Tuesday, 23 May 2017

குறிப்புகள்


குறிப்புகள்


ஜோதிட ஆர்வலர்களுக்கும் இளநிலை ஜோதிடர்களுக்குமான 100 ஜோதிட குறிப்புகள்
1, புதன் புதியன  விரும்பி..சூரியனுடன் இருக்கும் போது பல பெண்களை விரும்புவார்கள்....ஆசைகள் மாறிக்கொண்டே இருக்கும் ..தொழிலில் கெட்டிக்காரர்கள் படிப்பில் சுட்டி..                                                     
2, குரு கெட்டிருக்க கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.                                              
3, சனி கர்மா சம்பந்தமில்லாமல் உடல் இணையாது. சனி  - லக்னம், லக்னாதிபதி, 7-மிடம், 7-ம் அதிபதிகளை பார்க்க திருமணம் ந விரும்பி சூரியன் + புதன் சம்பந்தம் மதன கோபாலயோகம் பல பெண்கள் தொடர்ப.<         டைபெறும்.                                       
4, சந் + ராகு திருட்டு கிரகம்
5, சந்திரனுடன் எத்தனை கிரகம் சம்பந்தப்பட்டிருக்கின்றதோ அதனுடைய தாக்கம் இருக்கும் சந் + சுக் காமம் அதிகம்.                                                 
6, பிரிந்து போக நினைப்பது ராகு, பிரித்து வைப்பது  கேது.                                     
7, குருவிற்கு 1-படை ராசியில் 3-5-7-9-11 ல் சுக்கிரன் இருக்க நன்றாக இருக்கும.                                                                      
8, 2,11-ல் தொடர்பு வைப்பாட்டி வைத்துக் கொள்வார்கள்.                                 
9, திருமணத்தன்று 5,12-ன் கிழமை, நடசத்திரங்கள் வரக் கூடாது.                  
10, சூரி + சனி பெண் வீட்டுடன் மாப்பிள்ளையாக இருக்க நேரிடும். அப்பா பெண் மேல் அதிக பாசமாக இருப்பார்.                                                   
11, பெண் சந்திரனுக்கு ஆண் சந்திரன் 11-ல் இருக்க சுபம். சந்திரனுக்கு 11-ல் லக்னம், லக்னத்திற்கு 11-ல் சந்திரன் இருக்க இனிய திருமணம்.                             
12, 1,2,8-க்குடையவர்கள் திருமணத்தை நிர்மாணிக்கிறார்கள்
13, சனி + ராகு + சந் சேர கிட்னீ ஸ்டோன் பிரச்சனை வரும். மூவரும் சேர்ந்தோ அல்லது மூவரும் நீர் ராசிகளiல் இருந்தாலும் ஸ்டோன் பிரச்சனை வரும். எப்போது? மூவரும் இணையும் காலம் நீர் வீடு மீனம், கடகம், விருச்சிகம்.
14, ஒரு ஜாதகத்தில் திசாநாதன் இன்னொரு ஜாதகத்தில் அஸ்தமனம் ஆனால், பிரிவினையை இழப்பை தரும். நல்ல யோக நிலையில் இருக்க மிக்க யோகம்.
15, 5-ம் அதிபதி குருவாகி சூரியன், ராகு, கேது, நட்சத்திரத்தில் இருக்க குழந்தை பிறக்காது.
16, சனி 5,7-ல் அமர்வது சனி தோஷம் சந் + சனி சேர்க்கை பார்வை புனர்பூ யோகம்.                                                                       
17, இரு ஆதிபத்தியமுள்ள கிரகங்கள் பரிவர்த்தனை ஆகும் போது, பரிவர்த்தனை ஆகாத பாவங்கள் பலி வாங்கும். அல்லது பலி எடுக்கும். பரிவர்த்தனை ஆகாத பாவத்தில் ராகு அமரக் கூடாது.                                         
18, நிலம் வாங்க பிறந்த கால செவ்வாய்க்கு கோட்சார செவ்வாய் 2-12, 6-8, ஆக இருக்க கூடாது. குரு, செவ்வாய் சம்பந்தம் ராசி அல்லது அம்சம் ஆகியவைகளiல் இருப்பவர் மட்டுமே வீடு வாங்க இயலும், செவ்வாய் கட்டிய வீடு, புதன் காலி இடம்.                                                            
19, நீண்ட கால பலனுக்கு திசாநாதன் சம்மதிக்க வேண்டும் குறுகிய கால பலனுக்கு புத்திநாதன் சம்மதிக்க வேண்டும்.                                                
20, சந்திரன் 6,8-ல் உள்ள ஜாதகம் உடல் ரீதியான தொந்தரவு கொடுக்கும்.
21, ரேவதி குறுகிய நட்சத்திரம் குளiர்ந்த மொட்டு விசாகம் அதிக காம நட்சத்திரம் நெருப்பு குழம்பு உஷ்ணம்.                                                
22 வக்கிர கிரககங்கள் தன் காரகத்துவத்தின் தனித் தன்மையை தக்க வைத்துக் கொள்வதில்லை.                                                               
23, சிம்மம், கும்பம், லக்னம் உள்ளவர்கள் தத்து போக கூடிய லக்னம். குழந்தை வெளiயே வாழம்f.                                                                
24, 7-ம் அதிபதி 3-ல், 3-அதிபதி -7 ல் இருக்க மணப் பெண் தானே தேர்ந்தெடுப்பர்கள்.
25, 9-கிரகத்தில் எது குறைந்த பாகையில உள்ளதோ அதுவே மனைவியின் ராசியாக அமையும்.                                                                 
26, அதிக பாகை, கலை, எந்த கிரகம் பெற்றுள்ளதோ அதன் காரகத்துவ வேலையை செய்வார்.                                                              
27, உச்ச வீடுகளை பரிமாறிக்கொள்ளும் கிரகம் திடீர் முடிவுகளை எடுக்கும். விபரிதம் என்று தெரிந்தும் செய்வார்கள். வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடும்.
28, அங்காளi, பங்காளi, குறிக்கும் கிரகம்  புதன். புதன் நீச்சத்தில் இருக்க, அங்காளi, பங்காளi, ஆகாது.                                                               
29, சனி மகரம் செவ்வாய் துலாம் இருக்க காரகத்துவ ரீதியான முடிவுகளை எடுக்கும். இவர் உடன் பிறந்த அக்காவை கற்பழித்தார். ( சனியும் செவ்வாயும் உச்ச பரிவர்த்தனை ஆகியுள்ளது. )                                   
30, உச்ச வீடுகளை பரிமாறிக் கொள்ளும் கிரகம் விபரிதம், என்று தெரிந்தும், திடீர் முடிவுகளை எடுக்க வைக்கும்.
31, ஒரு கிரகம் தன் நின்ற வீட்டின் 8-ஆம் அதிபதியோடு தொடர்பு கொண்டால் தனது காரகத்துவத்தின்f மூலம் அவமானம் அடையும்.
32, ஒரு கிரகம் தான் நின்ற வீட்டின் 12- ம் அதிபதியோடு தொடர்பு கொண்டால் தனது காரகத்துவத்தினை இழக்கிறது.                                      
33, ராகு கேது அச்சை விட்டு வெளiயேறிய கிரகம் தனது காரகத்துவ அடிப்படையில் தனித்து நிற்கிறது.                                                  
34, மேசம் லக்னம் சூரி + சந் 7-ல் குரு சூரியனுக்கு 12-ம் அதிபதி குருவின் தொடர்பு எனவே 3-மகன்களும் இறந்து விட்டார்கள் லக்னத்திற்கு 5-வீடு சூரியன் எனவே மகனைக் குறிக்கும்.                                                    
35, ஸ்திர லக்னத்தில்  மூத்த பையன் பிறக்க பாதிப்பையும் பெண் பிறக்க யோகத்தினையும் செய்யும் 12-வருட காலம் மட்டும் செய்யும்.                                
36, நல்லதையோ கெட்டதையோ செய்ய வேண்டுமானால் அந்த கிரகம் நடப்பில் உள்ள கிரகங்கள் சேர பார்க்க வேண்டும்.                                              
37,  சனி கேது பிறப்பில் உள்ள ஜாதகருக்கு சனி மகத்தில் வரும் காலம் தொந்தரவு செய்யும். கண் பாதிப்படையும்.                                         
38, வீட்டை விட்டு ஓடிப் போபவர்கள் வக்கிர கிரக திசையில் போனால், திரும்பி வருவார்கள். வக்கிரம் ஆகி அஸ்தமனமும் ஆகி அந்த திசையில் போனால் திரும்ப வர மாட்டார்கள்.                                                            
39,  சனி கேது தொடர்பு எந்த வகையில் வந்தாலும், அதிர்ஷடத்தை நம்பி செய்யும் ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம், தொழில் வீழ்ச்சி அடையும்.                                                
40, கோட்சார சந்திரன் சுக்கிரனை தொடும் காலம் பணம் வரும்.                                      
41, சனி பிறந்த ஜாதகத்தில் அசுபதி 1,2,3-ஆம் பாதத்தில் உள்ளவர்களுக்கு கோர்ட் கேஸ் வரும். சனி பிறந்த ஜாதகத்தில் மகம் 1,2,3-ஆம் பாதத்தில் உள்ளவர்களுக்கு வீடு aIதியான வழக்கு வரும். கோட்சார சனி அசுபதி 1,2,3- பாதத்திலும் மகம் 1,2,3- பாதத்திலும் வரும் போது இச்சம்பவம் நடைபெறும்.
42, கோட்சார சந்திரனை எத்தனை கிரகம் பார்க்கின்றதோ அதன் காரகத்துவத்தை செய்யலாம் என்று சொல்லலாம்                                                     
43, தொழிழைப் பற்றி கேட்கும் போது சனியை சந்திரன் தொடர்பு இருக்க வேண்டும் அப்போது தான் வேலை கிடைக்கும.                                      
44, குரு சந்திர யோகத்தில் தான் ஒருவர் வீட்டை விட்டு ஓடுவார்.                                           
45, பிறந்த கால சந்திரன், கோட்சார புதனை பார்த்தாலும், கோட்சார சந்திரன் பிறந்த கால புதனை பார்த்தாலும் படிப்பு மந்தம்.                                        
46, குழந்தை உண்டா என்ற கேள்விக்கு, கோட்சார சந்திரன், குருவை பார்க்க வேண்டும். இருவர் ஜாதகத்திலும் பார்க்க வேண்டும்.                                      
47, உச்ச கிரக காரகத்துவத்தை மதிக்க வேண்டும்.                                 
48,புதன் உச்சம் பெற, கடன் காரரை கண்டு பயப்படுவார்கள். காலச்சக்கர விதிப்படி புதன் 6-க்குரியவர். லகனத்திற்கு 6-க்குயைவருடன் புதன் சேர பெருத்த கடன் காரராக இருப்பார்.                                                          
49, ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நீச்சமாக இருக்கும் பட்சத்தில், அவர் கால புருஷனுக்கு எத்தனையாவது ஆதிபத்தியம் உள்ளவரோ, அப்பாவக காரகத்துவம் வழியாக தொந்திரவு இருக்கும். தொந்தரவுக்கு பயப்படமாட்டார்.                           
50, காலபுருஷன், விதி, பிறந்த, ஜாதகம், அனுமதி, கோட்சாரம், எப்போது, எப்படி, எங்கே, தசா, புத்தி, எவ்வளவு காலம்.
