Friday, 8 November 2019

சிம்மத்தில் சூரியன் ;

சூரியனின் சொந்த ராசி சிம்ம ராசி ஆகும். ஜாதகத்தில் சிம்மத்திலேயே சூரியன் இருக்க பிறந்தவர்கள் வீரம் மிக்கவர்களாக இருப்பார்கள். எதிரிகளை அடக்கி ஒடுக்கும் பராக்கிரமம் கொண்டவர்களாக இருப்பார்கள். சமுதாயத்தில் அனைவராலும் மதிக்கபடுவார்கள். அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வகிப்பார்கள கண்கள் சிவந்திருக்கும், பயணங்களில் ஆர்வமுள்ளவர்கள், சமயோசித புத்தியும்,தந்திரமிக்கவர்களாகவும்,வாசதி வாய்ப்புகள் ஏற்படும், துணிச்சல் மிக்கவர்கள், நேர்மையனவர்கள்,வெற்றி என்பதோ இவர்களாது குறிக்கோள் ,பணம் என்பதே இவர்களது நோக்கம், மனைவி மக்களுடன் சுகமாக வாழ்வர்கள், சிறப்பன தொழில் வளமை உள்ளவர்கள், அரசு மரியதையுள்ளவர்கள், உயர் பதவி வகிப்பர்கள், முன்கோபி,தலைமை பதவி கிடைக்கும்.
சூரியனுடன் சந்திரன் சேர்க்கை பார்வையிருந்தால் நல்ல துணைவர்,அரசு சன்மானம், கப நோய்யுள்ளவார்கள்,
சூரியனுடன் செவ்வாய் சேர்க்கை பார்வையிருந்தால் இல்வாழ்க்கையில் சுகமின்மை, சண்டை சச்சரவு ஏற்படும், காரியங்களில் முயற்ச்சியுடையவன்,
சூரியனுடன் புதன் சேர்க்கை இருந்தால் கலைஞானம் உள்ளவர்கள், எழுத்தாளர், சூதாட்டம், சக்தி குறையும்,ஆன்மீக இடுபடுடையவர்கள்.
சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை இருந்தால் உணர்ச்சி வசப்படுவர்கள் பெண்களால் தொல்லை, அன்பில்லாதவர்கள்,நோய் பாதிப்பு ஏற்படும் ,வாக்கைத் துணையை இழப்பிற்காளாகக் கூடியவர்களாக உள்ளவர்கள்
சூரியனுடன் குரு சேர்க்கை பார்வையிருந்தால் ஆலாயங்கள், ,தீர்த்தகுளம் கட்டுவர்கள்,எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர்கள். ஜாதகர் /ஜாதகி தத்தம் நிலைக்கேற்ப தகுதி / திறமைகளின் அடிப்படையில் விடாமுயற்சியால் வாழ்வில் உயர் அந்தஸ்தான நிலைக்கு வந்துவிடுவர்கள்.
சூரியனுடன் சனி சேர்க்கை பார்வையிருந்தால் காரியங்கள் தடை ஏற்படுத்தும்,பொருளாதாரம் பாதிக்கும்,பிறருக்கு துன்பம் தருவர்கள்,
சூரியனுடன் பாவிகள் தொடர்பிருந்தால் முன்கோபம்,பதற்றம், மன உறுதி,திடமானமுடிவு,பேச்சாற்றல், அதிகாரம் ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment