சம்பத் [எ] சண்முகராஜ்

Saturday, 31 August 2019

சூரியன் + சுக்கிரன் கிரக சேர்க்கை... பார்வை பலன்கள்..... இவ்விரண்டும் பகை கிரகங்கள்....

பிறப்பு ஜாதகத்தில் ...
சூரியன் + சுக்கிரன் கிரக சேர்க்கை... பார்வை பலன்கள்.....
இவ்விரண்டும் பகை கிரகங்கள்....
எனவே ஜாதகருக்கு அப்பா... மனைவி... இருவர் மீதும் ஈடுபாடு இருக்காது....
அப்பா சொகுசான நபராகவும்.. பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுபவராகவும்.... தன்னுடைய தேவைக்கான பண புழக்கம் உடையவராகவும் இருப்பார்.
மனைவி கர்வம் பிடித்தவராகவும்... வெளிப்படையாக பேசக் கூடியவராகவும்.... எந்த இடத்தில் எதைப் பேசக் கூடாதோ... அதை பேசுபவராககவும்...இருப்பார்...
மேலும் நல்ல நிர்வாகத் திறமை உள்ளவராகவும இருப்பார்.
சுக்கிரனுக்கு பகை என்பதால் அவர்களின்(மனைவியின்) நிர்வாகத்திலும்... வெளிப்படைத் தன்மைலும்.... சில குறைபாடுகளும், குற்றங்களுக்கும், இருக்கும்.
சூரியன் என்பது தொடர்ந்து இயங்குவது. .. சுக்கிரன் என்பது காமத்தை குறிக்கும்..... அப்போ ஜாதகர் காமத்தில் தொடரந்து ஈடுபட்டு.... உடல் நிலையை கெடுத்துக் கொள்வார்(சுய இன்பம்)....
ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் பெரிய சந்தோஷம் இருக்காது....
சுப பிரிவாக அதாவது வேலை தொழில் விஷயமாக அடிக்கடி குடும்பத்தை பிரிந்து இருப்பது நன்மை தரும்.
திருமணத்துக்கு முன்பே சிற்றின்ப நாட்டம் உடையவராக இருப்பார்...
இளம் வயதிலேயே வீரிய குறைபாடு உள்ளவராக இருப்பார். ஜாதகர் மனைவியுடன் ஈடுபாடு இல்லாமல் மற்ற பெண்களுடன் ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்....
இருக்க வாய்ப்பு உண்டு. ஜாதகருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்க வாய்ப்புண்டு
போக ஸ்தானங்களாகிய 3 , 7, 11 இவற்றில் சூரியன் சுக்கிரன் கிரகங்கள் சேர்ந்து இருப்பது ஜாதகர் காமத்தில் கட்டுப்பாடு இல்லாதவராக இருப்பார்.....
காமத்தில் ஈடுபடும் போது விரைவில் விந்து நீர்த்துவிடும்.... சுய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பார்....
பெண்களுக்கு இந்த கிரக சேர்க்கை இருந்தால் நிர்வாக திறமை இருக்கும்... உடம்பில் வெப்பம் தொடர்பான நோய் சிறிய அளவாக இருந்து கொண்டே இருக்கும்....
தந்தை அல்லது மாமனார் உடன் இல்லாமல் அருகிலேயே தனிக்குடித்தனம் இருப்பது நல்லது.
சுக்கிரன் சூரியன் டிகிரி இடைவெளி வித்தியாசம் 42 இருந்தாலோ (பொது இருபாலருக்கும்) 4சுக்கிரன் சூரியன் டிகிரி இடைவெளி வித்தியாசம் 5 ஆக இருந்து மகா அஸ்தங்கம் ஆகி இருந்தாலும் (பொது இருபாலருக்கும்) விந்தனு இயக்க கோளாறு (Mobility issues) விந்தனு நீர்த்துப்போதல் பிரச்சனைகள் வரும்... சுக்கிலம் என்றால் வெள்ளை என பொருள்படும் ஆண் உறுப்பில் சுரக்கும் திரவம்.... அதன் அதிபதி சுக்கிரன்..... ஜாதகத்தில் சுக்கிரன் கெட தாம்பத்தியம் பாதிக்கும்.
(ஆணின் களத்திரகாரகன் சுக்கிரன்.... பெண்ணின் களத்திர காரகன் செவ்வாய்.... களத்திரம் என்றால் கலவி என்ற பொருளும் உண்டு.)
இதற்கு பரிகாரமாக குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியம்.
இவர்கள் குலதெய்வம் பெண் தெய்வமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்...
பெண்கள் சுமங்கலி பூஜை வழிபாடு செய்வது மிக மிக உத்தமம்.
மேலும்..... இது பொதுவான பலன்களே.... அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
வக்கர கதியில்...
சூரியனுடன் நெருங்கி அஸ்தமன பாகையில்...
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை..
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 01:21 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, 23 August 2019

