Wednesday, 27 February 2019

சுக்கிரன் என்ன செய்வார்

சுக்கிரன் என்ன செய்வார்
கிரக வரிசையில் இறுதி இடமான 9 ம் இடத்தைபிடிக்கும் சுக்கிரன் ,
தேவ குருவான பிரகஸ்பதிக்கு எதிரியாகவும், அசுரர்களுக்கு குருவாகவும் கருதப்படுகின்றது.
மாத கோளான சுக்கிரன் ஒருஇராசி விட்டு மறுஇராசி செல்ல ஒரு மாதம் எடுத்துக் கொள்கின்றார்.
ரிஷபமும் துலாமும் சொந்த வீடு.
மீனம் உச்சமும், கன்னி நீச்சமும் ஆகும்.
( மீனமான தன்வீட்டில் எதிரியான சுக்கிரனுக்கு உச்சநிலையை பெற இடம் கொடுத்ததால் எதிரிக்கும் குருவானவர் அன்பை தருவார் என்பது புலனாகின்றது )
துலாம் சுக்கிரனுக்கு மூலதிரிகோணமாகும்.
இவரது திசா காலம் 20 ஆண்டுகளாகும்.
ஜாதகத்தில் திருமணம் என்கின்ற பந்தம் தரவல்லதாக சொல்லப்படும் சுக்கிரன் களத்திர காரகன் என அழைக்கப்படுகின்றார்.
ஜாதகத்தில் சுக்கிரன் நன்னிலையில் இருந்தால் . . .
அழகும், மிக அழகும், வனப்பும், சரியான உயரம், நல்ல நிறமும் பொருந்திய கன கச்சிதமான உடல் அமைப்பு கொண்ட மனிதரை உருவாக்குகின்றார்.
காதல் , அன்பு , அழகிய பல்வரிசை, சுருண்ட கேசம் , தற்பெருமை, ஒழுக்கம் , அலங்காரம் , அலங்கரித்தல் , அழகாக வைத்துக்கொள்ளல் , மிக அழகாக வைத்துக்கொள்ளல், நேர்த்தியான உணவு பழக்கம் , வெண்மை நிறம் , வெள்ளிப் பொருட்கள், கவர்ச்சிகரமான பொருட்களின் மேல் அலாதி ப்ரியம் , எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் , ஒய்யாரமாக அமர்தல் , அழகாக சிரித்து பேசுதல் போன்ற காரியங்களை இயல்பாக செய்யும் மனிதனை உருவாக்குகின்றார்.
ஜாதகத்தில் சுக்கிரன் நன்னிலையில் இல்லாதிருந்தால் . . .
அழகற்ற , முறையற்ற உடல் அமைப்பு, பல் வரிசையற்ற, கொஞ்சம் முரடான மனோபாவம், தவறான காதல் , காதலில் தோல்வி, அதீத காமம், பலரிடம் சிநேகிதம், ஒழுக்கக்குறைவு , நேரம் தவறிய உணவு பழக்கம் , மர்ம இடங்களில் நோய், ஆடை அலங்காரங்களில் கவனமின்மை , காளியம்மன் வணக்கம் , கோரமான பெண் தெய்வங்கள் மீது பக்தி , மந்த்ர தந்த்ர யந்த்ர உச்சாடனம் மீது அலாதி ப்ரியம் போன்ற காரியங்களை இயல்பாக செய்யும் மனிதனை உருவாக்குகின்றார்.
இவைகள் சுக்கிரனின் பொதுப்பலனே ஆகும்.
மற்ற கிரகங்களின் பலம் அறிந்து சொல்லவும்.
பொதுவாக நன்னிலை என்பது குறிப்பிட்ட கிரகமானது 1, 5, 9 - ல் இருப்பதாகும்.
ஆனால் தீய கிரகங்கள் 1, 4, 7, 10 - ல் இருப்பதுவே நன்னிலையாகும்.
பொதுவாக தீய நிலை என்பது 3, 6, 8, 12 - மற்றும் தனது பகை வீட்டில் இருப்பதாகும்

27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்

27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்

1. விஷ்கம்பம் (விஷ் யோகம்):-

 இது அசுப யோகமாகும்.இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதிரியை வெற்றிகொள்வார்கள். உடல் உறவு சுகத்தில் அதிகமான விருப்பம் உடையவர்களாகவும், எந்த நேரத்திலும் உடல் உறவு கொள்ள துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களை சட்டென்று அறிந்து கொள்வதுடன் பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே உணரும் தீர்க்க தரிசனம் இருக்கும். மாந்திரீக விஷயங்களில் நாட்டமிருக்கும். எவருக்கும் கட்டுப்படாத தன்னிச்சையான சுதந்திரப்பிரியர்கள், சுற்றங்களை மதிப்பார்கள். எவரிடமும் ஏமாறாதவராக இருப்பார்.

