ஒவ்வொரு
கிரகத்தின் காரகமும் கீழே விவரிக்கப் பட்டிருக்கின்றது.
சூரியனின்
காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
- அரசியலில் ஈடுபடலாம்
- அரசாங்க வேலை
- மாணிக்க வியாபாரி ஆகலாம்
- சிவப்பு வண்ண கற்களை விற்கலாம்
- தங்க ஆபரணங்களை தாயாரிக்கலாம், விற்பனை செய்யலாம்.
- தர்க்கம் செய்வதில் வல்லவராகலாம்
- மாந்த்ரீகத்தில் ஈடுபடலாம்
- நூற்பாலை சம்பந்தப் பட்ட வேலைகள் செய்யலாம்
- கட்டுமான துறைகளில் ஈடுபடலாம்
- மிளகாய் வியாபாரம்
- வெங்காய வியாபாரம்
- புகையிலை வியாபாரம்
- மர வியாபாரம்
- காகிதம் வியாபாரம்
- விபூதி வியாபாரம்
- தாவர பொருட்கள் வியாபாரம்
- கற்பூரம் வியாபாரம்
- மருந்து வியாபாரம்
- இரசாயன வியாபாரம்
- வழக்கரிஞ்சர்
சந்திரனின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
ஒரு மனிதனின்
ஜாதகத்தில் பத்தாம் இடத்திற்க்குரியவனாக சந்திரனோ, பத்தாம் இடத்திற்கு உரியவன் உள்ள இடமானது சந்திரனின் வீட்டுக்கு உரியதாகவோ அமைந்திருந்தது என்றால் அது சந்திரனின்
காரகத்துவத்தை பெற்றது என்று கூறலாம்.
சந்திரன்
வெண்மையானவன். எனவே வெள்ளை நிறமுடைய பொருட்களை கொண்டு எந்த வியாபாரம் செய்தாலும்
அது வெற்றியாக அமையும்.
- முத்து வியாபாரம்
- உப்பு வியாபாரம்
- சுண்ணாம்பு வியாபாரம்
- சங்கு வியாபாரம்
- மீன் பிடித்தல்
- பால், தயிர், மோர், வெண்ணை வியாபாரம்
- படகு, பரிசல்
- டிராவல் ஏஜென்சி
- வேளாண்மை
- நீர்பாசன துறை வேலைகள்
- ஈரப்பசையுள்ள பழவகை வியாபாரம்
- பெண்கள் விருப்பப்படும் எந்த தொழிலையும் செயாலாம்.
- பேன்சி ஸ்டோர்
- தங்கம், வெள்ளி மற்றும் கவரிங் கடைகள்
- சீட்டு பிடிகலாம்
- அரசாங்க துறையில் வேலை கிடைக்கும், முயன்றால் பெறலாம்
- டாக்டர் ஆகலாம்
- புகழ்பெற்ற நடிகர்கள் ஆகலாம்
- ஜோதிடம் கற்று தொழில் செய்யலாம்
- எழுத்தாளர், பாடலாசிரியர் ஆகலாம்
- எதற்கும் தகுதியற்றவராக கருதபடகூடியர் கூட சில பணக்கார வீடுகளில் அவ்வீட்டின் பெண்கள் இடக்கூடிய வேலைகளை செய்யக் கூடிய வேலைக்காரர்களாக ஆகின்றனர்.
செவ்வாயின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
செவ்வாய்
காரகத்துவம் பெற்ற கிரகமாக இருக்குமேயாயின், அவர்கள் பின்வரும் தொழில் செய்ய ஏற்றவர்களாக மாறுகின்றனர்.
- ரியல் எஸ்டேட் துறை இவர்களுக்கு சிறந்தது. வீடுகள், நிலபுலன்கள் விற்பனை செய்து வருமானம் பெறலாம்.
- எங்கெங்கு நெருப்பின் துணை அவசியமோ அங்கெல்லாம் இவர்கள் உண்டு. உதாரணமாக செங்கல் சூளை, கொள்ளுப்பட்டறைகள், மின் வாரியங்கள், பயங்கர கருவிகள் தயார் செய்யும் இடங்களில் இவர்களுக்கு வேலை கிடைக்கும். அல்லது இவர்களே அவ்வேலையை செய்வார்கள்.
