நபும்ஸக யோகம்.
ஜோதிட நூல்கள் குறிக்கும் பல்வேறு நபும்ஸக யோகங்களை
பற்றி விவாதிக்கலாமா நண்பர்களே!
“ஆகிய சன்மத்தின் மதி இருக்க
ஆதவன் புதன் சனி மூவர்
வாகுசேரிரட்டை ராசியிலிருக்க
மற்றுமிம் மூவர் கடமையும்
மோகமாய் அங்காரகனுமே நோக்க
முகில் முலை மாதரை இகழ்ந்தே
ஏகமாங் குறியற்றண்ணர்களாவர்
என்பது திண்ணமென்றுரைக்கும்”
என்கிறது சாதக அலங்காரம்
விளக்கம்
=========
லக்னத்தில் சந்திரன் இருக்க, சூரியன் புதன் சனி
மூவரும் இரட்டை ராசியில் இருக்க, இம்மூவரின்
பாகைகளையும் கூட்டக் கிடைக்கும் இராசியை
செவ்வாய் பார்த்திடில் ஒற்றைக்குறி (ஆணாகவோ
பெண்ணாகவோ) இல்லாதவராக, அதாவது அலியாக
விளங்குவர் என்பது உறுதி..
மேலும் சுக்கிரனுக்கும், சனிக்கும் ஏழில் செவ்வாயோ,
சுக்கிரனுக்கும், செவ்வாய்க்கும் ஏழில் சனியோ
இருந்தால் அலியென்று பலதீபிகை பரை சாற்றுகின்றது.
ஏழாமிடத்தில் ராகு, தூமகேது நிற்ப்பது வீர்யமற்ற தன்மையை குறிக்கும் பலதீபிகை
ஏழுக்குடையவனும், சுக்கிரனும் சேர்ந்து ஆறில் இருந்தால்
ஜாதகனோ அல்லது துணைவியோ அலியாவாள்.
சாராவளியும், சர்வார்த்த சிந்தாமணியும் வழிமொழிகிறது
லக்னத்தில் நீசம் பெற்ற கிரகம், சனி, புதன் இருந்தால் அது
நபும்ஸக யோகமாகும். சாராவளி
லக்னாதிபதி, ஆறாமதிபதி, சனி ஆகியோர் கேந்திர கோணத்தில்
இருந்தால் அலியாவர் சாராவளி
களத்திர அதிபன் குரூரக் கிரகங்களுடன் ஒன்பதில் இருப்பது
அலியைக் குறிக்கும். சாராவளி
புதனும், ஆறாமதிபதியும் சேர்ந்து லக்னத்திலோ, ஆறாமிடத்திலோ இருப்பது அலித்தன்மையைக்
குறிக்கும். ஜம்புமஹரிஷி வாக்கியம்.
ஜெய்மினி சூத்திரம்
=================
எல்லோராலும் பயண்படுத்தும் விதத்தில் நடைமுறயில்
அனுபவத்திற்க்கு ஏற்ற விதி
புதனும், சனியும், சேர்ந்து சுவாம்சத்தில் இருந்து கேதுவால்
பார்க்கப் பட்டாலோ அல்லது கேதுவுடன் சேர்ந்து சுவாம்சத்தில்
இருந்தாலோ வீர்யமற்ற தன்மையை குறிக்கும்.
( இதற்க்கு தனி விளக்கம் எழுதுகிறேன்.)
மணிகண்ட கேரளம் கூறும் நபும்ஸக யோகம்
========================================
“உதையத்துக்கு ஐந்தில் மந்தன் ஓரெட்டில் பூமன் நிற்க
அதையத்துக்கு ஏழில் ராஜன் ஐந்தவன் கனலிற் சேர
மதியத்தில் அரவம் சேர்ந்து மந்தனுக்கு ஏழேயாகில்
விதியத்தின் மலடன் என்று விளம்பினர் நூல்வல்லோரே.”
