Friday, 13 December 2019

மேஷம் என்பது ஒரு சர ராசி

மேஷம் என்பது ஒரு சர ராசி நெருப்பு தத்துவம் கொண்ட ராசி இதன் பலன்கள் என்பது சுயநலம் பேராசை எதிலும் மூர்க்கத்தனம் இருக்கும் கோபம் வேகம் எதிலும் முன்னுரிமை பெறுவதற்குண்டான முயற்சியை மேற்கொள்வார்கள் பிடிவாத குணம் அச்சம் இல்லாமல் செயல்படுவது முட்டாள் தனமான நடவடிக்கைகள் குறுகிய மனப்பான்மை இருக்கும் காரியத்தில் தடையை சந்தித்து ஊதாரித்தனம் இருக்கும் ஆதிக்க உணர்வு விவேகமற்ற வேகம் கொடூரமான செயல்கள் இருக்கும் விரக்தியும் வேதனையும் இழப்பும் ஏமாற்றமும் இருக்கும் சுதந்திரமான சுக மேன்மை வம்ச விருத்தியின்மை இருக்கும் வசதிகளுடன் கூடிய விதண்டா வாதங்களை செய்வார்கள் நம்பிக்கையுடன் கூடிய கபட தன்மை இருக்கும் போக உணர்வில் நாட்டமின்மை குடும்பத்தில் பற்றின்மை தாய்மையை மதியா தன்மை தலையில் நோய் மூளையில் வியாதி இல்லறத்தில் ஏமாற்றம் கஷ்டப்பட்டு வாழக் கூடிய அமைப்பு நார்த்தீக உணர்வு அல்லது நாட்பட்ட இறைவழிபாடும் இருக்கும் பெரும் பதவிக்காக எதையும் செய்யத்துணிவு இருக்கும் பொண்ணையும் பொருளையும் சுகத்தையும் காத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை இந்த ராசிக்கு உண்டு நெருப்பு தத்துவம் நிர்வாகத்தில் முதன்மையும் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் தகுதியாகும் மேஷம் அதிபதி செவ்வாய் இதன் உருவம் ஆடு ஒற்றை ராசி சர ராசி நிறம் சிவப்பு உறுப்பு தலை கடவுள் முருகன்
மலை மற்றும் சிறுகாட்டுப்பகுதி, முட்செடிகள் கரடு முரடான கற்கள் பாறைகள்,வெப்பம் அதிகமாக உள்ள இடம்,போர்க்களம்,ஆட்டு மந்தை, செவ்வாய் ஆட்சி சூரியன் உச்சம் சனி நீச்சம்
மேஷத்திற்கு 2. ரிஷபம். ஸ்திர மான பேச்சு உடையவர் இவர்கள். சுக்கிரன் வீடு ஆதலால் இனிமையாக பேசுவார்கள் லக்னம் செவ்வாய். 2 சுக்கிரன் ஆகவே செவ்வாய் சுக்கிரன் காரணமாக வாகனம் பெண்கள் பற்றிய பேச்சு இருக்கும். இவருக்கு வருமானம் ஸ்திரமாக இருக்கும். ரிஷபம் பெண். ராசி பெண்கள் மற்றும் கலைத்துறை மூலமும் வருமானம் வரும் 2 ம்பாவத்தில் கார்த்திகை நட்சத்திரம் உள்ளது இது சூரியனின் நட்சத்திரம் எனவே அரசு வழி வருமானம் இருக்கும். ரோகிணி என்றால் உணவு சம்பந்தபட்ட தொழில் மூலம் விவசாய பொருட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். 2 ம் வீடு சுக்கிரன் வீடு அதனால் பணம் சந்தோஷமான முறையில் வரும்
மேஷம் தாது ராசி, கிழக்கு, ஆண்,நெருப்பு, தலை மேஷம் ராசியின் தொழில் அரசு உத்யோகம் காவல்துறை ராணுவம் தீயணைப்புத்துறை விளையாட்டுத்துறை பொறியியல்துறை செங்கல்சூளை சுரங்கதொழில் அறுவை சிகிச்சை மருத்துவம் ஊர் பஞ்சாயத்து,ஸ்திரம்,தெற்கு, பெண்,நிலம்
மேஷத்திற்கு 3 ஆம் வீடு மிதுனம். அதிபதி புதன் இது காற்று ராசி இவர்கள் இரட்டை தன்மை கொண்டவர்கள்.
மேஷம் ராசி என்பது காலபுருஷனின் முதல் வீடு வானியலில் இது முதல் ராசி இதன் ராசியின் அதிபதி செவ்வாய் செயலில் இது சரமாகவும் தத்துவத்தில் இது அக்னியாகவும் செயல்படும் செயல்களில் இது ஆரம்ப காலத்தையும் பொழுது பருவத்தில் இது விடியலையும் சர ராசியாகவும் இது உள்ளது ஆண் ராசி நான்கு கால் உடைய ராசி முதல் மாதமான சித்திரை மாதம் துவங்கும் ராசி உருவத்தில் ஆடாகவும் நிறத்தில் சிகப்பும் இயல்பான நடையும் காடு போன்ற சிறு வனப்பகுதி ஆகவும் மூலத்தில் தாது ராசியாகவும் உள்ளது
மேஷம் காலபுருஷனுக்கு முதல் ராசி. எதிலும் துணிந்த செயல் தலைமை தாங்குதல் மற்றவரை தனக்கு அடிமை ஆக்குதல் போன்ற குணம் இருக்கும்
மேஷ ராசி முதல் ராசி என்பதால் எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்க விரும்புவார்கள்
மேஷம் திசை கிழக்கு. இது சர லக்னம் ஒற்றை ஆண் ராசி அதிபதி செவ்வாய் சூரியன் உச்சம் சனி நீச்சம் பெறுகிறார் ராசியின் தன்மை கொடூரம் இடம் புதர் காடு சின்னம் ஆடு. அகன்ற கண்களை உடையவர்கள் நிலையாக இல்லாமல் பயணம் செய்பவர்கள்
லக்னப்புள்ளி அசுவதி என்றால் கிரிமினல் குணம். பரணி என்றால் சிற்றின்ப பிரியர் கார்த்திகை என்றால் தலைகணம் உடையவர்
நெருப்பு ராசியாதலால் கோபம், ஆணவம் உடையவர்கள். சர ராசியாதலால் சுறு சுறுப்பானவர்கள் ஞானம் அதிகம் உடையவர்கள்
மேஷம் உஷ்ணம். தேகம் இருக்கும். மேஷம் தலை ராசி
மேஷம் ஆடு, ஆட்டு குட்டி. இந்த ராசி காரர் வீட்டில் ஒருவர் குட்டி என்று அழைக்கபடுவார்.
மேசத்தில் அஸ்வினி 4 பாதங்களும் பரணி 4 பாதங்களும் கிருத்திகை 1 ம் பாதம் உள்ளது
மேஷம் குறைந்த வயதில் பெரிய பதவி வகிப்பார்கள்
கோபம் வந்தால் தலையில் அடித்துக் கொள்வர் மேஷ ராசியில் பிறந்தவர்கள் எப்படி வாழ்வார்கள் என்பதை விட எப்படி வாழவேண்டும் என்பதை சற்று ஆராய்ந்து பார்க்கலாம் இவர்கள் பொருளாதாரத்தில் உயர்வு பெற வேண்டுமானால் முதலில் இவர்கள் செய்ய வேண்டியது நித்திய ஆலய வழிபாடுகள் கோவில் வழிபாடுகள் இறைவழிபாடுகளை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும் பணம் ஒன்று இருந்தால் தான் தனம் என்பது தானாக கிடைக்கும் இவர்களுக்கு இரண்டாம் வீடு என்பது ரிஷபம் நல்ல குடும்ப பாங்கான இல்லத்தரசியை கொடுக்கக்கூடிய வீடு கட்டிய மனைவியின் கண்கள் கலங்க வைத்தால் இவர்கள் பொருளாதாரம் பாதிப்பு அடையும் என்று சொல்லலாம் ரிஷபம் வீடு சுக்ரனுக்குரிய வீடு குடும்பத்தாரின் தேவைகளை அறிந்து செயல்பட்டால் இவர்கள் வாழ்க்கை மேன்மை அடையும் இவர்களுக்கு குடும்பம் என்று அமைந்து குழந்தை பிறந்தவுடன் வாழ்வில் சொந்த வீடு வண்டி வாகன வசதிகள் தானாகவே ஏற்பட்டு விடும் மேஷத்தில் சுக்கிரனுடைய நட்சத்திரம் இருப்பதால் சுக்கிரன் 2. க்கும் 7.க்கும் அதிபதி ஆக இருப்பதாலும் வாழ்க்கை துணையை வாழ்க்கை துணையின் மூலம் வசதி வாய்ப்புகள் வரும் அதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் ரிஷபத்தில் சந்திரன் நட்சத்திரம் இருப்பதாலும் சந்திரன் இவர்களுக்கு சுகஸ்தானாதிபதி என்பதையும் இங்கு நாம் பார்க்க வேண்டும் இவர்களுடைய வீட்டில் அறுசுவை உணவுக்கு பஞ்சம் இருக்காது மிகுதியாக இருக்கும் கூட்டுக்குடும்பமாக பெரும்பாலும் இருப்பார்கள் இவர்களுக்கு உடன்பிறந்தோர் இருப்பார்கள் சில பிரச்சினைகளையும் சந்திப்பார்கள் எந்த ஒரு விஷயத்தையும் தன்னுடைய சிந்தனையால் சரி என்று பட்டால் மட்டுமே செயல்படுவார்கள் மிதுனம் மூன்றாம் வீடு காற்று ராசியாக இருப்பதால் தகவல் தொடர்பு சார்ந்த விசயத்தில் வேகமான சிந்தனையும் விவேகமான செயல்பாடுகளும் இவர்களுக்கு இருக்கும் உடன் பிறந்தவர்களுக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை இருக்கும் இவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்பது மற்றவர்களுக்கும் தெரியாது அதே நேரம் மற்றவர்களுக்கு விட்டு கொடுத்து வாழும் போது சிறப்பாக இருக்கும்
4 ம்வீடு கடகம் இது சர ராசி + ஜலராசி. வீடு நீர் வளம் மிகுந்த இடமாக இருக்கும். கடகம் பல கால் ராசி. இவர் வீட்டில் பல ரூம்கள் இருக்கும். 4 ம் வீடே சந்திரன் அதனால் வீடு வாகனம் நிலம் போன்ற வற்றையும் மிகவும் விரைவாக வாங்குவார்கள் ஆடு பயம் அறியமல் (பருந்து,கழுகு) மலை முகட்டில் ஏறும் அது போல் மேஷ லக்னதினர் ஒரு செயலை செய்யுபோது எதை பற்றியும் பயம் இன்றி செய்வார்கள் சீருடை அணிந்த தொழில்கள் சிற்ப்பு உடல் மனம் இரண்டிலும் வலிமையானவர்கள்
மேஷத்துக்கு 5 மிடம் சிம்மம் என்பதால் இவர்களின் குழந்தைகள் பிடிவாதகாரர்களாக இருப்பார்கள் ஆத்ம்பலம் கண்டிப்பு நிறைந்தவர்கள்
மேஷத்திற்கு 10 ம் பாவம் தொழில். சனி காரகனாவதால் இவர்கள் தொழிலாளியுடன் தோழமையாக இருப்பார்கள். அதிகாரம் செலுத்த மாட்டார்கள்
மேஷ ராசியின் காரகத்துவங்கள் மேஷ ராசி என்பது முதல் ராசியாக இருப்பதால் இவர்களின் வீடு தெருவின் ஆரம்பத்திலும் ஊரின் துவக்கத்திலும் இவர்களுடைய வீடு என்பது இருக்கும் எல்லையின் ஆரம்பத்திலும் இருக்கும் மழை பெய்தால் நீர் தேங்கும் வீடு..
