Sunday, 29 September 2019

பத்து வகை யோகங்களில்


“ஒருவருடைய  ஜாதகத்தில் நவகிரகங்களான, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று சேரும்போது யோகம் ஏற்படும்.
ஜாதகத்தில் ‘அமிர்தாதி யோகங்கள்' என்பவை உண்டு.  அவை தினசரி உண்டாகும், அமிர்தயோகம், சித்தயோகம், சுபயோகம், மரணயோகம், நாசயோகம், ப்ரபலாரிஷ்டயோகம் என்பவை. இவற்றில் அமிர்தயோகம் சித்தயோகம், சுபயோகம் ஆகியவை நல்லவை.   நாச யோகம், மரணயோகம் ப்ரபலாரிஷ்ட யோகம் ஆகியவை நல்லவையல்ல. இவை தினந்தோறும் நட்சத்திரமும் கிழமையும் கூடும் போது ஏற்படுபவை. இவற்றைப் பற்றி பஞ்சாங்கத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.. இவை ஒரு சுபகாரியத்துக்காகப் பார்க்கப் படுபவை.
இதேப்போல் ஒருவர் பிறந்த ஜாதகத்தை வைத்து, அவருக்கு என்ன வகையான யோகங்கள் அமைந்திருக்கின்றன, அவற்றை அவர் எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம். ஜாதக ரீதியாக யோகங்களை முக்கியமான ஐந்து வகைகளாகப் பிரித்துள்ளார்கள். 
* கிரகங்கள் ஒன்றுகொன்று கேந்திரத்தில் 1, 4, 7,10 - ம் இடங்களில் நிற்கும் அமைப்பு.
* கிரகங்கள் ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் 1,5 9 - ம் இடங்களில் நிற்கும் அமைப்பு.
* கிரகங்கள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் 1, 7-ம் இடத்தில் நிற்கும் அமைப்பு.
* கிரகச் சேர்கையில் ஏற்படுவது, அதாவது இரண்டு கிரகங்களும் ஒரே வீட்டில் நிற்கும் அமைப்பு .
* கிரகங்களின் பரிவர்த்தனையால் ஏற்படுவது, கிரகங்கள் ஒருவர் வீட்டில், ஒருவர் மாறி நிற்கும் அமைப்பு.
இந்த அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தாலும், அந்த யோகம் என்பது அவற்றின் தசா புத்தியில்தான் பரிபூரணமாக வேலை செய்யும். பொதுவாக, ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 300க்கும் மேல் உள்ளன. அதில் முக்கியமான பத்து யோகங்களைப் பற்றி பார்ப்போம்.
1.  தர்ம கர்மாதிபதி யோகம்:  ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் அவரின் லக்னத்துக்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியும் பத்தாம் வீட்டு
அதிபதியும் சேர்ந்து நின்றால், இந்த யோகம் ஏற்படும். இந்த அமைப்பு உள்ளவர்கள் வாழ்க்கையில் உயர்வு பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். அறக்கட்டளைகள், தர்ம ஸ்தாபனங்கள் நிறுவி, பொதுத்தொண்டு செய்வார்கள்.  ஆலயப் பணி செய்வார்கள். கோயில் நிர்வாகம் செய்யக்கூடிய பொறுப்புகள் வந்துசேரும். தன் சொந்த செலவில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யக்கூடிய தகுதி உண்டாகும். சிலர் தினமும் அன்னதானம் செய்வார்கள். தன் சொத்தில் ஒரு பகுதியை கோயில் திருப்பணிக்காக எழுதியும் வைப்பார்கள்.
2.  கஜ கேசரி யோகம்:  ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு குரு கேந்திரம் எனும் 4-ம் வீட்டில் அல்லது 7-ம் வீட்டில், அல்லது 10-ம் வீட்டில் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இதனால் அரசியலில் உயர் பதவி, அரசாங்கத்தில் உயர் பதவி, கல்வியில் உயர்வு, ஆகியவை ஏற்படும். மேலும், சொந்தமாக பல வீடுகள், வாகன யோகங்களையும் தரும். அதே சமயம் எதிரிகளும் உருவாகுவார்கள். ஆனால், அவர்கள் இவர்களிடம் தோற்றுபோவார்கள்.
3. குரு சந்திர யோகம்:  சந்திரனுக்கு திரிகோணம் எனப்படும் 5-ம் வீட்டில் , 9 - ம் வீட்டில்  குரு இருந்தால், இந்த யோகம் ஏற்படும்.  இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் தங்களுடைய 40 -வது வயதுக்கு மேல் புதிய தொழிலில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெறுவார்கள். இந்த அமைப்பு பெற்ற அரசியல் தொண்டர்கள் பலர் அரசியலில் 40 வயதுக்கு மேல் பெரிய பதவியில் அமர்ந்து புகழ் பெறுவார்கள்.
4. சந்திரமங்கள யோகம் : ஜாதகத்தில், செவ்வாய், சந்திரனுக்கு அதாவது ராசிக்குக் கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10 - வது வீட்டில் நின்றால் இந்த யோகம் ஏற்படும். இது திருமணத்துக்குப் பிறகு ஜாதகனுக்கு நல்ல உயர்ந்த அந்தஸ்தைத் தரும்.
5. குரு மங்கள யோகம்:  ஜாதகத்தில் குருவும், செவ்வாயும் சேர்ந்து நின்றாலோ அல்லது, ஒருவருக்கொருவர் எதிரில் நின்றாலோ, இந்த யோகம் ஏற்படும். இந்த அமைப்பில் பிறந்தவர்கள், தான் செய்யும் தொழிலில் உயர்வுபெற்று, பல தொழில்களாக விரிவுபெற்று நல்ல ஒரு தொழிலதிபராக முன்னுக்கு வருவார்கள்.
6. பத்ர யோகம்:  ஜாதகத்தில் ஒருவருடைய லக்னத்துக்கு 4, 7, 10 - ம் இடத்தில் புதன் ஆட்சியாக, உச்சமாக இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ளவர்கள் சிறந்த கல்வி அறிவு உள்ளவர்களாக இருப்பார்கள்.  இப்படிப்பட்ட அமைப்பிலிருக்கும் புதனை, குரு பார்த்தால் பெரும் கல்விமானாகப் பெயர் எடுத்து, கல்வி நிறுவனங்கள் நிறுவி, கல்விப் பணி ஆற்றுவார்கள். அத்துடன் குருவும் சேர்ந்து பலம் பெற்று இந்த அமைப்புள்ளவர்கள் கல்வி மந்திரியாக இருந்தால், அந்த நாட்டின் கல்வி நிலை எல்லா நாடும் போற்றும்படி இருக்கும். அவர் எடுக்கும் நடவடிக்கைகளால் கல்வியின் தரம் உயர்ந்து சிறந்த கல்விமான்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். யாருக்கும் பயப்படாமல் அவர் முடிவுகள் எடுப்பார். கல்விச் சாலைகள் பெருகும். அடிப்படை அறிவு மக்களுக்குக் கிடைக்கப் பாடுபட்டு அதில் வெற்றியும் பெறுவார்.
7.  ஹம்ஸ யோகம்:  ஜாதகத்தில் குரு லக்னத்துக்கு கேந்திரம் எனப்படும்  4,7,10 -ம் இடத்திலிருந்து, குரு உச்ச பலம் பெற்று நின்றால், இந்த யோகம் ஏற்படும்.  நல்ல நீதிமானாக இருப்பார். இவர் சொல்லும் வார்த்தைகளுக்கு மக்களிடம் மதிப்பு இருக்கும். இந்த அமைப்புடன், சூரியனும் செவ்வாயும் பலம் பெற்றால், அந்த ஜாதகர் ஒரு மிகச் சிறந்த ஒரு நாட்டை வழிநடத்திச் செல்லக்கூடிய ஒரு அரசியல் தலைவராகப் பெயர் எடுப்பார். மக்களிடம் அதிக செல்வாக்கும் உடையவராகத் திகழ்வார். இந்த யோகத்தோடு ராஜ கேந்திரயோகம் எனப்படும் யோகம் ஏற்பட்டால், அதாவது எல்லா கிரகங்களும் கேந்திரத்தில் பலமானால், அவரை யாராலும் அசைக்க முடியாத ஓர் ஒப்பற்றத் தலைவனாகப் பெயரெடுப்பார்.
8. அரசாளும் யோகம்:  ஒரு ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் பலம் பெற்று,  லக்னத்துக்கு 6, 7, 9 - ம் இடத்து அதிபதிகள் ஆட்சி பெற்றிருந்தால், தன்னுடைய சிறிய வயதிலேயே அரசியலில் பெரும்புகழ் பெற்று அரியணையில் அமர்வார்.
9.  சகடயோகம்:  ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் சந்திரனும் ஒருவருக்கொருவர் 'ஷஷ்டாஷ்டகம்' எனப்படும் 6, 8- ம் இடங்களில் அமர்ந்தால், இந்த யோகம் ஏற்படும். வாழ்க்கையில் அதிக போராட்டங்களைச் சந்திக்க வேண்டி வரும். ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதி மிகவும் யோகமாக அமையும்.
10. கிரகமாலிக யோகம்:  ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்கு இருபுறமும் வரிசையாக கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் ஏற்படும்.  வாழ்க்கையில் உயர்ந்து சமூக அந்தஸ்துடன் மாலை மரியாதையோடு வாழக்கூடிய சந்தர்ப்பங்களை இந்த யோகம் கொண்டு வரும்.

