Monday, 28 January 2019

சிவதத்துவம் 5

                                                                  சிவதத்துவம் 5
சிவதத்துவம் 5. + வித்தியா தத்துவம் 7+ ஆன்ம தத்துவம் 24 + மற்ற உட்பிரிவு 60
தத்துவங்கள் (36)
சிவ தத்துவம்
(சுத்த மாயை):
5
நாதம்,விந்து, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்தவித்யை
வித்யா தத்துவம்
7
மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன்
ஆன்மதத்துவம்(24)
(அசுத்த மாயை - பிரகிருதி மாயை)
பஞ்ச பூதம் (5) + ஞானேந்திரியங்கள் (5) + கர்மேந்திரியங்கள் (5) + தன்மாத்திரை (5) + அந்த கரணங்கள் (4).
பஞ்ச பூதம்
5
1. மண் 2. நீர் 3. தீ 4. காற்று 5. ஆகாயம்
ஞானேந்திரியங்கள்
5
1. செவி 2. கண் 3. மூக்கு 4. நாக்கு 5. மெய்
கர்மேந்திரியங்கள்
5
1. வாக்கு 2. பாதம் 3. கை 4. எருவாய் 5. கருவாய்
தன்மாத்திரை
5
1. ச்ப்தம் 2. ஸ்பரிசம் 3. ரூபம் 4. ரசம் 5. கந்தம்
அந்த கரணங்கள்
4
1. மனம் 2. அகங்காரம் 3. புத்தி 4. சித்தம்,5,உள்ளம்
புறக்கருவிகள் (60)
பிருதிவியின் காரியம்
5
1. மயிர் 2. தோல் 3. எலும்பு 4. நரம்பு 5. தசை
அப்புவின் காரியம்
5
1. நீர் 2. உதிரம் 3. மூளை 4. மச்சை 5. சுக்கிலம்
தேயுவின் காரியம்
5
1. ஆகாரம் 2. நித்திரை 3. பயம் 4. மைதுனம் 5. சோம்பல்
வாயுவின் காரியம்
5
1. ஓடல் 2. இருத்தல் 3. நடத்தல் 4. கிடத்தல் 5. தத்தல்( குதித்தல் )
ஆகாயத்தின் காரியம்
5
1. குரோதம் 2. லோபம் 3. மோகம் 4. மதம் 5. மாற்சரியம்
வாசனாதி
5
1. வசனம் 2. கமனம் 3. தானம் 4. விசர்க்கம் 5. ஆனந்தம்
வாயு
10
1. பிராணன் 2. அபானன் 3. வியானன் 4. உதானன் 5. சமானன் 6. நாகன் 7. கூர்மன் 8. கிருதரன் 9. தேவதத்தன்
10. தனஞ்சயன்
நாடி
10
1. இடை 2. பிங்கலை 3. சுழுமுனை 4. காந்தாரி 5. அத்தி
6. சிங்குவை 7. அலம்புடை 8. புருடன் 9. சங்கினி 10. குரு
வாக்கு
4
1. சூக்குமை ,2. பைசந்தி 3. மத்திமை 4. வைகரி
ஏடணை ( விருப்பம்)
3
1. தாரவேடணை 2. புத்திர வேடணை 3. அர்த்தவேடணை
குணம்
3
1. சாத்துவீகம் 2. இராசதம் 3. தாமதம்
தத்துவம்
குறிப்புகள்
காலம்
சென்றது, நடப்பது, வருவது
நியதி
அவரவர் வினையை அவரவர்களை அநுபவிப்பது
கலை
ஆன்மாவின் ஆணவத்தை சிறிது அகற்றும், கிரியை எழுப்பும்
அராகம்
ஆசையை எழுப்பும்
புருடன்
விஷயங்களில் மயங்கும்
சூக்குமை
-சொல் தோன்றாது ஒலி மட்டுமாய் உள்ளது
பைசந்தி
-சொல் விளங்கியும் விளங்காமலுமாய் நிற்பது
மத்திமை
-உதானன் என்ற வாயுவால் பொருள் விளங்க உருவாகும் மொழி நிலை
வைகரி
-சொல் புறத்தே தன் செவிக்கு மட்டும் கேட்கும் நிலை
வாயு
எனபது நம்முடலில் ஓடும் சீவக்காற்று. இதுவே, வாசி, காலெனப் பலப் பெயர்களில் கூறப்பட்டுள்ளன. வாயு இல்லையேல் சலனமில்லை (அகச் சலனம் & புறச்சலனம்). புறத்தே சில உடலுறுப்புக்கள் வலுவிழப்பதற்குமதுவே காரணம். உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று. இவை 5ம் பிரதான வாயுக்கள். மற்றவை உபவாயுக்கள்.
பிராணவாயு
உயிர்வளி : இது இரு உதய தானத்திலிருந்து நாசிவழி மேலெழுந்து செல்லுவது. பசி, தாகங்களையுண்டுபண்ணி, உணவைச் சீரணிக்கும் சக்தியுடையது. இதை இரேசகமென்பர்.
அபானன்
மலக்காற்று:இது இன்பச் சுரப்பிகளையும், குத, குய்யம் ஆகியவைகளிலும் பூரக சஞ்சாரம் செய்து, அவ்வுறுப்புக்கள் தத்தம் வேலைகளைச் செய்ய உதவுவது.
வியானன்
தொழிற்காற்று : இது உடலின் எல்லா பாகங்களிலும் விரவிநின்று உணர்வுகளை உட்கிரகிக்கும். உண்ட உணவைச் சக்கை, சாறாய்ப் பிரித்துத்தரும்.
உதானன்
ஒலிக்காற்று : இது உதராக்கினியை எழுப்பிக் கண்டமாகிய கழுத்துள்ளிருந்து, உணவை உண்ணவும், அதன் சாரங்களை நாடிகளுக்கு அனுப்பவும் செய்கிறது.
சமானன்
நிரவுகற்று : இது நாபியிலிருந்து கொண்டு உண்ட உணவின் சாரத்தை பங்கிட்டு,இரத்தமாக்கி எல்லா உறுப்புகளுக்கு அளித்து உடலை வளர்க்கும். இவ்வாறே மற்றவையும். ஆயினும், இவ்வாயு எங்கிருந்து வருகிறது? எங்குள்ளது? என்னும் வினாக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. கருப்பத்தில் குழந்தை உருவாகும் பொழுது, வளரும்பொழுதும் குழந்தைக்கு உயிர் உண்டு . அது மாமிச பிண்டம். ஆனால், கருப்பப் பையினுள்ளேதான் அவ்வாயு உள்ளது.அதன் தொடர்பு தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தையின் தொப்புள் கொடி வழியாக அமுதக் காற்று அனுப்பபடுகிறது. ஆனால் தனியாக உள்ளது. மற்ற நீர்வாழ் செந்துக்களுக்கு வைக்கப்பட்டதுபோல் வைக்கப்பட்டுள்ளது. தாயின் கருவரையைவிட்டு வெளியே வந்தவுடனே, வெளிக் காற்றுவான பூதக் காற்றை சுவாசிக்க அக்குழந்தை துடிக்கிறது.தாயின் தொப்புள் கொடியை துண்டிக்கும் போதுதான் குழந்தை வெளிக்காற்றை சுவாசிக்கிறது சடாரென வெளியில் இருந்து சுவாசிக்கும் காற்று மரணம் அடையும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். இது பஞ்ச பூதங்களில் ஒன்றாகும் .
வெளியே வந்ததும் மண்,நீர்,அக்கினி,காற்று,ஆகாயம்,என்னும் ஐந்து பூதங்களும் இணைந்து செயல்படுகின்றன .இதனால் காற்றுக்கு என தனி மரியாதை இல்லை.ஐந்து பூதங்களும் சேர்ந்துதான் உடம்பை இயக்கிக் கொண்டு உள்ளது .
நாகன்
தும்மற்காற்று
கூர்மன்
விழிக்காற்று :இது கண்களிலிருந்து திறக்கவும் மூடவும் செய்யும். மயிர்க்கூச்சல், சிரிப்பு, புளகம், முகச் சேட்டைகள் ஆகியவைகளைச் செய்யும். இதை அடக்க இமையா நாட்டம் கிடைக்கும்).
கிருகரன்
கொட்டாவிக்காற்று
தேவதத்தன்
இமைக்காற்று
தனஞ்செயன்
வீங்கற்காற்று
இடைகலை
பிங்கலை
சுழுமுனை
காந்தாரி
இடக்கண் நரம்பு (இதில் ஹஸ்தி, ஜிஹ்வா என்னும் இருநரம்புகள் கூடுகின்றன என்பர்)
அத்தி
வலது காது நரம்பு
சிங்குவை
உள்நாக்கு நரம்பு.
அலம்புடை
இடது காது நாடி (அலம்புஷா, பூஷா என்னும் நாடிகளின் சேர்க்கையென்பர்)
புருடன்
வலக்கண் நரம்பு.
சங்கினி
மருமத்தான நாடி
குகு
மலவாய் நாடி (குகு நாடியும் சிநீவாலி நாடியும் இரக்தவியானன் நாடியும் சேர்ந்திருக்கும் என்பர்)
மேலே சொலப்பட்ட தத்துவங்கள் அனைத்தையும் செயல்பட வைக்கும் மூலமானது ஒவ்வொரு ஆன்மாவிலும் உள்ள அருள் என்னும் அமுதக் காற்றாகும்.மின் ஒளி போன்றது. இவை தத்துவங்களைத் இயக்கம் தனித் தலைமை பெரும் பதியின் ஆற்றலாகும் .இதற்கு இயற்கை விளக்கம் என்பதாகும்.
இயற்கை உண்மையாக உள்ள அருட்பெரும்பதியின் கருணையினால் ,இயற்கை விளக்கமாக தோன்றும் அருளே அனைத்தையும் இயக்குவதற்கு துணை புரிகின்றது..
இயற்கை உண்மை இடம் இருந்து, இயற்கை விளக்கம் என்னும் அருளைப் பெற்று உயிர் இயங்குவதால் ,இயற்கை இன்பம் என்னும் உடம்பு இயங்குகின்றது.இந்த உண்மையை அறிந்து கொண்டால் உடம்பையும் உயிரையும் அழிக்காமல் ,இயற்கை உண்மை என்னும் ஆன்மாவின் உள் இருந்து வரும் அருளை வெளியே விரையம் செய்யாமல் ,உயிரையும் உடம்பையும் பாது காக்கும் வழியைத் தெரிந்து கொள்ளலாம் .
இதுவே சாகாத்தலை ,போகாப்புனல்,வேகாக் காலாகும்.
ஆன்மா உயிரையும்,உடம்பையும் விட்டு வெளியே போகாமல் ,தன அருளாலே உயிரையும்,உடம்பையும் ஆன்மாவின் தன்மைக்கு ஒளியாக மாற்றமுடியும் என்பதுதான் வள்ளலார் சொல்லித்தந்த சாகாக் கலையாகும்..இதுவே சாகாக் கல்வியாகும் .
தத்துவங்கள் ஜடங்கள், ஜடங்கள் என்னும் தத்துவங்களை தனித்தனியாக கடந்து தத்துவத்தின் மேலே உள்ள சித்து என்னும் சத்தை பெற்று, அதற்கும் மேல் உள்ள சிவநிலையை தெரிந்து அதன் மயமாகி,உயிரும் உடம்பும் கரைந்து அருள் மயமாவதே மரணம் இல்லாப் பெருவாழ்வாகும் .
இந்த உண்மையான அருள்நிலைக் கண்டவர் ஒருவரே நம்முடைய அருள் தந்தை திரு அருட்பிரகாச வள்ளல்பெருமானாகும் .கண்டது மட்டும் அல்லாது அதன்படி வாழ்ந்து காட்டியுள்ளார் .அவர் காட்டிய சுத்த சன்மார்க்க பாதையை விட்டு விலகாமல் நாமும் அதன்படி வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழியைக் காட்டுவோம்

