Wednesday, 30 October 2019

மேஷத்தில் சூரியன்

ஜாதகர்/ஜாதகிக்கு கண்கள் சிவந்திருக்கும்,உடல் பலம், துணிச்சல் மிக்கவர்கள், முன்கோபம்,அவசரம் ஆணவம், கல்வி கற்றவர்களாகவும், பிறருக்கு உதவி செய்பவர்களாகவும், பிறர் போற்றும் அளவுக்கு வாழ்ந்து வருவர்கள்,செல்வம் கிட்டும், தந்தைவழி செல்வாக்கு ரணுவம், காவல், மருத்துவதுறை தொடர்புகள் ஏற்படும், அதிக அலைச்சலுடையவர்கள்,எல்லா ஆற்றால் இருக்கும்,பித்தத சரீரம் உள்ளவர்,உயர் பதவி அமையும், எப்போதும் ஆயுதங்களை வைத்திருப்பார்கள்,பிதுர்ராஜ்ஜிய சொத்துக்களால் லாபம்,உறவினர் துண்பம், கால் நடைகளினால் ஆபத்தையும் அடைவர்கள், சாஸ்திர ஞானம், புகழ் கிடைக்கும். மதப்பற்று அதிகம் இருக்கும், சுயமாக சொத்து சம்பாத்திப்பார், பெரும்பாலோர் ஆசிரியராக இருப்பர், பேராசிரியராகவும் இருப்பர்கள், தந்தையின் முன்னேற்றம் சற்று குறைவுதான். தங்களிடம் உள்ள திறமைகளைப் புறிந்து கொண்டுவேறெதனையும் பொருட்படுத்தாமல் லட்சிய நோக்கில் செயல்பட்டு வாழ்வில் சிறப்படைவர்கள்.
சூரியனின் உச்ச ராசியாக மேஷம் ராசி அமைந்திருக்கிறது. ஒருரின் ஜாதகத்தில் மேஷத்தில் சூரியன் இருந்தால் அந்த ஜாதகர் பலம் வாய்ந்த உடலமைப்பும், மிகுந்த தைரிய குணமுடையவார்கள். தனது கடின உழைப்பால் வாழ்வில் ஒரு உன்னதமான நிலையினை அடைவார்கள்.
சூரியன் உச்சமாக இருந்தாலும் 6-8-12-ஆம் பாவகமா அமைந்தால் உடலில் காயங்கள் ஏற்படும், பொற்றோர்களால் பாதிப்பு ஏற்படும், நடுத்தரமானவர்கள், பெருமையுள்ளவர்கள், சமூகத்தில் வெற்றியும், சிறிது முன்கோபம் உள்ளவர்கள், சூரியனின் பலம் குறைந்தால் உஷ்னாத்தால் பாதிப்பும், ரத்தத்தில் பாதிப்பும் உண்டாகும்,
சூரியன் செவ்வாய் அல்லது குருவின் சேர்க்கை இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு பொருளாதார விஷயங்களில் முன்னேற்ங்களையே அளிக்கும்

சூரியனை குரு பார்த்தால் ஜாதகர் /ஜாதகி தத்தம் நிலைக்கேற்ப தகுதி / திறமைகளின் அடிப்படையில் விடாமுயற்சியால் வாழ்வில் உயர் அந்தஸ்தான நிலைக்கு வந்துவிடுவர்கள்.
சூரியனுடன் சனி,சுக்கிரன், ராகு,கேது கூடினால் சூரிய தசா புத்தியில் தீமைகள் நடக்கும். மற்றவர்ளை வெறுப்பர்கள்,மன நிம்மதி குறையும்,
மேஷத்தில் உள்ள சூரியனை சந்திரன் பார்த்தால் மென்மையன உடல் அமையும், தான கர்மங்களையும், பெண்கள் தொடர்பும் ஏற்படும்.
மேஷத்தில் உள்ள சூரியனை செவ்வாய் பார்த்தால் சண்டை செய்வதில் விருப்பம், சாமர்த்தியசாலி, பிற பாலர்களுடன் மரியாதையாக நடந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கமட்டார்கள்.
மேஷத்தில் உள்ளள சூரியனை குரு பார்த்தால் செல்வங்கள் உள்ளவர்கள், அரசு உதவி, மந்திரி, புகழும் கிட்டும்.
மேஷத்தில் உள்ள சூரியனை சனி பார்த்தால் பலவித துண்பம், தர்ம சிந்தனை குறைவு,உடல் உனம் ஏற்படுத்தும்.
பிற கிரகங்களின் சேர்க்கை ஏற்ப சில பலன்கள் மாறுபடும்

தொழில் செய்யும் இடத்தில் ஒவ்வொரு லக்கினக்காரரும் பயன்படுத்த வேண்டிய வியாபார அதிர்ஷ்ட சின்னம்.

தொழில் செய்யும் இடத்தில் ஒவ்வொரு லக்கினக்காரரும் பயன்படுத்த வேண்டிய வியாபார அதிர்ஷ்ட சின்னம்.

மேச லக்னத்துக்கு அனுமனை அதிர்ஷ்ட சின்னமாக வைக்கலாம்.

ரிசப லக்னத்தார் கோயில் கோபுரம் அதிர்ஷ்ட சின்னம்.

மிதுன லக்னத்துக்கு மகான்கள் படங்கள் அல்லது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் படம்.

கடக லக்னத்துக்கு பழனி முருகன் படம்.

சிம்ம லக்னத்தார் கழுகு படம் வைக்கலாம்.

கன்னி லக்னத்தார் இரட்டை குதிரை ,இரட்டை தேவதைகள் படம்

துலாம் லக்னத்தார் திருச்செந்தூர் முருகன் படம் வைக்கலாம் ...அல்லது பெரிய மகான்கள் அல்லது தங்கள் குருவின் படம்
வைக்கலாம் .
.
விருச்சிகம் லக்னத்தார் சிங்கத்தின் மீது அமர்ந்த அம்பாள் படம்
வைக்கலாம் அல்லது சிங்கம் படத்தை வைக்கலாம்.

தனுசு லக்னத்தார் குருவாயூரப்பன் படம் க்கலாம். பாலாம்பிகா படம் வைக்கலாம். கன்னியாகுமரி அம்மன் படம் வைக்கலாம்.

மகர லக்னத்தார் நின்ற கோலத்து பெருமாள் படம் வைக்கலாம்
..
கும்ப லக்னத்தார் ஆற்றின் கரையோரம் இருக்கும் முருகன் படம் வைக்கலாம்.

மீன லக்னத்தார் திருப்பதி தங்ககோபுரம் படம் வைக்கலாம். ஆனந்த நிலையம் படம்.

இவற்றை வைத்துவிட்டு தினமும் இப்படங்களை பார்க்க வேண்டும். 2 - 3 மாதங்களின் பின்னர் உங்கள் வியாபார விருத்தியாகும்

Friday, 25 October 2019

,27,நட்சத்திரங்கள். இந்த இருபத்தேழு நட்சத்திரங்களுக்குறிய கோவில்களை அறியலாம்....

அஸ்வினி...
ஶ்ரீ பவ ஔஷதீஸ்வரர் திருக்கோவில்.. ஊர்திருத்துறைப்பூண்டி...
பரணி...
ஶ்ரீஅக்னீஸ்வரர் திருக்கோவில்
ஊர்நல்லாடை....
கிருத்திகை...
ஶ்ரீகாத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில்...
ஊர் கஞ்சனாகரம்...
ரோகிணி...
ஶ்ரீபாண்டவதூத கிருஷ்ணன் கோவில்...
ஊர் காஞ்சிபுரம்...
மிருகசீரிடம்...
ஶ்ரீஆதி நாராயணப்பெருமாள் திருக்கோவில்...
ஊர் எண்கல் கொரடாச்சேரி...
திருஆதிரை...
ஶ்ரீஅபய வரதீஸ்வரர் திருக்கோவில்...
ஊர் அதிராம்பட்டினம்...
புனர்பூசம்...
ஶ்ரீஆதிதீஸ்வரர் திருக்கோவில்..
ஊர் வாணியம்பாடி...
பூசம்...
ஶ்ரீ ஆட்சயபுரீஸ்வரர் திருக்கோயில்...
ஊர் விளங்குளம்...
ஆயில்யம்...
ஶ்ரீகற்கடகேஸ்வரர் திருக்கோயில்...
ஊர் திருந்தேவன்குடி...
மகம்...
ஶ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில்...
ஊர் தவசிமடை...
பூரம்...
ஶ்ரீ ஹரிதீர்த்தேஸ்வரர்திருக்கோயில்...
ஊர் திருவரங்குளம்...
உத்திரம்...
ஶ்ரீமாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்...
ஊர் இடையாற்றுமங்கலம்...
ஹஸ்தம்...
ஶ்ரீகிருபா கூபாரேஸ்வரர் திருக்கோயில்...
ஊர்கோமல்...
சித்திரை...
ஶ்ரீ சித்திர ரத வல்லபப்பெருமாள் திருக்கோயில்...
ஊர் குருவித்துறை...
சுவாதி...
ஶ்ரீ தாந்தீஸ்வரர் ஶ்ரீசுந்தராஜப்பெருமாள் திருக்கோயில்...
ஊர் சித்துக்காடு...
விசாகம்...
ஶ்ரீதிருமலை முருகன் திருக்கோயில் ...
ஊர் திருமலை செங்கோட்டை...
அனுஷம்...
ஶ்ரீலட்ஷ்மிபுரீஸ்வரர்திருக்கோயில்...
ஊர்திருநின்றவூர்....
கேட்டை...
ஶ்ரீவரதராஜப்பெருமாள் பசுபதி திருக்கோயில்...
ஊர் தஞ்சாவூர்...
மூலம்...
ஶ்ரீசிங்கீஸ்வரர் திருக்கோயில்..
ஊர்மப்பேடு சென்னை...
பூராடம்...
ஶ்ரீஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்...
ஊர் கடுவெளி திருவையாறு...
உத்திராடம்...
ஶ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயில்
ஊர் கீழப்பூங்குடி...
திருவோணம்...
ஶ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்...
ஊர் காவேரிப்பாக்கம்....
அவிட்டம்...
ஶ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோயில்...
ஊர் கொறுக்கை பட்டீஸ்வரம்..
சதயம்...
ஶ்ரீ அக்னிஸ்வரர் திருக்கோவில்
ஊர் திருப்புகலூர்..நன்னிலம்..
பூரட்டாதி...
ஶ்ரீதிருஆனேஸ்வரர் திருக்கோயில்...
ஊர் ரெங்கநாதபுரம்..தஞ்சாவூர்
உத்திரட்டாதி....
ஶ்ரீசகஸ்ரலட்மீஸ்வரர் திருக்கோயில்...
ஊர் தீபத்தூர் ஆவுடையார்கோயில்...
ரேவதி...
ஶ்ரீகைலாசநாதர் திருக்கோயில்...
ஊர் காருகுடி திருச்சி....
அன்பர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் அவரவர் நட்சத்திரங்களுக்கான திருக்கோவில் சென்றுவழிபாடு செய்துவர நன்மைகள் உண்டாகும்.

