சம்பத் [எ] சண்முகராஜ்

Saturday, 23 November 2019

தனுசில் சூரியன்

தனுசில் சூரியன் ; -
தனுசில் சூரியன் இருந்தால் கண்கள் பெரியதாக இருக்கும்,
பல வசதிகள் செல்வாக்குள்ளவராகவும், ஆன்மீகத் துறையில் உயர்வும்,நீதி நேர்மை கட்டுப்பட்டவர்கள், தன்மான முள்ளவர்கள், விரோதிகளை வென்று அடக்கும், மதவாதி ,சிறு வியாபாரி, திறமையுள்ளவர்கள்,பெருமளவு சம்பாதிக்கும்,
திறமையுள்ளவரர்கள் இருப்பர்கள் ,அரசுக்கு பிரியமனவர்கள் ,கலை இலக்கியத்தில் தேர்ச்சி உள்ளவர்கள், மனைவி மக்களால் லாபம் டைவர்கள், சாஸ்திரம் வேதம் சங்கீதம் அறிந்தவர்கள்.
பலவீனச் சூரியன் ஒவ்வொரு அம்சமும் சிறப்புடன் இருந்தாலும் எதோனும் சிறு குறைபாடுகள் ஏற்படும்.
சூரியனை குரு பார்த்தால் ஜாதகர் /ஜாதகி தத்தம் நிலைக்கேற்ப தகுதி / திறமைகளின் அடிப்படையில் விடாமுயற்சியால் வாழ்வில் உயர் அந்தஸ்தான நிலைக்கு வந்துவிடுவர்கள்.
சூரியனுடன் சந்திரன் சேர்ந்துதிருந்தால் உடல் பலம்,நல்ல போச்சும், புத்திரால் நலமம்,செவாம் உள்ளவர்கள்.
சூரியனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் புகழ் அதிகமான சுகம் சம்பத்து உடையவர்கள்.
சூரியனுடன் புதன் தொடர்பிருந்தால் மதுரமான வார்த்தைகளை பேசுவர்கள், எழுத்தளர்,காவியம், கதைகள், வாகனம், பெது ஜொன தொடர்பு, வித்வானாகவும்,
சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் ஆண்களனால் பலபெண்கள் தொடர்பு எற்படும்,பெண்களால் ஆண்கள் தொடர்பிருக்கும்,வாசனாதி திரவியம் பூசுவான்
சூரியனுடன் சனி ராகு கேது சேர்க்கை பாதிப்பையோ தரும்
பூர்வீகம், தொழில், சமூக அந்தஸ்து பாதிக்கும்.

No photo description available.
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 03:43 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Monday, 18 November 2019

விருச்சிகத்தில் சூரியன் ; -

விருச்சிகத்தில் சூரியன் இருந்தால் கண்கள் சிவந்திருக்கும் ,பொது சேவையில் ஆர்வம் உள்ளவர்கள், தன்னலமற்றவராக இருப்பர்கள், நுட்பமான கலை நுணுக்கங்களை கற்க ஆர்வமுள்ளவர்கள்,உடல் மனம் பலமுடன் இருக்கும், இராணுவம்,காவல்துறை, கப்பல், விமானம் போன்ற படைகளிலோ, அல்லது சார்ந்த துறையில் தொடர்பு இருக்கும், துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களை கையாளலக் கூடியவர்கன் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை, தாய் தந்தைக்கு துன்பம் தருவர்கள்,பணம் சம்பாதிப்பதில் சாமர்த்தியசாலி, அரசாங்கத்தல் ஆதாயம்,
விருச்சிகத்தில் உள்ள சூரியனை செவ்வாய் பார்த்தால் பிறபாலர்களுடன் மரியாதையாக நடந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்க மாட்டார்கள்.
சூரியனுடன் செவ்வாய், புதன்,குரு கூடினால் நல்ல சுப பலன்கள் கிட்டும் .
சூரியனை குரு பார்த்தால் ஜாதகர் /ஜாதகி தத்தம் நிலைக்கேற்ப தகுதி / திறமைகளின் அடிப்படையில் விடாமுயற்சியால் வாழ்வில் உயர் அந்தஸ்தான நிலைக்கு வந்துவிடுவர்கள்.
சூரியனுடன் சந்திரன்,சனி,ராகு, கேது சேர்ந்திருந்தால் பாதிப்பையே தரும்.
சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் வாக்கைத் துணையை இழப்பிற்காளாகக் கூடியவர்களாக உள்ளவர்கள்.
சூரியன் பலவீனம் பெற்றிருந்தால் வாழ்வியல் முன்பாகத்தில் நலன் அடைவதில் தடைபடும்.முன் யோசனையின்மை உணர்ச்சிவசப்படுதல் ஏற்படும்.
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 21:26 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, 16 November 2019