51, வருட கிரகங்கள் இணைவு நல்ல யோகம் அதனுடன் மாத கிரகம் இணைய பாதள யோகம்.                                                               
52, 10-க்குடையவன் 6-க்குடையவன் சேர கடன் வாங்கி தொழில் செய்யக்கூடாது,                                                                  
53, புதன் தவணை கிரகம், ராகு அடமானம் கிரகம்,                                                                   
54, புதன் திசையோ அல்லது புதன் புத்தியோ நடக்கின்ற காலத்தில், தவணை வாங்குவார்கள்.                                                                   
55, ராகு திசை அல்லது ராகு புத்தி நடக்கின்ற காலத்தில் நகை அடமானம் வைப்பார்கள். மற்றும் வட்டிக்கு பணமும் வாங்குவார்கள்.                                                        
56, ஜோதிடருக்கு உண்டான கிரகம் சந்+கேது, செவ்+கேது, புத+கேது, அதாவது சந்+கேது ஜாதகம் படிக்காமல் ஜாதகம் சொல்வார்கள் செவ்+கேது அருள்வாக்கு சொல்வார்கள். புதன+fகேது கணித அறிவுடன் சொல்வார்கள்.                               
57, சந்திரன் எந்த ராசியில் இருக்கிராரோ அந்த பாவத்தில் மச்சம் இருக்கும். சந்திரன் உள்ள நட்சத்திரம் வீக்காக இருக்கும்.                                   
58, பேசாமல் இருந்தால் கும்பம் அதிகம் பேசினால் மகரம்                                 
59, புதன் வக்கிரமாக இருந்தாலோ, புதன் கேது நட்சத்திரத்தில் இருந்தாலோ, டிகிரி முடிக்க மாட்டார்கள். புதன், கேது இருந்தால் பட்டம் முடிக்க மாட்டார்கள்.                       
60, அப்படியே முடித்தாலும் அது சம்பந்தமாக வேலை செய்ய மாட்டார்கள்.                       
61, செவ்வாய் வக்கிரம் ஆனால், கணவனை விட்டு பிரிந்து  விடுவார். இது பெண் சாதகத்தில்                                                               
62, சுக்கிரன் வக்கிரம் ஆனால்  மனைவியை விட்டு பிரிந்து செல்வார். இது ஆண் சாதகத்தில்.                                                                        
63, கருப்பு டிரஸ் போட்டு வேலை கேட்டால் உடனே வேலை கிடைக்கும்.                     
64, காலனில் கடன் வாங்கி குளiகையில் கடன் அடைக்லாம். குளiகையில் ஆபரேசன் செய்யக் கூடாது. அதே போல் பௌaர்ணமி அன்றும் ஆபரேசன் செய்யக்கூடாது.                                                                      
65, 7-கிரகங்களுக்கு மேல் ஒரு ராசியில் இருக்க அதை லக்னமாக பாவித்து பலன் கூற சரியாக இருக்கும்.                                                       
66, குரு நீச்சமாக இருந்தால் சொந்த ஊரில் இருக்க மாட்டார்கள்.                               
67, புனர்பூ யோகம் உள்ள ஜாதகத்திற்கு முகூர்த்த லக்னத்திற்கு குரு சம்பந்தபட்டே ஆக வேண்டும்.
68, சந், சனி புனர்பூ யோகம். சந், சனி சேர நடக்கப் போகிறது. சந், சனி பார்வை நடந்து விட்டது.                                                               
69, நவாம்சத்தில் பெண் சாதகத்தில் சந் சனி பரிவர்த்தனை ஆனால் திருமணத்திற்கு முன் தவறு நடக்க வாய்ப்புள்ளது.                                                      
70, செவ் ராகு, சேர பல் தொந்தரவு இருக்கும். செவ் ராகு 3-பாவத்தில் இருக்க தம்பி, மைத்துனர், இருக்க மாட்டார்கள்.                                               
71, சந்+சனி+சூரி சேர்க்கை பிட்ரியூட்டி சுரப்பி பாதிக்கபட்டு குட்டையாக இருப்பார்கள.                                                                   
72, 4-தலை முறைக்கு 1-முறை பிரிவு நோய் வரும்.                                                        
73, கோட்சார கேது எந்த ராசிக்கு வருகின்றதோ அந்த வீட்டில் ஆரம்பத்தில் குரு இருந்தால் கெடுதலை செய்யவிட மாட்டார்.                                   
74,குருவும் சந்திரனும் 1-டிகிரியில் அல்லது நெருங்கிய டிகிரியில் இருக்க குடும்பம் அல்லது பொருளாதரத்தை குறைக்கும்.                                          
75, குருவுக்கு 5-ல் சந்திரன் 7-ல் சந்திரன் வரும் சமயம் எந்த பாதிப்பும் வரவில்லை எனில், நேரடியாக குழந்தையை கடுமையாக பாதிக்கும்.                       
76, குரு+சந் யோகம் வீரியம் குறைய வேண்டுமானால் சனியோ ராகுவோ சேர வேண்டும்.                                                                         
77, 1,5,9-க்குடையவர்கள் கெடாமல் இருக்க வேண்டும்.                                    
78, சூரி+சந்+குரு இவர்கள் ராகு கேதுவுடன் சேர இடம் மாற வேண்டும்.                   
79, சூரியன் புதன் பரிவர்த்தனை ஆனால் சூழ்நிலை மாறிப் படித்தல் சூரியன் 8-டிகிரி புதன் 4- டிகிரி ஆகாது.                                                                
80, சூரியன் சனி நல்ல வேலை, நல்ல உழைப்பாளi, குழந்தை தாமதமாக பிறக்கும்.
81, 2-கிரகங்கள் பரிவர்த்தனை ஆகும் போது பரிவர்த்தனை ஆகாத பாவத்தில் ராகு இருக்க கூடாது.                                                            
82, சூரியனுக்கு 5-டிகிரியில் எந்த கிரகம் இருந்தாலும் அஸ்தமனம் ஆகிவிடும்.
83, சூரியனுக்கு முன் பின் 2பாதத்திற்குள் எந்த கிரகம் இருக்கினறதோ அந்த கிரகம் அஸதமனம் ஆகிவிடும்
84, ஒரு மோசமான கிரக கூட்டு எனில், அதே கிரகம் கோச்சாரத்தில் வரும் போது அந்த இடத்தில் ராகு அல்லது கேது வரும் போது மோசமான சம்பவம் நடக்கும்.                                                                   
85, பிறந்த சாதகத்தில் உள்ள சனியை கோச்சார செவ்வாய் தொடும் போது விபத்து நடக்கும்.                                                           
86, கோட்சார செவ்வாய் பிறந்த சாதகத்தில் உள்ள சனியை கடக்கும் போதும் கோட்சார சனியை பிறந்த சாதகத்தில் உள்ள செவ்வாய் கடக்கும் போதும் விபத்து நடக்கும்.                                                                    
87, குரு சனியையோ செவ்வாயையோ பார்க்க விபத்து நடக்காது.                          
88, 2-பகை கிரகங்கள் 5-டிகிரியில் அமைவது கிரகயுத்தம். கிரகத்தில் ஒரு கிரகம் வக்கிரம் ஆனால் கிரகயுத்தம் இல்லை.                                      
89, பிறந்த சாதகத்தில் அஸ்தமனமான கிரகத்துடன் மாந்தியும் சேர்ந்து திரிகோணத்தில் இருக்க விஷம் சாப்பிடுவார்.                                             
90, காலவிதி சக்கரப்படி செவ்வாய் 1,8-டையவர் ஆவார் 3,6,10,11-உப ஜெயஸ்தானம் இவ்விடங்களiல் செவ்வாயின் நட்சத்திரம் உள்ளது எனவே செவ்வாய் நோய் என்று எடுத்துக் கொள்கின்றோம்.                                    
91, ஜென்ம நட்சத்திர தினத்தன்று பொருள் திருடு போனால் அல்லது காணாமல் போனாலும் கண்டிப்பாக திரும்ப கிடைக்கும்.
92,(1) லக்னத்திற்கு 5-க்குடையவனுக்கு 6-ஆம் அதிபதி கேந்திரத்தில் இருந்தாலும், 6-க்குடையவனுக்கு 5-ஆம் அதிபதி கேந்திரத்தில் இருந்தாலும் இந்த யோயகம் சங்கு யோகம் என்பார். அல்லது கொடியோகம்.                                      
92,(2)  இந்தயோகம் உள்ளவர்கள் தான் செல்லும் கார்களiல், கொடி கட்டி செல்வார்கள். (அதாவது கட்சி கொடி, அல்லது தேசியகொடி)
93, இந்த சங்கு யோகம் உள்ளவர்கள் உயர்பதவிகளiல் உள்ளவர்கள், அமைச்சர்கள், ஆளுநர், பிரதமர், மற்றும் கட்சி தலைவர்கள், கார்களiல் கொடியை கட்டி செல்வார்கள்.                                                              
94, சந்திரனுக்கு 6,8,12-இல் குரு இருந்தால் சகட யோகம். இந்த யோகம் உள்ளவர்கள், காலம் பூராம் கடனாளiகளாக இருப்பார்கள்.                                       
95, இதில் சந்திரன் - செவ்வாய், சூரியன், சனி வீட்டில் இருந்தாலும், அல்லது இந்த மூவரும் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தாலும் காலம் முழுவதும் கடன்காரர்களாக இருப்ப்பார்கள்.                                                        
96, இதே சந்திரன் செவ்வாய், சூரியன், சனி வீடுகளiல் இல்லாமல் மற்ற வீடுகளiல் சந்திரன் இருந்தால் கடன் அதிதிகமாக இருக்கும் இருந்தாலும் கடன் இருப்பதை காட்டி கொள்ள மாட்டார்கள் வெள்ளையும் சொள்ளையுமாக இருப்பார்கள்.
97, ராகு+சுக்கிரன், சேர்க்கை இருந்தால் அவர்கள் வைப்பாட்டி வைத்துக் கொள்வார்கள். அதுவும் விதவை யாக இருக்கும் வேறு மத பெண்கள்.. மேலும் ராகு+சுக்கிரன் சேர்க்கை திடீர் பணம் வரும், மனைவி நேயாளiயாக இருப்பாள். இது எப்பொழுது நடக்கும் ராகு, சுக்கிரன் தசா புத்தி காலங்களiல் தான் நடக்கும்.
98, சுக்கிரன், கேது, சேர்க்கை உள்ளவர்கள் விஷம் சாப்பிடுவார்கள். சுக்கிரன் கேது சேர்க்கை மனைவி அல்லது சகோதரி அல்லது அக்கா அல்லது அண்ணி விஷம் சாப்பிடுவார்கள். சுக்கிரன் கேது தசா புத்திகளiல் நடக்கும்.                                
99, அது போல் எந்த கிரகம் சுக்கிரனோடு சேருகிறதோ, அந்த கிரக காரகத்துவத்தால், விஷம் சாப்பிடுவார். உதாரணம் கேதுவுடன் சந்திரன் சேருகிறது, அப்ப தாயாலும் அல்லது மாமியாராலும் விஷம் சாப்பிடுவார்.
100, ஒருவருக்கு அஸ்டமசனி நடக்கும் காலம் பேராசையை உண்டு பண்ணும்