பதினொன்றாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் பலன்

பதினொன்றாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் பலன்
1)இலாபாதிபதி சுபக்கிரகமாகி லக்கினத்தில் இருந்தால் பொருள் சேர்க்கையும்,கால்நடைகளுக்கு அதிபதயாக இருப்பர்கள்.
2) இலாபாதிபதி இரண்டில் இருந்தால் பொருட் சேர்க்கையும், அன்புடையவர்கள், குடுபத்தின் மீது பிரியாம் உள்ளவர்கள், வாகன யோகம் உடையவர்கள்.
(பிறநூல்களில் பாவக்கிரகமாகி இரண்டில் இருந்தால் திருட்டுப்புத்தியுள்ளவர்கள்)
3) இலாபாதிபதி மூன்றில் இருந்தால் சுபயோகம் பெற்றிருந்தால் சகோதரனால் நன்மையும், அதிக வேலையாட்கள் உள்ளவர்கள்.
(பிறநூல்களில் சொத்துடன் அன்புடையவர்கள்)
4) இலாபாதிபதி நான்கில் இருந்தால் தந்தையின் செல்வத்தை அடைவர்கள், தந்தையின் அன்புக்குறியவர்களாக இருப்பர்கள்.
5) இலாபாதிபதி ஐந்தில் இருந்தால் புத்திர்களால் நன்மையும், கல்வியறிவும், மந்திர/யந்திர/தந்திர சாஸ்திரங்களில் வல்லமையுள்ளவர்கள்.
6) இலாபாதிபதி ஆறில் இருந்தால் திருடர்களால் தொல்லை ஏற்படும், பயம் உண்டாகும்,மாமன் சுகயோகமுடன் வாழ்வர்கள், மனைவியால் பொருள் சேர்க்கை ஏற்படும்.
7) இலாபாதிபதி ஏழில் இருந்தால் பெண்களால் ஆதாயம் கிடைக்கும், கணவன் & மனைவி அன்னியோன்னியம் ஏற்படும்.

8) இலாபாதிபதி எட்டில் இருந்தால் லாபம் குறையும், முயற்ச்சியில் சம்பாத்தியம் ஏற்படும், இவர்களின் தசையில் நோய் பாதிப்பை தருவர்கள், சுபர்கள் தொடர்பிருந்தால் நோய் பாதிப்பு குறையும்.
9) இலாபாதிபதி ஒன்பதில் இருந்தால் அனேக விதங்களில் லாபம் உண்டாகும், தர்மவானும்,ஒழுக்கமுடைவர்கள்,புகழுடையவர்கள், சுகபோக வாழ்கை அமையும்.
(பிறநூல்களில் வேதசாஸ்திரங்களில் பண்டித்தியம், கடவுள் பக்தி, குரு பக்தி உடையவர்கள்)
10) இலாபாதிபதி பத்தில் இருந்தால் தந்தையின் செல்வங்களை அடைவர்கள், அரசாங்கத்தால் நன்மையும்,பல விதங்களில் சம்பாத்தியம் பொறுவர்கள்.
11) இலாபாதிபதி பதினொன்றில் இருந்தால் கால்நடைகளால் லாபமும், பல வேலைக்காரர்கள் இருப்பர்கள், செல்வ வளமையுள்ளவர்கள்.
12) இலாபாதிபதி பன்னிரண்டில் இருந்தால் குறைவன லாபமும், பெருமுயற்சியால் பொருளீட்டுவர்கள்,பொருள் நிலைத்திருக்காது

Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 22:23 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, 20 August 2019

பத்தாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் பலன்

பத்தாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் பலன்
1)தசமாதிபதி லக்கினத்தில் இருந்தால் ஜாதகருக்கும் தாயருக்கு மனஸ்தாபம் ஏற்படும். தந்தையின் ஆதாரவு கிடைக்கும், பாவக்கிரகமாக இருந்தால் தந்தையால் பாதிப்பு ஏற்படும்.தலைமைப் பொருப்பு கிட்டும், (மற்ற கிரகங்கள் தொடர்பின் நிலைக்கு ஏற்ப எந்த துறை அமையும் ஆராய்ந்து கூறவும்)
2) தசமாதிபதி இரண்டில் இருந்தால் அரசு வகையில் ஆதாயம் கிட்டும், தாயர் அதிக செலவினம் செய்வர்கள்,சிறிய கிரமத்தில் வாசிப்பர்கள்.
3) தசமாதிபதி மூன்றில் இருந்தால் தாய்,சகோதரர், உற்றார்&உறவினர் விரோதம் ஏற்படும் , இராஜசேவை செய்வர்கள், சுபகிரகமாக இருந்தால் சகோதரர்களுக்கு நன்மைகள் செய்வர்கள்.
4) தசமாதிபதி நான்கில் இருந்தால் தாய்&தந்தையர்களை பாதுகப்பர்கள், அரசாங்கவருவாய் உள்ளவர்கள், புகழுடையவர்கள்.
5) தசமாதிபதி ஐந்தில் இருந்தால் சுப காரியங்களை செய்வர்கள், சங்கீத ஞானம் உள்ளவர்கள், அரசாங்கத்தால் லாபம் அடைவர்கள்.
6) தசமாதிபதி ஆறில் இருந்தால் எதிரிகள் இருப்பர்கள், அதிக செலவினம் செய்வர்கள், மனசஞ்சலம் ஏற்படும்,
(பிற நூல்களில் தொழில் வகையில் பாதிப்பும், அரசு வகையில் பாதிப்பும், விண்வாதம் செய்வர்கள், அதிர்ஷ்டம் குறையும் )
7) தசமாதிபதி ஏழில் இருந்தால் மனைவி நல்லொழுக்கம் உடையவர்கள் அழகும்,நற்குணம் உள்ளவர்கள், செல்வ வளமை உள்ளவர்கள், நற்காரியங்கள் செய்வர்கள்.
8) தசமாதிபதி எட்டில் இருந்தால் எப்பொழுதும் நோய் பாதிப்பைத் தரும், வாதபித்தத்தால் பாதிப்பு வலப்பக்கம் ஏற்படும், தொழில் வகையில் தொல்லை ஏற்படும்.
(பிற நூல்களில் தீய எண்ணமுள்ளவர்கள்,தாயைப்பற்றி கவலையுள்ளவர்கள்,செல்வ வளமை குறையும்)
9) தசமாதிபதி ஒன்பதில் இருந்தால் உண்மையைக் கூறுவர்கள், தாய்தந்தையரிடம் அன்புள்ளவர்கள்,செல்வ வளமையுள்ளவர்கள்.
10) தசமாதிபதி சுபனாகி பத்தில் இருந்தால் அதிகாரம் உள்ள உத்தியோகம் அமையும், தலைமை பொருப்பு கிட்டும்.
(பிறநூல்களில் புத்திசாலி, சாமர்த்தியசாலி, தலைமைப் பொருப்பும் கிட்டும்)
11) தசமாதிபதி பதினொன்றில் இருந்தால் அரசாங்கத்தால் லாபமும், வெற்றியும்கிட்டும்,மிகப் பெரிய செல்லவ வளமை கிட்டும்.
12) தசமாதிபதி பன்னிரண்டில் இருந்தால் தந்தையின் செல்வம் பாதிக்கும், ஒருகாலத்தில் தெய்வத்தின் அருளால் காதல் திருமணம் ஏற்படும்.
(பிறநூல்களில் பாரக்கிரமசாலி,ராஜசமானகாரியம் செய்வர்கள், தாய் சுகம் இல்லாதவர்கள், வஞ்சிக்கும் குணமிருக்கும்,அன்னியரின் பொருட்களை அனுபவிப்பர்கள், )
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 21:26 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, 18 August 2019

