) எல்லாவிதமான சுப காரியங்களுக்கும் முக்கியமானவர் செவ்வாய் (மங்கள காரகன்).
2) காலபுருஷனுக்கு 1, 8 ஆம் பாவத்திற்கு ஆதிபத்தியம் பெற்றவர் செவ்வாய், 1ஆம் பாவம் உயிரைக் குறிப்பது, 8 ஆயுளை குறிப்பது. ஒருவர் ஆயுள் முழுவதும் தேவையான கிரகம் செவ்வாய்.
3) மங்களன்
4) சகோதர சகோதரிக்கு காரகத்துவம் பெற்றவர் (இளைய சகோதரம்).
5) செவ்வாய் சுக்கிரன் தொடர்பு கொண்டால் சுபநிகழ்ச்சிகள் நன்றாக இருக்கும்.
6) தடை கிரகங்கள், திதி சூனியம், பாதகாதிபதி போன்றவர்களுடன் தொடர்பு கொண்டால் சுப காரியத்தில் தடை இருக்கும். சுப காரியங்கள் நடந்து முடியும்வரை பிரச்சினைகள் இருக்கும்.
உதாரணமாக,
Ø செவ்வாய் சனி சேர்க்கை, சொத்து அமைவதில் தாமதம், திருமணத்தடை, திருமணத்தின் போது ஒரு விபத்து அல்லது ஒரு கர்மம்.
Ø திருமணம் முடியும் வரை பயம் இருக்கும்
Ø இருவரின் குடும்பத்திலும் ஒருவர் சம்பந்தம் இல்லாமல் திருமணவேலை நடக்கும்.
Ø காதல் திருமணங்களை தருகின்றது
7) ரத்தம்
Ø செவ்வாய் சனி சம்பந்தம் ரத்தத்தில் பிரச்சினைகள் உண்டு, ரத்ததானம் செய்ய முடியாது.
Ø செவ்வாய் குரு சம்பந்தம் ரத்த தானம் செய்வார்கள் (குரு - தானம்)
8) பாதுகாப்பு உறுப்புகள்.
Ø பாதுகாப்புக்காக பயன்படும் உறுப்புகள் அனைத்தும் செவ்வாய் காரகத்துவம் பெற்றவைகள்
Ø மூளையை பாதுகாப்பது மண்டை ஓடு, மண்டை ஓடு செவ்வாய் காரகத்துவம்.
Ø இதயத்தை பாதுகாப்பது எலும்புக்கூடு, எலும்புக்கூடு செவ்வாய் காரகத்துவம்.
Ø கண்ணைப் பாதுகாப்பது கண் இமை, கண் இமை செவ்வாய் காரகத்துவம்.
Ø போலீஸ் ராணுவம் காவலர்கள் மக்களை பாதுகாப்பவர்கள் இவர்கள் செவ்வாய் காரகத்துவம் பெற்றவர்கள்.
Ø வீட்டை பாதுகாக்க போடும் சுற்றுசுவர் (காம்பவுண்ட் சுவர்) செவ்வாய் காரகத்துவம் பெற்றது.
Ø தலையை பாதுகாக்க அணியும் ஹெல்மெட் செவ்வாயின் காரகத்துவம் பெற்றது.
Ø செவ்வாய் சனி சேர்க்கை, வீட்டில் பாதுகாப்பு இருக்காது.
Ø செவ்வாய் கேது சேர்க்கை, இவர்கள் சம்பந்தப்பட்ட பாவக உறுப்புகளில் பாதிப்பு இருக்கும்.
9) பற்கள்
Ø செவ்வாய் குரு சேர்க்கை மற்றும் செவ்வாய் சூரியன் சேர்க்கை தங்கப்பல் கட்டுவார்கள்.
Ø செவ்வாய் சனி சேர்க்கை சொத்தைப்பல், வெட்டுப்பல், பற்களில் கரை படுத்தல்.
Ø செவ்வாய் கேது பல்லுக்கு இடுக்கில் பல் முளைப்பது.
Ø செவ்வாய் ராகு ஒழுங்கற்ற பல்வரிசை.
Ø செவ்வாய் சந்திரன் இரண்டு முறை பல் விளக்குதல்
10) புருவம்
Ø செவ்வாய் சனி சேர்க்கை புருவத்தில் முடி நரைக்கும்.
11) கரடுமுரடான பாதை
Ø நான்கில் செவ்வாய் இருந்தால் வீட்டுக்கு செல்லும் பாதை கரடு முரடாக இருக்கும்.
Ø பத்தில் செவ்வாய் இருந்தால் தொழில் செய்யும் இடத்தில் கரடுமுரடான பாதையில் இருக்கும்.
Ø பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் கரடுமுரடான பாதைகளில் சாதாரணமாக நடந்து செல்வார்.