நபும்ஸக யோகம்.

                                                    நபும்ஸக யோகம். 

 

ஜோதிட நூல்கள் குறிக்கும் பல்வேறு நபும்ஸக யோகங்களை
பற்றி விவாதிக்கலாமா நண்பர்களே!
“ஆகிய சன்மத்தின் மதி இருக்க
ஆதவன் புதன் சனி மூவர்
வாகுசேரிரட்டை ராசியிலிருக்க
மற்றுமிம் மூவர் கடமையும்
மோகமாய் அங்காரகனுமே நோக்க
முகில் முலை மாதரை இகழ்ந்தே
ஏகமாங் குறியற்றண்ணர்களாவர்
என்பது திண்ணமென்றுரைக்கும்”
என்கிறது சாதக அலங்காரம்
விளக்கம்
=========
லக்னத்தில் சந்திரன் இருக்க, சூரியன் புதன் சனி
மூவரும் இரட்டை ராசியில் இருக்க, இம்மூவரின்
பாகைகளையும் கூட்டக் கிடைக்கும் இராசியை
செவ்வாய் பார்த்திடில் ஒற்றைக்குறி (ஆணாகவோ
பெண்ணாகவோ) இல்லாதவராக, அதாவது அலியாக
விளங்குவர் என்பது உறுதி..
மேலும் சுக்கிரனுக்கும், சனிக்கும் ஏழில் செவ்வாயோ,
சுக்கிரனுக்கும், செவ்வாய்க்கும் ஏழில் சனியோ
இருந்தால் அலியென்று பலதீபிகை பரை சாற்றுகின்றது.
ஏழாமிடத்தில் ராகு, தூமகேது நிற்ப்பது வீர்யமற்ற தன்மையை குறிக்கும் பலதீபிகை
ஏழுக்குடையவனும், சுக்கிரனும் சேர்ந்து ஆறில் இருந்தால்
ஜாதகனோ அல்லது துணைவியோ அலியாவாள்.
சாராவளியும், சர்வார்த்த சிந்தாமணியும் வழிமொழிகிறது
லக்னத்தில் நீசம் பெற்ற கிரகம், சனி, புதன் இருந்தால் அது
நபும்ஸக யோகமாகும். சாராவளி
லக்னாதிபதி, ஆறாமதிபதி, சனி ஆகியோர் கேந்திர கோணத்தில்
இருந்தால் அலியாவர் சாராவளி
களத்திர அதிபன் குரூரக் கிரகங்களுடன் ஒன்பதில் இருப்பது
அலியைக் குறிக்கும். சாராவளி
புதனும், ஆறாமதிபதியும் சேர்ந்து லக்னத்திலோ, ஆறாமிடத்திலோ இருப்பது அலித்தன்மையைக்
குறிக்கும். ஜம்புமஹரிஷி வாக்கியம்.
ஜெய்மினி சூத்திரம்
=================
எல்லோராலும் பயண்படுத்தும் விதத்தில் நடைமுறயில்
அனுபவத்திற்க்கு ஏற்ற விதி
புதனும், சனியும், சேர்ந்து சுவாம்சத்தில் இருந்து கேதுவால்
பார்க்கப் பட்டாலோ அல்லது கேதுவுடன் சேர்ந்து சுவாம்சத்தில்
இருந்தாலோ வீர்யமற்ற தன்மையை குறிக்கும்.
( இதற்க்கு தனி விளக்கம் எழுதுகிறேன்.)
மணிகண்ட கேரளம் கூறும் நபும்ஸக யோகம்
========================================
“உதையத்துக்கு ஐந்தில் மந்தன் ஓரெட்டில் பூமன் நிற்க
அதையத்துக்கு ஏழில் ராஜன் ஐந்தவன் கனலிற் சேர
மதியத்தில் அரவம் சேர்ந்து மந்தனுக்கு ஏழேயாகில்
விதியத்தின் மலடன் என்று விளம்பினர் நூல்வல்லோரே.”
விளக்கம் =லக்னத்திற்க்கு ஐந்தில் சனி நிற்க, எட்டில் செவ்வாய்
நிற்க, ஏழில் குருவிருக்க அவருடன் ஐந்தாமிடத்து
அதிபதியும், சூரியனும் சேர மதியுடன் பாம்பு சேர்ந்து
சனிக்கு ஏழில் நிற்க ஜாதகன் குழந்தைபேறற்றவன்.
“பத்துடன் பின் சேய் ஐந்தில் பகலவன் இருக்க நோக்க
ஒத்துடன் காரி லாபம் உதையனுங் கூடி நிற்க
அத்துடன் ஐந்தோன் நீசமாயின் மாதே கேளாய்
செத்துடன் பிறப்பில்லாமற் சென்மதி மலடாவான்”
“அந்தமாய் ஐந்தோன் நீசம் அதிற் குரு பார்வையாயின்
மந்தனார் ஐந்துக்கோளின் மழவிடை சேர்ந்து நிற்க
இந்தெரி லக்னாதி ரவி சேய் பார்க்கக் கூட
எந்த நாளளவு மட்டும் இருப்பனே மலடனாக”
“ஆறெட்டுக்குடையோர் சேர்வுற் ஐந்திடமாக நிற்க
வேறிட்டு மறையோன் நீசம் வேந்தனும் ஐந்தோனும் சேர
கூறிட்ட உதயம் காரி குளிகனும் கூடி நின்றால்
மாறெட்டின் மதி சேய் சேர்ந்தால் மலடனே மலடன் மாதே”
“இரு மூன்றுக்குடையோர் எட்டில் இருந்திட இரவி கூட
வரு மூன்றில் இரண்டில் எட்டோன் வக்கிரன் சேர்ந்து நிற்க
குரு நானி நீசமாகிக் கொண்டிடும் உதைய நீலன்
பருவான மதியும் பாம்பும் பற்றினால் மலடனாவான்”.
மணிகண்ட கேரளத்தில் கூறப்பட்ட இந்த யோகங்கள்
அணைத்தும் நந்தி தேவர் அருளிய “ஸ்திரி புருஷ ஜாதக
திறவுகோள்” என்ற நூலிலும் விளக்கப்பட்டுள்ளன.
ஜோதிட ரீதியாக மேற்க்கண்ட யோகங்கள் வீர்யமற்ற
நபும்ஸகத் தன்மையை காட்டுகின்றன என்ற போதும்
வினைப்ப்யனே ஜாதகத்தில் கிரகநிலையாக பிரதிபலிக்கிறது.
ஜாதக ரீதியாக இந்த குறைகளை கண்டு அதை தீர்க்கும் உபாயம் ஜோதிடர்களான நம்மிடம் உள்ளது.
குறிப்பாக புதன், சனி, கேது இவர்களின் சேர்க்கை பார்வை சாரம், மூன்று ஐந்து ஒன்பது பண்ணிரெண்டாம் பாவ சம்பந்தம் பெறும் போது கவனித்துப்பார்த்து கையாள வேண்டும்.
ஐந்தாமிடம் புத்திரஸ்தானம் என்றாலும் அதன் சூட்சுமம் பண்ணிரெண்டாம் பாவத்தில் இருக்கிறது.
இதில் மூன்றாம் பாவத்தில் தான் ஒரு மனிதனின் எண்ணமும் எழுச்சியும் உணர்ச்சியும் அடங்கியிருக்கிறது.
ஆகையால் காலபுருஷனின் மூன்றாமிடத்தை மைதுனம் எனும் மிதுனமாக கைக்கொண்டாலும் அதில் தான் கதை பிடித்த ஆனும் யாள் பிடித்த பெண்ணும் சின்னமாக கொண்டனர்.
ஒரு ஆணின் வீரத்தையும் பெண்ணின் நளினத்தையும் கானும் இடம் மிதுனம்.

அபிஜித் முஹூர்த்த மகிமை:-

                                      அபிஜித் முஹூர்த்த மகிமை:- 

 

ஒவ்வொரு நாளும் மதியம் 12.02 முதல் 12.50 வரை அபிஜித் முஹூர்த்தம் என்பர். இதன் தன்மை 12.05 முதல் 12.45 வரை அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் முக்கியமான வேலை எது செய்தாலும் அந்த வேலை கண்டிப்பாக அதிக பலனைத் தரும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது அனுபவ பூர்வமான வாக்கு. இண்டர்வியூவிற்கு செல்லும் பொழுது மதியம் வீட்டை விட்டு உங்கள் பெரியவர்களின் பாதங்களை 3 முறை தொட்டு நமஸ்கரித்து கண்களுக்கு ஒற்றிக் கொண்டு மெதுவாக வலது காலை வெளியே வைத்து மௌனமாக அந்த சமயத்தில் சென்றால் கண்டிப்பாக உங்களுக்கு ஜயம் உண்டாகும். அந்த சமயத்திற்கே நீங்கள் ஏதாவது சாப்பிட்டிருக்க வேண்டும். முக்கியமான காகிதங்களின் மீது கையொப்பம் செய்வதனாலும், மேலதிகாரிகளுடன் முக்கியமான விஷயங்களை பேசுவதனாலும், எப்பேற்பட்ட பயணமானாலும் இந்த சமயம் நல்லது. புது வஸ்திரம், நகை, சாமாங்கள் வாங்குவதனாலும் இந்த சமயம் நல்லது. நல்ல நாணயமான, தரமான அதிக காலம் இருக்கும் படியான பொருட்கள் நியாயமான விலையில் கிட்டும். சுபகாரியத்திற்கு கண்டிப்பாக இந்த சமயம் உத்தமம். இந்த சமயத்தில் பஞ்சாங்கம்படி ராகு காலம், துர்முஹூர்த்தம், வர்ஜ்யம், அனுகூலமற்ற ஹோரை போன்றவை இருந்தாலும் இவற்றின் தன்மை எதுவும் இந்த சமயத்தில் இருக்காது. இது 100% உண்மை. புது வாகனத்தை முதன்முறையாக உபயோகப்படுத்த வேண்டும் என்றாலும் அல்லது கடையிலிருந்து டெலிவரி எடுக்க வேண்டும் என்றாலும் இது நல்ல சமயம். புது வஸ்திரத்தை அணிந்து கொள்வதற்கும், புது பொருட்களை உபயோகப்படுத்துவதற்கும் இது உசிதமான சமயம். எப்பேற்பட்ட கடனைத் தீர்ப்பதற்க்கு இதை விட வேறு நல்ல சமயம் இல்லை. சீக்கிரத்தில் கடன் தீர்ந்துவிடும். இந்த சமயத்தில் கடன் வாங்கினாலும் வெகு சீக்கிரமாக கடன் தீர்ந்துவிடும். அந்த பணம் துர்விநியோகம் ஆகாது. இந்த சமயத்தில் கேஸ் சிலிண்டர் புக் செய்து பாருங்கள். உங்களுக்கு தெரியும் அதன் தன்மை. இந்த சமயத்தில் சாப்பிட்டால் அஜீரணத்திற்கு வழி வகுக்காமல் சாப்பிட்டவை விரைவாக ஜீரணமாகும்.

பணத்தை ஈர்க்கலாம் வாருங்கள் ...

                                பணத்தை ஈர்க்கலாம் வாருங்கள் ... 

 

வியாபாரத்தில் / தொழிலில் அதிக லாபம் அடைய ...
+++++++++++++++++++++++++++++++++++++
(1) இது செவ்வாய் அல்லது வெள்ளி அன்று செய்ய வேண்டியது. சிறிது வெள்ளம் மற்றும் வருத்த (அல்லது) வேக வைத்த கொண்டை கடலை இரண்டையும் நமது இஷ்ட தெய்வம் எதுவோ அவருக்கு நிவேதனம் செய்து சிறு குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.
(2) இது வியாழக்கிழமை சூரிய உதயத்திற்கு முன் செய்ய வேண்டியது. 7 லட்டு அல்லது மஞ்சள் நிற இனிப்பு பண்டத்தை வாங்கி வீட்டில் உள்ள யாரேனும் வியாபாரம் / தொழில் செய்யும் நபரை கிழக்கு பார்த்து நிற்க வைத்து 7 (ஏழு) முறை உடம்பு மற்றும் தலையை சுற்றி தனியாக வைத்து விட வேண்டும். பின்பு அடுத்த நாள் சுற்றி போட்ட நபர் சூரிய உதயத்திற்கு முன் அந்த லட்டுகளை ஏதேனும் வெள்ளை நிற பசுவிற்கு அளித்து விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து விட வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------
(1) சனிக்கிழமை அன்று காலை 7-8க்குள் அரச மரத்தை 108 முறை சுற்றி பின்பு மரத்தடியில் லக்ஷ்மி படத்திற்க்கு தூப தீபம் காட்டி, நிவேதனம் செய்து வர பண புழக்கம் அதிகரிக்கும்
(2) செவ்வாய் அன்று வீட்டின் தெற்கு பகுதியில் காலை 6-7 மணிக்கு 7 மண் அகலில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வைத்து மனமுருகி வேண்டி வந்தால் பல வருடங்களாக திரும்ப வராத கடன்கள் கூட திரும்ப கிடைக்கும். ஏமாந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும்.நம்பிக்கையுடன் ஒவ்வொரு வாரமும் செய்து வர பலன் தெரியும்.
(3) 7 பல் உள்ள வெள்ளை பூண்டு வாங்கி பற்களை உரித்து 7 காய்ந்த மிளகாய்களையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி நம் வீடு, கடை ஆபீஸ் வாசலில் தொங்க விட்டு தூப தீபம் காட்டி வர வீட்டினுள் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் விரட்டப்படும். மேற்கொண்டு எதுவும் வராது. வாரம் ஒரு முறை மாற்ற வேண்டும்.
(4) வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் முன் அருகம்புல்லின் நுனியை பறித்து பாக்கெட்டில் வைத்து செல்ல, செல்லும் காரியம் வெற்றியை தரும்.
(5) துளசி செடியையும் தொட்டாற் சிணுங்கி செடியையும் ஒரே தொட்டியில் வைத்து வீட்டில் வளர்த்து வந்தால் குடும்ப
சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும்.
(6) செல்கின்ற வேலை சுலபமாய் முடிய ஆரஞ்சு மரத்தின் வேரை பாக்கெட்டில் வைத்து செல்லலாம்.
(7) மாணவ மாணவியர் படிக்கும் பொழுது இடது கையை மேஜையில் ஊன்றி படிக்க, படிக்கின்ற விஷயம் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். பரிட்சை எழுதும் பொழுதும் இதை கடை பிடிக்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------
திருவோணம் அன்று விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம் பருப்பு பாயசத்தினால் நிவேதனம் செய்து அதை தானம் செய்து வர நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.
தீருவீழிமலை சென்று படிக்காசு வைத்து வணங்கி வர பண வருவாய் அதிகரிக்கும்.
திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால், பல வருடங்களாக தீராத நோயும் எளிதில் குணமாகும்.
வறுமை நீங்க ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட சுபிட்சம் பெறலாம்.
பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மிருகசீஷ நட்சத்திரத்தில் முருகரை  வழிபட்டால் கட்டாயம் கிடைக்கும்.

