Thursday, 30 May 2019

உங்கள் ஜாதகப்படி பணம், சொத்து, யோகம் யாருக்கு?

உங்கள் ஜாதகப்படி பணம், சொத்து, யோகம் யாருக்கு?


‘ அதற்கானவன். ஆங்காங்கு. இருந்து ஆட்டுவிக்கிறான். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும். நடவாது, நடப்பது என் தடை  செய்யினும் நில்லாது...’’இந்த செய்யுள் பகவான் ஸ்ரீ ரமணரின் அருள் வாக்காகும். எத்தனையோ மகான்கள், மகானியர்கள் இந்த பாரத புண்ணிய பூமியில்  அவ்வொப்பொழுது தோன்றி பல்வேறு வகையான அருளுரைகள், ஞானவிசாரங்கள், போதைனகள் போன்றவற்றை செய்துகொண்டே வந்திருக்கிறார்கள். அந்த  வகையில் பல ஆயிரம் நூற்றாண்டுகளாக பல்வேறுவிதமான சாஸ்திர கலைகள் நம் இந்து மதத்தில் கடைபிடிக்கப்படுகின்றன. 

இதில் மிகவும் பிரசித்திபெற்றதும், தலையாயதும் ஆன சாஸ்திரம்தான். ஜோதிடம். இந்த சாஸ்திரத்தின் மூலம் பல்வேறு விஷயங்களுக்கு வாழையடி வாழையாக.  எந்தை, தந்தை, தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வழி வழியாக இந்த ஜோதிட சாஸ்திர விஷயங்கள், ஸ்சுலோகங்கள், நுணுக்கங்கள் ஆகியவற்றை  பயன்படுத்தி பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கையில் வந்து போகின்ற எல்லா விஷயங்களையும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு வழி  வகை செய்துள்ளனர். அந்த வகையில் நாம் இப்போது தனம்  செல்வம், எனும் பணம் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.

ஆன்மா, கர்மா, பிராப்தம்

ஜாதகக் கட்டம் என்பது நாம் பிறக்கின்ற நேரத்தில் நவகிரகங்கள் எந்தெந்த ராசி வீடுகளில் அமைந்துள்ளது என்பதை நமக்கு தெரிவிக்கின்ற ஒரு அம்சமாகும்.  இவையெல்லாம் நம் கர்ம கணக்கின்படி முன்கூட்டியே இறைவனால் தீர்மானிக்கப்படுகின்ற விஷயமாகும். இந்த ஆன்மா எங்கு, எப்படி, எந்த சூழ்நிலையில்,  எப்படிப்பட்ட கிரக சஞ்சார அமைப்புகளுடன் எந்த தசையில் மாதா கர்ப்பத்தில் உதிக்க வேண்டும் என்பது இறைவனின் படைப்பாகும். அதுதான் நம்முடைய  கர்மவினை. சமுதாயத்திலே ஒரு பேச்சு வழக்கு உண்டு. அதாவது ‘‘நாம் என்ன கொண்டு வந்தோம், எதை எடுத்து செல்லப் போகிறோம்’’ என்று  சொல்வார்கள், இது தெரிந்தோ, தெரியாமலோ பேச்சு வழக்கில் வந்துவிட்டது. இது முற்றிலும் தவறானது. நாம் பல்வேறு விதமான நல்வினை, தீவினைகளை  கொண்டு வந்து இருக்கின்றோம். அந்த வினைப் பயன்களை அனுபவித்து முடித்தபின் இந்த பிறவியில் செய்த வினைப் பயன்களை கொண்டு செல்கின்றோம்.  இதைத்தான் மாணிக்கவாசகர் பின்வருமாறு தனது திருவாசகத்தில் அருளியுள்ளார்.

புல்லாகிப் பூண்டாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
சொல்லா அ நின்ற இத் தாவர, சங்கமத்துள்..


எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்று சொல்கிறார். அத்துடன் பொல்லாவினை என்று குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட வினைப் பிறவிப் பயனை  அனுபவித்து, அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பதற்கேற்ப. இறைவன் அருள்கூர்ந்து கருணையுடன். இந்த மனிதப் பிறவியை தந்துள்ளான். ஆகவே  நமக்கு கிடைக்கின்ற எந்த யோகமும். அதிகமோ, குறைவோ எல்லாம் நாம் வாங்கி வந்த வரம். அதன்படி கிரகங்கள். நமக்கு அந்தந்த கால கட்டத்தில் உரிய  யோக பாக்கியங்களை தருகின்றன. அந்த வகையில் நமக்கு தனம் எனும் பணம் எப்படி சேரும். இதற்கான கிரக அமைப்புகள் என்ன, கிரக சேர்க்கைகள்,  பார்வைகள், யோகங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட அமைப்புகள்

இன்றைய கால கட்டத்தில பணம், பொருள் வளம், செல்வச் சேர்க்கை, சொத்து சேர்க்கை, அளப்பரிய பணப் பொழிவு, பணப் புழக்கம், பணம் புரட்டுவது என்பது மிக  முக்கியமான வாழ்வாதார பிரச்னையாகும். பணம் இருந்தால் பலவற்றைச் சாதிக்கலாம். பணம் பத்தும் செய்யும், சிலர் அது என்னிடம் இருந்தால் பதினொன்றும்  செய்யும் என்று சொல்வார்கள். ஈட்டி எட்டும் வரை பாயும், பணம் பாதாளம் வரை பாயும், பை நிறைய பணம் இருந்தால் பத்து யானை பலம். பணம் பந்தியிலே  என்று சொல்வார்கள். அதாவது பணம் படைத்த செல்வந்தனுக்கு பெரிய வரவேற்பு, மரியாதை இருக்கிறது என்று பொருள். இப்படிப்பட்ட செல்வம் சேரும் யோகம்.  ஒரு சிலருக்கு எளிதில் அமைகிறது. 

தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு, வட்டி, வரவு, செலவு, ஷேர் மார்க்கெட், கட்டிட வாடகைகள், புரோக்கர், கமிஷன் ஏஜென்சி என்று எத்தனையோ நூற்றுக்  கணக்கான வகையில் தன வரவு உண்டாகிறது. தேவையுள்ள அளவிற்குப் பணம் கிடைக்கிறது. சிலருக்கு உபரியாகப் பணம் சேமிப்பு ஆகிறது. பலருக்கு பல்வேறு  வகைகளில் வருமானம் குவிகிறது. 

இதன் மூலம் பொன், பொருள், அசையும், அசையா சொத்துகள் அமைகிறது. ஒரு பகுதியினருக்கு பற்றாக்குறை என்பது எப்பொழுதும் உள்ளது. கடன் வாங்கி  செலவு செய்வது என்பது சிலருக்கு மாதாமாதம் ஏற்படும் அனுபவமாகும். சிலர் அன்றாடம் வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது. பலர் பல  விஷயங்களுக்காக ஏதாவது உருட்டல், மிரட்டல் செய்தே காலத்தை தள்ள வேண்டியுள்ளது. கையில் காசு பணம் தங்காத நிலை, வட்டி, வட்டிக்கு வட்டி, கடன்,  நகைக் கடன், வங்கிக் கடன் வாகனக் கடன், வீடு, நிலம் வாங்கியதில் கடன்  என்று பணம் பல்வேறு வகைகளில் கையில் இருப்பு இல்லாத அமைப்பு பலருக்கு  உள்ளது.

தனயோகம் சொத்துயோகம்


ஜாதகத்தில் சில வீடுகள், ஸ்தானங்கள், கிரகங்கள் தனித்தனியே ஒவ்வொரு விஷயத்தையும் குறிப்பிடுவதாக இருந்தாலும். ஒருவருக்கு பல நிலைகளில்,  பல்வேறு கிரக சேர்க்கை, பார்வை, யோகங்கள் மூலம்தான் எந்த விஷயமும் தீர்மானிக்கப்படுகிறது. ஜாதகம் என்றவுடன் முதலில் நிற்பது இரண்டு கட்டங்கள்.  ஒன்று ராசிக்கட்டம் அடுத்தது நவாம்ச கட்டம். இதற்கு அடுத்தபடியாக மிக, மிக முக்கியமான இடம் லக்கினம், லக்னாதிபதி.  ஏனென்றால் இந்த இடத்தில்  இருந்துதான் ஒருவரின் ஜாதகம் இயக்கப்படுகிறது. லக்னாதிபதி என்ற கிரகம்தான் இயக்குனர், அதிபர், உயர் அதிகார பதவி வகிப்பவர். அந்த லக்கினம் என்ற  இடத்தில் இருந்துதான் மற்ற ஸ்தானங்கள் கணக்கிடப்படுகின்றது. இதற்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் பெறுவது நவாம்சம் என்ற கட்டம். 

அந்தக் கட்டத்தில் உள்ள லக்னம், லக்னாதிபதி பலம் மிகவும் முக்கியம். பொதுவாக தனயோகம் என்பது 1, 2, 5, 9, 11 ஆகிய இடங்கள் மற்றும் அந்த இடத்தின்  அதிபதிகள் மூலம் ஒருவருக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இரண்டாம் இடம் தனஸ்தானம். செல்வ நிலையைப் பற்றி தெரிவிக்கும் இடம். ஐந்து, ஒன்பது ஆகிய  இடங்கள். பல்ேவறு வகையில் தனபிராப்தி, சொத்து சேர்தல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம்,  சொத்து போன்றவற்றை குறிக்கும். பதினொன்றாம் இடம். பல வகையில் வருவாய், லாபம் பற்றி பேசும் இடம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உழைப்பு மிக  முக்கியம், அதனால் ஊதியமும், பண வரவும் இருக்கும், பொருளாதாரம் சற்று உயரும் அதே நேரத்தில் யோகமும், அம்சமும், பாக்கியமும் சேர்ந்து இருந்தால்  தனம் எனும் பணம் கொட்டும். 