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்...
அஸ்வினி - முக்கிய ஸ்தலம் - கூத்தனூர்
மற்ற தலங்கள் - ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை.
பரணி - முக்கிய ஸ்தலம் - நல்லாடை
மற்ற தலங்கள் - திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம்.
கார்த்திகை - முக்கிய ஸ்தலம் - கஞ்சானகரம்
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர்.
ரோஹிணி - முக்கிய ஸ்தலம் - திருக்கண்ணமங்கை
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை, கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர், நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி.
மிருகசீரிடம் - முக்கிய ஸ்தலம் - எண்கண்
மற்ற தலங்கள் - அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை.
திருவாதிரை - முக்கிய ஸ்தலம் - சேங்காலிபுரம்
மற்ற தலங்கள் - சிதம்பரம், அதிராம்பட்டினம்.
புனர்பூசம் - முக்கிய ஸ்தலம் - சீர்காழி
மற்ற தலங்கள் - பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.
பூசம் - முக்கிய ஸ்தலம் - திருச்சேறை
மற்ற தலங்கள் - விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர், கோனேரிராஜபுரம், பரிதிநியமம், திருச்சுழி, அழகர் கோயில்.
ஆயில்யம் - முக்கிய ஸ்தலம் - திருப்புறம்பியம்
மற்ற தலங்கள் - திருந்துதேவன்குடி, நண்டான் கோயில், சங்கரன்கோயில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை.
மகம் - முக்கிய ஸ்தலம் - திருவெண்காடு
மற்ற தலங்கள் - திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.
பூரம் - முக்கிய ஸ்தலம் - தலைசங்காடு
மற்ற தலங்கள் - நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம், புரசைவாக்கம்.
உத்திரம் - முக்கிய ஸ்தலம் - கரவீரம்
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர், கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம்.
ஹஸ்தம் - முக்கிய ஸ்தலம் - கோமல்
மற்ற தலங்கள் - தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர் , எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு.
சித்திரை - முக்கிய ஸ்தலம் - திருவையாறு
மற்ற தலங்கள் - அண்ணன்கோயில், தாடிக்கொம்பு, திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம், திருவக்கரை, திருக்கோயிலூர், திருமாற்பேறு.
சுவாதி - முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்
மற்ற தலங்கள் - திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர், பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம்.
விசாகம் - முக்கிய ஸ்தலம் - கபிஸ்தலம்
மற்ற தலங்கள் - திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர், திருநன்றியூர், நத்தம்.
அனுஷம் - முக்கிய ஸ்தலம் - நாச்சியார் கோயில்
மற்ற தலங்கள் - திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர், திருநன்றியூர்.
கேட்டை - முக்கிய ஸ்தலம் - வழுவூர்
மற்ற தலங்கள் - பிச்சாண்டார் கோயில், பசுபதி கோயில், பல்லடம், திருப்பராய்த்துறை.
மூலம் - முக்கிய ஸ்தலம் - மயிலாடுதுறை
மற்ற தலங்கள் - மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர், மம்பேடு.
பூராடம் - முக்கிய ஸ்தலம் - கடுவெளி
மற்ற தலங்கள் - நகர், சிதம்பரம், இரும்பை மகாகாளம்.
உத்திராடம் - முக்கிய ஸ்தலம் - இன்னம்பூர்
மற்ற தலங்கள் - கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி, திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம்.
திருவோணம் - முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்.
மற்ற தலங்கள் - ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில், திருப்பாற்கடல்.
அவிட்டம் - முக்கிய ஸ்தலம் - திருபூந்துருத்தி
மற்ற தலங்கள் - விருதாச்சலம், திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு, கொடுமுடி.
சதயம் - முக்கிய ஸ்தலம் - திருப்புகலூர்
மற்ற தலங்கள் - கடம்பனூர், கோயில் கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில், மதுரை.
பூரட்டாதி - முக்கிய ஸ்தலம் - திருக்குவளை
மற்ற தலங்கள் - ரெங்கநாதபுரம்.
உத்திரட்டாதி - முக்கிய ஸ்தலம் - திருநாங்கூர்.
மற்ற தலங்கள் - தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில்.
ரேவதி - முக்கிய ஸ்தலம் - இலுப்பைப்பட்டு
மற்ற தலங்கள் - காருகுடி, இரும்பை மாகாளம், திருச்செங்கோடு.

சந்திரனால் அமையும் யோகங்கள்

சந்திரனால் பலவிதமன யோகங்கள் ஏற்படும்.
1) சுனபயோகம்,2)அனப யோகம், 3) துருதரா யோகம் 4)சந்திரஅதியோகம், 5)அமலா யோகம்,6) வசுமதி யோகம், 7)-சசிமங்கள யோகம்,8-சந்திரிகா யோகம் 9)கல்யாண சகட யோகம், 10)ராஜலட்ச யோகாம், 11)கஜகேசரி யோகம் தருவர்கள். இந்த யோகங்கள் சுப பலன்களை தருபவைகள் .
1)சகட யோகம், 2)கேமத்துரும யோகம், 3)சந்திர சண்டாள யோகம், 4)மாதுர்நாச யோகம் .தீய பலன் தரும்.
சந்திரனை அடிப்படையில் கணக்கிடப் படுககின்ற சிறப்பு வாய்ந்த யோகங்களாகும்.

