Tuesday, 24 September 2019

புதாதித்ய யோகம்

புதனும் ஆதித்தன் என்னும் சூரியனும் இணைந்து லக்கினத்திற்கு 1-4-8-ல் இருந்தால் புதாதித்ய யோகம் அமையும், புதன் நக்கோள்களில் மிகவும் சிறிய கிரகம் இவர் சந்திரனின் புதல்வன் ஆவார்.
புதன் வலிமைபெற்றவர் முக்கியப் பிரமுகராக விளங்குவார். அரசாட்சி, பொது மக்கள் தொடர்பு மற்றையோரைக் கவருகின்ற ஆற்றலைப் பெறுவார்.மனோசக்தி புத்திக் கூர்மையாகவும், சிறந்த பேச்சாற்றல், இரட்டை அர்த்தம் நிறைந்த சொற்களைப் பிரயோகிப் பவராகவும் தடையில்லாமல் பேசுவராகவும்.நகைச்சுவைப் பேசுவர், பிறர் செய்வதை அப்டியே உடன் செய்வர்கள் .
புதனது சஞ்சாரம் சூரியனை ஒட்டியே அமைந்திருக்கும் .ராசியில் சூரியனுக்கு அருகில் உலவிக் கொண்டிருப்பதால் ஒளி குறைந்தே காணப்படும்.புதன் ஒருவரே 8-ல் இருக்கும்போது நற்பலனைத் தருவர். எந்த வீட்டிலும் சுப பலத்துடன் இருந்தால் அவரால் நலங்கள் விளையும் இவர் சூரியனுடன் சேர்த்து ஒரே ராசியில் இருக்கும் போது புதஆதித்திய யோகம் உண்டாகும்.
சூரியன், புதன் ஆகியோரின் பலம், ஆதிபத்திய விசேஷம், சுபர்களின் இணைவு, பார்வை ஆகியவற்றின் தன்மையைப் பொறுத்துப்பலன்கள் அளவு கூடவோ குறையவோ செய்யும்.
சூரியனுடன் குறிப்பிட்ட பாகையில் புதன் இணைந்திருக்கும் போது அஸ்தமனம் ஏற்படும். அஸ்தங்கத் கதியில் இருக்கும் புதன் நற்பலன்கள் தருவர்.என்றாலும் பாதிப்பு இராது.
புதனுக்கு வக்கிரகதி ஏற்படுவதுண்டு வக்கிரத்தில் உள்ள கிரகங்கள் உச்ச பலத்தை தரும் என்று ஒரு சாராரும் வக்கிரகதியில் உள்ள பாபக் கிரகங்களுக்கு உச்ச பலம் ஏற்படும். என்று மற்றோரு சாராரும் கூறுவர் புதன் வக்கிரகதியில் இருந்தால் மனக்குழப்பம் தருவர்.புதனும் சூரியனும் இணைந்தால் ஜோதிடத்தில் வல்லுனராவர், வானவியல், வேதசாஸ்திரம், ஞானம் உண்டாகும். சிறந்த விஞ்ஞானியாகவும், எஞ்சினீயர், சட்டவல்லுனர், அனைவரும் பாராட்டுவார்கள்.
வளர்சந்திரன், குரு, சுக்கிரன் பார்வை இணைவு சிறப்பைத்தரும்.சனி, ராகு, கேது இணைவு பாதிப்பைத்தரும்.பாபக்கிரக இணைவு பார்வை இல்லாமல் இருப்பது அவசியம்.
மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, ஆகிய லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே சிறப்பகா முழுமையாக பலன் தரும் என்று கிரகந்தங்களில் சொல்லப்பட்டுள்ளது.

பாரப்பா ஈரிண்டு தனில்யிரு நான் கொன்றில்
பகருகின்ற பகலவனும் புந்தி கூடில்
சீரப்பா நிதி கருமன் கண்ணுற்றாலும்
நிலத்தின் நல்ல பூபதி போலிருப்பான் காளை
கூறப்பா குதிரைகளுங்காடியுண்டு
கொற்றனேயே வலாள் மெத்தவுண்டு
ஆரப்பா அயிஸ்வரியம் மெத்த வாழும்
அப்பனே ராசியோட பெலத்தால் கூறே
லக்கினத்திற்கு 1-4-8-ல் சூரியனும்,புதனும் இணைந்து 9-10-ஆம் அதிபதிகள் பார்த்தால் ஜாதகர் /ஜாதகிக்கு சிறப்புடன் இந்த உலகில் புகழ் பெற்று பெருஞ்செல்வந்தனாக இருப்பர்கள். வாகனம், பூமி லாபம், அரசுவகையில் அதயாம், உயர்ந்த பதவி அமையும். ஜாதகத்தினை நன்றகா ஆராய்ந்து கூறவும்.
கதிரோடு மதிமகன் சேர்ந்து - நல்ல
கனமுள்ள நாளிலுமிரு நாளிலொன்றில்
பதிநிதி பனையுமேயுண்டு சென்மன்
பாக்கியவானென்று பகர்ந்தாண்டித் தோழி
சூரியனும் புதனும் இணைந்து 1-4-8-ல் பலமுடன் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு பொன், பொருள், பூமீ புகழ் சுக பாக்கியங்கள் கிடைக்கும்.
கதிரோடு புந்தி கூடிகளித்திட உதித்த மாந்தர்
நிதி மிகப் படைத்தோரர் மற்றும் நீதியில் பிறழார்
நதி நலம் படைந்தோர் எங்கும் மாபுகழ் பெற்றோர்
சூரியனுக்கு புதனும் இணைந்து பலமுடன் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு சொல்வாக்கு செல்வம் படைத்தவர், தவறான வழியில் செல்லமாட்டார். நல்ல சிந்தனையும், புகழும் அடைவர்கள்.
"ப்ராக்ஞோ பகுப்பாவி கபீநாங்கக் சூரவல்ல
போபீதிமான்
லக்நேபுதவஸ்கர யோர்தீரக்கயுஸ்ஸம் வேத்புருஷ்
லக்கினத்தில் சூரியனும் புதனும் இருந்தால் அறிவுடையவர்கள், அழகாய் பேசுபவர்கள் உடல் பலமுடன் இருப்பார்கள், வீரன், தீர்க்கமான சிந்தனையுடையவர்கள் தீர்க்கயுள் உள்ளவர்கள்.
விளையும் புதனும் சூரியனும் விரும்பி எட்டில் நான்கு ஒன்றில் வளையக் கூடின் மன்னவனாம்
புதனும் சூரியனும் 1-4-8-ல் இணைந்திருந்தால் பலம் பெற்றிருந்தால் ஜாதகர் /ஜாதகி சுகபோக வாழ்வு அமையும்.
இனி பன்னிரண்டு லக்கினங்களுக்கு புதன், சூரியன் இணைந்து அமையும் நிலைகளை கண்போம்.

No comments:

Post a Comment