மேஷத்திற்கு 6 ம் பாவம் கன்னிராசி புதன் வீடு. இது பூமி ராசி உபயராசி. 6 ம் இடமாக வருகிறது. இரத்த நாளங்கள் நரம்பு பிரச்சினை நோய் அடிக்கடி வரும் 6 ம்பாவம் உத்திரம் சூரியன் நட்சத்திரம் உள்ளது இதயம் பாதிப்பு ஏற்படும். அஸ்தம் என்றால் ரத்த சம்பந்தம் நோய் நுரையீரல் பாதிப்பு ஏற்படும்
2,7 ம் பாவம் சுக்கிரனாக இருப்பதால் இவர் மனைவி வீட்டை தூய்மையாக அழகாக பராமரிப்பார்கள்
மேஷ செவ்வாய் முன்கோபிகள்.மாடி வீட்டில் வசிப்பார்கள்
டேபிள் மேல் அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் உடையவர்
அஸ்வினி நட்சத்திரப் பெண்கள் நடுத்தர வயதுக்கு மேல் கணவனுக்கு அவ்வளவாக இல்லற வாழ்வில் ஒத்துழைப்பதில்லை
மருத்துவர்களாக வருவதற்கு சிறந்த வாய்ப்பு
நிறைய படிப்பது படித்ததற்கு சம்பந்தமில்லாம வேலைக்கு சேர்வது ஆட்டு மந்தைக் குணம் போல
பிறரைக் கவர்ந்து இழுக்கும் வசீகரம் , ஆளுமை பெரிய நிறுவனங்களின் உயரதிகாரிகள்
மேஷ ராசிகாரர்கள் பயம் அறியாதவர்கள். ஆட்டுக்கு பயம் என்றால் என்னவென்று தெரியாது. அவை நஞ்சிலும் நான்கு வாய் வைக்கும்.
ஆடுகள் மரத்தின் மீது எளிதில் ஏறிவிடும். ஆனால் இறங்கத் தெரியாது. இதனால் மேஷ ராசிக்காரர்கள் விவேகமில்லாதவர்கள் எனப்படுவர்.
அசுவனி மருத்துவர் ராசி அல்லது வீட்டில் மாத்திரை மருந்து கொடுக்கும்
காலபுருச தத்துவம் படி 9ஆம் அதிபதி குரு தர்ம ராசியான தனுசுக்கு அதிபதி. 10ஆம் அதிபதி சனி அர்த்தராசியான மகரத்திற்குஅதிபதி.கர்மாவுக்கு அதிபதி (தொழில்)மூலம் வருவாயை கொண்டு தர்மம் செய்வதால் தர்மகர்மாதிபதி யோகம்:குரு, சனிஇணைவு அல்லது லக்கன 9 ஆம் அதிபதி 10 ஆம் அதிபதி இணைவு. மேஷராசிக்கு குருட்டு தைரியம் அதிகம் எதிலாவது போய் முட்டிய பிறகு யோசனை ஆட்டின் தன்மை முடியாத விசயத்தில் தலையைக் கொடுப்பது தலைவலி பிரச்சினை உண்டு மேஷம் சூப்பர்வைசர் வீடு வணங்கி உழைக்காது மேஷராசி காரகளுக்கு அக்கம் பக்கத்து உறவு சுமுகமாக இருக்காது விட்டின் எல்லை பிரச்சனை உண்டு மேஷ ராசியில் ஓரு கிரகம் இருந்தால் அதன் காரகத்துவம் அனுபவிக்க தடை மேஷம் பயன்பாடு இல்லாத வீடு
7 மிடம் துலாம். காற்று ராசி+ சரராசி. மேஷ லக்னத்திற்கு மனைவி தற்பெருமை புத்திசாலி தனம் உள்ள மனைவி அமைவார்கள் 7 ம் பாவத்தில் சுக்கிரன் சித்திரை என்றால் கணவர் மனைவி உறவில் சண்டை சச்சரவு இருக்கும் சுவாதி என்றால் அதீத காமம் இருக்கும் திருமணம் அந்நிய மதத்தில் இருக்கும் விசாகம் என்றால் இருதார யோகம் உண்டாகும்
மேஷத்தில் உள்ள கிரக காரத்திற்கு அறுவை சிகிச்சை அல்லது விபத்து உண்டு
மேஷ அதிபதி செவ்வாய் கடகத்தில் நீசம். தாய்பாசத்தால் தன் அதிகாரம்,முன்கோபம், ஆணவம் இழந்து நீசம்(குழந்தை போல்) ஆகிறான்.
மேஷத்திற்கு 8, ஆம் வீடு விருச்சிகம் ஜலராசி+ஸ்திர ராசி. இவருக்கு ஜலத்தால் கண்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 8 ல் செவ்வாய். வாகனத்தின் மூலம் விபத்து இருக்கும். விசாகம் என்றால் வெளிநாடு வெளியூரில் விபத்து இருக்கும் இடுப்பு தொடை கால் அடிபடும். அனுஷம் என்றால் உள்ளூரிலேயே தொடைகால் அடிபடும். கேட்டை என்றால் வயிறு தோள் பட்டை அடிபடும். மேலும் நெருப்பு மூலமும் விபத்து ஏற்படும்
மேஷத்திற்கு 8 ஆம் இடம் விருச்சிகம்.இந்த ராசி ஆயுள்பாவம்.. இவர்களுக்கு அடிக்கடி மரணபயம் இருக்கும்
மேஷத்திற்கு 9 தனுசு. நெருப்பு ராசி உபயராசி. இவர் கல்லூரி படிப்பு இரண்டு வித இடங்களில் முடித்து இருப்பார். 9. 12 குருவாக வருவதால் இவர்கள் ஆராய்ச்சி ஏற்றுமதி இறக்குமதி சட்டம் நிதி ஆலோசனை சம்பந்தப்பட்ட படிப்பு அமையும்
மூலம் என்றால் சட்டம். பூராடம் எனில் பைனான்ஸ். உத்திராடம் என்றால் பொதுஜனம் தொடர்பு ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்பு இருக்கும்
காலபுருஷன் தத்துவம் படி மேஷத்தின் அதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சம். விடாமுயற்சி கொண்டு ஈடுபட்டால் வெற்றி என்பதை குறிக்கும். மகரம் கர்ம ஸ்தானம்(தொழில், வேலை,செயல்) ஆர்வம்
மேஷத்திற்கு 5 ம் வீடு சிம்மம் அதன் அதிபதி சூரியன் மேஷத்தில் உச்சம் பெரும்பாலும் ஆண்குழந்தை பிறக்கும் இந்த இடம் நெருப்பு ராசி ஆகவே முதல் குழந்தை கருச்சிதைவு அல்லது முன் கோபம் உடையதாக பிறக்கும்
மேஷராசிகார்ர்களுக்கு விருச்சிக ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டம்ம் எனப்படும். இந்த சமயத்தில் எந்த காரியத்தையும் நிதானத்துடன் செய்யவேண்டும் .அதாவது விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம் ,கேட்டை நட்சத்திரத்தில்..
ருசித்து சாப்பிடக்கூடியவர்கள் : மான ரோசத்துக்கு குறையில்லை
எவ்வளவு பெரிய உயரதிகாரியானாலும் கோபம் வந்தால் பகைத்துக் கொள்வார்
தர்மம் செய்வதில் விருப்பம் உடையவர்கள்
மேஷராசி தாது ராசியாவதால் மேஷத்துடன் தொழில் சம்பந்தமானால் அது தாது பொருட்களை கொண்ட தொழிலாகும்.
மேஷ ராசியில் பிறந்தவர்கள் எதையும் முறையாக கற்றுக் கொள்ள மாட்டார்கள் எப்போதும் இவர்களை வீட்டில் உள்ளவர்கள் வழிநடத்த வேண்டும் அப்போது தான் நல்ல நிலைக்கு வருவார்கள்
10 ம் வீடு சரராசி+பூமிராசி. இவர் தொழில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும். சனிபகவான் வீடு. அதனால் கௌரவம் அந்தஸ்து என்பது கீழ் நிலையில் இருந்து முன்னேற்றம் இருக்கும் 10 ம்பாவம் உத்திராடம் என்றால் அரசுபணி இருக்கும் திருவோணம் எனில் வீடு வாகனம் இன்டஸ்ட்ரி மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பார்கள். அவிட்டம் என்பது கடுமையான உழைப்பு இருக்கும் தொழில் மூலம்கஷ்டம தொல்லைகள் சந்திப்பார்கள் ஏனென்றால் செவ்வாய் 1. 8 இவருக்கு. அதிபதி தொழில் முன்னேற்றம் இருக்காது உடம்பில் காயங்களின் வடுக்கள் அதிகம் இருக்கும் சனி பகவான்வீடானதால் தன் சொந்தங்களுக்கிடையே போர்க்கொடி உயர்த்துவர் தன் நிலையிலிருந்து மாற மாட்டார்கள் மேஷ ராசி : தைரியம் அதிகம். உயர் அதிகாரிகள். சீருடை பணியாளர். எல்லையில் பணிபுரிபவர். மருத்துவ குணம் உண்டு. மாடி வீட்டில் இருப்பவர்கள். அருகில் நீர் நிலைகள் இருக்கும்.கோபம், துணிச்சல் உண்டு. வேகம் உடையவர்கள்.
மேஷம் குறிக்கும் நாடுகள் ,நகரங்கள்: பிரிட்டன், கலட்யா, ஜெர்மன், லித்துவேனியா ,கீழ்போலாந்து, பாலஸ்தீனம், டென்மார்க், சிரியா, ஜுடியா, லெபனான், வெரோனா, பிளாரஸ், கபுவா ,மார்சேய்ல்ஸ் ,பிரான்ஸ்விக் ,படூர், சரகோஸா, லிசிஸ்டர், உட்ரெட்க்ச், சென்னை
10 . 11 சனிபகவான் ஆதலால் இவர்களின் ஆசைகள். காலம் கடந்து தொழில் மூலமாகவே நிறைவேறும்
மேஷம் :ஆயுதம் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை இருக்கும்.
