Wednesday, 28 June 2017

ஜாதகத்தில் சுக்கிரன் எங்க எப்படி இருக்காருன்னு பாருங்க! கவனமாக இருங்கள்


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன… ஆயிரம் காலத்துப் பயிர் என்றெல்லாம் பேசப்பட்ட நிலை போய், லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்று மேட்ரிமோனியலில் தேடும் காலம் வந்து விட்டது. ஒரு சிலரோ தனக்குரியவரை சட்டென்று சந்தித்து பார்வையால் பேசி காதலித்து அதே வேகத்தில் திருமணம் செய்து கொள்வார்கள்.
லட்சங்களை செலவு செய்து கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தாலும் அதை போற்றி பாதுகாக்காமல் பாதியில் ரத்து செய்து விட்டு போகும் நிலையும் இன்றைக்கு இருக்கிறது.
என்னதான் தேடித் தேடி திருமணம் செய்து வைத்தாலும் புரிதல் இல்லாத வாழ்க்கை மண வாழ்க்கையில் தம்பதிகளிடையே கசப்பை ஏற்படுத்துகிறது.
ஒருவருடைய ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியுமா? அல்லது தோல்வியடையுமா? திருமணத்திற்குப் பின்னரும் காதல் நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடியுமா? என்பதை தீர்மானம் செய்கிறது.
ஜாதகத்தில் கட்டம் சொல்வது என்ன?
திருமண வயதில் மகனையோ, மகளையே வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு 20 வயதை கடந்து விட்டாலே ஜாதக நோட்டை எடுத்துக்கொண்டு வரன் தேட கிளம்பிவிடுவார்கள். சில குழந்தைகளோ பெற்றோர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் தாங்களே தங்களுக்கு ஏற்ற ஜோடியே தேடி காதலித்து பெற்றோரிடம் கூறுவார்கள். இன்றைய கால கட்டத்தில் காதல் திருமணங்கள் சகஜமாகிவிட்டது. ஜாதி, மதம் மாறி திருமணம் செய்வதும் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம்தொழில் மற்றும் வேலை காரணமாக வெளியூர், வெளிநாடு என்று வாழும் சூழ்நிலை இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது.
தொழில் நுட்ப வளர்ச்சி
தகவல் தொழில் நுட்ப சாதனங்களான செல்போன், இன்டர்நெட் போன்றவை மக்களிடையே பிரபல்யமாகி விட்ட சூழ்நிலையில், யாரையும் அவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நொடி கணக்கில் தொடர்பு கொண்டு விடலாம் . ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், வீடியோ கால் என அறிவியல் வளர வளர ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்து நெருக்கம் அதிகமாக அதிகமாக காதலிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகின்றது.
பெற்றோர்களின் கவலை
இன்றைக்கு இளையதலைமுறையினர் படிப்புக்காகவும், வேலைக்காகவும் சொந்த ஊர், நாட்டை விட்டு பிற ஊர், பிற நாடு என்று வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் ஏராளம் என்பதால் பெரும்பாலான பெற்றோர்களின் மனக்கவலை நம்முடைய பையனுக்கு அல்லது பெண்ணுக்கு நாம் பார்த்து வைக்கும் திருமணமா அல்லது அவர்களே தங்களுக்குரிய ஜோடியை தேர்ந்து எடுத்து கொள்வார்களா என்பதுதான். எனவேதான் ஜோதிடரிடம் ஜாதகத்தை காண்பிக்கும் போதே தெளிவாக கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.
கிரகங்களின் சேர்க்கை
காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமா என்பதல்லாம் பிறக்கும் போது கிரகங்கள் நின்ற நிலையும், சேர்க்கையும், பார்வையையும் பொறுத்து அமையும். சில கிரகங்களுடைய சேர்க்கையும், பார்வையும், இருப்பிடமும் கண்டிப்பாக அந்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ காதல் திருமணம் தான் நடக்கும். யார் தடுத்து நிறுத்தினாலும் அந்த திருமணம் நடந்தே தீரும். ஆனால் காதல் திருமணத்திற்கு உரிய கிரகங்கள் சாதகமாக இல்லாத பட்சத்தில் காதல் திருமணம் நடந்தாலும் அந்த காதல் திருமணம் நீடித்து நிற்காது. ஒருவருடைய பிறந்த நேரத்தில் கிரகங்கள் இருந்த நிலை கொண்டு அவருடைய ஜாதகத்தை ஆராய்ந்து அவருக்கு எத்தகைய திருமணம் மகிழ்ச்சியை தரும் என்பதை தீர்மானித்து விடலாம்.
களத்திர ஸ்தானம்
ஒருவருக்கு காதல் திருமணம், கலப்பு திருமணம் போன்றவை அமைய களத்திர ஸ்தானம் எனப்படும் 7ம் வீடு, களத்திரகாரகன், கர்ம காரகன், பாம்பு கிரகங்கள் என்று கூறப்படும் ராகு கேது கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தூரத்து சொந்தத்தில் அல்லது காதல் திருமணம், கலப்பு திருமணம் அமையும் என்றும் கூறலாம்.
புத்திரகாரகன் குரு
ஜோதிட சாஸ்திரத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில் இருப்பவர் குருபகவான். இவர் யோக காரகன், புத்திர காரகன் என்று குறிப்பிடப்படுகிறார். காரகன் என்றாலே சூத்திரதாரி. அதாவது ஒரு செயலைச் செய்பவர் அல்லது செய்யச் சொல்லி தூண்டுபவர் அல்லது தருபவர் என்று பொருள். அதாவது போக இச்சை, சம்போகம், காதல், காமம், அதன்மூலம் குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கு காரணமானவர்.
காம காரகன் சுக்கிரன்
சுக்கிரன்தான் காதலின் ஏகபோக பிரதிநிதி. சிற்றின்பத்தை நுகர வைப்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான உடல் இச்சை, காம சுகத்துக்கு அதிபதி ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர். ஆண், பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர்.
மனதின் அதிபதி சந்திரன்
நிலவைப் பார்த்து காதலர்கள் அதிகம் லயிப்பதற்குக் காரணம் சந்திரன்தான் காதல் செய்ய தூண்டுபவர். இவர் மனிதர்களின் மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதலுக்கு மனதிற்கும் எந்த அளவிற்கு தொடர்பு உண்டே அதே அளவு காதலுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு உண்டு.
வீரியம் தரும் செய்வாய்
செவ்வாய் வீரத்திற்கு உரியவர். காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். இவர் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. தாம்பத்ய உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.
நரம்புகளின் அதிபதி புதன்
புதன்தான் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே.
கட்டங்களில் கிரகங்கள்
ஒருவருக்கு காதல் ஜெயிப்பதற்கு அவரது ஜாதகத்தின் 3, 4, 7 மற்றும் 12ம் வீடுகள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். காதலுக்கு வீரம் அவசியம். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் வீடு தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரத்தையும் வீரியத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
3ம் வீட்டில் கிரகங்கள்
3ம் வீட்டில் பாவ கிரகம், நீச்ச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின் அதிபதி நீச்சம் அடையாமல், 6, 8, 12ல் மறையாமல் இருப்பது அவசியம். மூன்றாம் வீட்டை குரு பார்த்தால் ஆண்மகன் நல்ல சக்தியுடன் இருப்பான். காதலில் அதிரடியாக இருப்பான். மூன்றாம் வீட்டை சனி, புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். புதன், சனி ஆகிய தசாபுக்தி, அந்தரங்களில் இந்த குறைபாடு அதிகம் இருக்கும்.
சுகஸ்தானத்தில் கிரகங்கள்
ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் இடம் சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம்.
ஒருத்தனுக்கு ஒருத்தி
நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும். காதலனிடம் அல்லது காதலியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.
காதல் ஜெயிக்குமா?
ஓருவரின் ஜாதகத்தில் 7ம் இடம் மண வாழ்க்கையை, காதலை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும்.
இனிக்கும் காதல்
இந்த இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி அமைந்தால் காதலும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். ஏழாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை கொண்டவர்களுக்கே இனிமையான காதல் அமையும்.
தடம் மாறும் காதல்
ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம்.
ரகசிய காதல்
குரு பார்வை இருந்தால் ரகசியமாக, சாமர்த்தியமாக, மாட்டிக்கொள்ளாமல் காதல் செய்வார்கள். சுபக்கிரக பார்வை இல்லாமலோ, நீச்ச கிரக திசை, பாவ கிரக திசை நடந்தாலோ ரகசிய காதலுக்கு வாய்ப்பே இல்லை. இவர்களது காதல் ஊருக்கே தெரிந்துவிடும். நல்ல கிரக அம்சங்கள் இருந்தால் நல்ல காதலர் அமைவார்.
காதல் தோல்வி
ஒருவரின் ஜாதகத்தில் 12ம் இடமான அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது.
காதல் வேட்கை அதிகம்
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை உள்ள ஜாதகருக்கு காதல் வேட்கை அதிகம் இருக்கும். சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால்.காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள். ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.
மனம் மாறும் காதலர்கள்
சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் வயப்படுத்துவது ஈஸி. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது.
வயதில் மூத்த காதலி
ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். காதலியை மடக்குவதற்கு தந்திர நடவடிக்கைகளை கையாள்வார்கள். ஏழாம் வீட்டில் கூட்டுக்கிரக சேர்க்கை இருந்தால், காதலி கண்டுகொள்ளாமல் சென்றால்கூட பின்னால் அலைவார்கள். ஏழாம் வீட்டில் சனி-சுக்கிரன் இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும்.
இதில், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பொதுவான பலன்கள், கருத்துகளே கூறப்பட்டுள்ளன. அவரவர் சொந்த ஜாதகப்படி இதில் மாற்றங்கள் வரலாம்.