 

 

திருமணவாழ்வு:-

                                                          திருமணவாழ்வு:- 

 

ஏழில் செவ்வாய் இருந்தால் தோஷம் உண்டு(சில விதி முறைகள் உள்ளது) கணவன்,மனைவியிடை யோ கருத்து வேறுபாடு,முரண்பாடுகள்,தவறான நடத்தை உடையவர்கள்.சிவப்பு நிறமுடையவர்கள் ஆனால் அழகு இருகாது. மனைவியின் மார்பககம் மிக உறுதியாகவும் அழகுடன் இருக்கும்.
ஏழாம் அதிபதியின் நட்சத்திராதிபதி செவ்வாய்யாகில் உடல் உறவில் திருப்தி இருக்காது
ஜாதகர்/ஜாதகிக்கு உஷ்ண ரீதியான நோய்யுடை யவர்கள்.மனைவியால் அவமானம் நஷ்டம் சண்டை யிடுவர்கள் ,ஏற்படும். இருதாரம் அமையும்.பிடிவாத குணமுள்ளவர்கள். இதனால் வாழ்கை சந்தோஷமாக அமையாது.ஆயுள் தோஷம் ஏற்படும்.
ஏழில் செவ்வாய் தோற்றிடில் வெகுகு போர் !
திருந்திய செவ்வாய் ஏழில் சோர்ந்திடத் ஸ்திரியே சாவள் மருங்கொடு ரோகக்காரி ஆககவும் வழக்கு
செவ்வாய் ஏழில் இருந்தால் மனைவி இறந்து விடுவாள்.அல்லது நோயுடையவளாக இருப்பாள்.
செவ்வாய் கதிர் கூடி எங்கே இருந்தாலும் அமங்கலி
ஏழில் செவ்வாய் சனி இருப்பின் பலர் தொடர் கொள்வார்கள்.
ஏழில் செவ்வாய் சந்திரன் கூடியிருந்து சனி பார்த்தால் கணவருக்கு தெரிந்தே பலருடன் தொடர்பு கொள்வாள்.
செவ்வாய் சுக்கிரனும்இணைந்து ஏழில் இருந்தால் பலர் தொடர்பு ஏற்படும்.
நவாம்சத்தில் ஏழாம் பாவம் செவ்வாயின் வீடாக அமைந்து சனி பார்த்தால் ஜெனன உறுப்பில் நோய் ஏற்படும்.
ஏழில் செவ்வாய்,ராகு இருந்தால் சமுதாய நடைமுறைகளுக்கு ஒவ்வாத திருமணம் நடைக்கும்
செவ்வாய் வீடோ,செவ்வாய் நவாம்சமோ,ஏஏழாம் இடமாக அமைந்தால் கணவன் பெண்ணாசை பிடித்தவனாகத்த் திரிவான் கொடுமைக்காரனாக இருப்பார்கள் குடும்ப வாழ்வு பாதிக்கப்படும்.
செவ்வாய் ஏழில் இருந்து நான்கம் பார்வையாக பத்தாம் பாவத்தையும் எட்டாம் பார்வையாக இரண்டாம் பாவத்தையும் பார்தால் முன்கோபம் குடும்பத்தில் அடிக்கடி தகராறு முரட்டு உஉடல் உறவும். வாடகை வீடும்,தந்தையின் சொத்தை விரயமாக்குவதும். சண்டை தகராறு ஏற்படும்.
மேஷம்,ரிஷபம்,மிதுனம்.கடகம்,சிம்மம்,கன்னி, துலாம்,மகரம்.கும்பம் இந்த லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ஏழில் இருப்பது தோஷம் இல்லை.

லக்னத்தில் துவி கிரக யோகம்.

                                          லக்னத்தில் துவி கிரக யோகம். 

 

-------------------------------------------------------
1. சூரியன்,சந்திரன்-ஜாதகருக்கு அதிக குழந்தைகள் உண்டு.பெற்றோருக்கு துக்கமும்,மனகஷ்டமும் உண்டு
2. .சூரி-செவ்---பொல்லாதவர்,எப்போதும் அலைச்சலுடையவர்,கெட்டபுத்தியுடையவர்,தந்தை துக்கமுடையவர்.
3. சூரி – புத –தீயவர், பாவ புத்தியுடையவர், ஒழுக்கமில்லாதவர், உற்றார் உறவினரால் கைவிடப்பட்டவர்,ஆரோக்கியமற்றவர்,வாகன யோகமில்லாதவர்
4. சூரி—குரு = கோபமுடையவர்,மந்தபுத்தியுடையவர்,உடல் நலமில்லாதவர்,முட்டாள், செய் நன்றி மறப்பவர், திருடர்,வெறுப்புடையவர்.
5. .சூரி – சுக் = பண்டிதர்களை வெறுப்பவர், குறைவான குழந்தைகளையுடையவர்,கோபமுள்ளவர்,கொடூரமானவர்,ஆசையில்லாதவர், அன்னியரது கஷ்டத்தையுடையவர், நோயாளி.
6. சூரி – சனி = முட்டாள், வியாதியுடையவர்,சுற்றத்தால் கைவிடப்பட்டவர்,கெட்ட குணமுள்ளவர்.
7. சந் – செவ் = தீய குணமுடையவர், செல்வமில்லாதவர், வாக்கில் சமர்த்தர், நற்குணமற்றவர்.
8. சந் – புத = நல் வாக்கு உடையவர்,செல்வந்தர், கம்பீரமானவர்,கருணையுடையவர்,வணங்கத்தக்கவர்,ஆயினும் பிற பெண்கள்பால் நாட்டமுடையவர்.
9. சந் – குரு = அழகுடையவர், நீண்ட ஆயுளுடையவர்,நற்புகழுடையவர்,நற்கண்களுடையவர்,நல்ல தலைமயிருடையவர்
10. சந் –சுக் =நல்ல விஷயங்களில் ஆசையுடையவர்,அழகிய முகமுடையவர்,பணமுடையவர், அரச பிரியமுடையவர்,தர்மவான்
11. சந் – சனி = தீயவழிகளில் செல்வம் சேர்ப்பவர், அற்ப குணமுடையவர்,மற்றவர் பணத்திற்கு ஆசைப்படுபவர்,தீயவர்களிடம் தோல்வியடைபவர்.
12. செவ்வாய் –புதன் = பிறரிடம் ஏமாறுபவர், வார்த்தை ஜாலமுடையவர்,எப்போதும் வாசிப்பதில் ஆசையுடையவர்,தீய எண்ணமுடையவர்.
13. செவ்வாய் – குரு = கடின சுபாவமுடையவர்,,குறைவான குழந்தைகளுடையவர், தீயன செய்வதில் ஆசையுடையவர்,பிறருக்கு மகிழ்ச்சியளிப்பவர்.
14. செவ் –சுக் = கபமும்,வீணான சிரமும் உடையவர்,ஏமாறுபவர், செய்நன்றி மறந்தவர்,வீரமுள்ள மகனுடையவர், தோல்வியடைபவர்.
15. செவ் –சனி = கொடுமை செய்வதிலும்,கடுமையாக பேசுவதிலும் வல்லவர்,பிறர் பொருளை அபகரிப்பவர்,அதிகமாக கோபமடைபவர்.
16. புத –குரு = வணங்கற்கினியவர்,அழகானவர், சகல சௌபாக்கியமுடையவர், வசீகரிக்க வல்லவர், மிகுந்த செல்வமுடையவர்.
17. புத – சுக் = இராஜ காரியங்களில் சமர்த்தர், அரசரால் கொண்டாடப்படுபவர்,அநேக சாத்திரங்களில் ஆவலுடையவர்,செல்வமுடையவர்,உண்மையானவர்.
18. புத – சனி= அரச வேலைகளில் சமர்த்தர்,தீயவர்,ஒழுக்கமற்ற மனைவியோடு வாழ்பவர், பணமில்லாதவர், மக்களால் வெறுக்கப்பட்டவர்.
19. குரு –சுக் =அரசனுக்கு விருப்பமுடையவர்,அதிக பணத்தாசை பிடித்தவர்,நீதியறிந்தவர்,தனமுடையவர்,சாத்திர மறிந்தவர்.
20. குரு – சனி =அதிக பணமுள்ளவர்,வித்தியாசமானவர்,மாயையில்லாதவர்,கடினமான மனதுடையவர்,ஆபத்துகளையுடையவர், சத்தியமற்றவர்.
21. சுக் – சனி =புத்தியில்லாதவர்,செய்நன்றி மறந்தவர்,பிறன் மனை நாட்டமுடையவர், எப்போதும் சற்றத்தாரிடம் அன்புடையவர்.
22. சோம்பல், சற்று விகார தோற்றம், குணக்கேடு, பிறந்த குழந்தை xx வயதிற்குள் உயிரைவிடும்
அபாயம் உண்டு. லக்கினாதிபதி வலுவாக இருந்தால் தப்பிப்பிழைக்கும்.
தப்பினாலும், வலிப்பு, இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்கள்
உண்டாகலாம்

கால சர்ப்ப யோகம் (அ) தோஷம்

                                    கால சர்ப்ப யோகம் (அ) தோஷம்

 