மேஷத்திற்கு 10 க்குறியவனே 11 க்கு அதிபதி எனவே தொழில் மூலம் ஆதாயம் பாதிப்பு
மேஷம் ராசி குறிகாட்டும் இடங்கள் மணல் புல்தரை சிறுகுன்று கள்ளர்கள் தங்கும் இடம் குதிரை லாபம்
மேஷத்தில் சூரியன் :துணிச்சல் மிக்கவர். சுறுசுறுப்பாகனவர். கோபம், கடுகடுப்பானவர். புத்திகூர்மை. தலைவர் அரசு ராணுவம்
மேஷ ராசி நல்ல ஆரோயக்கியமானவர்கள் செவ்வாய் அதிபதி என்பதால் சிறு சிறு காயங்கள் ஏற்படும் தலையில் காயம் ஏற்படும்
மேஷத்தில் சந்திரன்,: ஜாதகர் தாயின்யின் கட்டுப்பாட்டில் .
சந்திரனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் பார்வை இருக்கும் போது ஜாதகர் சிறப்பான பலனை அனுபவிப்பார்.
விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகம், குண்டு,பட்டாசு, தண்டவாளம், கணத்த திரவகம், நிலப்பரப்பை உழும் இயந்திரங்கள், வண்டி ,இரும்பு எஃகு,
மேஷத்தில் செவ்வாய் ஜாதகர் நிலபுலன் உடையவர்கள். தைரியம் கோபம் இருக்கும். தலைவலி உண்டு.
11 ம் வீடு கும்பம் இது காற்று ராசி ஸ்திர ராசி ஆகும் இவர்கள் நிலையான விருப்பங்கள் அதிகம் உடையவர்கள் இந்த பாவம் அவிட்டம் என்றால் தனது விருப்பத்தை சண்டை அடிதடிபோன்றவை மூலம் நிறைவேற்றிக் கொள்வார். சதயம் எனில் அதிகமான மதுமாது போதையில் இருப்பார்கள். பூரட்டாதி எனில் ஆராய்ச்சி திறன் வெளிநாட்டு வாழ்க்கை மூலம் ஆசைகள் நிறைவேறும். 10, 11 சனிபகவான் ஆதலால் அடிக்கடி இடையூறு ஏற்படுத்தும் எதிலும் திருப்தி இருக்காது இவர்களுக்கு. மேஷம் குடும்பத்தையும் வீட்டையும் நேசிப்பவர்கள் கடிகாரம் செய்பவர் குத்துச்சண்டை கோபம் மிக்கவர். சுறு சுறுப்பானவர் கோபம், சுயநலம் அதிகம். மேஷத்தில் புதன் ஜாதகர் நிலையில்லாத தன்மை உடையவர். தகராறு செய்பவர். லட்சியங்களை அடைவதில் தோல்வியை சந்திப்பார்.
மேஷத்திற்க்கு 9 க்குடைவரே 12 க்குடையவர் ஆகிறார் தந்தையால் செலவு தர்மம் செய்வது இவர்கள் பெரும் செல்வத்தையும் ஈட்டினாலும் அதற்கேற்றார் போல் செலவு செய்வதில் ஆர்வம் உடையவர்
கும்பத்தில் சூரியன். பிறர் உதவியால் முன்னுக்கு வந்தவர்கள்
மேஷத்தில் குரு:ஜாதகர் நல்ல புத்திசாலி. பிறருக்கு உதவி செய்வார்கள்.
அனைத்திலும் ஆர்வம் காட்டுவர் முன்யோசனை பணத்தை முதலீடு செய்து அவஸ்தை படுவார்கள் வெற்றிகள் விட தோல்விகள் அதிகம் இருக்கலாம்
குலதெய்வத்திற்கு செலவும் செய்வார்கள். மேஷத்தில் சுக்கிரன் :
ஜாதகர் வீடு,வாகனம் உடையவர்கள். நல்ல மதிப்பு மரியாதை கூடும்.
வழிபாடு செலவு, கோயில் திருப்பணி செய்வார்கள் மேஷம் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தின் மத்திய பகுதி மேற்கு பகுதி
தர்மபுரி மாவட்டத்தின் கிழக்கு பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகள்
மேஷத்தில் சனி: ஜாதகர் குறைந்த சொத்துக்கள் உடையவர்கள். பலவீனமான தேகம். தன் சொந்தங்களை எதிர்ப்பவர்கள்.
12, ம்பாவம் மீனம் ஜலராசி உபயராசி. இவர்களுக்கு தூரபிரயாணம் இருக்கும் படிப்பிற்கு விரையம் செய்து படிப்பது. இருக்கும். வெளிநாடு யோகம் உண்டு. 12, ம்பாவம் பூரட்டாதி எனில் ஆராய்ச்சி வெளிநாட்டு கல்வி இருக்கும். உத்திரட்டாதி எனில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் இருவித தொழில் இருக்கும். 12, ரேவதி எனில் தகவல் தொடர்பு சார்ந்த தொழில் இருக்கும்
வரவு செலவு பற்றி அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறினாலும் அவர்கள் follow பண்ணமாட்டார்கள்
சங்கீத ஞானம் இருக்கும் மேஷம்: மத்திய அரசு மேஷம் நெருப்பு ஆகவேமுன் கோபம் பிறரை மதிக்காத குணம் முரட்டு சுபாவம் இருக்கும். இது செவ்வாய் வீடு கரடுமுரடான தோற்றம் இருக்கலாம் சரராசி நல்ல குணமோ தீயகுணமோ நாளுக்கு நாள் அதிகரித்து வரும். காலத்துக்கு முதல் இடம் தலைமை பண்புகள் உண்டு. உஷ்ணமான உடம்பு இருக்கும் அஸ்வினி பரணி கார்த்திகை 1, ம் பாதம் உள்ளது.
எதையும் சாதிக்கத்துடிப்பார் வாழ்க்கையின் உச்சிக்கு வர முயற்சிப்பார்கள்
இவர்களுக்கு இரத்தக் கொதிப்பு வியாதி ஏற்பட வழியுண்டு காரம் அதிகம் சாப்பிடுவார்கள்
மேஷ லக்னத்திற்கு செவ்வாய் சுக்கிரன் புதன் இந்த மூவரும் சேர்ந்தால் மனைவி மக்கள் குழந்தை என்று வாழ்வார்கள். சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை கூடாது என்று ஒரு வாதம் உண்டு. ஆனால் லக்னாதிபதியாக செவ்வாய் இருப்பதால் நலமுடன் வாழ்வர் என்று ஜாதக அலங்காரம் கூறுகிறது
மேச லக்னத்திற்கு செவ்வாய் சனி இணைவு கூடாது
வேலையில் பிரச்னைகள் உண்டு
ரத்தக்குறைபாடு உண்டு மேஷ லக்னத்திற்கு 1,8 க்குடைய செவ்வாய் எட்டில் இருந்தால் விபரீத ராஜ யோகம் இதனால் ஆயுசு தீர்க்கம். செவ்வாய் மூன்றில் மிதுனத்தில் இருந்தால் ஆயுள் தீர்க்கம் ஆனால் சகோதர பாதிப்பு ஏற்படும்
மேஷ ராசி , லக்கினம், 4,ம் அதிபதி , செவ்வாய் நிற்க வரும் பிரச்சனைகள் எதுவானாலும்...வீட்டின் ஒரு பகுதி செங்கள் மெரியும்படி சுவர் இருப்பது நல்லது, வீட்டின் முன் செம்மண் கொட்டி வைப்பது நல்லது...
மேஷ லக்னத்தில் புதன் சூரியன் இருந்தால் இன்ஜினியரிங் சம்மந்தப் பட்ட மேற்படிப்பு உண்டாகும்
மேச லக்னத்துக்கு செவ்வாய் சனி நான்கில் இருந்தால் பழைய வீடுதான் வாங்கவேண்டும்
சிவப்பு பவழம் போடலாம், அல்லது சிவப்பு நிற துண்டு கை குட்டை வைத்துக்கொண்டு வெற்றி பெறலாம்
மேஷராசிக்காரர்கள் சண்டை போடுவதில் விருப்பமுள்ளவர்கள்
மேஷத்தில் உள்ள கிரக உறவு முறைகளுக்கு அறுவை சிகிச்சை இருக்கும்
செவ்வாய், 4, மாதி மேசத்தில் நிற்க சொத்து அமைய அரசாங்க உதவி கிடைக்கும்... வீட்டுவசதி வாரியத்தில் வீடு அமையும் அதிகாலையில் பிரச்சனை தொடங்கும் ராசி
மேஷ ராசியின் தொழில்கள் அரசு உத்யோகம் காவல்துறை ராணுவம் தீயணைப்பு துறை விளையாட்டு துறை பொறியியல் துறை தொழிற்சாலையில் பணி புரிதல் இரும்பு சம்மந்தமான தொழில்கள் நெருப்பு சம்மந்தமான தொழில்கள் .உலைக்கூடம் தொடர்பான தொழில்கள் செங்கல் சூளை வைத்தல் மண்பாண்டம் செய்தல் சுரங்க தொழில் அறவை சிகிச்சைமருத்துவம் ஆயுதம் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல் சமையல் கலை பூமித் தொழில் விவாசயம் ஆகியவை
மேஷம் வீதியில் ஆரம்பம். பள்ளமான பகுதி மழை பெய்தால் தண்ணீர் வீட்டிற்குள் வரும். உழுதநிலம். பெரிய தொழிற் சாலைகள். மேஷம் சனிபகவான் இருந்தால் நம்பிக்கையான ஆள் கிடைக்காது தொழிலாளியை தேடிப்போய் கண்டறிய வேண்டும். சிந்தனை பெரிய அளவில் இருக்கும் பாழடைந்த நிலையில் உள்ள இடம் கரண்ட் பில் கட்டாதவீடு. 5, ம் அதிபதி இருப்பது குழந்தை பயன்படாது. செம்மண்பூமி செங்கல் தெரிய வீடு இப்படி வாங்குவது சிறந்தது. திருடர்கள் ஒளியும் இடம் பாறைகள் நிறைந்த பகுதி +சிவப்பு நிறம். பாறையில் தண்ணீர் வரும் அரசுகுடியிருப்பு. காவலர் குடியிருப்பு. மேஷத்தில் செவ்வாய் இருந்தால் யாருக்கும் வாகனம் கொடுக்க கூடாது. மேஷ ராசி நெருப்பு ராசி அஸ்வினி 1,ம் பாதம் நிலத்தத்துவம் நட்சத்திரம்- வைராக்கியம் அஸ்வினி 2. ம்பாதம்- நிலத்தத்துவம் நட்சத்திரம்--- தேசநலன் அஸ்வினி 3, ம்பாதம்--நிலத்தத்துவம் நட்சத்திரம்-- நிறைவேற்றல் அஸ்வினி 4, ம்பாதம்-- நிலத்தத்துவம் நட்சத்திரம்--- துணிச்சல் பரணி -1, ம்பாதம் - நிலத்தத்துவம் நட்சத்திரம்--கீழ்படிதல் பரணி -2, ம்பாதம்-- நிலத்தத்துவம் நட்சத்திரம்--வெளிபடையாக பரணி-3, ம்பாதம் - நிலத்தத்துவம் நட்சத்திரம்--_ஒழுங்கு முறை பரணி -4, ம்பாதம் நிலத்தத்துவம் நட்சத்திரம் - ஏற்றுக்கொள்ளல் கார்த்திகை -1, ம்பாவம்- நிலத்தத்துவம் நட்சத்திரம்- ஆன்மிகம்
மேஷ ராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்
சித்திரை மாதம் சரராசியில் ,நிறைவேற்றுதல் நட்சத்திரம் தத்துவத்தில், நிலத்தத்துவம் அமைப்பில்,கேது அதிபதியில்,அஸ்வினி -3, ம் பாதத்தில்- குதிரை நட்சத்திர உருவத்தில்,10° டிகிரியில் சூரியன் உச்சம்.