Friday, 18 January 2019

இராசிகளில் சூரியன்

                                                         இராசிகளில் சூரியன்

மேஷத்தில் சூரியன் ;-
ஜாதகர்/ஜாதகிக்கு கண்கள் சிவந்திருக்கும்,உடல் பலம், துணிச்சல் மிக்கவர்கள், முன்கோபம்,அவசரம் ஆணவம், கல்வி கற்றவர்களாகவும் , பிறருக்கு உதவி செய்பவர்களாகவும் ,பிறர் போற்றும் அளவுக்கு வாழ்ந்து வருவர்கள்,செல்வம் கிட்டும், தந்தைவழி செல்வாக்கு,ரணுவம், காவல், மருத்துவதுறை தொடர்புகள் ஏற்படும், அதிக அலைச்சலுடையவர்கள்,எல்லா ஆற்றால் இருக்கும்,பித்தத சரீரம் உள்ளவர்,உயர் பதவி அமையும், எப்போதும் ஆயுதங்களை வைத்திருப்பார்கள்,பிதுர்ராஜ்ஜிய சொத்துக்களால் லாபம்,உறவினர் துண்பம், கால் நடைகளினால் ஆபத்தையும் அடைவர்கள், சாஸ்திர ஞானம், புகழ் கிடைக்கும். மதப்பற்று அதிகம் இருக்கும், சுயமாக சொத்து சம்பாத்திப்பார், பெரும்பாலோர் ஆசிரியராக இருப்பர், பேராசிரியராகவும் இருப்பர்கள், தந்தையின் முன்னேற்றம் சற்று குறைவுதான். தங்களிடம் உள்ள திறமைகளைப் புறிந்து கொண்டு வேறெதனையும் பொருட்படுத்தாமல் லட்சிய நோக்கில் செயல்பட்டு வாழ்வில் சிறப்படைவர்கள்.பிறருக்கு தொண்டு புரிவதில் போற்றுமளவுக்கு அர்ப்பணிப்பவராகவும் இப்பர்கள்.
சூரியன் உச்சமாக இருந்தாலும் 6-8-12-ஆம் பாவகமா அமைந்தால் உடலில் காயங்கள் ஏற்படும், பொற்றோர்களால் பாதிப்பு ஏற்படும், நடுத்தரமானவர்கள், பெருமையுள்ளவர்கள், சமூகத்தில் வெற்றியும், சிறிது முன்கோபம் உள்ளவர்கள், சூரியனின் பலம் குறைந்தால் உஷ்னாத்தால் பாதிப்பும், ரத்தத்தில் பாதிப்பும் உண்டாகும்.
சூரியன் செவ்வாய் அல்லது குருவின் சேர்க்கை இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு பொருளாதார விஷயங்களில் முன்னேற்ங்களையே அளிக்கும்
சூரியனை குரு பார்த்தால் ஜாதகர் /ஜாதகி தத்தம் நிலைக்கேற்ப தகுதி / திறமைகளின் அடிப்படையில் விடாமுயற்சியால் வாழ்வில் உயர் அந்தஸ்தான நிலைக்கு வந்துவிடுவர்கள்.
சூரியனுடன் சனி,சுக்கிரன், ராகு,கேது கூடினால் சூரிய தசா புத்தியில் தீமைகள் நடக்கும்.மற்றவர்ளை வெறுப்பர்கள்,மன நிம்மதி குறையும்,
மேஷத்தில் உள்ள சூரியனை சந்திரன் பார்த்தால் மென்மையன உடல் அமையும், தான கர்மங்களையும், பெண்கள் தொடர்பும் ஏற்படும்.

மேஷத்தில் உள்ள சூரியனை செவ்வாய் பார்த்தால் சண்டை செய்வதில் விருப்பம், சாமர்த்தியசாலி.,பிற பாலர்களுடன் மரியாதையாக நடந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கமட்டார்கள்
மேஷத்தில் உள்ளள சூரியனை குரு 7 செல்வங்கள் உள்ளவர்கள், அரசு உதவி, மந்திரி, புகழும் கிட்டும்.
மேஷத்தில் உள்ள சூரியனை சனி பார்த்தால் பலவித துண்பம், தர்ம சிந்தனை குறைவு,உடல் உனம் ஏற்படுத்தும்.

மன்மத லீலை வென்றோர்

                                                    மன்மத லீலை வென்றோர்

ஆண், பெண் இருவருக்கும் செக்ஸ் உணர்வுகள்
உண்டு.இதில் ஆண்களுக்கு அதிகமா?, பெண்களுக்கு அதிகமா? என்று பாகுபடுத்திச் செல்ல முடியாது இந்த செக்ஸ் அனைவருக்கும் பொதுவானது.
ஒருவருடைய ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களின் நிலைகளுக்கு ஏற்ப்ப செக்ஸ் உணர்வு அதிகம் உள்ளவரா இல்லையா என்பதைச் செல்ல முடியும்.அவர்களுக்கு வரும் பால் வினைநோய் பற்றியும் அறிய முடியும்.
பொதுவாக மேசம், சிம்மம், தனுசுராசியில் பிறந்தவர்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகம் இருக்கும் .

ரிசபம், கன்னி, மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிதமாக இருக்கும்
.
துலாம், கும்பம் பிறந்தவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிதமாக இருக்கும். ஆனால் இவர்கள் அதிகமாக வெளிகாட்டிக் கொள்ளமாட்டார்கள்
.
மிதுன ராசியில் பிறந்தவர்கள் பேச்சு, சிந்தணை, செயலில் அனைத்திலும் செக்ஸ் தாண்வமடும்

கடகம்,விருச்சிகம்,மீனம் ராசியில் பிறந்தவர்கள் செக்ஸ் ஆர்வம் குறைவாக இருக்கும்.

நட்சதிரங்களுக்கும் செக்ஸ் உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
அசுவினி, மிருகசீரிடம், மகம், உத்திரம், அனுசம், மூலம்,உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகம் இருக்கும்.

பரணி, திருவாதிரை, புனர்பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, திருவாணம், பூராடம், ரேவதி நட்சத்தில் பிறந்தவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிதமாக இருக்கும்.

கார்த்திகை, ரோகிணி, பூசம், ஆயில்யம் , சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், சதையம், பூரட்டாதி, உத்திரட்டாதி சராசரி செக்ஸ் உணர்வு இருக்கும். அதைவெளியெ காட்டிக் கொள்ளமாட்டார்கள் அதற்காக ஏங்குவார்கள்.

செக்ஸ் ஆர்வமின்மை, ஆர்வம், மிருதுதன்மைகள் அமையும் ஜாதகம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

லக்கினாதிபதி சனியாக இருந்து செவ்வாய்,கேது பார்வை, தொடர்பு இருந்தால் ஆர்வம் குறையும்.

லக்கினத்தில் கேது, சனி இருந்தால் ஆர்வம் குறையும் .
ராகு சனிக்குயிடையே எட்டாம் வீடு இருந்து, குருவின் பலம்குறைந்தால் ஆர்வம் குறையும்.

சனி, சூரியன், ராகு இணைந்திருந்தால் ஆர்வம் குறையும்.
கேது, சனி அல்லது செவ்வாய், சனி சந்திரனை பார்த்தால் ஆர்வம் குறையும்.
புதன் எட்டாம் அதிபதியாகி.எட்டில் ராகு, சனி அல்லது கேது, சனி இருந்தால் ஆர்வம் இருக்காது

எட்டில் புதனும்,சனியும் இருந்தால் ஆர்வம் குறையும்
ஒரு ஆண் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் ஆண் ரராசியில் இருந்தால் பெண்களால் நண்மையிரது.

ஒரு பெண் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் பெண் ராசியில் இருந்தால் ஆண்களால் நண்மையிரது.

எட்டில் செவ்வாய், ஆறில் சனி, இரண்டில் சூரியன் இருந்தால் ஒயாது செக்ஸ் உறவில் ஈடுபடுவர்கள்.

புதன், சுக்கிரன் ஏழில் இணைந்தால் நல்ல துணையும் சுகமான இன்பத்தை அனுபவிப்பார்கள்.

மிதுனம், துலாம், ரிசபம், இவைகளில் சுக்கிரன் இருந்தாலும், ஏழில் சுக்கிரன் இருந்தாலும் காம உணர்வு அதிகம்.

சுக்கிரன் 1-5-9-ல் இருந்தால் அந்த ஜாதகர் ஆயுள் முழுவதும் பெண்களின் அங்க அவயங்களைப்பற்றி எப்போதும் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

 எட்டாம் அதிபதி சூரியனாகில் உஷ்னத்தால் பாதிக்கப்படும்.கடினமாக அமையும்.

எட்டாம் அதிபதி சந்திரனாகில் குளிற்வுடன் நீண்ட இன்பம் தரும
எட்டாம் அதிபதி செவ்வாயனால் உறுப்புகள் கடினமாகவும், வெறித்தனம், ஈடுபடும்போது எரிச்சல், வலியும் ஏற்படும்.

எட்டாம் அதிபதி புதனால் பலகினமும், தாழ்வு மனப்பான்மை, ஏற்படும். எட்டாம் அதிபதி குருவானால் உறுப்புகள் பலமுடன் இருக்கும், அளவான திருப்தியான சுகம் கிடைக்கும்.

எட்டாம் அதிபதி சுக்கினாகில் அழக உடல் உறுப்புகள். குழைவுடன் இருக்கும். இன்பத்தை அடைவதற்கு தடையிராது.

எட்டாம் அதிபதி சனியானால் அழகாற்ற உறுப்புகள், ஒழுங்கற்றவை, அறுவறுக்க தக்கதகவும், துர்நாற்றம் விசும்.

எட்டில் உள்ளள, பார்த்த கிரகங்களின் நிலைகலை ஆராய்ந்து பலன் கணவேண்டும்.

உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்ன தோள்.
இவளைத் தழுவும் போதெல்லாம் என் உயிர். சோர்வு நீங்கிப் புத்துணர்வுடன் அளிர்ப்பதால் இவள் உடல். அமிழ்தத்தால் ஆகியது என்றே கருதுறேன்.
புகருந் தனனதிரி கூடிக் கோணமேகப் பொன்னவன் நோக்கிட வேயிவனைப்
புணர்மாமுகை மடவார் பலர் தொடர்வார்க மடைவாரின்
பூங்கணை மன்மதன் பாங்குடையான்
லக்கினத்திற்கு 2-3- ஆம் அதிபதிகளுடன் சுக்கிரன்
இணைந்து. 1-5-9-ல் ஒன்றில் இருந்து குரு இவர்க ளைப் பார்க்கமால் இருந்தால் ஜாதகர் பல பெண்க ளைக்கூடி மகிழ்வர்கள். எளிதில் பல பெண்களை வசீகரம் செய்து பலர் இவரது செயலுக்கு மயங்கி சுகம் அனுபவித்து. போவர்கள் மன்மதனைப் போல் சுகம் தருவார்.
பாரப்பா யின்னமொரு புதுமை கேளு
பாம்புடனே மூன்றோனும் தீயனாகில்
கூறப்பா யெத்திடத்தில் கூடிட்டாலும்
குமரி கள்ளப் புருஷனையும் கூடுவாளாம்
ஆராப்பா அகந்தனிலே யிவள்தான் மூப்பி
ஆளனுமே இவள் சொல்லை மீறுவதில்லை
ஊரப்பா வூரருகில் கடலும்முண்டு
உத்தமனே யிருக்குமடா ஆறுமாரே
மூன்றாம் அதிபதியுடன் ராகு, கேது இணைந்திருந்தால் ஜாதரின் மனைவி /(ஜாதகியின் கணவன) பிறரை கூடி மகிழ்வர்கள் இவர்கள் தான் மூத்தவர்கள். இவர்களின் மனைவிக்கு ஜாதகர் அடங்கி நடப்பார்கள்.சொல்லை மீறி நடக்க மாட்டான்.
இவர்களின் ஊருக்கருகில் நீர் நிலைகள் இருக்கும்.
இந்த விதி ஆண் /பெண் இருவருக்கும் பொருந்தும். இந்த அமைப்புள்ள ஜாதகர் /ஜாதகியார்களை நாம் தான் நழ்வழிகாட்ட வேண்டும்.நாமது கடமையாகும்
குருவருல் இருந்தால் திருவருள் கிட்டும்
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

Tuesday, 8 January 2019

அடிப்படைஜோதிடம்

                                                அடிப்படைஜோதிடம்

சோதிடம் என்பது, வானமண்டலத்தில் உள்ள கிரகங்களின் கதிர்கள் மனித வாழ்வை எப்படி நிர்ணயிக்கிறது என்பது பற்றிய அறிவியலே சோதிடம்.


விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று கிடையாது.
ஆனால் அதை எவ்வாறு நாம் அனுபவிக்கப் போகிறோம் என்பது தான் ஜோதிடம் கூறும் சூட்சுமம். ஜோதிடத்தில் 12 பாவங்கள் ஆனால் அனைவருக்கும் 337 பரல்கள் (மதிப்பெண்கள்) தான். அப்படியிருக்க ஒரு பாவம் பலவீனமானால் கண்டிப்பாக மற்றொரு பாவம் பலமாகத்தான் இருக்கும் அப்படி இருக்கும் பாவ பலத்தை நாம் எப்படி நம் விதிகளுக்கு பயன் படுத்தப் போகிறோம் என்பது தான் இந்த சூட்சுமம். இது ஜோதிடத்தை உணர்பவர்களுக்கு மட்டுமே தெரிய வரும்.

உதாரணமாக
12ம் இடம் சம்பந்தப்பட்ட திசா புத்தி அந்தர சூட்சும காலங்களில் விரயம் நட்டம் செலவுகள் நடக்கும் என்பது ஜோதிட விதி.


இனி சோதிடத்தின் அடிப்படை விஷயங்களை தெரிந்துக்ள்ளலாம்.


1.1 வாய்பாடுகள்

1 நாள் = 60 நாழிகை = 24 மணி
1 நாழிகை = 60 விநாழிகை = 24 நிமிடம்
1 விநாழிகை = 60 தற்பரை = 24 வினாடி

ராசி மண்டலம் = 360 பாகைகள் = 12 ராசிகள்
1 ராசி = 30 பாகைகள்= 2 ¼ நட்சத்திரங்கள்
1 நட்சத்திரம் = 13 பாகை 20 கலை = 4 பாதங்கள்
1 பாதம் = 3 பாகை 20 கலை

1 பாகை = 60 கலை
1 கலை = 60 விகலை

1.2 கிரகங்கள் 9

1. சூரியன்
2 சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது


1.3 ராசிகள் 12       
1.4 நட்சத்திரங்கள் 27

1 அசுவனி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகினி
5. மிருகசீரிஷம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. அஸ்த்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி.


1.5 ராசிகளும் அவற்றின் அதிபதிகளும் 



மேஷத்தின் அதிபதி செவ்வாய்
ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்
மிதுனத்தின் அதிபதி புதன்
கடகத்தின் அதிபதி சந்திரன்
சிம்மத்தின் அதிபதி சூரியன்
கன்னியின் அதிபதி புதன்
துலாத்தின் அதிபதி சுக்கிரன்
விருசிகத்தின் அதிபதி செவ்வாய்
தனுசுவின் அதிபதி குரு
மகரம் மற்றும் கும்பத்தின் அதிபதி சனி
மீனத்தின் அதிபதி குரு.


1.6. கிரகங்களும் அவற்றின் நட்சத்திரங்களும்



1.7. நட்சத்திரத்தின் உட்பிரிவு

ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வரு பாகத்தையும் “பாதம்” என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாகப்பிரிக்கப் பட்டிருக்கிறது.

அதாவது அசுவனியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் அசுவனி முதல் பாதம் என்றும், இரண்டாம் பாகம் அசுவனி இரண்டாம் பாதம் என்றும், மூன்றாம் பாகம் அசுவனி மூன்றாம் பாதம் என்றும், நான்காம் பாகம் அசுவனி நான்காம் பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதாவது பரணியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் பரணி முதல் பாதம் என்றும், இரண்டாம் பாகம் பரணி இரண்டாம் பாதம் என்றும், மூன்றாம் பாகம் பரணி மூன்றாம் பாதம் என்றும், நான்காம் பாகம் பரணி நான்காம் பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இதே போல மற்ற நட்சத்திரங்களுக்கும் தெரிந்து கொள்க.



1.8 ராசிகளும் அவற்றில் அடங்கும் நட்சத்திரங்களும்

ஒரு ராசிக்கு ௨ ¼ நட்சத்திரங்கள் என்று முன்னமே தலைப்பு 1.1 – ல் பார்த்ததை நினைவு கொள்ளவும். அதாவது ஒரு ராசிக்கு (2 x 4) + 1 = 9 பாதங்கள்




மேஷ ராசியில் அசுவனியின் 4 பாதங்களும், பரணியின் 4 பாதங்களும், கார்திகையின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

ரிஷப ராசியில் கார்த்திகையின் மீதம் 3 பாதங்களும், ரோகினியின் 4 பாதங்களும், மிருகசீரிடத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

மிதுன ராசியில் மிருகசீரிடத்தின் கடைசி 2 பாதங்களும், திருவாதிரையின் 4 பாதங்களும், புனர்பூசதின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

கடக ராசியில் புனபூசத்தின் கடைசி 1 பாதமும், பூசத்தின் 4 பாதங்களும், ஆயில்யத்தின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)

சிம்ம ராசியில் மகத்தின் 4 பாதங்களும், பூரத்தின் 4 பாதங்களும், உத்திரத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

கன்னி ராசியில் உத்திரத்தின் மீதம் 3 பாதங்களும், அஸ்தத்தின் 4 பாதங்களும், சித்திரையின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

துலா ராசியில் சித்திரையின் கடைசி 2 பாதங்களும், சுவாதியின் 4 பாதங்களும், விசாகத்தின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

விருச்சிக ராசியில் விசாகத்தின் கடைசி 3 பாதங்களும், அனுஷத்தின் 4 பாதங்களும், கேட்டையின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)

தனுசு ராசியில் மூலத்தின் 4 பாதங்களும், பூராடத்தின் 4 பாதங்களும், உத்திராடத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

மகர ராசியில் உத்திராடத்தின் கடைசி 3 பாதங்களும், திருவோனத்தின் 4 பாதங்களும், அவிட்டத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

கும்ப ராசியில் அவிட்டத்தின் கடைசி 2 பாதங்களும், சதயத்தின் 4 பாதங்களும், பூரட்டாதியின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

மீன ராசியில் பூரட்டாதியின் கடைசி 3 பாதங்களும், உத்திரட்டாதியின் 4 பாதங்களும், ரேவதியின் 4 பாதங்களும்ம் அடங்கும். (1 + 4 + 4 = 9)

1.9 ராசிகளின் வகைகள

1.9.1. சரம், ஸ்திரம், உபயம் என்ற அடிப்படையில் மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது...

மேஷம், கடகம், துலாம், மகரம் இந்நான்கும் சர ராசிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம் கும்பம் இந்நான்கும் ஸ்திர ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு மீனம் இந்நான்கும் உபய ராசிகள்.


1.9.2 & 3. ஒற்றை (ஆண்) ராசி, இரட்டை (பெண்) ராசி என்ற அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது...

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இந்த ஆறு ராசிகளும் ஆண் ராசிகள் அல்லது ஒற்றை ராசிகள்.
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இந்த ஆறு ராசிகளும் பெண் ராசிகள் அல்லது இரட்டை ராசிகள்.

1.9.4 & 5 மேலும் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்ற அடிப்படையிலும், கிழக்கு, மேற்கு வடக்கு தெற்கு என்ற அடிப்படையிலும் நான்கு வகையாக பிரித்திருக்கிறார்கள்

மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்றும் கிழக்கு ராசிகள், நெருப்பு ராசிகள்.
ரிஷபம், கன்னி, மகரம், இம்மூன்றும் தெற்கு ராசிகள், நிலம் ராசிகள்.
மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்றும் மேற்கு ராசிகள், காற்று ராசிகள்.
கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்றும் வடக்கு ராசிகள், நீர் ராசிகள்





1.10. ராசிகளில் கிரக பலம்.

1.10.1. உச்சம், நீச்சம்
சூரியன் மேஷத்தில் உச்சம், துலாத்தில் நீச்சம்
சந்திரன் ரிஷபத்தில் உச்சம், விருச்சிகத்தில் நீச்சம்
செவ்வாய் மகரத்தில் உச்சம், கடகத்தில் நீச்சம்
புதன் கண்ணியில் உச்சம், மீனத்தில் நீச்சம்
குரு கடகத்தில் உச்சம், மகரத்தில் நீச்சம்
சுக்கிரன் மீனத்தில் உச்சம், கண்ணியில் நீச்சம்
சனி துலாதில் உச்சம், மேஷத்தில் நீச்சம்

1.10.2. ராசிகளில் பகை பெரும் கிரகங்கள் (புலிப்பாணி ஜோதிடத்தின்படி)

மேஷத்தில் சந்திரன் பகை
ரிஷபத்தில் சூரியன் பகை
மிதுனத்தில் சூரியன், சந்திரன் பகை
கடகத்தில் சூரியன், புதன், சனி பகை
சிம்மத்தில் சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி பகை
கண்ணியில் சூரியன் பகை
துலாத்தில் சந்திரன், செவ்வாய் பகை
விருச்சிகத்தில் சூரியன், குரு, சுக்கிரன், சனி பகை
தனுசுவில் இல்லை
மகரத்தில் சூரியன், சந்திரன் பகை
கும்பத்தில் சூரியன், சந்திரன் பகை
மீனத்தில் இல்லை

1.11 திதிஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம்
ஆகும். திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி வரை உள்ள
பதினைந்து நாட்களும், தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள
பதினைந்து நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்.