சுனப யோகம் 1
ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டில் சூரியன், ராகு, கேதுவைத் தவிர பஞ்சமவர்கள் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி தனித்தனியே த்தித்இருந்தாலும், இணைந்திருந்தலும் சுனப யோகம் அமையும்.
ஜாதகர் /ஜாதகி உழைப்பினாலும் முயற்ச்சியினாலும் பணத்தை சம்பாதிப்பார்கள், பூமி, சொத்துக்கள், அரச வாழ்வு, பூகழ், புத்திசாதுர்யம் உள்ளவராகவும், செலல்வந்தராகவும் இருப்பார்கள்.
சந்திரனை சனி, சுக்கிரன் பார்வை, இணைவு இல்லமால் இருக்க வேண்டும்.
சந்திரனுக்கு சூரியன், ராகு, கேது இவர்களின் தொடர்பு இல்லமால் இருக்க வேண்டும்.
வளர் சந்திரனக இருப்பது சிறப்பன யோகம் தரும்.
இந்துவுக்கு இரண்டாம் வீட்டில் இனிய கோளிருந்த
காலை
முந்திய சுனப யோகமிதன் பலன் மொழியுங் காலை
சந்தந் தனவான் ராஜன் மன்னன் புத்தியுள்ளான்
சுந்தரப்புவி களெங்குத்து தித்திடுங் கீர்த்திமானாம்
சந்திரனுக்கு இரண்டில் சுப கிரகங்கள் இருந்தால் சுனப யோகமகும் .ஜாதகர் /ஜாதகி அழகனவர், செல்வந்தர், மந்திரி, ராஜ போகவாழ்வும், அரசு உயர் உத்தியோகம், புத்தி சதுர்யம், உள்ளவர்கள், வாகனதி வசதியும் பூகழ் கீர்த்தி அடைவர்கள்.
சோமனார் தனக்கிரண்டில் சனி சுனப யோகம்
தாமிதமாமுன் தந்தை யிசித்து தனங்களில்லைத்
காமுறு சிறுவன் தானு ங்காசினித் ரசானாகித்
தாமிகு தனங்கள் தேடித்தகுதி பெற்றிடுவான்றானே
சந்திரனுக்கு இரண்டில் சனியிருந்தால் சுனப யோகம்.ஜாதகர் /ஜாதகியின் தந்தைக்கு யோகமில்லை பிறந்த முதல் தந்தை யாசித்து செல்வங்கள் இல்லதவர்கள் கஷ்டங்களும் அனுபவிvxzvxzcbmப்பார்கள். ஜாதகர் /ஜாதகிக்கு உயர்பதவி, அந்தஸ்தும், அதிக செல்வம் பெற்று சுகபோக வாழ்வு அமையும்.
பாரப்பா இன்னு மொன்று பகரக் கேளு
பானுமைந்தன் பால் மதிக்கு வாக்கில் வந்தால்
கீரப்பா மேம் பாடு சவுக்கியம் செம் பொன்
சிவ சிவா கிட்டுமடா வேட்டல் கூடு
கூறப்பா கோதையினால் பொருளுஞ் சேரும்
கொற்றவனே குடி நாதன் வலுவைபாரு
ஆரப்பா போகருட கடாசத்தாலே
அப்பனே புலிப்பாணி அரைந்திட்டேனே
சூரியனின் மகனான சனி சந்திரனுக்கு இரண்டில் வந்தால் அல்லது இருந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம்,சௌபாக்கியம், செம்போன்னும்
சிவ பரம் பொருளின் அருளானையால் யோகம் கிடைக்கும். நல்ல மனைவி அமைவாள். மனைவியால் தனலாபம் கிட்டும். சனி இருந்த வீட்டின் அதிபதியின், லக்கினாதிபதி பலத்தையும் ஆராய்ந்து அறிந்து கூறவேண்டும்.போகரது அருளால் புலிப்பாணி கூறினேன்.
சந்திரனுக்கு இரண்டில் செவ்வாவ் ஜாதகர் /ஜாதகி திறமை சாலிகள், தொழில் திறமை உயர்வு தீய சொல்லுடையவர்கள், தலைமை பொறுப்பும், தீய எண்ணணம், கர்வமுள்ளவர்கள், விரோத எண்ணம் உள்ளவர்கள்.
சந்திரனுக்கு இரண்டில் புதன் வேத சாஸ்திரங்களில் தேர்ச்சியும், சாமர்த்தியசாலி, கதை, காவியம், கட்டுரைகள் இயற்றுவர்கள். அனைவர்க்கும் பியமுள்ளவர்கள் நல்ல எண்ணம் உடையவர்கள்.
சந்திரனுக்கு இரண்டில் குரு பலதொழில்கள் புரிவர்கள், புகழ், அரசு மரியதை, நல்ல குடும்பம், உள்ளவர்கள். சிறப்பன சம்பத்துடையவர்கள்.
சந்திரனுக்கு இரண்டில் சுக்கிரன் காம சுகம், விவசாயம், பூமி லாபம், கால் நடை, வாகன யொகம் பல கலைகள் அறிந்தவர்கள், சுகமுடன் வாழ்வு அமையும்.
சந்திரனுக்கு இரண்டில் சனி ஆராய்ச்சி மனம், மக்கள் மத்தியில் புகழ் ஏற்படும், அதிக தனச் சோர்க்கையுள்ளவர்கள் .மறைமுக காரியங்களில் ஆதாயம் அனைத்திலும் வெற்றி பெறுவர்கள்.

Saturday, 28 September 2019

ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை]