சித்திரை மாதத்தில், சரராசியில், நெருப்பு ராசியில்,நிலத்தத்துவம் நட்சத்திரம் இல்,சுக்கிரன் அதிபதியில், வெளிபடையான நட்சத்திரம் தத்துவத்தில்,பரணி 2 ம்பாத்த்தில்- யோனி,அடுப்பு,முக்கோண நட்சத்திரம் சின்னத்தில்,20° டிகிரியில் சனி நீச்சம்.
சித்திரை மாதம் சூரிய கதிர்வீச்சு அதிகம்.இருள் கர்மகாரன் நீச்சம்.
இவர்களுக்கு புதுவீடு கட்டிசெல்லும் போது வைகாசி மாதம் சிறப்பு தரும். நிறைவாக சந்தோஷம் குடுக்கும் ஆவணியில் திருமணம் சிறப்பாக இருக்கும்
இவர்களுக்கு முத்து ஒயிட் ஜிர்கான் மாணிக்கம் முறையாக செய்து அணிய நல்லது. குலதெய்வ வழிபாடு பிதுர்களின் வழிபாடு செய்வது மிகவும் நன்மை அளிக்கும் மேஷ ராசியின் தோற்றங்கள் நடுத்தர உயரம் மெலிந்த வன்மையான பருமனும் தடுப்பமும் இல்லாத செந்நிறத்தோற்றம் நீண்ட கழுத்தும் மூகம் அகன்ற தலை அடர்ந்த புருவங்கள் சுருண்ட முடி கூர்மையான பார்வை நெற்றியில் மச்சம் தழும்பு அல்லது கன்னத்தில் கோபம்,பெருமை,போட்டி மனப்பான்மை,சக்தி,செயல் திறன்
மேசராசி இதுவீதியின் ஆரம்பம் இவரேகள் வீடு கணக்கிடடு 1,ல்இருந்து 5, வது வீடாக வரும். பள்ளமான இடம் தாழ்வான இடம். மழை பெய்தால் வீடட்டிற்குள் தண்ணீர் வரும். திருடர்கள் ஒழிந்தள்ள இடம் திருட்டு போவது மேசத்தில் 4, க் குடையவனும் 8, க்குடையவனும் சேர்ந்து இருந்தால் வீட்டில் திருட்டுபோகும் பக்கத்து வீட்டுக்காரர் தொல்லைகண்டிப்பாக இருக்கும்.அல்லது காம்பவுண்டு பிரச்சனை இருக்கும். மேசத்தில் 3, க்குடைன, 6, க்குடையவன் புதன் இருந்தால் இதை சொல்லலாம்.. உழுதுநிலம்.மேசராசிக்காரர்கள் இடம் வாங்கினால் அந்த இடாத்தை உழுதுவிட்டு வீடு கட்டினால்.நல்லது. செங்கல்சூலைபெரிய தொழில்சாலை இவர்கள் வீட்டறுகே இருக்கும்.செங்கல் சிமெண்ட் ஜல்லிக்கல்லு இவர்கள் வீட்டறுகே இருக்கும். முன்பகுதியில்.இவர்களை வீட்டில் குட்டி குட்டி என்று செல்லமாக அழைப்பார்கள். வீட்டின்அருகே பெரிய கட்டிடம் பிள்டிங் காவலர் அரசுகுடியிருப்பு அரசாங்கவேலையில் இருப்பவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். மேசத்தில் செவ்வாய் + சனி இணைவோ or செவ்வாய் வக்கிரமாகவோ இருந்தால் இவர்கள் வீடு பினிசிங் முழூ வேலை முடிந்திருக்காது . இவர்களுக்கு வாடகை வருமானம் உண்டூ.
மேஷத்தில் 2. 7, சுக்கிரன் நட்சத்திரம் இருப்பதால் மனைவி வந்த பின் வசதி வாய்ப்புகள் குடுக்கும் .2, குடும்பத்தில் சுகஸ்தான சந்திரன் நட்சத்திரம் இருப்பதால் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள் இரண்டாம் வீடு சுக்கிரன் வீட்டில் அறுசுவை உணவுக்கு பஞ்சமில்லை. கூட்டு குடும்பம் அமைப்பு இருக்கும் 3, ம்வீடு மிதுனம் காற்று. வேகமான சிந்தனை செயல்திறன் இருக்கும் இருவித போக்கு இருக்கும். எவ்வளவு கடினமான காரியத்தையும் சமயசந்தர்ப்ப சூழல் தக்கபடி தனக்கு சாதகமாக மாற்றம் செய்யும் குணம் இருக்கும். உழைப்பில் சலியாதபோக்கு நேரத்தை வீணாக்காமல் முயற்சி இவர்களுக்கு இருக்கும்
மேஷ ராசியின் குணாதிசயங்கள்
1 ஆற்றல் பேராசை, திடம் 2. முர்க்கம் ,போர்குணம் 3. விடா முயற்சி 4. உயர்நோக்கம் எப்போது துணிவான செயல்
தர்க்கவாதம் தைரியம்
5 விரைவில் செயலாற்றல்
6. எல்லையற்ற நம்பிக்கை
7 நிர்வாகத் திறமை
8. கற்பனை நிறைந்த மனம்
.9 இணங்காத இயல்பு
10. மற்றவர்கள் ஆலோசனை விரும்ப மாட்டார்
11 கோபம், சுயநலம்
12 . மிஞ்சியவாதமிடல்
13. முடத் துணிவு, கர்வம்
1 4. எளிதில் கோபமடைதல்
15. அவசர தன்மை, எல்லையற்ற தன்னம்பிக்கை
மகான்கள் தரிசனம் ஆலயதரிசனம் உயர்ந்த பதவிகளுக்கு தன்னை தயார் படுத்திக் கொள்வது இருக்கும் குலதெய்வம் கோயில் நிர்வாகம் பொறுப்பு இவருக்கு இருக்கும் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியமும் கிடைக்கும் அறக்கட்டளைகள் போன்ற அமைப்புகளை தலைமை தாங்கும் பொறுப்பு இவருக்கு உண்டு
தலை சார்ந்த பிரச்சனை கள்இருக்கும்.மேசத்தில் சூரியன் புதன் இருந்தாலோ அல்லது பார்த்தாலோ நரம்பு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். வெட்டுக்காயம் .அம்மை நோய் உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய் இருக்கும். இவர்கள் பூமி வாங்கினால் செம்மண் பூமியாகத்தான் வாங்குவார்கள். பாறைகள் கல்கள் நிறைந்த பகுதியாக இருக்கும்.பெரியதொழிற்ச்சாலை பெரிய தொழில் செய்யலாம்
மேஷம் குறிக்கும் உறுப்புகள்: நாசி எலும்பு,மண்டையோடு,முகத்தில் உள்ள எலும்பு,தலை பின் பகுதி தசை,நெற்றி, கழுத்தில் உள்ள பெரிய ரத்த நாளங்கள். மேசத்தில் சனி இருந்தால் தொழிலாளியை இவர்கள் தேடிபோக வேண்டும். நம்பிக்கை யான ஆள் கிடைக்காது. பெரிய சிந்தனை உள்ளவர்கள். பாழடைந்த ராசி. கரண்ட்பில் கட்டாதவர்கள். அதற்காக பைன்கட்டுவார்கள்.
மேஷ ராசியின் பொருளாதாரமும் அதிர்ஷ்டமும்"
I. அதிகம் சம்பாதிக்க முடியும், செலவிட முயயும், விலைக்கு வாங்குவதில் வேகம்
2 துணிவான மூதலீடு.இன்றைய பற்றின சிந்தனை நாளைய பற்றியது எப்போது இல்லை
3 ஆடம்பரம் ஆரம்பம் முறிந்த முடிவு .முதலில் செயலில் இறங்குதல்
4 அடுத்தது பேசுதல், .கடைசியில் நினைத்தல்
5 மிடஅதிபதி மேசத்தில் இருந்தால் அல்லது குரு இருந்தால் குழந்தை பயன்படாது. பிரிவினை தோசத்தை காட்டும் . மேசத்தில் ஒருகிரகம் இருந்தால் அந்தகிரக ஆதிபத்தியம் சம்மந்தமான உறவுமுறைகளை பாதிக்க செய்யும். ஏனா மேசராசி எதற்கும் பயன்படாதராசி.
மேஷ ராசியின் மனநிலை தனிப்பட்ட எண்ணம் | துணிவு , உணர்ச்சி மிகுதியுள்ளவன் ,
பொது வாழ்க்கையில் ஈடுபடும் சிந்தனை இருக்கும் இவர்களுக்கு வெளி வட்டார செல்வாக்கு மிக்கவர்கள் கலைத்துறை ஈடுபாடு அரசியல் ஈடுபாடு கொண்டவர் இவர்களுக்கு இளமையில் காதல் புரிந்து பிறகு மணவாழ்க்கையில் பிரகாசிக்கும் அமைப்பு இருக்கும் இவர்களை பகுத்தறிவு பெற்றவர்கள் என்று சொல்லலாம் முன்னோர்களுக்கு பெருமையும் தன் சந்ததிக்கு மரியாதையும் தேடி வைக்கும் பொருப்பு இவர்களுக்கு இருக்கும்
மேசத்தில் செவ்வாய் இருந்தால் பழைய வண்டி சைக்கிள் வீட்டில் இருக்கும். ஏலத்சொத்து வில்லங்கசொத்து இதையெல்லாம் இவங்க எடுத்தால் வெற்றி. ஜெயிப்பார்கள்.
பொழுதுபோக்கு ஆர்வம் இருக்கும் பெரும்பாலும் நோயின் தாக்கத்தைக் எளிதாக எதிர் கொள்வார்கள் இருப்பினும் கன்னி ஆறாம் வீடு வருவதால் இவர்களுக்கு அடிவயிறு சார்ந்த உபாதைகள் இருக்கும் குடல் வால்வு சிறு நீர் சார்ந்த பிரச்சனை சக்கரைவியாதி இரத்த அழுத்தம் தலை சுற்றல் போன்ற வியாதிகள் இருக்கும் இருப்பினும் இதை எதிர்த்து வெற்றி பெறுவார்கள்
மேசத்தில் 6 மிடஅதிபதியோ அல்லது சனியோ அல்லது 10 மிட அதிபதியோ இருந்து வக்ரமானால் போனவேலை திரும்ப கிடைக்கும்.
பழைய வீட்டை புதுபிச்சு வாங்கினால் நல்லது மேசத்தில்10மிட அதிபதி இருந்தால் பெரியதொழில் சாலையில் வேலை.அங்கு குடி இருப்பார்கள்.