யோகம் என்றால் சேர்க்கை, பார்வை என்று பொருள். உப்பில்லா பண்டம் குப்பையிலே யோகம் இல்லாத ஜாதகமும் அதைப் போலவே. ஆனால் எந்த ஜாதகமாக  இருந்தாலும் அதில் ஏதாவது வகையில் யோகம் இருக்கும். ஆனால் அந்த யோகம் என்ன தன்மையில் உள்ளது. எந்த அளவில் உள்ளது என்பதில்தான் விஷயம்  உள்ளது. இதில் அளவு என்பது நாம் வாங்கி வந்த வரம், கொடுப்பினை, அம்சம். இந்த கர்மா நமக்கு நல்ல அம்சத்தில் இருந்தால் நிச்சயம் செல்வ வளம், தன  பிராப்தி, பண மழை கொட்டும், மேலும் தனயோகம் ராஜயோகங்கள் இருந்தாலும் தீய கிரக சேர்க்கை, தீய யோகங்கள், நீச்ச யோகங்கள் மற்றும் நவாம்ச  சக்கரத்தில் கிரக சேர்க்கை, தீய யோகங்கள், நீச்ச யோகங்கள் மற்றும் நவாம்ச சக்கரத்தில் கிரக பலம், பார்வை பலம், யோக பலம், பரல் பலம் போன்றவை  குறைந்த ஜாதகங்கள், நீக்க தசை, பாதக ஸ்தான தசை, விரய ஸ்தான தசை போன்ற பலம் குறைந்த தசா நடக்கும் ஜாதகங்கள் அடிக்கடி சரிவை சந்திக்கும்.  வாழ்க்கைப் பாதை சகடயோகம் போல் மாறி, மாறி ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். கிரக யோகமும், ராஜயோக தசையும், அனுபவிக்கும் பாக்கியமும்  ஒருங்கே அமைந்தால்தான் குபேர தன சம்பத்து சித்திக்கும் என்பது பராசரர், வராகமிக்ரர் போன்ற ஜோதிட கர்த்தாக்களின் கூற்றாகும்.

வீடுகள் ஸ்தானங்கள்

ஒரு ஜாதகத்தில் கேந்திரம் என்பது 1, 4, 7, 10: விஷ்ணு ஸ்தானங்கள். ஒரு ஜாதகத்தில் கோணம் என்பது 1, 5, 9 : லட்சுமி ஸ்தானங்கள். ஒரு ஜாதகத்தில் பணபர  ஸ்தானம் என்பது 2, 5, 8, 11. தன வரவு, பணம் வரும் வழிகள் 2ஆம் இடம் தனம், வாக்கு சாதுர்யம், உடல் உழைப்பு இல்லாமல் மூளையை பயன்படுத்தி  பேச்சின்மூலம் பணம் சேர்க்கும் வழியைச் சொல்கிறது. 5ஆம் இடம் யோசனை, சிந்தனை, பூர்வ புண்ணியம், அதிர்ஷ்டம், உழைப்பில்லாத செல்வம், வெறும் வாய்  ஜாலம், வார்த்தை ஜாலத்தால் பொருள் ஈட்டுவது, ஆடிட்டர், வக்கீல், பொறியாளர், இயல், இசை, நாடகம் போன்ற துறைகளில் உள்ளவர்கள் திட்டங்கள் தீட்டிக்  கொடுத்து சம்பாதிப்பது யோசனை சொல்லி செல்வம் திரட்டுவது. நான்காம் வீட்டிற்கு இரண்டாம் வீடு கல்வியின் மூலம் பணம் சேருவதைக் குறிக்கும். 

தாய், தாய்மாமன் வர்க்கம் மூலம் பணம் கிடைப்பதைக் குறிக்கும். 8 மற்றும் 11. இரண்டாம் வீட்டிற்கும், எட்டாம் வீட்டிற்கும் பார்வைத் தொடர்பு உண்டு. இந்த  இடங்களில் எந்த கிரகம் இருந்தாலும் தன் 7வது பார்வையால் பார்க்கும் எட்டாம் இடம் மறைமுக பணவரவு, வரதட்சணை, உயில் சொத்து, லாட்டரி, ரேஸ்,  புதையல் என பல வகைகளில் பொருள் குவியும். செல்வம் பல வகைகளில் சேரும் அந்தக் கணக்கில் அனுபவபூர்வமாக பெரும்பாலானோருக்கு  மனைவி மூலம்  சொத்து, சம்பாத்தியம் கிடைத்து யோகம் வருகிறது. மனைவி மூலம் சொத்து என்றால் மாமனார் மூலம் உதவி, சொத்து பாகப்பிரிவினை, உயில், தொழில்,  வியாபாரம் என்று பணம் சேரும். இதற்கு லக்னத்திற்கு 3ஆம் இடம் நமக்கு பதில் தருகிறது. 

மூன்றாம் அதிபதி ஆட்சி, உச்சம், கேந்திரம், கோணம் வர்கோத்தமம் பெற்று இருந்தாலும் மூன்றாம் வீட்டை புதன், சுக்கிரன், அல்லது யோக கிரகங்கள்  பார்த்தாலும் மூன்றாம் வீட்டில் 35 பரல்களுக்கு மேல் இருந்தாலும் மாமன், மச்சான் வகை மூலம் சொத்து, பணம் குவியும். இது நேர்வழி பாக்யராஜயோக  அமைப்பாகும். ஒரு சிலருக்கு 3, 6, 8, 12 ஆகிய கிரகங்கள் பலம் பெற்று ஒருவருக்கொருவர் பார்வை பரிவர்த்தனை போன்றவை ஏற்பட்டு, லக்னாதிபதி,  யோகாதிபதி பார்வை உண்டாகி விபரீத, ராஜயோக தசை நடைபெறும்போது அளப்பரிய செல்வம் சேரும். இந்த அமைப்பு ஒருவருக்கு சரியாக கைகொடுத்தால்  எந்த உச்ச நிலைக்கும் கொண்டு செல்லும்.

