மற்றவர்களுக்கு ஆபத்து என்றால் ஓடோடி சென்று உதவி செய்யும் குணம் படைத்தவர்கள் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
தோஷம் இல்லாத நட்சத்திரங்களில் ஒன்றாக
கூறப்படும் சுவாதி நட்சத்திரம் நரசிம்மர் பிறந்த நட்சத்திரம் என்ற சிறப்பை
பெற்றது. அதனால், சுவாதியை சோதிக்காதே என்ற பழமொழியும் உண்டு.
ரூ, ரே, ரோ, தா என்ற எழுத்துக்களை பெயரின்
முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் சுவாதி நட்சத்திரத்தின் ஆதிக்கத்தில்
பிறந்தவர்களே ஆவர்.
ராகுவின் நட்சத்திரமான சுவாதி, துலாம்
நட்சத்திரத்தில் இடம் பெற்றுள்ளதால், ராகுவுக்குரிய பிரமாண்ட
எண்ணமும், சுக்கிரனுக்கு உரிய சுகபோக நாட்டமும் இவர்களிடம்
மிகுந்திருக்கும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அமைதியானவர்கள், அதே சமயம் பிடிவாத குணம் நிறைந்தவர்கள். சுதந்திரமான மனப்போக்கை கொண்டவர்கள்.
இவர்கள் மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்பட மாட்டார்கள். அதேபோல், தன்னுடைய பொருளையும் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
மற்றவர்கள் தம்மை விமர்சிப்பதையோ, தன்னுடைய
வேலையை குறை கூறுவதையோ இவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவர்களுக்கு கோபம் வந்துவிட்டால், கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.
மற்றவர்களுக்கு ஆபத்து வரும்போது ஓடோடி சென்று கை கொடுப்பது சுவாதி நட்சத்திரத்தின் அடிப்படை குணம்.
அதேபோல், தனது சுய மரியாதைக்கு பங்கம் வந்தால், அதற்கு காரானமானவர்கள் யாராக இருந்தாலும் எதிர்க்க தயங்க மாட்டார்கள்.
நண்பனுக்கு உண்மையான நண்பனாகவும், எதிரிக்கு உண்மையான எதிரியாகவும் இருப்பவர்கள் சுவாதி நட்சத்திர காரர்கள்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்
அன்பும், இரக்கமும் நிறைந்தவர்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தை பெறுவார்கள்.
நண்பர்கள் அதிகம் உண்டு. எதிரிகளை வெற்றி கொள்வார்கள். அனாவசிய செலவுகள்
செய்வது இவர்களுக்கு பிடிக்காது.
சுவாதி நட்சத்திரத்தில் நின்ற கிரகம், அகால மரணம், திடீர் மரணம், குறைந்த ஆயுள் பலம் போன்றவற்றை சொல்லும்.
சுவாதி நட்சத்திரத்தின் அதிதேவதையாக ஸ்ரீ
நரசிம்மர், வாயு பகவான். பரிகார தெய்வமாக மகாலட்சுமி, துர்கை ஆகியோரும்
கூறப்படுகிறது. மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ குதம்பை சித்தர் ஜீவ சமாதியையும்
வணங்கலாம். உகந்த மலர் மஞ்சள் அரளி.
சுவாதி நட்சத்திரமானது புல்லின்
நுனி, தீபச்சுடர் போன்ற வடிவம் கொண்டதால், இந்த வடிவங்களை, சுவாதி
நட்சத்திரக்காரர்கள், தங்கள் தொழில் வணிகத்திற்கு லோகோவாக பயன்படுத்தலாம்.
தேவ கண நட்சத்திரமான சுவாதியின் விருட்சம் மருத மரம். எனவே இந்த நட்சத்திர காரர்கள் மருத மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.
இந்த நட்சத்திரத்திற்கான மிருகம் ஆண் எருமை. பறவை தேனீ. எனவே இவற்றுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது நல்லது.
பூந்தமல்லி அருகே சித்துக்காடு என்ற ஊரில்
அமைந்துள்ள தாந்திரீஸ்வரர் உடனுறை பூங்குழலி அம்மன் ஆலயமே, சுவாதி
நட்சத்திரத்திற்கு உகந்த கோவிலாகும்.
தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று, சுவாதி நட்சத்திரக்காரர்கள், இந்த ஆலயம் சென்று வழிபடுவது நன்மை அளிக்கும்.
சுவாதி நட்சத்திரக்காரர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள பணத்தை தானம் செய்வது நல்லது.
No comments:
Post a Comment