காலபுருஷனுக்கு பத்தாம் வீடு மகரம் இவர்களுக்கு பத்தாம் வீடாக இருப்பதால் கர்ம மேன்மையில் தனி கவனம் செலுத்த வேண்டும் கர்மாவினால் கிடைத்த பலனை தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும் என்கின்ற காரண காரியம் இவர்கள் மேல் சாரும் எந்த பொறுப்புகளையும் சரிவர செய்வதோடு இருக்கும் பதவிகளுக்கு பெருமை சேர்க்க கூடியவர்களாக இருப்பார்கள் தன்னை இந்த கர்ம வினையில் ஐக்கியப் படுத்திக் கொள்வார்கள் உத்தியோகத்திலும் சரி சுய தொழிலில் சரி சில எதிர்ப்புத்தன்மை இருக்கும் இருப்பினும் இவர்கள் அதில் வெற்றி பெறுவார்கள் பிரகாசிப்பார்கள் நிறைய நண்பர்கள் உண்டு அதிலும் ஒரு சில நபர்களை முக்கியமான நண்பர்களாக ஆக்கிக் கொள்வார்கள் அவர்களிடம் மட்டுமே எதையும் வெளிப்படையாக பேசுவார்கள் தன் உழைப்பின் மூலம் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வார்கள் நான்கு சக்கர தொழில் மூலம் இவர்களுக்கு புகழ் இருக்கும் வெளியில் நடக்கும் எந்த விஷயத்தையும் வீட்டிற்கு கொண்டு வந்து பெரிதாக விவாதிக்க மாட்டார்கள் வீட்டிற்கு நல்ல குடும்ப தலைமை தகப்பனாக இவர்கள் இருப்பார்கள் புகழ் பெறுவார்கள்
மேஷத்தில் எந்த பாவத்தின் அதிபதி உள்ளாரோ அந்த காரகத்துவம் மேஷத்திற்கு பயன்படாது.
மேசம் என்றால் பராமரிப்பு இல்லாத வீடு பயன்படாத வீடு. மேச ராசியில் ஒரு கிரகம் இருந்தால் அது பயன்படாது. 9, மிட அதிபதி மேசத்தில் இருந்தால் தந்தையின் சொத்து பராமரிப்பு இல்லாமல் இருக்கும்.
இவர்களின் வாழ்வும் வீழ்ச்சியும் வாழ்க்கை துனையிடம் தான் உள்ளது
மேசத்தில் 7, மிட அதிபதி இருந்தால் மனைவியின் சொத்து பயன்படாமல் இருக்கும். இப்படி எந்த கிரகம் மேசத்தில் உள்ளதோ அந்த கிரகம் பயன்படாது. மேசத்திற்கு 7, மிட அதிபதிக்கு நல்ல வீடு கிடையாது. சனி இருந்தால் நிறைய ஆட்கள் போட்டு வேலை தொழில் செய்யக்கூடாது .நஷ்டம் வரும். கூட்டுத்தொழில் ஆகாது உழைக்காத வருமானம் தான் இவர்களுக்கு நல்லது. மேசம் சூப்பர் வைசர் வீடு வேலைக்கு போவது நல்லது. தொழிற்சங்கத்தலைவர்கள் தொழிலாளர் பிரச்னைகள் தீர்வுக்கு வழி சொல்லும் பாங்கு உடையவர்கள்
மேஷத்திற்கு 4, ல் மாந்தி இருந்தால் வீட்டில் கொலுசு சத்தம் கேட்கும். குடும்பத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள். தாய் குடும்பத்தை நிர்வாகம் செய்வார்.
6 மிட அதிபதி மேசத்தில் இருந்தால் ஒரு தொழிலுக்கு போவது நல்லது.
மேஷத்துக்கு 1, ம் வீடே 8, ம் அதிபதி செவ்வாய். வழக்கு உண்டு. அமானுஷ்ய சக்தி இருக்கும். 3, க்குரியவரே 6. ஆதலால் சகோதரர் வழி பிரச்சினை உண்டு.
துர்மரணம் உண்டு விஷம் அருந்தி நீர் நிலைகளில் விழுந்து
மேசத்தில் புதன் இருந்தால் புத்திர வழியில் பிரச்னைகள் உண்டு
மேஷத்தில் அஸ்வினி உள்ளது இவர் கையால் மருந்து வாங்கி சாப்பிட நன்றாக இருக்கும். அரசியல் ஈடுபாடு இருக்கும். இந்த நட்சத்திரத்தரபெண்ணுக்கு கணவர் சொத்து கிடைக்கும்
விலங்குகள் ஆடு குதிரை வவ்வால் நாய் மரம் .பிரம்பு அத்தி மஞ்சநத்தி ஏம்பு இலவம் பஞ்சு பருத்தி வியாதி: தலைவலி வெட்டுக்காயம் தலையில் உள்ளநரம்பு பிரச்சனை விரைவில் நரை முடிவரும் ராசி. முடி உதிர்வது. தொழில்கள் :இயந்திரம் சம்மந்தமான தொழில் ஹோட்டல் பேக்கரி டீக்கடை கசாப்புக்கடை கட்டிடத்தொழில் மருத்துவதொழில் உழவுத்தொழில் ஆடு மேத்தல் அல்லது வளர்த்தல்.
மேஷ ராசியின் காரத்துவங்கள் முட்செடிகள், மலை, சிறு காடு, போர்க்களம், நெருப்புள்ள பகுதி, கள்ளர்கள் வாழும் பகுதி, பகலில் காடு, இரவில் ஊர் அதிக வாசி, சிவப்பு நிறம், அரசு, தலைப்பாகம், இராணுவம், தீயணைப்புத் துறை, தொழிற்சாலை, விவசாயம். இவர்கள் வீட்டறுகே தேவர் வன்னியர் கவுண்டர்
இவர்கள் அனாதை இல்லம் முதியோர் இல்லம் கட்ட ஆசை படுவார்கள்.
இவர்களுக்கு பிரச்சனை என்று வந்தால் பகலில் தான் வரும் மாலையில் சரியாகிவிடும் . இந்த பிரச்சனையை பேசிமுடிக்க மாலையில் செய்தால் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். சரியாகிவிடும். பெரிய இடம் ஆகாது
மேஷத்திற்கு 9, க்கு உடையவரே 12, ம். தந்தையால் நஷ்டம் ஏற்படும். அவசரப்பட்டு மாட்டிகொள்வது மேஷம் தான்
மேசத்தில் 4, மிட அதிபதி யோ செவ்வாய்யோ இருந்தால் இவர்கள் வீட்டிற்கு வவ்வால்கள் வரும்
மேஷத்தில் சனிபகவான் உடன் கூடியிருக்கும் கிரகத்திற்கு ஆயுள் பலம் குறைவு
மேசத்தில் 4, மிட அதிபதியோ செவ்வாய்யோ இருந்தால் பெரிய டயர் வைத்தவண்டி பொக்கிலின் வண்டி இருக்கும் .மேலும் கடற்ப்படை குதிரைப்படை மொரைன் இன்ஜினியரிங்படிப்பு
மேசராசி வம்சாவழியில் ஒத்த சாரட் வண்டி இருக்கும்.
குதிரை தொடர்பு இருக்கும் குதிரை படம் மேச ராசியினர் குதிரை வண்டியில் பயணிக்க ஆசைப்படுவர்
மேஷம் எதிலும் முதன்மையாக இருக்க ஆசை படுவார்கள் செவ்வாய் அல்லது 4, ம் அதிபதி. மேஷத்தில் இருந்தாலும் பார்த்தாலும் ரோட்டின் மீது உள்ள சொத்தை விரும்புவார்கள், இவர்களுக்கு basement property நல்லது, ரோட்டுக்கு வீடு பள்ளம், மழை நீர் வீட்டுக்குள் வரும், சின்ன சின்ன குழிகளில் வண்டியை விட்டு விபத்தை சந்திப்பார்கள், அனுபவிக்க முடியாத சொத்தை மேஷம் குறிக்கும், சிக்கலான சொத்துக்களை வாங்கலாம்
2, க்கு உடையவனே சுக்ரன் 7, க்கும் உடையவன் எனவே மனைவியால் வருமானம் , திருமணத்திற்கு பிறகு உயர்வு, மனைவி வரவு செலவு செய்ய வேண்டும், இவர் தொழிலுக்கு மனைவி உதவி செய்வார், வாடகை வருமானம் உண்டு, பொருளாதார தட்டுப்பாடு இல்லை
ரஜோ குணம் கொண்ட புருச ராசி நான்கு கால் ராசி
1,8, ம் அதிபதி செவ்வாய. விபத்து உண்டு வழக்கு உண்டு
மேஷம் லக்னம்
1:குறிக்கோள்
2:திடமான செயல்
3:தற்பெருமை
4:உணர்ச்சிவயப்படுதல்
5:கோபத்தில் வெளியே செல்லுதல்
6:சுயசிந்தனை
7:ஆலோசனையை மறுத்தல்
8:வேகமாக உண்ணுதல்
9:சூடான உணவை விரும்புதல்
10:கல்வியுடையவர்
11:வீரமானவர்
12:உண்மையாக இருத்தல்
13:செயல் முறை அனுபவத்தை ஏற்றுக் கொள்ளல்
14:தவறான பேச்சு
15:நீரில் அச்சம்
16:சில நேரங்களில் குழம்பிய எண்ணம்
17:திடீரென உணர்ச்சி வயப்படுதல் பின்னர் சரியாகுதல்
18:நயமான, புகழ்ச்சியான வார்த்தைகளை விரும்புதல்
19:போரில் முன்னனியில் இருத்தல்
20:அழகு, கலை ரசித்தல்
21:சரியோ தவறோ சொந்த அறிவில் செயல் படுவார்
22:வெளியில் வேகத்தை காட்டுதல்
23:உடலில் காயப்படுதல்
24:நடுதர உயரம்
25:நடுதர பருமன்
26:வலுவான உடற்கட்டு கொண்டிருப்பார்கள்
27:நீண்ட கழுத்து,நெற்றி அகன்றிருக்கும்
28:முகத்தில் தழும்பு அல்லது ஏதாவது ஒரு சின்னம் இருக்கும்
29:வீரம்
30: சுறுசுறுப்பு 31:தன்னிச்சையான போக்கு
32: எதையும் முன் யோசனையின்றி செய்வார்
33:இலாப நஷ்டத்தை பொருட்படுத்தமாட்டார்
34:பலவகையான தொழில்களைச் செய்து பார்ப்பவராகவும் இருப்பார்
35:எதையும் வெளியே பயமின்றி பேசுவார்
36:நன்றாக சம்பாதிப்பார்
37:நன்றாக செலவும் செய்வார்
38:ராணுவம்
39:போலீஸ்
40: நெருப்புடைய தொழில்
41:இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்
42:பில்டர்
43:வெல்டர்
44:மெக்கானிக்
45:டிரைவர்
46:ஆசாரி
47:அரசர்களால் கொண்டாட படுவான்
48:பணக்காரன்
49:மெலிந்த கால்களையுடையவன்
50:தலைவலி,காதுவலி, வயிறு பிரச்சனை உண்டு
இவர்கள் தொழில் ஆயுதம் மெசினரி சம்பந்தப்பட்டது
இவர்களது உடம்பில் ரத்தக்காயம் அடிக்கடி உண்டு
நட்சத்திரக் குறியீடு. மேசராசி 1க்குடையவரே
8, க்குடையவராக வருவதால் வழக்கு வீண்பழி விபத்து இவை அனைத்தும்
உண்டு.இதை சந்திக்காத மேசமே கிடையாது.