துலாத்தில் சூரியன்

துலாத்தில் சூரியன் : -
போகங்களுக்கு அதிபதியான சுக்கிரன் பகவானின் ராசியான துலாராசியில் இருந்தால் சுக்கிரனுக்கும் சூரியன் பகை கிரகம் ஆகும். இந்த ராசியில் ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருக்க பெற்றால் அந்த ஜாதகருக்கு சிறப்பான பலன்கள் ஏதும் ஏற்படாது.கண்கள் மிக அழககா இருக்கும், உஷ்ணாதிக்கம் உள்ளவர்கள், தைரியசாலி, தீயகுணம்,அறிவு ஆராய்ச்சித்திறன் மிக்கவராகவும், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும், மது,மாது,சூதாட்ட பாழக்கங்கள் உள்ளவர்கள், ஆத்மபலம் குறையும், மன அமைதியிருக்காது ,ஜாதகருக்கு தந்தையினால் எந்தவித சுகமும் ஆதாயமும் இருக்காது ரசயன சாஸ்திர ஞானம் ஏற்படும், பிற பெண்கள் தொடர்புள்ளவர்கள் நீச்சமாய் இருப்பதால் குழந்தை மனைவி நான்பர்கள் நாசம் ஏற்படும், வாழ்க்கையின் முன்னேற்றம் தடைபடும், ஆசாரம் குறையும் ,ஜீர நோய் ஏற்படடும், அரசு ஆதாரவு குறையும், விளையாட்டு குறையும், கொடூரகுணம்,உணர்ச்சி வசப்படுவர்கள்,
சூரியனுடன் சந்திரன் சேர்க்கை பார்வையிருந்தால் தந்தைக்கு நோய்பாதிப், தலையில் பாதிப்பு, எழும்பில் கோளறு கண்பார்வை குறையும்,
சூரியனுடன் செவ்வாய் சேர்க்கை பார்வையிருந்தால் சம்பாத்தியம் மிகவும் சிரமப்படக் கூடியவர்களாக இருப்பர்கள்.
சூரியனுடன் குரு சேர்க்கை பாதிப்பு எற்படும்
சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை துணையால் லாபம் ஏற்படும், மனைவிவகையில் சொத்து ஏற்படும்.
சூரியனுடன் சனி சேர்க்கை பார்வையிருந்தால் நேர்மையற்றவர்களாகவும் ,பேராகொண்டவர்கள்,முரண்பட்ட அபிப்பிராயங்கள் உள்ளவர்கள், உடல் நலம் பாதிக்கும் வறுமையுடன் வாழ்வர்கள்,
சூரியனுடன் ராகு கேது சேர்க்கை பாதிப்பு ஏற்படும்
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 05:30 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, 10 November 2019

கன்னியில் சூரியன்

கன்னியில் சூரியன் ; -
அறிவாற்றலுக்கு காரகனான புதன் பகவானின் ராசியான கன்னி ராசியில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் சிறந்த எழுத்தாற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.கவிதை இயற்றுதல், ஓவியம் வரைதல் போன்றவற்றில் நிபுணர்களாக இருப்பார்கள். பலம் வாய்ந்த உடல், மனம் பெற்றிருப்பார்கள்.கண்கள் அழ்ந்திருக்கும்,சாந்த குணம், கலையார்வம்,ரசிகத்தன்மை, வாழ்கையில் வசதிகள் அமையும், பணமே பிரதானம் என்னும் நோக்கம் உள்ளவர்கள், ஆன்களாக இருந்தால் பெண்பொன்று மென்மையாக இருப்பர்கள், கவர்ச்சியாக இருப்பர்கள். எப்போதும் பெண்களைப் புகழ்வர்கள்,
அறிவு ஆராய்ச்சியில் வல்லவர்களாகவும், எழுத்தாற்றல் மிக்கவர்கள், ஒழுங்கன நடைத்தையுள்ளவர்கள்,
தனிப்பட்டு இருப்பர்கள்
நியாயவாதிகள், பெரிய சிக்கல்களை தீர்ப்பதில் வல்லவர்கள் ஆன்மீக நட்டம் உள்ளவர்கள்,சங்கீதம் வாத்தியங்களில் தேர்ச்சி உள்ளவர்கள், புலமை,கணிதம், ஜோதிடம் ,செல்வம்,ஞாபக சக்தி பெண்கள் சிந்தனை உள்ளவர்கள்,