Tuesday, 22 October 2019

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலங்கள்

பாதகாதிபதி என்பவர் ஒருவருக்கு பாதகங்களை தருபவர்.
(பாதகங்கள்-இன்னல்கள்)
மாரகாதிபதி என்பவர் மாரகத்திற்கு (மாரகம்=இறப்பு) நிகரான துன்பங்களை தருபவர்.
அட்டமாதிபதி
ஒருவருக்கு ஆயுளை வழங்குபவர்.இன்னல்களை தருவதில் வல்லவர்.
1). ஒருவரது சாதகத்தில் பாதகாதிபதி திசையில் மாரகாதிபதி புத்தியோ அல்லது மாரகாதிபதி திசையில் பாதகாதிபதி புத்தியோ சற்று கூடுதல் கவனம் தேவை.
2)பாதகாதிபதியும்,அட்டமாதிபதியும் இணைந்திருக்கும் பட்சத்தில் பாதகாதிபதி திசையில் அட்டமாதிபதி புத்தியில் அல்லது அட்டமாதிபதி திசையில் பாதகாதிபதி புத்தியிலோ சற்று கூடுதல் கவனம் தேவை.
3)அட்டமாதிபதியின் திசை ,புத்தி காலங்களில்.
4) பாதகாதிபதி திசையை காட்டிலும் பாதகஸ்தாதனத்தில் உள்ள கிரகங்களின் திசை, புத்தி காலங்களில் கட்டாயம் முன் எச்சரிக்கை Danger உணர்வு அவசியம்.
5)உபய ராசிகாரர்களுக்கு பாதகாதிபதி,மாரகாதிபதி இரண்டும் ஓன்றாக இருக்கும் பட்சத்தில் சற்று கூடுதல் கவனம் தேவை.
(தனுசு,மீன ராசி காரர்களுக்கு புதன் பகவான். இதேபோல மிதுனம்,கன்னி ராசி காரர்களுக்கு குருபகவான்.)
6) ஆறாம் அதிபதி திசை மற்றும் புத்தி காலங்களில் கடன்,பிணி மற்றும் எதிரி இவைகளில் முன் எச்சரிக்கை தேவை.
சோதிடரின் உதவியோடு அக்கிரக அதிபதிகளுக்கு உரிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து வரவேண்டும்.
பாதகாதிபதி
சர ராசி ; 11- ம் அதிபதி
ஸ்திர ராசி: 9-ம் அதிபதி
உபய ராசி : 7-ம் அதிபதி
மாரகாதிபதி
சர ராசி: 2,7 -க்கு உடைய அதிபதி
ஸ்திர ராசி: 3,8-க்கு உடைய அதிபதி
உபய ராசி :7,11 -க்கு உடைய அதிபதி
சர ராசி
மேஷம்,கடகம்,துலாம்,மகரம்
ஸ்திர ராசி
ரிஷபம்,சிம்மம்,விருட்சகம்,கும்பம்
உபய ராசி
மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்
(தங்களது சாதக பலன்,திருமணபொருத்தம், ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தஇடம், மற்றும் நேரம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம் )

Tuesday, 15 October 2019

எளிய முறையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது எப்படி ?



வாழ்க்கையில் சந்தர்ப்பம் எப்போதாவது தான் கிடைக்கும். அதை தவற விடுபவர்கள் புத்திசாலிகள் அல்ல. சில குடும்பங்களில், துன்பம் துரத்திக் கொண்டே இருக்கும். குறிப்பாக, வாழாவெட்டியாய் வரும் பெண்கள், அங்கஹீனர்களாகப் பிறப்பவர்கள், திருமணமாகியும் நிம்மதியில்லாமல் இருக்கும் ஆண்கள், பணக்கஷ்டத்தால் அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ளாமல் இருப்பவர்கள்… இதற்கெல்லாம் காரணம் என்ன என்றால், பிதுர் தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவற்றைச் செய்யாமல் இருப்பது தான். ஒவ்வொரு அமாவாசையும், பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். மாதப்பிறப்புகளில் பிதுர் தர்ப்பணம் செய்யலாம். இவையெல்லாம் சாத்தியமில்லாவிட்டால், தை அமாவாசை, ஆடி அமாவாசையாவது தர்ப்பணம் செய்யலாம். இதுவரை என் வாழ்க்கையில் தர்ப்பணம் செய்ததே இல்லை, அதற்கு ஏதாவது மாற்று இருக்கிறதா என்றால், அதற்கும் மாற்று வைத்திருக்கிறது சாஸ்திரம்.
புரட்டாசி மாத பவுர்ணமி துவங்கி, அமாவாசை வரையுள்ள, 15 நாட்கள் மகாளயபட்ச காலம். மகாளயம் என்றால், மொத்தமாகக் கூடுதல் என்று பொருள் கொள்ளலாம். பிதுர்கள் எனப்படும் முன்னோர்கள் இந்த, 15 நாட்களும் கூட்டமாக பூமிக்கு வந்து விடுகின்றனர். தங்களது சந்ததியர், தங்களை நினைத்துப் பார்க்கின்றனரா என சோதிக்கின்றனர். அவர்களை அந்த, 15 நாட்களும் நினைத்து தர்ப்பணம் செய்தால், அவர்கள் மகிழ்கின்றனர்.
இதற்கு அதிக செலவாகுமோ என்று எண்ணத் தேவையில்லை. வசதி படைத்தவர்கள், தகுதியுள்ள அந்தணர்களை அழைத்து, இதை சில ஆயிரங்கள் செலவழித்து செய்யலாம். மற்றவர்கள் என்ன செய்யலாம் என்றால், சில விதிமுறைகளை சாஸ்திரம் சொல்கிறது.
நதிக்கரைகளுக்கு சென்று, அந்தணர்களுக்கு தட்சணை கொடுத்து தர்ப்பணம் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால், ஒரு பிடி எள்ளை தானம் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால், ஒரு பிடி எள்ளை கையில் எடுத்து, தீர்த்தத்தை விட்டு கீழே விடலாம். இதெல்லாம் முடியாவிட்டால், பசுவை வலம் வந்து வணங்கலாம். அதற்கும் முடியாவிட்டால், வெட்டவெளியில் நின்று இரண்டு கைகளையும் உயரே தூக்கி, “பித்ரு தேவதைகளை வணங்க வேண்டும் என்பது என் ஆசை தான். ஆனால் முடியவில்லை. எனவே, பித்ரு தேவதைகளே… நீங்கள் எல்லாரும், நான் சிரார்த்தம் செய்ததாக எண்ணி திருப்தி அடையுங்கள்…’ என்று வேண்டலாம்.
இதை விட சாஸ்திரம் நமக்கு என்ன சலுகையைத் தந்துவிட முடியும். மேற்கண்ட பரிகாரங்களுக்கு ஒரு பாக்கெட் எள் போதாதா. எள் எந்த அளவுக்கு வேண்டும் என்றால், கை கட்டை விரலில் எள்ளை ஒற்றிக்கொண்டு, அதில் தண்ணீரை விட்டு கீழே விட்டால் கூட போதும் என்கிறது சாஸ்திரம்.
மகாளயபட்சத்தின், 15 நாட்களும் இவ்வாறு செய்யலாம். முடியாதவர்கள், மகாளய அமாவாசை தினத்தன்றாவது, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை கடமைக்குச் செய்யாமல், சிரத்தையாக செய்தால், கிடைக்கும் பலன் என்ன தெரியுமா?
இனிமேல், நம் குடும்பங்களில் ஊனமான குழந்தைகள் பிறக்க மாட்டார்கள். இப்போது, மாற்றுத் திறனாளிகளாக இருப்பவர்களுக்கு, நல்ல வாழ்க்கை அமையும். மேலும், நம் முன்னோர்கள் பாவம் செய்து நரகத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், அவர்களுக்கு விமோசனமாகி சொர்க்கத்தை அடைவர். அவர்களின் ஆசிர்வாதம், நம்மை மனநிம்மதியுடனும், செல்வச்செழிப்புடனும் வாழ வைக்கும்.
மகாளயபட்ச காலமான 15நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.முடியாதவர்கள் மகாளய அமாவாசைக்கு அவசியம் செய்தல் வேண்டும்.
திருவாரூர் மாவட்டம் செதலபதி கிராமத்தில், முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கே, ராமபிரான் பூஜித்த பிதுர்லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை மகாளயபட்ச காலத்தில் ஒரு நாளாவது சென்று தரிசித்து வாருங்கள். அங்கே தர்ப்பணம் செய்வது இன்னும் விசேஷம். திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் ரோட்டில், 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில், கூத்தனூர் சென்று, 2 கி.மீ., தொலைவில் உள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ் பெற்ற சரஸ்வதி கோவில் உள்ளது. பிதுர் தர்ப்பணத்தின் பலன் அளவிட முடியாதது; அனுபவத்தின் மூலமே இதை உணர முடியும்.

ரேவதி நட்சத்திர பலன்கள்

பேச்சில் சுத்தமும், கொடுக்கல் வாங்கலில் நாணயத்தையும் காப்பாற்ற நினைப்பவர்கள் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து  கேட்டாலும், அதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளாமல், தங்கள் விருப்பட்ப்படியே நடப்பார்கள்.
தே, தோ, ச, சி போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் ரேவதி நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
புதனின் நட்சத்திரமான ரேவதி, குருவின் வீடான மீனத்தில் அமைந்துள்ளதால், சாதுர்யமும், மென்மையான போக்கும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.
ராசி மண்டலத்தின் கடைசி நட்சத்திரமான ரேவதியில் பிறந்தவர்கள், யுகங்களை முடித்த நிலையில் உள்ளது போல, கொஞ்சம் மெதுவாகவே இயங்குவார்கள். சோம்பேறித்தனமும் அலட்சியமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
மற்றவர்களிடம் அனாவசியமாக எதையும் பேச மாட்டார்கள். மற்றவர்கள் பேசுவதையும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். எதுவாக இருந்தாலும், அதை தன்னுடைய விருப்பப்படியே செய்ய விரும்புவார்கள். அதனால் விளையும் நன்மை தீமைகளை பற்றியும் கவலை பட மாட்டார்கள்.
கண்மூடித்தனமாக யாரையும் ஏற்க மாட்டார்கள். அதுபோல், ஒருவரை பிடித்துவிட்டால், அவரை எக்காரணம் கொண்டும் ஒதுக்கித்தள்ள மாட்டார்கள்.
சில நேரங்களில் தவறு என்று தெரிந்தாலும், தன் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். மூட நம்பிக்கைகளை ஏற்கும் தன்மை இருக்கும். சின்ன சின்ன தோல்விகள் ஏற்பட்டால் கூட அதிக மன பாதிப்பு அடைவார்கள். ஆனால், கடவுள் அருளும் அதிர்ஷ்டமும் இவர்களுக்கு அதிகம் உண்டு.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிக பிடிவாத குணம் உண்டு. பிறரை அடக்கி ஆளும் எண்ணம் இருக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கும் இதே குணம் பிரதிபலிக்கும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடுத்தவர்களிடம் பணம் வாங்கினாலும், அடுத்தவர் வீட்டில் உணவு அருந்தினாலும், அதிர்ஷ்டம் போய்விடும் என்றும் சொல்லப்படுவதுண்டு.
ரேவதி நட்சத்திரத்தில் நின்ற கிரகம், சிறு வயதில் அதிக மருத்துவ செலவு, மஞ்சள் நோட்டிஸ், மூடிய கிணறுகள், மற்றொரு வீட்டில் பிறப்பது, கால் வலி, ஊரை விட்டு வெளியேறுதல் ஆகியவற்றையும் குறிக்கும்.
ரேவதி நட்சத்திரம் மீன் மற்றும் மத்தளம் போன்ற வடிவம் கொண்டுள்ளதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்த வடிவங்களை லோகோவாக பயன்படுத்தலாம்.
தேவ கணம் கொண்ட ரேவதி நட்சத்திரத்தின் அதிதேவதை அரங்கநாதன், ஈஸ்வரன். மதுரையில் உள்ள சுந்தரானந்த சித்தர் ஜீவ சமாதியையும் வணங்கலாம். உகந்த மலர் செம்பருத்தி.
ரேவதி நட்சத்திரத்தின் விருட்சம் இலுப்பை மரம். எனவே இலுப்பை மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.
இந்த நட்சத்திரத்திற்கு உரிய மிருகம் பெண் யானை. பறவை வல்லூறு. எனவே இவற்றுக்கு இடையூறு செய்யக்கூடாது.
திருச்சி தாத்தையங்கார் பேட்டை அருகே காருகுடி என்ற ஊரில் அமைந்துள்ள கைலாசநாதர் உடனுறை பெரியநாயகி அம்மன் ஆலயமே, இந்த நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாகும்.
எனவே ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று, இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்லது.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள பொன் தானம் செய்வது நல்லது