2, க்கு டையவரே 7, க்குடையவராக வருவதால் வாடகை வருமானம் வரும்.திருமணத்திற்கு பின்வளர்ச்சி மனைவியின் ஒத்துழைப்பு தொழிலுக்கு நல்லது மனைவியின் பெயரில் தொழில் தொடங்கினால் நடத்தினால் முன்னேற்றம் உண்டு.
3, க்குடையவரே 6, க்குடையவராக வருவதால் சகோதரனுடன் விலகி இருப்பது நல்லது. சகோதரனால் பிரச்சனை உண்டு.
E N T, ப்ராப்பளம் உண்டு. 4, க்குடையவர் .சந்திரன் வருவதால் பெரும்பாலும் சொந்த
வீடு உண்டு. அடுத்தவர்களை வாழ வைப்பார்கள்.
எங்கு இடம் வாங்கினாலும் இந்த மேச ராசிக்காரர்கள் முதலில் இடம் வாங்கினால் நிறையபேர் அங்கு இடம் வாங்குவார்கள்.
5, க்குடையவர் சூரியன் வருவதால் பெரிய குடும்பம். கூட்டுக் குடும்பம். அரசாங்கம். கோவில் நிர்வாகம் தாத்தா செய்தவராக இருப்பார்கள் வீட்டின் அருகில் பூட்டிய வீடு ஒன்று இருக்கும் காலத்துக்கு 10 ,ம் வீடே இவர்களுக்கு தொழிலாததால் எந்த பொறுப்பையும் சரியாக செய்வார்கள் அந்த பதவிக்கு பெருமை சேர்ப்பர். உத்யோகத்தில் தனித்தன்மை யோடு பிரகாசிப்பார்கள். உழைப்பின் மூலம் வசதி வாய்ப்பை பெருக்கி கொள்வார்கள். நான்கு சக்கர தொழில் மூலம் கிடைக்கும். வெளியே நடக்கும் எந்த விஷயத்தையும் வீட்டில் கூறமாட்டார்கள். நல்ல குடும்ப தலைவராக தகப்பனாராக இருப்பார்கள். அயனசயனனும் இவர்களுக்கு மகிழ்ச்சி குடுக்கும். 9 க்கு டையவரே 12, க்கு டையவராக வருவதால் தந்தை வழியில் ஆன்மீகநாட்டம். விவசாயநிலங்கள் கோவில் கும்பாபிஷேகம் தந்தை வழியில் ஒரு ஊனம் விரையம் நீண்ட தூரயாத்திரை தந்தை வழியில் திருமணம் ஆகாதவர்கள் காணாமல் போனவர்கள் இருப்பார்கள்.
10, க்குடையவரே 11, க்கு டையவராக வருவதால் ஜீவனக்குறைவு இல்லை சொந்த தொழில் செய்யும் எண்ணம் இருக்கும். ஆண்வாரிசு உண்டு.
மேஷம் ஆடு. ஆட்டில் பலவகை உண்டு. குணம் ஒன்று தான். ஆட்டு மந்தையில் ஒன்று போனால் அனைத்தும் பின் தொடரும். அதுபோல இவர்கள் ஒரு கூட்டத்தை பாதுகாக்கும் திறன் மிக்கவர். ஆடுகளுக்கு ஒரு போர்க்குணம் உண்டு. இரைஎடுக்கும் போது பார்த்தால் தான் முந்திக்கொண்டு இரையை எடுத்து கொள்ளும். அதுபோல தான் இவர்கள் ராணுவத்திற்கு உகந்தவர்கள். அடைதோசை விரும்பி சாப்பிடுவார்கள்.
இவர்களுக்கு 5, சூராயன் 9, குரு. ஆகவே இவர்கள் எந்த செயலும் ஞாயிறு வியாழன் கிழமைகளில் செய்ய நன்மைதரும். வியாழக்கிழமை களில் ஆலயவழிபாடு மிகவும் சிறப்பாக இருக்கும்
1, செவ்வாய். இந்த கிழமை வேண்டாம் இதை விரும்புவார்கள் இவர்கள் பெரும்பாலும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர்களாக இருப்பார்கள். துவரை அன்னம்.
இவர்கள் சிகப்புநிற எருது தானம் செய்வது நல்லது.
மேஷம் செம்மறி ஆடு மேசராசிக்கு நரசிம்ம அவதாரம் வழிபாடு சிறப்பு.
செவ்வாய் தோஷத்திற்கே நரசிம்மரை வழிபடலாம்.
செவ்வாய் பூஜித்த ஸ்தலங்கள் வைத்தீஸ்வரன்கோவில் அத்திப்புலியூர். இலந்துறை.
ஆடுகள் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்துபவை ஆடுவளர்பவர்களுக்கு
பெரும்பாலும் நோய்கள் வராது .குறீப்பாக காச நோய் இவர்ளை அண்டவே அண்டாது.
மேஷம் விளையும் பொருட்கள்
1.பருத்தி
2 கோதுமை
3. கேழ்வரகு
4 புன்செய் பயிர்கள்
5 அவரை
6. பார்லி
7 மிளகாய்
8 சணல்
9. சித்த மருத்துவ செடி
10 கடுகு
11 துவரை
12 சிவப்பு தானியங்கள்
மேஷம் இல்லறத்தில் இன்பம் காண்பது. இருக்கும். இவர்களிடம் பழகியவர்கள் நல்ல நண்பராக இருப்பார்கள் தியாகமனம் படைத்த வாழ்க்கை துணை கிடைக்கும். தோல்வியும் சறுக்கல்கள் இவர்களின் வெற்றி படிக்கட்டு ஆகும். நீர்நிலைகளில் கண்டம் இருக்கும். முன்னோர்கள் சொத்து கிடைத்தாலும் அதனை மறுத்து விடுவார்கள். கண்ணியம் மிகுந்த வாழ்க்கை இவருக்கு வழிகாட்டியாக இருக்கும்.
எந்த ஒரு விஷயத்தையும் தன்னுடைய சிந்தனையால் சரி என்று பட்டால் மட்டுமே செயல்படுத்துவர். தன் உடன்பிறந்த வர்களுக்காக விட்டு குடுப்பார்கள். இருவித போக்கு இருக்கும். எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்பது மற்றவர்களுக்கு குழப்பமாக இருக்கும். அதேநேரம் மற்றவர்களுக்கு குடுக்கும் குணம் இருக்கும்.
மிதுனம் உபயம் ராசி அதிபதி புதன் நட்சத்திர அதிபதி புதன் ஆயில்யம் கேட்டை ரேவதி இவை நடு நிலை நட்சத்திரம் நட்சத்திர அதிபதி செவ்வாய் மிருகசிரீடம் 3, 4, பாதம் ராகு திருஆதிரை 1234 பாதம் குரு புனர்பூஷம் 123 பாதம்
கடகம் சரம் ராசி அதிபதி சந்திரன் நட்சத்திரம் ரோஹிணி ஹஸ்தம் திருஓணம் நட்சத்திர அதிபதி குரு புனர்பூஷம் 4, பாதம் சனி பூசம் 1234 பாதம் இவை நடு நிலை நட்சத்திரம் ஆயில்யம் 1234 பாதம்
மேஷம் அதிகாலையில் பிரச்சினை ஆரம்பிக்கும் ராசி. 9, 12, குரு. தந்தை வழியில் ஊனமுற்றோர் இருப்பார்கள். தந்தை ஆன்மீகவாதி. 9, ம்அதிபதி மேஷத்தில். தந்தை சொத்து பராமரிப்பு இல்லாமல் இருக்கும் இது பயன்படுத்த முடியாத ராசி ஆகும். 3, 6, புதன் கண்டிப்பாக காம்பவுண்ட் பிரச்சினை உண்டு. பக்கத்து வீட்டுக்காரர் தொல்லை இருக்கும். இவர்கள் முழுமையாக வீடு கட்ட கூடாது இவர்கள் வீட்டில் ஒரு பகுதியை பூசாமல் செங்கல் தெரிய இருப்பது நல்லது. இவர் நிலம் வாங்கினால் உழுது விட்டு வீடு கட்ட நல்லதுதான். கார்த்திகை 1, பாதம் தாய் தந்தை பிரிவுகள் உள்ள ராசி இது.
செவ்வாய் போற்றி:
சிறுப்புறு மணியே
செவ்வாய் தேவே
குறைவிலாது அருள்வாய்
குணமுடன் வாழ
மங்களச்செவ்வாய்
மலரடி போற்றி
அங்காரகனே என்
அவதிகள் நீக்கு....
செவ்வாய் போற்றி
பாமாலை:
சொல்லுக்கு வலிமை
நல்கி தைரியம்
ஆண்மை வீரம்
நல்லவை அனைத்தும்
நல்கி நலிவெலாம்
போக்கி வைக்கும்
வல்லதோர் சக்தி கையில் வைத்துமே
அருள் வழங்கும்
அல்லல்கந்தமை
அகற்றும் அங்காரக
போற்றி போற்றி.....
செவ்வாய் ஸ்தோத்திரம்
வசன நல்தைர்யத்தோடு
மன்னவர் சபையில்
வார்த்தை
புஜபல பராக்ர மங்கள்
போர்தனில் வெற்றி
ஆண்மை நிஜமுடன்
அவரவர்க்கு நீள் நிலம்
தனில் அளிக்கும்
குசன் நிலகோனாம்
செவ்வாய் குரைகழல்
போற்றி போற்றி.....
ஓம் வீரத்வஜாய
வித்மஹே
விக்ன ஹஸ்தாய
தீமஹி
தன்னோ பெளம
ப்ரசோதயாத்...
ஓம் அங்காரகாய
வித் மஹே
ரக்த வர்ணாய தீமஹி
தன்னோ பெளம
ப்ரசோதயாத்....
சூரியன் உச்சமடைவதால்
சூரியன் செவ்வாய்
இணைவுக்கு
மோதிரவிரலில்
சூரியவிரல் பவளத்தை
அணியவேண்டும்.
சனி செவ்வாய்
இணைவு நடுவிரலில்
சனிவிரல் பவளத்தை
அணியவேண்டும்.
புதன் செவ்வாய்
இணைவு சிறுவிரலில்
புதவிரல் பவளத்தை
நட்சத்திர தேவதை என்பது தான் அஸ்வினி தேவர்கள்.. அதி தேவதை என்பது சரஸ்வதி தேவி.. வழிபாடு எப்போதும் அதி தேவதைக்கு செய்ய வேண்டும்..
1 உயிர் ஜனிக்க வெப்பம் தேவை. அந்த நெருப்பு மேசத்தில் மிகச் சரியாக உள்ளது. 2, இரண்டாவது செவ்வாய் நிலம் அந்த உயிர் தங்குவதற்கு ஏற்ற இடம்.
3 செவ்வாய் ரத்தத்திலிருந்து விந்துவும் கருமுட்டையும் உருவாகிறது.