சூரியனுடன் சந்திரன் இணைவு நலம் தருவர்கள்.
சூரியனுடன் புதன் குரு சேர்க்கை இருந்தால் சாஸ்திரஞானம், எழுத்தாற்றல், உள்ளவார்கள்.
சூரியனை குரு பார்த்தால் ஜாதகர் /ஜாதகி தத்தம் நிலைக்கேற்ப தகுதி / திறமைகளின் அடிப்படையில் விடாமுயற்சியால் வாழ்வில் உயர் அந்தஸ்தான நிலைக்கு வந்துவிடுவர்கள்.
சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்திருக்க சனி பார்க்கமல் இருப்பின் பிறரது அன்பிற்குரியவர்கள்.
சூரியனுடன் செவ்வாய் ராகு கேது தொடர்பிருந்தால் பொருள் இழப்பு, விரோதம், வீன் சண்டை சச்சரவு ஏற்படுத்தும்.
சூயனுடன் சனி தொடர்பிருந்தால் தந்தையினால் பொருள் இழப்பும், பலவிததெல்லை, பலவிஷினம் உள்ளவர்கள்,
பலவீன சூரியன் எல்லா அம்சாங்களிலும் ஏதேனும் சிறு,சிறு குறைபாடுகள் இருக்கும்.
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 20:28 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, 8 November 2019

சிம்மத்தில் சூரியன் ;

சூரியனின் சொந்த ராசி சிம்ம ராசி ஆகும். ஜாதகத்தில் சிம்மத்திலேயே சூரியன் இருக்க பிறந்தவர்கள் வீரம் மிக்கவர்களாக இருப்பார்கள். எதிரிகளை அடக்கி ஒடுக்கும் பராக்கிரமம் கொண்டவர்களாக இருப்பார்கள். சமுதாயத்தில் அனைவராலும் மதிக்கபடுவார்கள். அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வகிப்பார்கள கண்கள் சிவந்திருக்கும், பயணங்களில் ஆர்வமுள்ளவர்கள், சமயோசித புத்தியும்,தந்திரமிக்கவர்களாகவும்,வாசதி வாய்ப்புகள் ஏற்படும், துணிச்சல் மிக்கவர்கள், நேர்மையனவர்கள்,வெற்றி என்பதோ இவர்களாது குறிக்கோள் ,பணம் என்பதே இவர்களது நோக்கம், மனைவி மக்களுடன் சுகமாக வாழ்வர்கள், சிறப்பன தொழில் வளமை உள்ளவர்கள், அரசு மரியதையுள்ளவர்கள், உயர் பதவி வகிப்பர்கள், முன்கோபி,தலைமை பதவி கிடைக்கும்.
சூரியனுடன் சந்திரன் சேர்க்கை பார்வையிருந்தால் நல்ல துணைவர்,அரசு சன்மானம், கப நோய்யுள்ளவார்கள்,
சூரியனுடன் செவ்வாய் சேர்க்கை பார்வையிருந்தால் இல்வாழ்க்கையில் சுகமின்மை, சண்டை சச்சரவு ஏற்படும், காரியங்களில் முயற்ச்சியுடையவன்,
சூரியனுடன் புதன் சேர்க்கை இருந்தால் கலைஞானம் உள்ளவர்கள், எழுத்தாளர், சூதாட்டம், சக்தி குறையும்,ஆன்மீக இடுபடுடையவர்கள்.
சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை இருந்தால் உணர்ச்சி வசப்படுவர்கள் பெண்களால் தொல்லை, அன்பில்லாதவர்கள்,நோய் பாதிப்பு ஏற்படும் ,வாக்கைத் துணையை இழப்பிற்காளாகக் கூடியவர்களாக உள்ளவர்கள்
சூரியனுடன் குரு சேர்க்கை பார்வையிருந்தால் ஆலாயங்கள், ,தீர்த்தகுளம் கட்டுவர்கள்,எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர்கள். ஜாதகர் /ஜாதகி தத்தம் நிலைக்கேற்ப தகுதி / திறமைகளின் அடிப்படையில் விடாமுயற்சியால் வாழ்வில் உயர் அந்தஸ்தான நிலைக்கு வந்துவிடுவர்கள்.
சூரியனுடன் சனி சேர்க்கை பார்வையிருந்தால் காரியங்கள் தடை ஏற்படுத்தும்,பொருளாதாரம் பாதிக்கும்,பிறருக்கு துன்பம் தருவர்கள்,
சூரியனுடன் பாவிகள் தொடர்பிருந்தால் முன்கோபம்,பதற்றம், மன உறுதி,திடமானமுடிவு,பேச்சாற்றல், அதிகாரம் ஏற்படுத்தும்.

Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 21:36 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, 6 November 2019

கடகத்தில் சூரியன்

சூரிய பகவானுக்கு நட்பான கிரகம் சந்திரன். சந்திரனின் சொந்த ராசியாக கடக ராசி இந்த கடகத்தில் ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருந்தால் அந்த நபர் சிறந்த தோற்ற பொலிவு கொண்டவராக இருப்பார். மனக்கவலைகள் இன்றி இருப்பார். வயது ஏற ஏற செல்வம் பெருகி கொண்டே செல்லும். கண்கள் அழ்ந்திருக்கும், ஆணவம், பிடிவாதம், தீய பழக்கம், பயணம், மனோ பயம்,அடிமைத் தொழில் வறுமை வட்டும், தன்நம்பிக்கை குறைபாடு, சந்தேகப்பிராணி உடல் நலன் பாதிக்கப்படும்,நற்காரியாங்களுக்கு செலவு செய்யமாட்டார்கள் செல்வ வளத்தை அடைவர்கள், மனைவி செல் கோட்பான், கடுமையான வார்த்தை பேசுவர்கள்,சிறுநோய் பாதிப்பு இருக்கும்,சபலம் அனைத்திலும் இருக்கும்,
சூரியன் பலம் குறைந்தால் மது பானப்பிரியம், கடுமையான உழைப்பு, மற்றவர்களுக்கு தெல்லை தருவர்கள்,தந்தையை எதிர்க்கும் குணம் ஏற்படும்,
சூரியனும் சந்திரன் சேர்க்கை பார்வை இருந்தால் நீர் கடந்து செல்வான், வியபாராங்கள் செய்வர்கள்,
சூரியன் சந்திரன் குரு சேர்க்கை சிறப்பன யோகத்தை தருவர்கள்.
சூரியனும் நீச செவ்வாய் சேர்க்கை பார்வை இருந்தால் நோய்யால் பதிக்கப்படுவான், உவினர்களுடன் அன்பு இருக்காது.வீன்பழிக்கு ஆளாவர்கள்.
சூரியனும் புதனும் சேர்க்கை இருந்தால் வித்தை,கல்வி,கீர்த்தி புகழ் அடைவர்கள்,அரசு ஆதாயம் கிடைக்கும், சாமர்த்தியசாலியாக இருப்பர்கள்.
சூரியனும் உச்ச குரு சேர்க்கை பார்வை இருந்தால் சகல சாஸ்திரம் அறிந்தவர்கள்,உயர் பதவிகிட்டும், ஜாதகர் /ஜாதகி தத்தம் நிலைக்கேற்ப தகுதி / திறமைகளின் அடிப்படையில் விடாமுயற்சியால் வாழ்வில் உயர் அந்தஸ்தான நிலைக்கு வந்துவிடுவர்கள்.
சூரியனும் சுக்கிரனும் சேர்க்கை இருந்தால் பெண்களுக்கு பிரியமனவன் ,பெண்களால் பணம் சாம்பதிப்பார்கள், இனிமைய வர்த்தையுள்ளவர்கள்.
சூரியனுடன் சனி சேர்க்கை பார்வை இருந்தால் கப வாத நோய் பாதிப்பு ஏற்படும், திருடும் எண்ணம் ஏற்படும், தீய குணமுள்ளவர்கள்.
சனி,ராகு,கேது சேர்க்கை இருந்தால் பாதிப்பை தருவர்கள்.

