இயல்பிலேயே மற்றவர்களை வழிநடத்தும் தலைமை பண்பு நிறைந்தவர்கள் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள், பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் சமமாக பாவிக்கக்கூடியவர்கள்.
மத சம்பந்தமான நம்பிக்கை அதிகம் இருந்தாலும், மூட நம்பிக்கையை
ஏற்கமாட்டார்கள்.
சே, சோ, த, தி போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும், பூரட்டாதி நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
குருவின் நட்சத்திரமான பூரட்டாதியின் முதல்
மூன்று பாதங்கள் சனியின் வீடான கும்பத்திலும், எஞ்சிய ஒரு பாதம் குருவின்
வீடான மீனத்தில் இருப்பதாலும், கொண்ட கொள்கையில் உறுதியும், மென்மையான
அணுகுமுறையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பொதுவாக அமைதியை விரும்புபவர்கள். சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக வெகுண்டு எழுவார்கள்.
சிறிய பிரச்சினை என்றால் கூட மனது அமைதி
இழந்து விடும். சுவையான உணவை விரும்பி உண்ணுவார்கள். ஆடை அலங்காரத்தில்
பெரிய அளவில் நாட்டம் இருக்காது.
பாரபட்சம் இல்லாமல் கருத்து சொல்வார்கள். மத
சம்பந்தமான நம்பிக்கை இருந்தாலும், மூட நம்பிக்கையை வெறுப்பார்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டார்கள்.
இவர்கள், மற்றவர்களின் மரியாதையும்
நம்பிக்கையையும் எளிதாக பெற்று விடுவார்கள். இவர்களுக்கு தேவையான அளவு பணம்
கிடைக்கும். ஆனாலும் அளவுக்கு அதிகமாக பணம் சேர்க்கும் எண்ணம் இருக்காது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்
நேர்மையாக நடக்க விரும்புவார்கள். இயற்கையிலேயே தலைமை பண்பு
நிறைந்திருக்கும். மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் திறமை பெற்றவர்கள். பல
விஷயங்களுக்கு இவர்கள் முன் உதாரணமாக திகழ்வார்கள். மற்றவர்களுக்கு உதவி
செய்யும் குணமும் இவர்களுக்கு மிகுந்திருக்கும்.
இவர்களுக்கு யாராவது ஆறுதல்
சொன்னால், அவர்களை அதிக அளவில் நம்பி விடுவார்கள். அதேபோல், இவர்களும்
பலருக்கு ஆறுதல் சொல்லி மனதை தேற்றுவார்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் நின்ற
கிரகம், கடன் பிரச்சினை, மஞ்சள் நோட்டிஸ், இரண்டு திருமணம், பூர்வீக சொத்தை
அனுபவிக்க முடியாமை, பலிகொடுத்து செய்யும் பூஜை ஆகியவற்றை சொல்லும்.
பூரட்டாதி நட்சத்திரம் கட்டிலின் இரு
கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள் போன்ற தோற்றத்தில்
இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தொழில்
வணிகத்திற்கு இவற்றை லோகோவாக பயன்படுத்தலாம்.
மனுஷ குணம் கொண்ட பூரட்டாதி நட்சத்திரத்தின்
அதிதேவதை ஏகபாதர், குபேரன், காமதேனு. பரிகார தெய்வம் துர்கை. சிதம்பரம்
திருமூலர், திருவாரூர் கமலமுனி, திருவாவடுதுறை காலங்கிநாதர், மதுரை
சுந்தரானந்தர் போன்ற ஜீவ சமாதிகளையும் வணங்கலாம். உகந்த மலர் வெள்ளை அரளி.
இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் தேமா.
எனவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கோயில் மற்றும் பிற இடங்களில்
உள்ள தேமா மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.
பூரட்டாதி நட்சத்திரத்தின் மிருகம் ஆண் சிங்கம். பறவை உள்ளான். எனவே இவற்றுக்கு தொந்தரவோ, இடையூறோ செய்யக்கூடாது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே
உள்ள ரங்கநாதபுரம் திருவானேஸ்வரர் உடனுறை காமாட்சி அம்மன் ஆலயமே, பூரட்டாதி
நட்சத்திரத்திற்கு உரிய திருக்கோயிலாகும்.
எனவே, பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று இந்த கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது நன்மை பயக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள பொன் தானம் செய்வது நல்லது.
No comments:
Post a Comment