Tuesday, 30 October 2018

பெண்கள் ஜாதகம்


                       பெண்கள் ஜாதகம்


சந்திரன் செவ்வாயின் திரியாம்சத்தில் இருந்தால் சிறப்பான வேலைத்திறமையுள்ளவாள்.
புதனின் திரியாம்சத்தில்இருந்தால் அறிவாளி, பல நுண்கலைகலை கற்றுனர்வாள்.
குருவின் திரியாம்சத்தில் இருந்தால் உத்தமி, குணவதியாவாள்.
சுக்கிரனின் திரியாம்சத்தில் இருந்தால் குணவதி மென்மைக் குணவதி
சனியின் திரியாம்சாத்தில் இருந்தால் கணவனுக்கு துண்பம் தருவாள்.
இவைகள் போது பலன் ஒவ்வொரு ராசிக்கு ஏற்ப்ப திரியாம்ச பலன் மறுபடும்.
2-5-ஆம் அதிபதிகள் 14-7-10-11-ல் இருந்தால் ஜாதகி சுக போகவாழ்வு அமையும் ஆள் அடிமையும் வாகன யோகத்துடனும் வாழ்வாள்.
5-ஆம் பாவம் குரு வீடாக அமைந்து 5-ஆம் அதிபதி குரு உச்சமுடன் இருக்குமானால் இளமையில் அழகான குணமுள்ள கணவரை திருமணம் செய்வாள்.
5-ல் சுக்கிரன் பலமுடன் இருந்தால் செல்வந்தரை கணவனாக அடைவாள்.
5- ஆம் அதிபதி சுபராகி 4-ல் இருந்தால் 9-ஆம் அதிபதி 11-ல் இருந்தாலும் தந்தையின் சொத்து ஜாதகிக்கு கிடைக்கும்.
புதனும், சந்திரனும் 7-ல் இருந்தால் கணவர் உயர்கல்வி பெற்றவர்.
8-ல் ராகு, அல்லது 8-ஆம் அதிபதி 6-ல் இருந்தாலும், 6-ஆம் பாவத்தை பார்த்தாலும் கார்ப்பபையில் கோளாறு ஏற்படும்.
1-7-8-ல் சந்திரன் பாவியுடன் இருந்து, சுபர்களின் பார்வை இல்லமால் இருந்தால் அழகில்லாதவர்கள்.
லக்கினாதிபதி, லக்கினம் ராசி, ராசியாதிபதி ஆண் ராசியில் இருந்தால் ஆண் போன்ற தோற்றம் உடையவர்கள். அதிகாரம் செய்யும் ஆற்றல் உள்ளவர்கள் பிறருக்கு அடிபணிய மாட்டார்கள்.
7-ல் சனி இருந்தாலும், வயதான கணவர் அமைவர் சனி பலமற்று இருப்பின் கணவரை அமைவர். சனி பலமற்று இருப்பின் கணவரை எமாற்றும் குணமுடையவள்.
காணியாம் சனியுமே பலத்திருக்க வேதான்
கணக்கன்மதி பிரு (கு) ஈனக் காரர்அகத் திருக்க
ஆணியந்த ராசிஒற்றை ஆகவுமே சன்மம்
அடுக்கமற்றோர் ஒற்றைகளில் அன்புடனே இருக்க
நீணிலத்தில் பிறந்தான் புருடனுக்கோ அரசாய்
நிருபதியாய்ச் சுவாமியாய் நேசமுடன் இருப்பாள்
பெண்களின் ஜாதகத்தில் சனி பலம் பெற்று இருக்க, சந்திரன், புதன், சுக்கிரன் இவர்கள் பாவிகளின் வீட்டில் இருந்து, அந்த ராசிகள் ஒற்றை ராசியாக அமைந்தால், லக்கினமும் ஒற்றை ராசியாக அமைந்தால் கணவனை அதிகாரம் செலுத்தும் அதிகாரி போல் இருப்பாள்.கணவனை அடிமைப்படுத்தி இண்னால்கள் தருவாள்.
6-ல் சுக்கிரன், குரு கூடியிருந்தால் நோயையையுடைய கணவர் அமைவர்.
சுக்கிரனும், சந்திரனும் 7-ல் பாவத்தில் கூடியிருந்தால் வயது அதிகமுள்ள கணவர் அமைவார்.
7-ஆம் வீடு சுக்கிரன் வீடாக அமைந்தால் கணவர், காம சுகம் அதிகம் உள்ளவனாக இருப்பான்.
7-ஆம் அதிபதிக்கு 7-ல் சுக்கிரன். சுக்கிரனுக்கு 9-ல் பாவிகள் இருந்தால் கணவனுக்கு தெரிந்தே பிற ஆண்களிடம் உடல் சுகம் பெறுவாள்.ஒழுக்கம் குறைந்வளாக இருப்பர்கள். சுபர்கள் பார்த்தால் யாருக்கு தெரியால் பிறருடன் இன்பம் கண்பாள்.
7-ல் செவ்வாய், ராகு, கேது இருந்தாலும், 7-ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தால் கணவரால் நன்மையில்லை.
9- ஆம் அதிபதி சுபர்களின் வீட்டில் இருந்தால் மத்திம வயதில் விதவையாவாள்.
8-ல் புதன்,செவ்வாய் இருந்தால் 40 வயதில் விதவை
8-ல் பலமற்று சந்திரன் இருந்தால் விதவையாவாள்.
இடுசெவ்வாய் கதிர்கூடி எங்கேநின் றாலும்
இவளும்வா லிபம்தன்னில் அமங்கலையே யாவள்