 

Saturday, 17 June 2017

ஆளுங் கிரகங்கள்-ஒரு ஜோதிட அனுபவம்.

ஆளுங் கிரகங்கள்-ஒரு ஜோதிட அனுபவம்.

ஆளுங் கிரகங்கள்-ஒரு ஜோதிட அனுபவம்.
குரு  தீச்சை பெற்றுக் கொண்டு பலன்கள் சொல்வது  வார்த்தைக்கு உயிர் கொடுக்கச் செய்யும்.
ஒருவர் இன்று உங்களிடம் ஜோதிடம் கேட்க வருகிறார் என வைத்துக் கொள்வோம்.
அவர் உங்கள் முன் வந்து அமர்ந்தவுடன்
அன்றைய கோச்சாரம்
அந்த நேரத்துக்கான ஜாதக கட்டத்தை தயார் செய்து கொள்ளுங்கள்.
உதாரணமாக தற்போது காலை மணி 10-50 தற்போதைய ஜாதக கட்டத்தை போட்டுக் கொள்ளுங்கள்.
இந்த நேரத்துக்கான ஆளுங் கிரகங்களை முடிவு செய்வோம்.
1. இன்றைய கிழமை-சனிக் கிழமை.
ஜோதிடத்தின் பஞ்ச அங்கங்களான திதி -வாரம்-நட்சத்திரம்-யோகம்
கரணம்- இவற்றில் வாரம் எனப்படும் கிழமையின் அதிபதியே ஒரு செயலின்/சிந்தனையின்/பலனின் ஆயுளை நிர்ணயிப்பவர்.
இன்று ஆயுள்காரகன் சனியே கிழமை அதிபதி என்பதால் கேட்கப்படும் விஷயம் நிலையானதாக இருக்கும்.
2. இன்றைய ராசி அதிபதி- இன்று சந்திரன் நிற்கும் ராசி -தற்போது பூரட்டாதி -1ம்பாதத்தில் சந்திரன் இருப்பதால் -கும்ப ராசி.-அதன் அதிபதி-சனி.
மனிதனின் மனம் ராசி வழியை செயல்படுவதால் ஆளுங்கிரகத்தில் ராசியின் அதிபதி இரண்டாவது இடம் பெறுகிறார்.

3.இன்றைய நட்சத்திர அதிபதி-தற்போது சந்திரன் பூரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளதால்-அதன் அதிபதி -குரு
நட்சத்திரங்களின் அதன் அதிபதி வழியே செயல்கள் செயல்படுத்தப்படுவதால் நட்சத்திர அதிபதி மூன்றாவது ஆளுங்கிரகமாகிறார்
4. தற்போதைய லக்ன அதிபதி- தற்போது ஜோதிடம் கேட்பவர் கேள்வி கேட்கும் நேரத்தில் உள்ள லக்கினம்-சிம்ம லக்கினம்-அதன் அதிபதி-சூரியன்
இந்த உதய லக்னம் என்பது காரியத்தின் சர/திர/உபய. நிலைகளை தெரிவிப்பது.இந்த லக்கினத்தை கொண்டே செயலின்/காரியத்தின் தன்மையையும் அறிந்து கொள்ள முடியும். லக்கினத்துடன் தொடர்பு கொண்ட கிரகத்தை கொண்டே  கேள்வி கேட்பவரின் ஸ்டேட்டசை முடிவு செய்யலாம்
5.தற்போதைய லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி- தற்போது லக்கினம் மகம்-4ல் உள்ளதால்-அதன் அதிபதி-கேது.
ஆக
ஆளுங் கிரகங்கள்.
1.இன்றைய கிழமை அதிபதி-சனி
2.தற்போதைய ராசி அதிபதி-சனி.
3.தற்போதைய நட்சத்திர அதிபதி-குரு
4-தற்போதைய லக்கின அதிபதி-சூரியன்
5-தற்போதைய லக்கினம் நின்ற அதிபதி-கேது.
சனிக்கிழமையில் கேள்வி கேட்பதால் கருத்தவர் முடி அடர்த்தியுள்ளவர். ஆயுள் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்பார்.
சிம்மம் லக்னமாகி கேது நட்சத்திரம் என்பதால் தீவிரமான விஷயங்கள் விரதம் எடுப்பது தலயாத்திரை பற்றிய கேள்விகள் கேட்பார்.
கும்ப ராசியாகி குருவின் நட்சத்திரம் என்பதால் ஜோதிடரிடம் தனது கருத்துக்களை வைத்து அதையே சரி என்று சொல்லிக் கொண்டிருப்பார்.
தற்போதைய லக்னம் சிம்மம் என்பதால் அவர் அரசு அதிகாரம் நீதிமன்றம் சார்ந்த துறைகளில் இருந்து வந்திருப்பார்
குரு  தீச்சை பெற்றுக் கொண்டு பலன்கள் சொல்வது  வார்த்தைக்கு உயிர் கொடுத்து செய்யும்.

Thursday, 8 June 2017

ஜோதிட ரகசியம்.100.

                                              ஜோதிட ரகசியம்.100. 

 

ஜோதிட ரகசியம்.100.
1.ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு அந்த பாவத்திலிருந்து வரும், 1, 3, 5, 9, 11-ம் பாவங்கள் நன்மையையும், 8, 12 - ம் பாவங்கள் தீமையும், 2, 6, 7 பாவங்கள் சூழ்நிலைக்கு தகுந்தபடி மத்திம பலனையும் (நன்மை அல்லது தீமை) தரும். மற்றும் 4ம் பாவம் 30% நன்மையையும், 10-ம் பாவம் 70% நன்மையையும் தரும்
2.ஒரு ஜாதகத்தை பார்க்கும் முன் கண்டிப்பாக ஆளும் கிரக சந்திரனின் நிலையையும், லக்ன நிலையையும், பிறந்த நேரத்து லக்ன நிலையுடன் , சந்திரனின் நிலையுடன் ஒத்துவருமாறு ஓரிரு நிமிடத்தை கூட்டியோ அல்லது கழித்தோ ஜாதகத்தை சரியாக கணித்த பின் தான் ஜோதிடர்களாகிய நாம் பலன் சொல்ல வேண்டும்.
3.ஒவ்வொரு பாவமும் (கிரகமும்) அது பெரும் தொடர்பின் மூலம் மற்ற 11 பாவங்களிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தும்.
4.முதலில் ஜாதகம் பார்க்கும் போது முக்கியமாக பார்க்க வேண்டியவை. (நிலையான பாவங்களுக்கு) 1-ம் பாவம் – 8, 12 ம் பாவ தொடர்பு கொள்ள கூடாது 2-ம் பாவம் – 1, 9, 8, 12 ம் பாவ தொடர்பு கொள்ள கூடாது 6-ம் பாவம் – 1, 5, 8, 12 ம் பாவ தொடர்பு கொள்ள கூடாது 7-ம் பாவம் – 2, 6, 8, 12 ம் பாவ தொடர்பு கொள்ள கூடாது 10-ம் பாவம் – 5, 9, 8, 12 ம் பாவ தொடர்பு கொள்ள கூடாது
5.சார ஜோதிட முறையில் சந்திரனை தவிர மற்ற கிரகங்கள் ஜாதகர் பிறந்த போது எந்த நட்சத்திரம், உபநட்சத்திரத்தில் இருந்ததோ அது கடைசி வரை மாறாது ஆனால், சந்திரன் மட்டும் தன்னுடைய நிலையிலிருந்து (தசா புத்திகள் மாறும் போது) அடிக்கடி மாறும்.
6.ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் எதுவோ அதுவாகவே தன்னை மாற்றி கொள்ளும் என்பது சார ஜோதிட முறையில் அடிப்படை தத்துவம்.
7.நிலையான பாவங்களின் (1, 2, 6, 7, 10) விதிக்கொடுப்பினை ஓரளவுக்காவது வலிமையுடன் இருப்பது அவசியம், ஏனென்றால் இந்த நிலையான பாவங்களின் செயல்கள் தான் மனித வாழ்க்கையை தூண்கள் போல் தாங்கி பிடிக்கின்றன.
8.ஒரு பாவத்தின் விதி கொடுப்பினை எனபது தன் பாவ பலனை மட்டும் நிர்ணயிக்கும். ஆனால் மதி என்ற தசா புத்திகள் தான் தொடர்பு கொண்ட பாவத்துடன் மட்டும் நிறுத்தி கொள்ளாமல் அது மற்ற 11 பாவங்களின் மீதும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தும்.
9.ஒரு ஜாதகம் என்பது தனி மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து விசயங்களையும் (12 பாவங்களிலும்) உள்ளடக்கியது. இது பொது விதி ஆகும். அதனுடன் தசா புத்தி அந்தரங்களை சேர்த்து பலன் சொல்வது அந்த ஜாதகத்தின் தனி விதியாகும். (இது தனித்தன்மை வாய்ந்தது)
10.ஒவ்வொரு கிரகமும் தான் எந்த பாவத்தை தொடர்பு கொண்டுள்ளதோ, அந்த பாவத்தின் காரகங்களை தன் கிரக காரக ரீதியில் செயல் படுத்துவதோடு மட்டுமல்லாமல் மேற்கண்ட பாவங்கள் எந்த பாவங்களுக்கு 8, 12 ம் பாவமாக அமைகின்றதோ அந்த பாவங்கள் தங்களுடைய கிரக காரக ரீதியில் கெடுக்கும்.
11.ஒரு குறிப்பிட்ட கிரகம் தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் இயங்கினாலும் இதில் உபநட்சத்திரமே வலிமையானது. ஆனாலும் நட்சத்திரத்திற்கு நாம் எந்தவித முக்கியத்துவமும் தராமல் விட்டுவிட முடியாது. ஏனெனில் உபநட்சத்திரம் எனபது நட்சத்திரத்தின் உள்ளே இருந்து செயல்படுவதால் ஆகும்.