காலனான ராகுவுக்கு, சர்ப்பமான கேதுவுக்கும் இடையில் கிரகங்கள் இருப்பது கால சர்ப்ப யோகம் எப்படும்.கால சர்ப்ப யோகம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கிடையே மற்ற ஏமு கிரகங்களும் அடைபட்டு இருப்பதாகும்.இது ஜாதகத்தில் உள்ள நல்ல யோகங்களை நசுக்கி கெடு பலன்களை தரும் என்ற கெடுபலன்களையே தரும் என்ற கருத்து வேரூன்றி உள்ளது.இது சரியானாதா? அல்லது நல்ல பலன்களையும் அளிக்குமா? தீய பலனை அளிக்குமா? நாம் அனுபவரிதியாக ஆராய்ச்சி செய்வேம் எதனால் கால சர்ப்ப யோகம் அவயோகம் என்று சொல்லப்படுகிறது? ராகு, கேது இருவரும் விஷம் உள்ள பாம்புகள் இவர்களுக்குடையே சிக்கி முன்னும் பின்னும் இவர்களின் விஷத்தால் தாக்கப்படுவதால் கிரகங்கள் செயல் இழக்கின்றன என்பது கருத்து முதலில் ராகு, கேதுக்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ராகுவிற்கு பாம்பின் உடல் குணத்தால் வாலில் விஷம், கேதுவிற்கு பாம்பின் தலையானதால் தலையில் விஷம்.இந்த அடிப்படையில் கால சர்ப்ப யோகம் அமைகிறது.
கால சர்ப்ப யோகத்தைப் பற்றி ஜோதிஷாமிருதம்
என்ற தெலுங்கு நூலிலும், மலையாள நூலிலும் விளக்கப்பட்டுள்ளது.
"அக்ரே ராகு, அதோ கேது சர்வ மத்யகதர கிரகாயோகம் கால சர்பாக்கியம் ந்ருபசஸ்ய விநாசனம் " லக்கினத்திற்கு முன்னால் ராகு பின்னால் கேதுவும் இருக்க வேண்டும்.ராகு இருக்கும் வீட்டிற்கும் கேது இருக்கும் வீட்டிற்கும் இடையில் இருக்கும் வீடுகளில் அல்லது வீட்டில் மற்ற ஏழு கிரங்களும் இருக்க வேண்டும்.இது நாசத்தை உண்டாக்கும்.
"ஸர்வ நாபோகதிஷ்டந்தி அகுசிசினோ அந்தராலா
ராசிகதா மாலியவந்த ரஹிதாநாதா காலசர்ப்ப
யோகஸ்யா"
(கேரளசாஸ்திரம்)
ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் வீடுகளில் இடைவிடாமல் கிரக மாலிகா யோகத்தில் உள்ளது போல் கிரகங்கள் இருக்க வேண்டும்.
"அனுலோம விலோமத்கலா துவிவிதேயம்
காலசர்ப்ப யோகச்சா அந்தோயக்தம்
அதிஷ்டம் கரோதிபூர்வம் மஹாசுபதா "
அனுலோம கால சர்ப்ப யோகம்.விலோம கால சர்ப்ப யோகம்.பின்னது தோஷம் உள்ளது கெடு பலனைத்தரும் முன்னது யோகம் தரும் கெடுபலன்கள் குறைவாக இருக்கும்.
விலோம கால சர்ப்ப யோகம் :-
கிரங்களுக்கு முன்னால் கேதுவும் பின்னால் ராகுவும் இருக்க வேண்டும்.கிரகங்கள் கேதுவின் முன்னால் உள்ள கிரகங்களைத் தரக்கப்படுகின்றன. பின்பக்கம் ராகு தனது வாலை கிரகங்கள் பக்கம் நீட்டிக் கொண்டு செல்வதால் வாலில் இருந்து வெளிப்படும் விஷம் பின்பக்கமாக தாக்குகிறது ஆகா இருபக்கம் விஷம் பாதிப்பதால் தோஷத்தைதரும் கெடுபலன்களை அளிக்கும்.
அனுலோம கால சர்ப்பயோகம் :-
கிரகங்களுக்கு முன்னால் ராகுவும் பின்னால், கேதுவும் இருக்க. வேண்டும்.எல்லா கிரகங்களும். ராகுவின் வாயை நொக்கி நகர்கின்றன கேது பின்னால் தனது கால்களை கிரகங்கள் பக்கம் நீட்டிக் கொண்டு விலவி செல்கிறது. ஆக ராகுவிற்கு வாயில் விஷம் இல்லாதாலும், கேதுவிற்கு கால்களில் விஷம் இல்லாததாம் கிரகங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவது இல்லை இந்த அமைப்பு தோஷம் ஆகாது யோகமாகம்.சுப பலன்களை தரும்.
இது கால சர்ப்ப யோகமாகும் கால சர்ப்ப யோகத்தை பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. கிரகங்கள் எல்லாம் ராகு கேதுக்களுக்கிடையே இருக்க வேண்டும்.ராகுவுடனே, கேதுவுடனே கிரகம் இணைந்திருக்கலாம்.ஆனால் ராகு, கேது அச்சுக்கு வெளியே இருக்கக்கூடாது.
ராகு,கேதுவுக்கிடையே காலி வீடுகள் இருக்கலாம். லக்கினம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பெரும்பாலும் முன்வயதில் அதிகமான கஷ்டங்களையும் சுப பலன்கள் குறைவாகவும் அளிக்கும்.ஆண் /பெண்களுக்கு 32 வயதுக்கு மேலும் ராஜயோக பலனைத்தரும்.
முன்னால் கேதுவும் பின்னால் ராகுவும் இருக்க. அதாவது எல்லா கிரகங்களும் கேதுவை நோக்கி நகர்ந்தால் தோஷமுள்ள அமைப்பாகும். தீமைகளைத் தரும்.முன் வயதில் சரதாரண நிலையில் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி பின் வயதில் மிக உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். குறைந்த பலனே கிடைக்கும்.
ராகுவுக்கு முன்னாலும் கேதுவுக்கு பின்னாலும்
கிரகங்கள் இருந்தால் (ராகுவை நோக்கி எல்லா கிரகங்கள் நகர வேண்டும்) சுப பலனைத் தரும். கெடு பலன் மிகக்குறைவாகவே இருக்கும். வயது ஆக இவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவர்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களானாலும் உயர்ந்த நிலையையும், புகழையும் அடைவார்கள். முகூர்த்த சந்திரிகையில் காலானை ராகுவுக்கும், கேதுவை சர்ப்பத்திற்கு ஒப்பிடுகின்றனர்.
கால சர்ப்ப யோகத்தில் ஆறு விதமானஉட்பிரிவுகள். 1--அனந்த கால சர்ப்ப யோகம்
2-குளிக கால சர்ப்ப யோகம்
3-வாசுகி கால சர்ப்ப யோகம்
4-சங்குபல கால சர்ப்ப யோகம்
5-பாத கால சர்ப்ப யோகம்
6-மகா பாத கால சர்ப்ப யோகம்
1-அனந்த கால சர்ப்ப யோகம் :-
லக்கினத்தில் கேது ஏழில் ராகு, லக்கினத்தில் ராகு ஏழில் கேது அமைந்தால் தாமதத்திருமணம், திருமணத்திற்குப் பின்பும் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபடு ஏற்படும். சில சமயம் பிரிவும் ஏற்படும.
2-குளிக கால சர்ப்ப யோகம்:-
2-ல் ராகு,8-ல் கேது (அல்லது) 2-ல் கேது,8-ல் ராகு என்ற அமைப்பில் அமைந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு பிறந்த ஊரை விட்டு வெளியூரில் ஜீவனம், கல்வித்தடை, குடும்ப சிக்கல், கோர்ட் கேஸ் வழக்கு, அலைச்சல், சொத்துக்களை இழப்பார்கள் 33 வயது வரை கஷ்டங்களை கொடுத்து அதன் பின் யோக பலனை அடைவர்கள்.
3-வாசுகி கால சர்ப்ப யோகம் :-
3-ல் ராகு, 9-ல் கேது,அல்லது 3-ல் கேது, 9-ல் ராகு இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு இளமையில் போராட்டம் தான் சாப்பிடக் கூடச்சிரமான நிலை, வசதியின்மை, 3-ல் ராகு தைரியத்தையும் ஊக்கத்தை தருவார்கள். 9-ல் கேது தந்தை வழி பூர்விகம் பாதிக்கும். 33 வயதிற்குப்பின் யோகம் கிட்டும். சுய வழியில் சம்பாத்தியம், சகோதர /சகோதரிகளின் நலம் பதிக்கும்.
4-சங்கு கால சர்ப்ப யோகம் :-
4-ல் ராகு, 10-ல் கேது, அல்லது 4-ல் கேது, 10-ல் ராகு இருந்தால் குடும்பத்தில் சில சுப பலன் தடைகள். வாழ்வில், முற்பகுதியில் வெற்றி புகழ் அந்தஸ்து அடைவார்கள்.ஆரம்பத்தில் கல்வியில் தடை ஏற்படும். பிறகு உயர் கல்வி அமையும் (மருத்துவ கல்வி) பிற கிரகங்களின் தொடர்புகளுக்கு ஏற்ப பலன் மாறுபடும்.
5- பாத கால சர்ப்ப யோகம்:-
5-ல் ராகு, 11-ல் கேது, அல்லது 5-ல் கேது,11-ல் ராகு இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு புத்திரதோஷம், நண்பர்களால் துண்பம். ஆரோக்கியம் குறைவு 48- வயதிற்குபின் யோகம் அமையும்.குரு இவர்கள் பார்த்தால் சிறப்பு பெறுவர்கள்,
6- மகா பாத கால சர்ப்ப யோகம் :-
6-ல் ராகு, 12-ல் கேது அல்லது 6-ல் கேது, 12-ல் ராகு இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு சிறைவாசம், உயர் கல்வி, ஆராக்கியத்தில் பதிப்பும், மத்திய வயது முதல் ஏற்றமான வாழ்வு அமையும்.
கால சர்ப்ப யோகம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களுக்கு இடையில் பிரதட்சிணம் என்னும் கடிகார சுற்றான இடமிருந்து வலமாக அமைய வேண்டும். இந்த அமைப்பை பெறறவர்கள் தன் வாழ்க்கையில் 35 வயது வரையில் கஷ்டத்துடன் வாழ்ந்து பின் 35 வயதுக்குமேல் வாழ்க்கையின் தசா புத்திகளின் அடிப்படையிலும். யோக பலன்களின் அடிப்படையில் முன்னேற்றம் ஏற்படும்.

 

குரு சனி சேர்க்கை

                                                    குரு சனி சேர்க்கை 

 

