கடகம் ராசி காரகத்துவம்
இது ஒரு பெண் ராசி. அத்துடன் நீர் ராசியும்கூட. இது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிற சர ராசி வகையைச் சேர்ந்தது. இந்த ராசியின் உருவம் நண்டு. இதை D என்ற குறியீட்டால் குறிப்பார்கள். அதாவது, நண்டின் கால்கள்தான் இந்த உருவம். உடல் உறுப்புகளில் மார்பையும், வயிற்றுப் பகுதியையும் குறிப்பது இந்த ராசி. இந்த ராசிக்காரர்கள் வயிறு சம்பந்தமான பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகளால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். இது ஒரு ஊமை ராசியும்கூட. பிறவியில் பேச முடியாதவர்களுக்கு வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டோடு இந்த ராசி சம்மந்தப்பட்டிருக்கும். இந்த ராசியில் குருவானவர் உச்சம் பெறுகிறார். செவ்வாய் நீச்சம் பெறுகிறார். இதன் அதிபதி சந்திரன். சந்திரன் வளர்ந்து தேய்வதுபோல், இவர்களும் தங்கள் குணாதிசயங்களில் அடிக்கடி மாறக்கூடியவர்கள்.
கடகம் ராசிக்கு சின்னம் நண்டு..நண்டு நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது..அதைப்போலவே இவர்கள் எங்கு போனாலும் பிழைத்துக் கொள்வார்கள் .நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.அதைப்போல வே இவர்கள் கொஞ்சம் சந்தோசமாக இருந்தால் நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழிக்க சென்று விடுவர்.பலருடன் கூடி இருப்பதையே விரும்புவர்.எப்போதும் இவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருக்கனும்.வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை பெற்றிருப்பர்...அதே போல அன்பு செலுத்துவதிலும்,கருணை காட்டுவதிலும் .பிறர் துன்பம் கண்டு பொறுக்காதவர்களாகவும் இருப்பர்.
ஒரு கஷ்டம் நீங்கதான் காப்பாத்தனும் என சொன்னா,கடன் வாங்கியாவது உதவி செய்வர்..இதனால் பலர் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொண்டதுண்டு..கடன் வாங்குனவன் ஓடிட்டான் நான் கட்டிட்டு இருக்கேன் என்பார்..மக்கள் தொண்டே உயிர் மூச்சு...மனுசனா பொறந்தா பத்து பேருக்கு நல்லது செய்யனும் என்ற எண்ணம் கொண்டவர்...ராசிகளில் மிக அதிக மனபலமும் ,வைராக்கியமும்,வசியம் கொண்டவர்களும் ,இவர்கள்தான்.. மகான்களும்,பெரிய பெரிய அரசியல் தலைவர்களும் பிறந்த ராசி கடகம் தான்...கடக ராசிக்காரங்க உங்க நண்பரா இருந்தா நீங்களும் அதிர்ஷ்டசாலிதான்...அவ்வளவு நம்பிக்கையானவர்கள்..
கடக ராசியின் அதிபதி மாதக்கோள் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திர பகவானாவார். இது இரண்டாவது சர ராசியாகும். பஞ்ச பூதங்களில் நீர் தத்துவத்தை குறிக்கும் கடக ராசி ஒரு பெண் ராசியாகும். புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை கடக ராசிகாரர்கள் என்கிறார்கள். இந்த ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும்.
கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். ஜலராசி என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு
இந்த ராசி கால புருஷனுக்கு நான்காவது ராசி.பெண்ராசி,சரராசி,ஜலராசி, மெளனமான ராசி,விவேகமான ராசி,பண்பான ராசி,ஆதிக்கமானராசி,வேகமான ராசி,உழைப்புத்தனமான ராசி,குறுகியராசி,ஆறுகால் ராசி,பலகால்ராசி,ஊர்வனராசி ,உயரமானராசி.
இந்த ராசி மார்பைக் குறிக்கும் ராசியாகும்.இந்த ராசிக்கரார் அதிக உயரமாக இருக்கமாட்டார்.சாரசரி உயரமும்,உருண்டை முகமும்,சற்று அமுக்கினாற் போன்ற மூக்கும் இரட்டைத்தாடையும் உடையவராக இருப்பார்.கனமான கழுத்தும், பரந்த மார்பும்,சிவந்த நிறமுடையவர்.வளைந்து நடக்கும் இயல்பும்,வேமாக நடப்பார். நடையிலும் சஞ்சராத்திலும் விருப்பம் உடையவர். சிறிய நோய்க்கும் பெரியதாக கவலைப்படுவார்கள். சுவாசத் தொல்லைகளும்,மார்பு சம்ப்ந்தப்பட்ட நோய்களும்,வாயு தொல்லைகளும் ஜீரண தொல்லைகளும் திடீர் திடீரென இவர்களைத் தாக்கும்.
மிகவும் பலசாலி,தைரியசாலி,அறிவாளி,புத்திக்கூர்மையானவர்.கலைகளில் ஆர்வம்.நீர் இருக்கும் பகுதியில் வாழ ஆசைப்படுவார். நதிக்கரையோரம்,கடல் கரையோரமாக நண்பர்கள் அதிகமாக இருக்கும்.வாழ்க்கையில் அதிர்ஷ்டமும், துரதிஷ்டமும் கலந்து இருக்கும்.குடும்ப பாசம் உடையவர்.குழந்தைகளிடம் அதிகமாக அன்புடையவர்.
இரவில் பலம் உள்ளவர்.சந்திரனைப்போல் சிறிது காலம் மங்கி மறைவதும், சிறிது காலம் பேரு புகழும் பெற்று வாழ்வது இவர்களுடைய இயற்கையாகும்.வெற்றியும் சுபிட்சமும் பெற்று இருப்பார். நன்றியுள்ளவர். உயர்பதவி வகிப்பவார்.அதிக சிந்தனை படைத்தவர்,குடும்பவாழ்வில் அக்கறை தீர்க்கமானப் பார்வையுடையவர்,திடீர் என உணர்ச்சி அடைவர்,மன்னிக்கும் குணம் உடையவர்.பதட்டமானவர்,சந்தேகப்பிராணி,தாய்மை உணர்வு உடையவர்,தாய்மைப் பாசத்திற்கு அடிமையானவர்.
நாணயமுடையவர், நன்றாக பேசக்கூடியவர்,நீதி நேர்மையை விரும்புவர். வியாபாரம் அல்லதுபொருட்களின் உற்பத்தியில் அதிகமான ஈடுபாடு உடையவர்.கவிஞர்,கலைஞர் எழுத்தாளர்களாக வாழ ஆசைப்படுவார்,அரசியல் வாதியாகவும் புகழ் அடையமுடியும். இவர்களுக்கு பல வீடுகள் இருக்கும்.
இந்த ராசிக்காரர்கள் அரசாளும் யோகம் பெற்றவர்கள், தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்கள் என்பதை நிருபித்துக்காட்டுவர்.மாற்று இனத்தவரின் கூட்டு முயற்சியால் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்தி போற்றும் விதம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வர்.சுறுசுறுப்பு மிகுந்தவர்ந்களாகஇருப்பார். ஒருகாரியத்தை செய் என சொன்னவுடனேயே செய்துகாட்டுவர்.முடி என்று சொன்னவுடனேயே முடித்துக்காட்டுவர்.விடாமுயற்சியும் கொள்கையை விட்டுக்கொடுக்காதகுணம்தான் இவர்கள் வெற்றிக்கு காரணமாக விளங்குகிறது.
உயர்ந்த லட்சியங்களைக்கொண்ட இவர்கள் எல்லோரிடமும் சகஜமாகப்பழகுவர்.தோளில் கைப்போட்டு தோழமையைக்காட்டும் இயல்பு இவர்களைப்போல யாருக்கும் இருக்காது. அவசரக்காரர்களப்போல தோற்றமளித்தாலும்,காரியத்திலேயே கண்ணாயிருப்பர்.எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத இவர்கள் நகைச்சுவையோடுபேசும் ஆற்றலால் நாநிலம் போற்றும் வாழ்க்கையை அமைத்துக்கொள்வர்.
பெரியகுடும்பத்தை சார்ந்தவர்களாக இருப்பார்.குடும்ப தலைவராக இவர்கள் பொறுப்பேற்கும் பொழுது எண்ணற்ற இடையூறுகளும் எதிர்ப்புகளும் வந்துசேரலாம்.முன்கோபம்மிக்கவர்களாக இருப்பதால் அதை பேச்சில் பிரதிபலிக்கும்பொழுதுக் குடும்ப உறுப்பினர்களில் ஒருசிலர் இவர்களைவிட்டு விலக நேரிடலாம்.
அரசியலால் அனுகூலமும்,ஆதாயமும் பெற்றகுடும்பம் என்றே சொல்லலாம்.குடும்பத்தில் ஏற்றமும் இருக்கும்தீடிரென இறக்கமும் இருக்கும்.இன்பமும் இருக்கும்,தீடீரென துன்பமும் வந்து சேரும்.செலவு செய்வதில் தாராளம் காட்டுவர்.பணத்தை எந்த விதத்திலும் சம்பாதிக்கூடிய திறமை இவர்களுக்கு உண்டு.ஆடம்பரச்செலவு செய்வதில் சளைக்க மாட்டார்கள். நெருங்கிப் பழகுபவர்களிட்த்தில் பணத்தினாலேயே வீண் விரோதத்தை சம்பாதித்துக்கொள்ள இயலும்.
இவர்களுக்கு அறிவும் திறமையும் இயற்கையாகவே அமைந்திருக்கும். மிகப்பெரிய பதவிகளைக் கூட சர்வசாதரணமாக ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டுவர்.
கடக ராசியில் பிறந்தவர்கள் சுகவாசிகளாக வாழ்வதையே விரும்புவார்கள். எந்த விதத்திலும் பணத்தை சம்பாதிக்கக் கூடிய திறமைப் பெற்றவர்கள். கையில் பணம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. இவர் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.
கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கான பதிவு
ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால், அந்தப் பெண்ணுடைய மாமனாரோ, மாமியாரோ இறந்துவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா
இதெல்லாம் பொதுவாக சொல்லப்படுவது. மகம் என்றால் ஜகத்தை ஆள்வார் என்பது பொதுவானவை. மகம் நட்சத்திரத்தில் பிறந்து மாடு மேய்ப்பவர்களையும் பார்க்கிறோம். மகம் நட்சத்திரத்தில் பிறந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்பவர்களையும் பார்க்கிறோம். நட்சத்திரத்தை மட்டுமே அடிப்படையாக எடுத்து நாம் எதையும் சொல்லக்கூடாது.