12.ஒவ்வொரு பாவமும் தண்ணி தொடர்பு கொண்ட வேறொரு பாவத்தின் மூலமே இயங்குகிறது. ஒரு பாவத்தின் ஆரம்ப முனை தான் கொண்டிருக்கும், நட்சத்திர உபநட்சத்திர அதிபதிகள் மூலம் மற்ற பாவங்களை இயக்குகின்ற அதே நேரத்தில் மற்ற பாவங்களின் மூலமும் தன்னை இயக்கி கொள்கிறது.
13.ஒவ்வொரு பாவமும் தன்னுள் 50% அகம் சார்ந்த காரகங்களையும், 50% புறம் சார்ந்த காரகங்களையும் வைத்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு பாவமும் தன்னுள் 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் வைத்துள்ளது.
14.ஒரு கேள்விக்குரிய சரியான பதில் துல்லியமாக அறிய பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
•ஆய்விற்குரிய பாவ காரக கொடுப்பினை – 25%
•ஆய்விற்குரிய கிரக காரக கொடுப்பினை – 25%
•ஆய்விற்குரிய பாவத்திற்கு லக்ன கொடுப்பினை – 15%
•ஆய்விற்குரிய பாவத்திற்கு 9-ம் பாவ கொடுப்பினை – 10%
•ஆய்விற்குரிய பாவத்திற்கு அப்போதைய தசாபுத்திகளின் கொடுப்பினை – 25%
மற்றும் அன்றைய கிரக கோட்சார நிலை மற்றும் ராசிகளின் தன்மை, மற்றும் ராசிகளின் தத்துவம் ஆகியவை ஆகும். அகம் சார்ந்த விசயங்களுக்கு கிரக கார கொடுப்பினை மிகவும் முக்கியம். உதாரணம் ஒரு ஆணின் திருமணத்திற்கு 7-ம் பாவத்தை விட சுக்கிரனின் கொடுப்பினை முக்கியம்.
15.ஒரு குறிப்பிட்ட சம்பவங்களுக்கு பாவ காரக கொடுப்பினை பாதிக்க பட்டிருந்தாலும் கூட, கிரக காரகம் பாவத்திற்கு சாதகமான நிலையில் இருந்தால் அந்த சம்பவங்கள் எப்படியாவது நடைபெற கிரக காரகம் குறிப்பிடும் அளவு உதவி புரியும்.
16.லக்ன பாவம் எந்தெந்த பாவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதோ அந்த பாவங்களை எப்படியாவது ஜாதகர் (ஓரளவிற்காவது) அனுபவிக்க முடியும்.
17.ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கு பாவ, கிரக மற்றும் லக்ன கொடுப்பினை நன்கு அமைந்து, தசா நாதனும் சாதகமான நிலையில் இருந்தால் அந்த குறிப்பிட்ட செயலில் ஜாதகர் மிக சிறப்பாக அந்த தசா காலம் முழுவதிலும் அனுபவிப்பார்.
18.அகசார்புடைய ஒற்றைப்படை பாவங்களும், புறசார்புடைய இரட்டை படை பாவங்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றை ஒன்று எதிர்த்து கொண்டே இருக்கும்.
19.ஒரு கிரகம் அல்லது பாவ ஆரம்பமுனை நின்ற நட்சத்திரம் எந்த பாவ ஆரம்ப முனைகளுடன் தொடர்பு கொள்கின்றதோ அது சம்பவமாகவும், அதே கிரகம் நின்ற உபநட்சத்திரம் நட்சத்திரம் காட்டிய பாவத்திற்கு சாதக அல்லது பாதக பலனை தெரிவிக்கும்.
20.ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஆய்வு செய்யும் போது அந்த விஷயத்தின் பாவ காரகத்தை மட்டும் ஆய்வு செய்யாமல் கிரக காரகத்தையும் இணைத்தே ஆய்வு செய்ய வேண்டும்.
21.ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு விதி குடுத்த பலனை அப்போது நடக்கும் மதி என்ற தசா புத்தி முழுமையாக கொடுக்க அல்லது குறிப்பிட்ட அளவு கெடுக்க அதிகாரம் பெறுகின்றது.
22.ஒவ்வொரு கிரகமும் கோட்சாரத்தில் மற்ற கிரகங்களின் நட்சத்திர உபநட்சத்திரத்திலும் செல்லும் போது தான் வைத்திருக்கும் பாவத்திற்கு தற்காலிகமாக நன்மையையோ அல்லது தீமையையோ செய்யும்.
23.பாவ ஆரம்ப முனை என்பது விதி. விதி என்பது கடைசி வரை மாறாதது.
24.விரைந்து செல்லக்கூடிய கிரகங்கள் (சந்திரனை தவிர) ஜாதகத்தில் பாவ உபநட்சத்திரமாக வருவது ஒருவகையில் சிறப்பாகும். விதி என்ற பாவ கொடுப்பினையும், மதி என்ற தசா புத்திகளையும் மட்டும் கருத்தில் கொண்டு கோட்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நாம் பலனை நிர்ணயிக்கலாம்.
25.ஒரு குறிப்பிட்ட பாவ முனையின் உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் வேறு சில பாவ முனைகளுடன் தொடர்பு கொல்லும் போது இரண்டு விதமான விளைவுகள் ஏற்படுத்தும், தொடர்பு கொண்ட பாவத்தின் அகம் சார்ந்த காரகங்களுக்கு ஒரு விளைவையும், அகம் சாராத அல்லது புறம் சார்ந்த காரகங்களுக்கு வேறொரு விளைவையும் தரும்.
26.ஒருவருடைய தனித்தன்மை என்பதே மற்றவர்களால் செய்ய முடியாததை அவர் செய்து முடிப்பதில் தான் உள்ளது. லக்ன பாவமே ஒருவரது தனித்தன்மையை குறிப்பிடும்.
27.ஒரு குறிப்பிட பாவம் மற்ற பாவங்களுடன் தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் லக்னமே அனுபவிக்கும்.
28.லக்ன உபநட்சத்திர அதிபதி எந்த பாவ முனைகளை தொடர்பு கொண்டுள்ளதோ, அந்த பாவ காரக ரீதியில் ஜாதகரின் எண்ண அலைகள் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.
29.ஒரு பாவத்தின் ஆரம்பமுனை உபநட்சத்திரம் தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் வாயிலாக வேறு சில பாவங்களின் ஆரம்ப முனைகளுடன் தொடர்பு கொண்டு தன்னுடைய பாவத்திற்கு நன்மையோ அல்லது தீமையையோ அல்லது நடுநிலைமையையோ தரும். இது அந்த ஜாதகத்தில் குறிப்பிட்ட அந்த பாவத்தின் விதி ஆகும்.
30.1, 2, 3, 4, 7, 10, 11ம் பாவ உபநட்சத்திர அதிபதிகள் தாங்கள் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தங்களுடைய பாவங்களையே தொடர்பு கொண்டாலும் அல்லது தங்களுடைய பாவத்திற்கு 4, 8, 12ம் மற்றும் லக்னத்திற்கு 8, 12ம் பாவத்துடன் தொடர்பு கொள்ளாமல் இருந்தாலும் அது ஒரு உன்னதமான ஜாதகம் ஆகும்.
31.ஒரு பாவத்தின் கொடுப்பினையை முழுவதுமாக அறிந்து கொள்ள அந்த பாவத்தின் நட்சத்திர அதிபதி உபநட்சத்திர அதிபதி, உப உபநட்சத்திர அதிபதி ஆகிய 3 கிரகங்களையும் ஆய்வு செய்தால் மட்டுமே அந்த பாவத்தின் கொடுபினைகளை 100% சரியாக நிர்ணயம் செய்ய முடியும். (நன்மை அல்லது தீமை அல்லது நடுநிலைமை).

