சம்பத் [எ] சண்முகராஜ்

Saturday, 20 July 2019

மூலிகைகளின் சாபம்

மூலிகைகளின் சாபம் தீர்க்கும் மந்திரம் என்ன தெரியுமா...?
பல மூலிகைகள் அஷ்ட கர்மம் எனப்படும் மாந்திரீக வேலைகளுக்கும் தவறாகப் பயன்படுவதால் சித்தர்கள், ரிஷிமார்கள், தெய்வங்களின் சாபம் மூலிகைகளுக்கு உண்டு. எனவே எந்த மூலிகையை பறிக்கும் போதும் அவர்களின் சாபம் தீர்க்கும் மந்திரம் ஜெபித்த பின்னரே பறிக்கவேண்டும்.
பொதுவான மந்திரம்:
ஆனைமுகனை அனுதினமும் மறவேன் அகத்தியர் சாபம் நசிநசி
பதினெண்சித்தர் சாபம் நசிநசி தேவர்கள் சாபம் நசிநசி
மூவர்கள் சாபம் நசிநசி மூலிகை சாபம் முழுதும் நசிநசி.
குறிப்பு: மேற்கூறிய மூலிகை சாபநிவர்த்தி மந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை பிரம்ம முகூர்த்த வேலையில் ஆதிமூலக்கொடிக்கு (கொடிஅருகு) கன்னி நுால்காப்பு கட்டி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து ஒரு இலட்சம் உரு ஏற்றவும். பிறகு நமக்கு தேவையான பட்சத்தில் மூன்று முறை கூறி சாபநிவர்த்தி செய்து நமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தலாம்.
மூலிகை பிராண பிரதிஷ்டை
ஓம்மூலி மஹாமூலி ஜீவமூலி
உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா.
குறிப்பு : இந்த மந்திரத்தை மூன்றுதரம் சொல்லி கொஞ்சம் விபூதியும் அருகம்புல்லும் மேலே போட்டு வணங்கி ஆணிவேர் அருபடாமல் விரல்நெகங்கள் படாமல் எடுத்து பயன்படுத்திக் கொள்ள மூலிகை உயிருடனிருந்து பலன் கொடுக்கும்.
சர்வ வசிய மூலிகை:
ஆதிவாரத்தில் ஆலம் புல்லுருவிக்கு சாப நிவர்த்தி செய்து பிராண பிரதிஷ்டை செய்து துாப தீபம் காட்டி மஞ்சள் நுால் காப்பு கட்டி மறு ஆதிவாரம் சூரிய உதயத்தில் பொங்கலிட்டு பால் பழம் நைவேத்தியம் வைத்து துாப தீபங் காட்டி “அம் அம் வசீகரம் ஜெயமாதா” என்று இலட்சம் உரு கொடுத்து எடுத்துக்கொள்ளவும். இதனால் சர்வ வசியமும் சித்தியாகும்.

அதிகாலையில் மூலிகை செடியை பிடுங்கும்போது, உடல் நலம் சீராக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, செடியை அடிவேர் அறுந்துவிடாமல் கவனமாக எடுத்து பயன்படுத்தினால் பயன் தரும்
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 21:12 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, 19 July 2019

பணம் சம்பாதிக்க

பணம் சம்பாதிக்க

 10 ஆலோசனைகள்...பணம் பற்றி பல்வேறு அறிஞர்கள் சொன்ன கருத்துக்கள் ....

1.  பணம் தன்னை மதிப்போரிடம் தான் அதிகமாக தங்கும் .நம் முன்னோர்கள் பணத்தை இலட்சுமி என வணங்கினார்கள் ..
பணத்தை கொடுக்கும்போது மகிழ்ச்சி மனதுடன் கொடுக்க வேண்டும்
..முடிந்தால் வாழ்த்தி கொடுக்கலாம் ..
.
2..பணத்தின் மேல் நல்லெண்ண, அன்பு உணர்வு வேண்டும் ...கொடுங்கள் கொடுக்க படுவீர்கள்............ இது உலகவிதி.....