மோகினி வசிய மந்திரம்


No photo description available.

·
மோகினி வசிய மந்திரம்
கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ ....
கணவன் மனைவி ,சண்டை சச்சரவுகள் நீங்க மோகினி மந்திர உபாசனை பெரிதும் துணை புரியும் .காதல் கை கூட ,நினைத்த வரன் அமைய ,நினைத்த பெண்ணை திருமணம் செய்ய இந்த மோகினி வசிய முறை .
மோகினி வசிய யந்திரம் :
மூலமந்திரம் :
ஓம் சிவயநம கிரியும் விரியும்
ஜெகத் மோகனாங்கி வசி வங் சுவாகா
பூஜை முறை :
மேற்கண்ட மோகினி வசிய யந்திரத்தை அமாவாசை நாளன்று யந்திரம் எழுதி பூஜை துவங்க வேண்டும் .மேற்கண்ட மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 15 தினங்கள் பூஜை செய்து பௌர்ணமி அன்று முடியும் வகையில் பூஜை செய்ய வேண்டும்
கணவன் மனைவி வசிய திலகம் :
கணவனை வசியம் செய்ய பெண்களுக்கு மேற்கண்ட மந்திரத்தை ஒரு தாம்பளத்தட்டில் மஞ்சள் அல்லது குங்குமம் பரப்பி மேற்கண்ட யந்திரத்தை ஊதுவத்தியால் எழுத வேண்டும் .எழுதி அதற்கு மூலமந்திரத்தை 1008 உருக்கள் ஜெபித்து அந்த மஞ்சள் அல்லது குங்குமம் நெற்றியில் வைத்தால் வசியமாவார்கள் .
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 07:49 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

திருமணவாழ்வு -10

ஒருவருக்கு அவரது மனைவியே பிரதிநியாக இருப்பாவர் சுக்கின். சுக்கிரனது நிலைக்கு எற்ப்ப மனைவி அமைவாள்.
ஒருவர் மனைவியிடம் நடந்து கொள்ளும் முறையிலே சுக்கிரன் நிலையும் அவ்வரே இருக்கும்.
மனைவியை மோசமாக நடத்துபவர்கள் சுக போக வசதிகள் கிடைக்காது.சுக்கிரன் - லட்சுமி இதனால் தான் பணம் வேண்டும் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
லட்சுமி காடச்ஷமுடன் இருக்க விரும்புகின்றனர்.
உங்கள் மனைவிக்கு மிக அவசிய தேவையான பொருட்களை வாங்கித்தருங்கள். அவர்கள் அகம் மகிழும் போது உங்களாது இல்லமும் செல்வ வளம் லட்சுமி கடஷ்சம் அடைவிர்கள்.
உங்களின் மனைவியின் குணம் சரியாக இல்லை என்றால் உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையும் சரியாக இல்லை.
ஒருவர் மனைவியை நல்ல முறையில் பாதுகாக்கிறார் என்றால் அவராது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பார்.