32.இராசி என்பது வேறு, பாவம் என்பது வேறு இதில் ஒரு இராசி கட்டம் என்பது 30 டிகிரி அளவு கொண்டது. பாவம் என்பது ஒவ்வொரு ஊரின் அட்சாம்சம் பொருத்து மாறக் கூடியது. ஒவ்வொரு பாவமும் சரியாக 30 டிகிரி அமையாது. எந்த டிகிரியில் அந்த பாவம் விழுகிறது என்பதே அந்த பாவ முனை ஆகும்.
33.ஒருவரின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு தொடர்பு இருக்கும். பிறந்த போது உள்ள லக்னநிலை இறப்பின் போது உள்ள சந்திரனின் நிலையை காட்டும். அல்லது பிறந்த போது உள்ள சந்திரனின் நிலை இறப்பின் போது உள்ள லக்ன நிலையை காட்டும். அல்லது பிறந்த போது உள்ள சந்திரனின் நிலை இறப்பின் போது உள்ள லக்ன நிலை கட்டும்.
34.ஒரு குறிப்பிட்ட கேள்விக்குண்டான பலனை துல்லியதாக நிர்ணயிப்பதில் அந்த கேள்விக்குரிய பாவத்தின் கொடுப்பினை எந்த அளவு முக்கிய பங்கு வகிக்குமோ, கிட்டத்தட்ட அதே அளவுக்கு அந்த கேள்விக்குரிய கிரக காரக கொடுப்பினையும் முக்கிய பங்கு வகிக்கும்.
35.பெரும்பாலான கிரகங்கள் மற்றும் பாவ உபநட்சத்திரங்கள் 6, 8, 12ம் பாவங்களை தாங்கள் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலம் தொடர்பு கொள்ளாமல் இருப்பது ஜாதகர் வாழ்க்கைக்கு நிம்மதியை தரும். 
36.பொதுவாக ஒரு குறிப்பிட்ட பாவம் தனது திரிகோண பாவத்தை தொடர்பு கொள்வதை காட்டிலும் தனது பாவத்திற்கு 3, 11ம் பாவங்களை தொடர்பு கொள்வது அந்த பாவத்திற்கு கூடுதல் வலிமை தரும்.
37.ஒரு குறிப்பிட்ட பாவம் இயங்கும் போது அந்த பாவம் எந்த பாவத்திற்கு 3ம் பாவமாக வருகின்றதோ அந்த பாவத்தை மிக அதிக அளவில் பல மடங்கு வளர்த்து விடும். அந்த பாவத்தை அதன் அடுத்த பரிநாமதிர்க்கு எடுத்துச் செல்லும்.
38.ஒரு குறிப்பிட்ட பாவம் இயங்கும் போது அந்த பாவம் எந்த பாவத்திற்கு 2வது பாவமாக வருகின்றதோ அந்த பாவத்தை குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகமாக வளரவிடாமல் சராசரி அளவைவிட சற்று கூடுதலாக மட்டும் வளர்த்து அதற்க்கு முட்டுக்கட்டையாக செயல்படுத்தும். இதை ஒரு நடுநிலை பாவமாக கருதலாம்.
39.ஒரு குறிப்பிட்ட கிரகம் தரும் பலன்களை அனுபவிப்பது லக்னமே, ஒரு குறுப்பிட்ட கிரகம் இரட்டைப்படை பாவங்களை தொடர்பு கொண்டால் அந்த கிரகத்தின் காரகங்கள் வழியாக பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். 8, 12ம் பாவங்களாக இருக்கக் கூடாது. இது ஒரு சிறப்பு விதி ஆகும்.
40.ஒரு குறிப்பிட்ட பாவம் (கிரகம்) திரிகோண பாவங்களில் 2, 6, 10 மற்றும் 3, 7, 11ம் பாவங்களை தொடர்பு கொண்டால் அக்கிரகத்தின் (பாவத்தின்) அக சார்புடைய காரகங்களையும் புற சார்புடைய காரகங்களையும் ஜாதகரால் மிகவும் அனுபவிக்க முடியும் (தசா புத்திகள் எதிர்க்காத வரை).
41.லக்ன பாவம் 4ம் பாவ தொடர்பினை பெற்று எந்த தசையாக இருந்தாலும் அது 2, 4ம் பாவத்தை தொடர்பு கொண்டால் கண்டிப்பாக வீடு வாங்குவர். ஆனால் 4ம் பாவத்திற்கு 3, 7, 11ம் பாவ தொடர்பு வரக்கூடாது. அப்படி பெற்றால் சொத்தினை நிலையாக வைத்திருக்க முடியாது.
42.தசா நாதனுக்கு 3 அல்லது 4 புத்திகள் சாதகமாக இருந்தால் தசா நாதன் வலிமை பெற்று விடுவார்.
43.கேன்சர் நோய்க்கு ராகு, கேதுக்கள் தான் காரகர் இவர்கள் 6, 8, 12ம் பாவ தொடர்பு கூடாது.
44.லக்னம் மற்றும் 8ம் பாவ உபநட்சத்திரம் ஒரே கிரகமாக இருந்தால் தலையில் அடிபடும், உடல் ஊனம் வர வாய்ப்பு உண்டு, தசா புத்தி தொடர்பு அதை எதிர்த்தால் (1, 8ம் பாவத்தை) நிறைய கிரகங்கள் 7ம் பாவத் தொடர்பினை பெற்றால், ஊனம் வராது.
45.சுக்கிரன் 3, 7, 11ம் பாவத்தொடர்பு விபத்து ஆகாது மற்றும் 4ம் பாவம் 3, 7, 11ம் பாவத்தொடர்பு விபத்து ஆகாது.
46.லக்னம் ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொள்கிறவர்கள் இளமையாக இருப்பார்கள் (50 வயதுக்காரர் 40 வயதுக்காரர் போல்) லக்னம் 6,8,12ம் பாவத்தொடர்பு வயதானவர்கள் போல் காணப்படுவார்கள் (40 வயதுக்காரர் 50 வயதுக்காரர் போல்).
47.லக்னம் உபநட்சத்திரம் செவ்வாயாக இருந்தால் அழகு குறைவு ஆனால் ஸ்மார்ட் ஆக முரட்டுதனமானதாக தோற்றம் இருக்கும்.
லக்னம் – சுக்கிரன் உப நச்சத்திரமாக இருந்தால் அழகு அதிகம்.
லக்னம் – ராகு உப நட்சத்திரமாக இருந்தால் வித்தியாசமாக இருப்பார் (உடை தாடி அனைத்தும்). 
48.1,8-3,8,12ம் பாவத்தொடர்பு ஜாதகருக்கு ஆயுள் குறைவு.
49.லக்னம் 9ம் பாவம் – 8,12ம் பாவத்தொடர்பு மனவளர்ச்சி குன்றியவர்.
50.லக்னம் – 1,2,5,9,11ம் பாவத்தொடர்பு நீண்ட ஆயுளை (70 வயதுக்கு மேல்) கொடுக்கும்.
51.லக்னம் – 2,4,6,10ம் பாவத்தொடர்பு என்பது குழந்தை, குழந்தை பருவத்தில் முரட்டுத்தனம் உள்ள குழந்தையாக இருக்கும்.
52.11ம் பாவம் வலிமையுடன் இருந்தால் எப்போதும் உற்சாகமான எண்ணங்களுடன் மகிழ்ச்சியான வாழ்கை அமையும். பொருள் சார்ந்த ஆசைகள் குறையும்.
53.8ம் பாவம் 7ம் பாவம் தொடர்பு கொண்டால் விபத்து வராது.
54.ஜாதகத்தில் குறிப்பிட்ட பாவங்களின் கொடுப்பினை நன்றாக இருந்து லக்ன பாவமும் அந்த குறிப்பிட்ட பாவங்களுக்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டு இருந்தால் அந்த குறிப்பிட்ட பாவங்களின் பலனை ஜாதக 100% நன்றாக அனுபவிப்பார் (தசா புத்திகள் தடுக்காத வரை). 
55.லக்னதிற்கு 6,8,12ம் பாவத்தொடர்பு இருக்கக் கூடாது. 
56.ஒரு குறிப்பிட்ட பாவம் 1,5,9ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் அந்த பாவத்தின் காரகங்கள் மூலம் ஜாதகற்கு ஆரோக்கிய பாதிப்போ, வலி வேதனைகளோ இருக்காது.
57.2 – 6, 8, 12ம் பாவத்தொடர்பு பல், கண், மூக்கு, நாக்கு, கன்னம் இவற்றில் பிரச்னைகளை உண்டு பண்ணும்.
58.2 – 10ம் பாவத்தொடர்பு பணத்தை வைத்து தொழில் செய்வார். 
59.2- 9ம் பாவத்தொடர்பு அதிக சந்தோஷங்களுக்கும் தான தர்மத்திற்கும் பணத்தை செலவு செய்வார். ஆன்மிகம் மூலம் ஜாதகருக்கு அமைதி கிடைக்கும்.
60.2 – 6ம் பாவத்தொடர்பு பணத்தை வட்டிக்கு விடுவார் மற்றும் இன்னொரு சொத்தும் வாங்குவார். 
61.2 – 8, 12ம் பாவத் தொடர்பு 8ம் பாவம் பணம் மாட்டிக்கொள்ளுதல், 8, 12ம் பாவம் பணத்தை பறிக்கொடுத்தல் ஆகும்.
62.3 – 8ம் பாவத்தொடர்பு டென்சனை கொடுக்கும்.
63.3, 7, 11ம் பாவங்கள் எந்த பாவத்திற்கு 12ம் பாவமாக உள்ளதோ அந்த பாவங்கள் ஒரு வரைமுறைக்கு கட்டுப்பட்டே செயல்படும். உதாரணம் - 4, 8, 12க்கு 3, 7, 11ம் பாவங்கள் 12ம் பாவங்கள் ஆகும். 
64.3வது பாவம் ஒரு செயலை அல்லது வேலையை மாற்றி மாற்றி பண்ணுவது. 4வது பாவம் ஒரு செயலை அல்லது வேலையை ஒரே மாதிரி பண்ணுவது.
65.4 – 3, 11ம் பாவத்தொடர்பு விபத்து ஆனாலும் நமக்கு ஒன்றும் ஆகாது. ஆனால் வண்டிக்கு சேதாரம் உண்டு.
66.4 – 8, 11ம் பாவத்தொடர்பு விபத்து ஆனால் வண்டிக்கு (அதிக டேமேஜ்) பிரச்சனை. ஜாதகருக்கும் (சிறிய அளவு டேமேஜ்) பிரச்சனை.
67.4 - 4, 8, 12ம் பாவத்தொடர்பு படிப்பு குறைவு.
68.ஒரு குறிப்பிட்ட பாவம் அந்த பாவத்தில் இருந்து வரும் 4ம் பாவம் 30% வரை மட்டும் தான் அந்த பாவத்தை இயக்கும். (உ.ம் – 10ம் பாவத்திற்கு 1ம் பாவம் 4ம் பாவம் என்பது போல).
69.4 – 11ம் பாவத்தொடர்பு கல்வியில் உயர் நிலையைக் கொடுக்கும். ஆனால் சொத்தில் வில்லங்கம் வரும். ஷேப் இல்லாத லேண்டு அல்லது வீடு வாங்குவார்.
70.4 – 12ம் பாவததொடர்பு சொத்துக்கள் வாகனங்கள் இருந்தாலும் அவர் அதை அனுபவிக்க முடியாது.
71.4 – 10ம் பாவத்தொடர்பு டீச்சர் அல்லது உற்பத்தி சார்ந்த தொழில் செய்வார்.
72.4 – 3ம் பாவத்தொடர்பு உடல் மெலிந்து இருப்பார். அடிக்கடி பயணங்கள் செய்வார். பிறந்த ஊரிலே இருக்க மாட்டார்.
73.4 – 6ம் பாவத்தொடர்பு உடல் பருமனாக இருப்பார். மேலும் குருவும் 4, 6ம் பாவத்தொடர்பு உடல் பருமன் காட்டும்.
74.4 – 3, 12ம் பாவத்தொடர்பு வண்டி அடிக்கடி பஞ்சர் ஆகும்.
75.4 – 5ம் பாவத்தொடர்பு வீட்டை வாடகைக்கு விட மாட்டார். வீட்டை அழகாக ரசனையுடன் கட்டி தானே குடி இருப்பார். மேலும் வீட்டையும், வாகனங்களையும் மேலும் மேலும் அழகு படுத்துவார்.
76.4 – 2ம் பாவத்தொடர்பு சுகர் உண்டாகும். மேலும் சுக்கிரனும் இரட்டைப்படை தொடர்பு இருக்க வேண்டும். மேலும் சந்திரனும் காரகர் ஆவார். (சந்திரன் – இரத்தம்).
77.கல்வி என்பது 4 நிலைகளை கொண்டது அவை
1.பாலக்கல்வி – 2 முதல் 7 வயது வரை.
2.அடிப்படைக்கல்வி - 7 முதல் 17 வயது வரை.
3.உயர்க்கல்வி - 17 முதல் 25 வயது வரை.
4.உச்சக்கல்வி -25 வயதுக்கு மேல்.
78.4, 6 – 3, 5ம் பாவத்தொடர்பு கடன் அடைப்படும்.
79.4ம் பாவம் மற்றும் 5ம் பாவம் அடுத்தடுத்து வரும் இரண்டு பாவங்களுக்கும் ஒரே கிரகம் பாவ உபநச்சத்திரமாக அமைந்தால், அந்த கிரகத்தின் சாரத்திலோ, அல்லது உபநச்சத்திரத்திலோ வேறு கிரகம் இருந்தால் மேலே குறிப்பிட்ட 5ம் பாவத்தை விட அதன் 12ம் பாவமாகிய 4ம் பாவத்தின் வேலையையே அதிகம் செய்யும்.
80.5 – 9ம் பாவத்தொடர்பு எந்த வேலையையும் இலவசமாக செய்து கொடுப்பார் (இந்த பாவரீதியாக).
81.5ம் பாவம் வெள்ளை அணுக்களை குறிக்கும்.
1ம் பாவம் சிவப்பு அணுக்களை குறிக்கும்.
82.லக்னம், 5ம் பாவம், குரு – 4, 8, 12ம் பாவத்தொடர்பு பெற்றால் குழந்தை இல்லை. ஆனால் ஏதாவது ஒரு ஒற்றைப்படை பாவங்கள், தசா புத்திகளில் காட்டினால் குழந்தை உண்டு. 5ம் பாவத்தை காட்டினால் 100% குழந்தை உண்டு. 3ம் பாவத்தை காட்டினால் 200% குழந்தை உண்டு.