உத்திரட்டாதி நட்சத்திர பலன்கள்


மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருப்பதுடன், தம்மை நம்பி வந்தவர்களை காப்பாற்றும் குணமும் கொண்டவர்கள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
து, ச, த போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும், உத்திரட்டாதி நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதி குருவின் வீடான மீனத்தில் அமைந்துள்ளதால், எடுத்துக்கொண்ட காரியத்தில் உறுதியும், மற்றவர்களை வழி நடத்துவதிலும் இவர்கள் முதன்மையாக திகழ்வார்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஏழை பணக்காரன் என்ற ஏற்ற தாழ்வு பாராமல், அனைவரையும் பாரபட்சம் இல்லாமல் அணுகும் தன்மை உள்ளவர்கள்.
கள்ளம் கபடம் இல்லாத இதயம் இருக்கும். முடிந்தவரை மற்றவர்களுக்கு தொல்லை தராமல் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களின் கோபம் நீண்ட நேரம் நீடிக்காது.
இவர்களிடம் அன்பு செலுத்துபவர்கள் மற்றும் நம்பி வந்தவர்களுக்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். இவர்களின் உணர்வுகளை காயப்படுத்தி விட்டால், சிங்கம் போல பொங்கி எழுந்து விடுவார்கள்.
இவர்களிடம் அறிவுத்திறனும், விவேகமும் நிறைந்திருக்கும். கவர்ச்சிகரமாக பேசுவதில் சாமர்த்தியம் உள்ளவர்கள். எதிரிகளை வெல்லும் குணமும் இருக்கும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், வீட்டுக்கும் குடும்பத்திற்கும் ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். இவர்களுடைய நடவடிக்கை அனைத்தும், மற்றவர்கள் புகழும்படி இருக்கும். அனைவரிடமும், பணிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வார்கள். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தன்னை தயார்படுத்தி கொள்வார்கள். மற்றவர்களை பற்றியும் கவலைப் படுவார்கள். முடிந்தவரை உதவி செய்வார்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நின்ற கிரகம்,  சுய தொழில் முன்னேற்றத்தில் உள்ள ஆர்வம், இரண்டு திருமணம் முடித்தவர்கள், ஒரு தொழிலை விட்டு வேறு தொழில், ஒரு இடத்தை விட்டு வேறு இடம் மாறுவதையும் சொல்லும்.
உத்திரட்டாதி நட்சத்திரம் கட்டில் கால்கள், இரட்டையர்கள் போன்ற வடிவத்தில் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கு இவற்றை லோகோவாக பயன்படுத்தலாம்.
மனுஷ கணம் கொண்ட உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை மகா ஈஸ்வரர், காமதேனு. பரிகார தெய்வம் துர்கை. மதுரை சுந்தரானந்தர், திருப்பரங்குன்றம் மச்சமுனி ஆகியோரின் ஜீவ சமாதிகளையும் வணங்கலாம். உகந்த மலர் நதியாவட்டை.
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் விருட்சம் வேம்பு. எனவே உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வேப்ப மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.
இதற்குரிய மிருகம் பசு, பறவை கோட்டான். எனவே இவற்றுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது நல்லது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அருகே தீயத்தூரில் அமைந்துள்ள சகஸ்ர லட்சுமீஸ்வரர் உடனுறை பெரியநாயகி ஆலயமே, உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாகும்.
எனவே தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று, உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள் இந்த ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.
உத்திரட்டாதி நட்சத்திரகாரர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, வெள்ளாடு தானம் செய்வது நல்லது.

பூரட்டாதி நட்சத்திர பலன்கள்


இயல்பிலேயே மற்றவர்களை வழிநடத்தும் தலைமை பண்பு நிறைந்தவர்கள் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் சமமாக பாவிக்கக்கூடியவர்கள். மத சம்பந்தமான நம்பிக்கை அதிகம் இருந்தாலும், மூட நம்பிக்கையை ஏற்கமாட்டார்கள்.
சே, சோ, த, தி போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும், பூரட்டாதி நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
குருவின் நட்சத்திரமான பூரட்டாதியின் முதல் மூன்று பாதங்கள் சனியின் வீடான கும்பத்திலும், எஞ்சிய ஒரு பாதம் குருவின் வீடான மீனத்தில் இருப்பதாலும், கொண்ட கொள்கையில் உறுதியும், மென்மையான அணுகுமுறையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பொதுவாக அமைதியை விரும்புபவர்கள். சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக வெகுண்டு எழுவார்கள்.
சிறிய பிரச்சினை என்றால் கூட மனது அமைதி இழந்து விடும். சுவையான உணவை விரும்பி உண்ணுவார்கள். ஆடை அலங்காரத்தில் பெரிய அளவில் நாட்டம் இருக்காது.
பாரபட்சம் இல்லாமல் கருத்து சொல்வார்கள். மத சம்பந்தமான நம்பிக்கை இருந்தாலும், மூட நம்பிக்கையை வெறுப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டார்கள்.
இவர்கள், மற்றவர்களின் மரியாதையும் நம்பிக்கையையும் எளிதாக பெற்று விடுவார்கள். இவர்களுக்கு தேவையான அளவு பணம் கிடைக்கும். ஆனாலும்  அளவுக்கு அதிகமாக பணம் சேர்க்கும் எண்ணம் இருக்காது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் நேர்மையாக நடக்க விரும்புவார்கள். இயற்கையிலேயே தலைமை பண்பு நிறைந்திருக்கும். மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் திறமை பெற்றவர்கள். பல விஷயங்களுக்கு இவர்கள் முன் உதாரணமாக திகழ்வார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமும் இவர்களுக்கு மிகுந்திருக்கும்.
இவர்களுக்கு யாராவது ஆறுதல் சொன்னால், அவர்களை அதிக அளவில் நம்பி விடுவார்கள். அதேபோல், இவர்களும் பலருக்கு ஆறுதல் சொல்லி மனதை தேற்றுவார்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் நின்ற கிரகம், கடன் பிரச்சினை, மஞ்சள் நோட்டிஸ், இரண்டு திருமணம், பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாமை, பலிகொடுத்து செய்யும் பூஜை ஆகியவற்றை சொல்லும்.
பூரட்டாதி நட்சத்திரம் கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள் போன்ற தோற்றத்தில் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தொழில் வணிகத்திற்கு இவற்றை லோகோவாக பயன்படுத்தலாம்.
மனுஷ குணம் கொண்ட பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை ஏகபாதர், குபேரன், காமதேனு. பரிகார தெய்வம் துர்கை. சிதம்பரம் திருமூலர், திருவாரூர் கமலமுனி, திருவாவடுதுறை காலங்கிநாதர், மதுரை சுந்தரானந்தர் போன்ற ஜீவ சமாதிகளையும் வணங்கலாம். உகந்த மலர் வெள்ளை அரளி.
இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் தேமா. எனவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கோயில் மற்றும் பிற இடங்களில் உள்ள தேமா மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.
பூரட்டாதி நட்சத்திரத்தின் மிருகம் ஆண் சிங்கம். பறவை உள்ளான். எனவே இவற்றுக்கு தொந்தரவோ, இடையூறோ செய்யக்கூடாது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ரங்கநாதபுரம் திருவானேஸ்வரர் உடனுறை காமாட்சி அம்மன் ஆலயமே, பூரட்டாதி நட்சத்திரத்திற்கு உரிய திருக்கோயிலாகும்.
எனவே, பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று இந்த கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது நன்மை பயக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள பொன் தானம் செய்வது நல்லது.

சதய நட்சத்திர பலன்கள்



உண்மையை நிலைநாட்ட இறுதிவரை போராடும் குணம் கொண்டவர்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
தெற்காசியா முழுவதும் கட்டி ஆண்டு, வரலாற்று புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழன் பிறந்த நட்சத்திரம் சதய நட்சத்திரம்.
கோ, ஸ, ஸி, ஸு போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் சதய நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
பிரம்மாண்டத்தை சொல்லும் ராகுவின் நட்சத்திரமான சதயம், சனியின் வீடான கும்பத்தில் அமைந்துள்ளதால், எதையும் பெரிதாக செய்து முடிக்கும் ஆற்றலும், நுணுக்கமும் இவர்களிடம் நிறைந்து இருக்கும்.
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உண்மையான குணம் உள்ளவர்கள். உண்மையை நிலைநாட்ட போராடுவார்கள். பிடிவாதமான செயல்பாடுகளால், பிறர் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி இருக்கும்.
பெரிய அளவுக்கு விளம்பர பிரியம் இருக்காது, ஆனாலும், இவர்களது தனித்திறமை வெளிச்சத்திற்கு வந்தே தீரும். இவர்கள் ஒரு முறை முடிவெடுத்து விட்டால், அதை மாற்றிக்கொள்வது கஷ்டம்.
நல்ல குணம், கெட்ட குணம் இரண்டும் கலந்தே இருக்கும். ஆனாலும் இறக்கம் உள்ளவர்கள்..
இவர்களை சீண்டாத வரை அமைதியாக இருப்பார்கள். சீண்டி பார்த்தால் வேட்டை நாயை போல விரட்டி குதறிவிடுவார்கள்.
மொத்தத்தில் நல்ல குணத்துடன் போராட்டமான வாழ்க்கையும், அதில் வெற்றியும் இவர்களுக்கு  உண்டு.
கடுமையான போராட்டத்திற்கு பின்னர், காலம் காலமாய் நிலைத்து நிற்கும் பல படைப்புகளை வழங்க கூடியவர்கள் சதய நட்சத்திரக்காரர்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அழகாகவும், நளினமாகவும் இருப்பார்கள். பாரம்பரியத்தை மதிக்கும் குணமும், நவீனத்தை ஏற்றுக்கொள்ளும் குணமும் இவர்களிடம் நிறைந்து இருக்கும். செய்வதை தெளிவாக செய்யும் மனோபாவம் கொண்ட இவர்கள், தங்கள் விஷயத்தில் மற்றவர்கள் தேவை இல்லாமல் மூக்கை நுழைப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.
சதய நட்சத்திரத்தில் நின்ற கிரகம், திடீர் மரணத்தையும், காணாமல் போனவர்களையும் சொல்லும்.
சதய நட்சத்திரம் பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம் போன்று இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவற்றை தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கான லோகோவாக பயன்படுத்தலாம்.
ராட்சத கணம் கொண்ட இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் கடம்ப மரம். எனவே சதய நட்சத்திர காரர்கள் இந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.
சதய நட்சத்திரத்திற்கு உரிய அதிதேவதை மிருத்யுஞ்சேஸ்வரர். எமன். பரிகார தெய்வம் துர்கை. சிதம்பரத்தில் உள்ள திருமூலர், சீர்காழி சட்டநாதர், வைதீஸ்வரன் கோயில் தன்வந்திரி ஜீவ சமாதிகளையும் வணங்கலாம். உகந்த மலர் நீலோற்பவம்.
இந்த நட்சத்திரத்திற்கு உரிய மிருகம் பெண் குதிரை. பறவை அண்டங்காக்கை. எனவே இவற்றுக்கு இடையூறு செய்யக்கூடாது.
நன்னிலம் அருகே உள்ள திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் உடனுறை கருந்தார் குழலி ஆலயமே, இந்த நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும். எனவே சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று, இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வது நல்லது.
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, சந்தன தானம் செய்வது நல்லது.