மாமியார் ஸ்தானம் அந்தப் பெண்ணிற்கு நன்றாக இருக்கிறது. மாமியார் ஸ்தானம் நன்றாக இருந்தால் ஆயில்யமாவது, விசாகமாவது தைரியமாக பெண் எடுக்கலாம்..
பொதுவாக ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலகலப்பாக பேசுவார்கள். முகத்தை உம்மென்று வைத்திருக்க மாட்டார்கள். கஷ்டமான சூழ்நிலையிலும் லட்சுமி கடாட்சமாக இருப்பார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எழுத்தாற்றல், பேச்சாற்றல் எல்லாம் அதிகமாக இருக்கும். விட்டுக் கொடுக்கும் குணம் அதிகமாக இருக்கும்.
கடக ராசிக்கார்கள்தான் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்று மூன்று நட்சத்திரங்கள் இருக்கிறது. ஆனால் ஆயில்யத்தில்தான் "ப்ளக்சிபிளிட்டி ஸ்டார் எந்தத் தருணத்திலும் தன்னை மாற்றிக்கொண்டு மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நட்சத்திரம் ஆயில்யம்
யார் இதனுடைய அதிபதி புதன் புதனுடைய நட்சத்திரம். ஆயில்யம் புதன் கூட்டுக் குடும்பங்கள், பாரம்பரிய பெருமைகள் இதையெல்லாம் காப்பாற்றுவதற்கு உரிய கிரகம். அது நன்றாக இருந்தால் இந் த நட்சத்திரங்களைத் தவிர்க்கவே கூடாது. இதி ல் நல்ல அறி வாளிகள், புத்திசாலிகள், பெரும் பணக்காரர்கள், நிறுவனங்கள் நடத்துகிறவர்கள், அரசியல் தலைவர்கள் இதுபோன்று பல கோணங்களில் பல மேதைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆயில்யம் நட்சத்திரம் பெண்கள் 90 விழுக்காடு, மாமனார், மாமியாரை நல்ல முறையில் அனுசரித்துப் போகிறவர்கள் இருக்கிறார்கள். அதனால் ஆயில்யம் நட்சத்திரம் இருக்கும் பெண்களை ஏற்ிறுக் கொள்வது நல்லது. மாமியார் ஸ்தானம் ந்ன்றாக இருக்கும் பட்சத்தில் ஒன் றும் பாதிப்பு இரு்க்காது.
கடகம் (புனர்பூசம், 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

உடலமைப்பு,
கடக ராசிக்காரர்களுக்கு மேலோரிடத்தில் மரியாதையும், சாந்தமும், சகிப்பு தன்மையும், கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும். நடுத்தர உயரம் கொண்ட இவர்கள் சிறு வயதில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஏற ஏற உடல் பெருத்து உருண்டு திரண்ட அங்க அமைப்புகளுடன் குண்டாக காணப்படுவார்கள். இவர்களுக்கு கூர்மையான மூக்கும், உயர்ந்த நாசியும், அழகான உதடுகளும், அழகான வில் போன்ற புருவங்களும் அமைந்திருக்கும். பேச்சில் உறுதியிருந்தாலும் மெல்லிய குரலில் தான்பேசுவார்கள். பார்வையில் ஓர் அழகிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் அறிவாற்றலும் பெற்றிருப்பர்.
குண அமைப்பு,
கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். ஜலாராசிகள் என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு. இவர்களிடம் பழகுவது கடினம் என்றாலும் பழகியபின் பிரிய முடியாது. தன்னை நம்பியவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்வார்கள். இதனால் அடிக்கடி ஏமாந்து போவதும் உண்டு. பிடிவாத குணம் கொண்டவர்கள். என்னதான் தியாக மனப்பான்மை இருந்தாலும் வாக்களித்தவர்களையும் சொன்னதை செய்ய மறந்தவர்களையும் விடாமல் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனம் உள்ளவர்கள் என்பதால் இவர்களால் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவார்கள்.
மண வாழ்க்கை,
இவர்களுக்கு வாய்க்கக் கூடிய வாழ்க்கைத் துணை சலிப்பில்லாமல் உழைக்கக் கூடியவராக இருப்பார். எவ்வளவுதான் உழைத்தாலும் கடக ராசிகாரர்கள் ஏதாவது குறைகூறிக் கொண்டும், தங்களுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டும் இருப்பார்கள். சில நேரங்களில் கொஞ்சிப் பேசுகிறார்களே என நினைத்தால் அடுத்த கணமே திட்டு வாங்க வேண்டியிருக்கும். ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து இருந்தாலும் இல்வாழ்க்கை அமைந்தது முதல் உற்சாகத்திற்கு பஞ்சம் இருக்காது. சுகமும், துக்கமும் மாறி மாறி வந்தாலும் அதிகம் பொருட்படுத்தாமல் வாழ்வார்கள். தன் வாழ்நாளில் ஆடம்பர வசதியுடன் சுகபோக வாழ்க்கையை வாழ்வார். குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருப்பார்.
பொருளாதார நிலை,
கடக ராசியில் பிறந்தவர்கள் சுகவாசிகளாக வாழ்வதையே விரும்புவார்கள். எந்த விதத்திலும் பணத்தை சம்பாதிக்கக் கூடிய திறமைப் பெற்றவர்கள். கையில் பணம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. இவர் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. பணத்தால் நெருங்கிப் பழகுபவர்களிடம் கூட பிரச்சினைகள் உண்டாகும். ஆடம்பர செலவிற்கேற்ப பண வரவுகள் இருந்தாலும் சேமிப்பு என்பது இருக்காது. சிறு வயதிலிருந்தே சுயமாக வீடு, மனை, வாசல், வண்டி, வாகனங்கள் யாவும் சிறப்பாக அமைந்து சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். கடக ராசிகாரர்களுக்கு கடன் வாங்குவது என்பது பிடிக்காத ஓர் விஷயமாகும். பெற்றோர் ஏற்படுத்தி விட்டு சென்ற கடனாக இருந்தாலும் தன்னுடைய சொத்துக்களை விற்றாவது அனைத்தையும் தன் வாழ்நாட்களிலேயே அடைத்து விடுவார். சுபகாரியங்களுக்காக அடிக்கடி செலவு செய்வதும், பொது நல காரியங்களுக்காக செலவு செய்வதும் இவர்களுக்கு வாடிக்கையான ஒன்றாகும்.
புத்திரபாக்கியம்,
கடக ராசி பெண் குழந்தை யோகமே உண்டு. அப்படியே இருந்தாலும் பிள்ளைகளுக்கும் இவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு சிலர் ஆண் வாரிசுக்காக தத்தெடுத்து வளர்ப்பதும் உண்டு.
தொழில்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிபெறச் கூடிய கடக ராசிக்காரர்கள் அடிக்கடி தூர தேசங்களுக்கு சென்று பொருளீட்டக்கூடிய வாய்ப்பினைப் பெறுவார்கள். கலை நடிப்பு, ஆராய்ச்சித் துறைகளிலும், உணவுப் பொருட்கள் செய்யும் சமையல் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். கலைநுட்பமும், வாக்கு சாதுர்யமும், சங்கீதமும் இவர்களிடத்தில் அதிகம் குடி கொண்டிருக்கும். ஓவியம் தீட்டுதல், போலீஸ், இராணுவம் போன்றவற்றிலும் ஒரு சிலருக்கு அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகமும் உண்டாகும். இவர்கள் லாட்டரி ரேஸ் போட்டி, பந்தயம் போன்றவற்றில் ஈடுபட்டால் வீண் விரயங்களை சந்திப்பார்கள்.
உணவு வகைகள்,
கடக ராசிகாரர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பால், முட்டை, முட்டை கோஸ், கீரை வகைகள், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டம் அளிப்பைத் தரும்
எண் - 1,2,3,9,10,11,12,18
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - திங்கள், வியாழன்
கல் - முத்து
திசை - வடகிழக்கு
தெய்வம் - வெங்கடாசலபதி
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் ,திருபரங்குன்றம்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஒன்பதாவது இடத்தை பெறுவது ஆயில்ய நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் நுரையீரல், வயிறு கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இது கடக ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டி, டு, டே, டோ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மெ, மை ஆகியவை யாகும்.
குண அமைப்பு;
ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் நல்ல பேச்சாற்றலும் கல்வி அறிவும், சகல வித்தைகளையும் கற்றறியக்கூடிய ஆர்வமும் இருக்கும். அழகிய கண்களையும் சுருட்டை முடியையும் கொண்டவர்கள். எதிரிகளையும் நண்பர்களாக்கி கொள்வார்கள். தங்களுடை கனிவான பேச்சினால் கல்லையும் கரைய வைக்கும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் மன வலிமை¬யும், உடல் வலிமையும் ஒருக்கே பெற்றவர்கள். எந்த பிரச்சனையையும் எதிர் கொள்ள கூடிய திறனிருக்கும். நாளை நடப்பதை கூட முன் கூட்டியே அறிவர். மற்றவர்களின் ஆலோசனைகளை எளிதில் ஏற்க மாட்டார்கள் கண்களால் ஆயிரம் கதை பேசுவார்கள். சற்றே சஞ்சல குணமும் உண்டு. இவர்களின் வயதை தோற்றத்தை கொண்டு எடை போட முடியாது. இயற்கையை அதிகம் நேரிப்பவர்கள் பயணங்களில் அதிக ஆர்வம் உண்டு. ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை சாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.
குடும்பம்;
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் விரைவிலேயே திருமண வாழ்க்கை அமைந்து விடும். இளமையில் வறுமை வயப்பட்டாலும் மத்திம வயதில் யோகம் உண்டாகும். மனைவி பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் இவர்களின் தேவைகளுக்காக அதிகம் செலவு செய்தால் பல தகிடு தத்த வேலைகளிலும் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார்கள். பெற்றவர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்கள். ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவதால் வண்டி வாகனம், பூமி மனை அனைத்தையும் சேர்ப்பார்கள். வாழ்க்கையையும் திட்டமிட்டு வாழ்வார்கள் நொறுக்கு தீனி விரும்பிகள் என்பதால் எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டு கொண்டேயிருப்பார்கள்.