1.12 வறண்ட ராசிகள்
மேஷம்,மிதுனம்,சிம்மம்,கன்னி ஆகிய ராசிகள் வறண்ட ராசிகள்.

முரட்டு ராசிகள்
மேஷம்,விருச்சிகம் ஆகிய ராசிகள் முரட்டு ராசிகள் ஆகும்.

1.13 ஊமை ராசிகள்
கடகம்,விருச்சிகம்,மீனம் ஆகிய ராசிகள் ஊமை ராசிகள் ஆகும்.
நான்கு கால் ராசிகள்
மேஷம்,ரிஷபம்,சிம்மம்,மகரம் ஆகிய ராசிகள் நான்கு கால் ராசிகள் ஆகும்.
இரட்டை ராசிகள்
மிதுனம்,தனுசு,மீனம் ஆகிய ராசிகள் இரட்டை ராசிகள் ஆகும்.

1.14 லக்னம்  

ஒரு ஜாதகத்தில் இடம் பெறும் ராசிக் கட்டத்தில் 'ல' என்றோ, அல்லது 'லக்' என்றோ, அல்லது 'லக்னம்' என்றோ குறிப்பிட்டிருக்கும் ராசியே முதல் வீடாகும். இங்கே கொடுத்திருக்கும் ராசிக் கட்டத்தைப் பாருங்கள். இங்கே 'லக்னம்' என்று குறிப்பிட்டிருக்கும் ராசி மேஷ ராசி. எனவே இதுவே முதல் வீடு. இதிலிருந்து வரிசைக் கிரமமாக எண்ணினோம் என்றால் ரிஷபம் 2வது வீடு. மிதுனம் 3வது வீடு. கடகம் 4வது வீடு. சிம்மம் 5வது வீடு. கன்னி 6வது வீடு. துலாம் 7வது வீடு. விருச்சிகம் 8வது வீடு. தனுசு 9வது வீடு. மகரம் 10வது வீடு. கும்பம் 11வது வீடு. மீனம் 12வது வீடு

மீனம் 12 மேஷம் 1 (லக்னம்) ரிஷபம் 2 மிதுனம் 3
கும்பம் 11 கடகம் 4
மகரம் 10 சிம்மம் 5
தனுசு 9 விருச்சிகம் 8 துலாம் 7 கன்னி 6


1.15 கேந்திர, திரி கோண, மறைவு வீடுகள்

ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு
என்பார்கள்.உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது.

அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.

லக்கினத்தை - முதல் வீடு என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

- 1 , 5 , 9 - ஆகிய வீடுகள் - திரி கோண ஸ்தானம். (லக்ஷ்மி ஸ்தானம்)

- 1 , 4 , 7 ,10 - கேந்திர வீடுகள் என்பர். ( விஷ்ணு ஸ்தானம் )


- 3, 6 , 8 , 12 - மறைவு வீடுகள் என்று கூறுவர். அதாவது , இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் - பலம் இழந்து இருக்கும்..

- 2 , 11 - உப , ஜெய ஸ்தானங்கள் என்பர்.

1 ஆம் வீடு - திரி கோணமும் , கேந்திரமும் ஆகிறது...
எந்த ஒரு கிரகமும் - திரி கோணத்திலோ , கேந்திரத்திலோ - நின்றால் - அது பலத்துடன் நிற்கிறது என்று அர்த்தம்.

2 , 11 - வீடுகளில் நின்றால் - பரவா இல்லை , நல்லது.

3 ஆம் வீடு - சுமார்.

6 ,8 ,12 - ஆம் வீடுகள் - நல்லதுக்கு இல்லை. அப்படினா என்ன, ஒரு சுப கிரகம் , இந்த வீடுகள் லே இருந்தா, அதுனாலே ஏதும் , பெருசா நல்லது பண்ண முடியாது.

1.16 ஒரு கிரகம் கெட்டு விட்டது , பலம் இல்லை என்று எப்படி கூறுவது?

ஒரு கிரகம் , நீசம் ஆகி இருந்தால்.... மறைவு வீடுகளில் இருந்தால்... பகை வீட்டில் இருந்தால்... பகை கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால்... , அந்த கிரகம் சரியான நிலைமையில் இல்லை என்று பொருள்.

எல்லா கிரகத்துக்கும் ஏழாம் பார்வை - பொது.
சனி க்கு - 3 , 10 ஆம் பார்வைகள் உண்டு.
செவ்வாய்க்கு - 4 , 8 ஆம் பார்வைகளும் உண்டு.
குருவுக்கு - 5 , 9 ஆம் பார்வைகளும் உண்டு.    

கிரகங்களின் பலன்கள்
1
மேஷ லக்கினம்

யோககாரகர்கள்: குரு, சூரியன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி,
**** குரு தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால் இந்த லக்கினக்காரர்
களுக்குத் தீய பலன்களையே கொடுப்பார். அவர் இந்த லக்கினக்காரர்
களுக்கு 12ஆம் இடத்து அதிபதியும் ஆவார். அதை மனதில் கொள்க!
சனியுடன் குரு சேரந்தால் அது விதிவிலக்கு. இருவரும் 9, 11ஆம்
இடத்திற்கு உரியவர்கள் ஆகவே தீமைகளில் இருந்து விலக்கு
அதையும் மனதில் கொள்க!
மாரக அதிபதி: (killer) சுக்கிரன்
==================================================
2
ரிஷப லக்கினம

யோககாரகர்கள்: சூரியன், சனி
யோகமில்லாதவர்கள்: குரு, சந்திரன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:புதன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன், சனி ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு, சந்திரன்
==================================================
3
மிதுன லக்கினம்

யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்: சனி, குரு
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்:சனியுடன் குரு ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) சந்திரன், சனி
====================================================
4.
கடக லக்கினம்

யோககாரகர்கள்: குரு, செவ்வாய், சந்திரன்
யோகமில்லாதவர்கள்: சுக்கிரன், பதன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:குரு, செவ்வாய், சந்திரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: செவ்வாய் கேந்திர திரிகோணங்களில்
இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்
மாரக அதிபதி: (killer) சனி
=======================================================
5
சிம்ம லக்கினம்

யோககாரகர்கள்: சூரியன், குரு, செவ்வாய்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி
நல்ல பலன்கள்: சந்திரன் சேர்க்கையை வைத்து நல்ல பலன்களைக் கொடுப்பார்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்: செவ்வாய் லக்கினத்தில்
இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்
மாரக அதிபதி: (killer) சனி
=======================================================
6
கன்னி லக்கினம்:

யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: செவ்வாய், சந்திரன், குரு
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
=======================================================
7.
துலா லக்கினம்

யோககாரகர்கள்: சனி, புதன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
========================================================
8
விருச்சிக லக்கினம்

யோககாரகர்கள்: குரு, சந்திரன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன் மற்றும் சந்திரன் இருவரும்
சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு (Jupiter if illrelated will become a Maraka)
========================================================
9
தனுசு லக்கினம்:

யோககாரகர்கள்: புதன், செவ்வாய், சூரியன்
யோகமில்லாதவன்: சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சூரியனும் ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) சனீஷ்வரன்.
========================================================
10
மகர லக்கினம்:

யோககாரகர்கள்: புதன், சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது
இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
========================================================
11
கும்ப லக்கினம

யோககாரகர்கள்:சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது
இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு, செவ்வாய்
======================================================
12
மீன லக்கினம்.

யோககாரகர்கள்: செவ்வாய், குரு
யோகமில்லாதவர்கள்: சனி, சுக்கிரன், சூரியன், புதன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை
மாரக அதிபதி: (killer) சனி, புதன்
_______________________________________________________________________________


குரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்

நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.

குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் ஆகும். குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார். பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும்.

கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார். குரு தனுசு மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். குருவிற்கு சூரியன், சந்திரன் செவ்வாய் நண்பர்கள், புதன் சுக்கிரன் பகைவர். சனி,ராகு, கேது சமம். பல்வேறு நற்பலனை வழங்கும் யோகங்கள் குரு கிரக சேர்க்கை போது உண்டாக்குவார்.

ஜென்மத்தில் குரு
குரு ஜென்ம லக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பு, நல்ல பழக்க வழக்கம், சிறப்பான பேச்சாற்றல், பரந்த மனப்பான்மை, நீண்ட ஆயுள், சிறப்பான நட்புக்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். குரு பலம் இழந்து இருந்தாலும் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற இடையூறு உண்டாகும்.

குரு 2ல் இருந்தால்
தன ஸ்தானமான 2ல் குரு சுபர் சேர்க்கையும் இருந்தால் தாராள தன வரவு, நல்ல பேச்சு ஆற்றல், வசதி, வாய்ப்பு, குடும்ப வாழ்வில் ஒற்றுமை,நல்ல கண் பார்வை உண்டாகும். குரு தனித்து இருந்தால் பொருளாதார ரீதியாக சில சங்கடம் உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் பண கஷ்டம், குடும்ப வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.

குரு 3ல் இருந்தால்
குரு 3ல் இருந்தால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம், எதிலும் தனித்து செயல்படும் நிலை ஏற்றம் உயர்வு உண்டாகும். தனித்து குரு இருந்தால் இளைய சகோதர தோஷம் ஆகும். ஆண் கிரக சேர்க்கை உடன் இருந்தால் சேர்க்கை உடன் பிறப்பில் அனுகூலம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சகோதர தோஷம் ஏற்படும்.

குரு 4ல் இருந்தால்
கேந்திர ஸ்தானமான 4ல் குரு இருந்தால் வசதி வாய்ப்பு, செல்வம், செல்வாக்கு, அசையா சொத்து யோகம், நல்ல பழக்க வழக்கம், நல்ல கல்வி ஆற்றல், சுக வாழ்வு உண்டாகும். தனித்து இல்லாமல் கிரக சேர்க்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. தனித்து பலம் இழந்தால் சுக வாழ்வு பாதிப்பு, அசையா சொத்து அமைய தடை உண்டாகும்.

குரு 5ல் இருந்தால்
5ல் குரு இருந்தால் நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை, பொது காரியம், சமூக நல பணியில் ஈடுபாடு, சிறப்பான குடும்ப வாழ்வு, பெரியோர் ஆசி உண்டாகும். தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஆகும். சுப கிரக சேர்க்கையுடன் இருந்தால் சிறப்பான புத்திர பாக்கியம் வசதி வாய்ப்பு உண்டாகும்.

குரு 6ல் இருந்தால்
குரு 6ல் இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு, நல்ல ஆரோக்கியம், சிறப்பான குடும்ப வாழ்வு, பொருளாதார ரீதியாக அனுகூலம் உண்டாகும். குரு பலம் இழந்தால் வயிறு கோளாறு, பெரியவர்கள் சாபத்தால் வாழ்வில் மன குறை உண்டாகும்.
குரு 7ல் இருந்தால்
குரு ஜென்ம லக்கினத்திற்கு 7ல் இருந்தால் சுபர் சேர்க்கை மற்றும் சுபர் பார்வையுடன் இருந்தால் மன வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். நல்ல அழகான மனைவி, சிறப்பான குடும்ப வாழ்வு, வசதியான பெண் மனைவியாக வரும் யோகம் உண்டாகும். 7ல் தனித்து இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் (கேந்திராதிபதி தோஷம்) தோஷத்தை உண்டாக்கும் பாவிகள் சேர்க்கை பெற்றால் மண வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.