12) நிலத்துக்கு காரகன்
Ø செவ்வாய் நீர்கிரகங்களுடன் சம்பந்தம் பெற்றால் (குரு சந்திரன் சுக்கிரன்) நிலத்தில் நீர் வளம் நன்றாக இருக்கும்.
Ø செவ்வாய் சனி சம்பந்தம் பெற்றால் நிலத்தடி நீர் மிகவும் ஆழத்தில் இருக்கும்.
Ø செவ்வாய் ராகு சம்பந்தம் பெற்றால் இடம் அகலமாக இருக்கும் மெயின் ரோட்டில் அருகில் இருக்கும்.
Ø செவ்வாய் கேது சம்பந்தம் பெற்றால் மாற்று மதத்தவர் வாழும் பகுதியில் வீடு இருக்கும், குறுகிய இடமாக இருக்கும் பாகம் பிரிக்க முடியாது.
Ø செவ்வாய் சனி சேர்க்கை சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் அல்லது சுடுகாட்டுக்கு அருகில் வீடு அமையும்.
13) சீருடை பணி உத்தியோக காரகன்
Ø செவ்வாய் சனி வேலையில் (promotion) புரமோஷனுக்கு தடை.
செவ்வாய் கேது உத்யோகத்தில் புரமோஷனுக்காக (promotion) வழக்குகள் தொடர்வார்கள்.
14) பூச்செடிகள்
15) வேலி முள் (முற்செடிகள்),
Ø நான்கில் செவ்வாய் சனி சம்பந்தம் பெற்றால் நிலத்தில் அல்லது வீட்டில், காலிமனையில் வேலிமுள் முளைக்கும், செவ்வாய் தனித்து இருந்தாலும் இதே பலன்தான்.
16) செம்மண்.
17) கலகக்காரர்கள் / சண்டைக்காரர்கள்.
Ø நான்கில் செவ்வாய் இருந்தால் வீட்டருகே சண்டைக்காரர்கள் இருப்பார்கள்.
Ø நான்கில் செவ்வாய் குரு சேர்க்கை இருந்தால் சண்டை நாகரிகமாக இருக்கும்.
Ø நான்கில் செவ்வாய் ராகு சேர்க்கை இருந்தால் வீட்டருகே குடிகாரர்களின் சண்டை இருக்கும்.
Ø செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் ரோட்டில் சண்டை போடுவார்கள்.
Ø செவ்வாய் கேது இருந்தால் சண்டையால் வழக்குகள் உண்டு.
Ø செவ்வாய் சந்திரன் இருந்தால் வெறும் வாய் சண்டை மட்டும்தான்
18) வாக்குவாதம்.
Ø வாக்குவாதம் செய்யும் இருவருக்கும் செவ்வாய் கெட்டு இருந்தால் சண்டை வளரும்.
Ø வாக்குவாதம் செய்யும் இருவருக்கும் செவ்வாய் குரு சம்பந்தம் பெற்று இருந்தால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவார்கள்.
19) தைரியம்
20) வீரம்
21) விடா முயற்சி
22) வெற்றிக்கு காரகன்
கீழ்கண்ட அமைப்புகள் இருப்பவர்கள் முயற்சியில் வெற்றி அடைவார்கள்
Ø லக்னம் அல்லது லக்னாதிபதிக்கு செவ்வாய் சம்பந்தம் இருக்க வேண்டும்.
Ø லக்னத்திற்கு முன்னும் பின்னும் அல்லது லக்னத்தில் செவ்வாய் இருப்பது நன்று
Ø செவ்வாய் நட்சத்திரத்தில் கிரகங்கள் இருக்க வேண்டும் ஒன்று அல்லது இரண்டு கிரகங்கள்.
Ø செவ்வாயின் சாரத்தில் நிறைய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல. தற்கொலை எண்ணம், தற்கொலை முயற்சிகள் உண்டு (காலபுருஷனுக்கு 8-க்கு அதிபதியாக வருவதால்). செவ்வாய் மங்கள காரகன் ஆக ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் செவ்வாயின் சாரத்தில் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை கொடுத்துவிடுவார்
23) கூர்மையான (SHARP) / நுணுக்கம்
Ø ஐந்தில் செவ்வாய் இருந்தால் புத்திக்கூர்மை உடையவர்கள்.
Ø லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் கூர்மையான எண்ணம் கொண்டவர், நேரம் தவறாதவர்.
Ø இரண்டில் செவ்வாய் இருந்தால் கூர்மையான பார்வை, பேச்சில் கூர்மை இருக்கும்.