------------------------------------------------------------------------------------
ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒரு வகையான சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மேச ராசியின் குணாதிசயங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்திருக்கும்.இது போல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள் மறைந்திருக்கிறது
-
மேசம்
மேச ராசியின் உருவம் ஆடு ஆகும்.எனவே ஆடுகளின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால் மேச ராசியின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம். ஆட்டு மந்தையைக்கவனியுங்கள்,அங்கே குறைந்தது இரண்டு ஆடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டிருக்கும். இதன் காரணத்தினாலேயே மேச ராசிக்காரர்களை கலகக்காரர்கள் எனக்குறிப்பிடுகிறார்கள். ஆட்டுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது,அவை நஞ்சிலும் நான்கு வாய் தின்னும். இதனால்தான் மேச ராசிக்காரர்களை தைரியசாலிகள் என்று கூறுகிறார்கள். ஆடுகள் ஒரு மரத்தின் மீதோ அல்லது ஒரு கட்டிடத்தின் மீதோ எளிதில் ஏறிவிடும்,ஆனால் இறங்கத்தெரியாது,இதனால் மேச ராசிக்காரர்களை விவேகமில்லாதவர்கள் என குறிப்பிடுகிறார்கள். ஆடுகளுக்கு இனபெருக்க காலம் என தனியாக எதுவும் கிடையாது. மனிதர்களைப்போல் எந்த பருவக்காலத்திலும் அவை இன விருத்தியில் ஈடுபடும். இதனால் ஆட்டு மந்தையில் தினமும் உடல் உறவுக்காட்சிகளைக்காணலாம். இதனால் மேச ராசிக்காரர்களுக்கு காம உணர்ச்சி அதிகம் எனக்கூறப்படுகிறது
-.
ரிசபம்
ரிசப ராசியின் உருவம் மாடு ஆகும். மாடுகளை கடினமான வேலைகளை செய்வதற்கு நாம் பயன்படுத்துகிறோம், அதாவது நமக்கு பயன்படும் வகையில் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.இதனால் ரிசப ராசியினர் பிறருக்கு கீழ்படிந்து நடப்பர் என்றும்,நல்ல உழைப்பாளிகள் எனக்கூறப்படுகிறது. மாடுகளை ஒரு குறிப்பிட்ட வேலைக்கு பழக்கிவிட்டால் அவை தன் பழக்கத்தை எளிதில் மாற்றிக்கொள்ளாது,உதாரணத்திற்கு செக்கு மாடுகளைக்கூரலாம். இதனால் ரிசப ராசியினர் மாற்றங்களை விரும்பாதவர் எனப்படுகிறார்கள். மாடுகளுக்கும் இனபெருக்க காலம் என தனியாக எதுவும் கிடையாது. மனிதர்களைப்போல் எந்த பருவக்காலத்திலும் அவை இன விருத்தியில் ஈடுபடும். இதனால் மாட்டு மந்தையில் தினமும் உடல் உறவுக்காட்சிகளைக்காணலாம். இதனால் ரிசப ராசிக்காரர்களுக்கும் காம உணர்ச்சி அதிகம் எனக்கூறப்படுகிறது
-.
மிதுனம்
மிதுன ராசியின் உருவம் இரட்டையர் ஆகும்.அதாவது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்திருப்பது போன்ற உருவ அமைப்பாகும். அதாவது சக மனிதர்களோடு சேர்ந்திருப்பதை பெரிதும் விரும்புபவர்கள் மிதுன ராசியினர். மனிதர்கள் சந்திக்கும்போது அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடக்கும். மிதுன ராசிக்காரர்கள் நட்பு விரும்பிகள்,தனிமையில் அவர்களால் இருக்க முடியாது. எப்பொழுதும் யாரிடமாவது பேசிக்கொண்டிருப்பதையே விரும்புவார்கள். இவர்கள் நல்ல தூதுவர்களாக செயல்படுவார்கள். மனிதர்களை பெரிதும் நேசிப்பார்கள். எதிர்பாலார் மீது இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும். காதல் உணர்வு அதிக மாக இருக்கும்
-
கடகம்
கடக ராசியின் உருவம் நண்டு ஆகும். நண்டு தாய்மையின் அடையாளமாகும். அதாவது நண்டானது எப்பொழுதும் தன் குஞ்சிகளை சுமந்து திரிவதில் அலாதி பிரியமுடையவை.இதன் காரணத்தினால் கடக ராசிக்காரர்கள் தாய்மை உள்ளம்கொண்டவர்கள் என்றும்,தன் குடும்பத்தை கட்டிக்காப்பதில் விருப்பம் உடையவர்கள் என்றும் கூறப்படுகிறது. நண்டுகள் மிகவும் எச்சரிக்கை உடையவை, இதனால் கடக ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள் என்றும்,யாரையும் முழுமையாக நம்பமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. பாசம் என்றால் என்னவென்று இவர்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.
-
சிம்மம்
சிம்ம ராசியின் உருவம் சிங்கமாகும். சிங்கத்திற்கு பசி எடுத்தால் மட்டுமே பிற மிருகங்களை வேட்டையாடும்.மற்ற நேரங்களில் பிற மிருகங்களை வேட்டையாடுவதில்லை. இதன் காரணத்தினால், சிம்மராசிக்காரர்கள் அவசியம் கருதி செயல்படுபவர்கள் எனக்கூறப்படுகிறது. சிங்கங்கள் எப்பொழுதும் ஓய்வாக,எதை பற்றியும் கவலையில்லாதது போல் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு விசயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்றும், எப்பொழுதும் ஓய்வாகவே இருக்க விரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது. சிங்கங்கள் எப்பொழுதும் தங்கள் எல்லைக்குள் பிறர் நுழைவதை விரும்புவதில்லை. இதனால் சிம்ம ராசிக்காரர்கள் தனியாக இருக்கவே விரும்புவார்கள் என்றும்,தங்கள் சுதந்திரத்தில் பிறர் தலையிடுவதை விரும்புவதில்லை என்றும் கூறப்படுகிறது. சிங்கம் விலங்குகளின் அரசன் போல் விளங்குவதால், சிம்மராசிக்காரர்கள் தங்களை எப்பொழுதும் ஒரு தலைவனாகக்காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள் எனக்கூறப்படுகிறது
-.
கன்னி
கன்னி ராசியின் உருவம் கன்னிப்பெண்ணாகும். கன்னிப்பெண்கள் எப்பொழுதும் தங்களை அழகாக,இளமையாக,கவர்ச்சியாக காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்.எனவே கன்னி ராசிக்காரர்கள் தங்களை அழகாக,கவர்ச்சியாக,இளமையாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள் எனக்கூறப்படுகிறது.கன்னிப்பெண்கள் எப்பொழுதும் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.இதனால் கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.
துலாம்
துலாம் ராசியின் உருவம் கண்களைக்கட்டிக்கொண்டு ஒரு கையில் தராசு ஏந்தி நிற்கும் பெண் ஆகும். தராசு பெரும்பாலும் வியாபார நிறுவனங்களிலேயே காணப்படும்,இதனால் துலாம் ராசிக்காரர்கள் வியாபார தந்திரம் உடையவர்கள் என்றும்,எதையும் சீர்தூக்கிப்பார்த்து திறம்பட செயல்படக்கூடியவர்கள் என்றும் கூறப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் நடுநிலை தவறாதவர்கள்.
-
விருச்சிகம்
விருச்சிக ராசியின் உருவம் தேள் ஆகும். தேள்கள் எப்பொழுதும் மறைவிடங்களிலேயே வசிக்கும்.மறைந்திருந்து தாக்கும் குணமுடையவை. இதனால் விருச்சிக ராசிக்காரர்கள் எதிலும் வெளிப்படையாக நடந்துகொள்ளமாட்டார்கள். இவர்களை புரிந்துகொள்வது சிரமமாகவே இருக்கும். இரண்டு தேள்கள் ஒரே இடத்தில் வசிக்காது. அப்படி வசித்தாலும் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டு மடிந்து போகும். இதனால் விருச்சிக ராசிக்காரர்களிடம் போட்டி,பொறாமை போன்ற குணங்கள் காணப்படும். பெண் தேளானது குஞ்சி பொறித்தால் தாய்த்தேள் இறந்துவிடும்,இதனால் விருச்சிக ராசியினர் சிலருக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது
-.
தனுசு
தனுசு ராசியின் உருவம் பாதி குதிரையும்,பாதி மனிதனுமாக வில்லேந்திய உருவமாகும். இந்த ராசியின் உருவம் பாதி மிருகமாகவும்,பாதி மனிதனாகவும் காட்டப்பட்டுள்ளதால் ,இந்தராசிக்காரர்கள் தங்களுடைய மிருக குணங்களிலிருந்து விடுபட்டு மனித தன்மையை வளர்த்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். முடிந்தவரை தங்கள் குறைகளை திருத்திக்கொல்வதற்கு தயாராகவே இருப்பார்கள். இந்த ராசி உருவம் வில்லேந்தி குறி பார்ப்பது போல் உள்ளது,இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு லட்சியத்துடனேயே நடத்திசெல்வார்கள் எனக்கூறப்படுகிறது. மன ஒருமைப்பாடு இருந்தால் மட்டுமே வில் வீரன் சரியாக குறிபார்க்க முடியும்,இதன் காரணத்தால் தனுசுராசிக்காரர்கள் இயற்கையாகவே மன ஒருமைப்பாடுடையவர்களாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமாக இருக்கும். தர்மர்த்தை நிலை நாட்ட ஸ்ரீராமன் வில்லேந்தினான் என்பர்,இதனால் வில் தர்மத்தின் குறியீடாக கருதப்படுகிறது. தனுசு ராசிக்காரர்கள் தர்மத்திற்காக போராடுவார்கள்
-
மகரம்
மகர ராசியின் உருவம் முதலையாகும். முதலை தன் இரைக்காக ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் காத்துக்கிடக்கும் குணமுடையவை,இதனால் மகர ராசிக்காரர்கள் உட்கார்ந்த இடத்திலேயே இருந்துகொண்டு தங்கள் காரியங்களை நடத்தி செல்வதில் வல்லவர்கள் எனக்கூறப்படுகிறது. இவர்கள் எப்பொழுதும் தங்கள் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்கள். முதலைகள் போல் பாசாங்கு காட்டுவதில் வல்லவர்கள். தன்னை சுற்றி நடப்பவைகளை உன்னிப்பாக கவனிப்பார்கள்,ஆனால் எதுவும் தெரியாதது போல் நடந்துகொள்வார்கள். வாய்ப்புகளுக்காக தவம் கிடப்பார்கள்,கிடக்கின்ற வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக்கொள்வார்கள்.பொறுமை இவர்களுக்கு அதிகம்
-.
கும்பம்
கும்ப ராசியின் உருவம் பானயை தலையில் சுமந்தபடி நிற்கும் மனிதனாகும். பானையானது சேகரிப்பு மற்றும் சேமிப்பின் அடையாளமாகும். இதனால்,கும்ப ராசிக்காரர்கள் யாரிடம் பழகினாலும் அவர்களிடமிருந்து தனக்கு என்ன கிடைக்கும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.அதாவது இவர்கள் எதை செய்தாலும் லாபம் கருதியே செயல்படுவார்கள். பிறரிடம் உதவி கேட்பதற்கு இவர்கள் தயங்கவே மாட்டார்கள்,யாரிடம் பழகினாலும் அவர்களிடம் ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்ப்பார்கள். மனிதன் பானையை தலையில் சுமந்தபடி நிற்பதால்,இந்த ராசிக்காரர்கள் பிறர் சுமைகளையும் தானே சுமப்பதற்கு தயாராக இருப்பார்கள். அதாவது அடிமை வேலை செய்வதற்கு தயங்க மாட்டார்கள்.
-
மீனம்
மீன ராசியின் உருவம் இரட்டை மீன்களாகும். மீன்கள் எப்பொழுதும் தன்னையும்,தன் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்துகொண்டே இருக்கும். இதனால் மீன ராசிக்காரர்கள் தன்னையும் தன் சுற்று புறத்தையும் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்வார்கள் எனக்கூறப்படுகிறது. மீன்கள் எப்பொழுதும் நீருக்குள் ஓடியாடி, துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருப்பவை, இதனால் மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எனக்கூறப்படுகிறது. மீன்கள் எப்பொழுதும் கூட்டமாகவே வசிக்கும்,இதனால் மீன ராசிக்காரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிப்பதை பெரிதும் விரும்புவார்கள் எனக்கூறப்படுகிறது.
எனக்குத்தெரிந்தவரை ஒரு சில குணாதிசயங்களை மட்டும் இக்கட்டுரையில் விளக்கியிருக்கிறேன்.
********************************************************************************************************

Friday, 27 September 2019

ஜோதிடத்தில் 12 கட்டம் 9 கிரகம் வைத்து எப்படி பலன் சொல்வது !