குரு ஸ்ரீ ராகவேந்திரய நமஹ
வணக்கம்.
குரு சனி சேர்க்கை. இவர்கள் இருவரும் சேரும் பொழுது, அதீத நன்மைகளும் மற்றும் அதீத தீமைகளும் கிடைக்க பெறுகிறது. இவற்றின் பலன் லக்னம் மற்றும் ராசி பொறுத்தே அமைகிறது.
குரு பகவான் என்னும் வியாழன் கிரகம்
=====================================
இது மிக பெரியது என்பது அனைவரும் அறிந்ததே, எனவே தான் சுப ராஜ கிரகம் என்று அழைக்கிறோம். இது ஒரு வருடத்திற்கு ஒரு முறை ராசி விட்டு ராசி மாறும் கிரகம் ஆகும். இவர் அனைத்து சுப நிகழ்வுகளுக்கு காரணமாக இருப்பவர் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. குரு சிறப்பு பார்வைகள் (5, 9) இவர் இருக்கும் இடத்தில் இருந்து திரிகோணத்தில் அமைவது சிறப்பு. இதனால் இவர் சுப கிரகமாக பார்க்கப்படுகிறார்.
சனி கிரகம்
==========
இது வான் மண்டலத்தில் காணப்படும் இரண்டாவது பெரிய கிரகம், இவர் அசுப தன்மை நிறைந்த கிரகம் என்று ஜோதித் நூல்களால் வர்ணிக்கப் படுகிறது. எனவே இவர் அசுப ராஜ கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
சனி பார்வை - இவர் இருக்கும் இடத்தில் இருந்து உப ஜெய ஸ்தானத்தில் (3 & 10) அமைவதால் பல இடையூறுகள் ஏற்படுத்தி பின் வெற்றி தருவார் சனி. இரண்டு கேந்திர பார்வை மற்றும் ஒரு உப ஜெய ஸ்தான பார்வை. தனது சொந்த ராசியை பார்க்கும் போது மட்டும் சில நன்மைகளை செய்வார்.
ஆய்வு
======
குரு (தனித்து) மற்றும் சனி தான் அமரும் இடத்தை பாழ் செய்பவர்கள் என்ற விளக்கம் ஜோதிட நூல்களில் உள்ளன. குருவுடன் 10 பாகைகுள் சேரும் எந்த ஒரு கிரகமும் சுபதன்மை அடைகிறது. அதுபோல் சனியுடன் 10 பாகை இடைவெளியில் சேரும் ஒரு கிரகம் அசுப தன்மை அடைகிறது. ஏனெனில் சனி, முழு அசுபர். சனி நம் கர்மத்தை மற்றும் பாவங்களை குறிப்பதால் அவர் கர்ம காரகன் மற்றும் ஆயுள் காரகன். நாம் செய்த பாவங்களின் கெடு பலனை அடையும் வரை இவரின் ஏழரை நாட்டு சனி, அஷ்டம சனி, அர்த்த அஷ்டம சனி, மேலும் சனி திசை மற்றும் புத்திகளில் ஆயுளை நீடித்து, பாவத்தின் பலனை அனுபவிக்க வைப்பதுதான் இவரின் தலையாய பணி. எனவே சனி எந்த கிரகத்துடன் சேர்க்கை பெறுகிறாரோ, அந்த கிரகத்தில் காரகத்துவம் மூலம் ஜாதகன் பாவம் தாங்கி பிறந்திருக்கிறான் என்று கொள்ளலாம். உதாரணமாக, சனியுடன் சேரும் ராகு, இந்த அமைப்பில் ராகு பிதாமாகரை குறிக்கும் கிரகம். சனி இவருடன் சேர்க்கை பெற்று இருப்பதால், தனது தந்தையின் தந்தை வழி பாவத்தால் பாதிக்க பட்டு இருக்கிறார் என்று பொருள், மேலும் இந்த சேர்க்கை கேந்திர மற்றும் திரிகோன ஸ்தானங்களில் அமையும் போது, ஜாதகனின் கேந்திர மற்றும் கோணங்கள் பாதிப்படையும். சனி எந்த ஒரு லக்ன/ராசிக்கு யோகாதிபதியாக இருந்தாலும் இந்த நிலைமைதான். ஏனெனில் இவர் நீதிமான். ஆனால் குருவின் பார்வை இந்த சேர்க்கை மேல் இருப்பின், பரிகாரம் செய்து பலன் பெறலாம். குரு இவர் நமது நமது புண்ணியங்கள் மற்றும் தெய்வ அருளை பற்றி தெரிவிக்கும் கிரகம். தன்னிடம் சேர்ந்த கிரகத்தின் காரகத்துவம் மூலம், முற்பிறவியில் நம் குடும்பமோ அல்லது நாமோ செய்த நன்மைகள் மற்றும் புண்ணியங்களை குறிப்பார். அந்த பலன்களை தன் பார்வை மூலம் வெளிப்படுத்துவார். அதனாலே குரு சேர்க்கை பெற்று இருந்தால் அவர் இருக்கும் இடம் பாழடைவதில்லை. தனித்த குருவின் பார்வையும் நன்மை செய்யும். ஆனால் கிரக சேர்க்கை பெற்ற குரு அதிக பலம் பொருந்தியவர் என்று போற்றப்படுகிறார். இவரின் கிரக சேர்க்கை அசுப கிரகங்களான செவ்வாய், சூரியன் மற்றும் தேய்பிறை சந்திரன். இவர்களுடன் சேரும் போது, தன்னுடன் சேரும் அசுப கிரகத்தின் தன்மையை மாற்றி சுபமடைய வைக்கிறார். மேலும், தன்னுடன் அசுப கிரக பார்வை கூட சுப தன்மை அடைய வைக்கிறார். இவற்றில் ராகு, கேது சேர்க்கை மட்டும் சில விதி விலக்குகள் உண்டு. இதில் குரு மற்றும் சனி சேர்க்கை பற்றி இனி வரும் பதிவுகளில் விரிவாக பார்கலாம்.
மேச லக்னம்
============
இதன் லக்னாதிபதி செவ்வாய். இவர் குருவின் நண்பர், சனியின் பகைவர். வேத ஜோதிட விதிப்படி, லக்னாதிபதி என்பது ஜாதகரை குறிப்பதால், இதன் ஸ்தான பலம் மிகவும் முக்கியம். இவரின் பலம் கொண்டே நாம் பிற யோகங்கள் மற்றும் தோஷங்களை கூறவேண்டும்.
குரு. இவர் மேச லக்னத்தின், விரய ஸ்தானாதிபதி (12) மற்றும் பாக்கிய ஸ்தானாதிபதி (9) விரய ஸ்தானாதிபதியாக இருந்தாலும், இவர் பாக்கிய ஸ்தானாதிபதியாக உள்ளதால், இவர் நன்மை செய்பவர் ஆகிறார், மேலும் இவர் லக்னாதிபதியின் நண்பர்.
சனி. இவர் மேச லக்னத்தின், ஜீவன ஸ்தானாதிபதி (10) மற்றும் லாபஸ்தானாதிபதி (11) ஆகிறார். இவர் லக்னாதிபதிக்கு பகைவர் என்பதாலும் மற்றும் இயற்கை அசுபர் என்பதாலும். சர லக்ன பாதாகதிபதி என்பதாலும். இவர் மறைவிடங்களில் (6, 8, 12) அல்லது திரிகோண ஸ்தானத்தில் (5, 9) இருக்க சிறப்பு. மேலும், குரு பார்வை பெற்றால் சுப தன்மை அடைகிறார்.
இனி குரு மற்றும் சனி சேர்க்கை பற்றி பார்க்கலாம், பாக்கிய அதிபதியுடன் பாதாகததிபதி கூடி, சனி சுய சாரமோ, நட்பு வீட்டிலோ, திக் பலமோ பெற்று நின்றால், குருவின் பாக்கிய தன்மை கெடுகிறது. பாக்கிய ஸ்தானத்தின் காரகத்துவங்களான, தெய்வ பக்தி, யோக சக்தி பெறுதல், தான தருமம் செய்தல் போன்றவை மறைந்து விடுகிறது. மேலும், 9 ம் இடம் தந்தை ஸ்தானம் என்பதால், தந்தை வழி உறவினர்கள், தந்தையுடன் பகை மற்றும் வெறுப்பு ஏற்படுத்துவார் சனி. மேலும் சனியின் பார்வை பெறும் சூரியன், உடல் பாதிப்பு மற்றும் கண் கோளாறு தருவார். சனி மற்றும் குரு இருவரும் 7 பார்வை பெற்று உள்ளதால், 7 பார்வை விழும் இடம் மட்டும், சற்று அறுதல் அடையும்.
தர்ம கர்மாதிபதி யோகம்
=======================
இங்கே சனி மற்றும் குரு இருவரும் தர்மா கர்ம அதிபதிகளாக வருவது சிறப்பு, இருந்தாலும் சனி பாதாகாதிபத்தியம் பெற்று இருப்பதால் தர்ம கர்மதிபதி யோகம் வேலை செய்யாது. லக்னத்தில் சனி நீச பங்கம் பெற்று குரு உடன் சேரும் போது, பலமான தர்ம கர்மாதிபதி யோகம் ஏற்படும். இதனால், நீதி நிலை தவறாத வக்கீல்களை மற்றும் நீதிபதிகளை உருவாகும். மேலும் சனி கன்னி ராசியில் மறைந்து, மீனத்தில் குரு அமர்ந்து சம சப்த பார்வை, வெளிநாடு மூலம் பெரும் செல்வம் சேர்க்கும் யோகம் தரும். மேலும் இந்த தர்ம கர்மாதிபதி யோகம், வெளிநாட்டில் தலைமை பங்கு வகிக்க செய்யும் அளவிற்கு புகழ் பெறச் செய்யும். சனி மறைந்து குருவின் நட்சத்திர சாரம் பெற்று இருத்தாலும், குரு ஆட்சி உச்சம் பெற்று சனியின் நட்சத்திர சாரம் பெற்று இருத்தாலும், தர்ம கர்மாதிபதி யோகமே. குரு திசையும் சனி திசையும், அடுத்தடுத்து வருவதால், மிக முக்கிய மற்றும் சிறப்பு மிக்க யோகமாகும். இந்த யோகம், ஜாதகரின் வாழ்வில் சமுதாய முன்னேற்றம், நிதி நிலை தவறாமை, வாக்கு வன்மை, மரியாதை, புகழ் ஏற்படுத்தி கொடுக்கும் வல்லமை கொண்டது

ராசியான தாரா பலன்:-

                                                     ராசியான தாரா பலன்:-  

 

-:ராசியான தாரா பலன்:-          தாரை என்றால் நட்சத்திரம் என்று பொருள்.ஒருவர் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி அவருக்கு எந்ததெந்த நட்சத்திரங்கள் ராசியானது யோகமானது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அப்போது தான். அத்தகைய யோகமான ராசியான நட்சத்திரங்களில் நாமும் ஏதாவது சுபகாரியங்களில் இறங்கலாம். அல்லது அப்படிபட்ட ராசியான நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் நட்பு கொண்டு கூட்டாக அல்லது அவர்களுடைய உதவி கொண்டு வியாபாரத்தில் அல்லது தொழிலில் இறங்கலாம்.                     ராசியில்லாத நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடன் தொடர்பு கொண்டு பின்னால் பெரும் பொருள் இழப்புகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதிலிருந்து விடுபடலாம் அல்லவா?               திருமணம் செய்து கொள்ளும் மனைவியைத் தேர்ந்தெடுப்பதிலும் கூட இத்தகைய தாரா பலன் பயன் உள்ளதாக அமைகிறது. தார பலன் இல்லாத ஜோடியின் எதிர்காலத்தில் நேர்மாறாகவே இருக்கும்.               அவரவர் ஜெனன நட்சத்திரத்திற்கு 2-4-6-8-9-11-13-15-18-20-24-26,ம் நட்சத்திரங்கள் ராசியான தாரா பலன் உடைய நட்சத்திரங்களாகும். 22 வது நட்சத்திரம் ராசியான தாரா பலன் உடைய நட்சத்திரமான போதிலும் அது "வைநாசிக பாதம்" என்று சொல்லக்கூடிய அசுபப் பலன் உடைய நட்சத்திரமாகும்.        17வது நட்சத்திரமும் தாரா பலனில் ராசியான நட்சத்திரமான போதிலும் அது சந்திராஷ்டமனம் என்ற அடிபடையில் அசுபமாக வேலை செய்யும்.ஆகவே அது சுபத்திற்கு ஆகாது என்ற தவிர்க்கப்படுகிறது.     ராசியான தாரைகளில்(நட்சத்திரங்களில்):-----            1.) 2-11-24ம் நட்சத்திரங்கள் - சம்பத்துத் தாரை.      2.)4-13ம் நட்சத்திரங்கள்-சேஷத் தாரை.          3.)6-15-24ம் நட்சத்திரங்கள்-சாதகத் தாரை.         4.)8-26ம் நட்சத்திரங்கள்-மைத்திர தாரை.         5.)9-18ம் நட்சத்திரங்கள்-பரமைத்திர தாரை.    ஆகிய 12 நட்சத்திரங்களும் யோகம் தருபவைகளாகும். 

ஜோதிடத்தில் பரிகார சூட்சுமம்

                                              ஜோதிடத்தில் பரிகார சூட்சுமம் 

 

முற்பிறப்பு, இப்பிறப்பு, அடுத்த பிறப்பு என மூன்று ஜென்மங்களைப் பற்றி தெரிவிப்பது ஜோதிட சாஸ்திரமாகும். ஜாதக கட்டத்தில் உள்ள பன்னிரண்டு பாவங்களில் முற்பிறப்பைக்குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும், இப்பிறப்பைக்குறிக்கும் பாவம் முதல் பாவமாகும், அடுத்த பிறப்பை பற்றி தெரிவிக்கும் பாவம் ஐந்தாம் பாவமாகும்.
ஜென்ம லக்கினத்திற்கு பத்தாமிடம் கர்மஸ்தானம் எனப்படும். அதாவது இந்த பிறவியில் அனுபவிக்கப்போகும் பிரார்ப்த கர்மங்களை குறிக்கும் இடமாகும். முற்பிறப்பில் செய்த கர்மங்களை குறிக்கும் பாவம் ஆறாம் பாவமாகும். அடுத்த ஜென்மத்தில் அனுபவிக்கப்போகும் கர்மங்கள குறிக்கும் பாவம் இரண்டாம் பாவமாகும்.
முற்பிறப்பைக்குறிக்குமிடம் ஒன்பதாமிடமாகும். ஒன்பதாமிடத்திற்கு பத்தாக வருவது லக்கினத்திற்கு ஆறாமிடமாகும். எனவே ஆறாமிடம் முன் ஜென்ம வினைகளைக்குறிக்கும். அடுத்த பிறப்பைக்குறிக்குமிடம் ஐந்தாமிடமாகும். ஐந்தாமிடத்திற்கு பத்தாக வருவது இரண்டாமிடமாகும். எனவே இரண்டாமிடம் அடுத்த பிறவியில் அனுபவிக்கவேண்டியதைக்குறிக்கும்.
லக்கினம் ஜாதகரை குறிக்குமிடமாகும். லக்கினத்திற்கு ஒன்பதாமிடம் ஜாதகருடைய தந்தையைக்குறிக்குமிடமாகும். ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாம் பாவம் தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக்குறிக்குமிடமாகும்.
தெய்வ வழிபாட்டைக்குறிக்கும் இடம் ஒன்பதாமிடமாகும். அதாவது ஜாதகர் இப்பிறப்பில் தன்னிச்சையாக செய்யும் தெய்வ வழிபாட்டைக்குறிக்கும் இடம் ஒன்பதாம் இடமாகும். எனவே ஒன்பதாமிடம் ஜாதகரின் இஷ்ட தெய்வம் அல்லது உபாசனா தெய்வத்தைக் குறிக்குமிடமாகக் கருதப்படுகிறது.
ஜாதகரின் தகப்பனைக்குறிக்குமிடம் ஒன்பதாமிடமாகும். எனவே தகப்பன் தெய்வத்திற்கு சமமானவனாவான். தகப்பன் வழிபட்ட தெய்வத்தைக்குறிக்குமிடம் ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாமிடமாகும். எனவே ஐந்தாமிடம் குல தெய்வத்தைக் குறிக்குமிடமாகக்கருதப்படுகிறது. தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக் குறிக்குமிடமாகவும் ஐந்தாமிடம் வருவதால் பாட்டனாரும் தெய்வத்திற்கு சமமானவராவார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஐந்தாமிடம் பித்ரு வழிபாட்டைக்குறிக்குமிடமாகவும் அமைகிறது.
கர்மத்தால் வந்தது தர்மத்தால் போகும் என்பது சான்றோர் வாக்கு. மேலும் ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு பன்னிரண்டாவதாக அமையும் பாவம் அந்த குறிப்பிட்ட பாவத்திற்கு எதிராக செயல்படும் அல்லது அந்த குறிப்பிட்ட பாவத்தை அழிக்கும் என்பது ஜோதிட விதியாகும். இதன்படி பூர்வஜென்ம கர்மத்தைக் குறிக்கும் பாவமான ஆறாம் பாவத்தை அழிக்க வேண்டுமானால் , அதற்கு பன்னிரண்டாவதாக வரும் ஐந்தாம் பாவம் குறிக்கும் குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ரு வழிபாடுகளை தவறாமல் செய்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முன் ஜென்ம வினைகளால் நமக்கு வரும் பிரச்சினைகளிலிருந்தும், இடையூறுகளிலிருந்தும் நாம் விடுபடலாம்.
இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் கர்மங்களைக்குறிக்கும் பாவம் பத்தாம் பாவமாகும். அதற்கு பன்னிரண்டாவதாக வரும் ஒன்பதாமிடம் இஷ்ட தெய்வ வழிபாட்டைக்குறிக்குமிடமாகும். எனவே இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ, அல்லது தெரியாமலோ செய்யும் தீவினைகளிலிருந்து விடுபட , முதலில் நம் தாய்,தகப்பனை நல்ல முறையில் பேணிக்காத்து வரவேண்டும். அவர்களுடைய அன்பும் ஆசியும் எப்பொழும் நமக்கு கிடைக்குமாறு பர்த்துக்கொள்ளவெண்டும். மேலும் இஷ்ட தெய்வ வழிபாட்டை விட்டுவிடாமல் தொடர்ந்து செய்துவரவேண்டும். மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் குல தெய்வ வழிபாடு,பித்ரு வழிபாடு மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு இவைகளை விட்டுவிடாமல் தொடர்ச்சியாக செய்து வந்தால் கர்ம வினைகளால் வரும் இடையூறுகள் நம்மைத்தீண்டாது என்பது புலனாகிறது.
அடுத்த பிறவியைக் குறிக்குமிடம் ஐந்தாமிடமாகும். அதற்கு பத்தாமிடமாக அமைவது,ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடமாகும். வாய், உண்ணும் உணவு இவைகளை குறிப்பது இரண்டாமிடமாகும். எனவே இந்த ஜென்மத்தில் நாம் பிறர் இட்ட அன்ன ஆகாரங்களை சாப்பிடுவதால், அடுத்த ஜென்மத்தில் நாம் அவர்களுக்கு கடன்பட்டவர்களாக ஆகிவிடுகிறோம். எனவே முடிந்தவரை அடுத்தவர் வீட்டில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இதனால் நம்முடைய கடன் சுமை குறையும். நாம் பிறருக்கு அன்னமிடுவதால் அவர்கள் நமக்கு கடன் பட்டவர்களாகிவிடுகிறார்கள். இந்த பிறவியில் நமக்கு சோறுபோட்டவர்கள் நம் பெற்றோராகும். எனவே நாம் அவர்களுக்கு கடன் பட்டவர்களாகும். இதன் அடிப்படையிலேயே பித்ரு வழிபாட்டில் சோற்றுப்பிண்டம் வைக்கப்படுகிறது.
அன்ன தானம் செய்வதால் நம்முடைய பூர்வஜென்ம பாவங்கள் தொலையும், பித்ரு கடன்கள் குறையும், ஆயுள் ஆரோக்கியம் விருத்தியடையும்.


 

Monday, 22 May 2017

சாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்

                     சாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள் 

 

திருமண பொருத்தம் நல்ல விதமாக இருந்தும்,திருமண நாளும் நல்லபடியாக இருந்தும்,சாந்தி முகூர்த்தம் எனும் முதலிரவு சரியாக நடைபெறும் தினம் காலற்ற ,உடலற்ற,தலையற்ற நட்சத்திரம் வரும் நாளில் இருக்க கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்-இந்த மூன்றும் காலற்ற நட்சத்திரங்கள்
மிருகசிரீடம்,சித்திரை,அவிட்டம் -இந்த மூன்றும் உடலற்ற நட்சத்திரங்கள்
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி -இந்த மூன்றும் தலையற்ற நட்சத்திரங்கள்

இந்த நட்சத்திரங்களில் முதலிரவும்,வீடு கட்ட மனை முகூர்த்தமும்,யாத்திரையும் ஆகாது.

இது பற்றிய ஒரு ஜோதிட பாடல்;
காலற்ற உடலற்ற நாளிற்
கோலக் குய மடவார் தமைக் கூடின் மலடாவார்
மாலுக்கொரு மனை மாளிகை கோலினது பாழாம்
ஞாலத் தயர் வழி போகினும் நலமெய்திடாரே.


 

ஜோதிடம்;சுக்கிரன்,செவ்வாய் லீலைகள்

                     ஜோதிடம்;சுக்கிரன்,செவ்வாய் லீலைகள்

 

ராசிபலன்;ஜாதகத்தில் சுக்கிரன்,செவ்வாய் பங்கு மிக முக்கியமானதுஎனலாம்..செவ்வாய் நம் உடலில் ஓடும் ரத்தத்துக்கு அதிபதி ஆகிறார்..போர் தளபதி செவ்வாய்...கோபம்,வீரம் போன்றவற்றுக்கு முக்கிய காரண கர்த்தா செவ்வாய்....இவருக்கு உரிய தெய்வம் முருகன்....
ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போனால் பயம் அதிகரிக்கும்...தனக்கு எப்போது பிரச்சினை வருமோ என பயம் கொள்ள வைக்கும் கீழான ஆட்களால் தொந்தரவுகளை சந்திக்க நேரும்....ஆனாலும் பலரால் விரும்பபடுவார்கள்..இவங்ககிட்ட எதிர்ப்புணர்வு அதிகம் இல்லையே அதனால்...ஆனால் கோபம் சட்டென வரும்..அதைவிட பயம் அதிகம் இருக்கும்...பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போனால் ஆண்களால் பல பிரச்சினைகளை சந்திக்க நேருகிறது..கணவனுக்கு பாதிப்பு தருகிறது...பலமுள்ள செவ்வாய் கணவனை அடக்கி ஆளவும் ,கணவருக்கு யோகத்தையும் தந்து விடுகிறது..செவ்வாய் அதிக வீரியமுள்ள கிரகம் என்பதால் காம உணர்வை தூண்டுவதில் அதாவது எண்ணத்தை செயல்படுத்துவதில் வல்லவனாக திகழ்கிறது
களத்திரகாரகன் சுக்கிரன்..இவர் ஆணின் விந்தணுக்களுக்கும்,பெண்களின் கருமுட்டைகளுக்கும் காரகத்துவம் ஆகிறார்..சுக்கிரன் கெட்டால் இவை கெட்டுப்போகும்...விந்தணு குறைபாடு,கருமுட்டை வளர்ச்சியின்மை போன்ற குறைபாடுகள் உண்டாகும்...
சுக்கிரன் பலம் அழகிய தோற்றத்தை உண்டாக்குவார்..சுக்கிரன் பலம் பெற்றால் சினிமா நடிகை குஷ்பூ,ஹன்சிகா போல,,கார்த்தி ,மாதவன் போல அழகிய தோற்றம் பெறுவார்கள்....
பெண்கள் சம்பந்தமான பாலியல் நோய்களையும்,சிறுநீரக கோளாறுகளையும் சுக்கிரனே கொடுக்கிறார்...
சுக்கிரன்,செவ்வாய் இணைந்தால் அதிக உணர்வுகளை தூண்டிவிடுகிறார்..இதனால் எதிர்பாலினரால் பல பிரச்சினைகளை சந்திக்க வைக்கிறார்..செவ்வாய் 7ல் இருந்தால் இது இன்னும் அதிகரிக்கும்..பார்க்கும் கிரகங்களை பொறுத்து பலன் மாறும்...

 

Sunday, 7 May 2017

ஒவ்வொரு கிரகத்தின் காரகமும் கீழே விவரிக்கப் பட்டிருக்கின்றது.

     ஒவ்வொரு கிரகத்தின் காரகமும் கீழே விவரிக்கப் பட்டிருக்கின்றது.