- இவர்களில் மிகப்ப்ரும்பாலோர்க்கு சமையல் தொழில் செய்யத் தெரியும். ஹோட்டல் துறை இவர்களுக்கு வாய்க்கும்
- குயவர்கள் ஆகலாம்
- சிற்பிகள் ஆகலாம்
- ஓவியர் ஆகலாம்
- காவல்துறை / இராணுவத்தில் பனி கிடைக்கும்
- விளையாட்டு வீரர்கள் ஆகலாம்.
- சிலம்பம், குத்துசண்டை வீரர் ஆகலாம்.
- பவள வியாபாரம்
- மாயாஜாலம், ஏவல், பில்லி, சூன்யம் எல்லாம் சர்வ சதாரணமாக அமையும்
- சர்கஸில் வேலை கிடைக்கும்
- பெரிய தோப்புகள் மூலம் லாபம் பெறலாம்
- விவசாயத்திற்கு ஏற்ற நிலத்தை குத்தகைக்கு விடுவதாலும், துவரைப்பயிரிடுவதாலும் நன்மை அடையலாம்.
புதன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
- புதன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு பத்திரிகை துறை ஏற்றது. நிருபராகவோ, துணை ஆசிரியர், ஆசிரியர் ஆகா பணி ஆற்றலாம்
- ஜோதிடத்தில் வல்லவர்களாக இருப்பார்கள்
- இன்சூரன்ஸ் துறை சிறந்தது
- இவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் ஆதலால் கல்வித்துறை சம்மந்தமாக வேலை கிடைக்கும்.
- புதன் காரகதுவம் பெற்றவர்கள் புகழ் பெற்ற ஏழுத்தாளர்களாக வருவார்கள்.
- பட்டிமன்றம், கதா காலோட்சபம், சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர்கள்
- வழக்கரிஞ்சர் ஆகலாம்
- அக்ககௌடன்சி எனப்படும் கணக்குப் பதிவியல் துறை மிக சிறந்தது.
- அமைச்சர்களுக்கு ஆலோசகராகவோ, அயல் நாட்டு தூதராகவோ ஆகலாம்.
- மென்போருள் துறை மிக ஏற்றது.
- ரேடியோ, தொலைக்காட்சி துறைகளில் நல்ல வேலை கிடைக்கும்
- கடவுள் மேல் பக்தி உள்ளவர்கள் வேத சாஸ்திரங்களை கற்று அர்ச்சகர் ஆகலாம்.
- வியாபாரியாக ஆகா விரும்புவோர்கள் இலைகள் பச்சை பயிறு போன்றவற்றை கொள்முதல் செய்து விற்றால் அதிக லாபம் பெறலாம்.
- தபால் துறையில் வேலை கிடைக்கும்
- ஆசிரியர் ஆகலாம்
- கணித மேதைகளாக மாறலாம்.
குரு காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
- ஆன்மீக துறையில் நாட்டம் கொண்டு அதன் வாயிலாக சிலருக்கு ஜீவனம் அமையும்.
- சிலர் மாகத்துமாவாக மாறி பிறர் மூலம் காப்பாற்றப்படுகின்றனர்.
- நகை வியாபாரமும், புஸ்பராக வியாபாரமும் ஏற்றது.
- எலுமிச்சை, ஊதுவத்தி, தென்னை, பாக்கு, கரும்பு வெல்லம் வியாபாரம் ஏற்றது
- பொதுவாக யாகங்கள், புரோகித தொழிலில் ஈடுபடுதல், கதா கலோட்சபம் செய்தல், தெய்வீக காரியங்களில் ஈடுபடுதல், மதப் பிரசாரம் செய்தல், ஆலயங்களில் மதப் பிரச்சாரம் செய்தல், ஆலயங்களில் அறங்காவல் துறையில் ஈடுபடுதல், மடங்களில் இருத்தல், தொண்டு செய்தல், ஆலய குருக்களாக இருத்தல் போன்ற முழுவதுமான ஆன்மீகத் தொழிலிலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருமானத்தைப் பெருகிக் கொள்ளலாம்.
- வேறு சிலர் குறிப்பட்ட இனம், மதம், பிராந்தியம் போன்றவற்றிற்க்கு தலைவராகி அதன் மூலம் வாழ்க்கை நடத்துவர்.
- இன்சுரன்சு துறை ஏற்றது
- எங்கெங்கு காசு, பணம் புழங்குகின்றதோ அங்கெல்லாம் இவர்கள் காசாளர்களாக இருக்க தகுதி வாய்க்கும்.
