Tuesday, 4 April 2017

கடன் எப்போது தீரும்?.

                                                                 கடன் எப்போது தீரும்?.





கடன் என்பது ஒருவருக்கு பல காரணங்களில் உருவாகலாம் சிலர் வீடு கட்ட வீடு வாங்க கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் சிலருக்கு பெண்ணின் திருமணதிற்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் சிலருக்கு பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஊதாரித்தன மாக செலவு செய்வதற்கு கடன் வாங்குவதை இதில் சேர்க்ககூடாது

சரி ஒருவர் எந்த தைரியத்தில் கடன் வாங்குகிறார்

சிலர் கடனை வாங்கிவிட்டு கடன் கொடுத்தவரை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் வாங்குவார்கள் நான் அவர்களை பற்றி இங்கு எழுதவில்லை கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்குபவர்களை பற்றி இங்குஎழுதுகிறேன்

கடன் வாங்குபவர்கள் தாங்கள் பார்க்கும் தொழிலை தாங்கள் பார்க்கும் வேலையையும் தொழிலையும் வைத்து திருப்பி கொடுத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் வாங்குகின்றனர்.

தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் தங்களுடைய செலவுகளுக்கு போக மீதம் உள்ள தொகையை கடனுக்கு கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் வாங்குகிறார்கள்.

அவர்களால் கடனை திருப்பி அடைக்க முடியும் தங்களுக்கு பொருத்தமான அபரிதமான லாபம் தரும் தொழிலை அவர்கள் தேர்ந்தெடுத்து
செய்தார்கள் என்றால்.

செய்யும் தொழிலில் வரும் வருமானம் கைக்கும் வைக்கும் மட்டுமே சரியாக இருக்கும் பட்சத்தில் கடனை மேற்கொண்டு எப்படி அடைக்க முடியும். நல்லதொரு லாபம் தரும் தொழிலில் அவர்கள் ஈடுப்பட்டிருந்தால் தான் அவர்களால் தங்களுடைய செலவுக்கு போக மீதி தொகையை கடனுக்கு அடைக்க முடியும்.

எல்லோராலும் லாபம் தரும் தொழிலை தேர்ந்தெடுக்க முடியுமா? செய்ய முடியுமா? சிலருக்கு இயற்கையாக தெரிந்தோ தெரியாமலோ லாபம் தரும் தொழிலை தேர்ந்தெடுத்து செய்வார்கள் அவர்களுக்கு கடன் இருந்தால் கடனை அடைப்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது

ஆனால் சரியான லாபம் தரும் தொழிலை தேர்ந்தெடுக்க முடியாதவர்கள் தான்
கடனை அடைப்பதற்கு காலம் பூராவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கின்றனர்.

சரி ஜோதிட ரீதியாக இதற்க்கு என்ன தீர்வு?

ஒருவருடைய ஜாதகத்தில் தனஸ்தானம், கர்ம ஸ்தானம் விரைய ஸ்தானம் எனப்படும் முக்கியமான ஸ்தானங்கள் நிறைவான அமைப்புடன் இருக்க வேண்டும். அதாவது தீயவர்கள் சேர்க்கை, தீயவர்கள் பார்வை, அதிபதிகளின் வலு இவற்றை வைத்து அவருக்கு தனவரவு, தொழில், லாபம், மீதி போன்ற அமசங்களை கணக்கில் கொண்டு அவருடைய நிதி நிலைமையை தீர்மானிக்கலாம். நிதி நிலைமை வலுவாக இருந்தால் கடனை அடைக்கலாம்.   

சரி கடன் எப்போது தீரும்? ஒருவர் தனக்குரிய தொழிலை அல்லது வேலையை அவருடைய ஜாதகப்படி சரியாக தேர்ந்தெடுத்து ஈடுபட்டால்
லாபாதிபதி கெடாமல் இருந்தால் அவருடைய தசா புத்தியை நடத்தும்போது
லாபங்களை அபரிதமாக கொடுத்து கடன் தீர்வதற்கு உண்டான வழியை ஏற்படுத்தி தருவார்


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

No comments:

Post a Comment