Wednesday, 4 September 2019

லக்னத்தை பார்க்க

லக்னத்தை ஒரு கிரகம் பார்க்குமானால் அதற்கேற்றால் போல் அவரது குண நலன்களில் மாறுபடு காணப்படும்.அது போலவே கிரகங்கள் லக்னத்தில் இருப்பதால் அவரின் தன்மைகேற்ப குணங்களும், பலன்களும் மாறுபடவே செய்யும்.
ஒரு ஸ்தானத்தவோ, ஒரு கிரத்தையோ ஆராய்யும் போது அதன் வலு, வலுவின்மை கொண்டும், ஆதிபத்திய ரீதியாகவும், காரக ரீதியாகவும் பரிசோதித்து பலனுரைக்க வேண்டும்.
இந்த பதிவில் லக்ன பாவத்தை மற்ற கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்களை பார்போம்......
1.லக்னாதிபதி லக்னத்தை பார்க்க அந்த கிரகத்திற்கு தக்கவாறு குணம், நிறம் செயல்கள் இருக்கும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
2.#சூரியன் லக்னத்தை பார்த்தால் பெண்களுக்கு கோபத்தை உண்டு பண்ண கூடியவராகவும்,தந்தையின் சொத்துக்களை அனுபவிக்க (Astro Sadaiyappa) கூடியவராகவும், அரசு சம்பந்த பட்ட சேவை செய்பவராகவும் இருப்பார்கள்.
3. #சந்திரன் லக்னத்தை பார்த்தால் பெண்களுக்கு கட்டுப்பட்டவராகவும், நீர் சம்பந்தபட்டவற்றின் மூலம் ஜீவனம் செய்பவராகவும் இருப்பார்கள்.
4.#செவ்வாய் லக்னத்தை பார்த்தால் முன் கோபம் உள்ளவர் எனினும், சண்டை, சாகசம் செய்வதில் வல்லவராகவும், பிரபலமானவருடன் தொடர்பும்,அதிக தர்மபற்றும் உள்ளவராகவும் இருப்பார்கள்.
5.#புதன் லக்னத்தை பார்க்க குறைவற்ற வருமானம் உள்ளவரும்,சிற்ப, கணித சாஸ்திரத்தில் சிறந்தவராகவும் விளங்குவார்கள்.
6.#குரு லக்னத்தை பார்க்க சாதுக்கள், சன்னியாசிகளிடம் பற்றுள்ளவரும், யாகம் விரதம் (Astro Sadaiyapa) போன்றவற்றில் விருப்பம் உள்ளவரும், அறநிலையத்துறையில் ஜீவனம் செய்பவர்களாக விளங்குவார்கள்.
7.#சுக்கிரன் லக்னத்தை பார்க்க போகம்,தனம், சௌக்கியம் போன்றவற்றை உடையவரும்,இதர பெண்களால் சலன புத்தி உள்ளவராகவும் இருப்பார்கள்.
8.#சனி லக்னத்தை பார்க் உறவினர் மரணம், உறவினர் நட்பு போன்றவை இல்லாதவரும், உடல்வழி நோய் உள்ளவராகவும், தனம் தானியம் விரயம் உள்ளவராகவும் இருப்பார்கள்.
9.#ராகு லக்னத்தை பார்க்க இளமை மாறத உடல் அமைப்பும், மாறுபட்ட கருத்துகளை உடையவராகவும்,சிற்றின்ப பிரியராகவும் இருப்பார்கள். முகம் சற்று கோணலாக பல் எடுப்பாக இருக்கும்.
10. #கேது லக்னத்தை பார்க்க கிறுக்கு தனமான போக்கு உடையவரும்,மனைவி, மக்கள் பற்றிய கவலைகளும், நிலையான பொருளாதாரமும் கிடைக்க பெறுவார்கள்.
லக்னத்தை சுப கிரகம் பார்க்க சுப பலனும், பாபகிரகம் பார்க்க தீய பலனும் தருவார்கள்.எந்த கிரகமும் பார்க்கவில்லை எனில் லக்னதிபதியின் தன்மையே பிரதிபலிக்கும், ஒன்று மேற்பட்ட கிரகங்கள் பார்க்குமாயின் வலிமையான கிரகத்திற்கேற்ப பலனை யூகித்தறிந்து கொள்ள வேண்டும். மூன்று நான்கு கிரகங்கள் பார்க்க நீண்ட ஜீவிதமுள்ளவர் என்றும், பாபர், சுபருக்கெற்ற நோய்யுள்ளவராகவும் இருப்பார்கள்.
மிக்க நன்றி நண்பர்களே!!

No comments:

Post a Comment