8ல் இருந்தால்
குரு பகவான் 8ல் பலமாக இருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடீர் தன சேர்க்கை இருக்கும் இடத்தில் நல்ல பெயர் இறுதி நாட்கள் அமைதியாக இருக்கும் நிலை உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் நோய், உடம்பு பாதிப்பு, சாபத்தால் மன அமைதி இல்லாத நிலை உண்டாகும்.

9ல் இருந்தால்
குரு பகவான் 9ல் இருந்தால் தாராள தன சேர்க்கை, பூர்வீகத்தால் அனுகூலம், பெற்றோர் மூலம் அனுகூலம், தந்தைக்கு நீண்ட ஆயுள், பொது பணி, தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நல்ல பழக்க வழக்கம், பெரியோர்கள் ஆசி உண்டாகும்.

10ல் இருந்தால்
குரு பகவான் 10ம் வீட்டில் இருந்தால் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு பண நடமாட்டம் கொடுக்கல் வாங்கல் தொடர்புள்ள தொழில், அல்லது துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நேர்மையான வழியில் செல்லும் நிலை, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கிரக சேர்க்கையுடன் பலம் இழக்காமல் இருப்பது நல்லது. தனித்து இருந்தால் நிறைய தடைகள் உண்டு.

11ல் இருந்தால்
குரு 11ல் இருந்தால் தாராள தன வரவு, நல்ல அறிவாற்றல், வசதி வாய்ப்பு, உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் கௌரவம் உண்டாகும். புத்திர வழியில் அனுகூலம், சிறப்பான குடும்ப வாழ்வு, திடீர் அதிர்ஷ்டம், ஸ்பெகுலேஷன் மூலம் ஏற்றம் ஏற்படும்.

குரு 12ல் இருந்தால்
குரு 12ல் இருந்தால் பண வரவில் இடையூறு, வீண் செலவுகள், சுப காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். குரு 6, 8க்கு அதிபதியாக இருந்து 12ல் இருந்தால் நற்பலனை உண்டாக்குவார். 12ல் குரு சுபர் பார்வை உடன் இருந்தால் நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு, சுப செலவு, சிறப்பான கண் பார்வை உண்டாகும்.
_________________________________________________________________________

ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்

ஜென்ம லக்கினத்தில்
சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது அல்ல.

2ல் இருந்தால்
சுக்கிரன் ஜென்ம லக்னத்திற்கு 2ல் இருந்தால் வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம் அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாகும். கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் நிலை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்பு தீய பழக்க வழக்கம் உண்டாகும்.

3ல் சுக்கிரன்
சுக்கிரன் 3ல் இருந்தால் எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக இளைய உடன் பிறப்பு ஸ்தானம் என்பதால் இளைய சகோதரி பிறப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும்.

சுக்கிரன் 4ல்
சுக்கிரன் 4ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், கல்வி, அசையும் அசையா சொத்து, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர் பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். பெண்ணுக்கு 4ம் வீடு கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால் கற்பு நெறி தவறிய பெண்ணாக இருப்பாள்.

5ம் வீடு
சுக்கிரன் 5ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும்.

6ல் இருந்தால்
சுக்கிரன் 6ல் இருந்தால் உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண வாழ்வில் பிரச்சனை, கண் களில் பாதிப்பு, பெண்கள் வழியில் எதிர்ப்பு, ரகசிய நோய்கள் உண்டாகும்.

7ல் இருந்தால்
சுக்கிரன் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் வசதி, வாய்ப்பு ஏற்படும். கிரக சேர்க்கை பெற்றால் எத்தனை கிரகமோ அத்தனை தாரம். சுபர் சேர்க்கை நல்லது. பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும்.

8ல் இருந்தால்
சுக்கிரன் 8ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ சூரியன் இருந்தால் ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை, கண்களில் நோய் உண்டாகும்.

9ல் இருந்தால்
சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம், மனைவி மூலம் சொத்துக்கள் சேரும் யோகம், சந்தோஷமான குடுமுப வாழ்வு, பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம், பெண் சேர்க்கை உண்டாகும்.

10ல் இருந்தால்
சுக்கிரன் 10ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில் உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சில தவறான செயல்களில் ஈடுபட நேரிடும்.

11ல் இருந்தால்
சுக்கிரன் 11ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அசையும், அசையா சொத்து சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம், பெண், மூத்த உடன் பிறப்பு யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும் நிலை உண்டாகும். பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பு உண்டாகும்.

12ல் இருந்தால்
சுக்கிரன் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, உடல் உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு, வீண் விரயம், ஏழ்மை ஏற்படும்.

___________________________________________________________________________


1ல் அதாவது லக்கினத்தில் சனி

லக்கினத்தில் சனி இருப்பது பொதுவாக நல்லதல்ல. துரதிர்ஷ்டம் எனலாம்.
ஜாதகனின் உடல் நலத்திற்குக் கேடு. குழந்தைப் பருவத்தில் ஜாதகனுக்கு
உடல் நலமின்மை இருந்திருக்கும். சோம்பேறித்தனத்தை உண்டாக்கும்

வித்தியாசமான பழக்க வழக்கங்களை உடையவர்
குறுகிய மனப்பன்மை உடையவர்; நெறிமுறைகள் தவறியவர்
நலமில்லாத சிந்தனை உடையவர்: கொடுர சிந்தனைகளை உடையவர்
சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்
கடின மனதை உடையவர்.
தந்திரமானவர்
கஞ்சத்தனம் மிக்கவர்
சுத்தமில்லாதவர்
குறுகுறுப்பானவர்
உடற்குறைபாடுடையவர்
கீழ்த்தரமான பெண்களின் சகவாசம் உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------
2ல்

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்
அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணின் சகவாசம்
பிரபலமில்லாமை
தடைப்பட்ட கல்வி
கண்பார்வைக் குறைபாடு
சமூக அமைப்பிற்கு ஒத்துப்போகாதவர்
அதிரடியாகப் பேசுபவர்
சிலருக்கு திக்கிப் பேசும் குறைபாடு இருக்கும்
போதைப்பழக்கம், குறிப்பாகக் குடிப்பழக்கம் உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------
3ல்

துணிச்சல் மிக்கவர்
தைரியம் மிக்கவர்
விநோத மனப்பான்மையுடையவர் (எக்சென்ட்ரிக்)
புத்திசாலித்தனம் மிக்கவர்
செல்வந்தர்
சாதனைகள் படைப்பவர்
சிலர் தங்களது சகோதரர்களைப் பறி கொடுக்க நேரிடும்
அடுத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் கூடியவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
--------------------------------------------------------------------------------------------------
4ல்

மகிழ்ச்சி இல்லாதவர்
திடீர் இழப்புக்களை உடையவர்
குறுகிய மனப்பான்மை உடையவர்
நல்ல சிந்தனையாளர்
அரசியல் ஆதாயம் இல்லாதவர்
சிலருக்கு தடைகளை உடைய கல்வி அமையும்
இந்த அமைப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றி பெறுவார்கள்
தாய்க்குக் கண்டம்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
---------------------------------------------------------------------------------------------------
5ல்

குறுகிய மனதை உடையவர்
சகஜமாகப் பழகாதவர்
சிலருக்குக் குழந்தைகள் இருக்காது
விநோதமான கண்ணோட்டங்களை உடையவர்
எல்லாவற்றிற்கும் ஒரு கதை சொல்பவர்
அரசுக்கு எதிராக நடப்பவர்
பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------------
6ல்

பிடிவாதமான ஆசாமி
ஆரோக்கியம் இல்லாதவர்
சிலருக்குக் காது கேட்கும் குறைபாடுகள் இருக்கும்
வாக்குவாதம் செய்பவர்கள்
சிலருக்குப் பால்வினை நோய்கள் இருக்கும்
புத்திசாலி
சுறுசுறுப்பானவர்
சிலருக்குக் கடன் தொல்லைகள் இருக்கும்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
----------------------------------------------------------------------

7ல்
++++ஜாதகன் அரசனைப்போல வாழ்வான். இந்த இடம் சனிக்கு மிகவும்
உகந்த இடம். அதானல்தான் அந்தப்பலனை அவர் ஜாதகனுக்குக்
கொடுப்பார். அதே நேரத்தில் ஜாதகனுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும்
இல்லாமல் செய்துவிடுவார்.
அரசன் என்றாலே அது இரண்டும் போய்விடுமல்லவா?

அதோடு ஜாதகனை சோம்பேறியாக்கிவிடுவார்.
சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி! டபுள் இஞ்சின்.
ஜாலியான ஆசாமி.
சிலருக்கு ஆரோக்கியம் மிஸ்ஸாகிவிடும்
சிலருக்குக் காதுக்கோளாறுகள் இருக்கும்
(இரண்டு மனைவிகள் எனும்போது காதுக்கோளாறு இருப்பது நல்லதுதான்.
அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளூம்போது தேமே என்று
ஒன்றும் கேட்காதவர்போல இருந்து விடலாம்)
நளினமானவர்
மன உறுதியானவர் (இல்லாவிட்டால் இரண்டு பெண்களைச் சமாளிக்க முடியுமா?)
ஆர்வமுள்ளவர்
அரசியலுக்குப் போனால் வெற்றிபெறுவார்.
சிலருக்கு வெளிநாட்டு விருதுகள் கிடைக்கும்
-----------------------------------------------------------------------
8ல்
இது சனிக்கு உகந்த இடம் அல்ல! ஜாதகனுக்கு அடிக்கடி நோய் நொடிகள்
உண்டாகும், ஜாதகனை நேர்மை தவறச் செய்யும். துன்பங்கள் நிறைந்திருக்கும்.
சிலரை உறவினர்கள் கைவிட்டுவிடுவார்கள்

ஏமாற்றங்கள் மிகுந்த வாழ்க்கை
குடிப்பழக்கம் இருக்கும்.
பிறவர்க்கப் பெண்களுடன் தொடர்பு இருக்கும்
கண் பார்வைக் கோளாறு இருக்கும்.
தவறான உடல் உறவுகளில் ஈடுபாடு உண்டாகும்
ஆஸ்த்மா போன்ற நோய்கள் இருக்கும்
சனியுடன் மற்றும் ஒரு தீய கிரகம் இந்த இடத்தில் கைகோர்த்தால்
ஜாதகன் நேர்மையற்றவனாக இருப்பான்,
விசுவாசம் இல்லாத குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பான்.
கொடூரமான சிந்தனைகள் உடையவன்
நீண்ட ஆயுளை உடையவன்

(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-------------------------------------------------------------------------
9ல்
ஜாதகன் தான் எனும் அகங்காராம் மிக்கவன். ஈகோவினால் பல பிரச்சினைகளைச்
சந்திக்க நேரிடும். அதிக செல்வம் சேராது. சிலருக்குத் தந்தையின் அன்பு மற்றும்
அரவணைப்புக் கிடைக்காது. பாவச் செயல்களைச் செய்ய நேரிடும்.
சிலர் மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களைப் போட்டுப் பார்க்கவும் செய்வார்கள்

வழக்குகளில் வெற்றி பெறுபவன். அறக்கட்டளைகளைத் தோற்றுவிப்பவன்
கருமி. இல்லற வாழ்க்கையிலும் அந்தக் கஞ்சத்தனம் இருக்கும்.
சிலருக்கு இறையுணர்வு அறவே இருக்காது.
சாமியாவது, பூதமாவது போடா என்பான்.
----------------------------------------------------------------------
10ல்
++++இது நன்மை அளிக்கும் அமைப்பு.. சிலருக்கு உபகாரச் சம்பளம்
கிடைக்கும். Saturn makes one have scholarship
புத்திசாலித்தனம் மிகுந்து இருக்கும். ஆண்மை அதிகம் உடையவர்களாக
இருப்பார்கள். வீர புருஷர்களாக இருப்பார்கள்.
சபைகளில் தலைமை ஏற்கக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில்
எல்லா வசதிகளும் தேடிவரும்.

