தனுசு ராசி,தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான பிரச்சனைகள் கஷ்டங்கள்,துன்பங்கள்,ஏமாற்றங்கள் திறமைகள்,என்னென்ன இருக்கும் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பொதுவாகவே ஜோதிட உலகத்தில் ஒவ்வொரு ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் கஷ்டங்கள் பிரச்சினைகள் ஏமாற்றங்கள் திறமைகள் இருக்கின்றன.அதில் இப்பொழுது தனுசு ராசி தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் பற்றி பார்க்கலாம்.
காலபுருஷ தத்துவத்தின்
அதே போன்று "தர்மம், கர்மம், காமம், மோட்சம்" இந்த நான்கு தத்துவத்தில் தனுசு ராசி தனுசு லக்னம் தர்மம் தத்துவத்தை சொல்லக்கூடிய பாவமாகும்.தர்மம் என்பதன் பொருள் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதாகும்.
அதே போன்று இந்தப் 12 ராசி மண்டலங்களை "சரம், ஸ்திரம் உபயம்" என்ற மூன்று ராசி மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது அதில் இந்த தனுசு ராசி, தனுசு லக்னம் உபய ராசி உபய லக்னத்தை சொல்லக்கூடிய ராசி லக்னமாகும்.
உபயம் என்பதன் பொருள் உறவுகள் மற்றும் சொந்தங்களை குறிக்கும்.உறவுகள் மற்றும் சொந்தங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சொல்லக்கூடியது.
இந்த உபய பாவமாகும்.
சரி இந்த அத்தனை விஷயங்களையும் கொண்ட தனுசு ராசி,தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் ஏமாற்றங்கள் கஷ்டங்களைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
தனுசு ராசி தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தர்மம் என்ற எண்ணத்தால் இவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளை பார்க்கலாம்.
தனுசு ராசி தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் தர்ம சிந்தனைகளை அதிகமாக கொண்டவர்கள்.
ஏனென்றால் தனுசு என்ற வீடு முழு சுப கிரகமான குரு பகவானுடைய வீடாகும். குரு பகவானின் மூலத்திரிகோண வீடு தனுசு பாவமாகும்.
அதனால் தான் குரு பகவானுடைய "தர்மம், நேர்மை,ஆன்மீகம்,ஜோதிடம் இது போன்ற விஷயங்களில் இவர்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர்.
குரு பகவானுடைய திறமைகள் அனைத்தும் இந்த தனுசு ராசி தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.
தனுசு ராசி தனுசு லக்ன காரர்கள் என்றைக்குமே அடுத்தவர்களுக்காக வாழ்பவர்கள் ஆவார்கள்.தனக்காக என்று இவர்கள் வாழ்வதைவிட அடுத்தவர்களுக்காக வாழ்வது தான் இவர்கள் மிக அதிகம்.
அடுத்தவர்களின் வாழ்க்கையில் அவர்கள் முன்னேறுவதற்கு இவர்களின் உதவிகளும் பங்களிப்பும் மிக அதிகமாக இருக்கும்.தனுசு ராசி தனுசு லக்ன காரர்கள் நிறையபேர் அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேறி சென்றிருப்பார்கள் பயன் அடைந்து இருப்பார்கள்.
ஆனால் எல்லா வேலையும் முடிந்தவுடன் இவர்களை அடுத்தவர்கள் கழட்டி விட்டு விடுவார்கள். இவர்களுக்கு துரோகம் செய்து விடுவார்கள் இவர்களை ஏமாற்றி விடுவார்கள்.
அடுத்தவர்களுக்கு உதவி செய்து நிறைய விஷயங்களில் ஏமாந்து போனவர்கள் இந்த தனுசு ராசி தனுசு லக்ன காரர்கள் ஆவார்கள்.
இவர்கள் யாருக்கெல்லாம் உதவி செய்கின்றார்களோ அவர்கள் இவர்களுக்கு ஒரு கஷ்டம் பிரச்சினைகள் என்று வந்தால் இவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன் வர மாட்டார்கள்.கடைசியில் இவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.
அடுத்தவர்களுக்கு உதவி செய்து காலத்தையும் நேரத்தையும் வீணாக்குபவர்கள் இந்த தனுசு ராசி தனுசு லக்ன காரர்கள் ஆவார்கள்.