2. ப்ரீதி (ப்ரீ யோகம்):-

 இது சுபமான யோகமாகும். இதில் பிறப்பவர்கள் இனிய சொல் பேசுபவராகவும், நல்ல செயல்களையும் செய்பவர்களாகவும் இருப்பார்கள். பெரியோர்கள், ஞானிகள், மகான்கள், குரு ஆகியோர்களை மதிப்பவராகவும் அவர்களை வணங்குபவராகவும் இருப்பார்கள். உறுதியான மனமும், செயல்பாட்டுத் திறமையும் இருக்கும். கடவுள் பக்தி அதிகமுள்ளவர். அனைவரையும் அரவணைத்துச் செல்பவர் தான். காம இச்சை சற்று அதிகம் இருக்கும் நற்குணமுடை ய இவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.

3. ஆயுஷ்மான் (ஆயு யோகம்):-

 இது சுபயோகமாகும். பெரியவர்கள், மகான்கள், ஞானி – யோகிகள் “ஆயுஷ்மான் பவ” என்று இந்த யோகத்தின் பெயரால் வாழ்த்துவது உண்டு. “ஆயுஷ்மான் பவ” என்றால் நீடுழி பல்லாண்டு வாழ்க என்று பொருளாகும். அதற் கேற்ப இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல வசதியாக வாழ்வார்கள். அனைவரையும் மதிப்பவர்கள், பக்திமான்களாக தெய்வ காரியங்கள் செய்வார்கள். கால் நடைச் செல்வங்கள் உடையவர்க ளாக இருப்பார்கள்.
full-logo

4. செளபாக்யம் (செள யோகம்):-

 பெயரே செளபாக்யம் எனும் போது இவர்களின் சுக செளக்யம் நன்றாகவே இருக்கும். இதுவும் சுபமான யோகம் தான். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடையவர்களாகவும், உறுதியான மனம் உடைய செயல் திறன் மிக்கவர்களாகவும், நல்ல பக்தி மான் களாகவும், ஈவு இரக்கம் உடைய தர்மவான்களாக இருப்பார்கள். பெரியோர்களை மதிப்பவர்கள் என்பதுடன், சேவை செய்யும் மனப்பான்மையும் இருக்கும். உடல் உறவு சுகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். அழகை ரசிப்பவர்கள்.

5. சோபனம் (சோ யோகம்):-

 சுபயோகமான இதன் பொருள் இனிமையான சுகம் என்பதாகும். திருமணமாகி முதல் இரவுக்கு “சோபனம்” என்று குறிப்பிடுவதுண்டு இதில் பிறந்தவர்கள் சுகமான இனிமையான வாழ்க்கையை விரும்புவதுடன் “சோபனம்” எனும் உடல் உறவுக் கல்வியில் தனியாத விருப்பத்துடன், நிபுணர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் குறிக்கோளே மகிழ்ச்சியான வாழ்க்கை தான். கஷ்டத்தை வெறுப்பவர்கள். சுற்றம் நட்பை அதிகம் விரும்பு வார்கள். செல்வாக்குடையவர்கள் எனலாம்.

6. அதி கண்டம் (அதி யோகம்):-

 பெயரே கண்டம் என்று பயமுறுத்துகின்றது. அதிலும் அதி கண்டம். எனவே அடிக்கடி விபத்து கண்டங்கள் ஏற்படும். துன்பம் தொல்லை கஷ்டம் தாக்கும். மற்றவர்களுக்கு தொல்லைகளையும், பிரச்சினைகளையும், துன்பங்களையும் ஏற்படுத்துவார்கள். பிறரை துன்பப்படுத்தி அதில் மனம் மகிழ்ச்சியடைவார்கள். யான் பெற்ற துன்பம் பெறுக வையகம் என்ற குறுகிய மனப்பான்மையுடையவர்களாக இருப்பதுண்டு. பேராசையும், முன் கோபமும், முரட்டுத் தனமும், அலட்சியமும், சோம்பலும் இருக்கும். எதிலும் அழுத்தமான நம்பிக்கை இல்லாத மேம்போக் கானவர்களாக இருப்பார்கள்.
2013 New Year Rasi palan Prediction Religion Astrology Special Predictions horoscope-circle

7. சுகர்மம் (சுக யோகம்):-

 இது நல்லயோகம். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடன், பேரும் புகழும் பெற்று நல்ல வாழ்க்கை வாழக் கூடியவர்கள். பற்று, பாசம், ஈகை உடையவர்கள். நல்ல பக்திமான்களாகவும், தெய்வ காரியங்கள் செய்வதில், தீர்த்த யாத்திரை மேற்கொள்வதில் விருப்பம் இருக்கும். நட்பு சுற்றங்களை விரும்பி மதிப்பவர்களாக இருப்பார்கள்.