3..அறிவை,உழைப்பை,சேவையை,பொருளை கொடுத்தால்தான் பிரபஞ்ச சக்தி நமக்கு திரும்ப கொடுக்கும்..........

4...நீங்கள் செய்யும் வேலையில்.,தொழிலில் தொடர்ந்து முழுமையாக ஈடுபடவேண்டும்.............
.
5..பணத்திற்கு வேலை மன நிலை உயர்வை தராது... ..விரும்பி செய்யும் பணியில் முன்னேற்றம் நிச்சயம்...

6..வரவு செலவு கணக்கு வேண்டும் ...

7..எதிர்மறை சிந்தனை பணத்திற்கு எதிரான சக்தியாகும் முதலீடு செய்யும் முன் தகவல்களை சேகரிப்பது அவசியம் ..

8 ..கடன் வாங்கினால் திருப்பி தர உறுதி எடுங்கள் ..கடன் மேல் கடன் வாங்க வேண்டாம் ...

9...செலவை குறையுங்கள்..திருப்பி செலுத்த இன்னும் அதிகமாக வேலை செய்யுங்கள் ..

10..முடிந்தவரை கடன் இல்லாமல் இருங்கள் ..பல வழிகளில் பணம் பெருக்க முதலீடு ஆலோசகர்களை கேளுங்கள் ...
பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை...
பணத்தைப் பற்றிய
 
கல்வி நமக்கு இல்லாததாலும்,
பணம் என்பது எட்டாக்கனியே...
வேலை செய்வதற்கு

சொல்லிக்கொடுதவர்கள்
பணம் சம்பாதிக்க சொல்லிக்கொடுக்கவில்லை
நம்மில் பலர்
 
வறுமையில் இருப்பதற்குக் காரணம்
பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும்...
பணக்காரர்கள்
 
தங்கள் வாரிசுகளுக்கு கற்றுத்
தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை
ஒருசிலர்
 
உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர்.
அந்த இரகசியங்களை அறிய விரும்பினால்
தொல்லைகள் நீங்கி

தனம் விருத்தி அடையும்
இதோ அந்த பைரவ மந்திரம் சொல்லவும்..
மந்திரம்:

ஒம் ஐம் க்ரீம் சிரிம்
ஆப துத் தார ணாய
க்ராம் க்ரீம் க்ரும் அசா மல பத் தாய
லோகே வராய

வர்ணா கர்சண பைர வாய மம்
தாரி த்ரிய வித் வேச ணாய
மகா பைர வாய நம சிரிம் க்ரீம் ஐம்
.
வாழ்வில் செல்வ செல்வாக்கு
பெற உதவும் பைரவ மந்திரம் தினம் தோறும்
குறைந்த பட்சம் 108 முறை கூறலாம்.
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 21:40 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, 16 July 2019