4 சர ராசி நகர்தல் உயிரணுக்கள் நகர்ந்தால் மட்டுமே கருமுட்டையை அடைந்து பிறப்பு ஏற்படுத்த முடியும்.
5 அகரம் முதல் எழுத்தான அஸ்வினி நட்சத்திரத்தை கொண்டுள்ளது.
6 உயிரணுக்கள் பாம்பு வடிவில் உள்ளது. வாலை கொண்டே நகர்கிறது. வால் கேது.
7 மேசம் மட்டுமே செவ்வாய் வீட்டில் சுக்கிரன் நட்சத்திரம் ஆத்மகாரகன் சூரியன் நட்சத்திரமும் உள்ளது.
மேஷ லக்னகாரர்கள் தலைக்கனம் மிகுதியாக இருக்கும். லக்னாதிபதியே அஷ்டமாதியாக இருப்பதால் தங்களின் கெடுபலனுக்கு அவர்களே காரணமாக இருப்பார்கள்.
இது ஒரு ஆண் ராசி. நெருப்பு ராசியும் கூட. இது ஒரு நான்கு கால் ராசி. செம்மறி ஆட்டின் உருவம் கொண்ட ராசி. இதை A என்ற அடையாளத்தால் குறிப்பார்கள். இந்தக் குறியீடு, ஒரு செம்மறி ஆடு நீண்ட மூக்குடனும், இரண்டு காதுகளுடன் இருப்பதுபோல் தெரிகிறது அல்லவா! இது ஒரு சர ராசி. அதாவது, நகரும் தன்மை கொண்ட ராசி. இதற்கு அதிபதி செவ்வாய். சூரியன் இந்த ராசியில்தான் உச்சம் பெறுகிறார். சனி இங்குதான் நீச்சம் பெறுகிறார். இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால், இந்த ராசியை லக்கினமாகக் கொண்டவர்கள், மிகவும் சுறுசுறுப்பு உடையவர்களாகவும், முன்னேறத் துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த லக்கினம், மற்ற கிரகங்களால் கெட்ட பார்வையால் பார்க்கப்பட்டால், அவர்கள் மிகுந்த அவசரக்காரர்களாகவும், நிதானித்துச் செயல்படாதவர்களாகவும் இருப்பார்கள். அதுவே, நல்ல பார்வையால் பார்க்கப்பட்டால் நிதானம் மிக்கவர்களாகவும், தைரியத்துடன் எதையும் எதிர்கொள்பவராகவும் இருப்பார்கள். உடல் உறுப்புகளில் தலையைக் குறிப்பது இந்த ராசிதான் ,
மேஷ ராசியின் அதிபதி கந்தவேல் முருகனென்று போற்றப்படும் தமிழ் கடவுள் அம்சமாகிய செவ்வாயாகும். கால புருஷனின் தலையைக் குறிக்கும் இந்த ராசியானது முதல் சரராசியாகும். அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் மேஷ ராசிகாரர்களாக கருதப்படுவார்கள். இது ராஷோ குணம் கொண்ட புருஷ ராசியாகும். மேஷ ராசி ஒரு பாவராசியாகும். மேஷ ராசிக்கு மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை நட்பாகவும்,கடகம் விருச்சிகம், மீனம் பகையாகவும், ரிஷபம், கன்னி, மகரம் சமமாகவும் அமைகின்றன. 1.மேஷ லக்கினத்தில் பிறந்தவர் - தாம் எடுத்த காரியங்களில் வெற்றி பெற்று, கௌரவம் பெற்று மேன்மையடைய சதயம், திருவாதிரை, நட்சத்திரம் வரும் நாட்களில் தொடங்க வேண்டும்.
2. மேஷ லக்கினத்தில் பிறந்தவர் - தாம் புதிய வேலையில் சென்று பதவியேற்க, வங்கியில் பணம் டெபாஸிட் செய்ய, நகைகள் வாங்கவும், விலைமதிப்புள்ள இரத்தினக்கற்கள் வாங்கவும், வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் உலோகப்பாத்திரங்கள் வாங்கவும், சொத்துக்கள் வாங்கி பதிவு செய்யவும், பத்திரங்கள் வாங்கவும், அவற்றை தமது பெயரில் ரிஜிஸ்டர் செய்யவும், ஷேர் பத்திரங்களில் முதலீடு செய்யவும், அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வந்தால், சிறப்பான முறையில் விருத்தியாகும்.
3. மேஷ லக்கினத்தில் பிறந்தவர் - தாம் கடிதம் எழுதி அனுப்ப, சிபாரிசு கடிதம் வாங்க செல்ல, விளம்பரங்கள் செய்ய, ரேடியோ, தொலைக்காட்சிப்பெட்டி, செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், ஜெராக்ஸ், அச்சு இயந்திரங்கள் ஆகியன வாங்க, தொலைபேசி இணைப்பு பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க, பத்திரிக்கை சார்ந்த பணிகள் செய்ய, நூல் வெளியிட, நூலகம் ஆரம்பிக்க, வியாபார விற்பனை, குத்தகை ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பிக்க, வீடு, நிலம், தோட்டம், வாகனம் ஆகியவற்றை விற்பனை செய்ய, வீட்டுக்கு மின் இணைப்பு குறித்து விண்ணப்பம் செய்ய, திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
4. மேஷ லக்கினத்தில் பிறந்தவர் - தம்முடைய ஆரம்பக் கல்வி படிக்க தொடங்க, வீடு கட்ட ஆரம்பிக்க, கட்டிய வீட்டை வாங்க, கலைப்பொருட்கள் வாங்க, விவசாய வயல்கள் வாங்க, கிணறுகள், குளம் ஆகியவற்றை வெட்டி அமைக்க, அவற்றை செப்பனிட, போர்வெல் போட ஆரம்பம் செய்ய, பண்ணைகள் வாங்க, பழத்தோட்டங்கள் வாங்க, பரம்பரைச் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி எடுக்கும் முயற்சிகளை தொடங்க, பள்ளிகள், கல்லூரிகள் துவங்க, மேலும் அவற்றை விஸ்தரிக்க முயற்சிகள் செய்ய, பால்பண்ணைகள் தொடங்க, தொழிற்சாலைகளில் பொருட்கள் உற்பத்தி துவங்க, உத்திரட்டாதி, ரேவதி, அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் முயற்சியை துவங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
5. மேஷ லக்கினத்தில் பிறந்தவர் - வேதங்கள்,மந்திரங்கள் படிக்க தொடங்க,சமயம் சார்ந்த பணிகளை துவங்க, உல்லாச சுற்றுலா செல்ல, காதல் விசயங்களை ஆரம்பிக்க, நோயிலிருந்து விடுபட மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற, சங்கீதம் - வாய்ப்பாட்டு இசைக்கருவிகள் இவைகளை கற்க ஆரம்பிக்க, சினிமா மற்றும் சீரியல் எடுக்க ஆரம்பம் செய்ய, விருந்து விழாக்கள் நடத்த, கிளப்புகள் ஆரம்பிக்க, குழந்தை செல்வம் கிடைக்க வேண்டி முயற்சிகள் செய்ய, கோயில்களில் வேண்டுதல்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி யாகங்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி மருத்து சிகிச்சைகள் செய்ய, மகம், அசுவணி, பூராடம், பரணி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வர மேன்மையான பலன்கள் உண்டாகும்.
6. மேஷ லக்கினத்தில் பிறந்தவர் - தமக்கு விலையுயர்ந்த உடைகள் வாங்குவதற்கு, உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள்துவங்குதல், புதியதாக வேலைக்கு சேருதல், வேலையாட்கள் அமர்த்திக் கொள்ளுதல், வீட்டு பிராணிகள் வாங்குதல், கடன் வாங்க முயற்சி செய்தல், வீட்டை வாடகைக்கு கொடுத்தல், வாடகைக்கு குடிபோதல், எடுத்த காரியங்களில் வெற்றி பெற, கைத்தொழில் துவங்குதல் ஆகியவற்றை, அஸ்தம், சித்திரை ஆகிய நட்சத்திரங்களில் ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
7. மேஷ லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய வர்த்தகம் நிமித்தமாக புதிய நபரை சந்திக்க, தனக்கு கௌரவம், மதிப்பு வேண்டி செய்யும் காரியங்களை துவங்க, திருமணத்திற்கு வரன் தேட துவங்க, பெண்,மாப்பிள்ளை ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க, தொழில் நிமித்தம் வெளிநாடு பயணம் துவங்க, கைவிட்டுப் போன பொருட்களை மீட்பதற்கான முயற்சிகள் செய்ய துவங்க, பொதுகூட்டங்கள், வியாபார விளக்க கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த பூரம்,சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
8. மேஷ லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய இன்சூரன்ஸ் பாலிசி போட ஆரம்பிக்க மேன்மை தரக் கூடிய நட்சத்திரம் அனுஷம்,கேட்டை.
9. மேஷ லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சமயம் சார்ந்த பணிகள், மற்றும் தெய்வ வழிபாடு குறித்த காரியங்கள் துவங்கவும், தியானம் பழக, தீட்சை பெறவும், ஆராய்ச்சிகளைத் துவங்கவும், புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்ல துவங்கவும், ஆவிகளுடன் பேசுதல், இது தொடர்பான முயற்சிகள் செய்ய துவங்கவும். சட்டப்படியான கோர்ட் (அ) வக்கீல் மத்தியஸ்தம் செய்ய முயற்சிகள் துவங்கவும், ஆன்மீக நூல்கள் வெளியிட துவங்கவும், உயர்படிப்பு (கல்லூரி படிப்பு) குறித்து காரியங்கள் ஆரம்பிக்கவும், நீண்ட தூரப் பயணங்கள் கடல்வழி, ஆகாய வழியில் செல்ல ஆரம்பிக்கவும், மறுமணம் குறித்து முயற்சிகள் செய்ய தொடங்கவும், தர்ம காரியங்கள் செய்ய துவங்கவும், அசுவனி, மகம், பரணி, பூரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
10. மேஷ லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சொந்த தொழிலை துவங்கவும், தன்னுடைய பணியில் பதவி உயர்வுக்கான முயற்சிகள் செய்ய துவங்கவும், அரசாங்கம் தரும் லைசென்ஸ்சுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கவும், அரசின் உயர்பதவியிலிருப்பவர்களைச் சென்று சந்திக்க, கௌரவமும் மதிப்பும் மிக்க பிரபுக்களைச் சென்று சந்திக்கவும், தன்னுடைய தொழில் அபிவிருத்திப் பற்றி ஆலோசனைகள் பெறவும், திருவோணம், ரோகிணி, அவிட்டம், மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
11. மேஷ லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய நண்பர்களின் நட்பை வலுப்படுத்த, அவர்களைச் சென்று சந்திக்கவும், தனக்கு ஆலோசகர்களை நியமித்து கொள்ளுவதற்கும், தன்னுடைய ஆதரவாளர்களைச் சென்று சந்தித்து தனக்கு அதரவு பெறவும், தான் எடுத்த காரியங்களில் குறைந்த முயற்சியில் வெற்றி பெறவும், முன்னேற்றம் பெறவும், லாபம் பெறவும், தனக்கு ஏற்படும் நோய்களுக்கு மருந்து சாப்பிட துவங்கவும், ஆபரேசன் சுகமாய் நடந்து மகிழ்ச்சி பெறவும், தனக்கு ஏற்பட்ட பொருட்சேதத்தை புனர்நிர்மாணம் செய்ய ஆரம்பிக்கவும், கம்பெனிகள், சபைகள் சங்கங்கள் ஆரம்பிக்க முன் காரியங்கள் செய்ய தொடங்க, மிகவும் உகந்த நட்சத்திரங்கள் - திருவாதிரை, சதயம், புனர்பூசம், பூரட்டாதி ஆகியவை. இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில், மேல் கூறிய காரியங்கள் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
12. மேஷ லக்கினத்தில் பிறந்தவர் - தனக்கு சொத்துக்களை கிரயத்திற்கு வாங்குதல், தொழில் மற்றும் நிலங்களில் முதலீடு செய்தல், வெளிநாடு செல்லுதல், தன்னுடைய இரண்டாவது தொழில் துவங்குதல், வைத்திய ஆராய்ச்சிகள் செய்ய துவங்குதல்,ஆகிய காரியங்கள் செய்ய துவங்க வேண்டிய நட்சத்திரங்கள் உத்திரட்டாதி, ரேவதி, பூசம் ஆயில்யம் ஆகியவை மேற்கூறிய காரியங்களை இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் செய்ய ஆரம்பித்தால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
மேஷம்(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1&ம் பாதம்)
மேஷ ராசியின் அதிபதி கந்தவேல் முருகனென்று போற்றப்படும் தமிழ் கடவுள் அம்சமாகிய செவ்வாயாகும். கால புருஷனின் தலையைக் குறிக்கும் இந்த ராசியானது முதல் சரராசியாகும். அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் மேஷ ராசிகாரர்களாக கருதப்படுவார்கள். இது ராஷோ குணம் கொண்ட புருஷ ராசியாகும். மேஷ ராசி ஒரு பாவராசியாகும். மேஷ ராசிக்கு மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை நட்பாகவும்,கடகம் விருச்சிகம், மீனம் பகையாகவும், ரிஷபம், கன்னி, மகரம் சமமாகவும் அமைகின்றன.