அவிட்ட நட்சத்திர பலன்கள்


தன்னுடைய முயற்சியாலும், உழைப்பாலும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
தவிடு கூட தங்கம் ஆகும் அளவுக்கு அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்று கூறுவதுண்டு. மற்றவர்களை சார்ந்து வாழாமல், தனித்து இயங்கும் தன்மை கொண்டவர்கள் அவிட்ட நட்சத்திரக்காரர்கள்.
க. கி. கு. கே போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும், அவிட்ட நட்சத்திர ஆதிக்கம் கொண்டவர்கள் ஆவர்.
செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்தின் முதல் இரண்டு பாதம் மகரத்திலும், எஞ்சிய இரண்டு பாதம் கும்பத்திலும் இடம்பெற்றுள்ளன. இரண்டும் சனியின் ராசி வீடுகள் என்பதால், வேகமும், விடா முயற்சியும், கொண்ட கொள்கையில் உறுதியும் இவர்களின் செயல்களில் பளிச்சிடும்.
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூர்மையான அறிவுத்திறன் மிக்கவர்கள். அனைத்தையும் திறமையுடன் செய்து முடிக்கும் திறமைசாலி. மனம், வாக்கு, செய்கையால் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காதவர்கள்.
எப்போதும் மற்றவர்களை சார்ந்து வாழாமல், தனது திறமை, மற்றும் உழைப்பால் தனித்து வாழ விரும்புவார்கள். பிறர் சொல்வதை அப்படியே கேட்டு  நடக்காமல்,. தனது சுய சிந்தனைப்படியே வாழ விரும்புவார்கள்.
இவர்கள் யாருக்கும் இடையூறு செய்ய விரும்புவதில்லை. ஆனால் இவர்களுக்கு இடையூறு செய்து விட்டால், சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்து, பதிலடி கொடுப்பார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், ஆசைகள் நிறைந்தவர்கள். தாராள மனப்பான்மையும், ஊதாரித்தனமான செலவும் அதிகம் செய்பவர்கள். கஷ்டப்படுபவர்களுக்கு இறக்கப்பட்டு உதவி செய்பவர்கள். ஆனாலும், அனைவரும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
அவிட்ட நட்சத்திரத்தில் நின்ற கிரகம்  சொத்து பிரச்சினை, காது பிரச்சினை பற்றி சொல்லும். மருத்துவம், பொறியியல் துறைகளில் சிறந்து விளங்கும்.
அவிட்ட நட்சத்திரமானது, மிருதங்கம் மற்றும் உடுக்கை போன்ற வடிவத்தில் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இவற்றை தங்கள் தொழிலுக்கான லோகோவாக பயன்படுத்தலாம்.
அவிட்ட நட்சத்திரத்திற்கு அதிதேவதை, அனந்த சயன பெருமாள் மற்றும் அஷ்ட வசுக்கள்.  பரிகார தெய்வம் முருகன். சிதம்பரத்தில் உள்ள ஸ்ரீ திருமூலர் ஜீவ சமாதியையும் வணங்கலாம். உகந்த மலர் செண்பக மலர்.
ராட்சத கணம் கொண்ட இந்த நட்சத்திரத்தின் விருட்சம் வன்னி மரம். எனவே கோவில் மற்றும் பிற இடங்களில் உள்ள வன்னி மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.
அவிட்ட நட்சத்திரத்திற்கான மிருகம் பெண் சிங்கம்.  பறவை வண்டு. எனவே இவற்றுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது.
கும்பகோணம் அருகே உள்ள கீழ் கொருக்கை பிரம்மஞானபுரீஸ்வரர் உடனுறை புஷ்பவல்லி ஆலயமே, அவிட்ட நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாகும்.
எனவே, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று, இந்த ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.
அவிட்ட நட்சத்திர காரர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, வஸ்திரதானம் செய்வது நல்லது.

திருவோண நட்சத்திர பலன்கள்


இரக்க சிந்தனையும், எல்லோருக்கும் உதவி செய்யும் குணமும் கொண்டவர்கள் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
காக்கும் கடவுள் பெருமாள் அவதரித்த நட்சத்திரம் என்ற சிறப்பை பெற்றது திருவோண நட்சத்திரம்.
எப்போதும் சுத்தமாக இருப்பதும், ஆடை அலங்காரத்தை விரும்புவதும் இந்த நட்சத்திர காரர்களின் தனித்தன்மை ஆகும்.
கி, கு, கே, கோ போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் திருவோண நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
சந்திரனின் நட்சத்திரமான திருவோணம், சனியின் வீடான மகரத்தில் அமைந்துள்ளதால், கற்பனை திறனும், எடுத்துக்கொண்ட விஷயத்தில் உறுதியாக நிற்பதும் இவர்களது தனித்தன்மையாக இருக்கும்.
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இனிமையாக பேசுவார்கள். எதை செய்தாலும் அதை ஒழுங்காக செய்து முடிப்பார்கள். வாழ்க்கையில் ஒரு சில கொள்கைகளை உறுதியாக கடைபிடிப்பார்கள்.
இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்வார்கள். சுத்தமாக இல்லாதவர்களை இவர்களுக்கு பிடிக்காது. மற்றவர்கள் கஷ்டப்பட்டால் இவர்கள் மனம் பொறுக்காமல் ஓடிப்போய் உதவி செய்வார்கள்.
சுவையான உணவை விரும்புவார்கள், மற்றவர்களுக்கும் சுவையான விருந்து படைப்பார்கள்.
கடவுளுக்கு பயந்து நடப்பார்கள். குற்றம் செய்தவர்களை கையும் களவுமாக பிடித்தால் கூட, அவர்களை தண்டிப்பதை விட, அவர்கள் ஏன் இந்த நிலைக்கு ஆளானார்கள் என்றே யோசிப்பார்கள்.
மற்றவர்களை எளிதாக கவரும் தன்மையும், புன்சிரிப்பும் மிகுந்தவர்கள். பெரிய அளவுக்கு ஏற்றத்தாழ்வு இல்லாமல், சராசரியான பொருளாதார நிலை தொடர்ந்து இருக்கும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், தான தர்ம காரியங்களில், ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்கள். உள்ளூர தந்திரம் மிகுந்தவர்கள். ஆனாலும் ஏழை எளியவர்கள் விஷயத்தில் இறக்கம் மிக்கவர்கள். பகட்டையும், ஆடம்பரத்தையும் விரும்புவார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்வார்கள். ஆனால், கணவனிடம் மட்டும் இந்த குணத்தை காட்டாமல் பிடிவாதமாக இருப்பாள். கொஞ்சம் வம்பு செய்யும் குணம் இருக்கும்.
திருவோணம் நட்சத்திரத்தில் நின்ற கிரகம்  சுகபோகத்தை சொல்லும். வாசல் அல்லது படிக்கட்டில் நின்று பேசுவது, இடது கையை உபயோகிப்பாது போன்றவற்றை குறிக்கும்.
திருவோணம் நட்சத்திரம், காது, அம்பு, பாதச்சுவடுகள் போன்ற வடிவங்களில் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இவற்றை தங்கள் தொழில் வணிகத்திற்கான லோகோவாக பயன்படுத்தலாம்.
திருவோணம் நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு, ஹயக்ரீவர். பரிகார தெய்வம் அம்மன். திருப்பதியில் உள்ள கொங்கன சித்தர், சிதம்பரம் திருமூலர்  ஜீவ சமாதிகளையும் வழிபடலாம். உகந்த மலர் சிவப்பு ரோஜா.
மனுஷ கணம் கொண்ட இந்த நட்சத்திரத்தின் விருட்சம் எருக்கு. எருக்கன் செடிகளுக்கு திருவோணம் நட்சத்திர காரர்கள் தண்ணீர் ஊற்றலாம்.
திருவோணம் நட்சத்திரத்தின் மிருகம் பெண் குரங்கு. பறவை நாரை அல்லது மாடப்புறா. இவற்றுக்கு இடையூறு செய்யக்கூடாது.
காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசபெருமாள், அலர்மேலு மங்கை தாயார் ஆலயமே, திருவோணம் நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும். திருவோணம் நட்சத்திர காரர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வது நல்லது.
திருவோணம் நட்சத்திரகாரர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, வஸ்திர தானம் செய்வது நல்லது.