தொழில்;
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை செய்யும் இடத்தில் நீதி நேர்மை தவறாமல் நாணயத்துடன் நடப்பார்கள். மனசாட்சிக்கு மீறி எந்த பணியிலும் ஈடுபடமாட்டார்கள். குறிப்பாக கெட்டவர்களுக்கு துணை போக மாட்டார்கள். அதிக மன தைரியம் கொண்டவர்கள் இவர்களில் பலர் கல்லூரிகளில் பேராசியர்களாகவும், ஆய்வு கூடத்தில் அறிவியல் அறிஞர்களாகவும், இருப்பார்கள். மற்றவர்களை போல நடித்து காட்டுவதிலும், பழமொழிகளை உதாரணமாக கொண்டு பேசுவதிலும் வல்லவர்கள். 40 முதல் 47 வயதுக்குள் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள். பெயர் புகழ் அந்தஸ்து யாவும் பெருகும். அதிகாரமிக்க பதவிகளிலும் அமர்வார்கள். பலரை நிர்வாகிக்கும் ஆற்றல் ஆலோசனை கூற கூடிய வல்லமையும் உண்டாகும் மெக்கானிக்கல், பொறியியல் துறைகளிலும் வல்லவர்கள்.
நோய்கள்;
இவர்களுக்கு, நுரையீரல், வயிறு, உணவு குழாய் மற்றும் குடலுக்கு இடையிலுள்ள ஜவ்வு கல்லீரல், கணையம், ஈரல் போன்ற பாகங்களில் பிரச்சனைகள் உண்டாவதுடன், மூச்சு விடுவதில் சிக்கல்களும், மூட்டுகளில் வலியும், கால்களில் வீக்கமும், நரம்பு சம்மந்த பிரச்சனைகளும் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும்.
திசை பலன்கள்;
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக புதன் திசை வரும். இதன் மொத்த வருடங்கள் 17 என்றாலும் பிறந்த நேரத்தைக் கொண்டு கணக்கிட்டு மீதமுள்ள புதன் தசா காலங்களை அறியலாம். முதல் திசையாக வரும் புதன் திசை காலங்களில் கல்வியில் உயர்வு நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல் ஆகியவை உண்டாகும். புதன் பலமிழந்திருந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கல்வியில் மந்த நிலையை கொடுக்கும். ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்று பண்டைய நூல்களில் எழுதியிருந்தாலும் அது உண்மையா என்ற பல கேள்விகள் இன்றும் உள்ளது.
இரண்டாவதாக வரும் கேது திசையானது மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் கேது திசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், கல்வியில் மந்த நிலை ஆகியவை உண்டாகும்.
மூன்றாவதாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் எல்லா வகையிலும் மேன்மை, செல்வம் செல்வாக்கு சேரும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.சூரியன் 6வருடம் சந்திரன் 10 வருடம் செவ்வாய் 7 வருடம் என நடைபெறும் இத்திசை காலங்களில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருந்தால் மேன்மையான பலன்களை பெற முடியும். பலமிழந்திருந்தால் அதற்கேற்றபடி நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற இயலும்.
ஆயில்ய நட்சத்திர காரங்களுக்கு ராகு திசை மாரக திசையாகும். ஆயில்ய நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் புன்னை மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் இரவு பதினோறு மணியளவில் வானத்தில் காணலாம்.
செய்ய வேண்டிய நற்காரியங்கள்
நவ கிரக சாந்தி செய்தல், ஆயுத பயிற்சி மேற்கொள்ளுதல், கிணறு, குளம் வெட்டுதல் மந்திர பிரயோகம் செய்தல் போன்றவற்றை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.
வழி பாட்டு ஸ்தலங்கள்
சங்கரன் கோவில்;
திருநெல்வேலிக்கு வடக்கே 50.கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலத்தில் சங்கரலிங்கத்துக்கும், கோமதி அம்மனுக்கும் இடையில் சங்கர நாராயணன் சந்தியில் வழங்கப்படும் புன்னை மரப்பட்டையில் செல்லரித்து உருவான புற்று மண் பிரசாதம் எல்லா வித நோய்களையும் தீர்க்கும்.
புள்ள பூதங்குடி;
கும்பகோணத்து வடமேற்கில் 11.கி.மீ தொலையில் உள்ள புஜாங்க சயனராக காட்சி தரும் ஸ்ரீராமர் ஸ்தலம் இங்கும் புண்ணை மரம் உள்ளது.
திருப்புகலூர்;
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கு கிழக்கே 8.கி.மீ தொலைவிலுள்ள அக்னிஸ்வரர் அருள் பாலிக்கும் ஸ்தலம்.
நாகூர்;
நாகை மாவட்டம் நாகபட்டினத்திற்கு வடக்கே 4.கி.மீ தொலைவில் உள்ள நாகநாதர் நாகவல்லி உள்ள ஸ்தலம். தல மரம் புன்னை.
திருவாரூர்;
அருகிலுள்ள எண்கண் என்ற ஊரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமிகள் ஸ்தலம். இவற்றை வழிபாடு செய்வது சிறப்பு.
கூற வேண்டிய மந்திரம்
ஓம் ஸஹஸ்ரபனாய வித்மஹே
சர்ப்ப ராஜாய தீமஹி
தந்நோ அனந்த ப்ரசோதயாத்
ஆயில்ய நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்
அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.
வெண்மை நிறத்துடன் ஒளி பொருந்திய உருண்டை வடிவத்தில் சிப்பிக்குள் உருவாவது முத்தாகும். சிப்பிக்குள் நுழையும் அந்நிய பொருள் சிப்பியின் உட்புறம் உறுத்துவதால் சிப்பிக்குள் சுரக்கும் திரவமே முத்தாக உருவாகிறது. கடல்நீரில் உள்ள சிப்பிகள் முத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை. இந்தியாவில் அதிகமாக தூத்துக்குடியில் தான் முத்து குளித்தல் நடைபெறுகிறது. சிப்பியில் உருவாகும் முத்துக்களில் உருண்டை வடிவமுள்ள முத்துக்களே சிறப்பானவை. மிகவும் உயர்ந்தவகை முத்துக்களை, ஆணிமுத்து என்று அழைக்கின்றனர். இந்த ஆணி முத்து அளவில் சற்-று பெரியதாகவும், மிகுந்த அழுத்தம் உடையதாகவும், ஒளிரும் தன்மையுடனும், பளபளப்பாகவும் காணப்படும். முத்துக்களைப் பொதுவாக மணி, துளி என்ற பெயர்களில் அவற்றின் வடிவ அமைப்பைக் கொண்டு அழைக்கிறார்கள். அரை வட்டம் உள்ள முத்தை பட்டன் முத்து என்பார்கள். ஒழுங்கான வடிவம் இல்லாத முத்தை ஙிணீக்ஷீஷீரீuமீ ஜீமீணீக்ஷீறீ என்று கூறுகிறார்கள். சில முத்துக்கள் கருமை, பால் நிறம், இளம் சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. நல்ல முத்தை மேல் நோக்கி உற்று பார்க்கும் போத வானவில்லைப் போல ஏழு நிறங்கள் தெரியும். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஷீன் என்று பெயரிட்டுள்ளனர்.
உலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம் உண்டு என்றால் அது முத்தே ஆகும். எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுதுதான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்றுதான்.
இயற்கையாக முத்து கிடைக்க அதிக காலம் காத்திருப்பதைவிட செயற்கை முறையில் முத்து சிப்பியைத் துளையிட்டு அந்நிய பொருளை உட்புக வைத்து, அவற்றை முத்தாக மாற்றி செயற்கை முறையில் இயற்கை முத்தைப் பெறக்கூடிய வழியாகும். இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களை 1920 ம் வருடம் முதலே தயார் செய்கிறார்கள். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் செயற்கை முத்துக்கள் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள்.
இங்கு தயாரிக்கப்படும் செய்ற்கை முத்துக்களை நெடுங்காலமாகவே ஹைதராபாத்தில் பிரித்தெடுத்து விற்பனை செய்வதால், இதற்கு ஹைதராபாத் முத்துக்கள் என்றே பெயர் வந்து விட்டது. இந்த செயற்கை முத்துக்களும் இறக்கை முத்தைப்போலவே விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. சில முத்துக்கள் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.
ஹைதராபாத் முத்துக்களை மோதிரமாகவும், கழுத்தில் அணியும் மாலைகளாகவும், காதில் அணியும் கம்மல்களாகவும் தங்கம் அல்லது வெள்ளியில் பதித்தும் அணியலாம். முத்தை மோதிரமாக அணிவதென்றால், மோதிரவிரல் அல்லது நடுவிரலில் அணியலாம். இவற்றின் எடை 2,4,6,9 ரட்டிஸ்களாக இருப்பது நல்லது. நவரத்தினங்களில் சந்திரனுடைய ஆதிக்கத்திற்குரிய ரத்தினம் முத்தாகும்.
முத்தின் நன்மைகள்
முத்தை அணியும்போது சந்திரனுடைய ஒளிக்கதிர்கள் திருப்பி விடப்பட்டு உடல் நலமானது சிறப்பாக இருக்கும். மனக்குழப்பங்கள் மறையும். பெண்களுக்கு கர்ப்பை பிரச்சினைகள் இருந்தால் அதிலிருக்கும் குறைகள் விலகி குழந்தைப் பேறும் உண்டாகும்.
முத்து உடலுக்குக் குளிர்ச்சியையும் உள்ளத்திற்கு அமைதியையும் முகத்திற்கு வசீகரத்தையும் உடலழகையும் கொடுக்கிறது.
யாரெல்லாம் முத்து அணியலாம்?
முத்துக்களை சந்திரனுடைய வீடான கடக ராசியில் பிறந்தவர்களும், சந்திரனுடைய திசை நடப்பில் உள்ளவர்களும், சந்திரனால் பாதிக்கப்பட்டவர்களும் அணிவது மிகவும் நல்லது. அதுபோல எண்கணிதப்படி 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ரத்தினம் முத்தே ஆகும்.