பொதுவான சிறந்த தன பாக்கியங்கள்

இந்த தனயோகங்கள் ஒருவர் ஜாதகத்தில் இருந்தால் அவரவர் பூர்வ புண்ணிய பலத்திற்கு ஏற்ப கூடியும், குறைந்தும் அல்லது மிதமான, சராசரியான செல்வ  வளத்தைப் பெருக்கித் தரும்.

கேந்திர யோகம்: லக்னம் 4, 7, 10 ஆகிய இடங்களில் சுப, யோக கிரகங்கள் இருந்தால், சதுர் கேந்திர யோகமாகும். இது எல்லா வகையான ஏற்றத்தையும்  கொடுக்கும்.

லட்சுமி யோகம்: லக்னத்திற்கு இரண்டாம் அதிபதி ராசி, அம்சத்தில் வலுவாக இருந்து தனகாரகன் குரு பலமாக இருந்து, தனகாரகன், தனஸ்தானாதிபதி தொடர்பு  ஏற்பட்டால் லட்சுமி யோகம், பொன், பொருள், செல்வம் சேரும்.

செல்வ யோகம்:  எட்டாம் இடத்தில் யோகாதிபதிகள் இருந்தாலும், குரு அல்லது சுக்கிரன் இருந்தாலும், இவர்கள் தன ஸ்தானத்தை பார்ப்பதால் இவர்கள் தசா  புக்தி காலங்களில் திடீர் செல்வ சேர்க்கை உண்டாகும்.

தெய்வாம்ச யோகம்: சந்திரனுக்கு 4க்குடையவன் கேதுவை சேர்ந்தாலும், கேதுவிற்கு கேந்திரத்தில் இருந்தாலும், ஜாதகன் தெய்வாம்சம் நிறைந்தவன். தாயார்  வழியிலும் கட்டிட, நில புலன்கள் மூலம் செல்வம் கிடைக்கும்.

தன யோகம்:  தனகாரகன் குரு, ஆட்சி, உச்சம் வர்கோத்தமம் சுபர் சேர்க்கை மற்றும் தனஸ்தானாதிபதி எந்த கிரகமோ அது, ஆட்சி, உச்சம் வர்கோத்தமம் சுபர்  சேர்க்கை பெற்று இருந்தால் வற்றாத ஜீவநதி போல் திரண்ட செல்வம் இருக்கும். சந்திராதியோகம், சந்திரமங்களயோகம்: சந்திரன் ரிஷபத்தில் இருந்து (உச்சம்)  செவ்வாய். விருச்சிகத்தில் (ஆட்சி) அதுபோல மகரத்தில் செவ்வாய் இருந்து (உச்சம்) சந்திரன். கடகத்தில் (ஆட்சி) இப்படிப்பட்ட மிக உன்னதமான சம சப்தம  பார்வை உடன் கூடிய ராஜயோக அம்சமாகும். இந்த அமைப்புடன் பிறந்தவர்கள் மிகப் பெரும் பாக்கியசாலிகள். சாதாரணமாக நாம் சொல்லும்போது அவருக்கு  உள்ள சொத்து, செல்வம், தனவரவு அவருக்கே தெரியாது என்று சொல்வோம். அந்தளவிற்கு யோக பாக்யம் உண்டு.

கிரக சேர்க்கை  பரிவர்த்தனை

கிரக சேர்க்கை என்பது ஏதாவது ஒரு ராசியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து இருப்பது. பார்வை என்பது ஒரு ராசியில் இருக்கும் கிரகம்  மற்றொரு ராசியில் இருக்கும் கிரகத்தைப் பார்ப்பது. இந்த வகையில் நிறை, குறைகள் இருக்கும். ஆனால் பரிவர்த்தனை என்பது இரண்டு கிரகங்கள் இடம் மாறி  ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது. இந்த யோகத்தால் பரிவர்த்தனை பெற்ற கிரகங்களின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். 2ஆம் அதிபதியும் 11ஆம்  அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் தொட்டது துலங்கும். பணம் கொட்டும். 2 ஆம் அதிபதியும் 5 ஆம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் திடீர் யோகம், மாமன்  வர்க்கம் மூலம் யோகம், குழந்தைகள் மூலம் செல்வம் குவியும். 

2ஆம் அதிபதியும் 9 ஆம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் சொத்து சுகம், பிதுர்ராஜித சொத்து கிடைக்கும். தான தர்மங்கள் செய்வான். 9ஆம் அதிபதியும், 10ம்  அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் அதிகாரம், புகழ், மந்திரி யோகம், தர்ம காரியங்கள், அறக்கட்டளை நிறுவும் யோகம் உண்டு. இந்த அமைப்பிற்கு தர்ம  கர்மாதிபதி யோகம் என்றும் சொல்வார்கள். இதே போல் லக்னாதிபதியுடன் 2, 5, 9, 10, 11 போன்ற இடத்தின் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் அதிபுத்திசாலி,  அதிகார பதவி, தொழில் அதிபர், பல்தொழில் வித்தகர். இவர்களிடம் சேரும் பணத்தை இயந்திரத்தைக் கொண்டுதான் எண்ண முடியும் அந்தளவிற்கு செல்வம்  குவியும்.