ஒரே ஒரு கஷ்டம். செய்யும் தொழிலை அல்லது வேலையை அடிக்கடி
மாற்றிக்கொண்டே இருப்பார்கள்

நல்ல உழைப்பாளி
சிலர் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். பணம் சேரும்.
தீடீர் உயர்வு, திடீர் மன அழுத்தம் இரண்டும் இருக்கும்
-------------------------------------------------------------------------------
11ல்
+++++இதுதான் சனிக்கு மிகச் சிறந்த இடம்.

சிலருக்கு அரசியல் ஆதாயம், வெற்றி கிடைக்கும்
சிலர் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள்
சிலர் மரியாதைக்கு உரியவர்களாக இருப்பார்கள்
சிலர் பிறருக்கு அச்சத்தைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
சிலருக்கு ஏராளமான இடங்கள் சொத்தாக இருக்கும்
வண்டி வாகன வசதிகள் மிகுந்து இருக்கும்!
---------------------------------------------------------------------------------
12ல்
இந்த இடம் சனியின் அமர்விற்கு மோசமான இடம்
சனி நல்ல பார்வை அல்லது சுயவர்கத்தில் நல்ல பரல்களைப்
பெறவில்லையானால் ஜாதகனுக்குக் கஷ்டமோ கஷ்டம்
ஜாதகனுக்குத் தோல்விமேல் தோல்வி!
எங்கே சென்றாலும் எதைத் தொட்டாலும் தோல்விமேல் தோல்வி!
ஜாதகன் கடைசியில் பெரிய ஞானியாகிவிடுவான்.
"போனால் போகட்டும் போடா" என்று பாடுவான்

ஜாதகனுக்கு செல்வமும் இருக்காது. மகிழ்ச்சியும் இருக்காது இரண்டும்
மறுக்கப்பட்டிருக்கும். பலவிதமான நோய்கள் வந்து இம்சைப் பட வைக்கும்
Saturn makes one devoid of happiness & wealth.
Will be tormented by many an illness
ஜாதகன் வெறுத்துப்போய் இரக்கமில்லாதவன் ஆகிவிடுவான்
தனிமைப்பட்டு விடுவான்.

(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
_______________________________________________________________________________________

1. லக்கினத்தில் ராகு ஜாதகன்

சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும் ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது. சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும் வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப் இரக்க வேண்டியிருக்கும், மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!

2. ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க நேரிடும் ஜாதகன் சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த சாதுரியங்களில் சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அடுத்தவன் கண்ணில் படாது. சட்டென்று கோபம் வரக்கூடியவன். பொதுவாகவே இரண்டில் தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது சேராது. அப்படியே இருந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும் ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான்.

3. ராகு 3ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து விடுவான். பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். எப்படிச் சாய்ப்பான் தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா பின்னே?) தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான் உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத் செலவு செய்வான். பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று செலவு செய்வர் இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்!3ஆம் வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்கள் தீய கிரகங்களுக்கு உகந்த இடங்கள் ஆகும்.

4. ராகு 4ஆம் வீட்டில் இருந்தால்:

மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை இரண்டையும் இல்லாமல் செய்துவிடுவான். மகிழ்ச்சி இருக்காது. சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் நிலைக்காது. வண்டி வாகனங்கள் இருக்காது. பல ஜாதகர்களை இந்த அமைப்பு பொடி நடையாக வாழ்க்கை முழுவதும் நடக்க வைத்துவிடும். உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி விடுவார்கள். சிலருக்கு தன் தாயின் மீதே பிடிப்பு இருக்காது! இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான் மோசமாகப் போவிடும். சோகமாகப் போய்விடும். வாழ்க்கை முழுவதும் அவதியாகிவிடும்.

5. ராகு 5ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு வேண்டிய அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன். உறவினர்கள் அவனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள் சிலருக்கு குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கும் ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக் குழந்தை இருக்காது.

6. ராகு 6ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். அது அவனைப் படுத்தி எடுக்கும் ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது அவனது வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள். ஜாதகன் தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான் anything under the sun என்று எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான். அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான். அவனுடைய தொழில் ஸ்தானமும், இந்த அமைப்பும் சேர்ந்தால், சிலர் ராணுவத்தில் பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பான். பல நண்பர்கள், கூட்டாளிகள் புடைசூழ அரசனைப் போல வாழ்வான். நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.

7. ராகு 7ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச் செலவு செய்பவனாக இருப்பான். சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு தேவையான புத்திசாலித்தனம் இருக்காது. சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவான் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான், இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் திட்டு வாங்க நேரிடும். அதீத நோயால், உடல் சீர்கெடும். சிலருக்குப் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.

8. ராகு 8ஆம் வீட்டில் இருந்தால்: 

ஜாதகன் அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல!) சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும். முன் கர்ம வினை தொடர்கிறது என்று பொருள். சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது. துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள் சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும் அநேக சூழ்நிலைகளில் தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச் செல்வி விலகிப் போய்விடுவாள். ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் (Piles Complaint) பெண்களாக இருந்தால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும்.

9. ராகு 9ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் இந்த இடத்தில் அமரும் ராகு ராஜ யோகத்தைக் கொடுப்பான். இல்லையென்றால் இல்லை! ராஜயோகம் உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று எல்லாம் அசத்தலாக இருக்கும் ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக ஜாதகன் இருப்பான். இந்த இடத்து ராகு ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்!

10. ராகு 10ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள் மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் பெற்றவனாக இருப்பான் அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்!

11. ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்:

பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக இருப்பான். செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பான். வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும் அல்லது அமையும். அத்தனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன் இருப்பான்

12. ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில் கோளாறுகள் உண்டாகலாம். சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும். வலுவில்லாதவன். மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் இருந்து வீழ்ச்சி அடைய நேரிடும் இந்த இடத்து ராகு, மேலும் ஒரு தீய கிரககத்தின் (சனி, அல்லது செவ்வாயின்) சேர்க்கை பெற்றால் வீழ்ச்சி நிச்சயமாக உண்டு.
 ______________________________________________________________________

 கேது இருப்பதற்கான பலன்கள

1ல்
லக்கினத்தில் கேது

ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான்.
பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத
விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள்
சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும்

மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு
எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள்

சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக
இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை
மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன்
இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும்
-----------------------------------------------------------------------------------------
2ல்
இரண்டில் கேது!

ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk)
படிப்பைப் பாதியில் விட்டவன் அல்லது படிக்காதவனாக இருப்பான்.
குறுகிய கண்ணோட்டம் உடையவனாக இருப்பான்.

குடும்ப வாழ்க்கை 32 வயதிற்கு மேல்தான் உண்டாகும்

சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், படித்தவர்களாக இருப்பார்கள்
மற்றவர்களுடைய சொத்திற்கு ஆசைப் படுபவர்களாக இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------
3ல்
மூன்றில் கேது.

ஜாதகன் உயர்ந்தகுடியில் பிறந்தவனாக இருப்பான். அதாவது உயர்ந்த குடும்பத்தில்
பிறந்தவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவன். தூணிச்சல் மிக்கவன்.
சாதனைகளைச் செய்யக்கூடியவன். எதிரிகளை ஒழித்துக் கட்டக்கூடியவன்.
செல்வத்தை அனுபவிக்கக் கூடியவன்.வளம் பெறக்கூடியவன். எல்லாவிதமான
சுகங்களையும் அனுபவிக்கக் கூடியவன். ஜீனியசாக (genius) இருப்பான்.
-----------------------------------------------------------------------------------
4ல்
நான்கில் கேது

இந்த இடம் கேதுவிற்கு உகந்த இடம் அல்ல. மாற்றிச் சொன்னால் ஜாதகனுக்கு
உகந்தது அல்ல!

நான்காம் வீடு இருதயத்திற்கான இடம். இங்கே கேது அமர்ந்தால் ஜாதகனுக்கு
இதய நோய்கள் (heart) வரலாம். வரும் என்று அடித்துச் சொல்லாமல், வரலாம்
என்று சொல்வதற்குக் காரணம், இந்த வீட்டில் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது
சேர்க்கை இருந்தால் வராது.

ஜாதகனுக்கு மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் என்று
எல்லாம் மறுக்கப்பட்டிருக்கும். உறவுகளே பகையாக மறிவிடும்.

சிலருக்குத் தாயன்பு என்பதே இல்லாமல் போய்விடும்.
---------------------------------------------------------------------------------------
5
ஐந்தில் கேது

ஜாதகன் கடினமான ஆசாமி. மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாதவனாக ஜாதகன்
இருப்பான். ஜாதகனுக்கு சந்ததி இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக
இருக்கும். அஜீரணக்கோளாறுகள் இருக்கும். அதனால் மேலும் பல நோய்கள்
உண்டாகி வாட்டும். பாவச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். மகிழ்ச்சி இருக்காது.

இந்த அமைப்பை சந்நியாச யோகம் என்பார்கள். அதுவே சுபக்கிரகங்களின்
பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் சாம்ராஜ்யத்தை ஆளும் யோகமாக
மாறிவிடும்.
----------------------------------------------------------------------------------------
6
ஆறில் கேது

ஜாதகன் அவன் இடத்தில், அவனுடைய இனத்தில் அல்லது அவனுடைய சமூகத்தில்
தலைவனாக இருப்பான். உயர்கல்வி பெற்றிருப்பான். தர்மசிந்தனை உடையவனாக
இருப்பான். சொந்த பந்தங்களை நேசிப்பான். பல பெருமைகளுக்கு உரியவனாக
இருப்பான். பலதுறைகளிலும் அறிவு உள்ளவனாக இருப்பான். பெருந்தன்மை
உடையவனாக இருப்பான். கேதுவிற்கு இந்த இடம் மிகவும் உகந்ததாகும்.