83.கலைத்துறையில் நீடித்து இருப்பதற்கு 5ம் பாவம் 10ம் பாவத்திற்கு 8, 12ம் பாவங்களான 5, 9ம் பாவங்களை தொடர்பு கொள்ளக் கூடாது.
84.5, 7, 9ம் பாவங்கள் ஒற்றைப்படை பாவங்களைத் தொடர்பு கொண்டால் (ஆபரேஷன் ஏதும் செய்யாத பட்சத்தில்) அதிக குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் அதிகமாக உண்டு. 
85.5ம் பாவம் - 2, 4, 6, 10ம் பாவத்தொடர்பு கொண்டால் ஜோதிடம் நன்றாக வரும். ஆனால் பிரகாசிக்க முடியாது. பொருளாதாரம் உயர்வு உண்டு.
5 - 3, 7, 11ம் பாவத்தொடர்பு கொண்டால் ஜோதிடம் நன்றாக வரும். பொருளாதார உயர்வு இல்லை ஆனால் நன்றாக பிரகாசிப்பார்கள். 5ம் பாவம் எந்த காரணத்தை கொண்டும் 4, 8, 12 ம் பாவத்தொடர்பு கூடாது. 
86.குழந்தை பாக்கியத்திற்கு 5ம் பாவம், லக்னம், 9ம் பாவம் மற்றும் குரு (புத்திரகாரகன்) போன்றவை 5ம் பாவத்திற்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.
87.பெண் குழந்தைகளுக்கு சுமார் 8 வயது முதல் 20 வயது வரை நடை பெரும் தசா புத்திகள் 4, 8, 12ம் பாவத்தொடர்பை பெற்றிருந்தால் அந்த பெண் ருது ஆகும் காலம் தாமதப்படும்.
88.ஒரு குறிப்பிட்ட பாவம் 5ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் அந்த பாவத்தின் காரகங்களின் மீது லக்னத்திற்கு (ஜாதகருக்கு) ஒருவித ஈர்ப்பு, கவர்ச்சி, மயக்கம், நேசம் போன்றவை உண்டாகும்.
89.6 – 8 ம் பாவ தொடர்பு ஈகோ பிரச்சனை வரும். தேவைக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டி வரும்.
90.6 - 2, 4, 6, 10 மற்றும் 3, 7, 11 ம் பாவ தொடர்பு மருத்துவ படிப்பிற்கு நல்லது.
91.6 - 6, 8, 12ம் பாவ தொடர்பு நோய், வழக்கு, கடன் ஆகியவை இரட்டிப்பாகும்.
6ம் பாவ தொடர்பு நோயை குறிக்கும்
8ம் பாவ தொடர்பு அதில் வலி, வேதனை, உறுப்பு பழுதாவதையும் குறிக்கும்.
12ம் பாவ தொடர்பு அந்த உறுப்பு செயல் இழத்தலையும் குறிக்கும்.
92.6 – 6, 8 , 12 நோய் மென்மேலும் மோசமாகும்.
6 – 1, 5, 11 ம் பாவ தொடர்பு நோயிலிருந்து விடுதலை
6 – 4, 10, 12 ம் பாவ தொடர்பு வைத்தியம் செய்தும் உடல் செயல் இழத்தலையும், நோய் குணமாகாததையும் குறிக்கும்.
93.6 சிறுகடன் – 5 சிறுகடன் அடைபடுதல்
8 பெருங்கடன் – 7 பெருங்கடன் அடைபடுதல்
94.6 – 1, 5, 9,8 – 3, 7, 11 ம் பாவ தொடர்பு வரும் பொது அணைத்து கடன்களையும் ஜாதகர் அடைப்பார்
95.6 – 1, 3, 5, 9, 11 ம் பாவ தொடர்பு நீடித்த நோய்களை தராது
96.6 ம் பாவம் எந்த பாவத்தை தொடர்பு கொண்டாலும் தொடர்பு கொண்ட பாவத்திற்கு தைரியம் உண்டு. உதாரணம்: 2 – 6 பேச்சு தைரியம்
3 – 6 எழுத்து தைரியம் என்பது போல 
97.6 –ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கு மிகவும் சாதகமான அதே நேரத்தில் லக்ன பாவத்திற்கு மிகவும் பாதகமான 4, 8, 12 ம் பாவத்துடன் தொடர்பு கொள்ளும் அமைப்பை உடைய ஜாதகர் மதுவை உட்கொள்ள ஆரம்பித்தால் மதுவிற்கு அடிமை ஆகும் வாய்ப்பு உண்டு. மற்றும் ராகு, கேதுக்களின் 1, 6 , 8, 12 ம் பாவ தொடர்பு இதற்கு காரணமாகும்
98.ஒரு குறிப்பிட்ட பாவம் தனது பாவத்திலிருந்து 6-ம் பாவத்தை தொடர்பு கொண்டால், மற்றவர்களை வீழ்த்தி அல்லது போராடி தனது பாவத்தை செயல்படுத்தும்
99.8-ம் பாவம் ஒற்றைபடைகளை தொடர்பு கொண்டால் விபத்து வராது
100.8 – 1, 3, 5, 7, 11 ம் பாவ தொடர்பு ஜாதகர் இறுதியில் வலி, வேதனைகளை அனுபவிக்கமாட்டார்.