உடலமைப்பு,
மேஷ ராசியில் பிறந்தவர்கள் நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும் நிமிர்ந்த நடையும், கணிந்த பார்வையும் அழகிய நீண்ட புருவங்களும், அழகான பல்வரிசையும் கொண்டவர்கள். அடர்த்தியான தலை முடியிருக்கும். காதுகள் எடுப்பாக இருக்கும். பார்வைக்கு வெகுளி போல காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். தீர்காயுளும், தெய்வ பக்தியும், இரக்க குணமும் அதிகமிருக்கும்.
குண அமைப்பு,
மேஷ ராசிக்கார்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தங்களுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடுவார்கள். அதிலும் இவர்கள் காரியவாதிகள் என்பதால் வாக்கு திறமையால் பிறரை திணறும்படி செய்து தான் செய்த தவறை அப்படியே மறைத்து விடுவார்கள். வீண் பழி சொற்களுக்கும் செவிசாய்க்க மாட்டார்கள். சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றலும் இவர்களுக்கு உண்டு. வெகுளியாகவும், கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுவார்கள். தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவுவார்கள்.
தன்னுடைய கௌரவத்திற்கும், பெருக்கும் களங்கம் எற்படாதவாறு பொறுப்புகளை ற்றுக் கொள்வார்கள். எந்தவித இடையூறுகளையும் பொறுமையுடன் தாங்கி அதை முடித்தும் விடுவார்கள். கவலைகலை உடனுக்குடன் மறந்துவிடும் ஆற்றலும் நல்ல திறமையும் இவர்களிடத்தில் காணப்பட்டாலும், இவர்களது அகங்கார குணமும் சுயேச்சான சுபாவமும் இவரை நேசிப்பவரை கூட வெறுக்கும் படி செய்து விடும். திடீரென்று மன அமைதியை இழந்து விடுவார்கள். தைரியமும் அஞ்சா நெஞ்சமும் இவருக்கு உடன் பிறந்தது என்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றலையும் பெற்றிருப்பார்கள்.
மணவாழ்க்கை,
மேஷராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கணவன், மனைவி அனுசரித்து வாழ்வதென்பது இயலாத காரியமாகும் என்றாலும் குடும்பத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். குடும்பத்திற்காக எவ்வளவுதான் உழைத்தாலும் நல்லது செய்தாலும் இவரால் நல்ல பெயரை எடுக்க முடியாது. மனைவிக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ செலவுகள் ஏற்படுவது மட்டுமின்றி மனைவி வழி உறவுகளாலும் பிரச்சினைகள் எற்படும். இதனால் அடிக்கடி விரக்தி மனோபாவத்திற்கு தள்ளப்படுவார்கள்.
பொருளாதாரநிலை,
மேஷராசியில் பிறந்தவர்களுக்கு தேவைக்கேற்ற பண வசதிகள் ஏற்பட்டாலும் சேமிக்கும் அளவிற்கு வருவாய் இருக்காது. தான தர்மம் செய்யும் குணம் கொண்டவர் என்பதால் பிறர் இவர்களை எளிதில் ஏமாற்றி காரியத்தை சாதித்துக் கொண்டு நன்றியை மறந்து தூற்றுவார்கள். கடன் வாங்கி பிறருக்கு உதவி செய்வதால் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியாமல் அவமானப் படுவார்கள். கடன் வாங்கியவர்களும் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றுவார்கள். செலவுகள் இவர்களுக்கு அதிகம் என்பதால் வரவு செலவுகளை இவர்களால் திட்டமிட முடியாது. வாழ்க்கையில் சகல வசதிகளும் பெற்று சுகத்தோடு வாழ வேண்டுமென்று இவர்கள் நினைத்தாலும் அது முடியாமலே போகும். எதிர்பாராத இன்பங்கள் தேடி வந்தாலும் இவரது கவனக்குறைவினால் அதை நழுவ விட்டு விடுவார்கள். பூர்வீக சொத்துக்களாலும் இவர்களுக்கு அனுகூலம் இருக்காது. எது எப்படி இருந்தாலும் வாழ்வில் ஏற்படக்கூடிய இன்ப, துன்பங்கள் சமமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். சாதுர்யத்துடனும் திறமையுடனும் எதையும் சமாளிப்பார்கள். பண விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கையில் வளம் பெருகும் என்பதில் ஐயமில்லை.
புத்திரபாக்கியம்,
இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் நல்ல குணம் படைத்தவர்களாகவும், புகழ், கௌரவம் உயரப்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பவர்களாகவும், தாய், தந்தையை ஆதரிப்பவர்களாகவும், பெரியோர்களின் சொற்படி கேட்டு நடப்பவர்களாகவும் இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாகவும் இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமில்லை என்றாலும் புத்திரர்களால் அனுகூலமுண்டு என்று சொல்லலாம்.
தொழில்,
மேஷ ராசியில் பிறந்தவர்கள் சளைக்காமலும், சுயநலம், பிரதி பலன் எதிர்பாராமலும், பரந்த நோக்கத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள் ஊதியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் எடுக்கும் காரியங்களில் கண்ணும் கருத்துமாகவும் துணிச்சலுடனும் செயல்பட்டு ªவ்ற்றிகளை பெறுவார்கள். உழைப்பையும், கடமையையும் பெரிதாக கருதுவதால் பிறர் உதவியின்றி சுயபலத்துடன் பாடுபட்டு வெற்றி கொடியை நாட்டுவார்கள். ஜீவன ஸ்தானாதிபதி சனி பலம் பெற்றிருப்பதால், வீடு, மனை வாங்கிய விற்கும் தொழில், என்ஜினியர்கள் மொசைக்கல், நிலக்கரி, பெட்ரோல், மண்ணெண்ணெய், பலவித எண்ணெய் தொழில், விவசாயம் செய்தல், பல வேலையாட்களை வைத்து வேலைவாங்கும் யோகம் போன்றவை உண்டாகும்.
உண்ண வேண்டிய உணவுவகைகள்,
மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீரை வகைகள், வெங்காயம், உருளை கிழங்கு, பரங்கி காய், வெள்ளரிக்காய், கோஸ், பீன்ஸ், அவரைக்காய், எலுமிச்சம், வால்நெட், ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை :-
எண் - 1,2,3,9,10,11,12
நிறம் - ஆழ்சிவப்பு
கிழமை - செவ்வாய்
கல்- பவளம்
திசை - தெற்கு
நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும், நிமிர்த்த நடையும், நீண்ட புருவமும், அழகான பல்வரிசையும், அடர்த்தியான தலைமுடியும் என வர்ணிக்கப்படக் கூடிய அழகுடன் திகழும் மேஷ ராசிக் காரர்களே…
ராசிகளில் முதல் ராசியாக திகழும் உங்கள் ராசியின் அதிபதியானவர் அழகு தமிழ்க் கடவுள் முருகன். அஸ்வினி, பரணி, கிருத்திகை, பாதம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இந்த ராசியைக் கொண்டிருப்பார்.
மேஷ ராசியில் பிறந்தவர்கள், பார்ப்பதற்கு பொறி உருண்டை போல காணப்பட்டாலும், எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராக இருப்பார்கள். தெய்வமே கண்ணில் ஜலம் வைக்கும் அளவிற்கு தெய்வ பக்தியும், தெய்வீகமும் நிறைந்தவராக இருப்பார்கள்.
வார்த்தை ஜாலங்களில் பின்னி பெடலெடுத்து விளையாடக் கூடியவர்களான நீங்கள், வாக்கு வன்மையால் பிறரை திணறடித்து, ‘நீங்கள் செய்ததுதான் சரி’ என சொல்ல வைத்து விடுவீர்கள். ஹியூமர் நிறைந்த வார்த்தைகளால் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிறுவலி ஏற்படும். அந்த அளவிற்கு வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பீர்கள்.
விதி எந்த சந்தில் பூந்து விளையாண்டாலும், அதன் தாக்கங்களை தாங்கிக் கொல்லும் திறன் கொண்டவரான நீங்கள், வலிகளை உடனே மறந்துவிடும் மனோதிடத்தையும் கொண்டிருப்பீர்கள்.
மேஷ ராசி என்றால், குடும்பத்தில் எப்போதும் சிக்கல்கள், குழப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். கணவன் – மனைவி இடையே அனுசரிப்பு என்பதை நினைத்துக் கூட பார்க்கக்கூடாது. குடும்பத்திற்காக எவ்வளவு பாடுபட்டாலும், அவர்கள் உங்களை புரிந்து கொள்வது என்னவோ, கேள்விக்குறியாகத்தான் இருக்கும். இருப்பினும் உழைப்பதை நிறுத்திவிடாதீர்கள். உங்களை வரலாறு பேசும்.
வருங்காலத்திற்காக சேமித்து வைக்கும் அளவிற்கு வருமானம் இருக்காது என்றாலும், போதிய பண வசதியுடன் வாழ்க்கயை நகர்த்துவார்கள். தானம், தர்மம் என யோகி வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும்

No comments:

Post a Comment