முத்துக்கள் சீக்கிரத்தில் நிறம் மங்குவதில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் அதன் நிறம் மங்கும் எடை குறையும். முத்தை பயன் படுத்தாத போது ஒரு பஞ்சிலோ, துணியிலோ சுற்றி வைத்தால் இயற்கை தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். சோப்பு நீரோ ஏனைய கெமிக்கல் பொருட்களோ முத்தை பாதிக்கும் தன்மை கொண்டவையாகும்.
முத்திற்கு பதிலாக சந்திரகாந்த கல்லையும் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் மூன்ஸ்டோன் என அழைக்கப்படும் இக்கல் நிறத்தில் சற்று மங்கலாக இருந்தாலும் சந்திரன் போன்றே அழகுடையதாக இருக்கிறது
கடகம் அன்பானவர்கள்
அழகானவர்கள், கடக ராசி, கடக லக்கின பெண்கள் அழகு தேவதைகள்,
வயல் வெளி, நீர்பாங்கான இடங்கள், தெளிந்த நீர், கரையான் புற்று, வீட்டில் பெரிய பல்லிகள் இருக்கும்,
வீட்டிற்குள் ஈசல், பூரான் வரும்,
இரண்டு திருமணம், சாமி ஆடுதல் அல்லது கோவில் கட்டுதல்,
சாப்பாட்டு பிரியர், கிணறு உள்ள வீடுகள்,
தாய், தந்தை பிரிவு
கடகம் அழகு. விபத்து ராசி ஆகும். காலத்தால் காலைப் பொழுதையும் மாதங்களில்ஆடி. நதி நீர் கால்வாய் வாய்க்கால் போன்ற இடங்கள் தாதுமூலமும் அமைந்துள்ளது. காலபுருஷனின் நான்காவது வீடான சுகஸ்தானம் ஆதலால் இந்த வீட்டில் பிறந்தவர் ஏழ்மையான வீட்டில் பிறந்தாலும் உழைப்பால் படிப்படியாக உயர்ந்து நிலைஅடைவர். தொலைநோக்கு சிந்தனை இருக்கும் எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும் வெளிகாட்ட மாட்டார்கள். தாய்ப்பாசம் மிக்கவர். காலபுருஷனின் பாக்கியாதிபதி குரு இங்கு உச்சம் +திக்பலம் எனவே இவர்கள் தன்னையும் உயர்த்தி கொண்டு சார்ந்தவர் களையும் உயர்த்து வார்கள். இங்கு சனி சந்திரன் இனைவதால் இளமையில கஷ்டமும் நீண்ட ஆயுளும் குடுப்பார். இவர் பிறந்த இடம் விட்டு நீண்ட தூரத்தில் எங்கு குடியேறுகிறாரோ அங்கு மேன்மை அடைவார்கள். சந்திரன் காலத்தில் 2ல் உச்சம் அதனால் இவர் தன் பேச்சால் மற்றவர்களை வசியம் செய்யும் ஆற்றல் இருக்கும்.
கடகம் காலத்தின் 4 ம்வீடு. சரராசி. இவருக்கு வீடு வாகனம் கல்வி ஆகியவற்றில் ஈடுபாடு இருக்கும் எதிலும் விரைந்த செயல் திறன் மிக்கவர் அதிக மான சிந்தனை திறன் மிக்கவர். ஓரிடத்தில் நிலையாக இருக்கமாட்டார்கள். சூழல் தக்கபடி மாற்றம் செய்து கொள்வார்கள். சந்திரன் கடகத்தை ஆளும். வியாபாரம் நுணுக்கம் இருக்கும் இவருக்கு.
கடகத்துக்கு2 ம்வீடு காலத்துக்கு 5ம்வீடு. ஆகும். இவருக்கு கலை அரசியல் குழந்தைகள் காதல் மூலம் தனவரவு இருக்கும். சிம்மம் நெருப்பு ராசி ஆணவமான பேச்சு இருக்கும்.
கடகத்துக்கு 3 ம், வீடுகாலத்துக்கு 6 ஆகும் இவர்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகம் இவர் வழக்குகளை அடிக்கடி சந்திக்கும் அமைப்பு இருக்கும் ரத்த நாளங்கள் பிரச்சினை இருக்கும் இந்த இடம் 3, 12 புதன் வீடு கதைகட்டுரை எழுதுவது பத்திரம் எழுதுவது தபால்காரர் தகவல் தொடர்பு செய்வார்கள் தூது செல்வது நிலையில்லாத மனம் கொண்டவர். சூரியன் நட்சத்திரம் அமைந்தால் சிறந்த எழுத்தாளர் அரசுகாசோலை தபால் மூலம் காசோலை பெறுவது மூலம் லாபம் அடைவார்கள். அஸ்தம் என்றால் கற்பனைகதைகள் கவிதை கள் விரைவான தபால் செய்தி எழுதுபவராக இருப்பார்கள். 5 .10 உரிய சித்திரை என்றால் கௌரவம் பணி தலைமை பொறுப்பு வகிப்பதற்கான ஆவணங்கள் பொறுப்பு மிக்க ஆலோசனை தகவல்கள் பெரும் புகழ் மூலம் விளம்பரங்கள் மூலம் தொழில் அமையலாம்
கடகலக்னம் 4.,ம் வீடு காலத்துக்கு 7,ம் வீடாகும். இந்த இடம் சரராசி காற்று ராசி ஆகும் தெருவில் ஆரம்பம் வீடு இருக்கும் காற்றோட்டம் மிகவும் இருக்கும். இவர்கள் சமூக சார்புடைய கல்வி படிப்பார்கள். கல்வியில் கணிதபுலமை கதை கட்டுரை பாடல் எழுதும் திறன் பெற்றவர்கள் இவர். இவருக்கு வீடு வாகனம் நிலம் மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
கடகம் 5 ம்வீடு காலத்துக்கு 8 ஆகும். இவர் காதல் மூலம் அவமானம் அடைவர். காமம் அதிகம் இருக்கும் ஜலராசி ஸ்திரராசி ஆதலால் கலை அரசியல் போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும் இது செவ்வாய்க்கு 5 , 10. வீடாததால் சூதாட்டம் ஜோதிடம் ஈடுபடுவார்கள். குழந்தைகள் காதலர் மூலமும் அவமானம் அடையநேரும்.
கடகம் 6 ம்வீடு காலத்துக்கு 9 ம் வீடாகும் இந்த இடம் நெருப்பு ராசி உபயராசி. உஷ்ணம் சம்பந்தபட்ட நோய் இருக்கும். சட்டம் சம்பந்தப்பட்ட சிக்கல்களும் உடல் பருமன் கொழுப்பு சம்பந்தம் உள்ள நோய் ஏற்படும். உணவு உடை மருந்து கடன் வழக்கு அடிமைவேலை நோய் முதலியன நிலையிலாத தன்மை உடையது. தனுசுகுருவீடு. ஆகவே வங்கிபணி பெரிய மனிதர் மூலம் கடன் பெறுவது மருத்துவ அதிகாரி. வழக்கறிஞர். சட்டம் சம்பந்தப்பட்ட பணிகள் போன்றவற்றை குறிக்கிறது.
கடகத்துக்கு 7. ம்வீடுகாலத்துக்கு 10 ம் வீடாகும். இந்த இடம் சரராசி பூமி ராசி ஆகும். இவருக்கு கூட்டுத் தொழில் சிறப்பு தரும். கணவர் மனைவி உறவு சிறப்பு இல்லை. ஒரு பற்றுதல் இல்லாத வாழ்க்கை வாழ்வார்கள். கடகத்துக்கு 2 சூரியன் 7 ல்பாவகாரகர் ஆதலால் அற்ப ஆயுள் மனைவிமற்றும் பார்ட்னர் பிறரது உதவிபணம் குடும்பத்தில் ஒரு நபராக பழகுதல் போன்றவை இருக்கும். திருவோணம் எனில். கடகத்துக்கு 7. உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல். பிறர் சொல்கேட்டு நடத்தல் கிட்னி கருப்பை பிரச்சினை அடிவயிறு பிரச்சினை போன்றவை ஏற்படும். அவிட்டம் எனில் மூர்க்கத்தனமான மனைவி பார்ட்னர். ஏற்படுவார்கள் அவர்கள் மூலம் சங்கடங்கள அவமானம் ஏற்படும்.
காலத்துக்கு 10 ல்செவ்வாய் உச்சம் கடகத்துக்கு 3 ம்வீடுகாலத்துக்கு 5. 10 உடையவர். எனவே உயர்ந்த பதவியில் இருப்பார். சனி வீட்டில் சந்திரன் எனவே திரவசம்பந்தபட்ட துறைகளில் சிறந்து விளங்குவார்கள். செவ்வாய்சனி சம்பந்தப்பட்ட உலோக வியாபாரம் இந்த இடம் பூமியாதலால் சிவில் சம்பந்தப்பட்ட கட்டிடக்கலை சார்ந்த வல்லுனர்களாக இருப்பார்கள்
கடகத்துக்கு 8 காலத்துக்கு 11. கடகத்துக்கு அஷ்டமஸ்தானம். இதுகாற்றுராசி ஸ்திர ராசி ஆதலால். அதிபதி சனி ஜலராசிகளில் இருப்பதால் இவர்கள் நீர்நிலைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயணத்திலும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
காலபுருஷனின் அயனசயனம் கடகத்துக்கு தகப்பன் வீடு. இது ஜலராசிஉபயராசி. காலத்துக்கு 12 ஆதலால்இவர் நிதிநிலை பற்றி ரகசியம் ஆக வைத்து இருப்பார்கள். இவருக்கு ஆன்மீகம் வழியில் உயர்ந்த நிலையை அடைய முடியும். நல்ல குருமார்கள் கிடைப்பது. கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது அறக்கட்டளைகள் மூலம் நற்காரியங்கள் செய்வது மேலும் வெளிநாட்டு தூதுவர் ஆகபணிபுரியும் அமைப்பு கிடைக்கும். அந்நிய மனிதர்கள் மூலம் முதலீடு செய்யும் வாய்ப்பு உண்டு. மீனம் காலத்துக்கு விரையமாகி+மீனத்தின் அஷ்டமாதி யாகவும் இருந்து கடகத்தின் தாய் சுக்கிரன் உச்சம் பெறுவதால் இவர் பிறந்த பின் பெற்றோர் களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து பிரியும் அமைப்பு தந்தைக்கு இருதார அமைப்பு போன்ற வற்றையும் குடுக்கும்.