கிரகமாலிகா யோகம்

லக்னத்தில் இருந்து 7ம் இடம் வரை தொடர்ந்து எல்லா வீட்டிலும் கிரகம் இருந்தால் புகழ், செல்வம், கீர்த்தி, வாழ்க்கைத் துணையால் யோகம் பெறுபவர்.  லக்னத்தில் இருந்து 2 மற்றும் மூன்றாம் இடம் வரை கிரகம் இருந்தால் பாக்ய யோகம் ெபான், பொருள் வளம் உண்டு. லக்னத்தில் இருந்து தொடர்ச்சியாக 5ம்  வீடு வரை கிரகங்கள் இருந்தால், செயல்திறன், நுண்ணறிவு மிக்கவர். தர்ம ஸ்தாபனம் ஏற்படுத்தும் யோகம் உள்ளவர்.

தசம தனலட்சுமி யோகம்

தசமம் என்பது பத்தாம் இடத்தை குறிக்கும். பத்தாம் இடம் என்பது தொழில், வியாபாரம் சம்பந்தமாக பேசப்படுகின்ற இடம். இந்த இடத்தின் அதிபதி நல்ல யோக  நிலையில் இருந்தால் தொழில் மூலம் வருவாய் பெருகும். பத்தாம் இடத்தின் அதிபதியும், இரண்டாம் இடத்தின் அதிபதியும் சம்பந்தம், பார்வை, சேர்க்கை,  பரிவர்த்தனை ஆட்சி உச்சம், வர்கோத்தமம் பெற்று ராசி, நவாம்சம் இரண்டு கட்டங்களிலும் முழு பலத்துடன் இருந்தால் தொழில் யோகம், தொழில் மேதை என்ற  உயர்ந்த அந்தஸ்து உண்டு. ஒரு தொழில் தொடங்கி ஒன்பது தொழிலில் கால் பதிக்கின்ற ராஜயோகத்தை கிரகம் தரும். 10ம் வீட்டிலும், 2ம் வீட்டிலும் 35  பரல்களுக்கு மேல் இருக்கும் ஜாதகம் நிச்சயம், அந்த ஜாதகரை உயர் தொழில் அதிபராக உண்டாக்கிவிடும். 

பத்தும் நான்கும்

பத்தாம் இடம் வியாபாரம், தொழில், நான்காம் இடம் சுகம், மண், மனை, வீடு இந்த இரண்டு இடங்களும் ஒன்றுக்கொன்று கேந்திரங்கள் 10ம் வீட்டில் இருக்கும்.  கிரகம் 4ஆம் வீட்டைப் பார்க்கும். 4ம் வீட்டில் இருக்கும் கிரகம் 10ம் வீட்டை பார்க்கும்.

‘‘கூறப்பா கருமாதி நூலில் தோன்ற
கொற்றவனே குடிநாதன் கோணம் இரண்டில்.
ஆரப்பா வாகனமும் 
செம்பொன் கிட்டும்.
கூடப்பா கோவில் திருப்பணிகள் செய்வான்’’
புலிப்பாணி பாடல்
 

என்ற புலிப்பாணி சித்தரின் பாடல் படி கருமாதி என்ற 10ம் அதிபதி 4ல் இருக்க அந்த 4ம் வீட்டிற்குடையவன். கோணம் என்னும் 5 அல்லது 9ல் இருக்க வாகனம்,  பொன், பொருள் தர்ம கைங்கர்யத்துடன் இருப்பான் என்று சொல்கிறார்.

குரு கேது

வியாபார ஸ்தானமாகிய 10ம் வீட்டின் மூலம்தான் பணம் ஈட்ட முடியும். அந்த வீட்டுடன் 4ம் வீடு சம்பந்தப்படும்போது, புதையல், சொத்து, பூமி லாபம், செல்வ  வளம் உண்டாகிறது. அத்துடன் குரு தனகாரகன், கேது கோடீஸ்வரயோகத்தை அருளக்கூடியவன். குருவும்  கேதுவும், ஜாதகத்தில் 1ல், 4ல், 5ல், 8ல், 9ல், 10ல்  இருந்து இருவரும் சேர்க்கை பார்வை சாரபரிவர்த்தனை பெற்றால் குபேர தனம் கிட்டும் என்பது உத்திரகாலாமிர்தம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.

சந்திரன் சுக்கிரன்

சந்திரனுக்கு நான்கில் சுக்கிரன் அல்லது சுக்கிரனுக்கு நான்கில் சந்திரன் அல்லது லக்னத்திற்கு நான்கில் சந்திரன் சுக்கிரன் சேர்ந்து இருந்து லக்னாதிபதி பலம்  அடைந்தால் சிறப்பான தாரை யோகமாகும். அதனால் வாகனம், பொன், பொருள். பெண்களால் மகிழ்ச்சி, தாய்வழி சொத்து, மனைவி வழியில் யோகம் உண்டு.