- இவர்கள் தேர்தலில் நின்றால் சட்டமன்ற உருப்பினராகவோ, மந்திரிகளாகவோ கூட ஆகலாம்.
- இவர்களில் பலருக்கு வக்கீலாகவும், நீதிபதி ஆகவும் தகுதி உண்டு
- அரசியலில் இவர்கள் மிக்க ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
- பிறர்மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்படும் பொது, அந்த விசாரணை கமிசனில் இவர்கள் முக்கிய பொறுப்பில் இருப்பார்கள்.
- இவர்கள் நிர்வாக துறையில் சிறப்பாக ஈடுபட முடியும்.
- மளிகை கடை வைத்தால் இலாபத்தை அடையக்கூடியவர்களாக சிலர் விளங்குவார்கள்.
- தங்கச் சுரங்கத்தில் பணியாற்றும் தகுதி சிலருக்கு வாய்க்கும்.
- தொழிலார்களின் தலைவர்களாகவும் சிலர் விளங்குவர்
சுக்ரன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
- தங்க கடை வைக்கலாம்
- வெள்ளி நகைகளை தயாரித்து விற்கலாம்
- வெண்கல வியாபராம் செய்யலாம்
- செயற்கை கற்கள் விற்பனை செய்யலாம்
- ஆடைகள் வியாபாரியாகலாம்
- மணல் லோடு ஏற்றி வந்துசப்ளை செய்யலாம்
- பால் பண்ணை அமைக்கலாம்
- லாண்டரி நடத்தலாம்
- தறி போட்டு நெய்யும் தொழிலை செய்யலாம்
- படங்களுக்கு கண்ணாடி சட்டமிட்டு தரும் கடையினை வைக்கலாம்
- முகம் பார்க்கும் கண்ணாடி கடை நடத்தலாம்.
- கோயில் வாசலில் தேங்காய், பூ, பழம் வெற்றிலை பாக்கு கடை வைக்கலாம்.
- தனியாக வெற்றிலைப் பாக்கு கடை வைக்கலாம்
- பூ வியாபாரம் செய்யலாம்
- சந்தன வியாபாரம் செய்யலாம்
- புளி மண்டி வைக்கலாம்
- கரும்பை விளைவித்து விற்கலாம்
- மணிலாவை பயிர் செய்து விற்பனை செய்யலாம்
- தோட்டங்கள் இட்டு இலாபம் அடையலாம்
- விறகு கடை நடத்தலாம்
- பலகார கடை நடத்தலாம்
- சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் வியாபாரம் செய்யலாம்.
- பாத்திர வியாபாரம் செய்யலாம்.
- சங்கீதம் சம்பந்தப்பட்ட மேள, தாளங்களை விற்பனை செய்யும் கடை வைக்கலாம்.
- இலவம் பஞ்சு வியாபாரம் செய்யலாம்
- கட்டில், மெத்தை வியாபாரம் செய்யலாம்
- பால், தயிர் போன்றவற்றை விற்பனை செய்யலாம்
- கால் நடை பண்ணை வைக்கலாம்
- சென்ட் வியாபாரம் செய்யலாம்
- வாகனங்களை வாடகைக்கு விட்டு வாழ்க்கை நடத்தலாம்
- இசை அமைக்கலாம்
- கலைஞ்சர்கள் ஆகலாம்
- பின்னணி பாடலாம்
- கவிஞர்களாக ஆகலாம்.
- பொதுவாக கலைத்துறையில் இவர்கள் பெரிதாக சாதிக்கலாம்
- கேளிக்கைகளில் நாட்டம் கொண்ட இவர்களுக்கு கேளிகைகளின் மூலமே வாழ்க்கையானது நடை பெரும்
சனி காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
- இரும்பு, இரும்பு சம்மந்தப் பட்ட தொழில்களில் தான் இவர்கள் வல்லுனர்கள் ஆக இருப்பார்கள்.
- கடினமாக உழைக்க வல்ல இவர்களுக்கு அம்மாதிரியேதொழில் அமையும்.