8. திருதி (திரு யோகம்):-

 இது அசுப யோகம் தான் என்றாலும் சிலர் சுபயோகம் என்று கூறுகின்றார்கள். இதில் பிறந்தவர்கள் வைராக்யமும், தன்னம்பிக்கை உடையவர்கள். எடுத்த காரியத்தை விடாப்பிடியாக முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். கொடுத்தவாக்கை காப்பாற்றக் கூடியவர்கள். நல்ல தைரியமும் உடையவர்கள். சாஸ்திரங்களில் ஈடுபாடு இருப்பதுண்டு.

9. சூலம் (சூல யோகம்):-

 இது அசுபமான யோகம். முன்கோபம், முரட்டுத்தனம், அலட்சியம், சோம்பல், எடுத்தெரிந்து பேசும் குணம் இருக்கும். எவரையும் மதிக்க மாட்டார்கள். எவருடனும் ஒத்து போகாமல் முரண்டு பிடிப்பவர்கள். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பதுடன் வீண் வம்பு, சண்டை பிடிக்கவும் செய்வதுண் டு. உடல் உறவு சுகத்தில் மிக அதிக மான ஆசை இருக்கும். கண்டபடி அளவற்ற காமசுகம் அனுபவித்து அதனால் அவஸ்தைப்படுவதுண்டு.

10. கண்டம் (கண் யோகம்):-

 இதுவும் அசுபமான யோகம் தான். கண்டம் என்ற பெயரைப் போல இதில் பிறந்தவர்கள் அடிக்கடி கண்டங்களையும், துன்பங்களையும், உடல் நோய்த் துன்பங்களையும் சந்தி க்க வேண்டி வரும். நல்ல எண்ண ங்களும் இருக்காது. செயல்பாடுகளும் சிறப்பாக இருக்காது. மற்றவர்களுக்கு தீமைகள் செய்வார்கள். வஞ்சக எண்ணம் இருக்கும். எவரையும் மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவார்கள். கர்வம் அலட்சியம் இருக்கும்.
75487

11. விருத்தி (விரு யோகம்):-

 செல்வாக்குடையவர்கள். நல்ல அளவில் வசதியான வாழ்க்கை அமைப்பவர்கள். சாஸ்திர நாட்ட மும், புலமையும் உடையவர்களாக இருப்பதுடன், தெய்வ பக்தியும், நற்பண்புகளும் உள்ளவர்கள். ஈகை தரும குணம் உடையவர்களாகவும், தெய்வ காரியங்கள் திருப்பணிகள் செய்பவர்களாக இருப்பார்கள். நல்ல எண்ணம் செயல்பாடுடையவர்கள் எனலாம். இது சுபமான யோகமாகும்.

12. துருவம் (துரு யோகம்):-

 இதில் பிறந்தவர்கள் தனிமையை விரும்பக் கூடியவர்களாக இருப்பதுடன் எதிலும் ஒட்டாமல் தாமரை இலைத் தண்ணீர்போல பட்டும், படாமலும் இருப்பார்கள். கபடமான எண்ணம் உடையவர்கள். சமயம் கிடைக்கும் போது பழிதீர்த்துக் கொள்ள தயங்க மாட்டார்கள். நல்ல எண்ணம் இருக்காது. இது அசுபமான யோகமாகும். சிலர் இதையும் சுப யோகம் கூறுவதுண்டு. எனினும் சுப காரியங்களுக்கு விலக்களிக்க வேண்டிய யோகம் தான்.

13. வ்யாகதம் (வ்யா யோகம்):-

 இதுவும் அசுபமான யோகம் தான். முன்கோபமும், முரட்டுத் தனமும் உடைய இவர்கள் சமுகத்தோடு ஒன்றிச் செல்லாமல், தன்னிச்சையாக செயல்படக் கூடியவர்கள். நல்லெண்ணம் இல்லாத இவர்கள் சூது வாது, கபடம் உள்ளவர்களே எனலாம். மன உறுதி இல்லாத இவர்கள் எண்ணங் ளையும், செயல்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். பழி பாவத்துக்கு அஞ்சாதவர்கள் கெடுதல் செய்வார்கள்.