வயிற்றுக் கோளாறுகள் (stomach disorders) உண்டாகும்

----------------------------------------------------------------------------------------
7
ஏழில் கேது

ஜாதகனுக்கு, அவனுடைய மனைவியால் மகிழ்ச்சி கிடைக்காது. நடத்தை சரியில்லாத
பெண்களுடன் ஜாதகனுக்கு நட்பு அல்லது உறவு இருக்கும். அவர்களுக்காக
ஜாதகன் உருகக்கூடியவன். வாழ்க்கையில் வளமை இருக்காது.
மன அழுத்தங்களை உடையவன்.பயணிப்பதில் ஆர்வமுள்ளவன்.
அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கக்கூடியவன்

இந்த அமைப்பை உடைய சில ஜாதகர்களுக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி அல்லது
கணவன் அமையக்கூடும்
------------------------------------------------------------------------------------
8
எட்டில் கேது

ஜாதகன் அதீத புத்திசாலி. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவன்

சிலருக்கு ஆயுதங்களால் விபத்துக்கள் நேரிடும். சிலர் குறைந்த ஆண்டுகளே
உயிர் வாழ்வார்கள். பொதுவாக எட்டில் கேது இருந்தால் ஆயுள்தோஷம்

சிலருக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மீது மையல் இருக்கும். அடுத்தவன்
சொத்தை அபகரிக்கும் ஆசை இருக்கும். சிலர் கஞ்சனாக இருப்பார்கள்.

சிலருக்குப் புகழும் தலைமை ஏற்கும் தகுதியும் இருக்கும்.
----------------------------------------------------------------------------------
9
ஒன்பதில் கேது

ஜாதகன் பல பாவச்செயல்களைச் செய்யகூடியவன், பெற்றவர்களின் அன்பு,
பாசம், பரிவு போன்றவைகள் கிடைக்காது. காம இச்சைகள் மிகுந்தவன்.

சிலர் ஆன்மிகம், மத உணர்வு, தர்ம நியாயங்கள் இவற்றை எல்லாம் உதறி
விடுவார்கள். அப்படி உயர்ந்த சிந்தனைகள் உடையவர்களைக் குறை கூறுவதில்
ஜாதகன் ஆர்வமுடையவனாக செயல்படுபவனாக ஜாதகன் இருப்பான்.

சிலர் தங்களுடைய பாவச் செயல்களினால் தாழ்ந்து போய்விடுவார்கள்
--------------------------------------------------------------------------------
10
பத்தில் கேது

மக்கள் அனைவரையும் நேசிக்கும் மனது அல்லது பக்குவம் ஜாதகனுக்கு இருக்கும்.
சமூகக் காவலனாக ஜாதகன் இருப்பான். அல்லது அந்த நிலைக்குச் ஜாதகன்
உயர்வான்.
ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வாழ்க்கை முறைகள், வாழ்க்கைத் தத்துவங்கள்
ஆகியவற்றை அறிந்தவனாக இருப்பான்.

திறமைசாலியாக இருப்பான். செய்யும் தொழிகளில் நுட்பம் அறிந்தவனாக இருப்பான்.
கேது இந்த இடத்தில் இருப்பது ஒருவனின் தொழில் மேன்மைக்கு உகந்ததாகும்.
This is the best place for professional enhancement.
---------------------------------------------------------------------------------------
11
பதினொன்றில் கேது

ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது அந்த நிலைக்கு உயர்வான். அதிகம்
படித்தவனாக இருப்பான். கல்வியாளர்கள் மத்தியில் பெருமைக்கும் புகழுக்கும்
உரியவனாகத் திகள்வான். மகிழ்ச்சியில் திளைப்பான்

பல நல்ல குணாம்சங்கள் இருக்கும். பெருந்தன்மையும், நல்ல நோக்கங்களும்
உடையவனாக ஜாதகன் இருப்பான். அவன் தன்னுடைய செயல்களால் பலரிடமும்
நல்ல மதிப்பைபயும் மரியாதையையும் பெறுவான்
---------------------------------------------------------------------------------------
12
பன்னிரெண்டில் கேது

இந்த இடத்தில் கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வீடு
பேற்றை அடைந்து விடுவான் என்று நூல்கள் கூறுகின்றன. சரியாகத் தெரியவில்லை
பல் ஜோதிட நூல்கள் இதை வலியுறுத்திக் கூறுவதால் நம்புவோம்.

ஜாதகன் அடிக்கடி மாறக்கூடியவன். காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு
என்றிருக்கும். நிலையில்லாதவன்ஊர்சுற்றி, சிலருக்கு, கண்கள் பாதிப்பிற்குள்ளாகும்

பாவங்களைச் செய்துவிட்டு மறைக்கக் கூடியவன். துன்பங்களில் உழல்பவன்.

சிலர் மாய, ஜால வேலைகளில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்

சிலர் தனிமையை விருபுவார்கள். தனிமைப்பட்டும் வாழ்வார்கள்
---------------------------------------------------------------------------------------

லக்கினத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர்

சுறுசுறுப்பானவர்.
செந்நிற மேனி உடையவர்.
தேகம் எப்போதும் உஷ்ணமாக இருக்கும்.

இரண்டில் சூரியன் இருந்தால் கல்வி சுமாராக இருக்கும்
நல்ல உழைப்பாளி.
ஜாதகருக்குப் பொருள் சேரும்.

மூன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் Take it easy type
அல்லது Don't care type.
பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்

நான்கில் சூரியன் இருந்தால், ஜாதகரின் தாய்க்கு நன்மையல்ல
ஜாதகருக்கு உறவினர்களுடன் பகை உண்டாகும்.
அரசியல் செல்வாக்கு இருக்கும்

ஐந்தில் சூரியன் இருந்தால், குடும்பம் அளவாக இருக்கும்;
வாழ்க்கை வளமாக இருக்கும்.
தந்தைவழிச் சொத்துக்கள் இருக்காது
ஜாதகர் தன் முயற்சியால் உயர்வடைவார்

ஆறில் சூரியன் இருந்தால் பகைவர்கள் பக்கத்தில் வரமாட்டார்கள்
ஜாதகரின் குடும்பம் பெரியதாக இருக்கும்.

ஏழில் சூரியன் இருந்தால்
ஜாதகர் கடன், நோய்கள், பிணிகள், வழக்குகள், விவகாரங்கள் இல்லாதவர்.
பலரது பராட்டுக்க்களைப் பெறுபவர்
மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர்.
எதையும் சரிவரச் செய்யாதவர்.

எட்டில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.
எவருக்கும் பணிந்து போகாதவர்
இரக்கமற்ற குணத்தை உடையவர்
சிலருக்குக் கண்களில் குறைபாடுகள் இருக்கும்

ஒன்பதில் இருக்கும் சூரியனால் தந்தைக்கு இடையூறுகள் ஏற்படும்
ஜாதகருக்குத் தீயவழிகளில் பொருள் சேரும்
உறவினர்களுடன் விரோதம் ஏற்படும்
சுய முற்சியால் செல்வம் சேரும்

பத்தில் சூரியன் இருந்தால் அது ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும்
ஜாதகருக்கு நிரந்தத் தொழில் அல்லது வேலை இருக்கும்
அரசு தொடர்பு அல்லது அரசியல் தொடர்பு இருக்கும்
உடல் நலம் சீராக இருக்கும்
தன் அறிவினால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்

பதினொன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.
பலரைவைத்து வேலைவாங்கும் திறமை உடையவர்.
நண்பர்களால் பல உதவிகள் கிடைக்கும்

பன்னிரெண்டில் சூரியன் இருந்தால்
ஜாதகருக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது.
அதிகமான செலவுகள் ஏற்படும்
ஜாதகர் ஊர் சுற்றி. அதிகமான பயணங்களை மேற்கொள்வார்.
சந்ததிக் குறைபாடுகள் இருக்கும்.
உழைத்து முன்னேற்றம் காண்பவர்.
==========================================

ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் நிலைகளுக்கான பலன்கள்!

1
லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்!
உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும்.
சிலருக்கு (ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் சரியாக இல்லாவிட்டால்)
குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும்.
ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு
உடனே வரும்!

ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான்
சிலர் வன்கன்மையாளராகவும் (cruel) இருப்பார்கள்.
---------------------------------------------------------------------------------------

2
இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே
இருக்கும். சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம்
செய்பவர்கள் (argumentative)

செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல!
இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக்
கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும் தங்காது
அல்லது நிலைக்காது!
---------------------------------------------------------------------------------------

3
******மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை
அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும்
வந்து சேரும். தனித்தன்மை வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை
உடையவன்.

தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுச்
சிலர் வாழ்வார்கள்.
---------------------------------------------------------------------------------------

4
நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
உறவுகள், வீடு வாசல், சொத்துக்கள், தாய்ப்பாசம், வாகனவசதி
போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக
ஜாதகன் இருப்பான்.

இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த
அமைப்பின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை பட்டுக் கொண்டிருக்கும்

ஜாதகன் பெண்களின்மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர்
பெண்களுக்காக உருகி கோதாவரி ஆறு போல ஓடக்கூடியவர்களாக
இருப்பார்கள். மனப் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம்.

(பெண்பித்து இருந்தால் மனப்போராட்டம் ஏன் இருக்காது?:-))))
--------------------------------------------------------------------------------------

5
ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
பெண்குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில்
குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும்.
சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். தர்ம, நியாயங்கள்,
நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு வாழ நேரிடும்.

சிலர் குறுகியமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர்
எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளுகின்ற குணத்தை உடையவர்களாக
இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------
6
********ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும்
ஜாதகன் ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை
துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான்.

மனதில் பயமே இருக்காது. சிலருக்கு அதீத பெண் ஆசை இருக்கும்
அதாவது ஆதீதமான காம உணர்வுகள் இருக்கும். எப்போதும் காம
சிந்தனைகள் மேலோங்கி இருக்கும்.

சிலர் தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள்
=======================================================
7
ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகன் இருப்பான்.
சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் அது குறையும்.

சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சண்டைபிடிக்கும்,
அல்லது சண்டை போட்டு சட்டையைப் பிடிக்கும் மனப்பான்மை இருக்கும்
அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும். மனையாளும் அதனால்
பாதிக்கப்படுவாள்.

சிலர் கல்மனதுக்காரர்களாக இருப்பார்கள்.
--------------------------------------------------------------------------------------
8
எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
உடலும், உள்ளமும் நலமாக இருக்காது. சொத்து சேராது. சுகம்
எட்டிபார்க்காது.

சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். ஜாதகத்தில் வேறு அம்சங்கள்
நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் சீக்கிரமே சிவனடி சேர்ந்து விடுவான்.
தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாத மனதைக் கொண்டிருப்பான்.
--------------------------------------------------------------------------------------

9
ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
தந்தையோடு நல்ல உறவு இருக்காது. தந்தை மேல் அன்பு பாசம்
இருக்காது. ஜாதகன் அதிரடியான ஆள். கடுமையான ஆள்

ஜாதகன் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் உள்ளவனாக
இருப்பான். அதில் தேர்ச்சியும் பெறுவான்.
--------------------------------------------------------------------------------------
10
*******பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
இது செவ்வாய் நமக்கு நன்மைகளை அள்ளித் தரும் இடம்.
ஜாதகன் ராஜ அந்தஸ்துடன் இருப்பான். வீரன். சூரன். வெற்றியாளன்
ஆற்றல் உடையவன்.ஆர்வம் உடையவன்.

மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ் என்று எல்லாம் கிடைக்கும்
ஜாதகன் தேடிப்பிடிப்பான்.
----------------------------------------------------------------------------------------
11
********பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ், வளம் எல்லாம் இருக்கும்
வயாக்ரா சாப்பிடமலேயே ஆண்மை உணர்வு அதிகமாக இருக்கும்
மன உறுதி இருக்கும்.(அது இருந்தால் இது இருக்காதா என்ன?)

