நட்சத்திரத்தின் வடிவம்
குடை, குண்டலம் மற்றும் ஈட்டி போன்று இருப்பதால், இந்த நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள், தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கு இவற்றை லோகோவாகப்
பயன்படுத்தலாம்.
கேட்டை நட்சத்திரத்தின் அதிதேவதை
இந்திரன், ஸ்ரீ வராக பெருமாள். பரிகார தெய்வம் பெருமாள். எட்டுக்குடி ஸ்ரீ
வான்மீகர் ஜீவ சமாதி, நாகப்பட்டினம் அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர்
கோரக்கர் ஜீவ சமாதியையும் வணங்கலாம். உகந்த மலர் பன்னீர் ரோஜா.
ராட்சத கணம் கொண்ட கேட்டை நட்சத்திரத்தின் விருட்சம் பலா மரம். எனவே பலா மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.
கேட்டை நட்சத்திரத்தின் மிருகம் ஆண் மான். பறவை சக்கரவாகம். இவற்றுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது நல்லது.
தஞ்சை கும்பகோணம் சாலையில் உள்ள பசுபதி கோயில் வரதராஜப்பெருமாள், உடனுறை பெருந்தேவி ஆலயமே இந்த நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும்.
எனவே கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் இந்த ஆலயம் சென்று வழிபாடு செய்வது சிறப்பு.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, கோ தானம் செய்வது நல்லது.
No comments:
Post a Comment