14. ஹர்ஷணம் (ஹர் யோகம்):-

 இது சுபமான யோகமாகும். செல்வாக்கும் – சொல்வாக்கும் உடையவர்கள். இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர்கள். பின்னால் வரு வதை முன்கூட்டியே யூகிக்கும் தீர்க்கத் தரிசிகளாக இருப் பதுண்டு. சுகமான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். உடல் உறவு சுகத்தி ல் சற்று கூடுதலான அதிகமான ஈடு பாடுடை யவர்கள். தெய்வ பக்தியும், உதவும் மனப்பான்மையும் உள்ளவர்க ளே எனலாம்.

15. வஜ்ரம் (வஜ் யோகம்):-

 இது சுபமான யோகமாகும். இதை சிலர் அசுபமான யோகம் என்று கூறுகின்றார்கள். ஆனால் இது சுபமான யோகம் தான். இதில் பிறந்தவர்களுக்கு அசாத்தியமான மனஉறுதி உடையவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள், கொள்கைப் பிடிப்புள்ளவர்கள். எதையும் சாதிப்பவர்கள். துணிச்சலும், தைரியமும் உள்ள இவர்களிடம் கனிவும் இருக்கும். உதவும் மனப்பான்மையும் உண்டு. நல்ல தெய்வபக்தியும், பிறர் மேல் மதிப்பு மரியாதையும் உள்ளவர்கள் தான் என்றாலும் தனக்கு தீங்கு செய்தவர்களை மறக்காமல் பழி தீர்த்து கொள்வார்கள்.

16. சித்தி (சித் யோகம்):-

 சுபயோகமான இதில் பிறந்தவர்களுக்கு எதுவும் சிந்திக்கும் உபாசனா சக்தியுடையவர்கள். தியானம் – யோகம் போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள். தீர்த்த யாத்திரைகள் மேற் கொள்வதில் விருப்பம் அதிகம். இமாலய யாத்திரை போன்ற கடினமான பயணங்களை மகிழ்வாக மேற்கொள்வதுண்டு செல்வமும், செல்வாக்கும் உடையவர்களே என்பதுடன் நல்ல குணம், உதவும் மனப்பான்மையுடையவர்கள் எனலாம்.

17. வியதீபாதம் (விய யோகம்):-

 இது அசுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் சுயநலவாதி களாக இருப்பார்கள். துன்பங்களை யும், துயரங்களையும், கஷ்டங்களை யும் அடிக்கடி சந்திக்க வேண்டிவரும். வாழ்க்கை போ ராட்டமாக இருக்கும். சிந்தித்து, முன்யோசனையுடன் செயல் படாமல் அவசர முடிவால் பிரச்சி னைகள் சந்திப்பார்கள். பிடிவாத குணம் உடையவர்கள் என்பதா ல் பல நல்ல வாய்ப்புகளை இழந்து விடு வார்கள். செயல்பாட்டு உறுதியும், திற னும் இருப்பதில்லை.

18. வரீயான் (வரீ யோகம்):-

 இது சுபயோகமாகும். இதில் பிறந்தவர்கள் தலைமை தாங்கும் தகுதியுடையவர்களாக இருப்பார்கள். நல்ல தைரியமும் காரிய வெற்றியும் உடையவர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையுடையவர். தரும காரியங்கள் திருப்பணிகள் செய்வதில் நாட்டமிருக்கும் புகழ் பெறக்கூடிய வகையில் செயல்பாடுகள் இருக்கும். நல்லெண்ணம் நல்வாக்கு உடையவர்களாக இருப்பார்கள.
Culorile-zodiilor-preferintele-coloristice-coincid-mereu-cu-zodia-si-Ascendentul-nostru

19. பரிகம் (பரி யோகம்):-

 இது சுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் தனக்கென தனியான கொள்கையும், குறிக்கோளும் உடையவர்கள். அநேகமாக அதிலிருந்து மாறமாட்டார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள். பிறர் வாக்கு தவறினால் கோபம் கொண்டு அவர்களின் தொடர்பை வெட்டிக் கொள்வார்கள். கடும் முயற்சியு டையவர்கள். வெற்றி காணும் வரை ஓயமாட்டார்கள். விளையாட்டுகளில், பொழுதுபோக்குகளில் ஆர்வமுள்ளவர்கள். சுற்றுப் பயணத்தை விரும்புவார்கள்.