ராகுகால பூஜை முறை



No photo description available.
·
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜை முறை
உங்கள் வாழ்வின் சங்கடங்களைப் போக்கும் அற்புதமான விரத முறை தான் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கடைப்பிடிக்கப் படுகிற ராகு கால பூஜை. இந்த விரத பூஜையை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தால் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் ராகு காலத்தில் செய்து வர வேண்டும். வெள்ளிக்கிழமை ஆரம்பித்தால் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் ராகு காலத்தில் செய்து வர வேண்டும். காலையிலோ, மதியத்திலோ உங்களது வேலைகளுக்கு ஏற்பதிட்டமிட்டு செவ்வாய்க்கிழமையன்றோ, வெள்ளிக்கிழமையன்றோ விரதத்தை ஆரம்பியுங்கள்.முதல்வாரம் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டு பாகங்களாக நறுக்கி, அதன் சாற்றை வெளியேற்றி இரண்டு மூடியிலும் எண்ணெய் ஊற்றி துர்க்கை அம்மன் சந்நிதியில் விளக்கேற்ற வேண்டும். இரண்டாவது வாரம் இரண்டு எலுமிச்சை பழத்தை நறுக்கி நான்கு தீபங்கள் ஏற்ற வேண்டும். மூன்றாவது வாரம் ஆறு என்று ஒவ்வொரு வாரமும் கூட்டிக் கொண்டே 9-வது வாரம் 18 விளக்குகள் ஏற்றி பூஜையை முடிக்க வேண்டும். கடைசி வாரம் பூஜை செய்யும் நாளில் எலுமிச்சை மாலை துர்க்கை அம்மனுக்கு சூட்டி, எலுமிச்சை சாதம், சுண்டல், உளுந்த வடை, தேன், பானகரம், வெற்றிலை பாக்கு, தேங்காய் பழம் படைத்து அர்ச்சனை செய்து நீல வண்ண மலர்களால் பூஜிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வந்தால், ராகு தோஷம் நிவர்த்தியாகும். வாழ்வில் சகல வளங்களும் கிடைக்கும்.
ராகு தோஷத்திற்கு இன்னொரு சிறந்த பரிகாரமாக, தேங்காயை துருவி அதனுடன் நாட்டுச் சர்க்கரை, காய்ந்த திராட்சை, முந்திரி, பேரிச்சம் பழம், பாதாம் பருப்பு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் இவற்றை கலந்து தேனை அதன்மீது ஊற்றி நிவேத்யத்திற்கு இதை வைக்க வேண்டும். உளுந்தவடை, தயிர்சாதம், புளியோதரை, உளுத்தம்பருப்பு சாதம் இவற்றை ஏழைகளுக்கு அன்னதானமாக வழங்கலாம்.
பாம்பு புற்றிற்கு பால் ஊற்றி ராகு காலத்தில் பூஜை செய்து வரலாம். கருமாரி அம்மனை வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம்.
சிவன் கோவிலுக்குச் சென்று சிவன், பார்வதியை வழிபட்டு அங்குள்ள நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு கருப்பு வண்ணம் கலந்த பட்டாடை சாத்தி மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்து உளுந்து தானம் செய்து வரவும். நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும். நாகதோஷம் உள்ளவர்கள் புதியதாக நாகர் செய்து சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்யலாம்.ராகு ஜாதகத்தில் எந்த கிரகத்தினுடைய வீட்டில் உள்ளதோ அந்த கிரகத்திற்குரிய கிழமையை பார்த்து அந்த நாளில் இரவில் படுத்து உறங்கும் போது தலையணைக்கடியில் கருப்பு பேப்பரில் சிறிதளவு உளுந்து மடித்து வைத்து வரவும். காலையில் அதை எடுத்து சாமி படத்தின் முன் வைத்து விடவும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரவேண்டும். பத்தாவது வாரம் அதைப் பிரித்து புதிய கருப்பு துணியில் கட்டி கிழக்கு முகமாக அமர்ந்து தலையை மூன்று முறைச் சுற்றி கடலிலோ, ஆற்றிலோ எறிந்து விட வேண்டும். கிணற்றில் போடக் கூடாது. அதன்பிறகு சிவன் கோவில் அல்லது நாகத்தை தலைகவசமாக அணிந்த அம்மன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர வேண்டும். செவ்வாய் கிழமைகளில், சரபேஸ்வரரை ராகு காலத்தில் விரத வழிபட்டு அர்ச்சனை செய்து வரலாம்.

Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 03:26 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Monday, 15 July 2019