ஜாதகத்தில் "ல" என்று போடப்பட்ட வீடுதான் முதல் வீடு எனப் படும். அதாவது அதுதான் இலக்கினம் எனப்படும். நமது உதாரண ஜாதகத்தில் மகரம் தான் முதல் வீடு ஆகும். அடுத்த வீடு 2-ம் வீடு ஆகும். அதாவது கும்பம் தான் 2-ம் வீடு ஆகும். இப்படியே எண்ணிக் கொண்டு வந்தால் தனுசு தான் 12-ம் வீடு ஆகும். அதாவது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் இலக்கினத்தை முதல் வீடாகக் கொண்டு எண்ண வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில காரகத்துவம் உண்டு. அவைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் பலன் சொல்ல முடியும்.
முதல் வீடு : இதை வைத்து ஜாதகருடைய நிறம், உருவம், உயரம், குணாதிசயங்கள் முதலியவற்றை அறியலாம். ஜாதகர் ஒல்லியானவரா, இல்லை பருமனானவரா, கோபம் உள்ளவரா, இல்லை சாந்தமானவரா என்றும் அறியலாம். அவர் உடல் நலத்தைப் பற்றியும் அறியலாம். அவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குப் போவாரா இல்லை தாழ்ந்த நிலைக்குப் போவாரா, என்பது பற்றியும் அறியலாம். உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடு தான். ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். முதல் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், முதல் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார் அதாவது இலக்கினாதிபதி எங்கு இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும் பலன் சொல்ல வேண்டும்.
இரண்டாவது வீடு : இது குடும்பத்தைக் குறிக்கிறது. பணவரவு, செலவு போன்ற பொருளாதாரத்தையும் இது குறிக்கிறது. அதைத்தவிர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், Securities போன்ற சொத்துக்களையும் கூறலாம். ஆடை, அணிகலன்களையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். வங்கியில் உள்ள பண நிலைமை, Promisery Notes, போன்றவற்றையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். இரண்டாம் வீட்டை வாக்குஸ்தானம் என்றும் அழைப்பார்கள். ஒருவர் கனிவாகப் பேசுவாறா, அல்லது கடினமாகப் பேசுவாறா, நன்றாகப் பேசுவாறா அல்லது திக்கிதிக்கிப் பேசுவாறாஎன்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவர் கண்ணாடி அணிபவரா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம். பொதுவாக எந்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிப்பன நல்லதையே செய்யும். தீய கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிக்கும் காரகத்துவங்கள் கெட்டு விடும். உதாரணமாக 2-ம் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. அதில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனி ஒரு பாவ கிரகம் அல்லவா! சனி எதையும் குறைவாகவும், தாமதமாகவும் கொடுப்பார். குடும்பம் சிறியதாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் குறைவாகவும் இருக்கும். என்ன- புரிகிறதா?
மூன்றாம் வீடு : இந்த வீட்டைக் கொண்டு ஒருவரின் இளைய சகோதரம், ஒருவரின் தைரியம், அண்டை வீட்டிலுள்ளவர்கள், குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம். கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல் பரிவர்த்தனைகள், வீடு மாறுதல் ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். இந்த வீட்டில் கேது இருப்பாரேயாகில் அவர் கலகங்களை விளைவிப்பவை என்றும் கூறலாம். இன்னும் நகைச்சுவையாகக் கூறப்போனால் அவரைக் "கலியுக நாரதர்" எனவும் கூறலாம். உடல் பாகங்களில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம், ஆகியவற்றை இந்த 3-ம் வீடு குறிக்கிறது. இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால் அவர் மிக்க தைரியசாலியாக இருப்பார். ஏனெனில் செவ்வாயானவர் வீரமிக்க கிரகம். ஒருவருக்கு வீரத்தைக் கொடுப்பவர் செவ்வாய் தான். அங்கே சனி இருந்தால் அவர் அவசரப் படாமல் நிதானத்துடன் செயல் படுவர். யோஜனை செய்து தான் முடிவு எடுப்பார். அவசரப் பட மாட்டார்.
நான்காம் வீடு : இது தாயாரைக் குறிக்கும் வீடு. கல்லூரிவரையிலான படிப்பு, வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புதையல், கால்நடைகள், பசுக்கள், விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் தான்யங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த நாலாவது வீடுதான். ஒருவருக்கு 4-ம் வீட்டில் செவ்வாய் இருக்கிறார் என்க் கொள்ளுங்கள். அவர் நிச்சயமாக வீடு கட்டுவர். ஏனெனில் செவ்வாய் பூமிகாரகன். பூமிகார கனான செவ்வாய் 4-ம் வீட்டுடன் சம்பந்தப் பட்டதால் அவர் நிச்சயம் வீடு கட்டுவர். இதே செவ்வாய் 9-ம் வீட்டு அதிபதி எனக் கொள்வோம். இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும். ஏன்? 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது. செவ்வாய் பூமிகாரகனாகி, 9-ம் வீட்டையும் குறித்து , ஸ்திரசொத்துக்களைக் குறிக்கும் வீடான 4-ம் வீட்டில் இருக்கிறார். ஆக இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும் எனக் கூறலாம். என்ன புரிகிறதா?
5-ம் வீடு : இதை புத்திர ஸ்தானம் என்று அழைப்பார்கள். இதைப் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கல்லாம். அதாவது போன ஜென்மத்தில் ஒருவர் நல்லது செய்தவரா இல்லையா என்று இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஒருவருக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லயா என்றும் முடிவு செய்யலாம். ஒருவருக்குக் கலைத்துறையில் நாட்டம் இருக்கிறதா அல்லது இல்லயா என்பது பற்றியும் இந்த வீட்டைக்கொண்டு முடிவு செய்யலாம். அதே போன்று, சினிமா, டிராமா, லாட்டரி, குதிரைப்பந்தயம், ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும். ஒருவர் காதலித்துத் திருமணம் செய்வாரா இல்லையா என்பது பற்றியும் இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஆன்மீக வாழ்க்கையையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம். வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம்.
6-ம் வீடு : கடன், வியாதி, உண்ணும் உணவு , வேலை செய்யும் இடம், ஒருவருடைய வேலைக்காரர்கள் ஆகிய வற்றையும் இந்த வீட்டைக் கொண்டு சொல்லலாம். கவலைகள், துக்கங்கள் தாய் மாமன் ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். இலக்கினாதிபதி புதன் 6-ம் வீடான கும்பத்தில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். புதன் 1-ம் வீட்டிற்கு அதிபத்யாகி 6-ம் வீட்டில் இருக்கிறார். அவர் உடல் நிலையில் நிச்சயமாகக் கோளாறு இருக்கும். ஏனெனில் புதன் 1-ம் வீட்டையும் 6-ம் வீட்டையும் குறிக்கிறார். ஆக இவர் உடலில் ஏதோகோளாரு இருக்கிறது எனக் கொள்ள வேண்டும். சரி! 2-ம் வீட்டின் அதிபதி சுக்கிரன் 6-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 6-ம் வீடு Employment என்று சொல்லுகின்ற வேலையைக் குறிக்கிறது. 2-ம் வீடு தனத்தைக் குறிக்கிறது. ஆகவே இவர் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பர் எனக் கொள்ளலாம். இவ்வாறாக 6-ம் வீட்டிலுள்ள கிரகம் மற்ற எந்த வீட்டுடன் சம்மந்தம் கொண்டுள்ளதோ அதை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்.
7-ம் வீடு : திருமணத்தைக் குறிக்கும் வீடு இதுதான். வியாபாரத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் மரணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். பிரயாணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் ஜாதகத்தில் 7-ம் வீட்டில் சனி இருக்கிறது எனக் கொள்ளுங்கள். சனிதான் எதையும் தாமதப் படுத்துபவர் ஆயிற்றே! ஆக இவருக்குத் திருமணம் தாமதம் ஆகும் எனக் கூறலாம். உதாரணமாக கடக இலக்கினக்காரர் ஒருவருக்கு 7-ம் இடமான மகரத்தில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனியானவர் 7-ம் வீட்டிற்கும், 8-ம் வீட்டிற்கும் அதிபதி. 7-ல் இருக்கிறார். அவர் திருமணத்தைத் தாமதப் படுத்துவதோடு சில சங்கடங்களையும் திருமணத்திற்குப் பிறகு கொடுப்பார். ஏனெனில் சனி 8-ம் வீட்டிற்கும் அதிபதியல்லவா! சரி! சனிக்குப் பதிலாக 6-ம் வீடு, 9-ம் வீட்டிற்கு அதிபதியாகிய குரு இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். திருமண வாழ்வு எப்படி இருக்கும்? 6-ம் வீடு என்பது 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு அல்லவா! திருமண வாழ்வு சுகப்படாது. பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்.
8-ம் வீடு : ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு இது தான். பிதுரார்ஜித சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷ¤ரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ் ஆகியவைகளைக் குறிக்கும் வீடு இதுதான். ஒருவர் மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம். துன்பம், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும் வீடு இதுதான். இந்த வீட்டை "துஸ்தானம்" எனக் கூறுவர்கள். 8-ம் வீட்டில் சனி இருந்தால் ஒருவருக்கு தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். குரு இருந்தாலும் தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். பொதுவாக 8-ம் வீட்டில் உள்ள கிரகங்களோ, அல்லது 8-ம் வீட்டிற்கு அதிபதியோ தங்கள் தசா, புக்திகளில் நல்லதைச் செய்யாதென்பது பலரின் அபிப்பிராயம்.
9-ம் வீடு : தகப்பனர், போன ஜென்மத்தில் ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட பயணம், தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள், ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக 9-ம் வீட்டில் ஒருவருக்கு சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருக்கிறது எனக் கொள்ளுவோம். நிச்சயமாக அவருக்குத் தகப்பனார் அனுசரணையாக இருக்க மாட்டார். 9-ம் வீட்டைத் தவிர சூரியனின் நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சூரியன் பிதுர்காரகனல்லவா? 9-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருக்குமேயாகில் அந்த வீட்டின் காரகத்துவங்கள் எல்லாம் கெட்டு விடும்.
10-ம் வீடு : ஒருவரின் ஜீவனம், கெளரவம், சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவற்றையும் இதைக் கொண்டேதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு அரசியல் நல்லபடியாக இருக்குமா அல்லது இருக்காதா என்றும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். இதைக் கர்மஸ்தானம் என்றும் கூறுவார்கள். தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். ஒருவரின் எஜமானர், அரசாங்கம் இவைகளையும் இந்த வீடுதான் குறிக்கிறது.
11-வது வீடு : இதை லாபஸ்தானம் என்று கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய லாபங்களையும், சுகங்களையும் அளிக்கக் கூடியது இந்த வீடுதான். மூத்த சகோதரத்தைப் பற்றியும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 5-ம் வீட்டில் இருந்தால் புத்திரத்தால் லாபம் எனக் கொள்ளலாம். அதே 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 10-ல் இருந்தால் நல்ல ஜீவனம் எனக் கொள்ளலாம். அதே போல் 11-க்குடைய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டிற்கு நல்லது எனக் கொள்ள வேண்டும்.
12-வது வீடு: இதை மோட்ச ஸ்தானம் என்று சொல்லுவார்கள். இதை விரய ஸ்தானம் என்றும் சொல்லுவார்கள். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே சொல்லவேண்டும். துன்பம், பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், ஆகியவையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். மறைமுக எதிரிகளையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஜெயில் வாசம், உள்ளதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். கடனைத் திருப்பிக் கொடுத்தலையும், முதலீடு செய்வதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.
நாம் மேலே 12 வீடுகளின் முக்கியமான காரகத்துவங்களை மட்டும் பார்த்தோம். இது ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குப் பயன் படும். இந்த ஆரம்ப கட்டத்தைக் கடந்தவர்கள் "பிருஹத் ஜாதகம்", "பலதீபிகை", "உத்திரகாலாம்ருதம்" ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான் ஜோதிட அறிவு விருத்தியாகும்.

