Wednesday, 27 February 2019

சுக்கிரன் என்ன செய்வார்

சுக்கிரன் என்ன செய்வார்
கிரக வரிசையில் இறுதி இடமான 9 ம் இடத்தைபிடிக்கும் சுக்கிரன் ,
தேவ குருவான பிரகஸ்பதிக்கு எதிரியாகவும், அசுரர்களுக்கு குருவாகவும் கருதப்படுகின்றது.
மாத கோளான சுக்கிரன் ஒருஇராசி விட்டு மறுஇராசி செல்ல ஒரு மாதம் எடுத்துக் கொள்கின்றார்.
ரிஷபமும் துலாமும் சொந்த வீடு.
மீனம் உச்சமும், கன்னி நீச்சமும் ஆகும்.
( மீனமான தன்வீட்டில் எதிரியான சுக்கிரனுக்கு உச்சநிலையை பெற இடம் கொடுத்ததால் எதிரிக்கும் குருவானவர் அன்பை தருவார் என்பது புலனாகின்றது )
துலாம் சுக்கிரனுக்கு மூலதிரிகோணமாகும்.
இவரது திசா காலம் 20 ஆண்டுகளாகும்.
ஜாதகத்தில் திருமணம் என்கின்ற பந்தம் தரவல்லதாக சொல்லப்படும் சுக்கிரன் களத்திர காரகன் என அழைக்கப்படுகின்றார்.
ஜாதகத்தில் சுக்கிரன் நன்னிலையில் இருந்தால் . . .
அழகும், மிக அழகும், வனப்பும், சரியான உயரம், நல்ல நிறமும் பொருந்திய கன கச்சிதமான உடல் அமைப்பு கொண்ட மனிதரை உருவாக்குகின்றார்.
காதல் , அன்பு , அழகிய பல்வரிசை, சுருண்ட கேசம் , தற்பெருமை, ஒழுக்கம் , அலங்காரம் , அலங்கரித்தல் , அழகாக வைத்துக்கொள்ளல் , மிக அழகாக வைத்துக்கொள்ளல், நேர்த்தியான உணவு பழக்கம் , வெண்மை நிறம் , வெள்ளிப் பொருட்கள், கவர்ச்சிகரமான பொருட்களின் மேல் அலாதி ப்ரியம் , எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் , ஒய்யாரமாக அமர்தல் , அழகாக சிரித்து பேசுதல் போன்ற காரியங்களை இயல்பாக செய்யும் மனிதனை உருவாக்குகின்றார்.
ஜாதகத்தில் சுக்கிரன் நன்னிலையில் இல்லாதிருந்தால் . . .
அழகற்ற , முறையற்ற உடல் அமைப்பு, பல் வரிசையற்ற, கொஞ்சம் முரடான மனோபாவம், தவறான காதல் , காதலில் தோல்வி, அதீத காமம், பலரிடம் சிநேகிதம், ஒழுக்கக்குறைவு , நேரம் தவறிய உணவு பழக்கம் , மர்ம இடங்களில் நோய், ஆடை அலங்காரங்களில் கவனமின்மை , காளியம்மன் வணக்கம் , கோரமான பெண் தெய்வங்கள் மீது பக்தி , மந்த்ர தந்த்ர யந்த்ர உச்சாடனம் மீது அலாதி ப்ரியம் போன்ற காரியங்களை இயல்பாக செய்யும் மனிதனை உருவாக்குகின்றார்.
இவைகள் சுக்கிரனின் பொதுப்பலனே ஆகும்.
மற்ற கிரகங்களின் பலம் அறிந்து சொல்லவும்.
பொதுவாக நன்னிலை என்பது குறிப்பிட்ட கிரகமானது 1, 5, 9 - ல் இருப்பதாகும்.
ஆனால் தீய கிரகங்கள் 1, 4, 7, 10 - ல் இருப்பதுவே நன்னிலையாகும்.
பொதுவாக தீய நிலை என்பது 3, 6, 8, 12 - மற்றும் தனது பகை வீட்டில் இருப்பதாகும்

No comments:

Post a Comment