திருமணவாழ்வு
சந்திரனுக்கு அல்லது லக்கித்திற்கு இரண்டில், ஏழில் உள்ளவர்கள்,அதிபதிகளின் நட்சத்திரத்தில் திருமணம் நடக்கும், அந்த பாவத்தில் உள்ள நட்சத்திரங்களில் திருமணம் நடைபெறும்.
ஒரு ஜாதகர் /ஜாதகிக்கு திருமண காலங்களை அறிய இரண்டில்,ஏழில்,பன்னிரன்டில் உள்ள கிரகள் அல்லது பாவாதிபதிகளின் தசா புத்தி அந்ரங்களில் இணைந்துள்ள காலங்களில் திருமணம் நடக்கும்.
பெண்களின் ஜாதகப்படி குருவானவர் ஜென்ம ராசிக்கு இரண்டு, எட்டு, ஒன்பது, பன்னிரண்டு இவைகளைப்பார்க்கும் போது திருமணம் செய்வது வாழ்வில் நலம் தரும்.
ஆண்களின் ஜாதகத்தில் குருவானவர் ஜென்ம ராசிக்கு மூன்று, ஏழு, பன்னிரண்டு இடங்களை பார்க்கும் போது திருமணம் செய்வது வாழ்வியல் நலம் தரும்.
மேற்படி அமைப்பில் குருவானவர் பார்க்கும் காலத்தில் திருமணம் செய்தால், அப்படி நடந்த திருமணம் நல்ல வாழ்கையையும். கருத்தொருமித்த இல்லறத்தையும்.அமைதியாக நடத்த வழி வகுக்கும்.
பெண் ஜாதகத்தில் 1-4-5-7-9-10-ல் சுபர்கள் இருந்தாலும், பார்வையிட்டாலும் ஜாதகி கற்புநெறி தவறாது நல்ல பிள்ளைகளை பெற்று, பிறந்த குடும்பத்தின், புகுந்த குடும்பத்தின் கௌரவத்தை உயரத்துவாள்.
திருமண நாளில் மணமகன் அல்லது மணமகள் ஜாதகத்தில் கோச்சார கிரகங்கள்.

சூரியன் இருந்த ராசிககக்கு 6-ல் சூரியன்.
சந்திரன் இருந்த ராசிக்கு 7-ல் சந்திரன்
புதன் இருந்த ராசிக்கு 4-ல் புதனும்.
செவ்வாய் அல்லது சனி இருந்த ராசிக்கு 3-ல் செவ்வாய், சனி.
சுக்கிரன் இருந்த ராசிக்கு 8-ல் சுக்கிரன்.
இருக்கும் காலங்களில் திருமணம் நடந்தால் சிறப்பக வாழ்வார்கள்


Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 22:08 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Thursday, 11 July 2019

சரம் பார்த்தல் என்பது,

No photo description available.

சரம் பார்த்தல் என்பது, காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பார்க்கவேண்டும்.
1. திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு இடப்புறம் வரவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சந்திரக்கலையில் இயங்க வேண்டும்.
திங்கள் அன்று சூரியக்கலை ஓடினால் - தாயிடம் வெறுப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, ஜலதோசம், தலைவலி, கண், காது நோய்கள் உண்டாகும்.
புதன் அன்று சூரியக்கலை ஓடினால் - மாமனாரிடம் மதிப்பு போகும், தாய்மாமனிடம் உறவு கெடும், உடல் வலி, குடைச்சல், மூட்டு வலி வரும்.
வெள்ளி அன்று சூரியக்கலை ஓடினால் - பார்வை பழுதாகும், தாம்பத்ய உறவு கெடும்.
2. சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு வலப்புறம் ஓடவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சூரியக் கலையில் இயங்க வேண்டும்.
சனிக்கிழமை சந்திரக்கலை ஓடினால், கடன் தொல்லை, சண்டை சச்சரவு, சரும நோய், ஜூரம் வரும்.
ஞாயிறு அன்று சந்திரக்கலை ஓடினால், தந்தையிடம் அன்பு குறையும், தொழிலில் அமைதி இருக்காது, தலைவலி, இருமல், சளி உண்டாகும்.
செவ்வாய் அன்று சந்திரக்கலை ஓடினால், உடன்பிறந்தோரிடம் பிணக்கு, வெப்பக்காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்சுவலி ஏற்படும்.
3. வளர்பிறையில் வருகின்ற வியாழன் அன்று இடப்புறம் (சந்திரக்கலை) சுவாசம் நடைபெறவேண்டும். தேய்பிறையில் வருகின்ற வியாழன் அன்று வலப்புறம் (சூரியகலை) சுவாசம் நடைபெறவேண்டும்.
வியாழக்கிழமைகளில் மட்டும் பிறைக்குத் தக்க சரம் ஓடும். மேற்கண்டவாறு ஓடாமல் மாறி இயங்கினால், பெற்ற மக்களால் துயரம், அடிவயிற்று வலி, மலடு ஆதல் போன்றவை நிகழும்.
மேற்கண்டவாறு அந்தந்த நாட்களில் அந்தந்த சரம் ஓடவில்லை எனில் தக்க உபாயத்தினாலும் ஆசாரியரிடமும் பயின்று சர ஓட்டத்தை சரி செய்ய வேண்டும்.
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 21:06 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பஞ்ச பட்சி சாஸ்திரம் .

