Monday, 18 November 2019

விருச்சிகத்தில் சூரியன் ; -

விருச்சிகத்தில் சூரியன் இருந்தால் கண்கள் சிவந்திருக்கும் ,பொது சேவையில் ஆர்வம் உள்ளவர்கள், தன்னலமற்றவராக இருப்பர்கள், நுட்பமான கலை நுணுக்கங்களை கற்க ஆர்வமுள்ளவர்கள்,உடல் மனம் பலமுடன் இருக்கும், இராணுவம்,காவல்துறை, கப்பல், விமானம் போன்ற படைகளிலோ, அல்லது சார்ந்த துறையில் தொடர்பு இருக்கும், துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களை கையாளலக் கூடியவர்கன் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை, தாய் தந்தைக்கு துன்பம் தருவர்கள்,பணம் சம்பாதிப்பதில் சாமர்த்தியசாலி, அரசாங்கத்தல் ஆதாயம்,
விருச்சிகத்தில் உள்ள சூரியனை செவ்வாய் பார்த்தால் பிறபாலர்களுடன் மரியாதையாக நடந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்க மாட்டார்கள்.
சூரியனுடன் செவ்வாய், புதன்,குரு கூடினால் நல்ல சுப பலன்கள் கிட்டும் .
சூரியனை குரு பார்த்தால் ஜாதகர் /ஜாதகி தத்தம் நிலைக்கேற்ப தகுதி / திறமைகளின் அடிப்படையில் விடாமுயற்சியால் வாழ்வில் உயர் அந்தஸ்தான நிலைக்கு வந்துவிடுவர்கள்.
சூரியனுடன் சந்திரன்,சனி,ராகு, கேது சேர்ந்திருந்தால் பாதிப்பையே தரும்.
சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் வாக்கைத் துணையை இழப்பிற்காளாகக் கூடியவர்களாக உள்ளவர்கள்.
சூரியன் பலவீனம் பெற்றிருந்தால் வாழ்வியல் முன்பாகத்தில் நலன் அடைவதில் தடைபடும்.முன் யோசனையின்மை உணர்ச்சிவசப்படுதல் ஏற்படும்.

No comments:

Post a Comment