 

சிம்மத்தில் இராகு சஞ்சரிக்கும் பொழுது

                                 சிம்மத்தில் இராகு சஞ்சரிக்கும் பொழுது 

 

உலகியல் ஜோதிடம்
சிம்மத்தில் இராகு
சஞ்சரிக்கும் பொழுது
1) மிக பெரிய அரசியல்
தலைவர் ஒருவர்
மரணமைடைவார்
2) மிக பெரிய அரசியல்
     தலைவர் சிறையில்
     அடைக்ப்படுவார்
3). மிக பெரிய சமூக
      சேவகர் அல்லது
     மிகவும் பிரபலமான
     மனிதர் ஒருவர் மடிந்து
     போவார்
4).  ஆட்சி பீடத்தில் அமரந்து
       இருப்பவர்களுக்கு அபாயங்கள்
       அதிகமாக இருக்கும்
சரி இந்த பலன்கள் முக்கால்வாசி
காலம் முடிந்து விட்டது
வரும் இராகு கேது பெயர்ச்சி பின்
என்ன நடக்கும் இது ஜுலை மாதம்
பின் என்றாலும் அதன் தாக்கம்
இந்த ஜூன் மாதம் முதலே ஆரம்பித்து
விடும்
கடக இராகு என்ன பலன்
என்று பார்ப்போம்


அரசியலில் பிரபல பெண்மணிகளில்  மரணமடையகூடும்
பொது வாழ்க்கையில் ஈடுபட்டு
பிரபலமடைந்த பெண் ஒருவர்
மரணமடையகூடும்
உணவு பொருட்களிள் கலப்படம்
அதிகரிக்கும்
உணவு முலம் நோய்கள் பரவும்
அல்லது நீர் முலம் நோய்கள்
பரவும்
விச உணவால் சாவுகள்
அதிகரிக்கும்
மதுபானம் போதை வஸ்துப்களின்
விசதன்மையில் மரணங்கள்
ஏற்படும்

 

Friday, 2 June 2017

மருத்துவமும் ஜோதிடமும்

                                                                                                       மருத்துவமும் ஜோதிடமும் 


வயிற்றை வைத்துதான் ஒரு பெண் தாய்மை அடைந்திருக்கின்றாரா இல்லையா என்பதை பொதுவாக கண்டறிகின்றோம்

வயிற்றின் மையமாக இருப்பது தொப்புள்.
சூரியன்தான் அனைத்து கிரகங்களுக்கும் மையமாக இருந்து அணைத்து கிரகங்களையும் இணைக்கின்றது.

சிருஷ்டி இங்கேதான் உருவாக்கப்படுகின்றது. குழந்தை தாயின் தொப்புள்கொடி வாயிலாகத்தான் தனக்கு தேவையான உயிர் சக்தியை பெறுகின்றது.

நவீன மருத்துவம் கூட தொப்புள் கொடியை சேமித்து வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் தேவையான நோய்களை குணப்படுத்தலாம் என்று கூறுகின்றது.

இப்பேற்பட்ட சக்தி வாய்ந்த இடம்தான் தொப்புள். ஓர் உயிர் ஜனிக்கின்ற இடம்.

காலப்புருஷனுக்கு 5க்குரியவர் சூரியன். 5 ஆம் பாவம் புத்திரபாக்கியத்தை குறிக்கும். 
எனவேதான் தொப்புளுக்கு காரகன் சூரியன் ஆவார். சூரியனுடைய சக்தியை நாம் அறிவோம். 5ஆம் பாவமே நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கும். நோய் குணமடைதலையும் குறிக்கும்.

நமது இந்து மதத்தில் வழிபாட்டு முறைகள் எல்லாம் நமது சக்தி மையத்தை மறைமுகமாக குறிப்பிடுகின்றது.
(பார்க்க படம்). என்னுடைய ஜோதிடமும் மருத்துவமும் என்ள முதல் பகுதியில் கூட இந்து மத வழிபாட்டில் சில இரகசியங்களை குறிப்பிட்டிருந்தேன். இறைவனின் உருவத்தில் மனிதனின் சக்தி வாய்ந்த இடங்களை மறைமுகமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆங்கிலத்தில் Unconscious நிலை என்று சொல்லப்படும் உணர்வற்ற நிலையில் இருக்கும் நோயாளியின் தொப்புள் கொடியில் அழுத்தம் கொடுத்துவர சக்திநிலை உயிர்ப்பிக்கப்பட்டு நோய் குணமடைய செய்கின்றனர்.

5ஆம் பாவமே நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கும். நோய் குணமடைதலையும் குறிக்கும்.

இவ்வளவு இரகசியங்களை கொண்ட நம் ஜோதிடத்தை நம் வழிபாட்டு முறைகளை அழிக்க துடிக்கும் அந்நிய சக்திகளை வேரறுப்போம்

 


                                                                                                                                                                                                 மருத்துவமும் ஜோதிடமும் [2]



சூரியனுக்கு அருகில் சுற்றிவரும் கிரகம் புதன் ஆகும்.

