Saturday, 4 January 2020

ஜோதிடம்( இதற்கு ஆதாரம் கேட்ககூடாது ஆய்வுசெய்து பார்க்கவும் சரியாக இருக்கும்)

ஜோதிடம்( இதற்கு ஆதாரம் கேட்ககூடாது ஆய்வுசெய்து பார்க்கவும் சரியாக இருக்கும்)
இதுவரை யாரும் கூறாதது ஏன்?
ஒரு இராசியின் குணம் என்பது அதன் பின் உள்ள இராசியின் குணமே உள்ளிருக்கும் ஒருவருக்கு ,
மேஷராசியில் பிறந்தவர்களுக்கு பின்ராசி மீனம் ,மீன் போல் விழிப்புடன் இருப்பார்கள் ,பேச்சில் சொல்திரிபுடன் பேசுவார்கள்,காரணம் இரண்டுமீன் உள்ளதால்,
ரிஷபம் இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி மேஷம் எனவே மற்றவர்களை அடக்கி ஆளும் குணம் இருக்கும்,
மிதுனம் இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி ரிஷபம் ,எனவே இவர்களின் செயல் கர்மாவின்(தொழில்) அடிப்படையில் மட்டும் இருக்கும்,
கடகம் இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி மிதுனம் ,எனவே இவர்களிடம் சொல்திரிபு இருக்கும் ஆண்,பெண் தன்மையில் இருக்கும்,
சிம்மம் இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி கடகம், எனவே இவர்கள் எப்பொழுதும் எதையும் அடையவேண்டும் என்று பசியுடன் இருப்பார்கள்,
கன்னி இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி சிம்மம், எனவே அமைதியாக இருப்பார்கள்,எதுவும் சிக்கினால் விடமாட்டார்கள்,
துலாம் இராசி
இதில்பிறந்தவர்களுக்கு பின்ராசி கன்னி, எனவே இவர்கள் அனைவரையும் ஈர்க்கும் தன்மையான குணம் இவர்களிடம் உண்டு,
விருச்சிகம் இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி துலாம் ,எனவே இவர்களிடம் எதையும் சீர்தூக்கி பார்த்து சரி தவறு என்று கூறும் குணம் உண்டு,
தனுசு இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி விருச்சிகம் ,எனவே இவர்களிடம் தேளின் குணம் இருக்கும்,
மகரம் இராசி
இதில் பிறந்தவர்களூக்கு பின்ராசி தனுசு ,எனவே இவர்களிடம் யுத்தம் செய்து எதையும் அடையும் குணம் உண்டு,
கும்பம் இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி மகரம்,எனவே இவர்களிடம் யாழின் இசைபோல் பேசும் குணம் உண்டு,
மீனம் இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி கும்பம்,எனவே கும்பத்தில் பொருள்மறைவாக உள்ளதுபோல் இவர்கள் குணம் எதையும் மறைக்கும் குணம் உண்டு ,

No comments:

Post a Comment