No photo description available. 
 

Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 22:21 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, 2 November 2019

ரிஷபத்தில் சூரியன்

சுக்கிர பகவானின்ராசி ரிஷப ராசியாகும். ஒருவரின் ஜாதகத்தில் ரிஷப ராசியில் சூரியன் இருக்க பெற்றால் அந்த ஜாதகருக்கு கலைகளில் ஆர்வம் இருக்கும் குறிப்பாக இசையில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். மேலும் கொடுக்கல், வாங்கல் வகையிலான தொழில்களில் நல்ல லாபத்தை பெறுவார். கண்கள் பெரியதாக இருக்கும், மந்த குணம்,வாசனைத் திரவியம், ரசிக்கும் தன்மையுள்ளவராகவும், கலை ஆர்வம் ,சங்கீதப் பிரியர், இசைக் கலைஞர், கவிஞானம், விவாசயம் நகை வியாபாரம், வாசனைவிரும்பி, சகல காரியங்கலில் வெற்றி, மனேவலிமை, உடல் பலம் குறைவு,கர்வமற்றவர்கள், வாதடும் குணமுள்ளவர்கள், உருவம் குறைவாக இருப்பர்கள், தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை உள்ளவர்கள்,விரோதிகள் இருக்கும், பால்வீணைதொடர்பன நோய் ஏற்படும்,பெண்களால் வெறுக்கப்படுவர்கள், தண்ணீரில் கண்டம்,கடின உழைப்பை விரும்பதவர்,வாழ்வு போரட்டமனது.
சந்திரன் தொடர்பு அல்லது பார்வையிருப்பின் மெது வாக பேசுவர்கள், பிற பெண்ஙன் தொடர்பு ஏற்படும் ,தெண்டையில் பாதிப்பும்,நீர்சம்பந்த மன தொழில்கள் செய்வான்,
செவ்வாய் தொடர்பிருந்தால், பலசாலி, புகழ் பெறுவர்கள்,
புதன் தொடர்பிருந்தால் ஏழுத்தளராகவும், கவிதையும், சமர்தான் .
குரு தொடர்பிருந்தால் உறவினர்கள் சகாயமுள்ளவர்கள், உயர்நிலை அடைவர்கள், புகழ்பெறுவர்கள்,
சூரியனுடன் சுக்கிரன் தொடர்பிருந்தால் உயர்நிலையும், புத்திமான், பெண்கள் விரும்பி, தைரியம் குறையும், வாக்கைத் துணையை இழப்பிற்காளாகக் கூடியவர்களாக உள்ளவர்கள்.
சனி தொடர்பிருந்தால் குலத்திற்கு ஆகாத தொழில் செய்வார்கள், நேர்மையற்றறவர்கள், சோம்பேறித்தனம்,பேராசைகொண்டவகளாகவும்,முரன்பட்ட அபிப்பிராயங்கள் கொள்வர்கள், கட்டுப்பாடு இல்லதவர்கள் வயதான பெண்கள் தொடர்பு ஏற்படும், நோய் பாதிப்பு ஏற்படும்,உடல் நலம் பாதிக்கும்.
Posted by சம்பத் [எ] சண்முகராஜ் at 22:39 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Blog Archive

  • ►  2022 (15)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  June (1)
    • ►  May (6)
    • ►  April (2)
  • ►  2020 (5)
    • ►  January (5)
  • ▼  2019 (160)
    • ►  December (27)
    • ▼  November (7)
      • தனுசில் சூரியன்
      • விருச்சிகத்தில் சூரியன் ; -
      • துலாத்தில் சூரியன்
      • கன்னியில் சூரியன்
      • சிம்மத்தில் சூரியன் ;
      • கடகத்தில் சூரியன்
      • ரிஷபத்தில் சூரியன்
    • ►  October (48)
    • ►  September (42)
    • ►  August (10)
    • ►  July (9)
    • ►  May (2)
    • ►  March (1)
    • ►  February (8)
    • ►  January (6)
  • ►  2018 (9)
    • ►  December (1)
    • ►  November (4)
    • ►  October (4)
  • ►  2017 (40)
    • ►  December (1)
    • ►  June (7)
    • ►  May (13)
    • ►  April (18)
    • ►  February (1)

About Me

சம்பத் [எ] சண்முகராஜ்
View my complete profile
Picture Window theme. Powered by Blogger.