நிறைய நண்பர்கள், கூட்டாளிகள் இருப்பார்கள். ஜாதகன் உண்மையிலேயே
தனித்தன்மை வாய்ந்தவனாக இருப்பான்.

ஜாதகன் எதையும் தெளிவாகப் பேசக்கூடியவனாக இருப்பான்
=======================================================
12
பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
கண்களில் குறைபாடுகள் ஏற்படும். பயப்பட வேண்டாம். கண் நோய்கள்
ஏற்படலாம். ஜாதகன்

சோம்பல் உடையவன். சோம்பல்தான் அவனுடைய முதல் மனைவி!:-)))

பொருளாதார இழப்புக்கள் இருக்கும். பல சொத்துக்களைத் தொலைப்பான்
துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே ஜாதகனுக்கு எதிராகக் கொடிபிடிக்கும்

சிலர் படு கருமியாக இருப்பார்கள். சாப்பிடும்போது காக்காய் வந்தால்
கையைக் கழுவி விட்டு காகத்தை ஓட்டுபவர்கள் என்று வைத்துக் கொள்ளூங்கள்
===========================================================


சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்

சந்திரன் முதல் வீட்டில் இருந்தால் லக்கினத்தில் இருப்பது நல்லது ஆனால் சந்திரனுக்கு அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் நல்லது நட்பு வீடாக இருந்தாலும் நல்லது வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்க்கு நல்லது செய்வார். சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி பெறுவார் திடீர் பணவரவு இருக்கும்.

2-ல் சந்திரன் செல்வம் தருவார். நன்றாக பேச்சு வரும் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு இருக்கும் சொத்து சுகம் ஏற்படும். பெயரும் புகழும் உண்டாகக் காரணமாக இருப்பார். நல்ல கல்வி கிடைக்கும் சந்திரன் கெட்டால் செல்வத்தை இழக்க செய்யும். நல்ல பணவரவு இருக்காது. பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார்.

3-ல் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார். சகோதர சகோதரிகளை ஆதரிப்பார் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக இருப்பதால் அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். வாகனம் வசதி கிடைக்கும் சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.

4-ல் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும் 4 ஆம் வீடு வீட்டை குறிப்பதால் ஆறு குளம் கடலோரத்தில் வீடு அமையும். நண்பர்களுக்கு உதவி செய்வார். தாய்வழிச்சொத்து கிடைக்கும் கொடை குணம் இருக்கும்.

5-ல் சந்திரன் பலம் பெற்று இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். நல்ல அறிவாற்றலை தருவார் வாழ்க்கையில் உயர்ந்த நிலைய அடையவைப்பார். குழந்தைபாக்கியம் அமையும் ஆனால் பெண் குழந்தைகளே பிறக்கும். சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.

6-ல் சந்திரன் இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்பவர். விரோதிகளை உண்டு பண்னுவார். இளம் வயதில் மகிழ்ச்சி குறையும். சந்திரன் அசுபபலன் பெற்று இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார்.

9-ல் உள்ள சந்திரன் இருந்தால் நல்ல பாக்கியசாலியாக இருப்பார். புத்திரபாக்கியம் இருக்கும். உறவினர்கள் நல்ல உதவி செய்வார்கள். செல்வம் குவியும். சங்கீதம் நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். அம்மாவின் அரவணைப்பு இருக்கும்.

10-ல் உள்ள சந்திரன் தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வார். நல்ல செல்வ வளம் சந்திரன் தருவார். வாழ்க்கையில் உன்னதமான பல நல்ல காரியங்களை செய்வார். செய்தொழில்களில் பகைவர்களை வெற்றிக்கொள்ளும் தைரியத்தை தருவார்.

வாழ்க்கையில் பற்றிய எண்ணத்தை இயற்கையாக உண்டுபண்னுவார். தாய்வழியில் நல்லது செய்வார். நண்பர்களிடத்தில் நல்ல நட்பு உண்டுபண்னுவார். தொழில் நுட்பத்துறையில் ஈடுபட வைக்கும். தொழில்நுட்பத்துறையில் நல்ல அறிவு வளர செய்வார். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். சிலபேருக்கு அரசாங்கத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

11-ல் உள்ள சந்திரன் மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை தருவார். எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமையை தருவார். நல்ல தீர்க்காயுள் ஏற்படும். வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நல்ல செல்வ வளம் சேரும்.

12-ல் உள்ள சந்திரன் பாதங்களில் வலி உண்டாக செய்வான். வாழ்க்கையில் மதிப்பு இழக்க செய்வான். கண் பார்வை மங்க செய்வான். அறிவாற்றல் குறையும். குறுகிய மனப்பான்மை இருக்கும். மனஉளைச்சல் இருக்கும். செலவு கூடும்.


______________________________________________________________

குருபகவான் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்துப் பலன்கள்:


மேலே உள்ள பலன்கள் பொதுப்பலன்கள்தான். மற்ற கிரகங்களின்
சேர்க்கை ,பார்வை, அமர்ந்த பாவாதிபதியின் நிலைமை, லக்கினாதி
பதியின் நிலமை ஆகியவற்றை வைத்து மாறக்கூடியவை.

ஆகவே அலசும் போதும் அலசிப் பிழியும் போதும் இன்னும் பத்து
வாளி தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லது!:-))))




பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள்


முதல் பாவம்:

உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.

இரண்டாம் பாவம்:
குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது

மூன்றாம் பாவம்:

சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீத ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வீர தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.

நான்காம் பாவம்:

கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.

ஐந்தாம் பாவம்:

இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்தி – குழந்தைகள் பிறப்பது – எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, மதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.

ஆறாவது பாவம்:

தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம், ஜாதகரின் உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.

ஏழாவது பாவம்:

காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு. விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.

எட்டாவது பாவம்:


ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

ஒன்பதாம் பாவம்:

பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.

பத்தாம் பாவம்:

இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம், அரசாங்கப்பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.

பதினொன்றாம் பாவம்:

லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வீடு, மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.

பன்னிரண்டாம் பாவம்:

இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள் நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.
பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

 

Monday, 7 January 2019

சுவாதி நட்சத்திரம் அன்று நரசிம்ம வழிபாடு சிறப்பான பலன்களை தரும்.

சுவாதி நட்சத்திரம் அன்று நரசிம்ம வழிபாடு சிறப்பான பலன்களை தரும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?,கடன் தொல்லையா?,மனக்கவலை அதிகம் இருக்கிறதா?, நவக்கிரகங்கள் ஆட்டி படைக்கிறதா?, சொத்து பிரச்சனையா?,இன்னும் சொல்லிகொண்டே போகலாம்...
இதற்கெல்லாம் ஒரே தீர்வு என்ன?
வரும் சுவாதி நட்சத்திரத்தில் விரதம் இருந்து பாருங்கள், உங்கள் கவலைகள் எல்லாம் பஞ்சி போல் உங்களை விட்டு பறந்தோடும் .
ஏனென்றால் நரசிம்ம மூர்த்தி அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தில்தான்.
சுவாதி நட்சத்திரம் அன்று நரசிம்ம வழிபாடு சிறப்பான பலன்களை தரும்.
சுவாதி நட்சதிரத்தன்று பக்தர்கள் காலையில் நீராடிவிட்டு, நரசிம்ம மூர்த்தி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அன்று பக்தர்கள் விரதம் இருந்து நரசிம்ம சஹஸ்ரநாமம், மந்திர ராஜபத ஸ்தோத்திரம், நரசிம்ம கவசம் போன்ற துதிகளை பாராயணம் செய்ய வேண்டும். பிறகு மாலையும் நரசிம்ம மூர்த்தி கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி அறிய அர்ச்சகரை அணுகுங்கள்.
நான் சொல்லவதை செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையே மாறும். நரசிம்மரின் அருளுக்கு பாத்திரமாவீர்கள்.
விரதம் இருக்க முடியாதவர்கள் அருகிலுள்ள நரசிம்ம மூர்த்தி கோவிலுக்கு சென்று வர சிறப்பான பலன்களை பெறலாம்.
விரதம் இருக்க நினைப்பவர்கள் ஆரம்பிக்கலாம்.
சுவாதி நட்சத்திரமும் நரசிம்ம மூர்த்திக்கு மிகவும் உகந்த தினம்.
மிக முக்கியம் என்னவென்றால் அசைவ உணவையும், போதை பழக்கவழக்கங்களையும், உங்கள் வாழ்க்கையில் இருந்தே நீக்கி விட வேண்டும்.

Wednesday, 2 January 2019

*சுபகாரியம் எந்த நட்சத்திரத்தில் செய்யலாம்?*

                         *சுபகாரியம் எந்த நட்சத்திரத்தில் செய்யலாம்?*
1, அசுவினி நட்சத்திரத்தில் சூரியனை வணங்கிவிட்டு தன்னை விட உயர்ந்தவர்களை ,உயர் அதிகாரிகளை சந்தித்தால் காரியம் மிகச் சுலபமாக முடியும் .
2, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சிவனை வணங்கி விட்டு வாகனம் வாங்கினால் விருத்தியாகும் .
3, அஸ்தம் நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு பெண் பார்க்கச் சென்றால் திருமணம் உடனடியாக நிச்சயமாகும்.கிருஷ்ண பகவான் இதே நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு சத்யபாமாவை பெண் பார்க்க சென்றாராம்.இதனாலயே சத்யபாமாவை தடங்கலின்றி மணந்தாராம் .
4, அனுஷம் நட்சத்திரத்தில் சிவனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு இரும்பு இயந்திரங்கள் ,தளவாடச் சாமான்கள் முதலியவை வாங்கினால் தொழில் நன்கு வளர்ச்சியுறும் .
5, திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கிவிட்டு வெளிநாட்டுப் பயணம் செய்தால் வெற்றியுடன் திரும்பலாம் .நிலம் வாங்குவதற்கும் இது பொருந்தும் .
6, அவிட்டம் நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கிவிட்டு வெளியில் சென்றால் விபத்துக்கள் நேராது .அவ்வாறு ஏற்பட்டால் காயமின்றி தப்பிக்கலாம் .
7, பூசம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி வந்தால் தீராத வியாதிகள் தீரும் .அறுவை சிகிச்சை செய்வதற்கும் ,டாக்டரை அணுகி வைத்தியம் செய்வதற்கும் இந்த விதி பொருந்தும் .
8,மருத்துவர்கள் புனர்பூச நட்சத்திரத்தில் ஶ்ரீரங்கநாதரை வழிபட்டு வந்தால் கைராசிக்காரன் என்ற பெயரை எளிதாகப் பெற்றுவிடலாம் .
9, மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி அர்ச்சனை செய்தால் படிப்பறிவு அதிகமாக வளரும் .தேர்வுகளில் எளிதாக வெற்றி கிடைக்கும் .
10, மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் மூலம் நட்சத்திரம் உத்தம நட்சத்திரம் ஆகும் .இந்த நட்சத்திரத்தில் அருகம்புல் மாலை கட்டி விநாயகரை வணங்கிவிட்டு மேற்கொள்ளும்