விளக்கம் =லக்னத்திற்க்கு ஐந்தில் சனி நிற்க, எட்டில் செவ்வாய்
நிற்க, ஏழில் குருவிருக்க அவருடன் ஐந்தாமிடத்து
அதிபதியும், சூரியனும் சேர மதியுடன் பாம்பு சேர்ந்து
சனிக்கு ஏழில் நிற்க ஜாதகன் குழந்தைபேறற்றவன்.
“பத்துடன் பின் சேய் ஐந்தில் பகலவன் இருக்க நோக்க
ஒத்துடன் காரி லாபம் உதையனுங் கூடி நிற்க
அத்துடன் ஐந்தோன் நீசமாயின் மாதே கேளாய்
செத்துடன் பிறப்பில்லாமற் சென்மதி மலடாவான்”
“அந்தமாய் ஐந்தோன் நீசம் அதிற் குரு பார்வையாயின்
மந்தனார் ஐந்துக்கோளின் மழவிடை சேர்ந்து நிற்க
இந்தெரி லக்னாதி ரவி சேய் பார்க்கக் கூட
எந்த நாளளவு மட்டும் இருப்பனே மலடனாக”
“ஆறெட்டுக்குடையோர் சேர்வுற் ஐந்திடமாக நிற்க
வேறிட்டு மறையோன் நீசம் வேந்தனும் ஐந்தோனும் சேர
கூறிட்ட உதயம் காரி குளிகனும் கூடி நின்றால்
மாறெட்டின் மதி சேய் சேர்ந்தால் மலடனே மலடன் மாதே”
“இரு மூன்றுக்குடையோர் எட்டில் இருந்திட இரவி கூட
வரு மூன்றில் இரண்டில் எட்டோன் வக்கிரன் சேர்ந்து நிற்க
குரு நானி நீசமாகிக் கொண்டிடும் உதைய நீலன்
பருவான மதியும் பாம்பும் பற்றினால் மலடனாவான்”.
மணிகண்ட கேரளத்தில் கூறப்பட்ட இந்த யோகங்கள்
அணைத்தும் நந்தி தேவர் அருளிய “ஸ்திரி புருஷ ஜாதக
திறவுகோள்” என்ற நூலிலும் விளக்கப்பட்டுள்ளன.
ஜோதிட ரீதியாக மேற்க்கண்ட யோகங்கள் வீர்யமற்ற
நபும்ஸகத் தன்மையை காட்டுகின்றன என்ற போதும்
வினைப்ப்யனே ஜாதகத்தில் கிரகநிலையாக பிரதிபலிக்கிறது.
ஜாதக ரீதியாக இந்த குறைகளை கண்டு அதை தீர்க்கும் உபாயம் ஜோதிடர்களான நம்மிடம் உள்ளது.
குறிப்பாக புதன், சனி, கேது இவர்களின் சேர்க்கை பார்வை சாரம், மூன்று
ஐந்து ஒன்பது பண்ணிரெண்டாம் பாவ சம்பந்தம் பெறும் போது கவனித்துப்பார்த்து
கையாள வேண்டும்.
ஐந்தாமிடம் புத்திரஸ்தானம் என்றாலும் அதன் சூட்சுமம் பண்ணிரெண்டாம் பாவத்தில் இருக்கிறது.
இதில் மூன்றாம் பாவத்தில் தான் ஒரு மனிதனின் எண்ணமும் எழுச்சியும் உணர்ச்சியும் அடங்கியிருக்கிறது.
ஆகையால் காலபுருஷனின் மூன்றாமிடத்தை மைதுனம் எனும் மிதுனமாக
கைக்கொண்டாலும் அதில் தான் கதை பிடித்த ஆனும் யாள் பிடித்த பெண்ணும்
சின்னமாக கொண்டனர்.
ஒரு ஆணின் வீரத்தையும் பெண்ணின் நளினத்தையும் கானும் இடம் மிதுனம்.
No comments:
Post a Comment