உத்திராட நட்சத்திர பலன்கள்



கள்ளம் கபடம் இல்லாத செயலும், எளிமையான வாழ்க்கையை விரும்பும் குணமும் கொண்டவர்கள் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
வசதி வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக வாழ்வதே இவர்களின் தனித்தன்மை.
பே, போ, ஜ, ஜி போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் உத்திராட நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
சூரியனின் நட்சத்திரமான உத்திராடத்தின் முதல் பாதம், குருவின் வீடான தனுசிலும், எஞ்சிய மூன்று பாதங்கள் சனியின் வீடான மகரத்தில் இருப்பதால், மென்மையான அணுகுமுறையும், எடுத்துக்கொண்ட விஷயத்தில் உறுதியும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பெரியவர்கள், சிறியவர்கள் என எந்த வித்யாசமும் பார்க்காமல், மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் உள்ளம் படைத்தவர்கள் உத்திராட நட்சத்திர காரர்கள். ஆனால், இவர்களின் உள்ளத்தை யாராலும் யூகித்து  அறிய முடியாது.
எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும் அதை உறுதியாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
இவர்களது வெளிப்படையான அணுகுமுறை, சில நேரங்களில் மற்றவர்களின்  எதிர்ப்பை சம்பாதித்துவிடும். எனினும், அதற்காக, இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். புகழ்ந்து பேசினால், ஏமார்ந்து விடுவார்கள்.
முக்கியமான விஷயங்களை மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்கும் அணுகுமுறை இவர்களிடம் அதிகம் இருக்கும். அதில் குறைகளை சுட்டிக்காட்டினால், திருத்தி கொள்ள தயங்க மாட்டார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கும் இதே குணம் நிறைந்திருக்கும். தான் சரியாக சொல்லும் விஷயத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், ஏற்றுக்கொள்ளும் வரை போராடுவார்கள். ஆடம்பர வாழ்க்கையை விட எளிமையான வாழ்க்கையையே விரும்புவார்கள்.
உத்திராட நட்சத்திரத்தில் நின்ற கிரகம் புத்திர தோஷம் மற்றும் தாமத குழந்தை பேரு, சிறு வயதில் தாய் தந்தையை பிரிந்தவர்கள், இழந்தவர்கள் போன்றவற்றை சொல்லும்.
உத்திராட நட்சத்திரமானது, யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால் போன்ற வடிவங்களில் காணப்படுவதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தொழில் வணிகத்திற்கு இவற்றை லோகோவாகப் பயன்படுத்தலாம்.
மனுஷ கணம் கொண்ட உத்திராட நட்சத்திரத்திற்கு உரிய அதிதேவதை விநாயகர். பரிகார தெய்வம் துர்கை. திருப்பதியில் உள்ள கொங்கன சித்தர் ஜீவ சமாதியிலும் வழிபாடு செய்யலாம். உகந்த மலர் சம்பங்கி.
இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் பலா மரம். எனவே பலா மரத்திற்கு நீர் ஊற்றுவது நல்லது.
உத்திராட நட்சத்திரத்திற்கான மிருகம் ஆண் கீறி. பறவை வலியான். எனவே தொந்தரவு செய்யக்கூடாது.
சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர், கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் உடனுறை மீனாட்சியம்மன் ஆலயமே இந்த நட்சத்திற்கு உரிய ஆலயமாகும்.  எனவே, உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று, இந்த ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள நெய்தானம் செய்வது சிறப்பு.

பூராட நட்சத்திர பலன்கள்


ஏற்றுக்கொண்ட கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும் குணம் கொண்டவர்கள் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
அறிவும், புத்திசாலித்தனமும் நிறைந்தவர்கள். எதையும் எளிதாக உள்வாங்கி கொள்வதும், அதற்கேற்ப விரைந்து முடிவெடுப்பதும் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தனித்தன்மை.
பு, த, ப, ட ஆகிய எழுத்துக்களை, பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் பூராட நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
சுக்கிரனின் நட்சத்திரமான பூராடம், குருவின் வீடான தனுசில் அமைந்துள்ளதால், இவர்களுக்கு சாதுர்யமும், விடாமுயற்சியும் கைவந்த கலையாக இருக்கும்.
நல்ல பேச்சு திறனும், விவாதம் செய்யும் திறனும் நிறைந்த இவர்கள், தங்களுடைய கருத்தே சரி என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்களிடம் மற்றவர்கள் ஆலோசனை கேட்கலாமே ஒழிய, இவர்களுக்கு ஆலோசனை சொன்னால் ஏற்க மாட்டார்கள்.
இவர்கள் மிகவும் தைரிய சாலிகள் போல வெளியில் தெரிந்தாலும், உள்ளூர பயமும் இருக்கும். அதனால், சில நேரங்களில் சின்ன பிரச்சினைகளுக்கு கூட தீர்வுக்கான முடியாமல் தவிப்பதுண்டு.
அதேபோல், ஒரு தவறான முடிவெடுத்துவிட்டு அதை மாற்றிக்கொள்ள் முடியாமல் தவிப்பதும் உண்டு.
எந்த பலனும் எதிர் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் இவர்களுக்கு, முன் பின் அறிமுகம் இல்லாதவர்களால் நல்ல ஆதாயம் உண்டு. இவர்களுக்கு நிரந்தர நட்பும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அறிவாளிகள். எதையும் அடைய வேண்டும் எந்த எண்ணமும் ஆசையும் உடையவர்கள். நெருக்கடியான நிலைகளை சமாளிக்கும் ஆற்றல் நிறைந்தவர்கள்.
இவர்களுடைய கருத்தை மற்றவர்கள் ஜீரணிப்பது கஷ்டம். செல்ல பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் தவிப்பதும் உண்டு.
பூராட நட்சத்திரத்தில் நின்ற கிரகம், காதல் திருமணம் நரம்பு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை சொல்லும்.
பூராட நட்சத்திரத்தின் வடிவம் விசிறி, முறம், கட்டில் கால் போல இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இவற்றை தங்கள் தொழில் வணிகத்திற்கான லோகோவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
பூராட நட்சத்திரத்திற்கான அதிதேவதை ஜம்புகேஸ்வரர், வருணன். பரிகார தெய்வம் துர்கை. திருப்பதியில் உள்ள கொங்கன சித்தர் ஜீவ சமாதியையும் வழிபடலாம். உகந்த மலர் விருட்சி பூ.
இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் வஞ்சி மரம். எனவே வஞ்சி மரத்திற்கு நீர் ஊற்றுவது சிறப்பு/
பூராட நட்சத்திரத்திற்கான மிருகம் ஆண் குரங்கு. பறவை கௌதாரி, எனவே இவற்றுக்கு இடையூறோ, தொந்தரவோ செய்யக்கூடாது.
திருவையாறு அருகே உள்ள கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் உடனுறை மங்களாம்பிகை ஆலயமே, பூராட நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும். ஜென்ம நட்சத்திரம் அன்று, பூராட நட்சத்திரக்காரர்கள், இந்த ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு.
பூராட நட்சத்திரத்தினர் தங்களது அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, முடிந்த வரை அன்னதானம் செய்வது நல்லது.

மூல நட்சத்திர பலன்கள்


ஏற்றுக்கொண்ட தலைமைக்கு எப்போதும் விசுவாசமாக நடந்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
ஸ்ரீ ராமரின் பக்தனான ஹனுமன் அவதரித்த நட்சத்திரமாக கூறப்படுவது மூலம். எதையும், அதன் அடி நாதம் வரை சென்று ஆராயும்  தன்மை மூல நட்சத்திரத்திற்கு உண்டு.
யே, யோ, ப, பி போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும், மூல நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
கேதுக்கு உரிய மூல நட்சத்திரம் குருவின் வீடான தனுசில் இருப்பதால், இவர்களுக்கு ஆழ்ந்த ஆன்மீக சிந்தனையும், நுணுக்கமான அணுகுமுறையும் நிறைந்து இருக்கும்.
மூல  நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறிக்கோளுடன் செயல்படுவார்கள்.
இவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரும். அது இவர்களுடன் பழகுபவர்களையும்  பாதிக்கும்.ஆனாலும், எல்லா தடைகளையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வெற்றி காண்பார்கள்.
எதிர்காலத்தை பற்றிய இவர்களது கவலையை ஆண்டவனிடம் ஒப்படைப்பது இவர்களின்  இயல்பு.
வரவு செலவு விவகாரத்தில் கட்டுப்பாடுகள் இல்லாததால், அவ்வப்போது கஷ்டங்களை சந்திக்க நேரும். இவர்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதை விரும்புவார்கள். ஆனால், இவர்களே அதை பின்பற்ற மாட்டார்கள்.
தொழிலில் அடிக்கடி மாற்றத்தை சந்திக்க வேண்டி வரும். நண்பர்களுக்காக தன்னுடைய வருமானத்தை அதிகம் செலவு செய்வார்கள்.
ஸ்ரீ ராமரிடம் அனுமன் தன்னை ஒப்படைத்தது போல, இவர்களும் இவர்கள் தங்கள் திறமை, ஆற்றல் அனைத்தையும் தங்கள் எஜமானர்களுக்கு ஒப்படைப்பவர்களாக இருப்பார்கள்.
மூல நட்சத்திரத்தில் பிறந்த பலர் தனித்து இயங்கும் தன்மை இல்லாதவர்களாக இருப்பார்கள். அதனால், வசதியானவர்கள், தொழிலதிபர்கள்,  அரசியலில் உயர் பதவியில் இருப்பவர்கள் என யாரையாவது சார்ந்தே இவர்களது வாழ்க்கை செல்லும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், பொது நிறத்துடன் இருப்பார்கள். கள்ளம் கபடம் இல்லாமல் இருப்பார்கள். பிடிவாத குணம் இருப்பதால், மற்றவர்களை கையாள முடியாத நிலை ஏற்படும். அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரும். பொதுவாக மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு மன வாழ்க்கை சரியாக அமைவதில்லை. அப்படி அமைந்தாலும் நிலைப்பதில்லை.
மூல நட்சத்திரத்தில் நின்ற கிரகம், திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆகியும் பிரிந்து இருப்பவர்கள், மன வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள், விபத்தில் சிக்கியவர்கள் போன்றவற்றை குறிக்கும்.
மூல நட்சத்திரமானது  அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் தும்பிக்கை போன்ற வடிவங்களில் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இவற்றை தங்கள் தொழில் மற்றும் வணிகங்களுக்கு லோகாவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ராட்சத கணம் கொண்ட மூல நட்சத்திரத்தின் அதிதேவதை ஆஞ்சநேயர் மற்றும் சிவன். பரிகார தெய்வம் விநாயகர். ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ பதஞ்சலி சித்தர் ஜீவ சமாதியையும் வணங்கலாம். உகந்த மலர் வெண்சங்கு.
மூல நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் மரா மரம். எனவே கோவில் மற்றும் இதர இடங்களில் உள்ள மரா மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது சிறப்பு.
இந்த நட்சத்திரத்திற்கான மிருகம் பெண் நாய், பறவை செம்போத்து. எனவே இவற்றுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது.
தக்கோலம் அருகே உள்ள மப்பேடு சிங்கீஸ்வரர் உடனுறை புஷ்பகுஜாம்பாள் ஆலயமே, இந்த நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும். ஜென்ம நட்சத்திரத்தில் மூல நட்சத்திரக்காரர்கள் இந்த ஆலயத்தில் வழிபடுவது நல்லது.
மூல நட்சத்திரக்காரர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள எருமை தானம் செய்வது நல்லது.