இவர்களுக்காக ஒரு கூட்டம் என்றைக்குமே இவர்களை சுற்றிக்கொண்டே இருப்பார்கள் வேலை வாங்குவதற்கு மட்டுமே இருப்பார்கள்.
நிறைய பேர் வாழ்க்கையில் அவர்கள் முன்னேறுவதற்கு தனுசு ராசி தனுசு லக்ன காரர்கள் நிறைய உதவி செய்திருப்பார்கள்.இவ்வளவு உதவி செய்தும் அவர்களால் இவர்களுக்கு எந்தவித பிரயோஜனமும் இருக்காது.
நிறையபேருக்கு எண்ணற்ற உதவிகள் செய்து இவர்கள் ஏமாந்து தான் போய் இருப்பார்கள்
இன்னும் சொல்லப்போனால் அடுத்தவர்களுக்காக தான் தனுசு ராசி தனுசு லக்ன காரர்கள் வாழ்வார்கள்.தனக்காக என்று வாழ்பவர்கள் இவர்கள் கிடையாது.
வாழ்க்கையில் மற்றவர்களால் அதிகமாக ஏமாற்றம் அடைந்தவர்கள் இவர்கள்தான்.
தனுசு ராசி தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கலாம்.
தனுசு ராசி, தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் உறவுகள் மூலமாகவும் சொந்தங்கள் மூலமாகவும் தனிப்பட்ட வாழ்க்கை தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மூலமாகவும் அதிகமான கஷ்டங்கள் துன்பங்கள், பிரச்சினைகள்,ஏமாற்றங்கள்,
தர்மசங்கடங்கள், மன உளைச்சல்கள், மனக்கஷ்டங்கள், மன வேதனைகள், இதுபோன்ற பிரச்சினைகளை இவர்கள் வாழ்க்கையில் அதிகமாக அனுபவிப்பார்கள்.
சொந்தங்களால் உறவுகளாலும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையாலும் அதிகப்படியான மன காயங்களுக்கும் மன வேதனைகளுக்கும் இவர்கள் என்றைக்குமே ஆளாகிக் கொண்டே இருப்பார்கள்.
தனுசு ராசி தனுசு லக்ன காரர்கள் போல உறவுகளால் சொந்தங்களால் கஷ்டப்படுபவர்கள் தர்ம சங்கங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகுபவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள் அவ்வளவு கஷ்டத்தை இவர்கள் வாழ்க்கையில் தினந்தோறும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
தனுசு ராசி தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கக்கூடிய திறமைகள், பிரச்சனைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
தனுசு ராசி தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயங்களிலும் ஜோதிடம், சித்தர்கள்,ஞானிகள், ஜீவசமாதி, அமானுஷ்யம்" இது போன்ற விஷயங்களிலும் இவர்களுக்கு ஆர்வங்கள் நாட்டங்கள் திறமைகள் இருக்கும்.
ஏனென்றால் தனுசு என்ற பாவம் குரு பகவான் உடைய வீடாகும் குரு தான் ஆன்மீகம் ஜோதிடம் சார்ந்த விஷயங்களுக்கு அதிபதி ஆகும்.
அதனால் தான் இவர்களுக்கு இது போன்ற விஷயங்களில் திறமைகள் ஆர்வங்கள் நாட்டங்கள் இருக்கின்றது.
அதேபோன்று தனுசு என்ற பாவம் பயணம் சார்ந்த விஷயங்களை சொல்லக்கூடிய பாவமாகும் ஏனென்றால் கால புருஷனுக்கு ஒன்பதாம் பாவமாக தனுசு என்ற பாவம் வரும் 9 ஆம் பாவம் தான் தொலைதூரப் பயணம் வெளிநாட்டுப் பயணங்கள் சார்ந்த விஷயத்தை சொல்லக்கூடிய பாவமாகும்.