புதனின் ஒருப்பகுதி மிகுந்த குளிர்த்தன்மை வாய்ந்த பனிக்கட்டி போன்று இருப்பதாக நவீன விஞ்ஞானம் கூறுகின்றது.

நீங்கள் வெயிலில் செல்லும்போது உங்கள் கழுத்தின் ஒருபுறம் மட்டும் வியர்வையை சுரந்து சட்டை காலரை அழுக்காக்கி விடும்

நீங்கள் வெயில் சென்று வந்த பிறகு கைகளை நீரை பிடித்து பின்னங்கழுத்தை கழுவ உடம்பு நீங்கள் இருக்கும் அறையின் வெப்பநிலையை அடையும் என்று நவீன மருத்துவம் கூறுகின்றது.

நெற்றியை குறிக்கும் கிரகம் புதன். முன்பெல்லாம் உடல் ஜூரத்தால் பாதிக்கப்பட்டால் ஒரு துணியை நீரில் நனைத்து புழிந்து நெற்றியில் வைத்திருப்பார்இள். இது உடலின் வெப்ப நிலையை சரி செய்யும் தன்மை கொண்டது.



                                                       ஜோதிடமும் மருத்துவமும் [3]

முகநூல் நண்பர்கள் இந்த பதிவினை மிகவும் அதிகமாக முகநூல் வாயிலாகவும் வாட்ஸ்அப் மற்றும் இன்னும் பிற சமூக ஊடகங்கள் மூலம் ஷேர் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டுகின்றேன்.

நாடி ஜோதிடத்தில் குரு ஜீவகாரகன் என்று அழைக்கப்படுகின்றார். ஜீவன் என்றால் உயிர் என்று அர்த்தம்.

இந்த ஜீவகாரகனின் ஒரு வீடான மீன ராசியில்தான் சுக்கிரன் உச்சமடைகின்றார். மீனம் பாதங்களை குறிக்கும். 

சுக்கிராச்சாரியருக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தியை கொண்டவர் என்று புராணங்களில் குறிப்பிடப்படுகின்றது

சுக்கிரனின் அதிபதியான மஹாலக்ஷ்மி தாயாரும் பகவான் ஶ்ரீவிஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்திருப்பதை காணுகின்றோம்.

அதாவது ஜீவன் கால்களிலே அதிலும் குறிப்பாக பாதங்களிலே இருக்கின்றது என்பதை மறைமுகமாக உணர்த்துவதே இதன் தத்துவமாகும். 

அக்குபஞ்சர் மருத்துவம் கூட கைகள் மற்றும் கால்பகுதிகளிலேயே பல சிகிச்சைகளை அளிக்கின்றது.

முக்கியமாக பல்ஸ் மிகவும் குறையும் போது கையின் சுக்கிரனை குறிக்கும் கட்டை விரல், புதனை குறிக்கும் சுண்டு விரல் மற்றும் ஜீவகாரகன் குரு ஆட்சி பெறும் மற்றும் சுக்கிரன் உச்சம் பெறும் கால்களில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளை அழுத்துவதன் மூலம் அவரை உயிர்ப்புடன் இருக்கச்செய்கிறது.

புதன் மீனராசியில் நீச்சம் அடைகின்றது. புத்தியை குறிக்கும் கிரகம் புதன். அதாவது புத்தி சுவாதீனமாவர்கள், மூளைவளம் குன்றியவர்கள் இவர்களுக்கு கூட கால்பகுதிகளில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க அவர்களை உயிர்பிக்க முடியும்.

புதன் புத்தியை குறிக்கும் என்று பார்த்தோம். புதன் கைகளை குறிக்கும் கிரகமாகும். காலப்புருஷனுக்கு ஆறாம் பாவம் நோய்களை குறிக்கும். இந்த ஆறாம் ராசியில் உச்சமடையும் கிரகம் புதன். நீசம் ஆகும் கிரகம் சுக்கிரன்.
நோய் வந்தால் ஜீவன் அவஸ்தை பெறும்.

இறைவனின் கைகள் ஒன்று உள்ளங்கைகளை காட்டி மேல்நோக்கியும் மற்றொரு கை கால்களை நோக்கியும் இருக்கும்.

எனவே புத்தி, அறிவு குறைந்தவர்களுக்கு தொடர்ந்து கைகளில் குறிப்பிட்ட புள்ளிகளை அழுத்தும் போது புத்தி பலம் அடையும். நோய் குணமாகும்.

உயிருக்கு அவசரம், தீவிர நோய் தாக்கத்தில் இருப்பவர்களை காப்பாற்ற கால்களிலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். (((இறந்தவர்களின் கால்களை கட்டிவைக்கும் பழக்கம் நமக்கு உண்டு)))

படங்களில் நாம் பார்த்திருப்போம். 
மயக்கமடைந்தவர்களை மார்பில் அழுத்தம் கொடுத்தவுடன் அவர்கள் கண் விழிப்பார்கள். ரஜினி நடத்திய சிவாஜி படத்தில் ஒரு காட்சி வரும். பல படங்களில் இந்த காட்சிவரும்.
உயிருக்கு போராடுபவர்களை மின்சார அயன்பாக்ஸ் போன்ற வடிவில் உள்ள இரண்டு கருவிகளை மார்பில் வைத்து அழுத்துவார்கள். உடனே உடல் மேல்தூக்கி போடும். சில முறைகள் செய்தவுடன் உடல் உயிர் பெறும்.

ஜீவகாரகன் குரு உச்சமடைவது மார்பை குறிக்கும் கடக ராசியில்தான். எனவேதான் ஆங்கில மருத்துவர்கள் மார்பிலே அழுத்தம் கொடுக்கின்றார்கள். 

பெண்களே எப்போதும் ஆண்களுக்காக தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கின்றனர். நம்மை பெறும் போது கடும் வலியினை அடைந்து இரத்த போக்கையும் அடைந்து மீண்டும் உயிர் பெறுகின்றாள். அந்த சமயத்தில் அவள்படும் பாட்டை வார்த்தைகளால் எழுத முடியாது.

மேலும் நமக்கு பாலூட்டி சோறூட்டி
நமக்கான பல அன்றாட வேலைகளை செய்பளும் பெண்தான்

எனவே அந்த பெண் எப்போதும் உயிர் சக்தியினை பெறுவதற்காக 
புதன் குறிக்கும் கழுத்தில் நகைகளும், குரு உச்சமடையும் பகுதியான மார்பில் தாலியும், கால்களை குறிக்கும் பகுதியில் கொலுசும் மெட்டியும் அணிவிக்கப்படுகின்றது. இதனால் அந்த இடம் அழுத்தப்பட்டு உயிர்சக்தி பெறப்படுகின்றது (சில மதங்கள் பெண்கள் ஒரு பொட்டு நகை கூட அணியகூடாதும் என்றும், அணிந்தால் இறைவன் முக்தி தரமாட்டார் என்றும் கூறுவது வருத்தம் அளிக்கின்றது)

திருமணமடைந்த பெண்களே எப்போதும் தாலியுடனும், காலில் கொலுசுடனும் மெட்டியுடனும் இருங்கள். அவைகள் உங்கள் உயிர்காக்கும் கருவிகளாகும்.

ஆத்ம காரகன் உச்சமடையும் தலையில் இருக்கும் நெற்றி வகிட்டில்
குங்குமம் வைக்கும் போது அந்த பகுதியில் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இதனால் ஆத்மபலம் பெறப்படுகின்றது.

புதன், குரு, சுக்கிரன், சூரியன் இவர்கள் குறிக்கும் பகுதியில்தான் உயிர்சத்தும் ஜீவனும் ஆத்மசக்தியும் உள்ளது. இதனை தூண்டியே அக்குபஞ்சர் மருத்துவம் செயல்படுகின்றது.