சூரியனின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
  • அரசியலில் ஈடுபடலாம்
  • அரசாங்க வேலை
  • மாணிக்க வியாபாரி ஆகலாம்
  • சிவப்பு வண்ண கற்களை விற்கலாம்
  • தங்க ஆபரணங்களை தாயாரிக்கலாம், விற்பனை செய்யலாம்.
  • தர்க்கம் செய்வதில் வல்லவராகலாம்
  • மாந்த்ரீகத்தில் ஈடுபடலாம்
  • நூற்பாலை சம்பந்தப் பட்ட வேலைகள் செய்யலாம்
  • கட்டுமான துறைகளில் ஈடுபடலாம்
  • மிளகாய் வியாபாரம்
  • வெங்காய வியாபாரம்
  • புகையிலை வியாபாரம்
  • மர வியாபாரம்
  • காகிதம் வியாபாரம்
  • விபூதி வியாபாரம்
  • தாவர பொருட்கள் வியாபாரம்
  • கற்பூரம் வியாபாரம்
  • மருந்து வியாபாரம்
  • இரசாயன வியாபாரம்
  • வழக்கரிஞ்சர்
சந்திரனின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
ஒரு மனிதனின் ஜாதகத்தில் பத்தாம் இடத்திற்க்குரியவனாக சந்திரனோ, பத்தாம் இடத்திற்கு உரியவன் உள்ள இடமானது சந்திரனின் வீட்டுக்கு உரியதாகவோ அமைந்திருந்தது என்றால் அது சந்திரனின் காரகத்துவத்தை பெற்றது என்று கூறலாம்.
சந்திரன் வெண்மையானவன். எனவே வெள்ளை நிறமுடைய பொருட்களை கொண்டு எந்த வியாபாரம் செய்தாலும் அது வெற்றியாக அமையும்.
  • முத்து வியாபாரம்
  • உப்பு வியாபாரம்
  • சுண்ணாம்பு வியாபாரம்
  • சங்கு வியாபாரம்
  • மீன் பிடித்தல்
  • பால், தயிர், மோர், வெண்ணை வியாபாரம்
  • படகு, பரிசல்
  • டிராவல் ஏஜென்சி
  • வேளாண்மை
  • நீர்பாசன துறை வேலைகள்
  • ஈரப்பசையுள்ள பழவகை வியாபாரம்
  • பெண்கள் விருப்பப்படும் எந்த தொழிலையும் செயாலாம்.
  • பேன்சி ஸ்டோர்
  • தங்கம், வெள்ளி மற்றும் கவரிங் கடைகள்
  • சீட்டு பிடிகலாம்
  • அரசாங்க துறையில் வேலை கிடைக்கும், முயன்றால் பெறலாம்
  • டாக்டர் ஆகலாம்
  • புகழ்பெற்ற நடிகர்கள் ஆகலாம்
  • ஜோதிடம் கற்று தொழில் செய்யலாம்
  • எழுத்தாளர், பாடலாசிரியர் ஆகலாம்
  • எதற்கும் தகுதியற்றவராக கருதபடகூடியர் கூட சில பணக்கார வீடுகளில் அவ்வீட்டின் பெண்கள் இடக்கூடிய வேலைகளை செய்யக் கூடிய வேலைக்காரர்களாக ஆகின்றனர்.
செவ்வாயின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
செவ்வாய் காரகத்துவம் பெற்ற கிரகமாக இருக்குமேயாயின், அவர்கள் பின்வரும் தொழில் செய்ய ஏற்றவர்களாக மாறுகின்றனர்.
  • ரியல் எஸ்டேட் துறை இவர்களுக்கு சிறந்தது. வீடுகள், நிலபுலன்கள் விற்பனை செய்து வருமானம் பெறலாம்.
  • எங்கெங்கு நெருப்பின் துணை அவசியமோ அங்கெல்லாம் இவர்கள் உண்டு. உதாரணமாக செங்கல் சூளை, கொள்ளுப்பட்டறைகள், மின் வாரியங்கள், பயங்கர கருவிகள் தயார் செய்யும் இடங்களில் இவர்களுக்கு வேலை கிடைக்கும். அல்லது இவர்களே அவ்வேலையை செய்வார்கள்.
  • இவர்களில் மிகப்ப்ரும்பாலோர்க்கு சமையல் தொழில் செய்யத் தெரியும். ஹோட்டல் துறை இவர்களுக்கு வாய்க்கும்
  • குயவர்கள் ஆகலாம்
  • சிற்பிகள் ஆகலாம்
  • ஓவியர் ஆகலாம்
  • காவல்துறை / இராணுவத்தில் பனி கிடைக்கும்
  • விளையாட்டு வீரர்கள் ஆகலாம்.
  • சிலம்பம், குத்துசண்டை வீரர் ஆகலாம்.
  • பவள வியாபாரம்
  • மாயாஜாலம், ஏவல், பில்லி, சூன்யம் எல்லாம் சர்வ சதாரணமாக அமையும்
  • சர்கஸில் வேலை கிடைக்கும்
  • பெரிய தோப்புகள் மூலம் லாபம் பெறலாம்
  • விவசாயத்திற்கு ஏற்ற நிலத்தை குத்தகைக்கு விடுவதாலும், துவரைப்பயிரிடுவதாலும் நன்மை அடையலாம்.
புதன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
  • புதன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு பத்திரிகை துறை ஏற்றது. நிருபராகவோ, துணை ஆசிரியர், ஆசிரியர் ஆகா பணி ஆற்றலாம்
  • ஜோதிடத்தில் வல்லவர்களாக இருப்பார்கள்
  • இன்சூரன்ஸ் துறை சிறந்தது
  • இவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் ஆதலால் கல்வித்துறை சம்மந்தமாக வேலை கிடைக்கும்.
  • புதன் காரகதுவம் பெற்றவர்கள் புகழ் பெற்ற ஏழுத்தாளர்களாக வருவார்கள்.
  • பட்டிமன்றம், கதா காலோட்சபம், சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர்கள்
  • வழக்கரிஞ்சர் ஆகலாம்
  • அக்ககௌடன்சி எனப்படும் கணக்குப் பதிவியல் துறை மிக சிறந்தது.
  • அமைச்சர்களுக்கு ஆலோசகராகவோ, அயல் நாட்டு தூதராகவோ ஆகலாம்.
  • மென்போருள் துறை மிக ஏற்றது.
  • ரேடியோ, தொலைக்காட்சி துறைகளில் நல்ல வேலை கிடைக்கும்
  • கடவுள் மேல் பக்தி உள்ளவர்கள் வேத சாஸ்திரங்களை கற்று அர்ச்சகர் ஆகலாம்.
  • வியாபாரியாக ஆகா விரும்புவோர்கள் இலைகள் பச்சை பயிறு போன்றவற்றை கொள்முதல் செய்து விற்றால் அதிக லாபம் பெறலாம்.
  • தபால் துறையில் வேலை கிடைக்கும்
  • ஆசிரியர் ஆகலாம்
  • கணித மேதைகளாக மாறலாம்.
குரு காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
  • ஆன்மீக துறையில் நாட்டம் கொண்டு அதன் வாயிலாக சிலருக்கு ஜீவனம் அமையும்.
  • சிலர் மாகத்துமாவாக மாறி பிறர் மூலம் காப்பாற்றப்படுகின்றனர்.
  • நகை வியாபாரமும், புஸ்பராக வியாபாரமும் ஏற்றது.
  • எலுமிச்சை, ஊதுவத்தி, தென்னை, பாக்கு, கரும்பு வெல்லம் வியாபாரம் ஏற்றது
  • பொதுவாக யாகங்கள், புரோகித தொழிலில் ஈடுபடுதல், கதா கலோட்சபம் செய்தல், தெய்வீக காரியங்களில் ஈடுபடுதல், மதப் பிரசாரம் செய்தல், ஆலயங்களில் மதப் பிரச்சாரம் செய்தல், ஆலயங்களில் அறங்காவல் துறையில் ஈடுபடுதல், மடங்களில் இருத்தல், தொண்டு செய்தல், ஆலய குருக்களாக இருத்தல் போன்ற முழுவதுமான ஆன்மீகத் தொழிலிலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருமானத்தைப் பெருகிக் கொள்ளலாம்.
  • வேறு சிலர் குறிப்பட்ட இனம், மதம், பிராந்தியம் போன்றவற்றிற்க்கு தலைவராகி அதன் மூலம் வாழ்க்கை நடத்துவர்.
  • இன்சுரன்சு துறை ஏற்றது
  • எங்கெங்கு காசு, பணம் புழங்குகின்றதோ அங்கெல்லாம் இவர்கள் காசாளர்களாக இருக்க தகுதி வாய்க்கும்.
  • இவர்கள் தேர்தலில் நின்றால் சட்டமன்ற உருப்பினராகவோ, மந்திரிகளாகவோ கூட ஆகலாம்.
  • இவர்களில் பலருக்கு வக்கீலாகவும், நீதிபதி ஆகவும் தகுதி உண்டு
  • அரசியலில் இவர்கள் மிக்க ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • பிறர்மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்படும் பொது, அந்த விசாரணை கமிசனில் இவர்கள் முக்கிய பொறுப்பில் இருப்பார்கள்.
  • இவர்கள் நிர்வாக துறையில் சிறப்பாக ஈடுபட முடியும்.
  • மளிகை கடை வைத்தால் இலாபத்தை அடையக்கூடியவர்களாக சிலர் விளங்குவார்கள்.
  • தங்கச் சுரங்கத்தில் பணியாற்றும் தகுதி சிலருக்கு வாய்க்கும்.
  • தொழிலார்களின் தலைவர்களாகவும் சிலர் விளங்குவர்
சுக்ரன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
  • தங்க கடை வைக்கலாம்
  • வெள்ளி நகைகளை தயாரித்து விற்கலாம்
  • வெண்கல வியாபராம் செய்யலாம்
  • செயற்கை கற்கள் விற்பனை செய்யலாம்
  • ஆடைகள் வியாபாரியாகலாம்
  • மணல் லோடு ஏற்றி வந்துசப்ளை செய்யலாம்
  • பால் பண்ணை அமைக்கலாம்
  • லாண்டரி நடத்தலாம்
  • தறி போட்டு நெய்யும் தொழிலை செய்யலாம்
  • படங்களுக்கு கண்ணாடி சட்டமிட்டு தரும் கடையினை வைக்கலாம்
  • முகம் பார்க்கும் கண்ணாடி கடை நடத்தலாம்.
  • கோயில் வாசலில் தேங்காய், பூ, பழம் வெற்றிலை பாக்கு கடை வைக்கலாம்.
  • தனியாக வெற்றிலைப் பாக்கு கடை வைக்கலாம்
  • பூ வியாபாரம் செய்யலாம்
  • சந்தன வியாபாரம் செய்யலாம்
  • புளி மண்டி வைக்கலாம்
  • கரும்பை விளைவித்து விற்கலாம்
  • மணிலாவை பயிர் செய்து விற்பனை செய்யலாம்
  • தோட்டங்கள் இட்டு இலாபம் அடையலாம்
  • விறகு கடை நடத்தலாம்
  • பலகார கடை நடத்தலாம்
  • சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் வியாபாரம் செய்யலாம்.
  • பாத்திர வியாபாரம் செய்யலாம்.
  • சங்கீதம் சம்பந்தப்பட்ட மேள, தாளங்களை விற்பனை செய்யும் கடை வைக்கலாம்.
  • இலவம் பஞ்சு வியாபாரம் செய்யலாம்
  • கட்டில், மெத்தை வியாபாரம் செய்யலாம்
  • பால், தயிர் போன்றவற்றை விற்பனை செய்யலாம்
  • கால் நடை பண்ணை வைக்கலாம்
  • சென்ட் வியாபாரம் செய்யலாம்
  • வாகனங்களை வாடகைக்கு விட்டு வாழ்க்கை நடத்தலாம்
  • இசை அமைக்கலாம்
  • கலைஞ்சர்கள் ஆகலாம்
  • பின்னணி பாடலாம்
  • கவிஞர்களாக ஆகலாம்.
  • பொதுவாக கலைத்துறையில் இவர்கள் பெரிதாக சாதிக்கலாம்
  • கேளிக்கைகளில் நாட்டம் கொண்ட இவர்களுக்கு கேளிகைகளின் மூலமே வாழ்க்கையானது நடை பெரும்
சனி காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
  • இரும்பு, இரும்பு சம்மந்தப் பட்ட தொழில்களில் தான் இவர்கள் வல்லுனர்கள் ஆக இருப்பார்கள்.
  • கடினமாக உழைக்க வல்ல இவர்களுக்கு அம்மாதிரியேதொழில் அமையும்.
  • இவர்கள் நீல வண்ணமுடைய சரக்குகளை விற்பனை செய்தால் இலாபம் உண்டு
  • தோல் வியாபாரம் செய்யலாம்
  • எண்ணெய் வியாபாரி ஆகலாம்
  • எள் பயிரிட்டு விற்பனை செய்யலாம்
  • தரகர்களாக தொழில் நடத்தலாம்
  • மர வியாபாரம் செய்யல்லாம்
  • இரும்பு வியாபாரம் ஏற்றது
  • அழுகும் பொருட்கள் வியாபாரம் செய்யலாம்
  • கசாப்பு கடை நடத்தலாம்
  • கால்நடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து இலாபம் பெறலாம்
  • காவல் துறை ரகசியப்பிரிவில், உளவுத்துறையில் பணியாற்றலாம்
  • மர வேலைசெய்யலாம்
  • விவசாயம் செய்யலாம்
  • கூலி வேலை செய்யலாம்
  • மறு சுழற்சி தொழில்களில் ஈடுபடலாம்
  • தண்டல், வரி வசூல் செய்யல்லாம்
  • மருந்தாளுனராகலாம்
  • அகழ்வாராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியலாம்
  • பொறியியல் துறையில் பணியாற்ற வாய்ப்பு உண்டு
  • வெடி குண்டு தயாரிப்பு கிடங்குகளில் வேலை கிடைக்கும் 
ராகு காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
  • இவர்கள் உளவுத் துறையில் இரகசிய கண்காணிப்பாளராக விளங்ககூடிய பதவிகளைப் பெற்றிருப்பார்கள்
  • மிக சிறந்த மத போதகம் செய்து வாழ்பவர்களாக இவர்கள் இருப்பார்கள்
  • பழைய கிழிந்து போன ஆடைகளை வாங்கி, விற்று வியாபாரம் செய்யல்லாம்
  • அடகு வியாபாரம் செய்யலாம்
  • மாணிக்கம், கோமேதகம் போன்ற கற்களை விற்பனை செய்யலாம்
  • ஈய வியாபாரம் செய்யலாம்
  • கேப்பை, உளுந்து போன்ற தானியங்களை உற்பத்திசெய்து விற்கலாம்
  • ஒயின் ஷாப், கள்ளுக்கடை, சாராயக் கடை நடத்தலாம்
  • மருந்து கடை நடத்தலாம்
  • தரகர் ஆகலாம்
  • மூங்கில், கருங்கல் வியாபாரம் செய்யலாம்
  • கடலில் இருந்து எடுக்கப்படும் எப்பொருளையும் கொண்டு வியாபாரம் செய்யலாம்
  • தையல்காரர் ஆகலாம்
  • எருமை மாட்டின் மூலம் வியாபாரம் செய்யலாம்
  • தறி நெய்து தொழில் செய்யலாம்
  • கப்பல் படை, விமானப்படையில் வேலை கிடைக்கும்
  • மந்திரவாதம் கற்றுக் கொள்ளலாம் 
கேது காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
  • ஆன்மீகத் துறையில் ஈடுபடலாம்
  • அறிவியல் துறையில் ஈடுபடலாம்
  • ஜோதிடத்தில் ஈடுபடலாம்
  • தொழில் நுட்பங்களை பிறருக்கு செய்வதன் மூலம் பலன் பெறலாம்
  • அலுமினிய பாத்திரங்கள் விற்கலாம்
  • ஈயம், தகரம் வியாபாரம் செய்யலாம்
  • தரகு வியாபாரம் செய்யலாம்
  • கோமேதகம், மாணிக்கம் விற்பனை செய்யலாம்
  • நீல நிற சரக்குகளாக வங்கி விற்கலாம்
  • பட்டாசு தயாரிப்பில் ஈடுபடலாம்
  • லாகிரி வஸ்துகளை கொண்டு வியாபாரம் செய்யலாம்
  • ஒயின் ஷாப் நடத்தலாம்
  • மீன் பிடிக்கலாம்
  • தூர் வாரலாம்
  • முத்துக் குளிக்கலாம்
  • கசாப்புகடை வைக்கலாம்
  • ரசவாதம் செய்யலாம்
  • மந்திரவாத தொழில் செய்து அதன் மூலம் பொருளை சம்பாதிக்கலாம்
  • இந்தக் காரகத்துவம் பெற்றவர்கள் திருட்டில் வல்லவர்களாக இருப்பார்கள்.
  • கொலை செய்வதில் அஞ்சாதவர்களாக இருப்பார்கள்
  • ஆண்டிப் பண்டாரமாகவும் மாற வாய்ப்பு உண்டு
  • மதப் பிரசாரம் செய்வார்கள்