எனவே தனுசு ராசி தனுசு லக்னகாரர்களுக்கு தொலைதூர பயணம் சார்ந்த விஷயங்கள் என்றால் பிடிக்கும் போக்குவரத்து என்றால் பிடிக்கும் யாருமே போகாத குகைக்கு செல்ல வேண்டும் யாருமே செல்லாத ஒரு காட்டிற்கு செல்ல வேண்டும். அமானுஷம் சார்ந்த சக்திகளை அடைய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
அதேபோன்று தனுசு லக்னத்திற்கு 9-ஆம் பாவமாக சிம்மம் என்ற பாவம் வரும் சிம்ம வீடு சூரியனுக்கு சொந்தமான வீடு ஆகும்.சூரியன் தான் ஒருவருக்கு அடையாளமாக இருக்கும் அதேபோன்றுதான் தனுசு ராசி தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இவர்களின் தந்தை தான் இவர்களுக்கு அடையாளமாக இருப்பார்.
தந்தை உடைய பெயர் சொன்னால் தான் இவர்கள் யார் என்பது மற்றவர்களுக்கு தெரியும்.தந்தையை வைத்து தான் மற்றவர்கள் இவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வார்கள்.
அதேபோன்று தனுசு என்ற பாவத்திற்கு பத்தாம் பாவமாக கன்னி என்ற பாவம் வரும்.ஆனால் இந்தக் கன்னி என்ற பாவம் கால புருஷனுக்கு 6ம் பாவமாக வரும்.
ஆறாம் பாவம் என்பது கடன் வம்பு வழக்கு பிரச்சனைகள் போட்டிகள் எதிரிகள் இவற்றை சொல்லக்கூடிய பாவமாகும்.
இதனை சொல்லக்கூடிய இந்த ஆறாம் பாவம் ஆகிய கன்னி பாவம் தனுசு பாவத்திற்கு பத்தாம் பாவமாக வரும்.பத்தாம் பாவம் என்பது தொழில் ஸ்தானத்தை சொல்லக்கூடிய பாவமாகும்.
எனவே இந்த தனுசு ராசி தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கண்டிப்பாக இருக்கும்.இவர்கள் தொழில் செய்தார்கள் என்றால் தொழிலில் இவர்களுக்கு இருக்கக்கூடியதைப் போன்று போட்டிகள் பொறாமைகள் சத்துக்கள் எதிரிகள் என்பது யாருக்குமே இருக்காது.
இவர்கள் எந்த தொழில் செய்தாலும் இவர்களுக்கு தொழிலில் எதிரிகள் போட்டிகள் பொறாமைகள் சத்துருக்கள் எப்போதுமே இருப்பார்கள்.
தொழிலில் இவர்களை வீழ்த்த வேண்டும் நஷ்டமடைய வைக்க வேண்டும்.என்பதற்காகவே நிறைய பேர் இருப்பார்கள்.
தொழிலில் இவர்களை யாருமே முன்னேற வளர விட மாட்டார்கள்.
அதே போன்று தொழில் மூலம் கடன் பிரச்சினைகளை அனுபவிப்பவர்கள் இந்த தனுசு ராசி தனுசு லக்ன காரர்கள் ஆவார்கள்.
தனுசு ராசி தனுசு லக்ன காரர்கள் என்றைக்குமே கடன் வாங்கி, சீட்டு எடுத்து, loan எடுத்து இவர்கள் தொழில் செய்யக்கூடாது.மீறி செய்தார்கள் என்றால் கண்டிப்பாக தொழிலில் நஷ்டம் அடைவார்கள் கடன் பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள்.
ஆனால் இது போன்ற தொழில் சார்ந்த பிரச்சனைகளை தனுசு ராசி தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைகள் இவர்களுக்கு தானாகவே வரும்.
மேற்கொண்டு யாரெல்லாம் இந்த தனுசு ராசி,தனுசு லக்னத்தில் பிறந்து இருக்கிறீர்களோ நான் இந்த பதிவில் சொல்லியிருக்கும் அனைத்து விஷயங்களையும் உங்களுடைய வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் சரியாக இருக்கும்.
ஜாதகத்தில் இந்த சூட்சமத்தை நீங்கள் பொருத்திப் பாருங்கள் நான் சொல்வது உங்களுக்குப் புரியும்.
உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் நல்ல வழிகாட்டுதல்களையும் உங்களுடைய எதிர்கால பலன்களையும் தெரிந்து கொள்ளவும்.-9994150658