20. சிவம் (சிவ யோகம்):-

  இதுவும் சுபமான யோகம் தான். இதில் பிறந்தவர்கள் சிவனை வழிபடுபவர்களாகவும், தியானம், யோகம், பக்தி, ஞான மார்க்கத்தில் அதிக ஈடுபாடுடையவர்களாக இருப்பார்கள். ஞானிகள், மகான்கள், யோகிகள், பெரியோர்களை சந்திப்பதில் அதிக ஆர்வ முடையவர்கள். அவர்களின் ஆசியும் வழிகாட்டுதலும் இவர்களுக்கு கிடைக்கும் தெய்வ காரிய ங்கள், திருப்பணிகள், தீர்த்த யாத்திரைகள் போன்றவற்றில் அதிக நாட்டமிருக்கும் நல்ல எண்ணமும், நல்ல செயல்பாடும் உடையவர்கள் எனலாம்.

21. சித்தம் (சித் யோகம்):-

 இது சுபமானயோகமாகும். இதில் பிறந்தவர்கள். அசாத்தியமான மன உறுதியுடையவர்கள். எதற்குமே அஞ்சமாட்டார்கள். உறுதியான சித்தமுடையவர்கள். எடுக்கும் முடிவுகளை சட்டென்று மாற்றிக் கொள்ளமாட்டார்கள். சாஸ்திர புலமை, பரிச்சியமுடையவர்கள். நல்ல பக்தியும் இருக்கும். பிறருக்கு உதவும் மனப் பான்மையும் இருக்கும். பிறருக்குத் தகுந்த ஆலோசனைகளைச் சொல்ல கூடியவர்களாக இருப்பார்கள்.

22. சாத்தியம் (சாத் யோகம்):-

 இது சுபமான யோகமாகும். பெயரே சாத்தியம் என்று உள்ளதால், இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதையுமே சாத்தியமாக்கி விடுவார்கள். பிற பெண்களை வசியம் செய்து கொள்ளும் சாத்தியம் கூட இவர்களுக்கு உண்டு. சற்று கூடுதலான காம இச்சை உடையவர்கள் என்பதில் காமக்கலையில் வல்லவராகவும் கூட இருப்பதுண்டு. வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் பேசுவதில் கெட்டிகாரர்கள். இந்த பேச்சினாலேயே மற்றவர் களைக் கவர்ந்துவிடுவார்கள். சங்கீத ஞானமும் இருப்பதுண்டு.

23. சுபம் (சுப யோகம்):-

 பெயரே சுபம் என்பதால் சுபமான யோகம் தான். இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர்கள். மகான்கள், யோகிகள், ஞானிகள், பெரியோர்களுக்கு சேவை செய்வதில் விருப்பம் உடையவர்கள். தெய்வ காரியங்கள், திருப்பணிகள், பொது சேவையிலும் நல்ல நாட்டமிருக்கும். அனைத்து தரப்பினரிடமும், சுமுகமான உறவு வைத்துக் கொள்பவர்கள். அமைதியை நாடும் சாத்வீகமானவர்கள் எனலாம்.
ragu-kethu1-20-1500529193

24. சுப்பிரம் (சுப் யோகம்):-

 இது சுபமான யோகமாகும். நல்ல தெய்வபக்தியும், தெய்வ நம்பிக்கையும் உடையவர்கள். எது நடந்தாலும் அது கடவுள் செயல் என்று கூறுவார்கள். அனைத்துக்குமே இவர்களுக்கு கடவுள் தான். தான் எந்த சாதனை செய்தாலும் தன்னைப் பற்றி பெருமையாக தம்பட்டம் அடித்துக் கொள்ள மாட்டார்கள். அதையும் கடவுளுக்கே சமர்ப்பணம் செய்வார்கள். மன உறுதியும், வைராக்கியமும் உடைய சாதனையாளர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கும். நல்ல தோற்றம். இனிமையான சுபாவம் உள்ளவர்கள்.

25. பிராம்மியம் (பிரா யோகம்):-

 இதுவும் சுபமான யோகம் தான். தியானம், யோகம் ஆகியவற்றில் நல்ல அளவில் ஈடுபாடுடையவர் கள். பிரம்ம ஞானம் அறியும் முயற்சியுடையவர்கள். ஞானிகள், யோகி கள், மகான்களின் தொடர் புகளை ஏற்படுத்திக் கொண்டு அதன்மூலம் நல்ல அளவில் பயன் பெறுவார்கள். விவேகத்துடன் செயல்படுவதுடன் தியாக உணர்வும், தரும சிந்தனையும் இருக்கும். சிலர் உபாசனை மேற்கொள்வதுமுண்டு. உடல் ஷேமத்தை விரும்புபவர்களாக இருப்பதால் ஹோமம், யாகம், சமாராதனை, அன்னதானம் போன்றவைகளை செய்யக் கூடியவர்கள் எனலாம்.