விபரீத ராஜயோகம் - நீச்சபங்க ராஜயோகம்

ஒரு ஜாதகத்தில் இரண்டுவிதமான அம்சங்கள் உண்டு. அதேபோல் வாழ்க்கையிலும் இரண்டு வழிகள் உண்டு ஒன்று நேர் வழி, மற்றொன்று குறுக்கு வழி,  ஜாதகத்தில் சுப கிரக ஸ்தானங்கள் மூலம் நமக்கு கிடைக்கும் தனம், செல்வம் ஒரு வகை அதே போல் 6, 8, 12 ஆகிய ஸ்தானங்கள் மூலம் கிடைக்கும் தனம்  செல்வம் ஒரு வகை நீச்ச கிரகம், நீச்ச பங்கமாகி ராஜயோகம் அளிக்கும்போது சேரும் செல்வம் ஒரு வகை. பல்வேறு ஜோதிட நூல்களின் அடிப்படையில்  கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும். ராஜயோகம் என்ற அமைப்பின்படி தாங்கள் சம்பந்தப்பட்ட வீடுகளை வைத்து மிகப் பெரிய அளவிட முடியாத யோகத்தையும்,  செல்வ வளத்தையும், குபேர சம்பத்தையும் கொடுத்துவிடும். 

இதுபோன்ற தன யோகத்தை ஜாதக பல தீபிகை என்ற நூல் ஹர்ஷயோகம் என்று குறிப்பிடுகின்றது. நீச்சன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம் பெற்றிடில் நீச்ச  பங்கராஜயோகம், சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தாலும் நீசம் நீங்கி ராஜயோகம் ராசியில் நீசமாக உள்ள கிரகம் நவாம்சத்தில் ஆட்சி, உச்சம் பெற்றால்  ராஜயோகம் ராசியில் உள்ள நீசமாக உள்ள கிரகம் வர்க்கோத்தமம் பெற்றால் முதல் தர ராஜயோகம். இதைப் போன்ற கிரக தசா புத்திகளில் எதிர்பாராத  விஷயங்கள், நடக்காது என்று துலங்கும். நினைக்கும் விஷயங்கள் எல்லாம் தாமாக கூடிவரும். தொட்டதெல்லாம் துலங்கும்.

செல்வவளம்  தொழில்  புகழ்


அனுபவம்தான் வாழ்க்கை, வாழ்க்கை நமக்கு பல்வேறு விதமான படிப்பினைகளை தருகிறது அது நமக்கு கிரகங்கள் மூலம்தான் கிடைக்கிறது நன்மையோ,  தீமையோ, யோகமோ, அவயோகமோ அதை அனுபவிப்பதன்மூலம் நேரில் காண்பதன்மூலம் நமக்கு தெளிவாகிறது அந்த வகையில் மிக பிரபலமாக வசதி  வாய்ப்புடன் பல்வேறு வகைகளில் தனலாபம் பெற்று செல்வ வளத்துடன் புகழ் பெற்றுள்ள சில ஜாதக அமைப்புக்களை காணலாம்.

அனுபவ யோக ஜாதகங்கள்


இந்த யோக அமைப்புடன் கூடிய ஜாதகங்கள் இந்தியாவில் முக்கிய மாநிலங்களில் பெரும் தனயோக செல்வாக்குடன் இருப்பவர்கள். இந்த ஜாதகத்தின் முக்கிய  விசேஷத்தை மட்டும் உங்களுக்கு தருகிறேன்.

ஜாதகம் 1: மிதுன லக்னம், லக்னாதிபதி 4ல் உச்சம், தனகாரகன் குரு 7ல் ஆட்சி சுக்கிரன். 2ல் வர்கோத்தமம். சந்திரன் மகரம் திருவோண நட்சத்திரம். இவர் பல  தொழில்களுக்கு அதிபதி, நகை கடன் தரும் நிறுவனம் வைத்துள்ளார்.

ஜாதகம் 2 : துலா லக்னம், லக்னாதிபதி சுக்கிரன். உச்சம் பத்தாம் அதிபதி சந்திரன் 5ல் கும்பத்தில் புதன் தனுசில், இந்த ஜாதகர் பைனான்சியர், நகைக்கடை  அதிபர்.

ஜாதகம் 3 :
 கன்னி லக்னம், கன்னி ராசி, லக்னாதிபதி புதன் 7ல். சுக்கிரன் 5ல். குரு 10ல் இருந்து தம் சொந்த வீட்டை பார்ப்பது பல்வேறு தொழில்கள்.

ஜாதகம் 4 : 
மீன லக்னம், மகர ராசி திருவோணம், லக்னாதிபதி குரு 2ல் சுக்கிரன் 8ல் ஆட்சி. புதன் 9ல் சாதாரண நிலையில் இருந்து மிகப்பெரிய கோடீஸ்வரராக  உயர்ந்தவர்.

ஜாதகம் 5 : ரிஷப லக்னம், 3ல் சந்திரன் ஆட்சி பெற்று ஒன்பதாம் வீட்டை பார்ப்பது, தனஸ்தானாதிபதன் 8ல் தனஸ்தானத்தை பார்ப்பது 9ல் சூரியன், பவுர்ணமி  யோகம். லக்னாதிபதி. சுக்கிரன் 8ல் தனஸ்தானத்தைப் பார்ப்பது, பல தொழில்கள், மில் அதிபர், வெள்ளி மொத்த வியாபாரம். 