மேஷம் காலத்துக்கு முதல் வீடு கடகத்துக்கு தொழில் ஆகும். நெருப்பு ராசி சர ராசி.
இங்கு சூரியன் உச்சம் ஆதலால் அரசு சார்ந்த அரசுக்கு நகரான உயர் நிலைகள் கிடைக்கும். மருத்துவ துறையில் புகழ்பெறுவது இரசாயனத் துறையில்புகழ் மதிப்பு குடுக்கும். சூரியன் கேதுஇனைவு மருத்துவம் சூரியன் சுக்கிரன் இனைவு மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் மருந்து தயாரிப்பு. ஆட்டோ மொபைல் தொழில் சாலைவாகன உதிரிபாகங்கள் விற்பனை கண்ணாடி பொருட்கள் உற்பத்தி வைர வேலை தீயணைப்பு துறை பணிஎலக்டிரிக் துறை போன்ற துறைகளில் ஈடுபாடு கொடுக்கும்.
செவ்வாய் வீட்டில் சனிபகவான் கேது இனைவு கேன்ஸர் பற்றியமருத்துவ ஆய்வு நிபுணராக்கும் சனி சுக்கிரன் பழைய துணிவியாபாரம் பழைய பொருட்கள் விற்பனை இரும்பு வியாபாரம் கழிவு எண்ணெய் பிளாஸ்டிக் போன்ற துறைகளில் தொழில் அமையும்.
காலத்துக்கு 3 கடகத்துக்கு விரையம் ஆகும். இந்த இடம் உபயராசி காற்று ராசி ஆகும். இங்கு செவ்வாய் ராகு குரு நட்சத்திரம் உள்ளது. சகோதரஸ்தானம் விரயம் இவர்கள் தன் உடன் பிறப்புகளுக்கு விட்டு குடுத்து அவர்கள் நலனுக்காக தன் உழைப்பை தருவார்கள். ஒப்பந்தம் அடிப்படையில் முதலீடு குடுக்கும். தகவல் தொடர்பு சாதனைகள் மின் கோபுரம் அமைத்தல் புலனாய்வு துறை ரகசிய போலீஸ் இராணுவ உளவுபணி மேலும் ராகு இருப்பதால் போதைபொருள் கடத்தல் விற்பனை அதனால் சிறைசெல்லு வதையும் குறிக்கும்.இவர் கார்த்திகை தை வைகாசி திருமணம் செய்ய சிறப்பு தரும்
கடகம் தாயை போல பாச எண்ணம் கொண்டவர்கள்.
தாயை போல அரவணைத்து கொள்வார்கள்.
கடகராசியில் ஒரு கிரகமேனும் இருக்கவேண்டும் அப்போது தான் அரசியல் சிறப்பு
கடகம்
அரசு / அரசியல் / சங்கம் / நிர்வாகம்
மூலமாக வருமானம் பெறுவர்.
2 மிடம் சிம்மம் 2 மிடத்தில் நிற்கும் கிரக காரக உயிர்கள் மூலமாகவும் கிடைக்கும்
கால புருஷனுக்கு 4 மிடம் கடகம். மார்பு, இதயம். தனிமை விரும்பி, வயல்வெளி, நதி, ஓடை இவற்றை குறிக்கும். பொது நலனில் அக்கறை, அரசியல் ராசி.
கடகம் ராசியின் உருவம் நண்டு. கடக ராசிக்காரர்கள் தாய்மை உள்ளம் மிக்கவர்கள். குடும்பத்தை கட்டிக் காப்பதில் அதிக விருப்பம் உடையவர்கள். மேலும் எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள். யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.
பாசம் மிக்கவர்கள்.
கப்பல் வேலை, கடல் பொருட்கள், விவசாயப் பொருட்கள், போன்ற தொழில் அமைப்புகள் கடகத்தில் வரும்.
உணவு உபசரிப்பதில் கில்லாடிகள்.
கடகம் ராசியின் தன்மைகள்:
சர ராசி
நீர் ராசி
பெண் ராசி
ராசியின் காலம் : காலை
ராசியின் இடம் : வாய்க்கால்
ராசியின் குணம் : சாந்தம்
ராசியின் செயல் : ஆரம்பம்
ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: புனர்பூசம் 4, பூசம் 1,2,3,4 ஆயில்யம் 1,2,3,4
மோட்ச ராசி
வடக்கு ராசி
ராசியின் அதிபதி : சந்திரன்
இந்த ராசியில் குரு உச்சம் செவ்வாய் நீசம்
ராசி நிலையில் உடல் உறுப்புகள் : மார்பு, நுரையீரல்
கடகம் ராசியின் காரத்துவங்கள்:
நீர்நிலை, ஆறு, குளம், குளியல் அறை, வயல் சார்ந்த இடம், முத்து, சங்கு, திரவப் பொருட்கள், ஏற்றுமதி, இறக்குமதி வேளாண்மைத் தொழில், சோதிடம், மருத்துவம், போக்குவரத்துத் துறை, கல்வித்துறை, கலைத்துறை, பால் விற்பனைத் தலம், தெய்வஸ்தலம், இளஞ்சிவப்பு நிறம்.
கடக லக்னப் பலன்கள்
சந்திரனுடைய ஆதிக்கத்தில் பிறந்த கடக லக்னக்காரர்கள் எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையவர்கள் இனிப்பு பதார்த்தங்களை உண்பதில் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள். ஈகை, இரக்கம், பச்சாதாப குனம் உடையவர்கள், எதிலும் தன்னடக்கத்துடன் நடந்து கொள்வர், எதிலும் வேகமாகச் செயல்பட்டு நிறவேற்றும் ஆர்வமும் திறமையும் உடையவர். மற்றவர்கள் சொல்கேட்டு நடக்கும் சுபாவம் உடையவர்கள் மற்றவர்களுக்கு உதாரணபுருஷனாக விளங்குவார்கள். அதே சமயம் தேவையில்லாமல் தனக்குத்தானே நிறைய எதிரிகளை உருவாக்கிக் கொள்வார்கள்.
இந்த லக்னத்தில் பிறந்த பெண்கள் அன்பும் தாயைப்போல் மற்றவர்களை பாதுகாக்கும் குணம் உள்ளவர்கள், அதே சமயம் கணவரிடம் அடிக்கடி சண்டை போடுபவராகவும் இருப்பார்கள். நல்ல தூக்கம் உள்ளவர்கள். மற்றவர் பேசும் சொல்கேட்டு குடும்பத்தில் சற்று தாறுமாறாக நடந்து கொள்வர். எழுதுவதில் கலைத்துறையில் ஆர்வமும் திறமையும் உடையவர்கள். தனக்கு நிகர் யாருமில்லை என்ற எண்னம் உடையவர்கள். மற்றவர்களின் குற்றம் குறைகளை வெகு எளிதில் கண்டுகொள்வர்
கடகராசி :காலபுருஷனுக்கு 4 வது ராசி .நண்டு. சரராசி.பலகால்ராசி. பலசெயல்கள் செய்யக் கூடியவர்கள். மாறும் இயல்பு இருக்கும் மற்றவர்களை நம்பாதவர்கள் குறுக்கு வழி உடையவர்கள். எதையுமே சுலபமாக செய்யக்கூடியவர்கள். ஈவு இறக்கம் அதிகமாக இருக்கும்.எதையுமே சமாளிக்கும் திறன் கொண்டவர்கள். இவர்கள் முன்னேறுவதற்கு பல வழிகளில் செயல்படுவார்கள். முழங்கால்வலுவாக இருக்கும்.தொப்பை உடையவர்கள். அதிக நேரம் வேலை செய்பவர்கள்.தனக்கென்றுதன்மானத்துடன் வாழக்கூடியவர்கள். அதிகமான ஞாபக சக்தி உள்ளவர்காள். கைகளை ஆட்டிஆட்டி பேசுவார்கள். பகலில் அடந்தநிறம் கொண்டது.இரவில் வெளிர் நிறம்கொண்டது சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் மாறும் தன்மை உள்ளவர்கள். அழகானவர்காள். 4 க்குடையவன் 7 ல் இருந்தால் மனைவி அழகு.நீர்பாங்கானஇடம் நீர்ராசி ஆற்றுநீர். நீரோட்டமான இடம். வயல்வெளி ஊமைராசி 2 மிடம் புதன் கெட்டு நீர் ராசியில் இருந்து சனிபார்த்தால் ஜாதகர் தாமதமாக பேசுவார். இதை உறுதிபடுத்த சப்தமி திதி கடகம் தனுசு திதி சூன்யராசி இதில் 2 க்குடையவன் அமர்ந்தால் கண்டிப்பாக பேசமாட்டார். எந்த பாவகஅதிபதியும் வாக்குஸ்தானைதிபதி யோடு ஊமைராசியில் இருந்து சனி சம்மந்தம் இருந்தால் கண்டிப்பாக தாமதபேச்சு திக்குவாய். கரையான் பல்லி ஈசல் மண்புளு பாம்பு பெரியபல்லி மரபல்லி கீரிப்பிள்ளை இவை யெல்லாம் கடகராசியின் நண்பர்கள். விலங்குகள். இவர்களுக்கு அரசாங்க அரசியல் ஈடுபாடு இருக்கும்.வட்டமுகம் ஆறு நதி ஓடை பால் பண்ணை காரகத்துவங்கள். விபத்துராசி வெளிநாட்டு ராசி திடீர் அதிர்ஷ்டம்வரும். கடகத்தில் ஒருகிரகம் இருந்து 6:8:12 சம்மந்தம் பெற்றால் விபத்து நடக்கும். இதில் கிரகம் இருந்து 3:7:12 சம்மந்தம் பெற்றால் வெளிநாடு போவார்கள். 6:8:12 கடகத்தில் அல்லது விருச்சிகத்தில் இருந்தால் இவர்கள் மரணம் விமர்சிக்கப் படும். சனி வீட்டில் செவ்வாய் இருக்கலாம் செவ்வாய் வீட்டில் சனிஇருக்கக் கூடாது. அவாஸ்த்தையானவீடு கடகம். 9 ம்அதிபதி கடகத்தில் தந்தை கஷ்டப்பட்டுவந்தவர். மகரத்தில் அல்லது கடகத்தில் ஒருகிரகம் இரூந்தால் கண்டிப்பாக வெளிநாடு போவார்கள். ஆயுள் பலம் உள்ளராசி அசைவபிரியர்கள். இருதயத்தைகுறிக்கும் பகுதி.குடும்பவாழ்க்கையில் பற்று குறைவு. விபச்சாரவீடு. இவர்கள் வீடுவாடகைக்கு விட்டால் பார்த்து தான் விடவேண்டும். வெளியூரில் புகழ் பெறும்ராசி.உள்ளுரில் புகழ் பெறாது. கடகத்துக்கு செவ்வாய் குரு சேர்ந்தாலோ பார்த்தாலோநன்று மறையாமல் பார்க்க நன்று
