தன்னுடைய மனதுக்கு சரி என்று பட்டதை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் குணம் கொண்டவர்கள் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
ஆடல் வல்லான் சிவபெருமானின் நட்சத்திரம் என்ற
சிறப்பை பெற்றது திருவாதிரை நட்சத்திரம். பெயரின் முதல் எழுத்து
கு, க, ஞா, சா ஆகிய எழுத்தாக கொண்டவர்களும், திருவாதிரை நட்சத்திரத்தின்
ஆதிக்கம் கொண்டவர்கள்.
திருவாதிரை நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள், எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிக்கும் ஆற்றல்
பெற்றவர்கள். பொது மேடைகளில் வேடிக்கையாக பேசி அனைவரையும் வசீகரிக்கும்
குணம் உண்டு. உள்ளுணர்வால் அனைத்தையும் அறிவார்கள்.
இவர்களுக்கு இரண்டு விதமான குணங்கள் உண்டு.
சிலர் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சுமூகமான உறவுடன் இருப்பார்கள்.
சிலர் நன்றி மறக்கும் இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எந்த நேரத்தில் எதை செய்வார்கள், எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை யாராலும் யூகிக்க முடியாது.
ஒழுக்கமான திருவாதிரை உலகை ஆளும் தன்மை
கொண்டது. இந்த நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்கு, ஆடல், பாடல், இசை, ஓவியம், காவியம் என அனைத்தும் கைவந்த
கலையாக இருக்கும்.
இவர்கள், அசைவ உணவுகளை தவிர்த்தால், பெரிய அளவில் சாதிக்கலாம் என்றும் சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், நல்ல
புத்திசாலியாகவும், அதிக செலவாளியாகவும் இருப்பார்கள். பிறருக்கு உதவும்
குணமும், பிறர் மீது குற்றம் கண்டுபிடிக்கும் குணமும் உண்டு.
திருவாதிரை நட்சத்திரத்தில் நின்ற
கிரகம், தற்கொலை, தற்கொலைக்கு முயற்சி செய்தவர்கள், சுவாச கோளாறு, மூச்சு
திணறல் போன்றவற்றை சொல்லும்,
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகழோடு வாழ்வார்கள். ஆனாலும், அவ்வப்போது பணப்பற்றாக்குறை தலை காட்டும்.
எனினும், சூழ்நிலைக்கு தகுந்தாற்போல், தங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை இவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும்.
திருவாதிரை நட்சத்திரம் மனித
தலை, வைரம், நீர்த்துளி போன்ற வடிவம் கொண்டது என்பதால், தொழில் வணிகத்தில்
ஈடுபட்டுள்ளோர் இவற்றை லோலோவாக பயன்படுத்தலாம்.
திருவாதிரை நட்சத்திரத்தின் அதிதேவதை
மகேஸ்வரன். ருத்ரன். பரிகார தெய்வம் துர்கை. சிதம்பரத்தில் உள்ள திருமூலர்
ஜீவ சமாதி, திருவண்ணாமலை இடைக்காடர் ஜீவ சமாதி ஆகியவற்றையும் வணங்கலாம்.
உகந்த மலர் வில்வ மலர்.
இது மனித கணம் கொண்ட நட்சத்திரம் ஆகும்.
இதற்கு உரிய விருட்சம் செங்கருங்காலி ஆகும். எனவே, இந்த மரத்திற்கு தண்ணீர்
ஊற்றினால் நல்லது.
திருவாதிரை நட்சத்திரத்திற்கான மிருகம் செந்நாய். பறவை சிட்டுக்குருவி. எனவே இவற்றுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது நல்லது.
பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தில்
அமைந்துள்ள அருள்மிகு அபய வரதீசஸ்வரர் உடனுறை சுந்தரநாயகி அம்மன்
ஆலயம், திருவாதிரை நட்சத்திரத்திற்கு உகந்த ஆலயமாகும்.
திருவாதிரை நட்சத்திரம் அன்று இந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள எள் தானம் செய்வது நல்லது.
No comments:
Post a Comment