- இவர்கள் நீல வண்ணமுடைய சரக்குகளை விற்பனை செய்தால் இலாபம் உண்டு
- தோல் வியாபாரம் செய்யலாம்
- எண்ணெய் வியாபாரி ஆகலாம்
- எள் பயிரிட்டு விற்பனை செய்யலாம்
- தரகர்களாக தொழில் நடத்தலாம்
- மர வியாபாரம் செய்யல்லாம்
- இரும்பு வியாபாரம் ஏற்றது
- அழுகும் பொருட்கள் வியாபாரம் செய்யலாம்
- கசாப்பு கடை நடத்தலாம்
- கால்நடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து இலாபம் பெறலாம்
- காவல் துறை ரகசியப்பிரிவில், உளவுத்துறையில் பணியாற்றலாம்
- மர வேலைசெய்யலாம்
- விவசாயம் செய்யலாம்
- கூலி வேலை செய்யலாம்
- மறு சுழற்சி தொழில்களில் ஈடுபடலாம்
- தண்டல், வரி வசூல் செய்யல்லாம்
- மருந்தாளுனராகலாம்
- அகழ்வாராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியலாம்
- பொறியியல் துறையில் பணியாற்ற வாய்ப்பு உண்டு
- வெடி குண்டு தயாரிப்பு கிடங்குகளில் வேலை கிடைக்கும்
ராகு காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
- இவர்கள் உளவுத் துறையில் இரகசிய கண்காணிப்பாளராக விளங்ககூடிய பதவிகளைப் பெற்றிருப்பார்கள்
- மிக சிறந்த மத போதகம் செய்து வாழ்பவர்களாக இவர்கள் இருப்பார்கள்
- பழைய கிழிந்து போன ஆடைகளை வாங்கி, விற்று வியாபாரம் செய்யல்லாம்
- அடகு வியாபாரம் செய்யலாம்
- மாணிக்கம், கோமேதகம் போன்ற கற்களை விற்பனை செய்யலாம்
- ஈய வியாபாரம் செய்யலாம்
- கேப்பை, உளுந்து போன்ற தானியங்களை உற்பத்திசெய்து விற்கலாம்
- ஒயின் ஷாப், கள்ளுக்கடை, சாராயக் கடை நடத்தலாம்
- மருந்து கடை நடத்தலாம்
- தரகர் ஆகலாம்
- மூங்கில், கருங்கல் வியாபாரம் செய்யலாம்
- கடலில் இருந்து எடுக்கப்படும் எப்பொருளையும் கொண்டு வியாபாரம் செய்யலாம்
- தையல்காரர் ஆகலாம்
- எருமை மாட்டின் மூலம் வியாபாரம் செய்யலாம்
- தறி நெய்து தொழில் செய்யலாம்
- கப்பல் படை, விமானப்படையில் வேலை கிடைக்கும்
- மந்திரவாதம் கற்றுக் கொள்ளலாம்
கேது காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
- ஆன்மீகத் துறையில் ஈடுபடலாம்
- அறிவியல் துறையில் ஈடுபடலாம்
- ஜோதிடத்தில் ஈடுபடலாம்
- தொழில் நுட்பங்களை பிறருக்கு செய்வதன் மூலம் பலன் பெறலாம்
- அலுமினிய பாத்திரங்கள் விற்கலாம்
- ஈயம், தகரம் வியாபாரம் செய்யலாம்
- தரகு வியாபாரம் செய்யலாம்
- கோமேதகம், மாணிக்கம் விற்பனை செய்யலாம்
- நீல நிற சரக்குகளாக வங்கி விற்கலாம்
- பட்டாசு தயாரிப்பில் ஈடுபடலாம்
- லாகிரி வஸ்துகளை கொண்டு வியாபாரம் செய்யலாம்
- ஒயின் ஷாப் நடத்தலாம்
- மீன் பிடிக்கலாம்
- தூர் வாரலாம்
- முத்துக் குளிக்கலாம்
- கசாப்புகடை வைக்கலாம்
- ரசவாதம் செய்யலாம்
- மந்திரவாத தொழில் செய்து அதன் மூலம் பொருளை சம்பாதிக்கலாம்
- இந்தக் காரகத்துவம் பெற்றவர்கள் திருட்டில் வல்லவர்களாக இருப்பார்கள்.
- கொலை செய்வதில் அஞ்சாதவர்களாக இருப்பார்கள்
- ஆண்டிப் பண்டாரமாகவும் மாற வாய்ப்பு உண்டு
- மதப் பிரசாரம் செய்வார்கள்
No comments:
Post a Comment