கடக ராசிகாரர்கள் பாசம் மிக்கவர்கள். எந்த பொருளை பார்த்தாலும் உடனே வாங்க, சாப்பிட ஆசைபடுவார்கள். அழகு படுத்தவதில் ஆர்வம் உடையவர்கள். கடகத்தார் அழகு சாதனப் பொருட்கள் அதிகம் உபயோகிப்பா் எடுப்பானதோற்றம் மிடுக்கானநடைக்குச் சொந்தம் தேவி ஈஸ்வரி மேகலா பால்பாண்டி இந்த மாதிரி பெயர்கள் அமையும். 4 க்குடையவனை வைத்து தான்பெயர் எடுக்கவேண்டும். மரங்கள்:அவரை நெல் பேரீச்சைபழம் விலாமரம். சங்கு முத்து கடக ராசியின் சிறப்பு இதில் இன்று வீட்டில்இருக்கும். கடகராசி கடகலக்னம் இவர்கள் வீட்டில் பச்ச நெல் எப்போதும் வைத்திருந்தால் எப்போதும் தானிய குறைவே வராது. மணல்ராசி தாது ராசி விலங்குகள்:ப்ராய்லர் கோழி வாத்து வான்கோழி நீர்கோழி கடகத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அந்த கிரக காரகத்துவம் உறவு அழகாக இருக்கும் 8 ல்சந்திரன் அமர்ந்து அந்தசந்திரன் நீர்ராசியில் அமர்ந்த கிரகத்தை பார்த்தால் அந்த காரக உறவு அடி வாங்கிவிடும். குரு நீர் ராசியில் இருந்து இன்னொரு நீர்ராசி கிரகத்தை பார்த்தால் அந்த காரக உறவிற்கு நீரீல் கண்டம். இவர்கள் குடும்பத்தில் சாமி ஆடுபவர்கள் பூஜை செய்தவர்கள் இருப்பார்கள். இரண்டு திருமணம் முடித்தவர்கள் இருக்க வாய்ப்புள்ளது. நெஞ்சுவலி மார்புவலி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலும் சொந்த தொழில் செய்வார்கள். ஆசிரியர் ஜோதிடர் உள்ளவீடு அரசாங்க வழக்கு இருக்கும்.அரசாங்க தண்டத்தொகை கட்டுவார்கள். பல் மூக்கு கண் பெரியதாக இல்லாத கடகமே இல்லை. கடகத்தார் குடும்பத்தில் அரசுவேலை காவல் ராணுவம் கப்பல்துறைகளில் அவர்கள் உறவினா்கள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு வெளிநாட்டிலும் தாய் உறவுகள் வசிக்க வாய்ப்புகள் உண்டு இவர்கள் வீட்டில் பாம்புவரும் கரையான் அடிக்கடி வரும் ஏமாந்தா புற்று எழுப்பிவிடும். பூரான் வரும் ஏனா நண்பர்கள் ஆச்சே 3 க்குடையவரே 12 க் குடையவராக வருவதால் விரலில் காயம் படாத கடகமே இல்லை.3 க்குடையவரே 12 க்கு டையவராகவருவதால் புதன் சகோதரால் விரையம் சகோதரரை வெளிநாடு அனுப்பலாமா என்று கேட்டால் அனுப்பலாம் என்று சொல்லலாம் நாடு கடத்தலாம். இவர்கள் கைரேகை எங்கும் வைக்கக் கூடாது. ENT பிராப்ளம் இருக்கும்.அடிக்கடி காது குடைந்து கொண்டே இருப்பார்கள். பெண்களுக்கு கம்மல் மாற்றுவது துளைந்து போவது. பெளர்ணமி பூஜையில் கலந்துகொள்வது சிறப்பு சாத்வீக அம்மன் வழிபாடு சிறப்பு 4 க்குடையவரே 11 க்கு டையராகவருவதால் தாய் மூத்தவர் அல்லது 4 வது குழந்தையாக இருப்பார். அம்மா அப்பா தாத்தா இந்தவகையில் இரண்டு திருமணம் முடித்தவர்கள் உண்டு. வண்டி வீடு வாகனம் யோகம் உண்டு. நிலத்தால் ஆதாயம். கார் வாங்கவேண்டும் என்ற ஆசைஅதிகமாக இருக்கும். 5 க்குடையவரே 10 க்கு டையவராகவருவதால் முதல் குழந்தைபிறந்தவுடனே ஒரு கர்மம். தொழில் விருத்தி அடையும்.குலதெய்வம் அருள் உண்டு. குலத்தொழில் செய்யலாம். ஜோதிடம் நன்று. அறிவை பயன்படுத்தி செய்யும் தொழிலில் ஜெயிக்கலாம். 6 க்குடையவரே 9 க்கு டையவராகவருவதால் ஜாமீன் போடக்கூடாது. தந்தைக்கு வழக்கு விபத்து இருக்கும். உத்தியோகம் தேடிவரும் 7 க்குடையவரே 8 க்குடை யவராகவருவதால் திருமணத்தடை தாமதம் வயது மூத்த பெண்கள். அழகு குறைந்த பெண்கள் அமையும் வசதிவாய்ப்பு குறைவான பெண்கள் வரும். திருமணத்திற்கு பின் ஒரு விபத்து உண்டு. கூட்டு த்தொழில்ஆகாது பொருந்தாத ஜோடி. கடன் வாங்கக்கூடாது. வாங்கினால் பெருகி விடும்.பெண்ணால் பிரச்சனைகள் இருக்கும் வந்து கொண்டே இருக்கும்..தொழில்:வாகனத் தொழில் ஏற்றுமதி இறக்குமதி பால்பண்ணை உணவுத்தொழில் பழங்கள் விற்பனை பார்வதி அம்சம்பெற்ற படம். புற்று உள்ள அம்மன் படம். ஆறு படகு படம் வீட்டில் வைக்கலாம். மீன் தொட்டி வைக்கலாம்.... கப்பல் துறைமுகங்கள் கனரகவாகனங்கள் நீர்நிலைசம்பந்தப்பட்ட யாத்ரா டிராவல்ஸ் தொழில் நன்று கடகம் பல்லிவீடு அதனால் பல்லி இவர்கள் மீது விழுந்தால் நல்லதுதான். சகுனம் பார்க்கதேவை இல்லை. இட்லி சட்னிவிரும்புவார்கள். பால்கோவா பால்பேசந்தி பன்னீர்பக்கோடா ரோஸ் மில்க் விருப்பம் புனர்பூசம் வாதநோய் பூசம் பித்த நோய் ஆயில்யம் கவம் நோய் புனர்பூசம் பூசம் பாயாசம் விரும்புவார்கள் ஆயில்யம் லட்டு விரும்புவார்கள். கடகம் வெள்ளரிகாய் சவெள சவெள விரும்புவார்கள். நண்பர்களுக்குப் பணஉதவி செய்து ஏமாறும் நபர்கள்
பால் தயிறாகி தயிர் வெண்ணெய் ஆகி வெண்ணெய் நெய் ஆகி கலந்தது
கடக ராசிக்காரர்கள் நல்ல ஞாபக சக்தி உடையவர்களாக இருப்பார்கள் இவர்கள் நண்டைப்போல ஒவ்வொரு காசையும் பிடித்து செலவு செய்வார்கள் முக்கிய தேவை பொருளையும் வாங்க மாட்டார்கள் கடக ராசிக்காரர்கள் பலன் அளிக்கும் செயல்கள் பற்றி தான் சிந்திப்பார்கள் கூர்மையுடனும் உற்சாகத்துடனும் இருப்பார்கள் இவர்கள் குடும்பத்தின் மீது அதிகப் பற்று பாசத்துடனும் இருப்பார்கள் இவர்கள் தொழில் செய்பவர்களாகவும் உணர்ச்சி உடையவர்களாகவும் மற்றும் தேச பக்தி உடையவர்களாகவும் இருப்பார்கள் இவர்கள் அதிக ஞாபக சக்தி உடையவர்களாகவும் கடந்த கால வாழ்க்கையை பற்றி அடிக்கடி சிந்திக்கும் குணம் உடையவர்கள் பொதுவாக தனது குடும்ப விஷயங்களை சிந்திப்பார்கள்
கடகம் காலபுருஷனின் சுகஸ்தானம் கால புருஷனின் நான்காம் வீடு கடகம் அதன் அதிபதி சந்திரன் மாதங்களில் ஆடி மாதம் கால வேளையில் காற்று மாதமாகவும் ஆறுகால்கள் கொண்ட ராசியாகவும் இது பல கால் ராசியாகயும் செயல்படும் உருவம் நண்டு நிறத்தில் வெள்ளையாகவும் இயல்பான குணம் கொண்டதாகவும் கடல் ஆறு கால்வாய் வடிகால் போன்ற இடங்களையும் தாது மூலமும் செடி கொடியாகவும் கொண்டதாக உள்ளது
நடுத்தரமான உயரமும் அதற்கு சமமான குட்டையான உருவமும் மெலிந்து வளரும் தன்மையும் பருமனான உடல் தேகமும் உறுதியான மனோபாவமும் அழகிய சற்று சுருண்ட கேசமும் கவர்ச்சிகரமான கண்களும் புருவமும் உறுதியான பற்களும் சற்று தட்டையான கூர்மையுள்ள உருண்டையான முகமும் தாடியும் நீண்ட கைகளும் நிமிர்ந்த உறுதியான மார்பும் விரிந்த பலமான மார்பகமும் நீளமான வயிறும் துடிப்புடன் செயல்படும் உடல்வாகு கொண்டவர்கள்கண்கள் முத்து கண்கள் போன்ற அமைப்பும் கண்களில் கவர்ச்சியும் அகலமான முதுகும் ரோமங்கள் நிறைந்த மார்பும் நேரான நீளமான அகலமான அழகான உடலும் தடித்த கால் நரம்புகள் நெளிந்த ஒல்லியான நீண்ட கால்களும் கொண்டு விளங்கும்
