Tuesday, 23 May 2017

குரு சனி சேர்க்கை

                                                    குரு சனி சேர்க்கை 

 

குரு ஸ்ரீ ராகவேந்திரய நமஹ
வணக்கம்.
குரு சனி சேர்க்கை. இவர்கள் இருவரும் சேரும் பொழுது, அதீத நன்மைகளும் மற்றும் அதீத தீமைகளும் கிடைக்க பெறுகிறது. இவற்றின் பலன் லக்னம் மற்றும் ராசி பொறுத்தே அமைகிறது.
குரு பகவான் என்னும் வியாழன் கிரகம்
=====================================
இது மிக பெரியது என்பது அனைவரும் அறிந்ததே, எனவே தான் சுப ராஜ கிரகம் என்று அழைக்கிறோம். இது ஒரு வருடத்திற்கு ஒரு முறை ராசி விட்டு ராசி மாறும் கிரகம் ஆகும். இவர் அனைத்து சுப நிகழ்வுகளுக்கு காரணமாக இருப்பவர் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. குரு சிறப்பு பார்வைகள் (5, 9) இவர் இருக்கும் இடத்தில் இருந்து திரிகோணத்தில் அமைவது சிறப்பு. இதனால் இவர் சுப கிரகமாக பார்க்கப்படுகிறார்.
சனி கிரகம்
==========
இது வான் மண்டலத்தில் காணப்படும் இரண்டாவது பெரிய கிரகம், இவர் அசுப தன்மை நிறைந்த கிரகம் என்று ஜோதித் நூல்களால் வர்ணிக்கப் படுகிறது. எனவே இவர் அசுப ராஜ கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
சனி பார்வை - இவர் இருக்கும் இடத்தில் இருந்து உப ஜெய ஸ்தானத்தில் (3 & 10) அமைவதால் பல இடையூறுகள் ஏற்படுத்தி பின் வெற்றி தருவார் சனி. இரண்டு கேந்திர பார்வை மற்றும் ஒரு உப ஜெய ஸ்தான பார்வை. தனது சொந்த ராசியை பார்க்கும் போது மட்டும் சில நன்மைகளை செய்வார்.
ஆய்வு
======
குரு (தனித்து) மற்றும் சனி தான் அமரும் இடத்தை பாழ் செய்பவர்கள் என்ற விளக்கம் ஜோதிட நூல்களில் உள்ளன. குருவுடன் 10 பாகைகுள் சேரும் எந்த ஒரு கிரகமும் சுபதன்மை அடைகிறது. அதுபோல் சனியுடன் 10 பாகை இடைவெளியில் சேரும் ஒரு கிரகம் அசுப தன்மை அடைகிறது. ஏனெனில் சனி, முழு அசுபர். சனி நம் கர்மத்தை மற்றும் பாவங்களை குறிப்பதால் அவர் கர்ம காரகன் மற்றும் ஆயுள் காரகன். நாம் செய்த பாவங்களின் கெடு பலனை அடையும் வரை இவரின் ஏழரை நாட்டு சனி, அஷ்டம சனி, அர்த்த அஷ்டம சனி, மேலும் சனி திசை மற்றும் புத்திகளில் ஆயுளை நீடித்து, பாவத்தின் பலனை அனுபவிக்க வைப்பதுதான் இவரின் தலையாய பணி. எனவே சனி எந்த கிரகத்துடன் சேர்க்கை பெறுகிறாரோ, அந்த கிரகத்தில் காரகத்துவம் மூலம் ஜாதகன் பாவம் தாங்கி பிறந்திருக்கிறான் என்று கொள்ளலாம். உதாரணமாக, சனியுடன் சேரும் ராகு, இந்த அமைப்பில் ராகு பிதாமாகரை குறிக்கும் கிரகம். சனி இவருடன் சேர்க்கை பெற்று இருப்பதால், தனது தந்தையின் தந்தை வழி பாவத்தால் பாதிக்க பட்டு இருக்கிறார் என்று பொருள், மேலும் இந்த சேர்க்கை கேந்திர மற்றும் திரிகோன ஸ்தானங்களில் அமையும் போது, ஜாதகனின் கேந்திர மற்றும் கோணங்கள் பாதிப்படையும். சனி எந்த ஒரு லக்ன/ராசிக்கு யோகாதிபதியாக இருந்தாலும் இந்த நிலைமைதான். ஏனெனில் இவர் நீதிமான். ஆனால் குருவின் பார்வை இந்த சேர்க்கை மேல் இருப்பின், பரிகாரம் செய்து பலன் பெறலாம். குரு இவர் நமது நமது புண்ணியங்கள் மற்றும் தெய்வ அருளை பற்றி தெரிவிக்கும் கிரகம். தன்னிடம் சேர்ந்த கிரகத்தின் காரகத்துவம் மூலம், முற்பிறவியில் நம் குடும்பமோ அல்லது நாமோ செய்த நன்மைகள் மற்றும் புண்ணியங்களை குறிப்பார். அந்த பலன்களை தன் பார்வை மூலம் வெளிப்படுத்துவார். அதனாலே குரு சேர்க்கை பெற்று இருந்தால் அவர் இருக்கும் இடம் பாழடைவதில்லை. தனித்த குருவின் பார்வையும் நன்மை செய்யும். ஆனால் கிரக