அசுவணி நட்சத்திர பலன்கள்
தன்னை தானே வழிநடத்திக் கொண்டு, மற்றவர்களுக்கும் வழிகாட்டும் தன்மை கொண்டவர்கள் அசுவனி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் முதல்
நட்சத்திரமாக வருவது அசுவனி நட்சத்திரமாகும். பெயரின் முதல்
எழுத்து சு, சே, சோ, லா போன்றவற்றில் தொடங்கினாலும், அவர்கள் அசுவனி
நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்கள்.
அசுவனி நட்சத்திரம், செவ்வாய்க்கு உரிய மேஷ
ராசியில் இடம் பெற்றுள்ளது. எனினும், ஞான காரகனான கேதுவுக்கு உரிய
நட்சத்திரம் என்பதால், இவர்களுக்கு இளம் பருவத்திலேயே, ஏதாவது சில
விஷயங்களில் ஞானம் மிகுந்திருக்கும்.
அதனால், தன்னை தானே நல்வழிப்படுத்திக்
கொண்டு, மற்றவர்களுக்கும் வழி காட்டகூடியவர்களாகவும், மற்றவர்களுக்கு
ஆறுதல் சொல்பவர்களாகவும் இருப்பார்கள்.
கடும் வேதனையில் இருப்பவர்களுக்கு, அசுவனி நட்சத்திரக்காரர்களை போல யாராலும் ஆறுதல் சொல்லி, நம்பிக்கை ஊட்ட முடியாது.
மருத்துவத்திற்கு உரிய அசுவனி தேவர்களை இந்த
நட்சத்திரம் குறிப்பதால், அசுவனி நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்கு, இயற்கையிலேயே மருத்துவ குணம் நிறைந்திருக்கும். குறைந்த
பட்சம் கை வைத்தியமாவது தெரிந்திருக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
அமைதியாகவும், அதே சமயத்தில் காரியவாதியாகவும் இருப்பார்கள். தம்மை
நேசிப்பவர்களிடம் அன்பாகவும், உண்மையாகவும் நடந்து கொள்வார்கள். எந்த
நிலையிலும் அமைதியை இழக்காமல் இருப்பது இவர்களது தனித்தன்மை.
எந்த சூழலிலும் மற்றவர்களுக்கு பணிந்து
போகாமல் துணிந்து செயல்படக்கூடியவர்கள். அதுபோல, ஏதாவது ஒரு காரியத்தை
எடுத்தாலும், அதை முடிக்காமல் விடமாட்டார்கள்.
பாரம்பரியமான, பழமையான நடைமுறைகளை
கைவிடாமல், போற்றி நடக்கும் குணம் மிகுந்தவர்களாக இருந்தாலும், அவற்றுள்
சிலவற்றை, காலத்திற்கு ஏற்ப நவீன முறையில் மாற்றி அமைக்க தயங்க
மாட்டார்கள்.
குறிப்பாக சொன்னால், பாரம்பரிய சிறப்பையும்
மறக்க மாட்டார்கள். நவீன முன்னேற்றத்தையும் தவிர்க்க மாட்டார்கள். இதுவே
அசுவினி நட்சத்திரத்தின் சிறப்பு பண்பாகும்.
எதையும் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல்
நிறைந்தவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் சாதாரண விஷயத்தை கூட பூதாகரமாக
எண்ணி தவிக்கும் மன நிலையும் இவர்களுக்கு உண்டு.
அதே போல், இருக்கும் வசதி வாய்ப்புகளை
அனுபவிக்க முடியாமல் தவிப்பதும் உண்டு. மேலும், ஒரே வேலையை திரும்பத்
திரும்ப செய்யும் குணம் இவர்களுக்கு உண்டு.
அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கும் இதே குணம் உண்டு.
அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த சிலருக்கு
தந்தையுடன் சுமூக உறவு இருப்பதில்லை. சொத்து உள்ளிட்ட சில விஷயங்களில்
தந்தைக்கும், இவர்களுக்கும் கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் ஏற்படுவது
சகஜம்.
அஸ்வனி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காம
உணர்வுகள் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனாலும், அது நீண்ட நேரம்
நீடிக்காத குறுகிய கால காமமாக இருக்கும்.
அசுவனி நட்சத்திரக்காரர்கள் இளம்
வயதில், ஜாலியாக வாழ்க்கையை கழிக்க விரும்பினாலும், மத்திம வயதில், ஒரு
ஞானிக்கு நிகராக, தங்களை மாற்றிக்கொண்டு, அதற்கேற்ப நடந்து கொள்ள
ஆரம்பித்து விடுவார்கள்.
இந்த நட்சத்திரத்தின் சின்னம் குதிரை
என்பதால், சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள். வேலை மற்றும் தொழிலில்
குதிரை வேகத்தில் செயல்படுவார்கள்.
குதிரை என்பது தற்காலத்தில் வாகனத்தை
குறிப்பதால், இவர்களுக்கு வாகனங்கள் மீது அதிக விருப்பம் இருக்கும்.
அதனால், குதிரை மற்றும் வாகன சம்பந்தப்பட்ட படை பிரிவுகளில், அசுவனி
நட்சத்திரத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
அசுவனியின் வடிவம் குதிரை மற்றும் குதிரை தலை என்பதால், தொழில் செய்பவர்கள், இதை லோகோவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு ஜாதகத்தில் அஸ்வினி நட்சத்தித்தில் நின்ற
கிரகம் இரட்டை குழந்தைகள், காணாமல் போனவர்கள், அரசியல் மற்றும் அரசாங்க
ஈடுபாடுகளை குறிக்கும்.
அஸ்வினி நட்சத்திரத்தின் கணம் தேவ கணமாகும்.
இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி தேவி, அசுவனி தேவர்கள். பரிகார
தெய்வம் விநாயகர். பழனியில் உள்ள போகரின் ஜீவ சமாதியையும் அசுவனி
நட்சத்திரக்காரர்கள் வணங்கலாம்.
அசுவனி நட்சத்திரத்திற்கு உரிய, சாமந்தி மலர்களை கொண்டு, பூஜைகள் மற்றும் வழிபாடு செய்வது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.
அசுவனி நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம்
எட்டி மரம் என்பதால், எட்டி மரக்கன்றுகள் நட்டு, அதற்கு நீரூற்றி வளர்ப்பது
அல்லது கோயில் உள்ளிட்ட மற்ற இடங்களில் உள்ள எட்டி மரத்திற்கு நீர்
ஊற்றுவது நல்லது.
இதற்கான மிருகம் ஆண் குதிரை. பறவை ராஜாளி. அதனால் இவற்றுக்கு இடையூறு அல்லது தொந்தரவு கொடுக்காமல் இருப்பது நல்லது.
அஸ்வினின் நட்சத்திரத்திற்கு உரிய
கோயிலான, திருத்துறைபூண்டி பிறவி மருந்தீஸ்வரர் உடனுறை பெரியநாயகி
ஆலயத்திற்கு சென்று, அசுவனி நட்சத்திர தினத்தன்று வழிபடுவது மிகவும்
உகந்ததாகும்.
அஸ்வனி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள்
அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, தங்களால் முடிந்த அளவுக்கு தங்கத்தை
மற்றவர்களுக்கு தானம் செய்யலாம்.
No comments:
Post a Comment