வளமான கற்பனையும் வாழ்க்கை பிடிப்பும் மன எழுச்சியும் மாறும் தன்மை உடையதாகவும் மிகவும் துணிச்சலான செயல்களும் இறக்கமும் இரக்கமின்றி செயல்படுவதும் கற்பனைத் திறனும் படைத்தளபதியாக செயல்படுவதும் கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படுவதும் அதனால் பயன்களை பகுத்துப் பார்த்து தன்வசப் படுத்திக் கொள்வதும் சுகமான வாழ்வு அனைத்தும் விரும்புதலும் அத்துமீறிய உணர்ச்சி அதன் மூலம் அவதிப்படுவதும் பேச்சில் மற்றவர்களை மயக்கும் தன்மை அதில் வல்லமை இருக்கும் மாறும் தன்மை மாற்றிப் பேசும் இயல்பும் சந்தர்ப்ப சூழ்நிலையை தனக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளும் அமைப்பு எதிலும் பின்வாங்காத தன்மை அச்சமின்மை துணிவான செயல்கள் எதிரியை பதுங்கி பாய்வது போன்ற அமைப்புகள் ஞாபக சக்தியால் உறுதியான நிபுணத்துவம் வேகமான செயல்பாடு விரும்பியதை அடையும் சாத்தியம் அதிக சொத்துக்கள் சேர்க்கையும் இலக்கிய இலக்கணங்களில் ஈடுபாடு அந்த விஷயங்களில் ஈடுபட்டு உயர் பதவி வகிக்கும் அமைப்பும் உழைப்பின் மூலம் படிப்படியாக உயர்வு பெறும் நிலை நீண்ட ஆயுளை உடையவராகவும் தனது செயலை மேன்மையான வாழ்வுக்கும் வளச்சிக்கும் பயன்படுத்திக்கொள்வார்கள் தொழில் நிறுவனமும் பெரிய அமைப்பாக விளங்கும் மற்றவர்களின் நலனில் அக்கறை செலுத்தி வருவார்கள் விருப்பமான உணவு வகைகளை தேடிச் செல்வதும் விரும்புவதும் கலகலப்பான தன்மையும் தாய் மீது தனி பாசம் கொண்டவராகவும் பழமையான பொருட்களை நேசிப்பவராகவும் இருப்பார்கள்
கடகம் ஆபத்துக் காலத்தில் தன் அறிவை பயன்படுத்தி போராடி தப்பித்துக் கொள்வதும் உண்டு நண்டு ஈரம் சார்ந்த நிலப்பரப்பில் வாழும் தன்மை கொண்டது ஈரம் இல்லை எனில் இவர்களால் வாழ முடியாது நண்டில் பலவகை உண்டு அதிலும் புணரும் சக்தியானது அதிகம் விரோதமானதும் வேகமாக நீடித்த நிலை கொண்டதாக இருக்கும் ஆகவே இந்த கடக ராசியில் பிறந்தவர்களுக்கு ஜீவன்களுக்கு உணரும் சக்தி எப்போதும் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது வயல்வெளியில் ஆற்றங்கரையோரங்களில் வாழும் அமைப்பு எனவே கடகம் நீர் நிலை சார்ந்த இடம்
கடகம் ராசியானது கால புருஷனின் நான்காம் இடம் என்பதால் மாதத்தில் ஆடி மாதமாக விளங்கும் நமது முன்னோர்கள் நற்காரியங்களை ஒதுக்கி வைத்ததும் இந்த வீட்டில் உள்ள சக்தியை உணர்ந்து வெளிப்படுத்தி உள்ளனர் இது கால புருஷனின் மோட்ச திரிகோணம் முதல் வீடு தட்சயான காலத்தின் துவக்கத்தை குறிப்பதால் உலகில் உள்ள உயிர்களின் தோற்றத்திற்கு காரணமாக இறந்த முன்னோர்களுக்கு வழிபாடு செய்யும் இந்த நிலையை உருவாக்கி உள்ளார்கள் ஒவ்வொருவரும் தனது முன்னோர் வழிபாடு செய்தல் நன்று என்ற தத்துவத்தை இந்த மாதத்தில் வழங்கி உள்ளனர் இந்த ராசியில் பூசம் நட்சத்திரம் உள்ளது உயர்ந்த உன்னதமான நட்சத்திரமாக விளங்குகிறது இந்த நட்சத்திரத்தில் தான் தேவர்கள் சித்தர்கள் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதும் சமாதி நிலையை அடைந்து கொள்வது பூசம் நட்சத்திரத்தில் இயக்கத்தினால் தன் ஜீவன்களில் இருதயம் இயக்கம் நிலை நிறுத்திகொள்ளப்படுகிறது
காற்று சனிபகவான் வாயு தத்துவத்தின் அதிபதி இந்த பூச நட்சத்திரத்தின் அதிதேவதை பிரகஸ்பதி என்கிற குரு பகவான் வாயுவும் ஆகாயமும் இணைந்து ஜீவன்கள் உயிர் வாழ தேவையான காற்றை கொள்ள வழிவகை செய்கிறது
இந்த வீட்டின் அதிபதி சந்திரன் இதில் சனி பகவான் நட்சத்திரம் பூசம் அமைந்துள்ளது ஆகையால் இந்த ராசி தெற்கு வீதி என்று சொல்லப்படும் தட்சிணாயணம் காலம் இந்த வீட்டில் தான் துவங்குகிறது அதேபோன்று இதற்கு நேர் எதிர் ராசியான மகரம் இந்த வீட்டின் அதிபதி சனி பகவான் அதில் திருவோணம் என்ற சந்திரன் நட்சத்திரம் உள்ளது சனியின் வீட்டில் சந்திரன் நட்சத்திரம் உள்ள இந்த வீட்டின் வடக்கு வீதி என்று சொல்லப்படும் உத்தராயண காலம் என்பது வட திசை வடக்கு பகுதி காலமாகும்
ஆடி மாதம் தொடக்கம் முன்னோர்களின் வழிபாடு செய்து விதை விதைக்க தேவையான காரியங்களை செய்வதற்கு வழி வகுத்துள்ளனர் ஒவ்வொருவரும் ஆடி மாதத்தில் நீராடி தன் இஷ்ட தெய்வங்களை வழிபடும் முறைகளை செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இன்னும் நிறைய விளக்கங்கள் இருப்பினும் இந்த வீட்டின் தன்மை புனிதமானது
சாந்திரனுக்குரிய பரிகாரங்கள்: 1 இரவு நேரங்களில் சந்திர தரிசனம்செய்தல் 2 அரிசி நெல் தானம் செய்தல்.
3 அம்மனை வழிபாடு செய்தல்.
4 அம்மன் ஆலயங்களை பராமரித்தல்.
5 அம்மன் பக்தர்களை உபசரித்தல்.
6 சோமாவார விரதம் அனுஷ்டித்தல்.
7 அமாவாசை பௌர்ணமி நாட்களில் விரதம் அனுஷ்டித்தல்.
8 லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்தல்.
9 ஸெளந்தர்ய லஹரி பாராயணம் செய்தல்.
10 சந்திர அஷ்டோத்திர பாராயணம் செய்தல்.
11 சந்திர காயத்ரி மந்திர ஜெபம் செய்தல்.
12 வெள்ளை வஸ்திர தானம் செய்தல்.
13 அன்னதானம் செய்தல்.
14 முத்து அணிதல்.
15 பால்தானம் பசு தானம் செய்தல்.
16 உப்பு தானம் செய்தல்
17 திங்களூர் சென்று சந்திர அம்சத்தில் உள்ள இறைவனை வழிபடுதல்
18 திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்தல்.
19 தாயை நன்றாக கவனித்துக் கொள்தல்.
20 சந்திர கவசம் பாராயணம் செய்தல்.
21 திங்கள் கிழமையில் வீட்டிலுள்ள பூஜை அறையில் அரிசி மாவைக்கொண்டு சந்திரனுக்குரிய கோலமிட்டு ஸெளந்தர்ய லஹரியில் சந்திரனுக்கென கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை பாராயணம் செய்தல்.
22 ஈயபாத்திரம் தானம் செய்தல்.
23 சந்திர யந்திரம் தரித்தல். 24 ஸ்ரீசக்ர யந்திர வழிபாடு செய்தல்.
25 சிவாலயங்களில் அமைந்துள்ள நவகிரக சன்னதிக்கு சென்று சந்திரனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுதல்.
26 ஓம் பத்மத் வஜாய வித்மஹே ஹேமரூபாயா தீமஹி தன்னோ ஸோம ப்ரசோதாயாத்....
27 ஓம் நிசாகராய வித் மஹே சுதா ஹஸ்தாய தீமஹீ தன்னோ சந்த்ர ப்ரசோதயாத்.....
28 எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி திருவருள் தருவாய் சந்திரா போற்றி சத்குரு போற்றி சங்கடம் தீர்க்கும் சதுரா போற்றி.
சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதி, சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதி இருவருமோ அல்லது இவர்களில் ஒருவரோ நீச்ச தன்மை பெற்று இருந்தால், அந்த ஜாதகரையும், நோயையும் பிரிக்க முடியாது. அவரின் இறுதிகாலம் வரை நோய் இருந்து கொண்டே இருக்கும்.
சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும், எதிரியாக இருந்தால் அவ்வப்போது தொற்றுநோய்கள் வந்து கொண்டே இருக்கும்.
சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் நட்பு, சமம் ஆக இருந்தால் அந்த ஜாதகர் திடமான மனப்போக்கும், நோய்களுக்கு இடம் கொடுக்காதவராகவும் இருப்பார்கள்.
குரு, புதன், சுக்கிரன் ஆகியோர் ஆட்சி செய்யும் ராசிகளில் சந்திரன் நின்றால், அந்த ஜாதகருக்கு வம்சா வழி நோய்கள் வராது.
சூரியன், செவ்வாய் ஆகியோரது ஆட்சிக்குரிய ராசிகளில், சந்திரன் நின்றால் அந்த ஜாதகருக்கு புதிய நோய்கள் வந்து போகும்.