26. ஐந்திரம் (ஐந்யோகம்):-

 இதுவும் சுபமான யோகம் தான். இதை சிலர் மாகேந்திரம் என்ற பெயரிலும் குறிப்பிடுவதுண்டு. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றியுடையவர்கள். தீர்க்கதரிசிகள் எனலாம். ஆழ்ந்து சிந்தனை செய்பவர்கள். வரும் பொருள் உரைப்பவர்கள். சிலர் அருள்வாக்கு, ஜோதிடம் போன்றவையும் கூட இவர்களுக்கு வருவதுண்டு. நல்ல நுணுக்கமான அறிவுள்ளவர்கள். புகழ்ச்சியை விரும்புவார்கள். முன்கோபம் இருக்கும். கற்றறிந்த பண்டிதர்களையும், வேதஞானிகளையும் மதிப்பவர்கள். நல்ல தெய்வ பக்தியுடையவர்கள். தெய்வ காரியங்களை செய்வார்கள்.

27. வைதிருதி (வை யோகம்):-

 இது அசுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். தற்பெருமையும் உடையவர்கள். கலகப் பிரியர்கள். சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கொடுப்பவர்கள். நல்லவர்கள் போல் நடித்து ஆதாயம் பெறுவார்கள். கபடம் உள்ளதுடன், கெடுக்கும் புத்தி இருக்கும். மன உறுதி இல்லாதவர்கள் என்பதால் மறைமுகமான தொல்லைகளை அளிப்பார்கள். நேர்மை இருக் காது. கடவுள் பக்தியைக்கூட வியாபாரமாக்கி காசு பண்ணி விடுவார்கள். ஆதாயம் இல்லாமல் எதையுமே செய்யமாட்டார்கள். கஞ்சத்தனமும் இருக்கும். காம உணர்வு அதிகமுடையவர்கள், தீய பழக்கங்கள் இருக்கும்.

 

Tuesday, 5 February 2019

அஸ்வினி நட்சத்திரம் !!

அஸ்வினி நட்சத்திரம் !!

27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம் !!
அஸ்வினி :
👉 நட்சத்திரத்தின் இராசி : மேஷம்.
👉 நட்சத்திரத்தின் அதிபதி : கேது.
👉 இராசியின் அதிபதி : செவ்வாய்.
பொதுவான குணங்கள் :
👉 செவ்வாய்க்கு உரிய கோபம் மற்றும் பிடிவாத குணம் கொண்டவராக இருப்பார்கள்.
👉 சண்டையில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் அயராத உழைப்பை கொண்டு வெற்றி பெற வேண்டும் என்னும் தீவிரம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
👉 பெண்களிடம் இனிமையாக பேசக்கூடியவர்.
👉 இவரை அவமதித்தால் மனதில் பழிவாங்கும் எண்ணம் உடையவராக இருப்பார்கள்.
👉 தவறுக்காக மன்னிப்பு கேட்கும் இயல்பு உடையவர்கள்.
👉 எந்த காரியத்தையும் தைரியத்துடன் செய்து முடிப்பவராக இருப்பார்கள்.
👉 தனது தாய் தந்தையர் மீது ஓரளவு பாசம் உடையவராக இருப்பார்கள்.
👉 அழகும் முரட்டுச் சுபாவமும் உடையவராக இருக்கக்கூடும்.
அஸ்வினி முதல் பாதம் :
இவர்களிடம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
🌟 அதிக கோபம் மற்றும் பிடிவாத குணம்.
🌟 அடிக்கடி சண்டையில் ஈடுபடுவது.
🌟 சொத்து சேர்க்கை உண்டாகும்.
🌟 எடுத்த காரியத்தில் வெற்றி.
அஸ்வினி இரண்டாம் பாதம் :
இவர்களிடம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
🌟 சாந்தகுணம் மற்றும் பொறுமைசாலியாக இருப்பார்கள்.
🌟 மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.
🌟 உயர்ந்த புகழ் மற்றும் கௌரவத்தை அடைவார்கள்.
அஸ்வினி மூன்றாம் பாதம் :
இவர்களிடம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
🌟 இவர்கள் தைரியசாலிகளாக இருப்பார்கள்.
🌟 சாதுர்யமான பேச்சுத் திறமை கொண்டவர்கள்.
🌟 கல்வி மற்றும் நுட்பமான ஆராய்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
🌟 வாதம் செய்வதில் வல்லவர்கள். கற்பனையில் சிறந்தவர்கள்.
🌟 அன்னையின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.
அஸ்வினி நான்காம் பாதம் :
இவர்களிடம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
🌟 பிறரை அடக்கி ஆளக்கூடிய சக்தி கொண்டவர்கள்.
🌟 முன் கோபம் உடையவர்கள்.
🌟 தர்ம சிந்தனையும்இ தெய்வ பக்தியும் உடையவர்கள்.
🌟 அரசுடன் தொடர்புடைய துறைகளில் ஈடுபாடு இருக்கும்,........