Image may contain: bird
‎
பஞ்ச பட்சி சாஸ்திரம் .
பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள்.
பட்சிகள் மொத்தம் ஐந்து. அவை முறையே
வல்லூறு
ஆந்தை
காகம்
கோழி
மயில்
முதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம்.
ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:-
வல்லூறு
அஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்
ஆந்தை
திருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்
காகம்
உத்தரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்
கோழி
அனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்ராடம்
மயில்
திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி
இதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.
வளர்பிறை
அ, ஆ - வல்லூறு (ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.)
இ, ஈ - ஆந்தை
உ, ஊ - காகம்
எ, ஏ - கோழி
ஒ, ஓ - மயில்
தேய்பிறை
அ, ஆ - கோழி
இ, ஈ - வல்லூறு
உ, ஊ - ஆந்தை
எ, ஏ - மயில்
ஒ, ஓ - காகம்
ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்
அரசு - 100% பலம்
ஊண் - 80% “
நடை - 50% “
துயில் - 25% “
சாவு - 0% “
ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.
இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை, புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், மிகவும் Riskஆன ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.
வளர்பிறை - படுபட்சி நாட்கள்
வல்லூறு - வியாழன், சனி
ஆந்தை - ஞாயிறு, வெள்ளி
காகம் - திங்கள்
கோழி - செவ்வாய்
மயில் - புதன்
தேய்பிறை படுபட்சி நாட்கள்
வல்லூறு -செவ்வாய்
ஆந்தை -திங்கள்
காகம் -ஞாயிறு
கோழி -வியாழன், சனி
மயில் -புதன், வெள்ளி
அடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும். அவை கீழ்கண்டவாறு:-
வளர்பிறை
பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்
ஆந்தை - புதன், திங்கள்
காகம் - வியாழன்
கோழி - வெள்ளி
மயில் - சனி
இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு - வெள்ளி
ஆந்தை -ஞாயிறு
காகம் -ஞாயிறு, செவ்வாய்
கோழி - திங்கள், புதன்
மயில் -வியாழன்
தேய்பிறை
பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு -வெள்ளி
ஆந்தை - வியாழன்
காகம் -புதன்
கோழி - ஞாயிறு, செவ்வாய்
மயில் - திங், சனி
இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு -ஞாயிறு, செவ்வாய்
ஆந்தை - புதன்
காகம் - வியாழன்
கோழி - திங்கள், சனி
மயில் -வெள்ளி
இந்த படு பட்சி நாட்களில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல்லை. அதே நேரத்தில் ஊண் பட்சி நாட்களில் சாவு என்ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.
அடுத்து பட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:
1) காகம்
2) ஆந்தை
3) வல்லூறு
4) கோழி
5) மயில்
அதாவது காகம் எல்லாவற்றிலும் பலமிக்கது என்றும் மயில் மிகவும் பலவீனமானது என்று இதன் மூலம் முடிவுக்கு வரலாம்.
இது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.
அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள், அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.
தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள், அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.
படு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது என்று பார்த்தோம். இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள். ஓம் நமசிவய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பது என் கருத்து.
நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.
பறவைகள் ஐந்து. அதன் தொழில்கள் ஐந்து என்று ஏற்கனவே பார்த்தோம். எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம். ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.
உண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும்.
அதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
வல்லூறு - வளர்பிறை
நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், கோழி
வல்லூறு - தேய் பிறை
நட்பு : மயில், காகம்
பகை : ஆந்தை, கோழி
ஆந்தை - வளர்பிறை
நட்பு : வல்லூறு, காகம்
பகை : மயில், கோழி
ஆந்தை - தேய்பிறை
நட்பு : கோழி, காகம்
பகை : வல்லூறு, மயில்
காகம் - வளர்பிறை
நட்பு : ஆந்தை,கோழி
பகை : வல்லூறு, மயில்
காகம் - தேய்பிறை
நட்பு : ஆந்தை, வல்லூறு
பகை : மயில், கோழி
கோழி - வளர்பிறை
நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு
கோழி - தேய்பிறை
நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு
மயில் - வளர்பிறை
நட்பு : வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்
மயில் - தேய்பிறை
நட்பு : வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்
ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும், படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும் இரண்டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய்து உள்ளேன்.
நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.
“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.
உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.
உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.
பஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம்தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.
தமிழ் எழுத்துக்களை சித்திர எழுத்துக்கள் என தமிழறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் வடிவமுடைய “அ,இ,உ,எ,ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்கள் என்ன வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த பறவைகள் பஞ்ச பட்சிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அ - வல்லூறு
இ - ஆந்தை
உ - காகம்
எ - கோழி
ஒ - மயில்.
மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது,அந்த பஞ்ச பூதங்களின் செயல் பாட்டையே,பஞ்ச பட்சி சாஸ்திரம் விளக்குகிறது.
நிலம் - வல்லூறு
நீர் - ஆந்தை
நெருப்பு - காகம்
காற்று - கோழி
ஆகாயம் - மயில்.
பஞ்ச பூதங்களைக்கட்டுப்படுத்தும் ஆற்றல் பஞ்சாக்ஷரம் என்னும் சிவ மந்திரத்திரத்திற்கு உண்டு. எனவே பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவனை யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை இந்த சாஸ்திரம் ரகசியமாக வெளிப்படுத்துகிறது.
ந - வல்லூறு
ம - ஆந்தை
சி - காகம்
வ - கோழி
ய - மயில்.
பஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே,இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும்,முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும்,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.
1) உடலிலிருந்து நோய் நீக்குதல்
2) பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்
3) மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்
4) பிறர் மனதை கட்டுப்படுத்துதல்
5) எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்
6) பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்
7) போட்டிகளில் வெற்றியடைதல்
8) எதிரிகளை வெல்லுதல்
9) தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்
10) ஆருட பலன் கூறுதல்
11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்
12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்
13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 08:00 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, 7 July 2019

ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்குமா?

ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்குமா?

எதுகை, மோனையுடன் நம்மவர்கள் நிறைய சொற்றொடர்களைப் புதிது, புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்கும், ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தால் நாய் படாத பாடு பட வேண்டும்,

சித்திரையில் பொறந்தா பெத்தவனுக்கு ஆகாது, ஆனியில பொறந்தா கூனிப் போகும், ஐப்பசியில பொறந்தா பசியில வாடும், மாசியில வயசுக்கு வந்தா வேசியாப் போவா, என முட்டாள்தனமான, மூட நம்பிக்கையை வளர்க்கின்ற பல சொற்றொடர்கள் இங்கு உலா வருகின்றன. இந்த மாதிரியான சொல் வழக்குகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. இவை முற்றிலும் பொய்யானவை.

ஒரு சில பித்தலாட்டக்காரர்கள் பரிகாரம் செய்து பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. இது போன்ற ஏடாகூடமான கருத்துகளில் கவனத்தைச் செலுத்தாதீர்கள். எந்த மாதத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும் அவர்களின் ஜாதகத்தில் அமைந்துள்ள கிரஹ நிலையின்படியே வாழ்க்கை அமையும் என்பதுதான் உண்மை.

Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 07:52 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, 6 July 2019

"அஷ்டமி ""

"அஷ்டமி ""
^^^^^^^^^^^^^^
அஷ்டமி திதியானது வழிபாட்டிற்கும் ,
மௌன விரதத்திற்கும்
மிகவும் உகந்ததாகும் ,

கிருஷ்ணபட்ச அஷ்டமியில்
விரதம் இருந்து
வழிபாடு செய்தால்
குபேர சம்பத்தோடும் ,
புத்திர பாக்கியத்தோடும் ,
கல்வி வளத்தோடும் வாழலாம் .

சித்திரை மாதம்  சனாதன அஷ்டமி ,
வைகாசி மாதம்  சதாசிவாஷ்டமி ,
ஆனி மாதம்         பகவதாஷ்டமி ,
ஆடி மாதம்          நீலகண்டாஷ்டமி ,
ஆவணி மாதம்  சிவா அஷ்டமி ,
புரட்டாசி மாதம் சம்பு அஷ்டமி ,
ஐப்பசி மாதம்      ஈஸ்வராஷ்டமி ,
கார்த்திகை மாதம் ருத்ராஷ்டமி ,
மார்கழி மாதம்     சங்கராஷ்டமி ,
தை மாதம்           தேவ தேவாஷ்டமி ,
மாசி மாதம்        மகேஸ்வராஷ்டமி ,
பங்குனி மாதம் திரியம்பகாஷ்டமி .

No photo description available.
3
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 08:52 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Monday, 1 July 2019