சந்திரனோடு சுப கிரகங்களான குரு, புதன், சுக்கிரன் ஆகியோர் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகருக்கு திடகாத்திரமான உடல்வாகும், நல்ல ஆரோக்கியமும், கவர்ச்சியான உடல் அமைப்பும் அமைந்திருக்கும்.
சந்திரனோடு சூரியன், செவ்வாய் சேர்ந்திருந்தால், அந்த நபர் நல்ல உடல்வாகு பெற்றிருந்தாலும் சின்னச் சின்ன நோய்கள் வந்து போகும்.
சந்திரனோடு சனி சேர்ந்திருந்தால், அந்த ஜாதகர் சளி, பித்தம், வம்சாவழி நோய்கள் மற்றும் அவ்வப்போது வரும் பருவ மாற்றத்திற்கான பாதிப்புகளில் சிக்கிக்கொள்வார்கள்.
சந்திரனோடு ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால், அந்த ஜாதகருக்கு ஒல்லியான உடல்வாகு அமைந்திருக்கும்
கடகம்
கடக ராசியின் உருவம் நண்டு ஆகும். நண்டு தாய்மையின் அடையாளமாகும். அதாவது நண்டானது எப்பொழுதும் தன் குஞ்சிகளை சுமந்து திரிவதில் அலாதி பிரியமுடையவை.இதன் காரணத்தினால் கடக ராசிக்காரர்கள் தாய்மை உள்ளம்கொண்டவர்கள் என்றும்,தன் குடும்பத்தை கட்டிக்காப்பதில் விருப்பம் உடையவர்கள் என்றும் கூறப்படுகிறது. நண்டுகள் மிகவும் எச்சரிக்கை உடையவை, இதனால் கடக ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள் என்றும்,யாரையும் முழுமையாக நம்பமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. பாசம் என்றால் என்னவென்று இவர்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.
கடகம் கடக ராசியின் உருவம் நண்டு ஆகும். எனவே நண்டுகள் வசிக்குமிடங்களை கடக ராசி குறிக்கும். வயல்வெளிகள்,கடலோரம்,குளக்கரை,ஏரிக்கரை,வாய்க்கால் ,நதிக்கரை போன்றவை நண்டு வசிக்கும் இடங்களாகும். இவைகளே கடக ராசியின் வசிப்பிடங்களாகும்.
கடக ராசியில் ஆட்சி பெறும் கிரகம் சந்திரன் உச்சம் பெறும் கிரகம் குரு
நீசம் அடையும் கிரகம் செவ்வாய்
கடக ராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்கள்
புனர்பூசம் 4
பூசம் 1,2,3,4
ஆயில்யம் 1,2,3,4
சந்திரன் ஜோதிடம் சாஸ்திரம் கிரகங்கள் பூமியை சுற்றிவருவதாக சொல்லவில்லை. பூமியிலிருந்து வானத்தை பார்க்கும்போது. பூமியை சுற்றிலும் தென்படும் நட்சத்திர கூட்டங்களால் ஆன ஒரு வட்டப்பாதையில் கிரகங்கள் நகர்ந்து செல்வதுபோல் காட்சியளிக்கின்றன. உண்மையில் சந்திரனைத்தவிர வேறு எந்த கிரகமும் பூமியை சுற்றவில்லை. அவை சூரியனையே சுற்றிவருகின்றன. நவக்கிரகங்களில் ஒன்றான சந்திரனுக்கு மூன்று வகையான சுழற்சிகள் உண்டு. அவை
1. சந்திரன் பூமியை சுற்றுகிறது.
2. சந்திரன் தன்னைத்தானே சுற்றுகிறது.
3. சந்திரன் பூமியோடு சேர்ந்து சூரியனையும் சுற்றுகிறது.
நவக்கிரகங்களில் பூமியை மிக வேகமாக சுற்றும் கிரகம் சந்திரனாகும். இந்த சந்திரனுக்கு வளர் பிறை,தேய் பிறை தோற்றம் உண்டு. இந்த சந்திரன் வெண்மை நிறமாக காட்சியளிக்கிறது. பூமிக்கு மிக அருகாமையில் சுற்றிவரும் கிரகம் சந்திரனாகும்.
ஒரு தாயின் மனமும் உடலும் எப்பொழுதும் தான் பெற்ற குழந்தைகளையே சுற்றிக்கொண்டிருக்கும். அதுபோல் சந்திரன் பூமியில் வசிக்கும் ஜீவ ராசிகளையே சுற்றி சுற்றி வருவதால், இந்த சந்திரனை தாய்க்கு ஒப்பிட்டு மாத்ருக்காரகன் என அழைக்கப்படுகிறது.
இந்த சந்திரன் அமாவாசை நாட்களில் வானத்தில் தெரிவதில்லை. அமாவாசைக்கு அடுத்த நாள் வானதில் ஒரு அரை வட்டக்கோடுபோல் தோன்றி அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக வளர்ந்து பௌர்ணமி நாளில் முழுவட்டமாக காட்சி தருகிறது, பொர்ணமிக்கு அடுத்த நாள் முதல் படிப்படியாக தேய்ந்து மீண்டும் அமாவாசை நாளில் வானத்தில் தென்படாமல் மறைந்துவிடுகிறது. இவ்வாறு சந்திரன் தோன்றி வளர்ந்து, பின் தேய்ந்து மறைந்து போகும் தன்மையானது. மனித உடல் தோன்றி வளர்ந்து ,பின் தேய்ந்து மறைந்து போகும் நிலையுடன் ஒப்பிடப்பட்டு , சந்திரன் உடல் காரகன் என அழைக்கப்படுகிறது.
கிரகங்களில் மிகவும் வேகமாக சுற்றக்கூடியது சந்திரனாகும். இது போல் மனித மனதும் வேகமாக மாறக்கூடியதாகும். எனவே மனோ வேகம் , சந்திரனின் வேகத்திடன் ஒப்பிடப்பட்டு, சந்திரன் மனோக்காரகன் என அழைக்கப்படுகிறது.
சூரியன் மட்டுமே சுய ஒளியில் பிரகாசிக்கும் கிரகமாகும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியையே பிரதிபலிக்கின்றன. சூரிய ஒளியை பிரதிபலிக்கும் கிரகமான சந்திரன் மட்டும் ஒளியை மிகவும் அதிகமாக பிரதிபலிக்கிறது. பொர்ணமி நாட்களில் இரவு விளக்கு போன்று காட்சியளிக்கிறது. சந்திரனின் வெளிச்சத்தில் நமக்கு கண் பார்வை கிடைக்கிறது. இதனால் சூரியனைப்போல் சந்திரனும் அனைத்து உயிகளும் எளிதில் காணக்கூடிய ஒரு கிரகமாக உள்ளது. இதன் அடிப்படையில் சந்திரனை பிறர் தயவால் கிடைக்கும் புகழுக்கு காரகனாக நிர்ணயித்திருக்கிறார்கள். மேலும் இடது கண்ணுக்கு அதிபதியாகவும் நிர்ணயித்திருக்கிறார்கள்.
பூமியானது இரு பங்கு நீரும் ,ஒரு பங்கு நிலமும் கொண்டது போல் மனித உடலும் இரு பங்கு நீரும்,ஒரு பங்கு நிலத்தையும் கொண்டுள்ளது. அமாவாசை நாட்களில் கடல் வற்றி உள்வாங்குகிறது. பௌர்ணமி நாட்களில் கடலில் நீர் அதிகமாகி பொங்கி எழுகிறது. இதன் மூலம் நீர் நிலைகள் சந்திரனின் கட்டுப்பாட்டில் உள்ளதை புரிந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் நீர் நிலைகளை குறிக்கும் கிரகமாக சந்திரனை நிர்ணயித்திருக்கிறார்கள். மேலும் அமாவாசை நாட்களில் கடல் வற்றுவதுபோல் , அந்த நாட்களில் மனித உடலிலும் ரத்தத்தின் அளவு குறைகிறது . பௌர்ணமி நாட்களில் கடல் கொந்தளிப்பதுபோல் மனித உடலிலும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணத்தினால் ரத்தம் மற்றும் உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும் சந்திரனின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கருதப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கு தேவையான உணவுப்பொருள் மற்றும் திரவப்பொருட்கள் அனைத்தும் சந்திரனுக்கு உரியதாக கருதப்படுகிறது.
ஒரு தாய்தான் தன் குழந்தைக்கு பாலூட்டி, சோறூற்றி போசாக்கு அளிக்கிறாள். எனவே தாய்க்கு காரகனான சந்திரனே உணவுப்பொருளுக்கும், திரவப்பொருளுக்கும் காரகனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளான்.
கடலை சந்திரன் தன் கட்டுப்பாடில் வைத்திருப்பதால் கடலில் கிடைக்கும் வெண் முத்து,வெண் பவழம், வெண் சங்கு போன்றவை சந்திரனுக்கு உரியதாக கூறப்படுகிறது. சந்திரனின் நிறம் வெண்மை என்பது குறிப்பிடத்தக்கது,
நீரில் வளரும் வெள்ளை அல்லி சந்திரனுக்குரிய மலராக கூறப்படுகிறது. வயலில் நீரில் நின்று வளரும் நெல் தானியம்(அரிசி) வெண்மை நிறமாக உள்ளதால், அது சந்திரனுக்கு உரிய தானியமாகக்கூறப்படுகிறது.
தாய்மையின் அடையாளமான பால் சுரக்கும் மார்பகம் சந்திரனுக்கு உரிய உடல் உருப்பாகும். பால் வெண்மை நிரத்தில் சுரக்கும் திரவம் என்பது குறைப்பிடத்தக்கது, இதன் அடிப்படையில் பால் தரும் பசு, பால் பொருட்கள் அனைத்தும் சந்திரனுக்குரியதாக கருதப்படுகிறது.
சந்திரன் வளர்ந்து தேயும் தன்மையைப்போல் உள்ள விரைவில் அழுகிப்போகும் காய்கறிகள் ,பழங்கள் முதலானவை சந்திரனின் காரகப்பொருட்களாகும்.
சந்திரனின் குளிச்சியான ஒளிக்கு மயங்காத மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே
உடல் வசீகரம் மற்றும் முக வசீகரத்திற்கு காரகனாக சந்திரன் நிர்ணயிக்கப்பட்டுள்ளான்.

மிக்க நன்றி
ReplyDelete