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

அசுவனி. ... கேது. ... கோமாதாவுடன் கூடிய சிவன்
பரணி. ... சுக்கிரன். ... சக்தியுடன் கூடிய சிவன்
கார்த்திகை. ... சூரியன். ... சிவன் தனியாக
ரோகிணி ... சந்திரன். ... பிறை சூடியப் பெருமான்
மிருகசீரிஷம். ... செவ்வாய். ... முருகனுடைய சிவன்
திருவாதிரை. ... ராகு. ... நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்
புனர்பூசம். ... குரு. ... விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்
பூசம். ... சனி. ... நஞ்சுண்டும் சிவன்
ஆயில்யம். ... புதன். ... விஷ்னுவுடன் உள்ள சிவன்
மகம். ... கேது. ... விநாயகரை மடியில் வைத்த சிவன்
பூரம். ... சுக்கிரன். ... அர்த்தநாரீஸ்வரர்
உத்ரம். ... சூரியன். ... நடராஜ பெருமான்-தில்லையம்பதி
ஹஸ்தம். ... சந்திரன். ... தியாண கோல சிவன்
சித்திரை. ... செவ்வாய். ... பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்
சுவாதி. ... ராகு. ... சகஸ்ரலிங்கம்
விசாகம். ... குரு. ... காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன்
அனுஷம். ... சனி. ... ராமர் வழிபட்ட சிவன்
கேட்டை. ... புதன் ... நந்தியுடன் உள்ள சிவன்
மூலம். ... கேது. ... சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்
பூராடம். ... சுக்கிரன். ... சிவ சக்தி கணபதி
உத்திராடம். ... சூரியன். ... ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்
திருவோனம். ... சந்திரன். ... சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்
அவிட்டம். ... செவ்வாய். ... மணக்கோலத்துடன் உள்ள சிவன்
சதயம். ... ராகு. ... ரிஷபம் மிது சத்தியுடன் உள்ள சிவன்
பூராட்டாதி. ... குரு. ... விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்
உத்திராட்டாதி ... சனி. ... கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்
ரேவதி. ... புதன். ... குடும்பத்துடன் உள்ள சிவன்

Monday, 4 February 2019

தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
#தீர்க்க_சுமங்கலி_பவா என்றல் என்ன? - அறிந்துகொள்வோம*்.
🌼 தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
🌼 திருமணத்தில் ஒன்று,
🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று !
#இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம்:
🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.
🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.
🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.
🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.
🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.
🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு
சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்,
சந்திரனுக்கு ஒரு மாதமும்,
புதனுக்கு ஒரு வருடமும்,
வியாழனுக்கு 12 வருடங்களும்,
வெள்ளிக்கு ஒரு வருடமும்,
சனி பகவானுக்கு 30 வருடங்களும்,
ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும்,
கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.
🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.
🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.
🌼 ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.
🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.
🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.
🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.
🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?
🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.
🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...
அக்னி, சூரியன்,
சந்திரன்,. வாயு,
வருணன்,
அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
அமிர்த கடேஸ்வரர்,
*நவநாயகர்கள்..
சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.
🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,
🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,
🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,
🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.
🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.
🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.
🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.
🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.
🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.
🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.
🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.
🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.
🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.

Saturday, 2 February 2019

#ஆதிசங்கரர்_அருளிய #27_நட்சத்திர_மந்திரங்கள்

                                           



இந்த ஸ்லோகத்தை அவரவர் நட்சத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.
ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

1. அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி
கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை
இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி
ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்
வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை
ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்
காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

8. பூசம்
ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்
யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்
தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்
ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்
தீனமான வாளி காம தேனவே நம: சிவாய
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்
ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை
ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி
ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்
பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்
மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை
ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்
திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்
அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்
கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்
விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்
அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்
ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி
புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி
அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி
சூலினே நமோ நம:
கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய
ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நட்சத்திர மாலா ஸ்தோத்திரம் ..
 