செவ்வாய்

) எல்லாவிதமான சுப காரியங்களுக்கும் முக்கியமானவர் செவ்வாய் (மங்கள காரகன்). 

2) காலபுருஷனுக்கு 1, 8 ஆம் பாவத்திற்கு ஆதிபத்தியம் பெற்றவர் செவ்வாய், 1ஆம் பாவம் உயிரைக் குறிப்பது, 8 ஆயுளை குறிப்பது. ஒருவர் ஆயுள் முழுவதும் தேவையான கிரகம் செவ்வாய்.

3) மங்களன் 

4) சகோதர சகோதரிக்கு காரகத்துவம் பெற்றவர் (இளைய சகோதரம்).

5) செவ்வாய் சுக்கிரன் தொடர்பு கொண்டால் சுபநிகழ்ச்சிகள் நன்றாக இருக்கும்.

6) தடை கிரகங்கள், திதி சூனியம், பாதகாதிபதி போன்றவர்களுடன் தொடர்பு கொண்டால் சுப காரியத்தில் தடை இருக்கும். சுப காரியங்கள் நடந்து முடியும்வரை பிரச்சினைகள் இருக்கும்.

உதாரணமாக,
Ø  செவ்வாய் சனி சேர்க்கை, சொத்து அமைவதில் தாமதம், திருமணத்தடை, திருமணத்தின் போது ஒரு விபத்து அல்லது ஒரு கர்மம்.
Ø  திருமணம் முடியும் வரை பயம் இருக்கும் 
Ø  இருவரின் குடும்பத்திலும் ஒருவர் சம்பந்தம் இல்லாமல் திருமணவேலை நடக்கும்.
Ø  காதல் திருமணங்களை தருகின்றது

7) ரத்தம் 
Ø  செவ்வாய் சனி சம்பந்தம் ரத்தத்தில் பிரச்சினைகள் உண்டு, ரத்ததானம் செய்ய முடியாது.
Ø  செவ்வாய் குரு சம்பந்தம் ரத்த தானம் செய்வார்கள் (குரு - தானம்)

8) பாதுகாப்பு உறுப்புகள்.
Ø  பாதுகாப்புக்காக பயன்படும் உறுப்புகள் அனைத்தும் செவ்வாய் காரகத்துவம் பெற்றவைகள் 
Ø  மூளையை பாதுகாப்பது மண்டை ஓடு, மண்டை ஓடு செவ்வாய் காரகத்துவம்.
Ø  இதயத்தை பாதுகாப்பது எலும்புக்கூடு, எலும்புக்கூடு செவ்வாய் காரகத்துவம்.
Ø  கண்ணைப் பாதுகாப்பது கண் இமை, கண் இமை செவ்வாய் காரகத்துவம்.
Ø  போலீஸ் ராணுவம் காவலர்கள் மக்களை பாதுகாப்பவர்கள் இவர்கள் செவ்வாய் காரகத்துவம் பெற்றவர்கள்.
Ø  வீட்டை பாதுகாக்க போடும் சுற்றுசுவர் (காம்பவுண்ட் சுவர்) செவ்வாய் காரகத்துவம் பெற்றது. 
Ø  தலையை பாதுகாக்க அணியும் ஹெல்மெட் செவ்வாயின் காரகத்துவம் பெற்றது.