ஏழில் சுக்கிரன் இருந்தால் மகிழ்சியான திருமணம்.மனைவியின் ஆயுள் குறைவு,செல்வம், செல்வாக்கும் ஏற்படும்.பிறர் தொடர் ஏற்படும். அதி காலை உறவை விரும்புவர்.சிற்றின்ப எண்ணத்திலே இருப்பார்.பல திருமணம் ஏற்படாலம் பெண்களுக்கு பதிப்பை தரும்.
ஏழாம் இடம் ரிஷபம்.துலாம்.மீனம் இவைகளனால் நன்மையுடன் அமையும்.
புகர்ஏழில் நிற்ல்
அதிரூபன் சனமித்ரன் வெகுகாமி கல்வி
பலமில்பரத் திரிகனன் தன்சிந்தை யாகி
பகர்உபய களத்திரமாம் பங்கயப்பெண் ணமுதே
ஏழில் சுக்கிரன் இருந்தால் அழகுடையவன். எல்லேரிடமும்அன்புடன் இருப்பார்கள்.காமவுணர்வு அதிகம்.பிறர் மனைவியோடு உறவு கொள்வான் இருதாரம் அமையும். பிறருக்கு உதவி செய்வார்.
ஏழில் சுக்கிரன் சூரியன் இருந்தால் ஏழாம் அதிபதி பலமுடன் இருந்தால் நலம் தரும். பலவீனமாய் இருந்தால் அஇருதாரவாய்ப்பை தரும். திருமணம் தாமதம் ஏற்படும்.
ஏழில் சுக்கிரன் சந்திரன் இணைந்திருந்தால் திருமணம் நடப்பது சந்தேகம்.நடத்தால் புத்திர பாக்கியம். தடை ஏற்படும்.
ஆரப்பா யின்னமொரு புதுமை கேளு
அம்புலியும் அசுர குரு யேழில் நிற்க
கூறப்பா கிழவனுக்கு மாலையிட்டு
குமரியவள் மதனத்தால் பலரைக் கூடி
சீரப்பா செல்வனையும் பெற்றெடுத்து
சிறப்பாக தொட்டிலிட்டு ஆட்டுவாளாம்
பாரப்பா பார்த்தவர்கள் பிரமிக்கத்தான்
பாங்கியவள் ஸ்தனம்குலுங்க வருவாள் பாரே
சுக்கிரன் செவ்வாய் ஏழில் இருந்தால் பிருகு மங்கள யோகம் ஏற்படும்.பலரை காதலிப்பார்கள் திருமணத்திற்குபின் யோகம் அடைவார்கள்.
சுக்கிரன் குரு இணைந்து ஏழில் இருந்தால் மனைவியால் கஷ்ட நஷ்டங்கள் ஏற்ப்படும்.மனைவி அடங்கி நடப்பார்.சுகபோக வசதிகள் கிடைத்தாலும்.
அனுபவிக்க முடியால் திண்டடுவார்கள்.திருமணம் காலம் கடந்தே நடைபெரும்.
சுக்கிரன் சனி இணைந்து ஏழில் இருந்தால் பெண்களால் கௌரவப் பதிப்பு ஏற்படும்.கணவன் மனைவியிடையே பிறச்சனைகள் ஏற்படும். பெண்கள் ஜாதகத்தில் இருதால் நலம் தரும்.
சுக்கிரன் ராகு,கேது இணைந்து ஏழில் இருந்தால்
திருமணவாழ்வில் பல குழப்பங்களும். கஷ்டங்களும்.நஷ்டங்களும் ஏற்படும்.
ஏழாம் அதிபதியும் சுக்கிரனும் தொடபிருத்தால் மனைவியின் மார்பகம் அழகானதாக இருக்கும்.
ஏழாம் அதிபதியின் நட்சத்திராதி சுக்கிரனால் உடல் உறவில் அதிக இன்பத்தை அனுபவிப்பார்கள். எப்பபோதும் அதே சிந்தனையில் இருப்பார்கள்.
சுக்கிரனுக் முன் பின் ராசியில் சுபர்கள் இருந்தால் வாழ்வில் அனைத்து சுகபோகமுடன் வாழ்வர்கள்.
லக்கினத்தில் உள்ள லக்கினாதிபதியின் பார்வையில் ஏழில் சுக்கிரன் இருந்தால் தனிமையில் மனைவியை மகிழச் செய்ய மாட்டார்.
சுக்கிரன் ராகு இணைந்து ரிஷபம், துலாத்தில் இருந்தால் தாழ்வு மனப்பான்மை, பெண்ணானால் துணையை இளப்பாள், வரம்பு மீரிய செயல்பாடுவர்கள்.
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 01:04 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, 17 August 2019

எட்டாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் பலன்

1)அஷ்டமாதிபதி லக்கினத்தில் இருந்தால் பலவிதமான நோய் பாதிப்பும், விண்வாதங்கள் மேல் செய்வர்கள், அரசுவகையில் தொழில் செய்வர்கள்.

2) அஷ்டமாதிபதி இரண்டில் இருந்தால் ஜாதகர்க்கு ஆயுள் பாதிப்பு தரும், பாவக்கிரகமாகில் தீய காரியங்களை செய்வர்கள், சுபக்கிரகமாகில் நல்ல காரியங்களை செய்வர்கள். 


3) அஷ்டமாதிபதி மூன்றில் இருந்தால் உற்றார் &உறவினர் வகையில் விரோதம் உண்டாகும்,அவப்பெயர் ஏற்படும்,சகோதரர் இல்லாதவர்கள்


4) அஷ்டமாதிபதி நான்கில் இருந்தால் தாய்தந்தைக்கு உடல் நலன் பாதிக்கும், தந்தை வழி செத்துக்கள் பாதிப்படையும்.