Friday, 1 February 2019

மகரத்தில் சூரியன்

மகரத்தில் சூரியன்

மகரத்தில் சூரியன் இருந்தால் கண்கள் ஆழ்ந்திருக்கும், தன்மானம் இல்லாதவர்கள்,வம்பு சண்டை செய்வர்கள், தன் தகுதிக்கு தாழ்ந்த காரியங்களை செய்வர்கள், பேராசை, பிறரின் சொத்தை அனுபவிப்பர்கள், எக்காரியங்களையும் திறம்பட செய்க்கூடியவர்களாக இருப்பர்கள், கடின உழைப்பாளி இர்களின் ஆசை நிறைவேறுவது கடினம்,பணத்தாசை உள்ளவர்கள் எப்படியாவது சம்பாதித்து சேர்த்துவிட வேண்டுமென்று அலைவர்கள், உற்றர் உறவினர் பகைமை ஏற்படும், வறுமையுடன் வாழ்வு அமையும், புத்திரசம்பத்து தடைபடும்,உடலில் எதாவது ஒரு அங்கம் இழப்பு ஏற்படும்,
பணக்குறைவு, அறியாமை ஏற்படும்,சரிவர நடந்து கொள்ளாமல் மற்றேரின் அவதுறுக்கு ஆளாவர்கள். இவர்களின் வாழ்வில் பிரகாசம் குறையும்.
சூரியனுடன் சந்திரன் சேர்க்கையிருந்தால் திருட்டுத்தனம், மனதைரியம் இல்லாவர்கள், பெண்களின் தொடர்பல் சொத்து,பொருள் இளப்பு ஏற்படும்.
சூரியனுடன் செவ்வாய் சேர்க்கையிருந்தால் நோய் பாதிப்பு, எதிரிகளின் தொல்லை, ஆயுதங்களினால் பதிப்பும்,உடல் பதிப்புகள் ஏற்படும்.
சூரியனுடன் புதன் சேர்க்கையிருந்தால் ஏமாற்றுவதில் சாமர்த்தியசாலி, பிரருடைய சொத்தை அனுபவிப்பர்கள்.
சூரியனுடன் குரு சேர்க்கையிருந்தால் நல்ல செயல்கள் உடையவர்கள் நல்லெண்ணம் ,புகழ் உடையவர்கள்,
சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கையிருந்தால் நகரிகா அழகன பொருள்கள் மிது விருப்பம், பெண்கள் மூலம் வருமானம் கிட்டும்.
சூரியனுடன் சனி,ராகு,கேது சேர்க்கையிருந்தால் அதிக பாதிப்பு ஏற்படும்.

சூரியஜெயவேல்
9600607603

🌷27-நட்சத்திரங்கள்---பறவைகள்/விருட்சங்கள்🌷☸️

🌷27-நட்சத்திரங்கள்---பறவைகள்/விருட்சங்கள்🌷☸️

அஸ்வினி---ராஜாளி/எட்டி மரம்

பரணி---காகம்/நெல்லி மரம்

கிருத்திகை---மயில்/அத்தி மரம்

ரோகிணி---ஆந்தை/நாவல் மரம்

மிருகசீரிஷம்---கோழி/கருங்காலி மரம்

திருவாதிரை---அன்றில்/செங்கருங்காலி/செங்காலி மரம்/

புனர்பூசம்---அன்னம்/மூங்கில் மரம்

பூசம்---நீர்காகம்/அரச மரம்

ஆயில்யம்---கிச்சிலி/புன்னை மரம்

மகம்---ஆண்கழுகு/ஆலமரம்

பூரம்----பெண்கழுகு/புரசு மரம்(புரசை)/பலா

உத்திரம்---கிளுவை/அலரி எனும் அரளி.

அஸ்தம்---பருந்து/வேல மரம்

சித்திரை---மரங்கொத்தி/ வில்வ மரம்.

சுவாதி---தேனீ/மருத மரம்

விசாகம்---செங்குருவி/விளாமரம்
.
அனுஷம்---வானம்பாடி/மகிழமரம்

கேட்டை---சக்கரவாகம்/பிராய்/பராய் மரம்.

மூலம்---செம்பருந்து/மராமரம்

பூராடம்---கௌதாரி/வஞ்சி மரம்

உத்திராடம்---வலியான்/பலா மரம்

திருவோணம்---நாரை/எருக்கு மரம்

அவிட்டம்---பொன்வண்டு/வன்னி மரம்

சதயம்---அண்டங்காக்கை/கடம்பு மரம்

பூரட்டாதி---உள்ளான்/தேற்றா மரம்.

உத்திரட்டாதி---கோட்டான்/வேப்ப மரம்

ரேவதி---வல்லூறு/இலுப்பை மரம்