உள்ளபல பாவர்எட்டில் இருந்தக்கில் விதவை !
பாவிகள் எட்டில் இருந்தால் ஜாதகி விதவையாவாள் செவ்வாயும், சூரியனும் இணைந்து எவ்விடத்தில் இருந்தாலும் ஜாதகி இளம் வயதில் விதவையாவாள்
இரண்டினில்நல் லோர்கள் மேவில்அவள் கணவனைத்தான் விட்டுமுன்போய்
விடுவள் ஜாதகியின் ஜாதகத்தில் இரண்டில் சுபக்கிரகங்கள்
இருந்தால் கணவனுக்கு முன்னே இறப்பாள்.
குருவும்,சுக்கிரனும்,(அல்லது) சூரியனும், சந்திரனும் லக்கினத்தில் பலமற்று இருப்பது இழமையில் விதவையாவாள். அல்லது கணவனை பிரிந்து வாழ்வாள்.
7-ஆம் பாவத்தில் மூன்று பாவிகள் கூடியிருந்தால் கணவரை இழக்கும் நிலை ஏற்படும்,சுபர் பார்த்தால் செய்து கொள்வாள்.
6-ஆம் அதிபதியின் தொடர்பு 4-ஆம் அதிபதி (அல்லது) 4- ஆம் பாவத்திற்கு ஏற்பட்டால் ஒழுக்கக் குறையுடையவர்கள்.
லக்னாதிபதியும் 7-ஆம் அதிபதியும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெறுமானால் மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமையும்
குருவும், சுக்கிரனும் லக்கினம் அல்லது ராசியை பார்த்தால் இளமையில் திருமணம் நடக்கும்.
குருவும், 9-ஆம் அதிபதியும் பலமுடன் அமைந்தால் ஆண்குழந்தை பிரக்கும்.
தேள்இடபம் கன்னியெனும் மூன்றில்
கலைமதிமே வில்புத்தி ரர்அற்பம்தான் காணும் !
ரிஷபம்,கன்னி,விருச்சிகம் ஆகிய ராசிகளில் ஒன்றில் சந்திரன் நின்றிருந்தால் ஜாதகிக்கு ஆண்குழந்தைகள் குறைவுடன் அமையுயம்.
மகரம், கும்பம் லக்னமாக அமைந்து 5-9-ல் சுக்கிரன் இருந்தால் ஜாதகி மலடியாவாள்.
ரிஷபத்திற்கு ஐந்தாம் வீடு கன்னி, கன்னிக்கு ஐந்தாம் வீடு மகரம் இரண்டு வீடுகளும் அலிக்கிரகத்தின் விடுகளாகும்.பெண் ராசிகளாகும்.
விருச்சிகம் ஐந்தாம் வீடு மீனம் பெண்ராசியாகும்.
அனுபவத்தில் ரிசபம், கன்னி சரியாக உள்ளாது.
3-6-ல் பாவிகள் இருந்தால் ஜாதகி விதவையான பின்பு வாழ்க்கையில் மிகவும் முன்னேற்றம். காண்பாள் கணவன் உயிரோடு இருக்கும் போது அனுபவித்த வாழ்க்கையை விட மிகப்பலமடங்கு சந்தோஷமான சவுகரிமான வாழ்க்கை அமையும்.
பெண்ணுடைய ஜாதகத்தை தகுந்த ஜோதிடப் பெரியோர்களின் ஆலேசனைப்படி முடிவு செய்ய வேண்டும்.
லக்கினம் (அ)ராசியில் கிரகம் இருக்கும் பலன்கள்
சூரியன் இருந்தால் மெலிந்த உடலும், வறண்ட தோல் உள்ளவள்.
சந்திரன் இருந்தால் சிறப்பான அழகு வனப்புடன் இருப்பாள். தேய் சந்திரன் இருந்தால் மெலிந்த உடல் வயதான தோற்றம் உள்வர்கள்.
செவ்வாய் இருந்தால் ஆண்கள் போன்று இருப்பாள், வசீகரத்தன்மை குறைவுடன் இருப்பாள்
புதன் இருந்தால் இளமைத் தோற்றம் அமையும்.கரு நீல நிறம் வனப்பும் வக்கிரத தன்மையுடையவர்கள்.
குரு இருந்தால் அழகுடன் உடல் உறுதியுடன் பெறிய உடல் வாகுடனும் இருப்பார்கள்.
சுசுக்கிரன் இருந்தால் சிறந்த அழகி அன்புடன் இருப்பாள்.
சனி இருந்தால் வயதான தோற்றம் உள்ளவள் அதிக கருமை நிறமுடன் இருப்பள்.
ராகு இருந்தால் அழகுடன் இருந்தாலும் முகத்தில் தலுலேல்புகள் இருக்கும்.
கேது இருந்தால் அழகற்றவாள் சுத்தமில்லாதவர்கள்.
கிரங்கள் ராசிகளில் உள்ள தொடர்பினால் பல மாற்றம் ஏற்பட்டும். அழகு அழகற்ற தன்மை மாறும் தமது பிறந்த ஜாதகத்தில் அந்தஸ்தும், புகழ், மனை மக்கள், உயர்கல்வி, தொழில்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், என அனைத்தையும் ஜாதகத்தின் மூலம் அறியலாம் அதற்கு ஏற்றது போல நடந்து கொண்டால் வாழ்வில் வாளம் கிடைக்கும்

No comments:

Post a Comment