(பிற நூல்களில் பிதுர்ராஜித சொத்து நஷ்டமாகும், தந்தைக்கும் ஜாதகனுக்கும் பகை ஏற்படும்)


5)அஷ்டமாதிபதி பாவியாகி ஐந்தில் இருந்தால் இவர்களின் தசையில் புத்திரர்களுக்கு பாதிப்பைத் தரும். அல்லது நோய் பாதிப்பை தரும்.


6) அஷ்டமாதிபதி சூரியனாகி ஆறில் இருந்தால் அரசுவகையில் பாதிப்பு/தண்டனை ஏற்படும், குரு உச்சமுடன் இருந்தால் சுப பலன்கள் தருவர், சுக்கிரனாகில் நன்மைகள் ஏற்படும். 


7) அஷ்டமாதிபதி சந்திரனாகி ஏழில் இருந்தால் பாம்பு அல்லது துஷ்ட ஜெந்துக்களிடம் பழகுவர்கள். புதனாகில் பயமும்,புத்தி தடுமாற்றம் ஏற்படும், சனியாகில் சதாகஷ்டமும், எதிரிகள் நாசமும் ஏற்படும்.
(பிற நூல்களில் தனது இணத்தார்களுக்கு துன்பம் தருவர்கள், தீய காரியங்களை செய்வர்கள், கபடனாக இருப்பர்கள்)

8) அஷ்டமாதிபதி எட்டில் இருந்தால் நோய்கள் இல்லாதவர்கள், முதுமையில் நோய் பாதிப்பு ஏற்படும்.

9) அஷ்டமாதிபதி ஒன்பதில் இருந்தால் தீயவர்களுடன் சேர்வர்கள், பிற உயிர்களுக்கு துன்பம் தருவர்கள் ,சகோதரர் & சுற்றத்தார் இல்லாதவர்கள், மக்களால் நிந்திக்கப்படுவர்கள்.

10) அஷ்டமாதிபதி பாவக்கிரகமாகி பத்தில் இருந்தால் தீய காரியங்களை செய்வர்கள், தாயரின் மீது அன்பில்லாதவர்கள், சோம்பேறியாக இருப்பர்கள்.

11) அஷ்டமாதிபதி சுபக்கிரகமாகி பதினொன்றில் இருந்தால் இளமையில் கஷ்டங்களும், பிறகு சுகவாழ்வு அமையும், நீண்டஆயுள் ஏற்படும், பாவியாகில் சுகவாழ்விற்கு பங்கம் ஏற்படும்.

12) அஷ்டமாதிபதி பாவியாகி பன்னிரண்டில் இருந்தால் தீய எண்ணம் உள்ளவர்கள், அன்பு பாசம் இல்லலாதவர்கள், உடல் உணம் ஏற்படும், மனைவி இல்லாதவர்கள், கண்ட உணவுகளை உண்பர்கள்.

(பிற நூல்களில் அஷ்டமாதிபதி பன்னிரண்டில் இருந்தால் தீய வர்த்தைகள் பேசுவர்கள், திருட்டுசெயல் செயல் செய்வர்கள், பாவக்கிரகமாகில் மாமிசம் உண்ணுவர்கள்.)
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 20:17 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, 13 August 2019

விரைவில் திருமணம் நடக்க ,நல்ல குணமுடைய மனைவி அமைய ஆண்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம்...