ஜாதகம் 6 : மீன லக்னம்2ல் குரு, 4ல் ராகு, 6ல் செவ், 7ல் சுக், 8ல் சூரியன் 9ல் புதன், 10ல் கேது, 11ல் சந்திரன், 12ல் சனி இது கேந்திரயோக ஜாதகம்,  கிரகமாலிகா யோகம் அற்புதமாக அமைந்துள்ளது. சராசரி நிலையில் இருந்து இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதி.

இந்த உதாரண ஜாதகங்களில் எல்லாம் தன யோகம் சிறப்பாக அமையப் பெற்றுள்ளது. அத்துடன் இவர்களின் வாழ்க்கை தரம் செல்வாக்கு எல்லாம் மிகவும் பெரிய  அளவில் உள்ளது. கிரக பலத்திற்காக இந்த ஜாதகங்களை அதன் அமைப்புக்களை தெரிவித்து இருக்கிறோம். நமக்கு ஏதேனும் இரண்டு, மூன்று அம்சங்கள் பலமாக  இருந்தால் நிச்சயமாக பொருள் வளம், செல்வ வளம் குவியும்.

நேரம் காலம்

இந்த தனயோக விஷயங்கள் எல்லாம் ஒவ்வொருவருக்கு, ஒவ்வொரு கால கட்டத்தில் பயன் தருகின்றது. சிலருக்கு பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாம்  அமைந்துவிடுகிறது. தொடர்ந்து தொன்றுதொட்டு வருகின்ற பூர்வீக அமைப்பு பலருக்கு கை கொடுக்கிறது. பானை பிடித்தவள் பாக்கியசாலி என்பதற்கேற்ப  மனைவி வந்தவுடன் தொட்டதெல்லாம் துலங்குகிறது. ஒருவரை உயர்த்திவிட ஆள் இருக்கும்,கோள் இருக்கும் என்று சொல்வார்கள். ஜாதகத்தில் நல்ல தன  யோகங்கள், பாக்ய யோகங்கள். இருந்து உரிய காலத்தில் யோக தசாபுக்திகள் வரும்போது ராஜயோக தன பலன்கள் கிடைக்கிறது. அவரவர் கொடுப்பினைப்படி  என்ன கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கிறது கிரகம் அள்ளியும் கொடுக்கும் அவரவர் யோகப்படி கிள்ளியும் கொடுக்கும். 

ஜாதக கட்டம் மூலம், தனயோகம்,  ராஜயோகம் என பல விஷயங்கள் ஒருவருக்கு பலன் கொடுத்தாலும் பலருக்கு பணச் சிக்கல், பணம் பிரட்டுவது. திடீர்  அவசிய, அவசர தேவைகள் வந்துவிடும். நமக்கு உண்மையிலேயே ஒரு நல்ல விஷயத்திற்காக பணம் தேவை என்றாலும் அல்லது நமக்கு சேரவேண்டிய பணம்  வராமல் தடைபட்டுக் கொண்டிருந்தாலும் இறைவனிடம் சொல்லி கையேந்தி உண்மையான பக்தி சிரத்தையுடன் பன்னிரு திருமுறைகளில் அடியார் நால்வர்  பெருமான்கள் பாடிய தேவார, திருவாசக பதிகங்கள் நமக்கு வேண்டியதை கொடுக்கும். 

அந்த வகையில் திருவாவடுதுறை என்ற ஸ்தலத்தில் திருஞான சம்பந்தப் பெருமான் இறைவனை நோக்கி பதிகம் பாடி பொன்னும், பொருளும் கேட்டார். உடனே  ஈசன் அக மகிழ்ந்து அள்ள அள்ள குறையாத உலவா பொற்கிழியை தம்பூதகணங்கள் மூலம் அக்கோயிலின் பலி பீடத்தில் வைக்கச் செய்தார். ஆகையால் நமக்கு  உண்மையான, நேர்மையான, நியாயமான பணத் தேவைகள் திடீரென தேவைப்பட்டால் நமது இல்லத்திலேயே இப் பதிகத்தை பாடி பயன் அடையலாம்.  ஒருமுறை இத் தலத்திற்குச் சென்று தரிசித்தும் வரலாம். இத்திருக்கோயில் : அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் ஆலயம், திருவாவடுதுறை, நாகப்பட்டிணம்  மாவட்டம் (மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ளது)

பொன்னும் பொருளும் நல்கும் பதிகம்
இடரினும் தள ரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே வாழினும் சாவினும் வருந்தினும் போய் 
விழினும் உன்கழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
பேழிள மதிவைத்த புண்ணியனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மற்வேன் அம்மான்
புனல்விரி நறுங் கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே கையது விழினும் கழிவுறினும் 
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாது என்நா
ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த
சந்த வெண் பொடியணி சங்கரனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாது என்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல் எழ விழித்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே பேரிடர் பெருகி ஓர் பிணிவரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன் 
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே உண்ணிலும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாது என்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன் அடி அலால் அரற்றாது என்நாப்
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேற்படை யெம் இறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன 
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன் ஏறுவர் நிலமசை
நிலையிலரே....