24) ஆயுதங்கள் (WEAPONS)
Ø செவ்வாய் சனி, செவ்வாய் கேது சேர்க்கை இருந்தால் ஆயுதங்கள் பராமரிப்பின்றி இருக்கும்.
லக்னத்தில் செவ்வாய் ஜாதகரிடம் ஒரு ஆயுதம் இருக்கும்.
25) துப்பாக்கி
Ø செவ்வாய் சனி சேர்க்கை கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பார்கள்.
Ø செவ்வாய் கேது சேர்க்கை இரகசிய துப்பாக்கி வைத்திருப்பார்கள்.
Ø செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பார்கள்
26) வேட்டைக்காரன்
Ø ஐந்தில் செவ்வாய் இருந்தால் தாத்தா வகையில் வேட்டைக்காரன் இருப்பார்கள், வேல்கம்பு வைத்திருப்பார்கள்.
Ø செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றிருந்தால் கரி (சிக்கன் மட்டன்) வெட்டும் கத்தி வைத்திருப்பார்கள்.
Ø செவ்வாய் சந்திரன் இருந்தால் ஆயுதமே இருக்காது.
27) வெடிபொருட்கள்
Ø செவ்வாய் சனி அல்லது செவ்வாய் சூரியன் சேர்க்கைகள் இருந்தால் பாறைகளை வெடிக்க வைக்கும் வெடி பொருட்கள்.
Ø செவ்வாய் சனி சேர்க்கைகள் இருந்தால் கிணறு தோன்ட பயன்படும் வெடி பொருட்கள் (கண்ணி வெடி)
28) முன்கோபம்
29) விபத்து
Ø செவ்வாயை எந்த கிரகங்களும் பார்க்கவில்லை என்றால் விபத்து நடக்கும் பொழுது பக்கத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்
30) முகப்பரு
31) மருந்துகள்
Ø அறுவை சிகிச்சை சம்பந்தமான மருந்துகளை குறிக்கும்
32) மின்சாரம்
Ø செவ்வாய் சனி சேர்க்கைபெற்று நீர் ராசியில் அல்லது நான்காம் பாவத்தில் இருக்க இவர்களோடு ராகுல் தொடர்பு கொண்டால், அறுந்து கிடக்கும் மின்சார ஒயரை மிதித்து விபத்து மற்றும் மரணம் ஏற்படும். ஈரக்கையோடு மின்சாரத்தை தொட்டு விபத்து அல்லது மரணம் ஏற்படும்.
Ø செவ்வாய் குரு சேர்க்கை பெற்றால் உயர் மின்னழுத்த மின்சாரங்களை குறிக்கும்
33) மோட்டார் இன்ஜின்
Ø செவ்வாய் சூரியன் அல்லது செவ்வாய் குரு சேர்க்கை இருந்தால் விலை உயர்ந்த, நல்ல நிறுவனங்கள் கொண்ட எஞ்சின்கள் அமையும்.
Ø செவ்வாய் சனி அல்லது செவ்வாய் கேது சேர்க்கை பெற்றால் பழைய இன்ஜின்கள் பராமரிப்பற்ற எஞ்சின்கள் அமையும்.
34) இஞ்சி
35) வெள்ளைப்பூண்டு
36) வத்தல்
37) நாய்கள்
38) கசாப்புக்கடை
39) மரக்கடை
40) சாப்பாட்டு புலி
41) நகம்
Ø சனி செவ்வாய் சேர்க்கை இருந்தால் நகத்தில் அழுக்கு சேரும்.
42) மீசை
Ø செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் நரைத்த மீசை
Ø செவ்வாய் கேது சேர்க்கை இருந்தால் ஹிட்லர் மீசை சிறிய மீசை
Ø செவ்வாய் ராகு சேர்க்கை இருந்த முறுக்கு மீசை / பெரிய மீசை.
Ø செவ்வாய் சந்திரன் தொடர்பு இருந்தால் ஒட்டு மீசை அல்லது போலி மீசை.
43) துணிந்த செயல்கள்
Ø ஆஞ்சநேயர் துணிந்து இலங்கை சென்று சீதையை கண்டு வந்தார் செவ்வாயின் அதிக காரத்துவங்கள் பெற்றவர் ஆஞ்சநேயர்.
44) மதிக்காத தன்மை
Ø செவ்வாய் ஜாதகத்தில் பலம் குறைந்தாலும் அல்லது செவ்வாய் சனி, செவ்வாய் கேது சேர்க்கை பெற்றாலோ அல்லது திதிசூன்ய பாதிப்பு அடைந்தாலோ மற்றவர்களை ஜாதகர் மதிக்கமாட்டார் அல்லது மதிக்கும் தன்மை குறைவு.
45) பிடிவாதம்
Ø செவ்வாய் சுப கிரகங்களுடன் தொடர்பு பெற்று வலுப்பெற்றிருந்தால் பிடிவாதங்கள் குறைவு.