1. திருமணத்தடை நீங்க ,விரைவில் திருமணம் நடக்க ,நல்ல குணமுடைய மனைவி அமைய ஆண்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம்:-
ஓம் |பத்நீம் மனோரமாம் தேஹி|| மனோ விருத்தானுசாரிநீம் |தாரிநீம் துர்கசம்சார சாகரஸ்ய குலோத்பவாம்||
மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டு திரியினால் விளக்கேற்றி, இம்மந்திரத்தை குறைந்தது 27 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.
2. நல்ல குணமுடைய மனைவி அமைய, சீக்கிரம் கல்யாணமாக ஆண்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம்:-
ஓம்|கந்தர்வராஜ விச்வாவஸோ ||மமாபிலஷிதாம் கன்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா ||
மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டு திரியினால் விளக்கேற்றி, இம்மந்திரத்தை குறைந்தது 27 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.ஹோமம் செய்து ரக்ஷை கட்டினால் விரைவான பலன் கிட்டும்.
3. துர்கா மந்த்ரம் :-
ஓம்|ஞானினாமபி சேதாம்சி தேவி பகவதி ஹிஸா |
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா பிரயச்சதிஹி ||
ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கித் தினமும் மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டுத் திரியினால் விளக்கேற்றி, இம்மந்திரத்தைக் குறைந்தது 27 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.
4.ஜாதகப்படி தாமதத் திருமண அமைப்புள்ளவர்கள் இந்த மந்திரம் ஜெபித்து வர விரைவில் திருமணம் நிகழும்.
ஓம் |ஹ்ரீம் ஸ்ரீம் த்ராம் த்ரீம் க்லீம் க்லூம் ஜம் ஜம் |
வனாக்யே காமேச்வரி வனதேவதே ஸ்வாஹா||
5. திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகக் கீழ்க்கண்ட மந்திரங்களில் ஒன்றைத் தினமும் 108 முறை கிழக்கு அல்லது மேற்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வரவும்.
ஸ்ரீ கணேஷ மந்திரம் :-
ஓம் |ஸ்ரீகணேஷம் விக்னேஷம் விவாஹார்த்ததே நமஹா ||
வேத மந்திரம்:-
ஓம் யக்ஞோ பவித்ரம் சஹஜம் ரஹத் பிரஜாபதி ஸ்வாஹா ||
6. லக்னம் அல்லது ராசிக்கு 7 ல் சனி,ராகு,கேது கிரகங்கள் அமையப் பெற்றவர்கள் சிவாலயத்தில் உள்ள காலபைரவர் முன் அமர்ந்து "ஓம் ஹ்ரீம் வம் காலபைரவாய நமஹா " என்ற மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவும் மேலும் தேய்பிறை அஷ்டமி அன்று தயிர்சாதம் நிவேதனமும் செய்துவர தோஷத்தால் தடைபட்ட விவாஹம் விரைவில் நிகழும்.
7. அம்மன் குங்கும பரிகாரம்:-
பேரம் பேசாமல் குங்குமம் வாங்கி செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று அம்மன் ஆலயம் சென்று அந்தக் குங்குமத்தை அம்மன் காலடியில்
வைத்து உங்கள் பெயருக்கு விரைவில் திருமணமாக வேண்டும் என்று அர்ச்சனை செய்து அந்தக் குங்குமத்தை அம்மன் பிரசாதமாக வாங்கி வீட்டில் விளக்கு முன் வைத்து கொள்ளவும்.தினமும் குளித்து முடித்ததும் கிழக்கு முகமாய் நின்று அந்தக் குங்குமத்தை வலது கை மோதிர மற்றும் பெருவிரலால் எடுத்து "ஓம் ஹ்ரீம் சிவப்ரியாயை நம" என்று 3 தடவை ஜெபித்துக் குங்குமம் இட்டுக் கொள்ளவும்.விரைவில் திருமணம் நடக்க ஏதுவான சமயம் வாய்க்கும்.
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 21:42 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, 11 August 2019

மாந்தி / குளிகன் சேர்க்கை பலன்கள்

*************************************************************
ஸ்ரீசனீஸ்வரரைப்போல் வல்லமை பெற்றவர்தான் மாந்தி. சனிக்கு நிகரானவர் எனலாம். அதனால் ஜாதகத்தில் மாந்தியின் பலன்களையும் நிர்ணயித்து அறிய வேண்டும். மாந்தி கடிகாரச் சுற்று முறையில் வலம் வரும் கிரகமாகும்.
மகரம், கும்பம் ஆகிய ராசிகளை ஆட்சி வீடாகப் பெற்ற ஸ்ரீசனீஸ்வரரிடமிருந்து கும்ப ராசியை ஆட்சி வீடாகப் பெற்றவர்தான் மாந்தி. இவருக்கு உச்ச வீடு, நீச வீடு இல்லை. மாந்தி தான் அமர்ந்திருக்கும் இடத்தி-ருந்து 2, 7, 12 ஆகிய இல்லங்களைப் பார்ப்பார் என நூல்கüல் கூறப்பட்டுள்ளது.
-
லக்னத்திற்கு 6, 8, 12-ல் சந்திரன் அமர்ந்து ஆவியுலகத் தலைவன் மாந்தி சேர்க்கை பெற்றால், ஜாதகர் துர்ஆவிகüனால் பீடிக்கப்பட்டு மரண வேதனை அடைவார். ஸ்ரீஆஞ்சனேயரை வழிபட்டால் துர்ஆவிகள் விலகும். மாந்தியினால் ஏற்பட்ட தோஷம் விலகும்.
மாந்திக்கு 7-ல் புதன் அமர்ந்து சுபர்களால் பார்க்கப்பட்டால், ஜாதகர் தந்தை செய்த தொழில் மூலம் நிரம்ப வருமானம் பெற்று எல்லா ஐஸ்வர்யங்களுட னும் வாழ்வார்.
ஆண் ஜாதகருக்கு, மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்தால், ஜாதகரின் சகோதரர் தீய பழக்கங்கள் மிகுந்தவராவார். குலப்பெருமை கெடும். அரச தண்டனைக்கு உள்ளாவார்.
-
பெண் ஜாதகத்தில், மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்து ஜென்ம நட்சத்திரம் ரோகிணி என்றால், ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியிராது. வாழ்க்கையில் பெரும் பகுதி போராட்டமாக இருக்கும். பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் துரதிர்ஷ்டமா கும். தோஷம் மிகுதி.
மாந்திக்கு 5-ல் ராகு அல்லது சனி இருந்தால், ஜாதகர் ஆண்மையில்லாதவரா வார். பெண் ஜாதகம் என்றால் பிரசவத்தில் துன்பம் ஏற்படும். பெண் ஜாதகத்தில் செவ்வாய், சூரியனோடு மாந்தி சேர்க்கை பெற்றால் நெறியற்ற வாழ்க்கை வாழ்வாள்.
லக்னத்திற்கு 5, 9-ஆம் இடங்கள் கன்னி, மிதுனம், மகரம், கும்பம் போன்ற ராசிகüல் ஒன்றாக அமைந்து, சனி- மாந்தி சேர்க்கையோ, பார்வையோ 5, 9-ஆம் இடங்களுக்கு ஏற்பட்டால் ஜாதகி மலடியாவாள்.
-
லக்னத்திற்கு 3-ல் சனி உச்சம் பெற்று மாந்தியின் சேர்க்கை பெற்று சுக்கிரன் பார்த்தால், ஜாதகர் பெண் பித்தனாவான். பெண் நோயால் அவதியுறுவான்.
லக்னத்திற்கு 4-ல் கேதுவும் மாந்தியும் சேர்க்கை பெற்றால் மிகுந்த துரதிர்ஷ்ட மாகும். வாழ்க்கையில் எல்லா விஷயங்கü லும் அதிருப்தி காணப்படும். ஒரு இடத்திலும் நிலையாக வாழ முடியாது. நாடோடி போல் வாழ்க்கை அமையும். தாய்க்கும் தோஷமாகும்.
பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 4-ல் மாந்தி நின்றால் புத்திரதோஷம் மிகுதி. கணவன் நோயாü ஆவான். 4-ல் உள்ள மாந்தியுடன் சனி சேர்க்கை பெற்றாலோ பார்த்தாலோ ஜாதகி மிகுந்த துரதிர்ஷ்டசா-. லக்னத்திற்கு 2, 8-ல் சர்ப்ப கிரகங்கள் அமையப் பெற்று மாந்தி சேர்க்கை பெற்றால், நாக தோஷத்தால் மாங்கல்ய தோஷமாகும்
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 22:39 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, 9 August 2019

ஆறாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் பலன்

1)ஷஷ்டாதிபதி லக்கினத்தில் இருந்தால் அதிக கஷ்டங்கள் ஏற்படும், இவரின் தசையில் பொட்கள்,செல்வம் பாதிக்கப்படும்,உற்றார் / உறவினர் பகையும் உண்டாகும்,உடல் பலவீனம் / பயமும் உண்டாகும்.
2) ஷஷ்டாதிபதி இரண்டில் இருந்தால் குடும்பத்தில் சண்டை/சச்சரவு/ கஷ்டங்கள் ஏற்படும், நோய் பாதிப்பும் ,அதிக மருத்துவ செலவீனம் ஏற்படும், எதிரியின் செல்வம் கிட்டும், எதிரிகளால் துன்பம் ஏற்படும்.
3) ஷஷ்டாதிபதி மூன்றில் இருந்தால் சகோதரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும், இவர்களின் திசையில் தந்தையின் மரணம் ஏற்படலாம் அல்லது கௌரவத்திற்கு பங்கம் உண்டாகும்.
4) ஷஷ்டாதிபதி நான்கில் இருந்தால் தந்தை & மகனுக்கும் பகைமை உண்டாகும், முயற்சியின்றி தந்தையின் செல்வம் விரையமாகும்.
5) ஷஷ்டாதிபதி பாவியாகி ஐந்தில் இருந்தால் தந்தை & மகன் இருவருக்கும் விரோதம் உண்டாகும், சுபக்கிரகமாக இருந்தால் பொருட்செல்வம் குறையும்,அதிகம் செலவுகள் செய்வர்கள், பாவிகள் சேர்க்கை & பார்வையிருந்தால் புத்திரர்களால் துன்பம் உண்டாகும்.

(பிற நூல்களில் ஆறாம் அதிபதி சுபக்கிரகமாக இருந்தால் அதிக செல்வ வவளத்தை அடைவர்கள்)
6) ஷஷ்டாதிபதி ஆறில் இருந்தால் பகைவர்கள் சுகமுடையவர்களாக இருப்பர்கள், மாமன் சுகவானாய் வாழ்வர்கள்.
(பிற நூல்கலில் பகைவர்களால் நன்மை உண்டாகும்)
7) ஷஷ்டாதிபதி ஏழில் இருந்தால் மனைவி அதிகமாக பேசுவர்கள், சண்டை சச்சரவு செய்வர்கள், சுபகிரகமாக இருந்தால் புத்திர பாக்கியம் பாதிக்கும்.
8) ஷஷ்டாதிபதி செவ்வாய்யாகி எட்டில் இருந்தால் விபத்து விஷத்தினால் & சனியாகில் கிராணி என்னும் வயிற்றோட்டாம் பாதிப்பும், சூரியனாகில் மிருகங்களால் மரணத்தை ஏற்படுத்தும்.
(ஆறாம் அதிபதி எட்டில் இருந்தால் வயிற்றோட்ம் அல்லது விஷம், பாம்புக்கடி ஆகியவையால் மரணம், சூரியனால் அரசு வகையில், குரு / சந்திரனாகில் கண்ணிற்கும் பாதிக்கும்.)
9) ஷஷ்டாதிபதி பாவியாகி ஒன்பதில் இருந்தால் நாதிகனாகவும், வேதம், புராணம்,சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லதவர்கள் உறவினர்களிடம் பகையுணர்வு உள்ளவர்கள்.
10) ஷஷ்டாதிபதி பத்தில் இருந்தால் தாயருக்கு துன்பத்தை தருவார்கள், தீய நடத்தை,தீய காரியங்களை செய்வர்கள்.
11) ஷஷ்டாதிபதி பதினொன்றில் இருந்தால் பகைவரால் பயமும் அல்லது மரணம் ஏற்படும். திருடர்களால் பொருள் விரையம், விலங்குகளாலும் அரசுவகையில் துன்பமும் ஏற்படும்.
12) ஷஷ்டாதிபதி பன்னிரண்டில் இருந்தால் விபத்து / பிரயாணத்தால் துன்பம் விலங்குகளினால் பொருட்செலவுகள் ஏற்படும்.

