அபிஜித் முஹூர்த்த மகிமை:-
ஒவ்வொரு நாளும் மதியம் 12.02 முதல் 12.50 வரை அபிஜித் முஹூர்த்தம்
என்பர். இதன் தன்மை 12.05 முதல் 12.45 வரை அதிகமாக இருக்கும். இந்த
சமயத்தில் முக்கியமான வேலை எது செய்தாலும் அந்த வேலை கண்டிப்பாக அதிக
பலனைத் தரும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது அனுபவ பூர்வமான வாக்கு.
இண்டர்வியூவிற்கு செல்லும் பொழுது மதியம் வீட்டை விட்டு உங்கள்
பெரியவர்களின் பாதங்களை 3 முறை தொட்டு நமஸ்கரித்து கண்களுக்கு ஒற்றிக்
கொண்டு மெதுவாக வலது காலை வெளியே வைத்து மௌனமாக அந்த சமயத்தில் சென்றால்
கண்டிப்பாக உங்களுக்கு ஜயம் உண்டாகும். அந்த சமயத்திற்கே நீங்கள் ஏதாவது
சாப்பிட்டிருக்க வேண்டும். முக்கியமான காகிதங்களின் மீது கையொப்பம்
செய்வதனாலும், மேலதிகாரிகளுடன் முக்கியமான விஷயங்களை பேசுவதனாலும்,
எப்பேற்பட்ட பயணமானாலும் இந்த சமயம் நல்லது. புது வஸ்திரம், நகை, சாமாங்கள்
வாங்குவதனாலும் இந்த சமயம் நல்லது. நல்ல நாணயமான, தரமான அதிக காலம்
இருக்கும் படியான பொருட்கள் நியாயமான விலையில் கிட்டும். சுபகாரியத்திற்கு
கண்டிப்பாக இந்த சமயம் உத்தமம். இந்த சமயத்தில் பஞ்சாங்கம்படி ராகு காலம்,
துர்முஹூர்த்தம், வர்ஜ்யம், அனுகூலமற்ற ஹோரை போன்றவை இருந்தாலும் இவற்றின்
தன்மை எதுவும் இந்த சமயத்தில் இருக்காது. இது 100% உண்மை. புது வாகனத்தை
முதன்முறையாக உபயோகப்படுத்த வேண்டும் என்றாலும் அல்லது கடையிலிருந்து
டெலிவரி எடுக்க வேண்டும் என்றாலும் இது நல்ல சமயம். புது வஸ்திரத்தை
அணிந்து கொள்வதற்கும், புது பொருட்களை உபயோகப்படுத்துவதற்கும் இது உசிதமான
சமயம். எப்பேற்பட்ட கடனைத் தீர்ப்பதற்க்கு இதை விட வேறு நல்ல சமயம் இல்லை.
சீக்கிரத்தில் கடன் தீர்ந்துவிடும். இந்த சமயத்தில் கடன் வாங்கினாலும் வெகு
சீக்கிரமாக கடன் தீர்ந்துவிடும். அந்த பணம் துர்விநியோகம் ஆகாது. இந்த
சமயத்தில் கேஸ் சிலிண்டர் புக் செய்து பாருங்கள். உங்களுக்கு தெரியும் அதன்
தன்மை. இந்த சமயத்தில் சாப்பிட்டால் அஜீரணத்திற்கு வழி வகுக்காமல்
சாப்பிட்டவை விரைவாக ஜீரணமாகும்.
No comments:
Post a Comment