Tuesday, 4 April 2017

அடிப்படை கல்வியில் பிரச்னை யாருக்கு?.

                               அடிப்படை கல்வியில் பிரச்னை யாருக்கு?.



அடிப்படை கல்வி என்பது ஆரம்பக்கல்வி. அதாவது அஸ்திவாரம். படிப்பு என்னும் அறிவு வளர்ச்சிக்கு அஸ்திவாரம். பொதுவாக குழந்தை பருவத்தில் ஏற்படக்கூடிய பருவம். குழந்தைகள் ஆரம்பக்கல்வியை பெரும் நிலை.

ஆனால் எல்லா குழந்தைகளுக்கும் இந்த ஆரம்பக்கல்வி என்பது தடையில்லாமல் கிடைக்குமா? தடை உண்டாகுமா?

எல்லோருக்கும் தடையில்லாமல் அடிப்படை கல்வி கிடைக்குமா?

இது குழந்தைகளின் மன நிலையை பொருத்தது. குழந்தைகள் கற்று கொள்ள துடிக்கும் ஆர்வத்தை பொருது அந்த குழந்தை படிப்பில் நாட்டம் இருக்குமா இருக்காதா என்று தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு படிப்பில் நாட்டம் இருந்தால் எந்தவித மறுப்பும் இன்றி பள்ளிக்கு செல்ல தயாராகி விடும். இல்லையென்றால் அதை பள்ளிக்கு அனுப்பவதர்க்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

இன்னும் சில குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆரம்ப கல்வி பெற பள்ளிக்கு செல்வதற்கு தடை உண்டாகும்.

ஒருவருக்கு ஆரம்பகல்வி வாழ்க்கையின் என்பது ஒரு முக்கியமான கட்டமாகும். இந்த ஆரம்பக்கல்வி ஒருவருக்கு தடையை
உண்டாக்குகிறது என்றால் ஜாதக ரீதியாக அதற்க்கு என்ன காரணம்?         

ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் பாதிக்கபட்டிருந்தால் இது போன்று குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி மறுக்கப்படும் தடைகள் உண்டாகும். தடைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உண்டாகலாம். ஸ்தான பாதிப்பு என்பது பல விதத்திலும் ஏற்படும்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள

No comments:

Post a Comment