Image may contain: 1 person, smiling
31Thiru Malai Astro, Rethina Kumar and 29 others
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 21:16 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Thursday, 8 August 2019

ஐந்தாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் பலன்

ஐந்தாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் பலன்
1)பஞ்சமாதிபதி லக்கினத்தில் இருந்தால் அறிவாளி பண்டித்தியம் பெற்றவர்கள், நல் காரியங்களை செய்வர்கள், இசைஞானம் உள்ளவர்கள், அமைதியனவர்கள் இனியசொல் உள்ளவர்கள்.
2) பஞ்சமாதிபதி பாவக்கிரகமாக இரண்டில் இருந்தால் ஆடம்பரமாக இருப்பர்கள், கஷ்டப்பட்டு பொருள்வருவாய் உண்டாகும்.
3) பஞ்சமாதிபதி மூன்றில் இருந்தால் இனிய பேச்சுடையவர்கள், சகோதரர் / புத்திரர்கள் / புத்திரிகளை பாதுகாப்பாளன், செல்லவ வளமையுடையவர்கள்,
4) பஞ்சமாதிபதி நான்கில் இருந்தால் தந்தையின் தொழிலைச் செய்வர்கள், தாயன்பும், புகழும் உள்ளவர்கள்.
5) பஞ்சமாதிபதி ஐந்தில் இருந்தால் நல்ல அறிவாளியாகவும், தர்மவனாக இருப்பர்கள், புகழ் அடையும் புத்திரர்களை பெறுவர்கள்.
6) பஞ்சமாதிபதி ஆறில் மனைவி நோய்யின் பாதிப்புக்குள்ளவர்கள். வறுமையுள்ளவர்கள்,தம்பதிகளுக்கிடையே அன்னியோன்னியம் குறையும்.

7) பஞ்சமாதிபதி ஏழில் இருந்தால் மனைவி அன்பும்,பன்பும்,நல்ல குணமும், கற்புடையவர்கள்,இனிய பேச்சுடையவர்கள்.
8) பஞ்சமாதிபதி எட்டில் இருந்தால் திருமண வாழ்கை பாதிக்கும், பெண்குழந்தை இருந்தால் நோய்பாதிப்பைத் தரும்.
9) பஞ்சமாதிபதி ஒன்பதில் இருந்தால் சிறந்த கல்வியும்,பணிவும், சங்கீத ஞானம், சாமர்த்தியசாலியாகவும்,அரசு வகையில் ஆதாயம் அடைவர்கள்.
10) பஞ்சமாதிபதி பத்தில் இருந்தால் அரசு வகை ஜீவனம், லாபமும் தாய்கு நீண்ட ஆயுளும், உயர்நிலை உத்தியோகம், அதிக செல்வ வளத்தை அடைவர்கள்.
11) பஞ்சமாதிபதி பதினொன்றில் இருந்தால் நாட்டியம், நாடகம், பாடல்களில் தேர்ச்சி உள்ளவர்கள், அரசனுக்கு இணையன வாழ்கை அமையும்.
12) பஞ்சமாதிபதி பாவக்கிரகமாகி பன்னிரண்டில் இருந்தால் கஷ்டங்கள் அதிகம் உண்டாகும்.குழந்தைகளால் துன்பம் ஏற்படும், சுபக்கிரகமாக இருந்தால் புத்திரலாபம் உண்டாகும்,வெளியூரில் வாழ்வர்கள்.

No photo description available.
30
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 21:15 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Blog Archive

  • ►  2022 (15)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  June (1)
    • ►  May (6)
    • ►  April (2)
  • ►  2020 (5)
    • ►  January (5)
  • ▼  2019 (160)
    • ►  December (27)
    • ►  November (7)
    • ►  October (48)
    • ►  September (42)
    • ▼  August (10)
      • சூரியன் + சுக்கிரன் கிரக சேர்க்கை... பார்வை பலன்கள...
      • பதினொன்றாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் ...
      • பத்தாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் பலன்
      • மோகினி வசிய மந்திரம்
      • திருமணவாழ்வு -10
      • எட்டாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் பலன்
      • விரைவில் திருமணம் நடக்க ,நல்ல குணமுடைய மனைவி அமைய ...
      • மாந்தி / குளிகன் சேர்க்கை பலன்கள்
      • ஆறாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் பலன்
      • ஐந்தாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் பலன்
    • ►  July (9)
    • ►  May (2)
    • ►  March (1)
    • ►  February (8)
    • ►  January (6)
  • ►  2018 (9)
    • ►  December (1)
    • ►  November (4)
    • ►  October (4)
  • ►  2017 (40)
    • ►  December (1)
    • ►  June (7)
    • ►  May (13)
    • ►  April (18)
    • ►  February (1)

About Me

சம்பத் [எ] சண்முகராஜ்
View my complete profile
Picture Window theme. Powered by Blogger.