சேர்க்கை பெற்ற குரு அதிக பலம் பொருந்தியவர் என்று போற்றப்படுகிறார். இவரின் கிரக சேர்க்கை அசுப கிரகங்களான செவ்வாய், சூரியன் மற்றும் தேய்பிறை சந்திரன். இவர்களுடன் சேரும் போது, தன்னுடன் சேரும் அசுப கிரகத்தின் தன்மையை மாற்றி சுபமடைய வைக்கிறார். மேலும், தன்னுடன் அசுப கிரக பார்வை கூட சுப தன்மை அடைய வைக்கிறார். இவற்றில் ராகு, கேது சேர்க்கை மட்டும் சில விதி விலக்குகள் உண்டு. இதில் குரு மற்றும் சனி சேர்க்கை பற்றி இனி வரும் பதிவுகளில் விரிவாக பார்கலாம்.
மேச லக்னம்
============
இதன் லக்னாதிபதி செவ்வாய். இவர் குருவின் நண்பர், சனியின் பகைவர். வேத ஜோதிட விதிப்படி, லக்னாதிபதி என்பது ஜாதகரை குறிப்பதால், இதன் ஸ்தான பலம் மிகவும் முக்கியம். இவரின் பலம் கொண்டே நாம் பிற யோகங்கள் மற்றும் தோஷங்களை கூறவேண்டும்.
குரு. இவர் மேச லக்னத்தின், விரய ஸ்தானாதிபதி (12) மற்றும் பாக்கிய ஸ்தானாதிபதி (9) விரய ஸ்தானாதிபதியாக இருந்தாலும், இவர் பாக்கிய ஸ்தானாதிபதியாக உள்ளதால், இவர் நன்மை செய்பவர் ஆகிறார், மேலும் இவர் லக்னாதிபதியின் நண்பர்.
சனி. இவர் மேச லக்னத்தின், ஜீவன ஸ்தானாதிபதி (10) மற்றும் லாபஸ்தானாதிபதி (11) ஆகிறார். இவர் லக்னாதிபதிக்கு பகைவர் என்பதாலும் மற்றும் இயற்கை அசுபர் என்பதாலும். சர லக்ன பாதாகதிபதி என்பதாலும். இவர் மறைவிடங்களில் (6, 8, 12) அல்லது திரிகோண ஸ்தானத்தில் (5, 9) இருக்க சிறப்பு. மேலும், குரு பார்வை பெற்றால் சுப தன்மை அடைகிறார்.
இனி குரு மற்றும் சனி சேர்க்கை பற்றி பார்க்கலாம், பாக்கிய அதிபதியுடன் பாதாகததிபதி கூடி, சனி சுய சாரமோ, நட்பு வீட்டிலோ, திக் பலமோ பெற்று நின்றால், குருவின் பாக்கிய தன்மை கெடுகிறது. பாக்கிய ஸ்தானத்தின் காரகத்துவங்களான, தெய்வ பக்தி, யோக சக்தி பெறுதல், தான தருமம் செய்தல் போன்றவை மறைந்து விடுகிறது. மேலும், 9 ம் இடம் தந்தை ஸ்தானம் என்பதால், தந்தை வழி உறவினர்கள், தந்தையுடன் பகை மற்றும் வெறுப்பு ஏற்படுத்துவார் சனி. மேலும் சனியின் பார்வை பெறும் சூரியன், உடல் பாதிப்பு மற்றும் கண் கோளாறு தருவார். சனி மற்றும் குரு இருவரும் 7 பார்வை பெற்று உள்ளதால், 7 பார்வை விழும் இடம் மட்டும், சற்று அறுதல் அடையும்.
தர்ம கர்மாதிபதி யோகம்
=======================
இங்கே சனி மற்றும் குரு இருவரும் தர்மா கர்ம அதிபதிகளாக வருவது சிறப்பு, இருந்தாலும் சனி பாதாகாதிபத்தியம் பெற்று இருப்பதால் தர்ம கர்மதிபதி யோகம் வேலை செய்யாது. லக்னத்தில் சனி நீச பங்கம் பெற்று குரு உடன் சேரும் போது, பலமான தர்ம கர்மாதிபதி யோகம் ஏற்படும். இதனால், நீதி நிலை தவறாத வக்கீல்களை மற்றும் நீதிபதிகளை உருவாகும். மேலும் சனி கன்னி ராசியில் மறைந்து, மீனத்தில் குரு அமர்ந்து சம சப்த பார்வை, வெளிநாடு மூலம் பெரும் செல்வம் சேர்க்கும் யோகம் தரும். மேலும் இந்த தர்ம கர்மாதிபதி யோகம், வெளிநாட்டில் தலைமை பங்கு வகிக்க செய்யும் அளவிற்கு புகழ் பெறச் செய்யும். சனி மறைந்து குருவின் நட்சத்திர சாரம் பெற்று இருத்தாலும், குரு ஆட்சி உச்சம் பெற்று சனியின் நட்சத்திர சாரம் பெற்று இருத்தாலும், தர்ம கர்மாதிபதி யோகமே. குரு திசையும் சனி திசையும், அடுத்தடுத்து வருவதால், மிக முக்கிய மற்றும் சிறப்பு மிக்க யோகமாகும். இந்த யோகம், ஜாதகரின் வாழ்வில் சமுதாய முன்னேற்றம், நிதி நிலை தவறாமை, வாக்கு வன்மை, மரியாதை, புகழ் ஏற்படுத்தி கொடுக்கும் வல்லமை கொண்டது

No comments:

Post a Comment