மூலம்

மூலம்ஆண்மூலம் அரசாளும் பெண்மூலம்நிர்மூலம் என நம் ஜோதிட சாஸ்திரத்தில் வழங்கப்பட்டுள்ளது இந்தக் கருத்தை நம்மில் அநேகர் பாலின பாகுபாட்டில் கூறப்பட்டுள்ளதாக எண்ணிக்கொண்டு மூலநட்சத்திரத்தில் ஆண் பிறந்தால் அரசாளும் என்றும் பெண் பிறந்தால் நிர்மூலம் ஆகும் என்றும் பலன் கூறுகின்றனர் ஆனால் அக்கருத்து பாலினம் குறித்து கூறப்பட்டுள்ளதாக எண்ணுவது தவறு ஏனெனில் ஆண் பெண் பாகுபாட்டில் யோகங்கள் கிடையாது பின் எவ்வாறு இக்கருத்து கூறப்பட்டு உள்ளதெனில் எல்லா நட்சத்திரத்திலும் ஆண்பாதம் பெண்பாதம் என வரும் அவ்வாறு மூலநட்சத்திரத்தில் ஆண்பாதங்களை ஆண்மூலம் எனவும் பெண்பாதங்களை பெண்மூலம் எனவும் கூறியுள்ளனர் சரி இதில் இந்த யோகம் எவ்வாறு நடக்கும் என்றால் மூலநட்சத்திரத்தில் பிறந்தவர் ராசி தனுசு ஆகும் இந்த ராசிக்கு 8 க்கு உடையவர் ஆகிறார் சந்திரன் அவர் ஆண்பாதமான மூலம் 1ல் 3ல் இருக்கும்போது அம்சத்தில் அவர் ராசியில் தான் நின்ற தனுசுக்கு 5ல் மேசத்திலும் 7ல் மிதுனத்திலும் என நல்ல நிலையில் இருப்பார் அதே சந்திரன் தனுசில் பெண்பாதமான மூலம் 2ல் 4ல் இருக்கும்போது ராசியில் அவர் நின்ற தனுசுக்கு 6ல் ரிசபத்திலும் 8ல் கடகத்திலும் என சாதகமற்ற நிலையில் இருப்பது மட்டுமின்றி உச்சமாகவும் ஆட்சியாகவும் இருப்பார் இதே போல்தான் மகத்தில் பிறந்த மங்கை ஜகத்தை ஆள்வார் இது கூட ஆதியில் மகத்தில் மங்கைஜகத்தை ஆள்வார் என்றே கூறியிருப்பர் இதுவும் ஆண் பெண் என பாலின பாகுபாட்டில் கூறப்பட்ட கருத்தல்ல இதில் யோகம் வழங்கும் நிலையை எவ்வாறு கணித்து உள்ளனர் என்றால் மகத்தில் பிறந்தவர் ராசி சிம்மம் ஆகும் இந்த ராசிக்கு 12 க்கு உடையவர் ஆகிறார் சந்திரன் அவர் ஆண்பாதமான மகம் 1ல் 3ல் இருக்கும்போது அம்சத்தில் அவர் ராசியில் தான் நின்ற சிம்மத்துக்கு 9ல் மேசத்திலும் 11ல் மிதுனத்திலும் இருப்பார் அதே சந்திரன் பெண்பாதமான 2ல் 4ல் இருக்கும்போது ராசியில் அவர் நின்ற சிம்மத்துக்கு 10ல் ரிசபத்திலும் 12ல் கடகத்திலும் இருப்பார் இதில் இரண்டுமே ஒரே அளவில் பலம் பெற்றபடியால் பெண்பாதத்தில் நிற்கும்போது அம்சத்தில் உச்சமாகவும் ஆட்சியாகவும் வருவதை யோக நிலையாக