கேட்டை நட்சத்திர பலன்கள்


வெள்ளை மனமும் சாத்வீக குணமும் நிறைந்தவர்கள் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
சுகபோகங்களுக்கேல்லாம் அதிபதியான இந்திரன் பிறந்த நட்சத்திரம் என்ற சிறப்புக்கு உரியது கேட்டை நட்சத்திரம். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி வாழ்வார்கள் என்ற பழமொழியும் உண்டு.
நோ, யா, இ, யு போன்ற எழுத்துகளை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும், கேட்டை நட்சத்திரத்தின் ஆதிக்கம் மிக்கவர்களே ஆவர்.
கேட்டையும், கிணற்றடியும் ரகசியத்தை சொல்லும் என்பார்கள். அந்த அளவுக்கு ரகசியத்தை பாதுகாக்க தெயாதவர்கள் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
ஊருக்கெல்லாம் சொல்ல வேண்டிய விஷயத்தை இவர்களிடம் சொன்னால் போதும். அந்த அளவுக்கு ரகசியம் இவர்களிடம் தங்காது.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளை மனமும், சாத்வீக குணமும் நிறைந்திருக்கும். ஆனால், இவர்களின் மனதை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
விடாப்பிடியான குணமும் நிறைந்திருக்கும் இவர்கள் வெளிப்பார்வைக்கு மிகவும் கரடு முரடாக தெரிந்தாலும், உண்மையில் அதற்கு நேர்மாறானவர்கள்.
மற்றவர்களின் கருத்துக்களை இவர்கள் ஏற்றுக்கொள்வது கடினம். பல நேரங்களில் முன் பின் யோசிக்காமல் முடிவெடுத்து விட்டு அதனால் பிரச்சனைகளை சந்திக்கும் நிலைக்கும் ஆளாவார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், அழகான, கவர்ச்சியான தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள். தீவிரமான உணர்ச்சி, ஆழ்ந்த அன்பு,, கூர்ந்த அறிவு நிறைந்தவர்கள். மற்றவர்களின் எண்ணத்தை எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை உண்டு. தன்னை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அறிய விரும்புவார்கள். மற்றவர்களை அதிகாரம் செய்ய விரும்ப மாட்டார்கள். நிகழ்ச்சிகள், விருந்துகள் ஏற்பாடு செய்வதில் இவர்களுக்கு தனித்திறமை உண்டு.
கேட்டை நட்சத்திரத்தில் நின்ற கிரகம் தூக்கு, தற்கொலை, ரகசியம், சுயமாக முடிவெடுக்கும் தன்மை, நிலத்தில் முடங்கிய பணம் ஆகியவற்றை சொல்லும்.
கேட்டை நட்சத்திரத்தின் வடிவம் குடை, குண்டலம் மற்றும் ஈட்டி போன்று இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கு இவற்றை லோகோவாகப் பயன்படுத்தலாம்.
கேட்டை நட்சத்திரத்தின் அதிதேவதை இந்திரன், ஸ்ரீ வராக பெருமாள். பரிகார தெய்வம் பெருமாள். எட்டுக்குடி ஸ்ரீ வான்மீகர் ஜீவ சமாதி, நாகப்பட்டினம் அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் கோரக்கர் ஜீவ சமாதியையும் வணங்கலாம். உகந்த மலர் பன்னீர் ரோஜா.
ராட்சத கணம் கொண்ட கேட்டை நட்சத்திரத்தின் விருட்சம் பலா மரம். எனவே பலா மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.
கேட்டை நட்சத்திரத்தின் மிருகம் ஆண் மான். பறவை சக்கரவாகம். இவற்றுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது நல்லது.
தஞ்சை கும்பகோணம் சாலையில் உள்ள பசுபதி கோயில் வரதராஜப்பெருமாள்,  உடனுறை பெருந்தேவி ஆலயமே இந்த நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும்.
எனவே கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் இந்த ஆலயம் சென்று வழிபாடு செய்வது சிறப்பு.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, கோ தானம் செய்வது நல்லது.

அனுஷ நட்சத்திர பலன்கள்


தடை கற்களை எல்லாம் போராடி படிக்கற்களாக மாற்றும் ஆற்றல் நிறைந்தவர்கள் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
தோஷம் இல்லாத நட்சத்திரங்கள் ஒன்று என்ற சிறப்பை பெற்றது மகா நட்சத்திரங்களில் ஒன்றான அனுஷம். ந, நி, நு, நே என்ற எழுத்துக்கள் பெயரின் முதல் எழுத்துக்களாக வருபவர்களும் அனுஷ நட்சத்திர ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
சனி பகவானின் நட்சத்திரமான அனுஷம் செவ்வாய்க்கு உரிய விருச்சிக ராசியில் இடம்பெற்றுள்ளதால், வீரம். விவேகம், விடாமுயற்சி, உறுதி ஆகிய தன்மை இவர்களுக்கு அதிகம் இருக்கும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலவித தடைகளை வாழ்க்கையில் சந்திக்க வேண்டி வரும். ஆனால், அவற்றை சாதுரியமாக சமாளிக்கும் ஆற்றலும் இவர்களிடம் நிறைந்திருக்கும்.
முகத்தில் அவ்வப்போது கவலை ரேகைகள் படர்ந்திருக்கும். மன அமைதியை பாதிக்கும் விஷயங்களை இவர்கள் அடிக்கடி யோசித்துக் கொண்டே இருப்பார்கள். பழி வாங்கும் குணமும் அவ்வப்போது தலை தூக்கும்.
இவர்கள் கடின உழைப்பாளிகள். எடுத்துக்கொண்ட  வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பார்கள். எத்தனை தடைகள் வந்தாலும், அதனை எதிர்கொண்டு முன்னேறுவதே இவர்களது லட்சியம். இறுதியில் முன்னேற்றத்தை சந்திப்பார்கள்.
இவர்களுக்கு நிரந்தரமான உறவுகள், நண்பர்கள், ஆதரவுகள் கிடையாது. ஆனாலும், என்வழி தனி வழி என்று தனித்து நின்று வெற்றி அடைவார்கள்.
மறை பொருளை தேடுவது, ஆய்வு செய்வது போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இவர்கள், அதில் வெற்றியும் காண்பார்கள்.
மற்றவர்களின் மன ஆழத்தை இவர்களால் கண்டு பிடிக்க முடியம். ஆனால், இவர்கள் மனதில் உள்ளதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் வசீகர தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கர்வம், அந்தஸ்து இல்லாத எளிமையான வாழ்க்கையை விரும்புவார்கள், மற்றவர்களோடு ஒத்துப்போகும் தன்மையும், மற்றவர்களை வழி நடத்தும் குணமும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.
அனுஷ நட்சத்திரத்தில் நின்ற கிரகம், மருத்துவ குணம், புத்திர தோஷம், சொந்த தொழில் செய்யும் எண்ணம் ஆகியவற்றை குறிக்கும்.
அனுஷ நட்சத்திரத்தின் அதிதேவதை ஸ்ரீ லக்ஷ்மி மற்றும் லக்ஷ்மி நாராயணர். பரிகார தெய்வம் துர்கை மற்றும் காளி. எட்டுக்குடி வன்மீகர் ஜீவ சமாதியையும் வழிபடலாம். உகந்த மலர் செம்முல்லை.
அனுஷ நட்சத்திரம் குடை, தாமரை, வளைந்த வில் போன்ற வடிவம் கொண்டுள்ளதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தொழில் வணிகத்திற்கு இவற்றை லோகோவாக பயன்படுத்தலாம்.
தேவ கணம் கொண்ட நட்சத்திரமான அனுஷத்தின் விருட்சம் மகிழ மரம். எனவே அனுஷ நட்சத்திர காரர்கள், மகிழ மரத்திற்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பது நல்லது.
அனுஷ நட்சத்தின் மிருகம் பெண் மான். பறவை வானம்பாடி. எனவே இவற்றுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது.
மயிலாடுதுறை அருகே திருநன்றியூரில் அமைந்துள்ள மகாலக்ஷ்மிபுரீஸ்வரர் உடனுறை உலகநாயகி அம்மன் ஆலயமே, அனுஷ நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும்.
எனவே, ஜென்ம நட்சத்திர தினத்தன்று, அனுஷ நட்சத்திரகாரர்கள், இந்த ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நல்லது.
அனுஷ நட்சத்திர காரர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள வஸ்திரதானம் செய்வது சிறப்பு.

விசாக நட்சத்திர பலன்கள்


ஏழை பணக்காரன் என்ற வித்யாசம் பாராமல், அனைவரையும் சமமாக பாவிக்கும் தன்மை கொண்டவர்கள் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
தமிழ் கடவுள் முருக பெருமான் அவதரித்த நட்சத்திரம் என்ற சிறப்பை பெற்றது விசாக நட்சத்திரம். ஆழ்ந்த சிந்தனையும், அகன்ற அணுகு முறையும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணமாக இருக்கும்.
தி, து, தே, தோ போன்ற எழுத்துக்கள் பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் விசாக நட்சத்திரத்தின் தன்மை கொண்டவர்கள் ஆவர்.
குருவின் நட்சத்திரமான  விசாக நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள், சுக்கிரனுக்கு உரிய துலாம் ராசியிலும், எஞ்சிய ஒரு பாதம் செவ்வாய்க்கு உரிய விருச்சிக ராசியிலும் இடம் பெற்றுள்ளதால், தெளிவான அறிவும், விடா முயற்சியும் இவர்களிடம் நிறைந்திருக்கும்.
இவர்கள் ஆண்மையும், அறிவுத்திறனும் நிறைந்தவர்கள். நல்ல தெய்வ பக்தி உண்டு. வாழ்க்கையில் உண்மை தன்மையை கடைபிடிப்பார்கள்.
பழங்கால பழக்க வழக்கங்களைவிட நாகரீக பழக்க வழக்கங்களை அதிகம் விரும்புவார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர், தங்கள் பிறந்த இடத்தில் இருந்து, வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து சென்று வசிக்கும் நிலையில் இருப்பார்கள்.
மற்றவர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பார்கள். அதே சமயம் அவர்கள் சொல்லும் கருத்தை கண்மூடி தனமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடவுள் பக்தி அதிகம் இருந்தாலும், மூட நம்பிக்கைகளை வெறுப்பார்கள்.
அனைவரையும் சமமாக பாவிக்கும் பண்பு இவர்களுக்கு உண்டு. அதேசமயம், பிடித்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதும், பிடிக்கவில்லை என்றால் கீழே போட்டு உடைக்கும் குணமும் இவர்களிடம் இருக்கும்.
வயதில் மூத்தோரிடம் காதல் வயப்படுவது விசாக நட்சத்திரத்தின் குணம்.
அவசியமான செலவுகளுக்கு கணக்கு பார்க்கும் சிலர், அனாவசியமான செலவுகளுக்கு கணக்கு பார்க்க மாட்டார்கள். வயது ஏற, ஏற ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
விசாக நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், இனிமையாக பேசுவார்கள். வீட்டிலும், வேலையிலும் இவர்களது நிர்வாக திறமை பளிச்சிடும். எளிமையாகவும், கர்வம் இல்லாமலும் இருப்பார்கள். பெரிய அளவுக்கு தன்னை அலங்காரப்படுத்திக் கொள்வதில் விருப்பம் இருக்காது. ஆனால், இயற்கையிலேயே அழகாக இருப்பார்கள். பூஜை, புனஸ்காரங்களில் அதிக நம்பிக்கை இருக்கும்.
விசாக நட்சத்திரத்தில் நின்ற கிரகம், மத்திய வயதில் இறந்தவர்கள், நாய்கடி பட்டவர்கள், காணாமல் போனவர்கள், அடுத்த பிறவி போன்றவற்றை சொல்லும்.
விசாக நட்சத்திரத்தின் அதிதேவதை, ஸ்ரீ முருகன் மற்றும் காளியம்மன். பரிகார தெய்வம் சிவன். காசியில் உள்ள நந்தீஸ்வரர், மயிலாடுதுறையில் உள்ள குதம்பை சித்தர், எட்டுக்குடி அழுகண்ணி சித்தர் ஆகியோரின் ஜீவ சமாதிகளையும் வணங்கலாம். வழிபாட்டுக்கு உகந்த மலர் இருவாட்சி மலர்.
விசாக நட்சத்திரம் முறம், தோரணம், பானை செய்யும் சக்கரம் போன்ற வடிவங்களில் காணப்படுவதால், இந்த வடிவங்களை, விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கான லோகோவாக பயன்படுத்தலாம்.
ராட்சத கணம் கொண்ட இந்த நட்சத்திரத்தின் விருட்சம் விளா மரம். எனவே, விசாக நட்சத்திரக்காரர்கள் விளா மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.
இதற்கான மிருகம் பெண் புலி, பறவை பச்சைக்கிளி. எனவே இவற்றுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது நல்லது.
செங்கோட்டை அருகில் உள்ள பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோயிலே, விசாக நட்சத்திரத்திற்கான ஆலயமாகும். இந்த ஆலயத்தில் தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று விசாக நட்சத்திர காரர்கள் வழிபாடு செய்வது நல்லது.
விசாக நட்சத்திரத்தினர் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள அன்னதானம் செய்வது நல்லது.