ஜோதிடமும் மருத்துவமும் கசடற கற்ற ஒரு மருத்துவரால் எந்த ஒரு தீவிர நோயின் தாக்கத்தால் இருந்தாலும் கூட அவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்று கூறி எனது ஆராய்ச்சி கட்டுரையை முடிக்கின்றேன்



 

 

Thursday, 1 June 2017

திருமணப்பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டியவை

                திருமணப்பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டியவை


திருமணப்பொருத்தம் பார்க்கும்போது இரண்டு கிரகங்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதில் ஒன்று சூரியன் மற்றொன்று சூரியனின் பிள்ளையான சனியாகும்.
ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7ல் சூரியன் இருந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். விருச்சிக லக்கினக்காரர்களைத்தவிர பிற லக்கினக்காரர்களுக்கு 7ல் உள்ள சூரியன் திருமண வாழ்வில் பிரிவினையைத்தந்து விடுகிறது. உதாரணமாக துலாம் லக்கினத்தை எடுத்துக்கொண்டால் 11க்குடைய சூரியன் 7ல் உச்சம் என்று கொண்டாடவேண்டாம். 11மிடத்து லாபாதிபதி கூட்டுத்தொழிலில் லாபத்தைத்தரலாம், ஆனால் சர லக்கினமான துலாத்திற்கு பாதகாதிபதியாகி 7ல் இருந்து களத்திர பிரிவினையை தந்து விடுகிறார். மேலும் சனியும் செவ்வாயும் சேர்ந்து தங்களது பார்வையை 7மிடத்தில் வீசினால் முடிவு சோகம்தான்.
மேச லக்கினத்திற்கு 7ல் சூரியன் நீச்சமாகி ராகுவின் நட்சத்திரமான சுவாதியில் நிற்க , அவரை குரு பார்க்காமல் இருந்தால் அவர்களது திருமண வாழ்வில் முறிவு ஏற்ப்பட்டுவிடுகிறது.
மீன லக்கினத்திற்கு 6க்குடைய சூரியன் 7ல் இருந்தால் பிரிவினையைத்தராமல் மனைவியால் ஏச்சையும்,பேச்சையும் கேட்டு வெட்கி தலை குனிந்து வாழவேண்டும். இங்கு பிரிவினை தராத காரணம், உபய லக்கினத்திற்கு பாவிகள் உபயம் ஏறினால் நல்லவர்களாக மாறிவிடுவதுதான். ஆனால் மனைவியின் திட்டுதலும், வசைபாடுகளும் குறையாது. மேலும் சூரியன் உத்திரம் நட்சத்திரத்திலிருந்தால் கேட்கவே வேண்டாம். மனவியின் வசை பாடுதலை கேளுங்கள்,கேளுங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள். எனவே மணமகன் ஜாதகத்தில் சூரியன் 7மிடத்தில் இருந்தால் அவர் யாருடன் சேர்ந்து இருக்கிறார், அவர் பாபரா,சுபரா? அவர் இருக்கும் சாரமென்ன ? யாரால் பார்க்கப்படுகிறார் என்று சீர்தூக்கி பார்த்து பொருத்தவும். இங்கே எனது ஆசான் சித்தயோகி சிவதாசன் ரவி அவர்களின் கருத்தை கூற விரும்புகிறேன். 7ல் இருக்கும் சூரியன் ஏன் மண வாழ்க்கையில் பிரிவினை கொடுக்கிறது என்று வினவியபோது, காலச்சக்கரப்படி 7ல் சூரியன் நீச்சமடைவதால் , எந்த லக்கினமாக இருந்தாலும் நீச்சமடைவதாக கொள்ளவேண்டும், அதுதான் பிரிவினையைத்தருகிறது.
அடுத்து சனியின் திருவிளையாடல்களைப்பார்ப்போம். ஆண் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 3ல் சனி இருந்தால், மணமகன் திருமணமாகி மாமனார் வீட்டிற்கு மாப்பிள்ளையாய் போய் சேர்ந்து ஒரு சில மாதங்களில் மரணமடைவது அல்லது படுத்த படுக்கையாகிவிடுவது அல்லது இருந்தும் இல்லாமல் போவது, இப்படி ஏதாவது ஒன்று ஆகிவிடுகிறது. 3ல் சனி என்னும்போது , 3மிடம் 7மிடத்திற்கு 9மிடமாகி , அது மனைவியின் தந்தையாகி ,மாமனாரை குறிக்கிறது. அதில் சனி அமர அவரை தீய கிரகங்கள் பார்க்க , விளைவு மாமனாருக்கு ஆபத்தாக முடியும்.
என் அனுபவத்தில் கண்ட ஒரு ஜோடி, அதில் மணமகன் ஜாதகத்தில் துலாம் லக்கினத்திற்கு 3ல் சனி அமர்ந்திருந்தார். திருமணமான சில மாதங்களில் மாமனார் இறந்துவிட்டார். எனது ஆசான் மறைந்த K.A. இராமன், BA விடம் இது பற்றி கேட்கும்போது, மூல நட்சத்திரத்தை விட, 3ல் உள்ள சனி உடனே மாமனரை முழுங்கிவிடும் என்றார். அதே 3ல் உள்ள சனியை குரு பார்த்தால் உயிர் இருந்தும் ஒன்றுக்கும் உதவாமல் இருப்பார். 3ல் இருக்கும் சனியின் வேலை பலவாக இருந்தாலும் ,திருமானப்பொருத்தத்தில் 3ல் சனி நின்றால் நிறைய யோசனை செய்து ஜாதகத்தை ப்பொருத்தவேண்டும். இந்த விதிக்கு எனது ஜாதகமே உதாரணமாகும். மிதுன லக்கினத்திற்கு 3ல் சனி நின்று குருவால் பார்க்கப்பட்டதால் நான் மாப்பிள்ளையாக சென்ற சில வருடங்களில் சுறுசுறுப்பான மனிதன் வீட்டோடு முடங்கி , பின் கட்டிலோடு முடங்கி வாழ் நாளை கழித்தார். உயர்ந்த உள்ளம்கொண்ட அவர் எனது ஜாதகத்தால் பாதிக்கப்பட்டபோது ,அன்றிலிருந்து இன்று வரை மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது.
எனவே பத்துப்பொருத்தம் மட்டும் பார்க்காமல் , 7ல் சூரியன் ,3ல் சனி இருப்பதைக்கவனித்து அலசி ஆராய்ந்து பொருத்தவும். தீய கிரகங்கள் 3ல் இருந்தால் ,உதாரணமாக 3ல் கேது நின்றால் மாமனாரின் முயற்சிகள் அனைத்தும் தடைப்பட்டு நடமாடும் பிணமாகத்தான் திரியவேண்டும்.
(பாரம்பரிய ஜோதிடத்தில் நல்ல ஞானமும் முப்பது வருடங்களுக்கு மேலான அனுபவங்களும் இருந்தும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாதவர் ஐயா திரு சண்முகவேல் அவர்கள். சமீபத்தில் அவரை ஜோதிட கட்டுரை எழுதித்தருமாறு கேட்டுக்கொண்டேன். அவர் எழுதிய கட்டுரைகளில் ஒன்றுதான் இக்கட்டுரை)

பரிகாரம்

                                                             






                                                                   பரிகாரம்
 ஜாதகத்தில் கால சர்ப்ப தோசமிருந்து ராகு தசை -கேது புக்தியோ அல்லது கேது தசை -ராகு புக்தியோ நடந்தால் அவர்களுக்கு பல விதமான தடைகள் உண்டாகும். அவர்களை ஏதாவது ஒரு வழியில் கட்டிப்போட பலர் முயற்சிப்பார்கள். அவர்களை செயல்பட முடியாமல் தடுக்க பலர் முயற்சி செய்வர்.










 

கால சர்ப்ப தோசத்திற்கு பரிகாரமாக கோயிலுக்கு மணி வாங்கித்தரலாம்.




 

நாதஸ்வரத்தில் 7 துளைகள் உள்ளன. அவை சப்த கிரகங்களை குறிப்பவை. நாதஸ்வரம் ஒரு பக்கம் அகன்றும், இன்னொரு பக்கம் சிறுத்தும் இருக்கும். அகன்ற பாகம் ராகுவை குறிக்கும், சிறுத்த பாகம் கேதுவை குறிக்கும். கால சர்ப்ப தோசம் உள்ளவர்கள் நாதஸ்வர இசை கேட்டால் கிரக பாதிப்புகள் குறையும்.




வீணையில் 7 நரம்புகள் உள்ளன. அவை சப்த கிரகங்களை குறிப்பவை. வீணை ஒரு பக்கம் அகன்றும், இன்னொரு பக்கம் சிறுத்தும் இருக்கும். அகன்ற பாகம் ராகுவை குறிக்கும், சிறுத்த பாகம் கேதுவை குரிக்கும். வீணையில் 4 பெரிய நரம்புகளும், 3 சிறிய நரம்புகளும் இருக்கும். 4 பெரிய நரம்புகள் ஆண் கிரகங்களையும்(சூரியன், செவ்வாய், குரு,சனி), 3 சிறிய நரம்புகள் பெண் கிரகங்களையும்(சந்திரன்,சுக்கிரன்,புதன்) குறிக்கும். கர்பினிப்பெண்கள் வீணை இசை கேட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல மூளை வளச்சியோடு அறிவாளியாக பிறக்கும் என கூறப்படுகிறது. கால சர்ப்ப தோசம் உள்ளவர்கள் வீணை இசை கேட்டால் கிரக தோச பாதிப்புகள் குறையும்.