மூலம்ஆண்மூலம் அரசாளும் பெண்மூலம்நிர்மூலம் என நம் ஜோதிட சாஸ்திரத்தில்
வழங்கப்பட்டுள்ளது இந்தக் கருத்தை நம்மில் அநேகர் பாலின பாகுபாட்டில்
கூறப்பட்டுள்ளதாக எண்ணிக்கொண்டு
மூலநட்சத்திரத்தில் ஆண் பிறந்தால் அரசாளும் என்றும் பெண் பிறந்தால்
நிர்மூலம் ஆகும் என்றும் பலன் கூறுகின்றனர் ஆனால் அக்கருத்து பாலினம்
குறித்து கூறப்பட்டுள்ளதாக எண்ணுவது தவறு ஏனெனில் ஆண் பெண் பாகுபாட்டில்
யோகங்கள் கிடையாது பின் எவ்வாறு இக்கருத்து கூறப்பட்டு உள்ளதெனில் எல்லா
நட்சத்திரத்திலும் ஆண்பாதம் பெண்பாதம் என வரும் அவ்வாறு மூலநட்சத்திரத்தில்
ஆண்பாதங்களை ஆண்மூலம் எனவும் பெண்பாதங்களை பெண்மூலம் எனவும் கூறியுள்ளனர்
சரி இதில் இந்த யோகம் எவ்வாறு நடக்கும் என்றால் மூலநட்சத்திரத்தில்
பிறந்தவர் ராசி தனுசு ஆகும் இந்த ராசிக்கு 8 க்கு உடையவர் ஆகிறார் சந்திரன்
அவர் ஆண்பாதமான மூலம் 1ல் 3ல் இருக்கும்போது அம்சத்தில் அவர் ராசியில்
தான் நின்ற தனுசுக்கு 5ல் மேசத்திலும் 7ல் மிதுனத்திலும் என நல்ல நிலையில்
இருப்பார் அதே சந்திரன் தனுசில் பெண்பாதமான மூலம் 2ல் 4ல் இருக்கும்போது
ராசியில் அவர் நின்ற தனுசுக்கு 6ல் ரிசபத்திலும் 8ல் கடகத்திலும் என
சாதகமற்ற நிலையில் இருப்பது மட்டுமின்றி உச்சமாகவும் ஆட்சியாகவும்
இருப்பார் இதே போல்தான் மகத்தில் பிறந்த மங்கை ஜகத்தை ஆள்வார் இது கூட
ஆதியில் மகத்தில் மங்கைஜகத்தை ஆள்வார் என்றே கூறியிருப்பர் இதுவும் ஆண்
பெண் என பாலின பாகுபாட்டில் கூறப்பட்ட கருத்தல்ல இதில் யோகம் வழங்கும்
நிலையை எவ்வாறு கணித்து உள்ளனர் என்றால் மகத்தில் பிறந்தவர் ராசி சிம்மம்
ஆகும் இந்த ராசிக்கு 12 க்கு உடையவர் ஆகிறார் சந்திரன் அவர் ஆண்பாதமான மகம்
1ல் 3ல் இருக்கும்போது அம்சத்தில் அவர் ராசியில் தான் நின்ற சிம்மத்துக்கு
9ல் மேசத்திலும் 11ல் மிதுனத்திலும் இருப்பார் அதே சந்திரன் பெண்பாதமான
2ல் 4ல் இருக்கும்போது ராசியில் அவர் நின்ற சிம்மத்துக்கு 10ல்
ரிசபத்திலும் 12ல் கடகத்திலும் இருப்பார் இதில் இரண்டுமே ஒரே அளவில் பலம்
பெற்றபடியால் பெண்பாதத்தில் நிற்கும்போது அம்சத்தில் உச்சமாகவும்
ஆட்சியாகவும் வருவதை யோக நிலையாக கொண்டனர் இந்த இரண்டு
நட்சத்திரங்களுக்கும் ஏன் சந்திரன் மட்டுமே பார்க்கப்பட்டு உள்ளதெனில் கேது
நட்சத்திரத்தில் பிறந்தால் ஜாதகரின் 26 வயதிலிருந்து 33 வயதுக்குள்
சந்திரதிசை துவங்கி 10 ஆண்டுகள் நடைபெறும் இந்த வயதுதான் ஒரு மனிதனின்
பிற்கால வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது அதுபோக மற்ற கிரகங்களை அம்சத்தில்
இந்த நிலையில் கணித்திட இயலாது எனவே சந்திரனை வைத்தே குறித்துள்ளனர் கேது
நட்சத்திரமாகிய அஸ்வினிக்கு ஒன்றும் கூறப்படவில்லை ஏனெனில் அஸ்வினி
நட்சத்திரம் இடம்பெறும் மேஷராசிக்கு சந்திரன் 4 க்கு உடையவர் ஆகிறார்
அரசாளும் யோகம்ஜகத்தைஆளும் யோகம் போன்ற யோகங்கள் 8 ஆம் இடம் 12 ஆம்
இடங்களில் உள்ளன என்பதை இதன் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்
நன்றி
சற்குருவே சரணம்
சற்குருவே சரணம்
No comments:
Post a Comment