சுவாதி நட்சத்திர பலன்கள்


மற்றவர்களுக்கு ஆபத்து என்றால் ஓடோடி சென்று உதவி செய்யும் குணம் படைத்தவர்கள் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
தோஷம் இல்லாத நட்சத்திரங்களில் ஒன்றாக கூறப்படும் சுவாதி நட்சத்திரம் நரசிம்மர் பிறந்த நட்சத்திரம் என்ற சிறப்பை பெற்றது. அதனால், சுவாதியை சோதிக்காதே என்ற பழமொழியும் உண்டு.
ரூ, ரே, ரோ, தா என்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் சுவாதி நட்சத்திரத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே ஆவர்.
ராகுவின் நட்சத்திரமான சுவாதி, துலாம் நட்சத்திரத்தில் இடம் பெற்றுள்ளதால், ராகுவுக்குரிய பிரமாண்ட எண்ணமும், சுக்கிரனுக்கு உரிய சுகபோக நாட்டமும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அமைதியானவர்கள், அதே சமயம் பிடிவாத குணம் நிறைந்தவர்கள். சுதந்திரமான மனப்போக்கை கொண்டவர்கள்.
இவர்கள் மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்பட மாட்டார்கள். அதேபோல், தன்னுடைய பொருளையும் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
மற்றவர்கள் தம்மை விமர்சிப்பதையோ, தன்னுடைய வேலையை குறை கூறுவதையோ இவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு கோபம் வந்துவிட்டால், கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.
மற்றவர்களுக்கு ஆபத்து வரும்போது ஓடோடி சென்று கை கொடுப்பது சுவாதி நட்சத்திரத்தின் அடிப்படை குணம்.
அதேபோல், தனது சுய மரியாதைக்கு பங்கம் வந்தால், அதற்கு காரானமானவர்கள் யாராக இருந்தாலும் எதிர்க்க தயங்க மாட்டார்கள்.
நண்பனுக்கு உண்மையான நண்பனாகவும், எதிரிக்கு உண்மையான எதிரியாகவும் இருப்பவர்கள் சுவாதி நட்சத்திர காரர்கள்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அன்பும், இரக்கமும் நிறைந்தவர்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தை பெறுவார்கள். நண்பர்கள் அதிகம் உண்டு. எதிரிகளை வெற்றி கொள்வார்கள். அனாவசிய செலவுகள் செய்வது இவர்களுக்கு பிடிக்காது.
சுவாதி நட்சத்திரத்தில் நின்ற கிரகம், அகால மரணம், திடீர் மரணம், குறைந்த ஆயுள் பலம் போன்றவற்றை சொல்லும்.
சுவாதி நட்சத்திரத்தின் அதிதேவதையாக ஸ்ரீ நரசிம்மர், வாயு பகவான். பரிகார தெய்வமாக மகாலட்சுமி, துர்கை ஆகியோரும் கூறப்படுகிறது. மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ குதம்பை சித்தர் ஜீவ சமாதியையும் வணங்கலாம். உகந்த மலர் மஞ்சள் அரளி.
சுவாதி நட்சத்திரமானது புல்லின் நுனி, தீபச்சுடர் போன்ற வடிவம் கொண்டதால், இந்த வடிவங்களை, சுவாதி நட்சத்திரக்காரர்கள், தங்கள் தொழில் வணிகத்திற்கு லோகோவாக பயன்படுத்தலாம்.
தேவ கண நட்சத்திரமான சுவாதியின் விருட்சம் மருத மரம். எனவே இந்த நட்சத்திர காரர்கள் மருத மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.
இந்த நட்சத்திரத்திற்கான மிருகம் ஆண் எருமை. பறவை தேனீ. எனவே இவற்றுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது நல்லது.
பூந்தமல்லி அருகே சித்துக்காடு என்ற ஊரில் அமைந்துள்ள தாந்திரீஸ்வரர் உடனுறை பூங்குழலி அம்மன் ஆலயமே, சுவாதி நட்சத்திரத்திற்கு உகந்த கோவிலாகும்.
தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று, சுவாதி நட்சத்திரக்காரர்கள், இந்த ஆலயம் சென்று வழிபடுவது நன்மை அளிக்கும்.
சுவாதி நட்சத்திரக்காரர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள பணத்தை தானம் செய்வது நல்லது.

சித்திரை நட்சத்திர பலன்கள்


சுய லாபத்திற்காக எதையும் செய்ய விரும்பாத குணம் கொண்டவர்கள் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
அழகும் அறிவுக்கூர்மையும் நிறைந்தவர்கள் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்களை  அறிவாளிகள், கெட்டிக்காரர்கள் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
பே, ப, ர, ரி ஆகிய எழுத்துக்கள் பெயரின் முதல் எழுத்துக்களாக வருபவர்களும் சித்திரை நட்சத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
சித்திரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் கன்னி ராசியிலும், எஞ்சிய இரண்டு பாதங்கள் துலாம் ராசியிலும் இடம்பெற்றுள்ளன. இதனால், புதனுக்கு உரிய சாதுர்யம், சுக்கிரனுக்குரிய கலைத்திறன், செவ்வாய்க்கே உரிய தைரியம், விடா முயற்சி ஆகிய மூன்று குணங்களும் இவர்களிடம் நிறைந்திருக்கும்.
சித்திரை நட்சத்திர காரர்கள்  தனது சுய லாபத்திற்காக எதையும் செய்ய மாட்டார்கள். அதேபோல், ஒரு முடிவை எடுத்து விட்டால், அதை எப்படியாவது செயல்படுத்தாமல் விடமாட்டார்கள்.
இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகம். அதனால், இவர்கள் அவ்வப்போது எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆரம்பத்தில் இவர்கள் சொல்லும் கருத்துக்களை, மற்றவர்கள் ஏற்கவில்லை என்றாலும், இறுதியில், அதை ஏற்க வேண்டிய நிர்பந்தம் வரும்.
தெய்வீக சக்தி நிறைந்த சித்திரை நட்சத்திரக்காரர்களின் கனவில் தோன்றும் சம்பவங்கள், நிஜ வாழ்விலும் பிரதிபலிப்பது உண்டு.
அனைவரையும் சமமாக பாவிக்கும் தன்மை கொண்ட சித்திரை நட்சத்திர காரர்கள், ஏழைகளுக்காக, பணக்காரர்களையும் பகைத்துக்கொள்ள தயங்க மாட்டார்கள். அதே போல், எந்த வித எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் இவர்களுக்கு அதிகமாக உண்டு.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அழகான தோற்றம் கொண்டவர்கள். சுதந்திரமான மனப்போக்கு கொண்டவர்கள். அதனால் சிக்கல்களையும் சந்திக்க நேரும்.
சில நேரங்களில் பேராசை மற்றும் சோம்பேறி தனத்தால், பாவ காரியங்களை கூட செய்ய நேரும். இந்த குணத்தை தவிர்ப்பது நல்லது.
சித்திரை நட்சத்திரத்தில் நின்ற கிரகம் சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வது போன்றவற்றை குறிக்கும்.
சித்திரை நட்சத்திரத்தின் அதிதேவதை ஸ்ரீ சக்கரத்தாழ்வார். விஸ்வ கர்மா என்றும் சொல்லப்படுகிறது. கரூரில் உள்ள கருவூரார் ஜீவ சமாதி, மயிலாடுதுறை குதம்பை சித்தர் ஜீவ சமாதி ஆகியவற்றையும் வழிபடலாம். உகந்த மலர் மந்தாரை.
சித்திரை நட்சத்திரம் முத்து மற்றும் இரத்தின கற்கள் போன்ற வடிவம் கொண்டதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மேற்கண்ட வடிவங்களை, தங்கள் தொழில் வணிகத்திற்கான லோகோவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ராட்சத கணம் கொண்ட சித்திரை நட்சத்திரத்தின் விருட்சம் வில்வ மரம். எனவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கோவில்களிலும் மற்ற இடங்களிலும் உள்ள வில்வ மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.
சித்திரை நட்சத்திரத்திற்கான மிருகம் ஆண் புலி. பறவை மரங்கொத்தி. எனவே இவற்றுக்கு இடையூறு கொடுக்க கூடாது.
மதுரை அருகில் உள்ள குருவித்துறை சித்திராத வல்லப பெருமாள், உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி ஆலயமே இந்த நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று இந்த ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.
சித்திரை நட்சத்திர கார்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள வஸ்திர தானம் செய்வது சிறப்பு.