Ø செவ்வாய் அசுப கிரகங்களுடன் தொடர்பு பெற்றால், திதிசூன்ய பாதிப்பு அடைந்தாலோ ஜாதகருக்கு பிடிவாதம் அதிகம்
46) வெறித்தனம்
47) துன்புறுத்தி பேசுதல்
48) தன்னம்பிக்கை
49) தேவையற்ற பேச்சு (வெட்டிப்பேச்சு)
Ø செவ்வாய் சந்திரன் அல்லது செவ்வாய் சனி அல்லது செவ்வாய் கேது சம்பந்தம் ஏற்பட்டு, சேர்க்கை ஏற்பட்டு, செவ்வாய் நீசமாகி, செவ்வாய் பலம் குறைந்தால் தேவையற்ற பேச்சு பேசுவார்கள் வெட்டிப்பேச்சு பேசுவார்கள்.
50) முரட்டுத்தனமான கல்வி
Ø விளையாட்டு கல்வி பாதுகாப்பு கலைகள் குறித்த கல்வி போன்றவைகளைக் குறிக்கும்.
51) முரட்டுத்தனமான காதல்
Ø செவ்வாய் புதன் சேர்க்கை முரட்டுத்தனமான காதலை கொடுக்கும்
52) குத்துச்சண்டை
53) தேங்காய்
Ø செவ்வாய் சந்திரன் சேர்க்கை பெற்றவர்கள் தேங்காய் சட்னியைத் விரும்பி சாப்பிடுவார்கள்.
Ø செவ்வாய் புதன் சேர்க்கைப் பெற்றால் சாம்பாரை விரும்பி சாப்பிடுவார்கள்.
54) சிற்பக்கலை
55) ஓவியர்
56) சமையல்காரர்
57) கொல்லம் பட்டறை
58) சிலம்பாட்டம்
59) கொலைப்பழி
Ø செவ்வாய் சனி மாந்தி மூவரும் தொடர்பு பெற்றால் கொலைப்பழி நிச்சயம் உண்டு.
60) தலைமை ஆசிரியர்
Ø சூரியன் செவ்வாய் சேர்க்கை பெற்றால் அப்பா அல்லது மாமனார் ஆசிரியர்.
Ø இரண்டில் அல்லது லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் ஆசிரியர்.
61) பதுக்கி வைத்தல்
62) மருமகன் அல்லது மருமகள்
63) ஜமீன்
64) தற்கொலை
Ø செவ்வாய் மூன்றாம் பாவம் அல்லது எட்டாம் பாவத்திற்கு சம்பந்தம் பெற்றால் தற்கொலை எண்ணம் உண்டு.
65) நெருப்பு மிக்க தொழில்கள்
66) டீ கடை
67) பேக்கரி
68) முடி வெட்டும் கடை
69) வெல்டிங் ஷாப் (Welding Shop)
70) இயந்திரம்
Ø செவ்வாய் சந்திரன் அல்லது செவ்வாய் சனி சேர்க்கை பெற்றவர்கள் அதிக தொகை கொடுத்து இயந்திரங்களை வாங்க கூடாது.
Ø செவ்வாய் குரு சேர்க்கை பெற்றவர்கள் அதிக விலை கொடுத்து இயந்திரங்களை வாங்கலாம் பயன்தரும்.
71) கட்டுமஸ்தான உடம்பு
Ø செவ்வாய்-சனி சேர்க்கை அல்லது செவ்வாய் கேது சேர்க்கை இருந்தால் உடம்பை கட்டுமஸ்தாக வைக்க முடியாது.
72) செவ்வாய் சனி அல்லது செவ்வாய் கேது அல்லது செவ்வாய் ராகு மற்றும் செவ்வாய் சந்திரன் சேர்க்கை பெற்றால் செவ்வாயின் தன்மைக்கு சுமாரான பலன்களே கிடைக்கும்
73) செவ்வாய் குரு அல்லது செவ்வாய் சுக்கிரன் அல்லது செவ்வாய் புதன் அல்லது செவ்வாய் சூரியன் போன்ற சேர்க்கைகள் பெற்றால் செவ்வாயின் சுபத்தன்மை நல்ல பலன்களை கொடுக்கும்.
74) கேதுவோ அல்லது சனியோ செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்தால் செவ்வாயின் காரகத்துவங்கள் பாதிப்படைகின்றது.
75) செவ்வாய், கேதுவின் நட்சத்திர சாரத்திலோ அல்லது சனியின் நட்சத்திர சாரத்திலோ அமர்ந்தால் செவ்வாயின் காரகத்துவங்கள் பாதிப்படைகின்றன.
No comments:
Post a Comment