கொண்டனர் இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஏன் சந்திரன் மட்டுமே பார்க்கப்பட்டு உள்ளதெனில் கேது நட்சத்திரத்தில் பிறந்தால் ஜாதகரின் 26 வயதிலிருந்து 33 வயதுக்குள் சந்திரதிசை துவங்கி 10 ஆண்டுகள் நடைபெறும் இந்த வயதுதான் ஒரு மனிதனின் பிற்கால வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது அதுபோக மற்ற கிரகங்களை அம்சத்தில் இந்த நிலையில் கணித்திட இயலாது எனவே சந்திரனை வைத்தே குறித்துள்ளனர் கேது நட்சத்திரமாகிய அஸ்வினிக்கு ஒன்றும் கூறப்படவில்லை ஏனெனில் அஸ்வினி நட்சத்திரம் இடம்பெறும் மேஷராசிக்கு சந்திரன் 4 க்கு உடையவர் ஆகிறார் அரசாளும் யோகம்ஜகத்தைஆளும் யோகம் போன்ற யோகங்கள் 8 ஆம் இடம் 12 ஆம் இடங்களில் உள்ளன என்பதை இதன் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்
நன்றி

சற்குருவே சரணம்
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 21:36 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Blog Archive

  • ►  2022 (15)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  June (1)
    • ►  May (6)
    • ►  April (2)
  • ►  2020 (5)
    • ►  January (5)
  • ▼  2019 (160)
    • ►  December (27)
    • ►  November (7)
    • ►  October (48)
    • ►  September (42)
    • ►  August (10)
    • ▼  July (9)
      • மூலிகைகளின் சாபம்
      • பணம் சம்பாதிக்க
      • ராகுகால பூஜை முறை
      • திருமணவாழ்வு சந்திரனுக்கு அல்லது லக்கித்திற்...
      • சரம் பார்த்தல் என்பது,
      • பஞ்ச பட்சி சாஸ்திரம் .
      • ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்க...
      • "அஷ்டமி ""
      • மூலம்
    • ►  May (2)
    • ►  March (1)
    • ►  February (8)
    • ►  January (6)
  • ►  2018 (9)
    • ►  December (1)
    • ►  November (4)
    • ►  October (4)
  • ►  2017 (40)
    • ►  December (1)
    • ►  June (7)
    • ►  May (13)
    • ►  April (18)
    • ►  February (1)

About Me

சம்பத் [எ] சண்முகராஜ்
View my complete profile
Picture Window theme. Powered by Blogger.