அஸ்த நட்சத்திர பலன்கள்



தங்கள் செயலால், அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வசீகர தன்மை கொண்டவர்கள் அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
கணங்களுக்கெல்லாம் அதிபதியான கணபதி அதாவது வினாயகர் பிறந்த நட்சத்திரம் என்ற பெருமைக்கு உரியது அஸ்தம்.
பு, ஷ, ந, ட ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் அஸ்த நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்கள் ஆவர்.
அஸ்த நட்சத்திரம் கன்னி ராசியில் இடம் பெற்றுள்ள, சந்திரனின் நட்சத்திரம் ஆகும். அதனால், சந்திரனுக்கு உரிய கற்பனை திறனும், புதனுக்கு உரிய சாதுரியமும் இவர்களுக்கு நிறைந்து காணப்படும்.
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஒரு வித வசீகர தன்மையை கொண்டு இருப்பார்கள். மரியாதையும், கௌரவமும் எளிதில் இவர்களுக்கு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனோ நிலை இருக்கும்.
மற்றவர்களை ஏமாற்றும் எண்ணம் இவர்களுக்கு கொஞ்சம் கூட இருக்காது. ஆனால் பிறரால் ஏமாற்றப்பட்டால், அவர்களை பழி வாங்க துடிப்பது உண்டு.
எந்த வித ஆதாயமும், பிரதி பலனும் எதிர்பார்க்காமல், மற்றவர்களுக்கு ஓடோடி உதவும் குணம் இவர்களுக்கு அதிகம் உண்டு. அதனால், மன உளைச்சலுக்கு ஆளாவதும் உண்டு.
இவர்களுடைய வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் மாறி, மாறி வரும். ஏதோ ஒரு மறைமுக சாபம் இவர்களை துரத்திக் கொண்டே இருக்கும்.
எதிரிகளை பழிவாங்க துடிப்பதும், சில நேரங்களில் மன்னிக்கும் குணமும் இருக்கும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கூச்சம் நிறைந்தவர்கள். பெரியோர்களை மதிக்கும் குணம் உண்டு. அதே சமயம், மற்றவர்கள் தங்களை அடிமை படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். சில நேரங்களில், எந்த வித எதிர் விளைவுகளையும் கவனத்தில் கொள்ளாமல், தமது கருத்தை தைரியமாக சொல்லி விடுவதால்,உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பகையை சம்பாதிக்க நேரும்.
அஸ்த நட்சத்திரத்தை பொறுத்த வரை ஆண்களை விட பெண்களுக்கே சிறப்பான பலனை தருவதாக கூறப்படுவதும் உண்டு.
அஸ்த நட்சத்திரத்தில் நின்ற கிரகம், புத்திர தோஷம். தாமதமாக குழந்தை பிறத்தல், உறவில் திருமணம் செய்தவர்கள், இரண்டு திருமணம் முடித்தவர்கள், போன்றவற்றை சொல்லும்.
அஸ்த நட்சத்திரத்திற்கு உரிய அதிதேவதை ஸ்ரீ காயத்ரி தேவி. ஆதித்யன் என்றும் கூறப்படுகிறது. பரிகார தெய்வம் பெருமாள். கரூரில் உள்ள கருவூரார் ஜீவ சமாதியையும் வழிபடலாம். உகந்த மலர் வெண்தாமரை.
அஸ்த நட்சத்திரம் கை அல்லது உள்ளங்கை போன்ற வடிவம் கொண்டதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்த வடிவத்தை தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கு லோகோவாக பயன்படுத்தலாம்.
இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் அத்தி மரம். எனவே அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.
அஸ்த நட்சத்திரத்திற்கு உரிய மிருகம் பெண் எருமை. பறவை பருந்து. எனவே இவற்றுக்கு தொந்தரவோ, இடையூறோ கொடுக்காமல் இருப்பது நல்லது.
மயிலாடுதுறையை அடுத்த குத்தாலத்திற்கு அருகே உள்ள கோமல் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள, கிருபா கூபாரேஸ்வரர் உடனுறை அன்னபூரணி ஆலயமே, அஸ்த நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும்.
ஜென்ம நட்சத்திரம் அன்று அஸ்த நட்சத்திர காரர்கள், இந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது நன்மையை தரும்.
அஸ்த நட்சத்திர காரர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள வாகன தானம் செய்வது நல்லது.

உத்திர நட்சத்திர பலன்கள்


எதையும் கம்பீரமாக அணுகி சாதுர்யமாக முடிக்கும் திறன் கொண்டவர்கள் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
வில்லுக்கு விஜயன் என்று புகழப்படும் மகாபாரத அர்ஜுனன் பிறந்த நட்சத்திரம் என்ற பெருமைக்கு உரியது உத்திர நட்சத்திரம். டே, டோ, ப, பி போன்ற எழுத்துக்களை, பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும், உத்திர நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே.
உத்திர நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசியிலும், எஞ்சிய மூன்று பாதங்கள் கன்னி ராசியிலும் இடம் பெற்றுள்ளன. எனவே உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனுக்கு உரிய கம்பீரமும், புதனுக்கு உரிய சாதுர்யமும் நிறைந்திருக்கும்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியான வாழிக்கையை வாழ விரும்புபவர்கள். அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். தெளிவான நடவடிக்கைகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் கொண்டவர்கள்.
தாம் மேற்கொண்ட பணிகளில் கருத்தூன்றி, உண்மையான சிரத்தையுடன் செய்யும் பண்பு உடையவர்கள். கடவுள் மற்றும் மத கோட்பாடுகளிலும் பற்று நிறைந்திருக்கும். பொது மக்களுக்கு சேவை செய்வதிலும் ஆர்வம் அதிகம் இருக்கும்.
அர்ஜுனனுக்கு கிருஷ்ணரை போல, இவர்களுக்கு ஒரு நல்ல குரு அமைந்து விட்டால், வாழ்க்கையில் தொட முடியாத தூரத்திற்கு உயர்ந்து விடுவார்கள்.  எதாவது ஒரு வீர விளையாட்டிலோ அல்லது ஏதாவது ஒரு கலையிலோ இவர்கள் திறமைசாலிகளாக இருக்கார்கள்.
இவர்கள் பல நேரங்களில் சகிப்பு தன்மை இல்லாமல் நடந்து கொள்வார்கள். ஆனாலும் அதை நினைத்து பின்னால் வருத்தப்படுவார்கள். ஆனாலும், இவர்களின் கோபத்திற்கு பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், அமைதியான, எளிமையான குணத்தை கொண்டவர்கள். ஒருவருடன் பகை ஏற்பட்டால், பல ஆண்டுகளுக்கு அதை மறக்க மாட்டார்கள். எப்போதும் சந்தோஷமான மன நிலையும், உறுதியான கொள்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பலர், இடது கையை பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். அதேபோல், கொடுத்த கடனை, கண்டிப்பாக வசூலிக்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது இரக்க குணமே இவர்களுக்கு பலவீனமாக அமைந்து விடும்.
உத்திர நட்சத்திரத்தில் நின்ற கிரகம், இடது கை பழக்கம், வசூலிக்க முடியாத வாடகை, வசூலிக்க முடியாத கடன், பயன்படுத்தாத சொத்துக்கள் போன்றவற்றை சொல்லும்.
உத்திர நட்சத்திரத்தின் அதிதேவதை சூரியன், பரிகார தெய்வம் சிவன். மதுரை அருகில் அழகர் கோவிலில் உள்ள ஸ்ரீ ராம தேவர் ஜீவ சமாதி, திருப்பரங்குன்றம் ஸ்ரீ மச்சமுனி ஜீவ சமாதி ஆகியவற்றையும் வணங்கலாம். உகந்த மலர் கதம்பம்.
இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் அலரி மரம். எனவே உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அலரி மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அதற்குரிய வடிவமான கட்டில் கால்கள் மற்றும் மெத்தையை, தொழில் வணிகத்திற்கான லோகோவாக பயன்படுத்தலாம்.
மனுஷ கணம் கொண்ட உத்திர நட்சத்திரத்தின் மிருகம் ஆண் எருது, பறவை மரம்கொத்தி. எனவே இவற்றுக்கு இடையூறு செய்யக் கூடாது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்களம் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் உடனுறை மங்களாம்பிகை திருக்கோயிலே உத்திர நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று மேற்கண்ட ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நல்லது.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, எள் தானம் செய்வது நல்லது.

பூர நட்சத்திர பலன்கள்


மற்றவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவர்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யும் குணம் கொண்டவர்கள் பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று போற்றப்படும்,  ஆண்டாள் பிறந்த நட்சத்திரம் பூரம். மோ, ட, டி, டு போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் பூர நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே.
சூரியனுக்கு உரிய சிம்ம ராசியில், இடம் பெற்றுள்ள பூரம் சுக்கிரனின் நட்சத்திரமாகும். எனவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கம்பீரமாகவும், சுகபோகத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். கலைத்திறனும் மிகுந்து இருக்கும்.
முழு சுதந்திரத்தை விரும்பும் இவர்கள், ஏதாவது ஒரு துறையில் நிபுணராகவோ, புகழ் பெற்றோ விளங்குவார்கள்.
இவர்கள், பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதால், அடுத்தவர் பிரச்சினையை எளிதாக புரிந்து கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.
மற்றவர்களிடம் இதமாகவும், இனிமையாகவும் பேசும் தன்மை கொண்டவர்களாகவும், பயணம் செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
சட்ட விரோதமான செயல்களிலோ, மனசாட்சிக்கு விரோதமான செயல்களிலோ ஈடுபட விரும்ப மாட்டார்கள். மேலும் சட்ட விரோத நடவடிக்கைகளை எதிக்கும் குணமும் இவர்களுக்கு உண்டு.
மற்றவர்கள் தயவில் ஆதாயம் தேட விரும்பாத இவர்களிடம், அறிவும், தகுதியும் அதிகமாகவே இருக்கும். எனினும், வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக, குறுக்கு வழியை கையாள விரும்ப மாட்டார்கள்.
பூர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், பலருக்கு அன்பான கணவன் கிடைப்பார்கள். இவர்கள், அடக்கமாவும், அனைவரையும் அனுசரித்து போகும் தன்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். தான தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். ஆனாலும், தன்னைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்ற கற்பனையும் இருக்கும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, மற்றவர்களிடம் இருந்து தாமாகவே உதவி கிடைக்கும். இவர்களும் மற்றவர்களை தேடி சென்று உதவி செய்வார்கள். ஆனாலும், கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அதனால், வாழத்தெரியாத பூரம் என்ற பழமொழியும் உண்டு.
பூரம் நட்சத்திரத்தில் நின்ற கிரகம் வயிற்று வலி, அறுவை சிகிச்சை, தாமத திருமணம், சொத்து பிரச்சினை ஆகியவற்றை சொல்லும்.
பூர நட்சத்திரம் கட்டிலின் இரு கால்கள், சங்கு மற்றும் மெத்தை போன்ற வடிவத்தில் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மேற்கண்ட வடிவங்களை தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கு லோகோவாக பயன்படுத்தலாம்.
பூரம் நட்சத்திரத்திற்கான அதிதேவதை ஸ்ரீ ஆண்டாள், பார்வதி என்றும் சில நூல்கள் குறிப்பிடுகின்றன. பரிகார தெய்வம் துர்கை. மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள ஸ்ரீ ராம தேவர் ஜீவ சமாதியையும் வணங்கலாம்.
மகாலட்சுமிக்கு உகந்த தாமரை மலரே பூர நட்சத்திரத்திற்கு உகந்த மலராகும். எனவே பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் பூஜை மற்றும் வழிபாடுகளில் தாமரை மலர்களை பயன்படுத்தலாம்.
இந்த நட்சத்திரத்தின் விருட்சம் பலா மரம். எனவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பலா மரக்கன்றுகளை நட்டு நீடூற்றி வளர்க்கலாம். கோவில் மற்றும் பிற இடங்களில் உள்ள பலா மரங்களுக்கும் நீர் ஊற்றலாம்.
பூர நட்சத்திரத்திற்கான மிருகம் பெண் எலி. பறவை பெண் கழுகு. எனவே இவற்றுக்கு தொந்தரவோ, இடையூறோ செய்யக்கூடாது.
புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள திருவரங்குளம் ஹரி தீர்த்தேஸ்வரர் உடனுறை பெரியநாயகி ஆலயமே, பூர நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும்.
எனவே, பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று இந்த ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.
பூரம் நட்சத்திரக்காரர்கள், தங்