Friday, 17 May 2019

திருமண வாழ்வை மறுப்பவர்கள்

                                                   திருமண வாழ்வை மறுப்பவர்கள்

ஆண்களின் ஜாதகத்தில்
1) சுக்கிரன் + சனி + ராகு
சுக்கிரன் + சனி + கேது எதாவது ஒரு கிரகம் பார்த்தால் திருமணமில்லை
2) சுக்கிரன் + செவ்வாய் + கேதுவின் பார்வை திருமணமில்லை
3)சூரியன் + சுக்கிரன் + சனி திருமணமில்லை
பெண்களின் ஜாதகத்தில்
1) செவ்வாய் + சணி + ராகு ஏதாவது இரு கிரகங்கள் பார்த்தால்
செவ்வாய் + சனி + கேது திருமணம் நடக்க வாய்ப்பில்லை
2) புதன் + செவ்வாய் + சனி திருமணமில்லை
திருமண மறுப்பிற்குறிய கிரக நிலைகளை குரு பார்த்தால் தடை நீங்கி திருமணமாகும்.
1) சுவாமி விவேகானந்தர் அவர்களின் ஜாதகம்
குருவுக்கு 2 - ராகு வாழ் நாள் றைவு
சுக்கிரன் + கேது + சனி / சந்திரன் (குரு பார்வையில்லை) திருமண நடக்கல்லை
சனி + சந்திரன் + கேது & சந்திரன் + குரு + ராகு வெளிநாட்ப் பயணங்கள்
ஆத்மகாரன் சூரியனுக்கு 2 - ல் சுக்கிரன் + புதன் + கேது + சந்திரன் + சனி முழுமையான ஆத்மா ஞானம் அடைந்தார்.
சூரியன் + செவ்வாய் + குரு வீரத்தையும் தந்தது.

2) ஸ்ரீரமணரிஷி அவர்களின் ஜாதகம்
குரு + சந்திரன் + கேது துறவற வாழ்கை
சுக்கிரன் + ராகு + செவ்வாய் & சுக்கிரனுக்கு செவ்வாய் பார்வை, செவ்வாய்க்கு கேதுவின் பார்வை திருமணமில்லை.
சுக்கிரன் + சூரியன் + சனி திருமணமில்லை
சுக்கிரன் + ராகு + செவ்வாய் பெண்/ஆண் பிரிவு
சுக்கிரன் குரு பார்க்கவில்லை .
3) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜாதகம்.
குரு + சந்திரன் + கேது + வக்ர சனி ஆன்மீக நாட்டம்
வக்ர சனி + சந்திரன் + கேது துறவு மனப்பான்மை
சுக்கிரன்+ செவ்வாய்க்கு குருவின் பார்வையில்லை சனியின் தொடர்பில்லை வக்ர சனி + சந்திரன் +.சூரியன் & குரு + ராகு + கேது தொடர்பு மத்திம ஆயுள் 55 - வயதில் காலமானார்.
4) கர்மவீரர் காமராஜர் அவர்களின் ஜாதகம்.
சுக்கிரன் + ராகு + செவ்வாய் ஆண் / பெண் தொடர்பில்லை
சூரியன் +.சுக்கிரன் + சனி திருமமில்லை (சனி வக்கிரம்)
இரண்டில் தனித்த சுக்கிரன் திருமணமில்லை
5) A B வாஜ்பாய் அவர்களின் ஜாதகம்
செவ்வாய் + ராகு + சுக்கிரன் ஆண் / பெண் தொடர்பில்லை
சனி + சுக்கிரன் + சூரியன் & சுக்கிரன் திருமணமில்லை
சுக்கிரனை குரு பார்க்கவில்லை
6) லாத மங்கேஷ்கர் (பாடகி) அவர்களின் ஜாதகம்
செவ்வாய் + கேது + சனி & புதன் + செவ்வாய் + சனி & சுக்கிரன் + சூரியன் + செவ்வாய் பெண்கள் ஜாதகத்தில் திருமண மறுப்பு நிலைகள்
7) பெண் ஜாதகம்
சுக்கிரன் + செவ்வாய் - கேது & சனி + சுக்கிரன் + சூரியன் வரிசை அமைவு
சனி + செவ்வாய் + புதன் மேற் கூறிய கிரக அமைவால் திருமணவாழ்வு அமையவில்லை.
8) ஆண் ஜாதகம் 24 / 05 / 1912
ராகு + சுக்கிரன் + சனி & சுக்கிரன் + சனி + சூரியன்
சந்திரன் + கேது + குரு கிரக அமைவால் திருமணமில்லை
பெண்களுக்கு குருவின் பார்வையில்லாத செவ்வாய் தனது பகைக் கிரகங்களின் தொடர்பிருந்தால் திருமண வாழ்வில் பாதிப்பைத் தரும்.
ஆண்களுக்கு குருவின் பார்வையில்லாத சுக்கிரன் தனது பகைக் கிரகங்களின் தொடர்பிருந்தால் திருமண வாழ்வில் பாதிப்பைத் தரும்
நன்றி சிவதாசன் ரவி அவர்களுக்கு