Ø  செவ்வாய் சனி சேர்க்கை, வீட்டில் பாதுகாப்பு இருக்காது.
Ø  செவ்வாய் கேது சேர்க்கை, இவர்கள் சம்பந்தப்பட்ட பாவக உறுப்புகளில் பாதிப்பு இருக்கும்.

9) பற்கள்

Ø  செவ்வாய் குரு சேர்க்கை மற்றும் செவ்வாய் சூரியன் சேர்க்கை தங்கப்பல் கட்டுவார்கள்.
Ø  செவ்வாய் சனி சேர்க்கை சொத்தைப்பல், வெட்டுப்பல், பற்களில் கரை படுத்தல்.
Ø  செவ்வாய் கேது பல்லுக்கு இடுக்கில் பல் முளைப்பது.
Ø  செவ்வாய் ராகு ஒழுங்கற்ற பல்வரிசை.
Ø  செவ்வாய் சந்திரன் இரண்டு முறை பல் விளக்குதல்

10) புருவம்

Ø  செவ்வாய் சனி சேர்க்கை புருவத்தில் முடி நரைக்கும்.

11) கரடுமுரடான பாதை 
Ø  நான்கில் செவ்வாய் இருந்தால் வீட்டுக்கு செல்லும் பாதை கரடு முரடாக இருக்கும். 
Ø  பத்தில் செவ்வாய் இருந்தால் தொழில் செய்யும் இடத்தில் கரடுமுரடான பாதையில் இருக்கும்.
Ø  பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் கரடுமுரடான பாதைகளில் சாதாரணமாக நடந்து செல்வார்.

12) நிலத்துக்கு காரகன் 
Ø  செவ்வாய் நீர்கிரகங்களுடன் சம்பந்தம் பெற்றால் (குரு சந்திரன் சுக்கிரன்) நிலத்தில் நீர் வளம் நன்றாக இருக்கும். 
Ø  செவ்வாய் சனி சம்பந்தம் பெற்றால் நிலத்தடி நீர் மிகவும் ஆழத்தில் இருக்கும்.
Ø  செவ்வாய் ராகு சம்பந்தம் பெற்றால் இடம் அகலமாக இருக்கும் மெயின் ரோட்டில் அருகில் இருக்கும்.
Ø  செவ்வாய் கேது சம்பந்தம் பெற்றால் மாற்று மதத்தவர் வாழும் பகுதியில் வீடு இருக்கும், குறுகிய இடமாக இருக்கும் பாகம் பிரிக்க முடியாது.
Ø  செவ்வாய் சனி சேர்க்கை சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் அல்லது சுடுகாட்டுக்கு அருகில் வீடு அமையும்.

13) சீருடை பணி உத்தியோக காரகன் 

Ø  செவ்வாய் சனி வேலையில் (promotion) புரமோஷனுக்கு தடை.
செவ்வாய் கேது உத்யோகத்தில் புரமோஷனுக்காக (promotion) வழக்குகள் தொடர்வார்கள்.

14) பூச்செடிகள்

15) வேலி முள் (முற்செடிகள்)

Ø  நான்கில் செவ்வாய் சனி சம்பந்தம் பெற்றால் நிலத்தில் அல்லது வீட்டில், காலிமனையில் வேலிமுள்  முளைக்கும், செவ்வாய் தனித்து இருந்தாலும் இதே பலன்தான்.

16) செம்மண்.

17) கலகக்காரர்கள் / சண்டைக்காரர்கள்.

Ø  நான்கில் செவ்வாய் இருந்தால் வீட்டருகே சண்டைக்காரர்கள் இருப்பார்கள்.
Ø  நான்கில் செவ்வாய் குரு சேர்க்கை இருந்தால் சண்டை நாகரிகமாக இருக்கும்.
Ø  நான்கில் செவ்வாய் ராகு சேர்க்கை இருந்தால் வீட்டருகே குடிகாரர்களின் சண்டை இருக்கும்.
Ø  செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் ரோட்டில் சண்டை போடுவார்கள்.
Ø  செவ்வாய் கேது இருந்தால் சண்டையால் வழக்குகள் உண்டு.
Ø  செவ்வாய் சந்திரன் இருந்தால் வெறும் வாய் சண்டை மட்டும்தான்

18) வாக்குவாதம்.

Ø  வாக்குவாதம் செய்யும் இருவருக்கும் செவ்வாய் கெட்டு இருந்தால் சண்டை வளரும்.
Ø  வாக்குவாதம் செய்யும் இருவருக்கும் செவ்வாய் குரு சம்பந்தம் பெற்று இருந்தால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவார்கள்.

19) தைரியம் 

20) வீரம் 

21) விடா முயற்சி






22) வெற்றிக்கு காரகன்

கீழ்கண்ட அமைப்புகள் இருப்பவர்கள் முயற்சியில் வெற்றி அடைவார்கள்
Ø  லக்னம் அல்லது லக்னாதிபதிக்கு செவ்வாய் சம்பந்தம் இருக்க வேண்டும்.
Ø  லக்னத்திற்கு முன்னும் பின்னும் அல்லது லக்னத்தில் செவ்வாய் இருப்பது நன்று
Ø  செவ்வாய் நட்சத்திரத்தில் கிரகங்கள் இருக்க வேண்டும் ஒன்று அல்லது இரண்டு கிரகங்கள். 

Ø  செவ்வாயின் சாரத்தில் நிறைய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல. தற்கொலை எண்ணம், தற்கொலை முயற்சிகள் உண்டு (காலபுருஷனுக்கு 8-க்கு அதிபதியாக வருவதால்). செவ்வாய் மங்கள காரகன் ஆக ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் செவ்வாயின் சாரத்தில் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை கொடுத்துவிடுவார் 

23) கூர்மையான (SHARP) / நுணுக்கம்

Ø  ஐந்தில் செவ்வாய் இருந்தால் புத்திக்கூர்மை உடையவர்கள்.
Ø  லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் கூர்மையான எண்ணம் கொண்டவர், நேரம் தவறாதவர்.
Ø  இரண்டில் செவ்வாய் இருந்தால் கூர்மையான பார்வை, பேச்சில் கூர்மை இருக்கும்.

24) ஆயுதங்கள் (WEAPONS) 

Ø  செவ்வாய் சனி, செவ்வாய் கேது சேர்க்கை இருந்தால் ஆயுதங்கள் பராமரிப்பின்றி இருக்கும்.
லக்னத்தில் செவ்வாய் ஜாதகரிடம் ஒரு ஆயுதம் இருக்கும்.




25) துப்பாக்கி

Ø  செவ்வாய் சனி சேர்க்கை கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பார்கள்.
Ø  செவ்வாய் கேது சேர்க்கை இரகசிய துப்பாக்கி வைத்திருப்பார்கள்.
Ø  செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பார்கள்

26) வேட்டைக்காரன்

Ø  ஐந்தில் செவ்வாய் இருந்தால் தாத்தா வகையில் வேட்டைக்காரன் இருப்பார்கள், வேல்கம்பு வைத்திருப்பார்கள்.
Ø  செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றிருந்தால் கரி (சிக்கன் மட்டன்) வெட்டும் கத்தி வைத்திருப்பார்கள்.
Ø  செவ்வாய் சந்திரன் இருந்தால் ஆயுதமே இருக்காது.

