Saturday, 31 August 2019

சூரியன் + சுக்கிரன் கிரக சேர்க்கை... பார்வை பலன்கள்..... இவ்விரண்டும் பகை கிரகங்கள்....

பிறப்பு ஜாதகத்தில் ...
சூரியன் + சுக்கிரன் கிரக சேர்க்கை... பார்வை பலன்கள்.....
இவ்விரண்டும் பகை கிரகங்கள்....
எனவே ஜாதகருக்கு அப்பா... மனைவி... இருவர் மீதும் ஈடுபாடு இருக்காது....
அப்பா சொகுசான நபராகவும்.. பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுபவராகவும்.... தன்னுடைய தேவைக்கான பண புழக்கம் உடையவராகவும் இருப்பார்.
மனைவி கர்வம் பிடித்தவராகவும்... வெளிப்படையாக பேசக் கூடியவராகவும்.... எந்த இடத்தில் எதைப் பேசக் கூடாதோ... அதை பேசுபவராககவும்...இருப்பார்...
மேலும் நல்ல நிர்வாகத் திறமை உள்ளவராகவும இருப்பார்.
சுக்கிரனுக்கு பகை என்பதால் அவர்களின்(மனைவியின்) நிர்வாகத்திலும்... வெளிப்படைத் தன்மைலும்.... சில குறைபாடுகளும், குற்றங்களுக்கும், இருக்கும்.
சூரியன் என்பது தொடர்ந்து இயங்குவது. .. சுக்கிரன் என்பது காமத்தை குறிக்கும்..... அப்போ ஜாதகர் காமத்தில் தொடரந்து ஈடுபட்டு.... உடல் நிலையை கெடுத்துக் கொள்வார்(சுய இன்பம்)....
ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் பெரிய சந்தோஷம் இருக்காது....
சுப பிரிவாக அதாவது வேலை தொழில் விஷயமாக அடிக்கடி குடும்பத்தை பிரிந்து இருப்பது நன்மை தரும்.
திருமணத்துக்கு முன்பே சிற்றின்ப நாட்டம் உடையவராக இருப்பார்...
இளம் வயதிலேயே வீரிய குறைபாடு உள்ளவராக இருப்பார். ஜாதகர் மனைவியுடன் ஈடுபாடு இல்லாமல் மற்ற பெண்களுடன் ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்....
இருக்க வாய்ப்பு உண்டு. ஜாதகருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்க வாய்ப்புண்டு
போக ஸ்தானங்களாகிய 3 , 7, 11 இவற்றில் சூரியன் சுக்கிரன் கிரகங்கள் சேர்ந்து இருப்பது ஜாதகர் காமத்தில் கட்டுப்பாடு இல்லாதவராக இருப்பார்.....
காமத்தில் ஈடுபடும் போது விரைவில் விந்து நீர்த்துவிடும்.... சுய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பார்....
பெண்களுக்கு இந்த கிரக சேர்க்கை இருந்தால் நிர்வாக திறமை இருக்கும்... உடம்பில் வெப்பம் தொடர்பான நோய் சிறிய அளவாக இருந்து கொண்டே இருக்கும்....
தந்தை அல்லது மாமனார் உடன் இல்லாமல் அருகிலேயே தனிக்குடித்தனம் இருப்பது நல்லது.
சுக்கிரன் சூரியன் டிகிரி இடைவெளி வித்தியாசம் 42 இருந்தாலோ (பொது இருபாலருக்கும்) 4சுக்கிரன் சூரியன் டிகிரி இடைவெளி வித்தியாசம் 5 ஆக இருந்து மகா அஸ்தங்கம் ஆகி இருந்தாலும் (பொது இருபாலருக்கும்) விந்தனு இயக்க கோளாறு (Mobility issues) விந்தனு நீர்த்துப்போதல் பிரச்சனைகள் வரும்... சுக்கிலம் என்றால் வெள்ளை என பொருள்படும் ஆண் உறுப்பில் சுரக்கும் திரவம்.... அதன் அதிபதி சுக்கிரன்..... ஜாதகத்தில் சுக்கிரன் கெட தாம்பத்தியம் பாதிக்கும்.
(ஆணின் களத்திரகாரகன் சுக்கிரன்.... பெண்ணின் களத்திர காரகன் செவ்வாய்.... களத்திரம் என்றால் கலவி என்ற பொருளும் உண்டு.)
இதற்கு பரிகாரமாக குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியம்.
இவர்கள் குலதெய்வம் பெண் தெய்வமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்...
பெண்கள் சுமங்கலி பூஜை வழிபாடு செய்வது மிக மிக உத்தமம்.
மேலும்..... இது பொதுவான பலன்களே.... அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
வக்கர கதியில்...
சூரியனுடன் நெருங்கி அஸ்தமன பாகையில்...
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை..

No comments:

Post a Comment