ஜோதிடத்தில் கல்வியை கணக்கிடும் விதம்
🍀 ஒவ்வொரு பெற்றோரும் ஜாதகரை அணுகி தங்கள் குழந்தைகள் ஜாதகத்தில் ஒரு டாக்டராகவோ அல்லது இன்ஜினியராகவோ அல்லது கலெக்டராகவோ ஆகக்கூடிய யோக அமைப்பு உள்ளதா? அல்லது எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் சிறப்பாக இருக்கும் என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவருடைய ஜாதகத்தைப் பார்த்தவுடனேயே அந்த ஜாதகருக்கு எந்தக் கல்வி அமையும்? என்பதை ஜோதிடத்தில் கணித்து சொல்ல முடியும். அந்த வகையில் ஜாதகப்படி ஒருவருக்கு எந்த கல்வி அமையும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
🍀 கல்விக்குரிய கிரகம் புதன் ஆவார். பொதுவாக ஜாதகத்தில் நான்காம் வீடு கல்வி ஸ்தானம் ஆகும். ஐந்தாம் வீடு அறிவு ஸ்தானம் ஆகும். இரண்டாம் வீடு வாக்கு ஸ்தானம் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் இந்த இடங்கள் கெட்டு இருந்தாலும், இந்த இடங்களில் பாவிகள் அமையப்பெற்று காணப்பட்டாலும் புதன் கெட்டு இருந்தாலும் உயர் கல்வி அமைவதில்லை.
பொறியாளர் (என்ஜினியர்) :
🍀 ஒருவருடைய ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் இடத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்ற ஜாதகர்களுக்கு பொறியியல் கல்வி அமையும். செவ்வாய், புதன் சேர்க்கை பெற்று குருபார்வை உண்டானாலும் பொறியியல் யோகம் உண்டாகிறது. செவ்வாய், புதன் பரிவர்த்தனை அடைந்தாலும், செவ்வாய் சாரத்தில் புதன் வீற்றிருந்து புதன் சாரத்தில் செவ்வாய் காணப்பட்டாலும் பொறியியல் கல்வி உண்டாகிறது. 10-ம் இடத்தில் செவ்வாய் பலமாக வீற்றிருந்து 4-ம் இடத்தை பார்வை செய்தாலும் பொறியியல் கல்வி பெறும் யோகம் உண்டாகிறது. பொறியியல் கல்விக்கு செவ்வாய் முக்கிய அங்கம் வகிக்கிறார்.
மருத்துவர் (டாக்டர்) :
🍀 மருத்துவக் கல்விக்கும் மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பிக்கிறார்கள். ஒரு மாணவனுடைய ஜாதகத்தில் 9,10,11-ல் கேது அமையப் பெற்று இருந்தாலும் மருந்துக்குரிய காரகனாகிய சந்திரன் உச்சம் பெற்றுக் காணப்பட்டாலும் சு+ரியன், செவ்வாய் இணைந்து காணப்பட்டாலும் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை அடைந்தாலும், மருத்துவக்கல்வி அமையும். சு+ரியன் காரகத்தில் செவ்வாய் அமையப்பெற்று 9-மிடம் நன்றாக அமையப் பெற்ற ஜாதகங்கள் வெளிநாடு சென்று மருத்துவக் கல்வி பயில்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ் :
🍀 ஒருவருடைய ஜென்ம லக்னத்திற்கு 2,10-ல் செவ்வாய், சனி போன்றவர்கள் ஆட்சி பெற்ற ஜாதகர்கள் ஐ.ஏ.எஸ். பட்டம் பெறுகிறார்கள். ஐ.ஏ.எஸ். படிப்புக்கு செவ்வாய் முக்கிய அங்கம் வகிக்கிறது. 9-ல் சந்திரன் அமையப்பெற்று குரு பார்வை பெற்றாலும் ஐ.ஏ.எஸ். தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதன்மையாக திகழ்கிறார்கள்.
ஆடிட்டர் படிப்பு :
🍀 ஆடிட்டர் படிப்புக்கு புதன் பலம் பெற வேண்டும். சு+ரியன், புதன் கன்னியில் அமையப் பெற்றாலும், சு+ரியன், புதன் ஜென்ம லக்னத்திற்கு 2-ல் காணப்பட்டாலும், 2-ல் உள்ள சு+ரியன் புதனைக் குருபார்வை செய்தாலும் பி.காம், எம்.காம்., சி.ஏ போன்ற கல்வி அமையப் பெறுகிறது. புதன் ஆட்சி உச்சம் பெற்று குரு பார்வை பெற்றால் கணக்கில் அவர் புலி என்றே கூற வேண்டும்.
தமிழ்ப்புலமை :
🍀 தமிழ்த்துறையில் எம்.ஏ., டாக்டர் போன்ற பட்டம் பெறுவதற்கும் புதன் நன்றாக அமையப் பெற வேண்டும். 2-ல் புதன் அமையப் பெற்று குரு பார்வை புதனுக்கு உண்டானால் தமிழ்ப் புலமையில் உயர் பட்டம் பெறுவர். புதன், குரு, சுக்கிரன் போன்றோர்கள் 1,5,9 வீடுகளில் அமையப் பெற்றாலும் (வித்வான்) புலவர் போன்ற பட்டம் அமையப் பெறுகிறது.
தத்துவ மேதை :
🍀 வாக்கு ஸ்தானாதிபதியும், புதனும் வலிமையுடன் அமையப்பெற்று லக்ன கேந்திரத்தில் இருந்தால் தத்துவ மேதைக்குரிய கல்வியை பெறுகிறார்கள்

No comments:
Post a Comment