27) வெடிபொருட்கள்

Ø  செவ்வாய் சனி அல்லது செவ்வாய் சூரியன் சேர்க்கைகள் இருந்தால் பாறைகளை வெடிக்க வைக்கும் வெடி பொருட்கள்.
Ø  செவ்வாய் சனி சேர்க்கைகள் இருந்தால் கிணறு தோன்ட பயன்படும் வெடி பொருட்கள் (கண்ணி வெடி) 

28) முன்கோபம்

29) விபத்து 
Ø  செவ்வாயை எந்த கிரகங்களும் பார்க்கவில்லை என்றால் விபத்து நடக்கும் பொழுது பக்கத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்

30) முகப்பரு 

31) மருந்துகள் 
Ø  அறுவை சிகிச்சை சம்பந்தமான மருந்துகளை குறிக்கும்




32) மின்சாரம்

Ø  செவ்வாய் சனி சேர்க்கைபெற்று நீர் ராசியில் அல்லது நான்காம் பாவத்தில் இருக்க இவர்களோடு ராகுல் தொடர்பு கொண்டால், அறுந்து கிடக்கும் மின்சார ஒயரை மிதித்து விபத்து மற்றும் மரணம் ஏற்படும். ஈரக்கையோடு மின்சாரத்தை தொட்டு விபத்து அல்லது மரணம் ஏற்படும்.
Ø  செவ்வாய் குரு சேர்க்கை பெற்றால் உயர் மின்னழுத்த மின்சாரங்களை குறிக்கும்

33) மோட்டார் இன்ஜின்

Ø  செவ்வாய் சூரியன் அல்லது செவ்வாய் குரு சேர்க்கை இருந்தால் விலை உயர்ந்த, நல்ல நிறுவனங்கள் கொண்ட எஞ்சின்கள் அமையும்.
Ø  செவ்வாய் சனி அல்லது செவ்வாய் கேது சேர்க்கை பெற்றால் பழைய இன்ஜின்கள் பராமரிப்பற்ற எஞ்சின்கள் அமையும்.

34) இஞ்சி 

35) வெள்ளைப்பூண்டு 

36) வத்தல்

37) நாய்கள் 

38) கசாப்புக்கடை 

39) மரக்கடை 

40) சாப்பாட்டு புலி

41) நகம் 
Ø  சனி செவ்வாய் சேர்க்கை இருந்தால் நகத்தில் அழுக்கு சேரும்.


42) மீசை

Ø  செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் நரைத்த மீசை
Ø  செவ்வாய் கேது சேர்க்கை இருந்தால் ஹிட்லர் மீசை சிறிய மீசை 
Ø  செவ்வாய் ராகு சேர்க்கை இருந்த முறுக்கு மீசை / பெரிய மீசை.
Ø  செவ்வாய் சந்திரன் தொடர்பு இருந்தால் ஒட்டு மீசை அல்லது போலி மீசை.

43) துணிந்த செயல்கள் 

Ø  ஆஞ்சநேயர் துணிந்து இலங்கை சென்று சீதையை கண்டு வந்தார் செவ்வாயின் அதிக காரத்துவங்கள் பெற்றவர் ஆஞ்சநேயர்.

44) மதிக்காத தன்மை 

Ø  செவ்வாய் ஜாதகத்தில் பலம் குறைந்தாலும் அல்லது செவ்வாய் சனி, செவ்வாய் கேது சேர்க்கை பெற்றாலோ அல்லது திதிசூன்ய பாதிப்பு அடைந்தாலோ மற்றவர்களை ஜாதகர் மதிக்கமாட்டார் அல்லது மதிக்கும் தன்மை குறைவு.

45) பிடிவாதம்

Ø  செவ்வாய் சுப கிரகங்களுடன் தொடர்பு பெற்று வலுப்பெற்றிருந்தால் பிடிவாதங்கள் குறைவு.
Ø  செவ்வாய் அசுப  கிரகங்களுடன் தொடர்பு பெற்றால், திதிசூன்ய பாதிப்பு அடைந்தாலோ ஜாதகருக்கு பிடிவாதம் அதிகம்

46) வெறித்தனம்

47) துன்புறுத்தி பேசுதல்

48) தன்னம்பிக்கை

49) தேவையற்ற பேச்சு (வெட்டிப்பேச்சு)

Ø  செவ்வாய் சந்திரன் அல்லது  செவ்வாய் சனி அல்லது செவ்வாய் கேது சம்பந்தம் ஏற்பட்டு, சேர்க்கை ஏற்பட்டு செவ்வாய் நீசமாகி, செவ்வாய் பலம் குறைந்தால் தேவையற்ற பேச்சு பேசுவார்கள் வெட்டிப்பேச்சு பேசுவார்கள்.

50) முரட்டுத்தனமான கல்வி 

Ø  விளையாட்டு கல்வி பாதுகாப்பு கலைகள் குறித்த கல்வி போன்றவைகளைக் குறிக்கும்.

51) முரட்டுத்தனமான காதல் 

Ø  செவ்வாய் புதன் சேர்க்கை முரட்டுத்தனமான காதலை கொடுக்கும்

52) குத்துச்சண்டை 

53) தேங்காய் 

Ø  செவ்வாய் சந்திரன் சேர்க்கை பெற்றவர்கள் தேங்காய் சட்னியைத் விரும்பி சாப்பிடுவார்கள்.
Ø  செவ்வாய் புதன் சேர்க்கைப் பெற்றால் சாம்பாரை விரும்பி சாப்பிடுவார்கள்.

54) சிற்பக்கலை 

55) ஓவியர் 

56) சமையல்காரர் 

57) கொல்லம் பட்டறை

58)  சிலம்பாட்டம் 

59) கொலைப்பழி 
Ø  செவ்வாய் சனி மாந்தி மூவரும் தொடர்பு பெற்றால் கொலைப்பழி நிச்சயம் உண்டு.

60) தலைமை ஆசிரியர் 

Ø  சூரியன் செவ்வாய் சேர்க்கை பெற்றால் அப்பா அல்லது மாமனார் ஆசிரியர்.
Ø  இரண்டில் அல்லது லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் ஆசிரியர்.

61) பதுக்கி வைத்தல் 

62) மருமகன் அல்லது மருமகள்  

63) ஜமீன்

64) தற்கொலை 

Ø  செவ்வாய் மூன்றாம் பாவம் அல்லது எட்டாம் பாவத்திற்கு சம்பந்தம் பெற்றால் தற்கொலை எண்ணம் உண்டு.

65) நெருப்பு மிக்க தொழில்கள்

66) டீ கடை 

67) பேக்கரி 

68) முடி வெட்டும் கடை 

69) வெல்டிங் ஷாப் (Welding Shop)







70) இயந்திரம் 

Ø  செவ்வாய் சந்திரன் அல்லது செவ்வாய் சனி சேர்க்கை பெற்றவர்கள் அதிக தொகை கொடுத்து இயந்திரங்களை வாங்க கூடாது.
Ø  செவ்வாய் குரு சேர்க்கை பெற்றவர்கள் அதிக விலை கொடுத்து இயந்திரங்களை வாங்கலாம் பயன்தரும்.

71) கட்டுமஸ்தான உடம்பு 

Ø  செவ்வாய்-சனி சேர்க்கை அல்லது செவ்வாய் கேது சேர்க்கை இருந்தால் உடம்பை கட்டுமஸ்தாக வைக்க முடியாது.

72) செவ்வாய் சனி அல்லது செவ்வாய் கேது அல்லது செவ்வாய் ராகு மற்றும் செவ்வாய் சந்திரன் சேர்க்கை பெற்றால் செவ்வாயின் தன்மைக்கு சுமாரான பலன்களே கிடைக்கும்

73) செவ்வாய் குரு அல்லது செவ்வாய் சுக்கிரன் அல்லது செவ்வாய் புதன் அல்லது செவ்வாய் சூரியன் போன்ற சேர்க்கைகள் பெற்றால் செவ்வாயின் சுபத்தன்மை நல்ல பலன்களை கொடுக்கும்.

74) கேதுவோ அல்லது சனியோ செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்தால் செவ்வாயின் காரகத்துவங்கள் பாதிப்படைகின்றது.

75) செவ்வாய், கேதுவின் நட்சத்திர சாரத்திலோ அல்லது சனியின் நட்சத்திர சாரத்திலோ அமர்ந்தால் செவ்வாயின் காரகத்துவங்கள் பாதிப்படைகின்றன.